Followers

Sunday, March 6, 2011

பதிவர்கள் தஞ்சாவூர் பொம்மைகளா?

ஒவ்வொருவருக்கும் ஒரு சார்பு மனப்பான்மையோடு உடன் பிறப்புக்களாகவோ,ரத்தத்தின் ரத்தங்களாகவோ இருப்பதில் தவறு இல்லை.ஏனென்றால் இவர்கள் ஒரு இசத்துக்கு மந்திரித்து விடப்பட்டவர்கள்.தமிழ்நாட்டு வாக்காளர்களின் மனநிலைகள் என்னவாக இருக்கும் என்பதற்கும்,பதிவுலக கோயபல்சுகளுக்கும் நிறைய இடைவெளி என்பதை முந்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நன்றாக விளக்கியும்,பதிவுலகின் பல்வேறு கோண கருத்துக்கள் வலம் வந்தும் பகுத்தறியும் திறன் இல்லாது நேற்று முதல்வர் கருணாநிதியின் இன்னுமொரு high risk stunt ஐப் பார்த்து ஆஹா!சாணக்கியன் என்றும் இதுமாதிரி தில்லாலங்கடி யாரால் இயலும் என்று புல்லரித்துப்போனவர்கள் நிறைய பேர் என்பதை பதிவுகள் சொல்லுகின்றன.கழக கண்மணிகளின் மனநிலைகளும் கூட இதே மாதிரி இருக்கவும் செய்யலாம்.வீரமணியின் மூலமான அலையோட்டம் பார்க்கும்  முன்னோட்ட அறிக்கைக்கும், தி.மு.கவின் முடிவை வரவேற்கிறோம் என்று திருமாவளவன் சொல்வதற்கும் சுயதேவைகளான லாபங்கள் இருக்கின்றன.ஆனால் பதிவர்களுக்கு சுயசிந்தனை என்ற ஒன்றைத்தவிர வேறு ஒரு லாபமுமில்லை.

முதல்வரின் நேற்றைய முடிவால் இதயம் இனிப்பவர்கள் இதோ இன்று பிரணாப்பும்,குலாம் நபி ஆசாத்தும் மறுபடியும் குடு குடுவென ஓடி வருகிறார்களாம்.வந்து இகிகீன்னு முகம் காட்டி கருணாநிதிக்கும் இதயம் இனித்து விட்டால் சார்பு பதிவர்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வார்கள்?உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்து பார்ப்பதிலும் மீண்டும் ஒரு உற்சாகம் பொங்கி வருமா?ஒரு வேளை ஸ்பெக்ட்ரமில் ஆப்பு வைத்து ராசாவை உள்ளே தள்ளிய கோபம் தணியாமல் அறிக்கை அறிக்கைதான்னு நின்றாலும் அங்கே ஜெயலலிதா ஆதரவுக்கரம் மத்தியில் திரட்டுகிறேன் என்ற வாக்கை காப்பாற்ற நினைத்தால் ரத்தத்தின் ரத்தங்கள்,வை.கோ,கம்யூனிஸ்ட்களின் எதிர்கால நிலைப்பாடு என்னவாக இருக்கும்?ஆதிக்க சக்திகள் என்பவற்றிற்கு பொருள் விளங்காமலும், வலிமையின் அதிகார மையங்களின்  இழுப்புக்கு தகுந்த மாதிரி மொத்த தமிழகத்தின் எதிர்கால சரித்திரமும் இன்னும் எழுதியாக வேண்டிய நிர்பந்தத்தில் தமிழகமா?

வலையுலகம் வலம் வரும் பதிவர்களே தஞ்சாவூர் பொம்மைகளாகும் போது கண்கட்டி விடப்பட்ட சாலைக்குதிரையாய் ஓடும் சராசரி தமிழனை குறை சொல்வதில் பயனில்லை.

Cool down babies!

நேற்று பயணத்தின் ஓட்டத்தில் மெல்லியதோர் மின்னலாய் ஒரு எண்ணம். பணி புரிந்து ஓய்வில் இருக்கும் அரசு,பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வுக்கான அவகாசம் நிறைய இருக்குமே.இவர்களில் சமூக அக்கறையுள்ளவர்கள் பதிவிடவோ, பதிவுகளை காணவோ வருகிறார்களா? 

Saturday, March 5, 2011

சூப்பரப்பு யார்?

எப்ப பார்த்தாலும் எங்க ஊரு தாத்தாவையே குறை சொல்றதே இந்த பதிவர்களுக்கு வேலையாப்போச்சு.எத்தனை தாத்தாக்கள் நாடு முழுதும் இருக்கிறாங்க.யாராவது ஒரு ஆள்...ஒரு ஆள் வாய் திறக்கிறீங்களா?பிரணாப் முகர்ஜி நானெல்லாம் யூத்தாக்கும்ன்னு சொல்லிட்டு 10 தாத்தாக்களை மட்டும் சூப்பர் சிட்டிசன் அட்டவணையில் அறிமுகப்படுத்தியிருக்கார்.

ஏ.ஆர்.அந்துலே 81
முந்தைய மகாராஷ்ட்ரிய முதல்வர்,
இப்பொழுது லோக் சபா அங்கத்தினர்
சாதனை: மத்திய அமைச்சர்-சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்

சையத அலி ஷா ஜிலானி 81
இப்பொழுது: ஹரியத் கான்பரன்ஸ் சேர்மன்
சாதனை: எல்லா பார்ட்டியும் சேர்ந்த ஹரியத் கான்பரன்ஸ்

எல்.கே.அத்வானி 82
இப்பொழுது:பி.ஜே.பி பார்லிமெண்டரி பார்ட்டி சேர்மன்
சாதனை:துணை பிரதமர்

பிரகாஷ் சிங் பதால் 83
இப்பொழுது: முதல் மந்திரி,பஞ்சாப்
சாதனை:மத்திய விவாசயத்துறை மந்திரி

ஏ.பி.பர்தன் 85
இப்பொழுது: பொதுச்செயலாளர்,CPI
சாதனை: பொதுச்செயலாளர்

என்.டி.திவாரி 85
இப்பொழுது:ஹி...ஹி...Faded Congressman avoiding paternity case
(தமிழ் தெரியலீங்ண்ணா)
சாதனை: மறுபடியும் ஒரு ஹி...ஹி...இருந்தாலும் ஆந்திர கவர்னர்,உ.பி முதல்வர்

பால் தாக்கரே 85
இப்பொழுது:அவ்வப்போது ஐடியலிஸ்ட்,முழு நேர குடும்பத்தில் மூத்தவர்
சாதனை:கதி கலக்கும் சிவ சேனா

மு.கருணாநிதி 86
இப்பொழுது:முதல்வர்,தமிழகம்
சாதனை:முதல்வர்,முதல்வர்,முதல்வர்

ராம் ஜெத்மலானி 87
இப்பொழுது:ராஜ்ய சபா உறுப்பினர்
சாதனை:சட்டம்,நீதி மத்திய அமைச்சர்.

வி.எஸ்.அச்சுதானந்தன் 87
இப்பொழுது;முதல்வர்,கேரளா
சாதனை:முதல்வர்,கேரளா







இந்திய ஜனநாயகத்தில் ஓட்டைகள் நிறையத்தான்.படத்தில் உள்ள சாதனை மனிதர்களிடமும் கூட தில்லுமுல்லுகளும், தில்லாலங்கடிகளும் கூடவே அவர்களது தேச பங்கீடும்.இப்போதைய தேர்தல் களத்தை உற்று நோக்கினால் வெறும் நிறங்களை அடையாளம் காட்டி ஓட்டுப்போட்ட மக்கள் காலம்,பின் கட்சிகளின் அடையாளச்சின்னங்களில் முத்திரைக்காலம், இப்பொழுது கணினி மயமாக்கப்பட்ட தேர்தல்,தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம்,நீதித்துறையின் சுய அதிகாரம் என்று மொத்த நோக்கில் இந்தியாவும் இந்திய ஜனநாயகமும் முன்சென்று கொண்டிருக்கிறதென்ற நம்பிக்கையையும் கண்கள் பனித்தோ இதயம் கனக்காமலோ நம்புவோம்.படத்தின் உயர் குடிமகன்கள் அவர்களால் இயன்ற அர்ப்பணிப்பையும், அவரவர் சுயநலங்களையும் நம்மிடையே விதைத்திருக்கிறார்கள். இவைகளையும் கடந்து இந்திய ஜனநாயகம்  கருத்து சுதந்திரத்தோடு வீறுநடை போடும் என்ற நம்பிக்கையோடு இந்திய ஜனநாயகம் வாழ்க.

Friday, March 4, 2011

ராஜபக்சே,கடாபி மீதான போர்க்குற்றங்கள்

முந்தைய பதிவுகளில் ஒன்றில் லிபியாவுக்கு குரல் கொடுத்து விட்டு மழையுமில்லாமல் வெயிலுமில்லாமல் இரவில் குடை பிடிக்கும் கடாபி இன்னும் வில்ல்ங்கம் செய்வான் என்ற எண்ணத்தில் லிபியாவின் மக்களுக்கு அனுதாபம் சொல்லி முடித்து விட்டு இதுவரை மக்கள் குரலுக்கு டிமிக்கி கொடுக்கும் கடாபி மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல்,குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள்,ஐரோப்பிய நாடுகளின் நிலையைக் கவனித்தால் லிபியாவில் கடாபி மீதான சுருக்கு கயிறு இறுகும் காலம் வெகு தூரத்தில் இல்லையென்றே தெரிகிறது.சுய தேவைகளாய் பெட்ரோலிய எரிபொருளின் அவசியம் கொண்டு கடாபி குற்றம் சாட்டும் அல்கொய்தாவே கலகக்காரர்கள் என்பதனையும் புறம் தள்ளி விட்டு போர்க்குற்ற விசாரணக்கு தீவிரம் காட்டுவது புரிகிறது.மனித உரிமைக் குழு சார்ந்த நிகழ்ச்சி நிரலில் கூட ஈழ அவலங்கள் ஒலிக்காமலே போனது வருத்தம்.

அதற்கு முத்தாய்ப்பாய் போர்க்குற்றவாளி பிரகடனத்துக்காக புகைப்படங்கள்,யூட்யூப்,அமெச்சூர் காமிரா,குரல் ஒலிப்பதிவென்று கிடைப்பதெல்லாம் ஆவணப்படுத்தும் வேலை நடக்கின்றது.சி.என்.என்.பி.பி.சி, முக்கியமாக அல்ஜசிரா தொலைக்காட்சி செய்திகளின் படி நோக்கினாலும் இதுவரையில் இணையம் மூலமாய் வெளிவந்த ஆவணங்களாய் ஈழப்படுகொலையின் அவலங்களுடன் ஒப்பிடும் போது ராஜபக்சே கடாபிக்கும் முன்னால் தூக்கில் தொங்க வேண்டியவன்,ராஜபக்சேவை காக்கும் வேலி என்ன?தற்போதைக்கு கடாபியின் பதாகைகளுடன் ராஜபக்சேவின் படத்தையும் இணைத்து லிபியாவுக்கான குரலாக குரல் கொடுப்பது யாரிவன் கடாபியின் அண்ணனா?தம்பியா என்ற உலக பொது உணர்வு பலனையாவது  த்ரும்.

ஈழத்திற்கான குரலாய்  சர்வதேச ரீதியில் லிபியா போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்தால் மட்டுமே இன்றோ நாளையோ இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இதற்கான விடியலைக்காண இயலும்.அரசு என்ற கட்டமைப்பில் இலங்கை இயங்குவதன் காரணம் கொண்டே இலங்கை அரசுக்கு உலகரீதியாக சாதிப்பது எளிதாக அமைகிறது.இராணுவ ரீதியாக பிரபாகரன் கட்டமைப்பில் சில விகிதாச்சாரம் கூட அரசியல் ரீதியாக தற்போது முன் நகர்த்தி செல்ல இயலவில்லை என்பதே உண்மை. ஒன்றிரண்டாக அமிதாப்பச்சனை உணரவைத்ததும்,ராஜபக்சேவை லண்டனிலிருந்து துரத்தியது மட்டுமே இப்போதான சாத்தியங்களானவை.

இலக்கிய முகமூடிகள் அணிந்து கொண்டு புலியெதிர்ப்பு செய்தவர்களின் முக விகாரங்கள் மது,பெண்ணுடல் என்று போதைக்குள் பல்லிளிக்கின்றன. இப்படியான இங்கொன்றும் அங்கொன்றுமாய் இதிகாசமாய்த் தொடரும் எட்டப்பன்களை இனி மேல் துணிவாக பொதுக்கருத்துக்களில் புறம் தள்ளலாம்.பல சுழிவுகளில் மெல்ல நகரும் தமிழகம் ஈழத்திற்கு வரமா? சாபமா?

Thursday, March 3, 2011

பாரதிராஜா,இளையராஜா,கங்கை அமரன்,வைரமுத்து,மலேசியா வாசுதேவன்

நேற்று முதல் மரியாதை திரைப்படத்தில் பூங்காற்று திரும்புமா என்று இளையராஜாவின் மனதை அள்ளும் இசையில் மலேசியா வாசுதேவன் பாடுவதைக் கேட்டதும் தமிழ் திரையுலகம் மலேசியா வாசுதேவனை இழந்தது மட்டுமல்லாமல் நட்பு என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கவேண்டிய தலைப்புக் கட்டுக்காரர்களின் நட்பும் திசை மாறிப்போய் விட்டது என்ற சோகம் என்னை அப்பிக்கொண்டது.தனி மனிதர்களாக இவர்களுக்கு நட்பின்  ஆழம் குறைந்த இழப்பும் இசையில் தமிழகத்துக்கு பேரிழப்பும் என்ற உணர்வு.

இளையராஜா இசையை பலவிதமாக யாரும் பரிட்சித்துப்பார்க்காத விதத்தில் தமிழுக்கு தந்திருந்தாலும் எம். எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், டி,  எம். சௌந்தர்ராஜனின் கூட்டுக்கலவையில் தொனிக்கும் இதம் மிக அதிகம்.வைரமுத்துவின் குரலில் ஒலிக்கும் தமிழின் இசை அவரது திரைப்படப் பாடல்களில் இல்லை.கூடவே பரிசுக்கு பாடும் புலவன் போல்  வைரமுத்து முதுகொடிந்து போனதில் இன்னும் அதிக சோகம்.பாரதிராஜாவின் கேமிரா பார்க்கும் கோணமும்,இளையராஜாவின் சப்த நாதங்களும் ஒன்றிணைந்தாலும் அங்கே வைரமுத்துவின் வைர வரிகள் காணாமல் போய் விடுகின்றது.கண் மூடினால் கண்ணதாசனின் வரிகள் சொல்லும் வார்த்தையின் இயல்புக்கு இதுவரையிலும் எந்த தமிழ் திரைக்கவிஞனும் இணையில்லை.

பணம்,புகழ் சேர்ந்தவுடன் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் கூட்டத்தை ஈகோ என்ற குணம் பல திசைகளிலும் அலைக்கழித்து விட்டிருக்கலாம்.இவர்களின் கூட்டு கலைந்து போனதின் ரகசியம் இவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் பிரிவுக்குப் பின்னும் கூட எம்.எஸ்,விஸ்வநாதனின் இசை அர்ப்பணிப்பு போலவே இளையராஜாவின் தனி ஆவர்த்தனத்தையும் உணர்கிறேன்.

கல்லூரிக்காலங்கள் ஹார்மோன் சுரப்பியின் பொற்காலங்கள்.

கல்லூரிக் காலங்களில் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள் எந்தக் கல்லூரியில் சேர்கிறார்கள் என்பதை விட பொதுவாக கல்லூரிக் காலங்கள் படிப்புடன் கூடிய கலாட்டாக் காலங்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்கும்.

பச்சையப்பன் கல்லூரியின் கீழ்ப்பாக்க வளாகம்,சட்டக்கல்லூரியின் பாரிஸ் கார்னர் போன்ற நகரின் முக்கிய இட அமைப்புக்களே இவ்விரு கல்லூரிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதென்பேன்.ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் தரமணி கலாட்டாக்கள் வெளியே வருவதில்லை.ராகிங் என்றால் மருத்துவக்கல்லூரிதான் என்ற பெயரெல்லாம் மக்கள் மனதில் பதிந்ததில்லை.கஞ்சாவும்,போதை மருந்துகளும் சரளமாகப் புழங்கிய இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கல்லூரி வளாகத்துக்குள் சம்மணம் போட்டு வெறும் பார்வையாளனாக இருந்த அனுபவம் எனக்குண்டு.இவைகள் அனைத்தும் கல்லூரி வளாகம் என்ற சுற்றுக்குள் விளைவதால் சமூகம் இதற்கெல்லாம் பொறுப்பேற்பதில்லை.ரயில் தொழிலாளர்களுடன்,பேருந்து இயக்குபவர்களுடன் தகராறு என்பதும் பேருந்து தினம் பொது மக்களுக்கு இடையூறு என்ற காரணம் கொண்டே மாணவர்கள் விவாதப்பொருளாகிறார்கள்.

விவேகானந்தா கல்லூரி மாணவர்களும் கூட பேருந்து நாளை அதே கோலாகலத்துடன் கொண்டாடியதாக அறிந்தேன்.கலாட்டா செய்தாலும் சமத்து பசங்க பெயர் சிலருக்கு இயல்பாய் வந்து விடுவதும், உரிமைக்கும், மொழிக்கும் கூடவே கொஞ்சம் கலவரங்களுக்கும் இடம் கொடுப்பதால் இரு கல்லூரிகள் ஓரம் கட்டப்படுவது வேதனைக்குரியது.இதனையும் கடந்து இந்தக்கல்லூரிகள் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு அளித்திருக்கிறது.

என்னமோ ஏனைய கல்லூரி மாணவர்கள் மட்டும் வாழ்க்கை கடலில் நீந்தி கடந்து விடுவது போலவும்,இவ்விரு கல்லூரி மாணவர்களும் சமுதாய ரவுடிகளாகிப்போவதும் மாதிரியான பிம்பங்கள் சரியென படவில்லை.முதலில் ரவுடியிசம் என்பது குவாரி,மணல்,துறைமுகம் இன்னும் பல தொழில் சார்ந்த கட்டிங்க்,வசூல் எதிர்க்குழு வெட்டு குத்து என்பவற்றோடு அரசியல்வாதியின் பெரும் கடலில் தஞ்சம் என்பதில் சங்கமமாகிறது என்பதோடு ரவுடியிசத்தின் மொத்த குத்தகைக்காரர்கள் அரசியல்வாதிகளே என்ற புரிதல் வேண்டும்.இந்த அரசியல் இலக்கணத்துக்குள் பெரும்பான்மையான ரவுடியிசம் வந்து விடும்.

விமர்சனங்களில் மாட்டிக்கொண்டும் பதிவர்கள் சொல்லும் அவரவர் சார்ந்த கருத்துக்கள் மன உணர்வின் வெளிப்பாடு என்ற நோக்கில் சரியென்றால் கல்லூரி கலாட்டக்களும் அவர்களது வயது சார்ந்த,இளமை, குழு சார்ந்த நோக்கில் சரியானதுதான்.இதற்கு எதிர்வினை செய்ய யாராவது துடித்தால் வின் தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர் இது குறித்து கருத்து சொன்ன டி.சியக்கொடுத்து அனுப்பினாலும் தப்பில்லங்கிற கருத்து மாதிரி சுய அளவீடுகளோடு விமர்சனம் செய்பவர்கள் என்பேன்.சேர்ந்து வாழும் மனோபாவத்துக்கு நல்ல உதாரணங்கள் பள்ளி வாழ்க்கையும்,கல்லூரி வாழ்க்கையும் என்பேன்.இது தொழில்,அலுவலகம் என்று மேல் நோக்கி நகரும் போதும் வாழ்க்கையில் ஒரு வேளை பிரதிபலிக்கலாம் அல்லது வாழ்க்கை தரும் பாடங்களில் மாறியும் போகலாம்.எதுவும் உத்தரவாதமானதல்ல. 

குறும்புகள் என்பவை ஒரு சில நண்பர்களோடு சேர்ந்து வரும் உடல் தசைகளின் குஸ்தி.கலாட்டாக்கள் என்பது குழு என்ற கூட்ட உணர்வின் வெளிப்பாடு.கல்லூரிப்பசங்கன்னா குறும்பு,எதிர்பால் ஈர்ப்பு,கேளிக்கைன்னு இருந்தாலும் பரிட்சைக்கு 10 நாட்கள் முன்பாவது பாடப்புத்தகத்தை படிக்கும் பொறுப்பு வந்து விடும்.சோடாப்புட்டி கண்களோடு முதல் வகுப்பு மாணவர்கள் விதிவிலக்குகள் என்பதால் இது பொதுவான மாணவனுக்கான பார்வையாக நோக்குவது நல்லது.

நடு நிசி நாய்களை விமர்சிக்கும் இக்கால பதிவர்களை விட நடுநிசி சாயா குடித்தாவது தேர்வின் வெற்றியை தேடும் பொறுப்பானவர்கள்தான் மாணவர்கள்.பதிவுலக கொட்டங்கள்,சண்டைகளை விட மாணவர் கலாட்டக்கள் அந்த அந்த காலகட்டத்தோடு மறைந்து விடும் ஒன்றுதான்.அதோடு வாழ்க்கையின் போராட்டங்களோடு சங்கமிப்பதில் மாணவன் என்பவனே அடையாளம் தெரியாமல் போய் விடுகிறான்.இவனை பிற்காலத்தில் எங்கே தேடி கண்டுபிடிப்பீர்கள்?


ஆமா! இந்த பேருந்து தினம் எப்ப எப்படி முளைச்சது?எப்படியோ முளைச்சிடுச்சு அதனை சீராக எப்படி வளர்ப்பதென்பதில் இனி  கவனம் செலுத்தலாம்.ஜல்லிக்கட்டுல கூடத்தான் மாட்டுக்கு சாராயம்,மொளகாய்ப் பொடி தில்லுமுல்லுக நடக்கிறதா கேள்விப்படுகிறேன்.அதற்காக ஜல்லிக்கட்டே வேண்டாமென்றா நீதித்துறை தீர்ப்பு சொல்கிறது.கல்லூரி பேருந்து தினமும் ஒழுங்கு படுத்த வேண்டிய ஒன்றே.பயணத்திற்கே மூச்சுத்திணறும் பொதுமக்களின் 2 ட்ராக் பயண பாதையில் மாணவர்கள் குறுக்கீடே முதல் அத்துமீறல் என்பேன். 

கல்லூரிக்காலங்களில் பெண்கள் எவ்வளவு பொறுப்பாக வீடு,கல்லூரி,டிபன் கேரியர்,கர்சீப்,படிப்பு,சிலருக்கு மெல்லிய காதல்ன்னு ஸ்மார்ட்டா இருக்காங்க.ஆனால் அடிப்படியும்,குடும்ப அரவணைப்புமென்று இவர்கள் வட்டம் குறுகிப்போகிறது.கலாட்டாகள்,தேடல் என்பவற்றோடு மாணவன் சமூக டாமினேசியாகிறான்.A paradox of Iife.

டிஸ்கி: கண்ணுகளா!பதிவில் சொன்னமாதிரி பச்சையப்பன் கல்லூரி கீழ்ப்பாக்கத்தில் என்பதும்,சட்டக்கல்லூரி பாரிஸ் கார்னரில் என்பதும் தவிர அதன் சுவர்களின் முழு திசைகள் கூட நான் அறியேன்.கூடவே முன்பு கல்லூரிப்போராட்டங்களை கண்டு எரிச்சல் பட்டுக்கொண்டு ஒரு கல்லையும் கூட எறியாத அகிம்சைவாதி நான்:)