பதிவர் கும்மி மெழுகுவர்த்தி அஞ்சலி கூட்டம் பற்றி முன்பு தெரிவித்த போதும்,மே 17 இயக்க இணைப்பாளர் திருமுருகன் முன்பு பேசிய போது மெரினாவில் கூடும் கூட்டத்தைப் பொறுத்தே தமிழகத்தில் ஈழ உணர்வு சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதை சொல்ல முடியுமென்றிருந்தார்.எனவே ஜூன் 26ம் தேதிக்கான மெரினாவின் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
நிகழ்வின் செலவுகளுக்காக யாரிடமும் பண உதவி கேட்காமல் முக்கியமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் கேட்காமல் தோழமை உணர்வு கொண்ட சென்னை நண்பர்களுடன் மட்டுமே பகிர்வு என்ற நிலையில் இதனை செயல்படுத்த நினைத்ததாக பதிவர் கும்மி கூறியிருந்தார்.சுயநலம் பாராத,கடின உழைப்புடன் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்து இயக்கத் தோழர்களுக்கும் முக்கியமாக மே 17 இயக்க குழுவினருக்கும்,நாம் தமிழர் இயக்கத் தோழர்களுக்கும்,தனது உடல் நிலை சரியில்லாத போதும் பதிவர் கும்மியின் உழைப்புக்கும் மெழுகுவர்த்தி ஏந்திய அனைத்து பதிவுலக நட்புக்களுக்கும்,தமிழ் அன்பு சொந்தங்களுக்கும் நன்றி.
பதிவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பின் 27ம் தேதியே பதிவை தமிழ்மணத்தில் இணைத்ததைக் காண முடிந்தது.முந்தைய தமிழக ஆட்சியின் பக்கசார்பாக செயல்பட்ட கோபத்தை நேற்று மெரினா நிகழ்வை உடனுக்குடன் படத்துடன் செய்தியிட்டு நக்கீரன் பத்திரிகை பாவப் பிராயசித்தம் செய்துகொண்டது.நக்கீரன் தகவல் தருவதிலும் கொஞ்சம் மாற்றம் இருப்பதாக உணரமுடிகிறது.பக்கசார்பற்ற பத்திரிகையாக திகழ நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.
தேர்தலுக்கு அப்பாலான தி.மு.கவின் நிலை பரிதாபமாக இருப்பதால் இனியும் விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது?ஆட்சி பீடத்தில் இருந்தும் சாதிக்காத சுயநல அரசியலுக்கான தண்டனையை தி.மு.கவும் அதன் தலைமையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.தற்போதைய சூழலில் தி.மு.க என்ற இயக்கத்தின் சமுதாயப் பணிகள் இறுதி பெற்றுவிட்டதென்றே கூறலாம்.
அதே போல் ஜெயலலிதா என்ற ஒற்றை ஆளுமைக்குப் பிறகு அ.தி.மு.கவும் தி.மு.கவின் முதுமையை எட்டும்.எங்கும் சுற்றிப் பார்த்தாலும் அனைத்தும் கிழடுதட்டிய இயக்கங்களாகவே இருக்கிறது.இப்படியான காலகட்டத்தில் நாம் தமிழர் மற்றும் மே17 இயக்கங்களை வரலாறு தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவது மாதிரி தெரிகிறது. இவர்கள் இன்னும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதிதாய்ப் பிறப்பார்களா என்பதை இனி வரும் காலம் பதில் சொல்லும்.மாற்றங்களை வரவேற்போம்!பரிட்சித்துப் பார்ப்போம்.
மெரினா பீச்சுக்கு நீண்ட அரசியல் வரலாறு உண்டு என்பதை சென்னைவாசிகளும்,அரசியல் நோக்கர்களும் நன்கு அறிவார்கள்.இங்கே பூத்த இயக்கங்கள் கிளைகள் படர்ந்து தமிழக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட வரலாறுகளும் உண்டு.கோசங்கள் கிளப்பி பெயர் சூட்டு விழா நிகழ்த்தி லெட்டர் பேடு கட்சிகளாய் காணமல் போனவர்களும் உண்டு.
மெரினாவின் பட்டாணி,சுண்டல்,முறுக்கு விற்கும் முகங்களே மாறியிருக்கின்றன.அந்தக் குரல்கள் இன்னும் மாறவில்லை.அவர்கள் ஒருதொடர்கதைமாதிரி.அரசியல்,சமூக,எழுத்தாளகள்,நண்பர்கள்,வானம் அண்ணாந்து பார்க்கும் மன நிலையாளர்கள்,வேலை தேடி மனதை ரிலாக்ஸ்செய்பவர்கள்,திருவல்லிக்கேணிபிரம்மசாரிகள், நடைப்பயிற்சியாளர்கள்,காதலர்கள்,குடும்ப கூட்டங்கள் என மெரினாவின் வரலாற்றுப் பக்கங்கள் ஒரு தொடர்கதையாகவே இன்னும் தொடர்கிறது.
16 comments:
Seman Became a very Good leader
ஒற்றுமையால் வெல்வோம் இனி
பதிவர் கும்மிக்கும் மே 17 இயக்கத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றி. மக்கள் இன்னும் உணர்விழந்து விடவில்லை என்பதை நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளனர். தேவை நல்ல தலைமையே..
//இப்படியான காலகட்டத்தில் நாம் தமிழர் மற்றும் மே17 இயக்கங்களை வரலாறு தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவது மாதிரி தெரிகிறது//
மே17 இயக்கத்திற்கு தேர்தல் அரசியலில் ஈடுபடும் நோக்கம் இல்லை. ஒரு மக்கள் இயக்கமாகவேத் தொடர்ந்து, சமூக சீர்கேடுகளுக்கு எதிராக இயங்குவதோடு, அவற்றைக் களையும் வழிமுறைகளையும் மேற்கொள்வதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலத்தினார் செய்த உதவிக்கு மிக்க நன்றி.
நெகிழ்வான பதிவு சார்
மனதை உற்சாகமும் நம்பிக்கையும் கூடவே சோகமும் வந்து ஆக்கிரமித்து
//Rathnavel said...
நல்ல பதிவு.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Seman Became a very Good leader//
Hope he will lead.
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஒற்றுமையால் வெல்வோம் இனி//
நண்டு!இப்பொழுதே மெல்ல ஒற்றுமை நோக்கிய திசையில் செல்கிறோம்.ஆனாலும் புலம்பெயர் தமிழர்கள் இன்னும் இணைந்து குரல் கொடுப்பது அவசியம்.
//செங்கோவி said...
பதிவர் கும்மிக்கும் மே 17 இயக்கத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றி. மக்கள் இன்னும் உணர்விழந்து விடவில்லை என்பதை நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளனர். தேவை நல்ல தலைமையே..//
செங்கோவி!அழுந்திக் கிடந்த கடந்த இரண்டு வருடங்களில் இப்பொழுது மெல்ல மூச்சு விட முடிகிற மாதிரி தெரிகிறது.தமிழர்களின் நிலையைப் பார்த்தீர்களா! கதாநாயகனாய்க் கொண்டாடிய கருணாநிதி அசல் வில்லனாகவும்,வில்லியாய் நினைத்த ஜெயலலதா குறைந்த பட்சம் குரல் கொடுக்கவாவது செய்வதும் காலத்தின் விசித்திரமாகத் தெரியல?
//கும்மி said...
//இப்படியான காலகட்டத்தில் நாம் தமிழர் மற்றும் மே17 இயக்கங்களை வரலாறு தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவது மாதிரி தெரிகிறது//
மே17 இயக்கத்திற்கு தேர்தல் அரசியலில் ஈடுபடும் நோக்கம் இல்லை. ஒரு மக்கள் இயக்கமாகவேத் தொடர்ந்து, சமூக சீர்கேடுகளுக்கு எதிராக இயங்குவதோடு, அவற்றைக் களையும் வழிமுறைகளையும் மேற்கொள்வதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலத்தினார் செய்த உதவிக்கு மிக்க நன்றி.//
கும்மி!வணக்கம்.மே 17 இயக்கத்தில் நீங்கள் இணைந்து கொண்டு செயல்பட்டதை பதிவுலகமே பாராட்டுகிறது.பண ரீதியாக சுயநலமில்லாமல் நீங்களனைவரும் இயங்குவதை உங்கள் வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிந்தது.
பொதுநலத்துடன் உடல்நிலையையும் கவனியுங்கள்.
தொடர்ந்து இணைவோம்.நன்றி.
//A.R.ராஜகோபாலன் said...
நெகிழ்வான பதிவு சார்
மனதை உற்சாகமும் நம்பிக்கையும் கூடவே சோகமும் வந்து ஆக்கிரமித்து//
ARR.காலையில் உங்களுக்கும்,செங்கோவிக்கும் பின்னூட்டம் போட நினைத்து பணியின் இடையில் முடியாமல் போய் விட்டது.
இனியாவது தமிழகம் தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளுமா என்பதை காலம் பதில் சொல்லும்.
உங்களது சமூக உணர்வு சார்ந்த இடுகை பகிர்வுகளுக்கு நன்றி.
இந்த முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
ஒற்றுமையாக போராடுவோம்! வெற்றி நிச்சயம்!
பாராட்டுகள். வெல்லும் வரை முயற்சியை தொடர்வோம்
தளவமைப்பு மாற்றம் நன்றாயுள்ளது, ராஜ நட.
மெரீனா மெழுகுவர்த்தி அஞ்சலியும் ஒன்றுகூடலும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். இணையம் மற்றும் செய்தி ஊடகங்கள் சொன்னது பங்குபற்றியவர்கள் ஐம்பதாயிரம் முதல் எழுபத்தையாயிரம் என்றார்கள். ஏதோ ஒரு விவரிக்க முடியாத நம்பிக்கையின் கீற்று மனதில் ஓடியது.
இங்கே கனடாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு ஏகப்பட்ட விளம்பரங்கள், ஆரவாரங்கள் பார்த்தபோது கடந்த வருடம் இலங்கையில் அது நடைபெறக்கூடாது என்று உழைத்த மே 17 இயக்கத்தின் உழைப்பும் ஞாபகத்தில் வந்தது.
Post a Comment