Followers

Wednesday, February 20, 2008

ஒரே பதிவில் வவ்வாலாரும் சத்யாவும்.

இந்த ஒரே கல்லில் இரண்டு மாங்கா பழமொழிதானுங்க மேலே உள்ள தலைப்பு.இரண்டு பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தின் பேரில் இந்த பதிவு.

நான் பாட்டுக்கு சி.வி.ஆர் காட்ற படம் உண்டு நான் உண்டுன்னு போய்ட்டு இருந்தவனை சத்யா அவர்கள் என்னமோ கொக்கி போட்டிருக்கேன் பாருங்கன்னு சொல்லி நாட்கள் பல ஆயிடிச்சு.களத்தில் அடிச்சு ஆட்ற அம்புட்டு பேரையும் விட்டுட்டு என்கிட்ட வந்து கொக்கி போட்டா நான் என்ன செய்யறது?நம்மளையும் மதிச்சு ஒருத்தர் கூப்பிட்டதால சரி நமக்கு புடிச்ச ஒரு பதிவப் பத்தி சொல்லலாம்ன்னு மனசுல நினைச்சா நினைக்கிற நேரம் ஒரு தூக்கம் போட்டு விழிச்ச நேரமா இருக்கும். அரைத் தூக்க சுகத்தில கணினிய தொடறதாவது?இந்த உலக கணினி மயம் ஆனதிலிருந்து மனுசனுக்கு 24 மணி நேரமென்பது ரொம்ப கம்மிங்க.நாளொரு வண்ணமா எல்லாமே புதுசு.இருக்கிற இட நெருக்கடியில் கொக்கி,சாவி க்கெல்லாம் நேரமே போதறதில்லை.இருந்தாலும் 2007ல் எனக்குப் பிடிச்ச பதிவர்களில் ஒருத்தரப் பத்தி எப்பவாவது நேரம் வரும்போது சொல்லிடனும்ன்னு மட்டும் ஆசை.

இப்படியே போய்ட்டிருந்தேனா.... திடீர்ன்னு நமக்கு ஒரு பின்னூட்டம்.படம் காட்றதிலேயே கவனமா இருக்கீகளே எழுதற பாட்டையே காணோமின்னு நமக்குப் பிடிச்ச வவ்வாலார்கிட்ட.நிலைமையப் பாருங்க அவருக்கு பதில் சொல்லக்கூட நேரமில்லாம தலைக்குள்ள அத்தனை மெட்டீரியலிசங்கள்.
சரி இன்றைக்கு வவ்வாலாரையும் சத்யாவையும் ஒரு முகமா சந்திக்கலாமுன்னு மேலே கண்ட தலைப்பு.

வவ்வாலார் போன வருடத்தில் எழுதிய சிறந்த பதிவும் என்னைக் கவர்ந்ததும் எல்லா டாக்டர் பசங்களும் கொஞ்சம் கிராமத்துக்குப் போங்கன்னு அன்புமணி விடுத்த அழைப்பு.எதையுமே விவாதத்துக்குள்ளாக்கி உருப்படியில்லாமல் செய்வதில்தான் நமக்கு நாமே சமத்தாச்சே.அதுமாதிரி கிராமக் கனவும் வீணாகிப் போனது வருத்தத்திற்குரிய விசயம்.நீங்க எந்த பொருளையும்,கருவையும் எடுத்துகிட்டாலும் வெட்டியும்,ஒட்டியும் பேசுவதென்பது இயல்பான விசயமென்றாலும் தர்க்கத்தை சீர்தூக்கிப் பார்க்கும் மனோபாவம்,கூர்மை எத்தனை பேருக்கு சாத்தியம்?அந்த விதத்தில் வவ்வாலாரின் பெரும்பாலான பதிவுகள் விசய ஞானத்தோடு கூடியதாக, பதிவை ஆழ்ந்து ஆராயும்படி இருக்கும்.கூடவே பின்னூட்டங்களை அலசும் போது தான் பிடித்த பதிவுக்கு மூணே கால்தான் என்று தர்க்கம் செய்கிறாரோ என்று கூடத் தோன்றும்.ஆனாலும் அவரின் விசய ஞானம் அவர் சொல்வது மட்டுமே சரியோ என எண்ணத்தூண்டும்.எப்படியிருந்தாலும் கிராம டாக்டர் பதிவு சென்ற ஆண்டின் அவரது சிறந்த பதிவுகளில் ஒன்றாகவும் எனக்குப் பிடித்த கொக்கிகளில் ஒன்றுமாகும்.நமது தேசத்தின் கனவுகள் கிராமங்களிலேயே ஒழிந்து கொண்டிருக்கின்றன.

அப்பாடா! பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமுமாச்சு.கொக்கிக்கு கொக்கியுமாச்சு.

2 comments:

வவ்வால் said...

நட்டு ,

சைலண்டாக வந்து பின்னூட்டம் மட்டும் போட்டு கலக்கிட்டு இருந்திங்க , இப்போ பதிவ போட்டு கலக்கிட்டிங்க, நானோ கலங்கிட்டேன் :-))

நான் போட்டப்பதிவும் நல்லப்பதிவுனு சொன்ன உங்க பெருந்தன்மைக்கு நன்றி!

//அந்த விதத்தில் வவ்வாலாரின் பெரும்பாலான பதிவுகள் விசய ஞானத்தோடு கூடியதாக, பதிவை ஆழ்ந்து ஆராயும்படி இருக்கும்.கூடவே பின்னூட்டங்களை அலசும் போது தான் பிடித்த பதிவுக்கு மூணே கால்தான் என்று தர்க்கம் செய்கிறாரோ என்று கூடத் தோன்றும்.ஆனாலும் அவரின் விசய ஞானம் அவர் சொல்வது மட்டுமே சரியோ என எண்ணத்தூண்டும்.//

இந்த மூன்றே கால் சமாச்சாரம் பத்தி சொல்றேன், இப்போ நான் ஒரு பதில் சொல்கிறேன் அதை விட சிறப்பான பதில் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்(எல்லோருமே அப்படித்தானே)

ஆனால் சிறப்பான மாற்று பதில் சொல்லாமல், நான் சொன்னா அது தான் பதில், அதுக்கு ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாதுனு சொன்னா, ஆதாரத்தோட சொல்லுங்க ஏற்றுக்கொள்கிறேன், இதான் என் பதில் எப்போதும். அதனால் இன்னார் சொன்னார் என்பதுக்கு என்னிடம் மரியாதை இருக்காது, எப்படி, என்ன விதமாக சொன்னார் என்பதை மட்டுமே பார்ப்பேன், அப்படி ஒரு பதில் வராத வரை நான் சொன்னது சரி என்று சொல்வதை முயலுக்கு 3 கால் என்று சொன்னாலும் கவலை இல்லை :-))

//நமது தேசத்தின் கனவுகள் கிராமங்களிலேயே ஒழிந்து கொண்டிருக்கின்றன.//

இங்கே தான் நீங்க நிற்கறிங்க, கிராமம் என்பது எல்லாருக்கும் பிடிக்காத ஒன்றாகவே இருக்கு, இன்றும் பல கிராமங்கள் வழியே தேசிய நெடுஞ்சாலை போனாலும் அவர்கள் செல்ல பேருந்துகள் இருப்பதில்லை, நிற்பதும் இல்லை.இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை கைக்கு எட்டும் வாய்க்கு எட்டாது என்று போய்க்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான கிராமப்பகுதிகளில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொது கழிப்பிடமாக , கருவ முள் வளர்ந்து கிடக்கிறது என்பது தான் உண்மை, அங்கே எல்லாம் பணிக்கு அமர்த்தப்பட்ட மருத்துவர்கள் என்ன ஆனார்கள்?

Sathiya said...

லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டு இருக்கீங்க. அதுவும் ஒரே பதிவுல ரெண்டு மாங்கா! சூப்பர் அப்பு!! உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா;)