முந்தைய கலிலியோ பதிவில் நானும் பதிவர் வவ்வாலும் எம்.எஃப் ஹுசைனுக்கு குரல் கொடுத்து விட்டு சல்மான் ருஷ்டியை கை விட்டு விடலாமா என பின்னூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம்.சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் இலக்கிய விழா வருகைக்கு எதிர்ப்பு குறித்து ஹிந்து பத்திரிகையும், NDTV தொலைக்காட்சியும் பொது விவாத விழிப்புணர்வை உருவாக்கியுள்ளன.
நேர பகிர்வு தாமதத்தில் பதிவு போட இயலாத சூழலில் பதிவர் தருமி சல்மான் ருஷ்டி குறித்த முதல் கருத்து வெளியாடலை முன் வைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.(பதிவர் தருமி!இந்தப் பதிவை ஒருவேளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!சல்மான் ருஷ்டியென முழுப்பெயரையும் உச்சரியுங்கள். இல்லையெனில் ருஷ்டியாவது போடுங்கள்.சல்மான் என்று விளித்ததும் ஒஸ்தி யோட ஒரிஜனல் இங்கே எங்கே வந்தார் என்ற குழப்பமே தோன்றியது:)..
இனி பதிவின் சாரத்துக்கு செல்லும் முன் எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம் என்ற பதிவையும் உள்வாங்கிக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் சமனீடு குறித்த எனது பார்வையை புரிந்து கொள்ள வசதிப்படும்.
மதம் சார்ந்த,சாராத கருத்துக்கள் பதிவுலகில் வலம் வருவது ஒருபுறமிருக்க பெங்களா தேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்,இந்தியாவின் சல்மான் ருஷ்டி போன்றவர்களின் இலக்கிய வெளிப்பாடுகளுக்கு வரும் உயிர் பயம் மிரட்டல்களிலிருந்து மத தீவிரவாதங்களின் அளவுகோலை கணிக்க இயலும். சும்மா கிடந்ததை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்பவே சல்மான் ருஷ்டிக்கு எதிரான ஈரானிய கோமினியின் செயலும் கூட.Satanic verses என்ற வார்த்தையின் சாத்தானின் வேதம் என்ற சொல்லாடலுக்கு கூட கோமினியே உரிமை கோரலாம்:)முன்னாடி நம்மூர்ல பாம்புக்கும் கீரிக்கும் சண்டைப் போட விடுகிறேன் எனும் மோடி மஸ்தான் வேலையே சாத்தானின் வேதம் பிரச்சினையும்.

இப்பொழுது நாவலின் பெயர்கள்,உட்பொருள் என பல வியாக்கியானங்கள் வெளிவரத்தொடங்கியிருந்தாலும் சல்மான் ருஷ்டி புத்தகத்தை வெளியிட்ட காலகட்டத்தில் புத்தகத்தின் உட்பொருள் அறிந்த ஒரே ஆள் சல்மான் ருஷ்டியாக மட்டுமே இருக்க முடியும்.பேனை பெருமாளாக்கின கதையாக பெயர்களின் உவமை காரணமாக மதம் சார்ந்த ஆய்வாளர்கள் கருத்து வெளியிட,சிறு நெருபபை ஜுவாலையாக்கிய பெருமை கோமினிக்கே. பத்வா,கொலை மிரட்டல்கள் வந்த காலகட்டத்திலும் கூட விமர்சனத்துக்குள்ளான வரிகள் எவை என்பது குறித்து யாருக்கும் தெரியாது.குறைந்த பட்சம் பத்வா கொடுத்த கையோடு கோமினியே விமர்சனத்துக்குரிய வரிகள் என்ன என்று விளக்கியிருக்கலாம். கோமினி பத்வா கொடுத்து விட்டாரா?அப்ப சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடவேண்டியதுதான் என்ற ரீதியிலேயே சுமார் 8 ஆண்டுகள் சல்மான் ருஷ்டியின் குரல் எந்த எழுத்து அரங்க வட்டங்களிலோ ஒலிக்கப்படவில்லை.
பின்பு மிதவாதியான முகமது கட்டாமி(Mohammad Khatami))ஈரான் ஆட்சியின் தலைமைக்கு வந்தவுடன் சல்மான் ருஷ்டியையோ அவர் மீதான கொலை மிரட்டலையோ ஆதரிக்கப்போவதுமில்லை.என்ற தீர்மானத்திற்கு பின் சல்மான் ருஷ்டியின் குரல் பொதுவெளியில் ஒலிக்கத்துவங்கியது.
ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் மத தீவிரவாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவின் மத தீவிரவாதம் குண்டுவெடிப்புக்களாக வெளிப்பட்டாலும், குண்டுவெடிப்பின் பின்ணணியில் இந்துத்வா மத தீவிரவாதமும் ஒளிந்து கொண்டிருப்பதால்,பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கிய மத தீவிரவாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒப்பிட்டால் இந்திய மத தீவிரவாதம் கட்டுக்குள் உள்ளதென்றே கொள்ளலாம்.மிரட்டல்கள்,உயிர் பயங்கள் உருவாக்குவதின் காரணமாக அமைதியை விரும்புவர்களின் குரல்கள் வெளிப்படாமல் இஸ்லாமியத் தீவிரவாதம் மட்டுமே தன் முகத்தைக் காட்டுவதால் இஸ்லாமியத்தின் இயல்பான பிம்பம் மென் மேலும் சரிந்து விடுவது என் போன்று வளைகுடா நாடுகளில் வாழும் மதசார்பற்றவர்களுக்கு வருத்தமே.
இவற்றோடு மதக் கோட்பாடு நூல்களும் தொடர்ந்து பயணிப்பதும் கூட மனிதர்களின் தொடர் உணர்வலைகளின் பொருட்டே என்பதும் ஆச்சரியமளிக்கும் ஒன்றும் கூட..நான் சிறுவயதில் கண்ட ஒற்றை ஆலமரம் யாரோ ஒருவர் பத்திக்குச்சி கொளுத்தி வைக்க காலப்போக்கில் ஆலமரக்கோயில் ஆகிப்போனதும், மழை காலத்து சறுக்கும் சாலையோ,சேரன் போக்குவரத்து வாகனக் கோளாறோ, வாகனம் ஓட்டியின் தவறான கணிப்போ ஒரு வாகனத்தின் மொத்த உயிர்களும் விபத்தால் இறக்க காலப்போக்கில் அந்த இடம் முனியாண்டி கோயிலாகிப்போனதை காண நேர்ந்தது.

மனித பயங்களுக்கு அப்பாற்பட்டு,கேள்விகளுக்கான முழு பதிலாக பாமரனுக்கும் புரியும் சூழலில்,பரிணாமக் கோட்பாடுகளும் மனித சக்தியின் மொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் காலகட்டத்தில் மத நம்பிக்கைகள் கடவுளிடமிருந்து விடுபட்டு ஈனஸ்வரமாக ஒலிக்கும் காலகட்டத்தில் மதவாதங்கள் அடிபட்டு முந்தைய சந்ததியின் கலாச்சார. கருவூலங்கள் என்ற நிலையில் மட்டுமே மதநூல்களும், மதம் சார்ந்த கோட்பாடுகளும் நிற்க கூடும்.இதற்கு உதாரணமாக எகிப்தில் உள்ள பிரமிடுகளைக் கூறலாம்.மேற்கத்திய நாட்டவர்களுக்கும்,மனித வரலாற்றில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கும், பைபிளின் பழைய அதிகாரங்களுடன் தொடர்பு படுத்துபவர்களுக்கும் முக்கியமாக சுற்றுலா பொருளாதாரத்தை தருவதால் மட்டுமே எகிப்திய அரசுக்கும் பிரமிடு ஒரு பிரமிப்பான விசயம்.மேலும் நமது உள்ளூர்க்குள்ளே இருக்கும் கட்டிடங்களின் பாரம்பரியம் பற்றிக் கவலைப்படாத மனநிலையே சராசரி எகிப்தியர்களின் மனநிலையும்.
இந்துத்வா தீவிரவாதம் இந்தியா சார்ந்த ஒன்று மட்டுமே.அதன் எல்லைகள் இன்னும் நாடுகளீன் எல்லைகளைக் கடக்கவில்லை.ஆனால இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் பிறப்பிடம் ஆழ்ந்த நிகழ்வுகளை சுமார் 60களின் இறுதி துவங்கி 9/11 வரை உற்று நோக்கினால் இதன் பூர்வீகம் பாகிஸ்தானில் முன்பு கூடி ஊக்குவிக்கப்பட்ட இஸ்லாமிய மதக்கூட்டங்களாக இருக்க கூடும்.இதன் தாக்கங்களாக பம்பாய்,,கோவை குண்டு வெடிப்பு போன்றவற்றை சொல்லலாம்.சுதந்திர இந்தியாவின் இந்து,இஸ்லாமிய வேறுபாட்டின் துவக்கமாக 1993ல் தாவுத் இப்ராஹிம் உதவியுடன் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்த பம்பாய் குண்டுவெடிப்பே பிரச்சினைகளின் துவக்கமாக கூறலாம்.இதனைத் தொடர்ந்த சிமி என்ற இஸ்லாமிய மாணவர் அமைப்பும், பி..ஜே.பியின் இந்துத்வா தீவிரவாதம்,பாபர் மசூதி இடிப்பு என்ற இந்து தலிபானிசம்,நரேந்திர மோடியின் அரசியல் சூதாட்டங்களாக குஜராத் கலவரங்கள் என நிகழ்வுகள் தொடர் கதையாகின்றன.
என் மாமாவின் நண்பர் ஒரு இஸ்லாமியர்.கோவை அலங்கார் ஓட்டலுக்கருகில் அவரது வீடு இருந்தது.மாமா நண்பரின் வீட்டில் உணவருந்தும் அன்னியோன்ய காலமெல்லாம் இருந்த கோவை இரவுக்காவல் போலிஸ்நிலையங்களாக பின்பு மாறிவிட்டது வருத்தத்திற்குரிய ஒன்று.
பாகிஸ்தானிய மத தீவிரவாதத்திற்கு காரணமென்ன என்று யோசித்தால் இந்திய,பாகிஸ்தான் பிரிவினை துவங்கி,அமெரிக்கா,ரஷ்யா பனிப்போர் காலத்தில் பூகோள நலன்கள் அடிப்படையில் ஜனநாயக இந்தியாவை விட்டு அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் சாய அதே பூகோள நலன்கள் அடிப்படையில் இந்தியா ரஷ்யா பக்கம் சாய,அமெரிக்காவின் ஹென்றி கிஸ்ஸிங்கரால் காஷ்மீர் பிரச்சினைக்கு தூபமிட்டது,ரஷ்யாவின் ஆப்கானி|ஸ்தான் ஆக்கிரமிப்பு எதிராக மதத்தின் அடிப்படையில் போராட வந்தவர்களை ஒன்றி திரட்டியதில் ஒசாமாவின் பங்கும்,அமெரிக்காவின் சி.ஐ.ஏ பண,ஆயுத பங்களிப்பும், சவுதி அரேபியாவின் மதம் சார்ந்த பணப் பங்கீடுமென முந்தைய ரகசியங்கள் 9/11க்குப் பின் பொதுவுக்கு வந்து விட்டன.

இந்தியா மீதான பாகிஸ்தானின் வன்மம் பாகிஸ்தானிலிருந்து பெங்களாதேஷைப் பிரித்ததில் துவங்கி நேரு காலத்து காஷ்மீர் பிரச்சினையை வலுப்படுத்துவதிலும்,காஷ்மீர் இந்துக்களை அப்புறப்படுத்தும் இஸ்லாமிய தீவிரவாதத்திலும்,காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினரை சிறை செய்து கொலை செய்த நிகழ்வுகளாய் காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலமாக ஊக்குவிக்கப்படுகிறது.மதம் தவிர்த்து பதிவுகள் போட மாட்டேன் என்கிற பதிவர்கள் போல:) மதம் தவிர்த்து பள்ளியில் வேறு பாடங்கள் இல்லையென தலிபான் பள்ளிகள் பாகிஸ்தானுக்குள் ஊக்குவிக்கப்படுகின்றன.இந்தியாவுக்கு எதிரான பயிற்சி களங்கள் பாகிஸ்தானுக்குள் அரசு ஆதரவுடன் உருவாக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுக்குள் உருவாகும் இந்தியாவுக்கான எதிரான தீவிரவாதத்தை முடுக்கி விட்டதில் தாவுத் இப்ராகிமின் பங்கும்,சிமி மாணவ இயக்கத்திற்கும் முக்கிய பங்குண்டு.சிமி மாணவ இயக்கத்தின் மறுபக்கத்தையும் இந்திய முஸ்லீம்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னவென்றும் ஆராயப்படவேண்டிய ஒன்று என்ற போதிலும் இதற்கு அடிப்படையாக மதம் என்ற சொல் குறுக்கே வந்து முட்டுக்கட்டைபோட்டு பிரச்சினையை திசை திருப்பி விடுகிறது.

இதற்கு எதிர்வினையாக இந்துத்வா செயல்பாடுகளும் கிரியா ஊக்கியாக செயல்பட இஸ்லாமிய தீவிரவாதத்தின் தன்மை மதத்தின் பொதுத்தன்மை அடிப்படையில் சாதாரண நம்பிக்கையாளனையும் பற்றிக்கொள்கிறது.தான் எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக உணரும் மனிதனுக்கு மதம் சார்ந்து எந்த கருத்து வந்தாலும் ஒரே பாய்ச்சல்தான் என்பதனை விட மத உணர்வுகளை தூண்டி விடும் தீய பந்து குழு,தஸ்லிமா நஸ்.ரீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மஜ்லிஸ் போன்ற குழுவினர்,இந்துத்வா தீவிரவாதம் போன்றவை மனித நலன்களுக்கும்,மதங்களின் ஒற்றுமைக்கும் மிகவும் ஆபத்தானவை.
இதில் இன்னுமொரு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் ஈரானிலிருந்து ஷியா கோமினியிடமிருந்து வந்த பத்வா காரணமாக சவுதி அரேபியாவும்,ஏனைய இஸ்லாமிய நாடுகளும் சல்மான் ருஷ்டி விசயத்தில் அடக்கி வாசிக்கும் பூகோள அரசியலும் குறிப்பிடத்தக்கது.
கோமினியின் சல்மான் ருஷ்டி மீதான பத்வாவும, அதனைத் தொடர்ந்த கொலை மிரட்டல்களும் முகமது கட்டாமியின் கருத்துக்குப் பின்பான காலவெள்ளத்தில் மறக்கப்பட வேண்டிவையாகவும்,சல்மான் ருஷ்டியின் கருத்து பரிமாற்றங்கள் செய்து அதன் அடிப்படையில் மீண்டும் எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால் கூட நியாயமாக இருந்திருக்கும்.
ஒவ்வொரு மனித வாழ்வின் காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்வை பிற்கால சந்ததிக்கு கொண்டு செல்வது கவிதை, இலக்கியம், ஓவியம், அறிவியல் கண்டுபிடிப்புக்கள் போன்றவை. இவற்றை அழிக்கும் எந்த ஒரு இசமும் வரலாற்றில் பின் தங்கிப்போவதோடு எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.
மதம் சார்ந்த கருத்துக்கள் ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்களை உருவாக்குவதை விட பிரிவினை உணர்வுகளையும்,கோபங்களையுமே முன்வைக்குமென்று தெரிந்திருந்தும் நான் சார்ந்த உணர்வுகளை எம்.எஃப்.ஹுசைனுக்கு சொன்ன கருத்தையும்,சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு மிரட்டல் குறித்த கால இடைவெளியை ஒப்பீடாக பதிவு செய்யும் நோக்கிலேயே இந்த பதிவு பகிரப்படுகிறது.

சல்மான் ருஷ்டி குறித்து பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லையென்பதை பதிவர் தருமிக்கு சல்மான் ருஷ்டி குறித்த பின்னூட்டம் சொல்லும் போது "இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்கிய V.S.Naipaul பற்றியோ India: A Wounded Civilization என்ற புத்தகம் பற்றியோ எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள்:)" என்று குறிப்பிட்டிருந்தேன்.இலக்கிய வாசக வட்டத்தில் மட்டுமே சலசலப்பை உண்டான புத்தகம்.படிப்பவர்களுக்கு இரு எழுத்தாளர்களுக்கும உண்டான சலசலப்பின் வித்தியாசம் புரியும்.