நிருபன்!நலமா?நலமறிய ஆவல்
இங்கே தாத்தா கருணாநிதியும்
அம்மாவும் நலமே!
இரண்டு பேருக்கும் எப்பவுமே சண்டை
அது மட்டுமே இங்கே பிரச்சினை
அண்ணன்,அக்கா,தம்பி,தங்கை அனைவரும்
உங்களை கேட்டதா சொல்லச் சொன்னாங்க
அண்ணன் பிரபாகரன் செய்தி
கேட்டு வருத்தமடைந்தேன்
நிழலோடு அருமை வெயிலில்
தெரியும் பழமொழி தெரியும்தானே!
நிருபன்! நிலத்தில் சூடு அதிகம்
என உறவொன்று சொல்லக்கேட்டேன்
உங்களுக்கு தலை சுற்றி உள்ளதாக சொன்னார்
நிருபன்! உடலை பார்த்துக்கொள்ளவும்
கனடாவிலிருந்து ரதி அனுப்பிய மருந்து கிடைச்சதா?
ஒருவேளை பதிவு மருந்தையும் மறுவேளை
பின்னூட்ட மாத்திரைகளையும் கலந்து குடிச்சா
இரண்டு நாட்களில் சரியாகி விடும்
பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்கிறான்?
ராணுவக்காரன் சண்டைக்கு வந்தானா?
உறவினர்கள் கஷ்டத்தில் இருப்பதாக
ஊர் முழுக்க பேசிக்கொள்கிறார்கள்
லண்டனிலிருந்து அனுப்பும் பணத்தையெல்லாம்
பாவிகள் புடுங்கி கொள்வதாக பேச்சு!மெய்யாலுமா?
டக்ளஸு மேலே கேஸ் இருக்குது
தமிழ்நாடு பக்கம் வந்தா
களி திங்கனும்ன்னு சொல்லி வையுங்கோ
பிள்ளையானும்,கருணாவும்
இன்னும் சண்டை போடுறாங்களா?
நல்லதுக்கில்லைன்னு சொல்லி வையுங்கோ
உறவுகள் நிலத்தை ராணுவக்காரன்
பிடுங்கி கொண்டதாகவும் தகவல் வந்தது
கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கோம்
தீர்ப்பு நமக்கு சாதகமா வருமென்று
அம்மா சொல்றா!பொறுத்திருப்போம்
உறவுகளை கேட்டதா சொல்லுங்கோ
நட்பா இருக்கும் சிங்களக் குட்டி பசங்களையும்
கேட்டதா சொல்லுங்கோ
மற்றவை பதில் கண்டு பதில்
இப்படிக்கு
அன்புள்ள
சகோ.
14 comments:
ஹிஹி ..கடிதமாய் அனுப்பிடாதேங்கோ! அப்புறம் அண்ணருக்கு கன்போர்மா வெள்ளை வான் தான்...
அடடா..இன்னும் இந்தப் பிரச்சினை ஓயவில்லையா?
இது நிரூபனுக்கு மட்டும் எழுதிய கடிதமாக எனக்குத் தெரியவில்லை. இன்னும் பலருக்கும் புரிய வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆவல்.
நலமே விழைவு.
ஹி ஹி,
உள்ளே ரெம்ப உள் குத்து இருக்குபோல,
இப்போ வோர்கில் நிக்குறேன்,
விரிவான கருத்துக்கு இரவுக்கு வீட்ட போய் வாறேன் பாஸ் ^_^
//Blogger கந்தசாமி. said...
ஹிஹி ..கடிதமாய் அனுப்பிடாதேங்கோ! அப்புறம் அண்ணருக்கு கன்போர்மா வெள்ளை வான் தான்...//
வெள்ளை வேனாவது!நொள்ளை வேனாவது!இப்பவெல்லாம் கிரிஸ் பேய்தான் லங்காவுல அதிகமா உலவுறதா கேள்வி.
நிரூபன் என்ற பெயர் பதிவுலக பிரபலம்.வுட்டுறுவோமா நொள்ளை வேனை!
//செங்கோவி said...
அடடா..இன்னும் இந்தப் பிரச்சினை ஓயவில்லையா?//
சும்மா நாரதர் வேலைதான்:)
//JOTHIG ஜோதிஜி said...
இது நிரூபனுக்கு மட்டும் எழுதிய கடிதமாக எனக்குத் தெரியவில்லை. இன்னும் பலருக்கும் புரிய வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆவல்.
நலமே விழைவு.//
நல்லா புரிஞ்சிகிட்டீங்க!சகோ நிருபன் சார்பில் நன்றி.
//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ஹி ஹி,
உள்ளே ரெம்ப உள் குத்து இருக்குபோல,
இப்போ வோர்கில் நிக்குறேன்,
விரிவான கருத்துக்கு இரவுக்கு வீட்ட போய் வாறேன் பாஸ் ^_^//
உள்குத்தும் இல்ல!வெளிக்குத்தும் இல்லீங்க துஷ்யந்தன்!இரண்டுமே சேர்ந்த கலவை.
நிச்சயமா இன்று இரவு நிருபன் உறங்கப் போறதில்லை... வாசிச்சு வாசிச்சு குழம்பப் போறாரு...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அன்பு அண்ணானுக்காக ஆசையாய் ஒரு மடல்
//♔ம.தி.சுதா♔ said...
நிச்சயமா இன்று இரவு நிருபன் உறங்கப் போறதில்லை... வாசிச்சு வாசிச்சு குழம்பப் போறாரு...
//
இதெல்லாம் அவருக்கு ஜுஜிபி!அவர் படம் ஏற்கனவே ப்ரிவியு பார்த்திட்டார்:)
பதிவின் சீரியஸ் ஆரம்பத்தில் புரியவில்லை. சீரியஸாக இதை நீங்கள் பதிவிட்டிருந்தால் அது தேவையில்லாதது. நேரடியாகவே சம்மந்தப்பட்டவரின் மின்னஞ்சலுக்கு உங்கள் முரண்பாடுகளை அனுப்பியிருக்கலாம். இல்லை எந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறிங்களோ அங்கே பின்னூட்ட விவாதங்களில் உங்கள் வாதங்களை முன்வைத்திருக்கலாம்.
ஆரம்பத்தில் பதிவின் தன்மை புரியாது அவ்வாறு பின்னூட்டமிட்டு நானும் இதில் சிக்கிவிட்டேன், அதற்காக இந்த மறு பின்னூட்டம். தவறு என்றால் மன்னியுங்கள்....
//நிகழ்வுகள் said...
பதிவின் சீரியஸ் ஆரம்பத்தில் புரியவில்லை. சீரியஸாக இதை நீங்கள் பதிவிட்டிருந்தால் அது தேவையில்லாதது. நேரடியாகவே சம்மந்தப்பட்டவரின் மின்னஞ்சலுக்கு உங்கள் முரண்பாடுகளை அனுப்பியிருக்கலாம். இல்லை எந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறிங்களோ அங்கே பின்னூட்ட விவாதங்களில் உங்கள் வாதங்களை முன்வைத்திருக்கலாம்.
ஆரம்பத்தில் பதிவின் தன்மை புரியாது அவ்வாறு பின்னூட்டமிட்டு நானும் இதில் சிக்கிவிட்டேன், அதற்காக இந்த மறு பின்னூட்டம். தவறு என்றால் மன்னியுங்கள்....//
இந்த கடித நகைச்சுவையோடு தீவிரமான கருத்துக்கு பதிவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்.ஆட்டத்தை களைச்சு விட்டுட்டீங்களே:)
சகோ!நான் பதிவுகளில் இதுவரையில் எவரையும் தனிமனித தாக்குதல் செய்வதில்லை.ஏனையவர்களின் பதிவின் கருத்துக்கு பின்னூட்டங்கள் மூலமாக கண்டனங்களை தெரிவித்தாலும் கூட நாகரீகமாகவே கருத்து தெரிவித்து வந்திருக்கிறேன்.
இந்தப் பதிவையும் கூட சகோ நிரூபனிடம் சொல்லி முன் அனுமதி வாங்கியே எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ன்னு அவர் சொன்னதின் பின்பே இதனை பதிவேற்றம் செய்துள்ளேன்.
நீங்க கண்டுக்காம பின்தொடருங்கள்.நன்றி.
சகோதரன் நிருபனின் பதிவிற்கு அதிலேயே பினூட்டம் கொடுத்திருக்கலாம் தானே..அப்பதான் சரி பிழை தெரியும்..
நாசூக்காய் போகுது கவிதையில் ...
என்னமோ செய்யுங்கோ.
//vidivelli said...
சகோதரன் நிருபனின் பதிவிற்கு அதிலேயே பினூட்டம் கொடுத்திருக்கலாம் தானே..அப்பதான் சரி பிழை தெரியும்..
நாசூக்காய் போகுது கவிதையில் ...
என்னமோ செய்யுங்கோ.//
பின்னூட்டமாகப் போட்டு விட்டிருந்தால் அவருக்கான கருத்தாகவே போய் இருக்கும்.இது பலருக்கும் போய்ச் சேர வேண்டுமென்ற எண்ணத்தில் அவரது முன் அனுமதியுடனே வெளியிடப்படுகின்றது.
நாசுக்காக போகிறது கவிதையில் சரி!
அது என்ன என்னமோ செய்யுங்கோ:)
ஒருமித்த உணர்வுக்கான முயற்சியலலவா செய்து கொண்டிருக்கிறோம்?
Post a Comment