மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா,கத்தார்,பஹ்ரைன்,குவைத்,ஓமன் என பல நாடுகள் இருந்தாலும் துபாயும் விவேகானந்தா குறுக்கு தெருவுமே பிரபலம் என்பதால் தலைப்பு இப்படி.
பல வருடங்களாக இந்திய உணவகங்கள் அதிலும் தமிழக உணவு வகைகள் கால் பதிக்காதா என்ற ஆதங்கத்தை முகல்மஹால் இன்னும் சில டெல்லி சார்ந்த பகுதிகளிலிருந்து ஆரம்பமாயின. இதுதான் இந்திய உணவு என்ற பிம்பத்தை மெல்ல உடுப்பி ஓட்டல் சைவ உணவாக நுழைந்தது. ஒருவர் கூட தமிழகத்திலிருந்து வராமல் இருக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பை மெல்ல அஞ்சப்பர் செட்டி நாடு உடைக்கிறதே என்ற மகிழ்ச்சியை அதுவும் டெல்லி சார்ந்த நிறுவனர் என்பதில் புஸ்வானமாகி போனது.
குவைத்தில் 2012ல் வியாபாரத்தில் நுழைந்த சரவணபவன் மட்டுமே தமிழகம் சார்ந்த முதல் தரமான உணவகம்.க்டந்த வாரம் அடையார் ஆன்நத பவனும் தனது முகத்தை காட்ட துவங்கியுள்ளது . மேற்கத்திய படிப்பு,புதிய தொழில் நுட்பங்கள்,பொருளாதார வசதி என துபாய் நாடுகள் பன்னாட்டு வியாபாரங்களை ஊக்குவிக்கிறது. தொழிலில் முதன்மை,வியாபார காண்ட்ராக்ட் அணுகுமுறைகள் தெரியும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு அன்னிய செலவாணி சேர்ப்பதில் இப்பொழுது வாய்ப்புக்கள் அதிகம்.
யாருக்கும் தெரியாமல் ரிலையன்ஸ் நிறுவனம் கூட இங்கே கால் பதித்துள்ளது.
வாழ்க!வளர்க இந்திய நிறுவனங்களின் முகங்கள்.
Followers
Sunday, September 6, 2015
Saturday, August 1, 2015
அப்துல் கலாமின் இந்திய கனவு
அப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய கனவை தொடரலாம்.
அப்துல் கலாமின் நினைவு கூறலை பின்னோக்கி செலுத்தினால் கல்லூரி காலம் கடந்து பொக்ரான் அணு ஆயூத பரிசோதனை துவங்கி, 2020ல் இந்திய வளர்ந்த நாடாக கனவு,இந்திய ஜனாதிபதி பின் பள்ளி,கல்லூரி,விரிவுரைகள் என இறுதி வரை தொடர் ஓட்டம் என மொத்த இந்தியாவின் பயணம் என வரிசை படுத்தலாம்.
இந்திய அணு ஆயுத ஐந்து பரிசோதனையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை விட அதிகமாக ஒரு பரிசோதனை ஆறு செய்து இந்தியாவிற்கு போட்டியாக அறிவித்துக்கொண்டது.இந்திய,பாகிஸ்தானின் பகைமையை கிரிக்கெட்டில் மட்டுமே காட்டிக்கொண்ட மக்கள் இரண்டு பக்கமே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டனர்.தனக்கு பிடிக்காத ஒன்றை ஒரு நாடு செய்தால் அமெரிக்காவின் முதல் அறிவிப்பு சேங்ஸன் என்பதாகும். இது நம்ம ஊர் லோன் சேங்ஸனாயிடுச்சு மாதிரியல்லாமல் உலக வணிகம் சார்ந்த தடை என பொருள். உதாரணமாக கார் வாங்கி வைத்துக்கொண்டு பெட்ரோல் போட முடியாமல் போவது மாதிரி.
பொருளாதார தடைகளையெல்லாம் மீறி இந்தியா பயணித்தது. சி.என்.என் போன்ற தொலைக்காட்சி விவாதங்களில் இந்திய பாதுகாப்பு அனலிஸ்ட் கே.சுப்ரமணியனின் இந்திய சார்பு பதில்கள்,பிந்தைய கால கட்டத்தில் அமெரிக்காவின் இந்தியா சார்ந்த வெளியுறவு கொள்கை என மாற்றங்கள் ஏற்பட்டன.
யோகாவில் சூரிய நமஸ்காரம் என்பதனை சூரியனுக்கு வணக்கம் என பொருள்படுத்திக்கொள்வது போல் அப்துல் கலாமின் இந்தியாவின் வல்லரசு கனவும் அமெரிக்காவை பார்,ஆஸ்திரேயாவை பார் என மாறாக புரிந்து கொள்ளப்படுகிறது. கலாமின் வலுவான இந்திய கனவு இப்படி போகிறது.
I and rajan (Abdul Kalam's 2020 vision co author) have often discussed something I observed during my stint at the defence research& development laboratory(DRDL), hyderabad. I came across three persons there who became in my mind points of reference that called me back unceasingly to certain
issues.
Venkat had two sons and a daughter. All were graduates and employed. Living in the same area was kuppu who had tree sons. He succeeded in educating only one. He lived in a rented dwelling. Karuppan had two daughters and one son. He was semi employed.Could not educate any of them because of poverty, and had no regular dwelling place. Was it not possible for him to merely give a normal life to his offspring and not an unrealistic or extraordinary one? A reasonable lifespan, an occupation that would provide them basic comforts and good health care.
This is our dream of a developed India.
உலக அரங்கு அரசியலும்,இந்தியாவின் வாழ்க்கை முறைகளும் 1947 தொட்டு 1990 வரையிலும் தனி மனிதன் வாழ்க்கை போராட்டமாகவே இருந்து வந்துள்ளது.இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை கூட இதன் சாரமாக கொள்ளலாம்.நரசிம்ம ராவின் காலம் தொட்ட இந்திய பொருளாதார கொள்கை மாற்றங்கள்,அந்நிய முதலீடு போன்றவைகள் பொக்ரான் விளைவால் தடை பட்டாலும் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு உள்ளூர் சந்தை பொருள் உற்பத்தியென்பதால் அமெரிக்க சித்தாந்தம் எடுபட வில்லை.
2000 தொடர்ந்த உலக அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு ஆதரவான காலம் எனலாம். இந்தியா முன்னேறிய நாடாகுமா என்ற கேள்வியை 60 களில் கேட்டால் பெரும்பாலோரின் ஒலி உச் கொட்டுவதாகவே இருக்கும். அதன் ஓசை இன்னும் கூட கேட்பதன் காரணம் தமது திறன் மீதான முழு நம்பிக்கையின்மை.
நம்புங்கள் உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெட்ரோலிய பொருட்களை கூவி விற்றாலும் இறக்குமதி செய்வதை விட விவசாயம்,பொருள் உற்பத்தியென ஏற்றுமதியில்தான் இந்திய வணிகம் செயல்படுகிறது.கெரோசினிலிருந்து மேம்படுத்தப்படும் வொய்ட் ஸ்பிரிட் ( white spirit solvent) பெயிண்ட்,இயந்திரங்கள் சுத்தம் செய்தல்,லாண்டரி என பலவற்றிற்கும் தேவையான பொருள்.உள்நாட்டிலேயே இதன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்பதோடு இதன் இறக்குமதி மும்பாய் நவா ஷிவா மற்றும் சென்னை துறைமுகங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஸ்பிரிட் பற்றி பேசும் போது தமிழகம் மது விலக்கு பற்றிய விவாதங்கள் இணையத்தில் பேசப்படுவதை காண்கிறேன். எத்தனால் என்ற முழு ஆல்ஹகாலை மனிதன் குடிக்க கூடாது என அதில் மெதினல் என்ற நச்சுப் பொருள் கலக்கப்படுகிறது. மதுவிலக்கு தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்ற போதிலும் தமிழகத்திற்கு மது வந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று முன்பு வார்னிஷ் குடித்து இறந்தார் என்ற தலைப்பு செய்திகளின் காரணமாக. மது,மதுவிலக்கு என இரண்டு கால கட்டத்திலும் மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களே.அன்று கல்வியின்மை கல்வி வளர்ச்சி இரண்டு காலகட்டத்திலும் பொருளாதார பின் தங்கல் எதிர் சூழல்களில் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.
வயோதிகம் முந்தைய தலைமுறையை செயல்படாமல் செய்து விடுகின்ற காரணத்தால் கலாம் இளைய தலைமுறையை நோக்கி நாடு முழுதும் பயணிக்கிறார்.அதிலும் பள்ளி,கல்லூரி உரைகளை தொடர்ந்த காரணம் கல்வியறிவும் புதிய தலைமுறை புதிதாக சிந்திக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்பதால்.உதாரணமாக பெரியவர்கள் மவுஸ் எலியை பிடித்து கணினியை இயக்குவதை சிரமப்படும் போது இப்போதைய தலைமுறை கணினி பொருட்களை இயக்கும் விதம் ஆச்சரிமடைய வைக்கிறது
இந்தியா எப்படி தன்னிறைவு கொண்ட வளர்ந்த நாடாக முன்னேறலாம் என்பதற்கு அவர் சொல்லும் விடை ஊர் சேர்ந்து தேர் இழுப்பது எப்படி என்பதை சுருக்கமாக
இந்தியா முன்னேறிய நாடாக முடியுமா என்ற தன்னம்பிக்கை
ஏனைய நாடுகள் எப்படி தமது நலன் குறித்து செயல்படுகிறார்கள்
2020ஐ நோக்கிய தொழில் நுட்ப பரிணாம வளர்ச்சி
உணவு,விவசாயம்,உற்பத்தி திறன்
மூலப்பொருட்களும் எதிர்கால இருப்பும்
ரசாயன தொழிற்சாலைகள், மண் வளம்
மக்கள் திறன்
இந்திய நலன் சார்ந்த தொழிற்சாலைகள்
அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு
கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சீர்படுத்தல்
கனவை நனவாக்குதல்
இதனை சாத்தியப்படுத்தல் என்பதில் தடையாக விளங்குவது பீரோகிரஸி,அரசியல் இயங்கும் முறையும்,உள் சிக்கல்களாக நேர்மையின்மை,ஊழல்,இயங்கும் வேகம் போன்றவைகளின் காரணமாக மக்களின் தன்னம்பிக்கை சிதறி விடுகிறது.ஆனாலும் இப்பொழுதும் இந்தியாவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துபவை மக்கள் வளம்,சிறு தொழில்கள்,தொழிற்சாலைகள் போன்றவை.
அப்துல் கலாமின் மதசார்பின்மை பைபிளின் பொன்மொழிகள் 19: 7 ல் துவங்கி ஒருவர் சொன்னார் என்பதால் மட்டுமே நம்பாமல் ஆராய்வாக என புத்தன் சொல்லை எடுத்துக்காட்டுகிறார். தேசபக்தி என குருஜடாவை சொல்லி சுந்தர தெலுங்கு பாடுகிறது.https://www.youtube.com/watch?v=4Lck08A4xOM
கூடவே வீணை ரசனை
திருக்குறள் பொழிப்புரை இப்படி போகிறது
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை
(எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்)
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என பாரதியாரை சொல்லி மூலப்பொருட்கள் பற்றிய அலசல்
ரவீந்தர் நாத் தாகூரை முன் மொழிந்து பிஸிக்ஸ் நோபல் பரிசு முர்ரே கில் மேன் https://www.ted.com/talks/murray_gell_mann_on_beauty_and_truth_in_physics?language=en#t-40012
முர்ரேயை தேடப்போய் மொழிகளின் மூதாதையர் யார் என்பது குறித்து சின்ன காணொளியும் பெயர் தேடலில் கிடைத்தது http://www.ted.com/talks/murray_gell_mann_on_the_ancestor_of_language?language=en
நோய்க்கு இடம் கொடேல் என ஒளவையார் பேசும் சுகாதாரம்
கலாம் காந்தியவாதி என்பதெல்லாம் அவரது சொல்லிலும் செயலிலும் தெரிந்தன என்பதால் சொல்லித் தெரிவதில்லை.
பலருக்கும் தெரியாத வெர்னர் வன் பிரான் (Wernher Von Braun) பற்றி சொல்லி முடிக்கலாம். இவர் இரண்டாம் உலகப்போரில் ராக்கெட் விடுவது சூத்திரத்தை ஜெர்மனிக்கு அளிக்க அவரை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து குடிமகனாக்கி கொண்டது அமெரிக்கா.இதனை விட கருத்தரங்கில் சந்தித்த இந்தியர் ஒருவரிடம் உலகின் முதல் ராக்கெட்டிற்கு வித்தே இந்தியாவில் திப்பு சுல்தான் காலத்தில் ஸ்ரீரங்கபட்டினத்தில் நிகழ்ந்த இரண்டு போர்களில் உபயோகப்படுத்தப்பட்டது என Sir Bernard
Lovell, book entitled . The origins and International Economics of Space Exploration என நிரூபணம் செய்கிறார்.
விஜய் மல்லையா கிங்பிஷர் விமான தொழிலை பாழ்படுத்தி விட்டாலும் அவரது வாழ்வில் செய்த ஒரு நல்ல காரியம் ஸ்ரீரங்கபட்டினம் போரில் பிரிட்டிஷாரால் கைப்பற்ற பட்ட திப்பு சுல்தானின் வாளை லண்டன் ஏலத்தில் எடுத்து இந்தியா கொண்டு வந்து விட்டார்.
(Article sources Inspired by: India 2020 A Vision for the New Millennium)
கலாமின் தேசபற்று,இலக்கியம்,மொழி பற்றுதலுக்கெல்லாம் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்.
STRENGTH RESPECTS STRENGTH - அப்துல் கலாம்.
Monday, July 20, 2015
உப்புவேலியும்,ரோப்வேயும்
பதிவர் கிரியின் உப்புவேலி குறித்த தகவலில் ராய் மாக்ஸம் (Roy moxham) பிரிட்டிஷ் உப்பு சத்தியாகிரக காலத்து உப்பு வரிக்கு காவலான இப்பொழுது காணாமல் போன உப்பு வேலி பற்றி கூறியிருந்தார்.
மொகஞ்சோதாரோ,ஹரப்பா காலம் தொட்டு இந்திய வரலாறு சரியாகவே இல்லை.ஏதோ அங்கொன்றும்,இங்கொன்றுமாக சிதிலமடைந்த கட்டிடங்கள்,கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடிகள்,முப்பாட்டன்கள் எழுதிவைத்த பாடல்கள்,கூத்து,நகர்ப்புற பாடல்கள் என கிடைப்பதை வைத்து காதும்,கண்ணும்,மூக்கும்,வாயும் வைத்து நிலைத்து நிற்பவையே இந்திய சரித்திரம். அரசு சார்ந்த அறங்காவல் துறை மூதாதையர் சொத்து என பலவற்றை பாதுகாத்தாலும் இரும்பு கதவோடு அரசு இயந்திர கதவும் சேர்ந்து என்பதால் ஆராய்ச்சி குறித்த தேவைக்கு பலருக்கும் சென்றடைவதில்லை என அன்பர் ஒருவர் புலம்பியிருந்தார்.
மொழிகள் உருவாகியது எப்படி என்ற ஆர்வம் குறித்த தேடலில் தமிழ் மொழி குறித்து ஏராளமான தகவுகள் இருப்பது பற்றி தமிழ் தனது தொன்மை சார்ந்தும்,வரலாறு சார்ந்தும் எப்பொழுதும் பெருமை பட்டுக்கொள்ளலாம்.மனு காலம் தொட்டு இருக்கிறேனாக்கும் என்று சொல்லும் சமஸ்கிருதம் தத்துவார்த்தம் சார்ந்தும்,இப்பொழுது கோயில் மொழியாக மட்டுமே இருக்கிறதே ஒழிய அகண்ட பாரதம் வரலாறு சொல்வதில்லை. வரலாற்று முக்கியத்துவத்தை பாடம் படிப்பவர்களுக்கு கொடுத்திருந்தால் ஒருவேளை இந்திய வரலாற்று தொகுப்பு இன்னும் செழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுதும் கெட்டுப்போகவில்லை.காமிராவின் புகைப்படக்கலையை பொழுது போக்காக மட்டுமின்றி வரலாற்று பாடத்தின் ஒரு பகுதியாக வைப்பது நிகழ்வுகளை தொகுப்பதற்கு உதவும். இப்போதைய கணினி யுகம் இந்திய வரலாற்றை மென்மேலும் மேன்மை படுத்த உதவும்.
இந்த ஆதங்கத்தை தொடர்ந்து ராய் மாக்ஸம் தளத்திற்கு சென்றால் அவர் வெள்ளைக்கார துரையாக தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்தவர் என்ற தகவல் அறிய நேர்ந்தது.
இனி கல்லூரி காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து வால்பாறை வரை சுமார் 120 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த நினைவுகளிலிருந்து.
இப்பொழுது ஆழியார் அணைக்கட்டு முதற்கொண்டு வால்பாறை வரை சுற்றுலா பகுதியாகி விட்டன. முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும் பதிவர் கந்தசாமி அவர்களே கூட அந்த காலகட்டத்தில் அட்டகட்டி தாண்டியிருப்பாரோ என்பது கூட எனக்கு சந்தேகமே:) காரணம் பொள்ளாச்சியில் துவங்கும் பஸ் பயணம் எங்கும் நிற்காது அட்டகட்டியில் டீகுடிக்க,ஒண்ணுக்க அடிக்க என இடை நிறுத்தம் செய்து வாட்டர்பால்ஸ்,கவர்க்கல்,ஐயர்பாடி,ரொட்டிக்கடை,புதுதோட்டம்,வால்பாறை என முடியும். ஆனைமலை,ஆழியார் கிராம வாகனங்களுக்கு ஆழியார் அணையின் வளைவுகளை கண்டாலே நடுக்கம் என்பதால் அந்தப்பக்கமே போகாது என்பதாலான ஊகம்.எனவே என்னை மாதிரி சைக்கிள் பேர்வழிகளுக்கும்,மோட்டார் சைக்கிள்காரர்களுக்கு மட்டுமேயான அபூர்வ அனுபவங்கள் எனலாம்.பேச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் நேரமின்மை காரணத்தால் சுருக்கமாக பயணிப்போம்.
முன்பு மனிதன் மிருகங்களை வேட்டையாடிய காலம் போய் இப்பொழுது பாரஸ்ட் ரேஞ்ச் எனும் காவல் கட்டுப்பாடு,விலங்குகள் மனிதனை வேட்டையாடும் பயத்தில் வாகனம் தவிர சைக்கிள் பயணம் சாத்தியமில்லை.
இயக்குநர் பாலாவின் பரதேசி ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் ஆழியார் அணைக்கட்டைத் தாண்டி கிட்டத்தட்ட வேதாந்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில்,அதனை அடுத்த குரங்கு நீர்வீழ்ச்சி தாண்டிய வளைவிலிருந்தாவது கதை துவங்கியிருக்கலாம். மனிதன் துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்வின் இனிமைகளை ரசிப்பதாகவே வாழ்கிறான். இந்த நோக்கு பிரிட்டிஷ் காலத்து மழை,குளிர்,மரக்குடிசை,காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டை,பெண்களின் நனைந்த தாட்டு (தேயிலை கொழுந்து பறிக்க உடைக்கு மேல் உடுத்திக்கொள்வது) என பல சிரமங்களுக்குள்ளூம் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை ஒட்டியே.
முந்தைய ஆங்கிலேய நிர்வாக முறைகள் மாறி இப்பொழுது இந்திய வணிக நிறுவனங்கள் தேயிலை தோட்டங்களை நிர்வகிக்கின்றன. இந்தியாவின் ஏதோ ஒரு நகரத்திலிருக்கும் நிறுவன அலுவலகத்துக்கு பெண்கள் வெட்டும் தேயிலையின் எடை கணினி கார்டு பதிவின் வழியே போய் விடும் வசதி வந்து விட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் தேயிலை தொழிற்சாலை போர்மென் தனியாக காட்டிற்கு போய் பெரும் கொம்புகள் கொண்ட மானை வேட்டியாடிய காலம் போய் இப்பொழுது புலிகளும்,சிறுத்தைகளும் தேயிலைத்தோட்ட மனிதர்களை வேட்டையாடும் காலம் வந்தும் அங்கே உழைக்கும் மக்கள் இடம் நகர்வதாக காணோம்.
முன்பெல்லாம் டீ என உருவாகும் தேயிலை தொழிலாளர்களுக்கு கூட சிறிதும் பங்கீடில்லாமல் கோவையில் தேயிலை யூனியன் மூலமாக கொச்சின் வழியே வெளிநாடுகளுக்கு சென்று விடும். தேயிலை தோட்ட கண்காணியின் வேலையே பெண்கள் இளம்தளிர்களை பறிக்கிறார்களா என பார்வையிடுவதுதான். ஒரு பெரும் இலை,ஒரு தளிர்,ஒரு மொட்டு என மூன்றே இலைதான்.
இப்பொழுது பெண்களுக்கு இயந்திரம் கொடுத்து மொத்தமாக கத்திரிக்கோல் மாதிரி வெட்டி விடுகிறார்கள்.தரம் எப்படியென தெரியவில்லை.ஆனால் நிறைய தேயிலை வால்பாறை துவங்கி,ஆழியார்,பொள்ளாச்சி என தாரளமாக கிடைக்கிறது.
இப்பொழுது பரதேசி படத்தை நினைக்கும் போது கதைக்களத்தை பாரதிராஜா கையாண்டிருக்கலாமோ என தோன்றுகிறது..காரணம் பாரதிராஜா சினிமா துறைக்கு வருவதற்கு முன் அந்த பகுதிகளில் மலேரியா இன்ஸ்பெக்டராக சுற்றித் திரிந்ததாக கேள்வி ஞானம். இதனை பாரதிராஜாவே வந்து ஆமாம் இல்லை என கமெண்டினால் ஒழிய இந்த தகவலும் தமிழக திரைப்பட வரலாற்றில் இல்லாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்.
பாரதிராஜாவுக்கான மலை,காடு,வான் மேக முட்டம் என கொஞ்சம் சினிமா தேவதைகளை மட்டும் பயணத்தோடு கொண்டு சேர்த்தால் அழகாக படம் பிடித்துக்கொண்டு திரும்பியிருக்கலாம்.கூகிள் மக்களின் துயர் பகுதிகளை விடுத்து கூகிள் தேடல் கூட அழகியலை மட்டும் வெளிப்படுத்துகிறது.இதன் காரணம் கூகிளின் பெரும்பாலான படங்கள் சுற்றுலா பயணிகள் சார்ந்திருக்கலாம்.
பரதேசி அழுது புரளாமல் அழகியலோடு சேர்ந்திருப்பான். பாலா சொன்னதில் இடமாற்றங்கள்,,சோகங்கள் உண்மையென்பது மட்டும் உண்மையென்பதை படம் பார்த்தும்,அந்த வாழ்வியலோடு வாழ்ந்த ஒரு வயதான பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆர்ம்ஸ்ட்ராங்க் முதன் முதலில் நிலவுக்கு போன மாதிரி வால்பாறைக்கு முதன் முதலாக பஸ் வாகன போக்குவரத்தை கொண்டு வந்தவர் நா.மகாலிங்கம் அவர்களின் அப்பா நாச்சிமுத்து பெரியவர்.
முதல் வாகனத்தின் பேருந்து ஓட்டுநரையும் திரு. நா.மகாலிங்கம் சார்ந்தவர்கள் ஆவணப்படுத்தினால நல்லது.
மற்றபடி தினசரி வேலைகள் தவிர வீட்டைச் சுற்றி காய்கறி தோட்டம் போடுதல்,மதுரை வீரன்,மாரியாத்தா,நாகம்மாள்,ஏசுவே பிதாவே,சப்பாரம்,அல்லாவை மனதிற்குள்ளே தொழுத குத்புதின்,ராவுத்தர் என கெடாவெட்டும்,திருவிழா, கொண்டாட்டம் என வாழ்வின் மறுபக்கத்தையும் ருசித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.முன்பு தேயிலைத் தோட்ட வேலை,வீட்டுத்தோட்டம்,வீட்டு வேலை என மூன்று மடங்கு உழைத்த மக்கள் தேயிலைத்தோட்ட வேலையை முடித்துக்கொண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் குளிருக்கு இதமாக போர்த்திக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள்.இதற்கு தோதாக புலி,யானை பயம் என்பதால் இருட்டிய பிறகு குடிமக்கள் தவிர யாரும் வெளியில் நடமாடுவதில்லை.
தமிழகத்தில் ஊட்டி,வால்பாறை பகுதிகள் தவிர இலங்கை,டார்ஜிலிங் தேயிலைகளும் உலக பிரசித்தம்.வாழ்க்கை முறை ஒப்பீடுகளில் தமிழக தேயிலை தோட்டங்கள் தொடர் போராட்டங்களாலும்,தொழிற்சங்கங்களின் உதவியினாலும், தொடர் போராட்டங்களாலும் ஒரு படி மேல் எனலாம்.
நகரம் , கிராமம் சாராத இரண்டையும் தொட்டும்,தொடாமலுமான மூன்றாவதான வாழ்க்கை முறை தேயிலை மலைக்காடுகள்.
சாரு புகழும் லத்தின் அமெரிக்காவின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர உதவும் ஒரே இயந்திரம் ரோப்வே மட்டுமே.அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் அறுந்து போகுமோ என்று அஞ்சக்கூடிய கம்பிகளை உயிரை பணயம் வைத்து பயணம்.
சமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான உயரமான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி,தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் வந்து சேரும்படியான ரோப்வேக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. இதனை நிருபிக்கும் ஒரே ஆவணப்படம் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் படம் மட்டுமே. முள்ளூம் மலரும் கூட கொஞ்சம் தொட்டு விட்டு ரஜனி,ஷோபா அண்ணன் தங்கை பாசமலருக்கு டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.
நிலம் தவிர மனிதர்கள் காணமல் போனார்கள்.வாழ்ந்த வாழ்க்கை முறை திருப்பூர் போன்று இடம்,சமூக மாற்றங்கள் என காணாமல் போயின.
காணாமல் போன உப்புவேலியைப் போலவே இப்பொழுது கூகிள் உட்பட அந்த ரோப்வேயையும் காணோம்.
Monday, December 22, 2014
இந்துத்வா மதமாற்றம்
வவ்வாலை பதிவுலகில் தேடி வந்த காரணத்தோடு மறுபடியும் ஒரு பொது விவாதத்தை தொடுகிறேன். இணையத்தில் கருத்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காலமும், நிகழ்வுகளும் தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.உலகெங்கும் மதவாதங்கள் பெருகுவதை சில வருடங்களுக்கு முன்பு பி.பி.சியின் நிகழ்ச்சியொன்றில் காண நேர்ந்தது. பல வருடங்களுக்குப் பின்பும் அது தொடர்கதையாகிறது.
இதில் பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையிலும்,ஜனநாயகத்து ஆசைப்பட்டும் இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகளில் தீவிரவாதத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்குகிறது. மோடி,அருண் ஜெட்லி போன்றவர்கள் நல்லாட்சி மீதான கவனம் செலுத்தும் அதே வேளையில் அல்லக்கை எம்.பிக்களும்,இந்துத்வா சார்பாளர்களும் தங்கள் கோர முகத்தைக் காட்ட துவங்கி விட்டார்கள்.மனித நேயம் தேடுபவர்களுக்கு ஈராக்,சிரியாவில் நிகழும் இன வன்முறைகளும் பி.ஜே.பியின் ஆட்சியில் நிகழும் மத மாற்றங்களும் அதிர்ச்சியை உருவாக்குகின்றன.
In Kerala 30 Christians convert. VHP says : We helped"
ஒருவர் இந்துவாக இருந்து கிறுஸ்துவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ ஆவதற்கு மூளைச் சலவை என்பதற்கும் மேலாக இந்து மதத்தின் குறைபாடுகள் என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் ஒரு கிறுஸ்துவரையோ அல்லது இஸ்லாமியரையோ மறுபடியும் இந்துவாக மதம் மாற்றம் செய்வதில் மூளைச் சலவை என்பதை விட பி.ஜே.பியின் அதிகார பீடம் தரும் மமதை இந்துத்வாவாதிகளுக்கு உருவாகிறது. இதன் காரணமாகவே நேற்று முளைத்த தமிழ்க் காளான் எச்.ராஜா தமிழகத்தின் நீண்ட அரசியலில் பல நேரம் நிமிர்ந்த நடையும்,சில சமயம் சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கிக்கொள்ளூம் வை.கோ வை மிரட்ட முடிகிறது.
பி.ஜே.பியின் அசுர பலத்தை ஐந்தே ஆண்டுகளில் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளூம் செயல்களுக்கான விதையை மெல்ல விதைக்கிறது.
Valsad Conversions Spark Anger
இன்றைய காலகட்டத்தில் கிறுஸ்துவ மதம் பரப்புவது வியாபாரமாகிப் போனாலும் கூட கிறுஸ்துவ மதம் இந்தியாவின் கல்வி,மருத்துவ துறைக்கு மிகச்சிறந்த சேவையை செய்திருக்கிறது. அதே போல் இஸ்லாத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்த முகலாயர்கள் இந்தியாவின் கலை,கட்டிடம்,அரசியல்,நிர்வாகம் என தமது சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் முகலாய மன்னர்களின் காலத்தில் பாபர்,ஜஹாங்கீர்,அக்பர் வரை கட்டாய மதம் மாற்றம் அதிகம் சட்ட பூர்வமாக நிகழ்ந்திருக்க வில்லை.
இந்துத்வாவாதிகளால் இடித்து தள்ளப்பட்ட பாபர் மசூதி கூட பாபர் கட்டியதல்ல. பாபரின் கவனமெல்லாம் காபூல் மீதே இருந்தது. அயோத்தியாவில் கட்டப்பட்ட பாபர் மசூதி 1528ல் மீர் பக்கி என்பவரால் கட்டப்பட்டது என்றும் பின்பு வந்த அவுரங்கசீப்பின் காலத்தில் கட்டப்பட்டது என்றும் இரு தகவல்கள் இணையத்தில் உலாவுகின்றன. ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் தனது சகோதரர்கள்,அரசன் ஷாஜகான் என அனைவரையும் சிறையில் அடைத்த கல் நெஞ்சக்காரனாக அவுரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டாலும் தாஜ்மஹாலின் வைரங்கள், பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்ட மும்தாஜ்,ஷாஜகானின் ஆடமரத்திலிருந்து வேறுபட்டு ஆறடி நிலமே சொந்தமடா என அவுரங்கசீப் எளிமையாக ஒரு ஒற்றைக்கதவு சிறிய இடத்தில் மரணித்துப் போனார் அவுரங்கசீப்.
பெரும் யானைப்படை,குதிரைப்படை,காலாட் படைகளைக் கொண்ட இந்திய மன்னர்களிடம் போர் புரிவதோடு,கைப்பற்றிய இடங்களை தக்க வைத்துக்கொள்ள இந்து,இஸ்லாமிய திருமணங்களை முகலாயர்கள் ஆதரித்தார்கள். குறிப்பாக அக்பரின் காலம் தீன் இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கியது. பின்பு வந்த அவுரங்கசீப்பின் காலத்திற்கு பின்பே கட்டாய மத மாற்றம் வடக்கில் உருவாகியுள்ளது. தற்போது ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதிகள் ஈராக்கில் யெகுதி மதம் மாறாதவர்களுக்கு வரி விதிப்பதை போல ஜெசியா வரியை அவுரங்கசீப் அறிமுகப்படுத்தினார்.
வடக்கு முழுதும் முகலாய அரசு வியாபித்திருந்தும் தக்காண பீடபூமிக்கு கீழே தற்போதைய மராட்டியா,கர்நாடகா, தமிழகத்தில் ஊடுறவ இயலவில்லை. பதிலாக முகலாய ஆட்சிக்குட்பட்ட சுய அதிகாரம் கொண்ட ஹைதராபாத் நிஜாம்,ஆற்காடு நவாப் போன்றவர்களின் காலத்தில் இந்துமதத்தின் வர்ணாசிரம பிரிவுகள்,அரசு சலுகைகளுக்காக மத மாற்றம் உருவாகியிருக்கலாம்.
அப்படியிருந்தும் மராட்டியாவில் சத்ரபதி சிவாஜி,வடக்கில் ராஜ்புத்திரர்கள்,சீக்கியர்கள் போன்றவர்களின் இந்து அரசு தன்மையும் எதிர்ப்பும் அவுரங்கசீப்பின் கனவுகளை பூர்த்தி செய்யவில்லை.முகலாயர் காலம் வரை இஸ்லாமிய மதம் என்பது மங்கோலிய,துருக்கிய,பெர்சிய,சுபி கலவையாக மட்டுமே இருந்தது. இப்பொதைய வகாபியிசம் உருவாகியிருக்கவில்லை.ஆட்சிக்கு தொல்லை தரும் அரசியல் வாரிசுகள்,குடும்பத்தாரை மெக்காவுக்கு வழியனுப்பி வைக்க மட்டுமே செய்தார்கள்.
பின்பு இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல் மதமாற்றத்தையும் உருவாக்கினார்கள்.இதற்கான சாட்சியமாக இப்பொழுதும் கோவா,டையு,டாமன் பகுதிகளை கூறலாம்.
மதமாற்றங்கள் அறியாமை,அரசியல்,பொருளாதார,சமூக, சமயம் என்ற பலவற்றின் கலவை. மங்கோலிய,முகலாய படையெடுப்புக்களில் கோயில்கள் இடிப்பு சாத்தியமென்ற போதிலும் அதற்கு நிகரான குஜராத் கலவரங்கள்,கிறுஸ்துவ பாதிரியாரை உயிரோடு கொழுத்திய வன்முறைகளையும், ரத்தக்கறையையும் இந்துத்வா தனது முகத்தில் பூசிக்கொண்டுள்ளது.
பல படையெடுப்புக்கள்,இந்தியாவை ஓட்டாண்டியாக்கிய பின்பும்,மத மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் இந்து மதம் சைவம்,வைணவம்,ஜைன மதம் என தனது வேர்களை ஊன்றியிருக்கிறது. இதற்கான காரணம் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இந்தியர்களிடமிருக்கிறது. மாறாக எகிப்திய நாகரீகம்,பாரசீகம்,ஆட்டோமன் பேரரசுகள் அனைத்தும் இஸ்லாமிய தேசங்களாக மாறியிருக்கின்றன. இப்பொழுதும் இனி வரும் காலங்களின் இணைய பரிமாறுதல் இந்திய தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்பதால அரசியல் நிழலில் ஆர்.எஸ்.எஸ் செய்யும் மத மாற்றங்கள் அவசியமில்லாதவை என்பதோடு பெரும் ஆபத்தை இந்திய தேசத்திற்கு சேர்க்கும்.
காந்தியை சுட்ட கோட்சே தேசப்பற்றாளன் என்று வரலாற்றை திரிக்கும் இந்துத்வாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழகத்தின் திராவிட கழகங்களின் கிழட்டு நிலையில் தமிழர்கள் பி.ஜே.பியிடம் கவனமாக இருப்பது அவசியம். தமிழகத்தின் திராவிட கழகங்கள் தனி மனித ஆளுமை,ஊழல் போன்றவற்றில் சிக்கிவிட்டாலும் கூட திராவிட இயக்கங்கள்,பெரியாரின் கொள்கையோடு முழுவதும் இணைந்து செயல்படா விட்டாலும் கூட இரு கழகங்களும் தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டு நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும்.எனவே முகங்கள் மாறினாலும் கூட திராவிட இயக்கங்களின் வழியே தமிழகம் மேலும் நடைபோடுவதே தமிழகத்தை தனித்துவப் படுத்தும்.
காந்தியால்தான் பாரதம் இரண்டாக உடைந்தது என்று புதிய வரலாற்றுக்கதைகள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பழைய வரலாற்றைப் பற்றி சொல்லியாக வேண்டும். மேலே தொட்ட முகலாயர்களின் படையெடுப்புக்களுக்கு ஒரே வழி காபூல்,பாகிஸ்தான் தொட்ட இந்துகுஷ் பிரதேசம் மட்டுமே.இமயமலையெல்லாம் கடந்து வரும் சாத்தியமில்லாமல் ஆற்றுக்கணவாயில் தங்களுக்கும், குதிரைகளுக்கும் இளைப்பாறியே துருக்கிய, மங்கோலிய, பாரசீக,முகலாயப் படையெடுப்புக்கள் உருவாகின.தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் கோட்டை கொத்தளங்களை அமைக்கத் தெரிந்த இந்திய மன்னர்களுக்கு ஒன்றாக சேர்ந்து அரண் சுவர் கட்டத் தோன்றவில்லை.சீனா சுத்தி சுத்தி சுவர் கட்டி ரோடு போட்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார்கள்.இந்திய பிரிவினை மவுண்ட்பேட்டன் காலத்து பிரிட்டிஷ் ராஜ்யம்,ஜின்னா என்ற பிடிவாதக்காரர், இந்திய காங்கிரஸ் என்ற முக்கிய காரணிகள் உண்டு. சுதந்திர இந்தியாவின் பதவி பங்கீடுகளுக்கிடையில் காந்தி என்ற தனிமனிதன் இந்து,முஸ்லீம் என்ற கோட்டை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இருந்தார். ஆஷ் துரையின் கொலையில் கூட வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை திவாலாக்கும் முயற்சியில் ஆஷ் முன்னிலை வகுத்தார் என்ற கோணத்தில் வாஞ்சிநாதனின் சனாதன துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தலாம்.
காந்தியால்தான் பாரதம் இரண்டாக உடைந்தது என்று புதிய வரலாற்றுக்கதைகள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பழைய வரலாற்றைப் பற்றி சொல்லியாக வேண்டும். மேலே தொட்ட முகலாயர்களின் படையெடுப்புக்களுக்கு ஒரே வழி காபூல்,பாகிஸ்தான் தொட்ட இந்துகுஷ் பிரதேசம் மட்டுமே.இமயமலையெல்லாம் கடந்து வரும் சாத்தியமில்லாமல் ஆற்றுக்கணவாயில் தங்களுக்கும், குதிரைகளுக்கும் இளைப்பாறியே துருக்கிய, மங்கோலிய, பாரசீக,முகலாயப் படையெடுப்புக்கள் உருவாகின.தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் கோட்டை கொத்தளங்களை அமைக்கத் தெரிந்த இந்திய மன்னர்களுக்கு ஒன்றாக சேர்ந்து அரண் சுவர் கட்டத் தோன்றவில்லை.சீனா சுத்தி சுத்தி சுவர் கட்டி ரோடு போட்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார்கள்.
இந்திய பிரிவினை மவுண்ட்பேட்டன் காலத்து பிரிட்டிஷ் ராஜ்யம்,ஜின்னா என்ற பிடிவாதக்காரர்,இந்திய காங்கிரஸ் என்ற முக்கிய காரணிகள் உண்டு. சுதந்திர இந்தியாவின் பதவி பங்கீடுகளுக்கிடையில் காந்தி என்ற தனிமனிதன் இந்து,முஸ்லீம் என்ற கோட்டை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இருந்தார். ஆஷ் துரையின் கொலையில் கூட வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை திவாலாக்கும் முயற்சியில் ஆஷ் முன்னிலை வகுத்தார் என்ற கோணத்தில் வாஞ்சிநாதனின் சனாதன துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தலாம்._(ஆஷ் கொலை வழக்கு பற்றி தேடித்திரிந்து ஒருவர் முழு தகவலும் சொல்லியிருந்தார். பதிவு போடுவேன் என்று தெரிந்திருந்தால் குறிப்புகள் செய்திருக்கலாம்.) கோட்சேவுக்கு சிலை வைக்கும் பேர்வழிகள் காந்தியின் கொலையை நியாயப்படுத்துவதை இந்துத்வாவாதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பல மதங்கள்,கலாச்சாரங்கள் என ஒருமுகப்பட்ட இந்தியாவை அதன் ஜனநாயகத்தை ஆர்.எஸ்.எஸ்,பாகிஸ்தான் போன்றவைகள் மெல்ல அசைத்து மட்டுமே பார்க்க முடியும்.
ஒற்றைப் பதிவில் பழைய வரலாறு,இந்துத்வா தீவிரவாதங்களை ஆழமாக சொல்ல முடியவில்லையென்ற போதிலும் முடிந்தால் மதங்களை கடந்து வந்து விடும் ஆற்றலும் முடியாத பட்சத்தில் தனது நம்பிக்கைக்கு ஒரு ஊன்றுகோல் தேவையென்ற மனநிலையில் இருப்பவர்கள் கற்றுத் தெளிந்தோ பட்டறிந்தோ இயல்பாக இங்கொன்றும் அங்கொன்றுமாக மதமாற்றங்கள் செய்து கொள்வதில் தவறில்லை. அது தவிர்த்து ஒரே நாளில் கேரளாவில் 30 பேருக்கு சாமி வந்துடுச்சு என்றும் குஜராத்தில் 100 பேருக்கு கோயில் பூசை நடத்துவதெல்லாம் கட்டாய மதமாற்ற பட்டியலில் சேரும்.
குறிப்பு: பதிவின் கருத்துக்கள் முழுவதும் என்னை சார்ந்தவை மட்டுமே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடும் புரிதலும் இருக்கும்.ஒவ்வொன்றும் அவரவர் சார்ந்தவை.
பதிவுக்கான தகவல்:
1. In Kerala 30 Christians convert. VHP says : We helped"
2. Valsad Conversion Spark Anger
http://www.ndtv.com/article/india/in-kerala-30-christians-convert-local-vhp-says-we-helped-637848?pfrom=home-lateststories
http://www.ndtv.com/article/india/valsad-conversions-spark-anger-637719
Sunday, December 21, 2014
மறுபடியும் வவ்வாலை காணவில்லை
பதிவர் அமுதவன் இடுகை காண நேர்ந்தது. யார் இந்த வவ்வால்? யாருக்காவது தெரியுமா?வவ்வால் வருவதும் வந்து விட்டு ஓடிவிடுவதும் இது ஒன்றும் முதல் முறையல்ல. எனது பழைய பதிவுகளை தேடியதில் 2008ம் வருட தினங்களில் ஒரு முறை காணாமல் போயிருக்கலாம்.தமிழ்மணத்தில் இணைவதில்லையென வவ்வால் விஸ்வாமித்திர சபதம் எடுத்துக்கொண்டும் அவரது பதிவை தேடிப் போய் வாசிக்கும்,சண்டை போடும் பதிவுலக வாசகர்கள் ஏராளம். அனானிகளின் குரு:)
மறுபடியும் 2010ம் ஆண்டு வாக்கில் காணவில்லை என காணா பாடியிருக்கிறேன். என்பதால் வவ்வால் மறுபடியும் பறக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் எப்பொழுது வருவார் எனபது யாருக்குமே தெரியாது.முந்தைய வனவாசத்திற்கான காரணங்களில் இணைய தொடர்பு இல்லாத சூழல் என்று சொன்னதாக நினைவு.
இப்பொழுது மறுபடியும் காணவில்லையென பதிவர் அமுதவன் தேடுகிறார். எங்கிருந்தாலும் அவரின் பின்னூட்ட பகுதிக்கு வவ்வால் வரவும்.
எத்தனை அடிச்சாலும் தாங்குவேன் எனும் சில பதிவுலக நண்பர்களில் ஒட்டியும்,வெட்டியும் அசத்துவதில் வவ்வால் குறிப்பிடத்தக்கவர். 2010க்குப் பின் திரும்ப வந்ததில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவர் அமுதவன் சொன்னமாதிரி ஆள் யார் என்பது முக்கியமில்லை,சொல்லும் கருத்துக்கு மட்டுமே விவாதம் என்று விவாதத்தின் அடிநுனி வரை சென்று பெரும்பாலும் வெற்றிவாகை சூடுவதோடு சிலசமயம் மூக்கை உடைத்துக்கொண்டும் வருவது வழக்கம்.சரி!முட்டுச்சந்தில் வைத்து குத்துகிறார்களே இனி அந்தப்பக்கம் போவதில்லையென்ற சபதமெல்லாம் வவ்வாலுக்கு கிடையாது.அடுத்த பதிவுக்கும் போய் பின்னூட்ட முய் வைக்கும் விருப்பு வெறுப்பு இல்லாத பறவை வவ்வால்.முகமூடிகள்,அனானிகள், என்னைப்போன்ற இரண்டும் கெட்டான் என பதிவுலகம் அதளகளப்படுவதை அவரது எழுத்துக்களை விரும்புவோர்,விரும்பாதோர் அனைவரும் அறிவர்.. அவரது பதிவுகளை தொடர்பவர்கள் வரிசையை அவரது பின்னூட்டங்கள் சாட்சி சொல்லும்.
தமிழ்மணத்திலாவது பதிவு கண்ணில் பட்டது அதனால் கருத்துக்கும்,சண்டைக்கும் வருகிறேன் என்று சொல்ல காரணம் உண்டு.ஆனால் வவ்வால்-தலைகீழ் விகிதங்கள் தளத்தை தேடிச்செல்பவர்கள் மட்டுமே அவரது எழுத்து மற்றும் சண்டைப்பிரியர்கள். அவரது பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அதிகம்.
முந்தைய விவாதக்களம் தமிழ்மணத்தில் குறைந்த மாதிரி தெரிகிறது.பலரும் தமிழ்மணத்திலிருந்து விலகி முகநூல் பக்கம் சென்று விட்டார்களா என தெரியவில்லை.தமிழ்மணம் ஒரு மந்த நிலையில் இயங்குற மாதிரி தெரியுது. இதில் வவ்வாலின் பதிவுகள்,பின்னூட்டங்கள் இல்லாதது இன்னும் சுரத்தை குறைக்கிறது.
வவ்வால் நீங்கள் சொல்வதற்கு,சொற்போர் புரிய இன்னும் நிறைய இருக்கின்றன. திரும்ப வரவும்.
மறுபடியும் 2010ம் ஆண்டு வாக்கில் காணவில்லை என காணா பாடியிருக்கிறேன். என்பதால் வவ்வால் மறுபடியும் பறக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் எப்பொழுது வருவார் எனபது யாருக்குமே தெரியாது.முந்தைய வனவாசத்திற்கான காரணங்களில் இணைய தொடர்பு இல்லாத சூழல் என்று சொன்னதாக நினைவு.
இப்பொழுது மறுபடியும் காணவில்லையென பதிவர் அமுதவன் தேடுகிறார். எங்கிருந்தாலும் அவரின் பின்னூட்ட பகுதிக்கு வவ்வால் வரவும்.
எத்தனை அடிச்சாலும் தாங்குவேன் எனும் சில பதிவுலக நண்பர்களில் ஒட்டியும்,வெட்டியும் அசத்துவதில் வவ்வால் குறிப்பிடத்தக்கவர். 2010க்குப் பின் திரும்ப வந்ததில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவர் அமுதவன் சொன்னமாதிரி ஆள் யார் என்பது முக்கியமில்லை,சொல்லும் கருத்துக்கு மட்டுமே விவாதம் என்று விவாதத்தின் அடிநுனி வரை சென்று பெரும்பாலும் வெற்றிவாகை சூடுவதோடு சிலசமயம் மூக்கை உடைத்துக்கொண்டும் வருவது வழக்கம்.சரி!முட்டுச்சந்தில் வைத்து குத்துகிறார்களே இனி அந்தப்பக்கம் போவதில்லையென்ற சபதமெல்லாம் வவ்வாலுக்கு கிடையாது.அடுத்த பதிவுக்கும் போய் பின்னூட்ட முய் வைக்கும் விருப்பு வெறுப்பு இல்லாத பறவை வவ்வால்.முகமூடிகள்,அனானிகள், என்னைப்போன்ற இரண்டும் கெட்டான் என பதிவுலகம் அதளகளப்படுவதை அவரது எழுத்துக்களை விரும்புவோர்,விரும்பாதோர் அனைவரும் அறிவர்.. அவரது பதிவுகளை தொடர்பவர்கள் வரிசையை அவரது பின்னூட்டங்கள் சாட்சி சொல்லும்.
தமிழ்மணத்திலாவது பதிவு கண்ணில் பட்டது அதனால் கருத்துக்கும்,சண்டைக்கும் வருகிறேன் என்று சொல்ல காரணம் உண்டு.ஆனால் வவ்வால்-தலைகீழ் விகிதங்கள் தளத்தை தேடிச்செல்பவர்கள் மட்டுமே அவரது எழுத்து மற்றும் சண்டைப்பிரியர்கள். அவரது பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அதிகம்.
முந்தைய விவாதக்களம் தமிழ்மணத்தில் குறைந்த மாதிரி தெரிகிறது.பலரும் தமிழ்மணத்திலிருந்து விலகி முகநூல் பக்கம் சென்று விட்டார்களா என தெரியவில்லை.தமிழ்மணம் ஒரு மந்த நிலையில் இயங்குற மாதிரி தெரியுது. இதில் வவ்வாலின் பதிவுகள்,பின்னூட்டங்கள் இல்லாதது இன்னும் சுரத்தை குறைக்கிறது.
வவ்வால் நீங்கள் சொல்வதற்கு,சொற்போர் புரிய இன்னும் நிறைய இருக்கின்றன. திரும்ப வரவும்.
Subscribe to:
Posts (Atom)





