Followers

Wednesday, August 17, 2011

ஐக்கிய முன்னணி கூட்டணி vs அன்னா ஹசாரே குழு

முந்தைய பதிவுகளில் இந்திய அரசியல்வாதிகளைப் பற்றிய கடுப்பே அதிகமாய் இருந்தது.இப்போதைய அரசு vs அன்னா ஹசாரே இழுபறியில் ஆளும் காங்கிரஸ் மூக்கறு பட்டாலும் கூட,அன்னா ஹசாரே குறித்த நேர்,எதிர்மறை விவாதங்கள் வலம் வந்தாலும் கூட இந்திய ஜனநாயகத்தின் புதிய பரிமாணமும்,கூடவே ஆளும் காங்கிரஸின் ஜனநாயகத்திற்கு வலுவூட்டிய தற்போதைய எதிர் நிகழ்வுகள் மகிழ்ச்சியையே தருகிறது.

இருபக்க நிலைப்பாடுகளையும் ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு அன்னா ஹசாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான குரல் மக்கள் குரலாகவே ஒலிப்பதும்,காங்கிரஸின் திசை திருப்பும் முயற்சிகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டதும் நன்கு புரியும்.
அன்னா ஹசாரே குழுவினரை இன்னும் கவிழ்க்கும் சகுனித்தனங்களுக்கான வல்லமை காங்கிரஸ்க்கு இருப்பதாகவே தெரிகிறது.சோனியா அமெரிக்க படுக்கையிலும்,பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கு சப்பாணி சென்சிடிவ் மேனாக இருப்பதாலும் தற்போதைக்கான உண்மையான வில்லன்கள் ப.சிதம்பரமும்,கபில் சிபல் மட்டுமே.காங்கிரஸ் கூட்டணி கவிழும் நிலையிலோ அல்லது நொண்டிக்குதிரையாகவே இனி வரும் நாட்களில் பயணிக்கும்.வாரிசு ஸ்...பின் அரசியல்  ராகுல் காந்திக்கு வழி திறப்பதும்,அன்னா ஹசாரே குழுவின் நிழலில் பி.ஜே.பி அறுவடை செய்வது மட்டுமே இனி மேல் இந்திய அரசியலில் நிகழும் முன் ஜோஸ்யங்கள்.

இந்திய ஜனநாயகம் அதிக கூச்சலிட்டாலும் பயணிக்கும் பாதை சரியாகவே செல்கிறது.ஐக்கிய முன்னணி கூட்டணிக்கும் அன்னாஹசாரே குழுவுக்கும் வாழ்த்துக்கள்!.

8 comments:

saarvaakan said...

வணக்கம் சகோ,
நீங்கள் தமிழ் திரைப்படம் அதிகம் பார்ப்பது இல்லை என்று நிலைக்கிறேன்.தொழிலாளர்கள் உரிமை கேட்டு போராடுவார்கள் மேலாளர் போரட்டத்தை ஒடுக்குவார்.கடைசித் தருணத்தில் முதலாளி வந்து எல்லாமே எனக்கு தெரியாமலேயே நடந்து விட்டது.எனக்கு தெரியாமல் மறைத்து விட்டது சதிகாரனை பதவி நீகம் செய்கிறேன்(சில சமயம் மேலாளரும் திருந்தி விடுவார்!!!!) என்று கூறி கோரிக்கையில் சிலவற்றை ஏற்றுக் கொள்வார்.
_____________
அது போல் அன்னை இலாத போது நடக்கும் செயலுக்கு அன்னை பொறுப்பாக மாட்டார் ,அவர் வந்து சுபம் போட்டு முடித்து வைப்பார்.வழக்கம் போல உண்ணாவிரதம் இருந்து விட்டு போகட்டும் ஊடகங்கள் மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் போனால் மக்கள் மறந்திருப்பர்.யார் நல்லவர் ,கெட்டவர் என்றுஊடகங்களில் வருவதை மட்டுமே மக்கள் நம்புவர்.எதற்கு கைது செய்து தேவையற்ற விளம்ப்ரப் படுத்த வேண்டும்?

க்ளைமாக்ஸில் அன்னை வந்து வச்னம் பேசி முடிக்கத்தான்.
________
இந்த லோக்பால் வந்தாலும் இதே ஆட்களே அரசியலில் இருப்பதால் ஒரு மாற்றமும் நடக்காது.அதுவும் அரசியல்வாதிகளுக்கு தெரியும்.

இதெல்லாம் எத்தனை பார்த்தாயிற்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

rajamelaiyur said...

now we need people co operation against correption

ராஜ நடராஜன் said...

சார்வகன்!உங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

அதுதான் தமிழ்படம் ட்ரெண்ட் மாறிப்போயிடுச்சே:)போலிஸ் கடைசி காட்சியில் வருவதும்,போலிஸ் நீதிமான் என்பதெல்லாம் அந்தக்காலம்.கேபிடலிசத்துக்குள் இந்தியா பூந்துகிட்டதால் முதலாளி,தொழிலாளி போராட்ட படங்கள் கூட வருவதில்லை.

அன்னா ஹசாரே விசயம் சோனியாவையும் மீறி செயல்படும் ஒன்று.பிரதமரின் செயல்பாட்டில் காங்கிரஸ்க்கு இறங்குமுகம் என்பதால் ராகுலை ஸ்பின் செய்வதற்கான சரியான நேரத்தையே காங்கிரஸ் எதிர்பார்க்கும்.

ஊழல் கூட ஊடகங்கள்,தகவல் அறியும் சட்டம்,நீதிமன்றம் போன்றவையின் தலையீட்டால் முழு பூசணிக்காயை காங்கிரஸ் மறைக்க முடியாதபடி அத்துமீறிய 2G கோபத்தில் சில விசில் ஊதிகள்(Whisleblowers) கருணாநிதிக்கு எதிரான அல்லது கருணாநிதி சொல்வதுபோல் தமிழகத்துக்கு எதிரான சூழலும்,காமன்வெல்த குளறுபடிகள் பட்டவர்த்தனமாகவே இந்தியாவுக்கு தலைகுனிவான நிலையும் கொண்டுவந்ததால் கோபப்பட்டவர்கள் நிறைய பேர்.ஆதர்ஷ் இன்னும் 4G என்று சில காங்கிரஸ் விரும்பாமலும்,இன்னும் சில சி.பி.ஐ மூலம் காங்கிரஸே சாதித்துக்கொள்ளும் நிலையே என நினைக்கிறேன்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று நீதிபதி ஒருவரையும் கூட 79 வங்கி கணக்கு வைத்து ஊழல் செய்ததாக Impeachment செய்ய சென் என்பவரை கம்யூனிஸ்ட் கட்சி போட்டுக் கொடுத்து விட்டது.

அன்னாஹசாரே குழுவின் போராட்டம் ஊழலுக்கு எதிரான புதிய பரிமாண விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் சொல்வது போல் அதே அரசியல்வாதிகள் என்பதால்தான் இந்த இழுபறிகளும் கூட.காரணம் இவை இவர்களையும் எதிர்காலத்தில் பாதிக்கும் என்பதோடு எந்த ஒரு Tom,Dick and Harry அரசியல்வாதிகளை ஆதாரபூர்வமாக் கூட குற்றம் சுமத்துவதை இவர்கள் விரும்பவில்லை.

ராஜ நடராஜன் said...

சார்வகன்!பின்னூட்டம் நீளுவதால் மீண்டும் தொடர்கிறேன்!

ஊழலை முழுவதுமாக ஒழிக்க இயலாது என்ற போதிலும் ஜன்லோக்பால் சட்டத்தால் 60%-65% ஊழல் கட்டுப்படுத்தப்படும்,அப்படியில்லையென்றால் கபில்சிபல் வீட்டில் நான் தண்ணீர் சுமக்கும் வேலைக்காரனாகிறேன் என்று அன்னா ஹசாரே சவால் விடுகிறார்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவுடன் ஒப்பிடவேண்டியதாக வேண்டியுள்ளது.சுகாதாரம்,சமூக நலன்கள் போன்றவற்றை மேலைநாடுகளுடன் ஒப்பிடவேண்டியதாக உள்ளது.இந்த ஒப்பீடுகளில் இந்தியா பின் தங்குவதற்கான முக்கிய காரணங்கள் இரண்டு.ஒன்று ஊழல் அடுத்து ராணுவ பட்ஜெட்.ஊழல் எப்படி மொத்த கட்டமைப்பும் பாதிக்கிறதென்று சொல்லவேண்டியதில்லை.ராணுவ பட்ஜெட் பற்றி பேசி விடலாம்.ஒரு புறம் சீனா,பாகிஸ்தான் என்ற பயத்தால் இந்தியா ராணுவ ரீதியாக வல்லரசாக மாறிவிட்டாலும் கூட,பெங்களாதேஷ்,கார்கில் போன்ற யுத்தங்கள் நடந்து வென்று விட்டாலும் கூட இந்தியாவும்,பாகிஸ்தானும் போட்டி மனப்பான்மையில் தங்கள் மக்களின் நலன்களுக்கும் அப்பாலான ராணுவ செலவீனங்கள் செய்வது வீணான ஒன்று.உதாரணத்துக்கு ஒரு F16 விமானம் வாங்கி 10-20 வருடங்கள் போர் எதுவும் நிகழாத பட்சத்தில் விமானம்,விமானம் பாதுகாக்கும் தின செலவுகள்,லேபர் எனும் உழைப்பு போன்றவை வீண் என்பதோடு 20 வருட காலத்தில் F16 காலாவதியாகி விடும்.தனது நாட்டின் வளர்ச்சிக்கு மிஞ்சிய பட்ஜெட்டிலான பாதுகாப்பையே ஏனைய நாடுகள் செய்கின்றன.மேலும் ஊழல் போபர்ஸ் வரை பாயும் என்பது இந்திய பழமொழி:)

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

now we need people co operation against corruption//

I do not know how far Tamilnadu will aware of Lokpal Bill! Mumbai ,Delhi and other northern states do have an impact of Anna Hasare Group.

Thanks for your positive comment.

ராஜ நடராஜன் said...

Just for record....

//The Jan Lokpal Bill is a proposed anti-corruption law in India. It is designed to effectively deter corruption, redress grievances of citizens and protect whistle-blowers. If passed and made into law, the bill seeks to create an independent body similar to the Election Commission of India with the power to investigate politicians and bureaucrats without prior government permission.First introduced in 1969, the bill has failed to become law for nearly over four decades//

aotspr said...

பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ராஜ நடராஜன் said...

//Priya said...

பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com//

நன்றி சொன்ன கையோடு காமெடி கதம்பம் வேற இலவச்மா கொடுத்திட்டீங்களே!நன்றி.

நாகேஷ் நகைச்சுவைகளையும் இணைத்திருக்கலாம்.

ஸ்லாப் ஸ்டிக் காமெடிக்கு காரணகர்த்தா சார்லி சாப்ளின் என்ற போதிலும் கவுண்டமணி-செந்தில் மாதிரி லாரல் ஹார்டியின் சேட்டைகள் என்னை அதிகம் சிரிக்க வைத்தவை:)

சிரிப்பதும்,சிரிக்க வைப்பதும் கலையே!