Followers

Saturday, August 20, 2011

இந்திய ஊழல் பெருச்சாளிகளும் விக்கிலீக்ஸ் பிரபலங்களும்

நேற்று வின் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் (இடையில் நுழைந்ததால் பெயர் தெரியவில்லை) ஜன் லோக்பால் சட்டத்திற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர் என்கிற வி.ஏ.ஓ விடமிருந்து துவங்க வேண்டும்.மேலிருந்து கீழே என்பது முறையல்ல என்ற வாதிட்டார்.
 எறும்பு அரித்து மாபெரும் கட்டிடம் அழிவதில்லை.ஆனால் புற்றுநோய் அரித்து மனிதன் மரணித்து விடுகிறான்.எறும்புக்கு மருந்து எளிது.புற்றுநோய்க்கு மருந்து கடினம்.அரசாட்சியில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மற்றவர்கள் திருடுவது குறையும்.மந்திரிகள்,எம்.பி, எம்.எல்.ஏ என்பவர்களுக்கான சலுகைகள்,வசதிகளுக்கும் அப்பால் பண ஆசை கொண்டவர்களாக இருப்பதும்,இவர்களை தூண்டி தவறான வழிகளைச் சொல்லும் பீரோகிராட்டிக் துவங்கியே ஊழல் இந்தியாவில் அடிமட்டம் வரை வருகிறது.அங்கிங்கு எனாதபடி எங்கும் காண்பது இந்திய ஜனநாயகத்தின் அழுக்கான முகத்தில் ஒன்றாய் ஊழல் மறைந்து கிடக்கிறது.ஊழல் கரங்களின் பட்டியல் இதோ:

http://www.corruption.mobi/list-of-indians-holding-swiss-bank-account-names/

டி.டி.கிருஷ்ணமாச்சாரி பொருளாதார மந்திரி - முந்த்ரா ஊழல் - 1957
இந்திரா காந்தி - நாகர்வாலா ஊழல் - 1965
ஏ.ஆர் அந்துலே - இந்திரா பிரதிஸ்தான் -
கமல்நாத் - குயோ எண்ணை பரிவர்த்தனை - 1980

ஹர்சத் மேத்தா - 4000 கோடி -1991

லலித்மோடி - ஐ.பி.எல் கிரிக்கெட் -

ஹவாலா - 18 மில்லியன் டாலர் - 1996 -அத்வானி உட்பட கறுப்பு பணத்தில் அடிபட்ட பெயர்

லாலு பிரசாத் - மாட்டுத்தீவன ஊழல் - 1996 - 900 கோடி

போபர்ஸ் - 1980 - ராஜிவ் காந்தி - 16 மில்லியன் டாலர்

ஜெயலலிதா - டான்சி நில ஊழல் இன்னும் பல - 

சத்யம் கம்ப்யூட்டர் -ராமலிங்க ராஜு 14000 கோடி -

அப்துல் கரிம் தெல்கி - 20000 கோடி

கல்மாடி - காமன் வெல்த் விளையாட்டு - 2010

எடியூரப்பா - நில ஊழல் வழக்கு - 2010

ஆ.இராசா - 2G ஸ்பெக்ட்ரம் - 1,76,000 கோடி - 2011

கலைஞர் தொலைகாட்சி - 200 கோடி - 2011

ஜன் லோக்பால் சட்ட வரைவுக்கு எதிரானவர்கள் ஊழல்வாதிகளும்,கறுப்பு பணம் சேமிப்பாளர்களும்,அரசியல் சுயநலவாதிகளும் மட்டுமே.இவர்களுடன் சேர்ந்து ஜன்லோக் பால் சட்ட வரைவுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களும் ஊழலுக்கு துணை நிற்பவர்களே.

டிஸ்கி:.விக்கிலீக்ஸ் அசாங்கேவின் தொலைபேசி எண் கிடைக்காததால் பட்டியல் வரிசை உண்மையா என்பதனை உறுதி செய்ய முடியவில்லை.

21 comments:

அன்னியன் said...

உங்கள் கருத்து ஒன்றும் புதிதல்ல. அவரின் கருத்தும் அவ்வாறே. இரு கட்சிகளின் இருபுற வாதங்கள்.

இதற்கப்பால் சொல்லப்படவேண்டியது.

பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஊழல்கள் - அதாவது உங்கள் மாற்றுக்கட்சியாளர் காட்டியது - இவற்றை மேன்மட்டம் சரியாக இருந்தால் சரிபண்ணிவிடலாம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எடுத்துக்காட்டு. மமதா பானர்ஜி. ஊழலில் அகப்படாதவர். எளிமை வாழ்க்கை வாழ்பவர். அவர் தலைமை தாங்கிய போது இரயில்வேத் துறை ஊழியர்களும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கா ஒழுக்க சீலர்களாக இருந்தார்களா ? நேற்று நடந்த சி பி ஐ ரெயிடில் பிடிபட்டவர்கள் ஒரு துளியே. எக்காலமும் ரயில்வே இப்படித்தான். இஃது ஒரு சின்ன எ.கா.

ஒவ்வொரு துறையும் மத்தியிலும் மானிதலத்திலும் இப்படித்தான். இவர்களை மாற்ற முடியாது. ஓரளவுக்கு சட்டம்போட்டு அடக்கி வைக்கலாம். அடியோடு மாற்ற முடியாது. ஹஜாரேயின் லோக்பல் பெரும் பெருச்சாளிகளைப்பிடித்தால் இவர்களுக்கென்ன ? மக்களுக்கென்ன ? என்பதுதான் இங்கு பார்க்கப்படவேண்டியது.
நீங்கள் பார்த்தீர்களா ?

இன்று ஹஜாராவின் லோக்பல் வந்தவுடன் போராட்டம் முடியும். அவருக்குப்பின்னால் நிற்கும் மக்கள் கூட்டம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் மீண்டும் இ.பி, இரயில்வே, வருமான வரி, முனிசிபல், தாலுகா ஆபிசு, ஆசுபத்திரி படுக்கைக்கு என்று லஞ்சம் கொடுத்தழ தயாராகும். ஒன்றும் பிரயோஜனமில்லை என்று உணரும். மழையிலும் வெய்யிலிலும் நின்றோமே நமக்கென்ன இலாபம் என்று நினைக்கும். இந்தியரின் வாழ்க்கைக்கு விடிவேயில்லை.

சார்வாகன் said...

நல்ல பதிவு,
முதலில் கீழே இருந்து செல்வதுதான் சரி.மேலே உள்ளவர்களை தண்டிப்பது சாத்தியமாக் தெரியவில்லை.ஏனெனில் ஒருவரும் யோக்கியமில்லை.இப்போது முன்னாள் அமைச்சர் ராசா தண்டிக்கப்ப்ட்டால் பிரத்மரும் தண்டிக்கப் படவேண்டும்.இவர்கள் வசதி உள்ளவர்கள் என்பதால் சட்டத்தில் உல்ள ஒவ்வொரு ஓட்டையையும் பயன் படுத்ஹ பார்ரப்பர்.
முதலில் கீழில் உள்ள அதிகாரிகள் மீது புகார்,அதன் மீது விசாரனை,நடவடிக்கை என்பதெ எவ்வலவு கஷ்டம் என்பது புரியும்.அரசு ஊழியர்களே ஊழலுக்கு வழி அமைத்துக் கொடுக்கிரார்கள் ஆட்சி மாறினாலும் அனைத்தையும் செய்வது இவர்கள்தான்.இவர்களின் செயல்கள் வெளிப்படையாக் கண்காணிக்கப் படவேண்டும்.தொழில் நுட்பம் மூலம் பல விஷயங்கள் செய்ய முடியும்,என்றாலும் இத்னை செய்யாமல் இருப்பது ஏன்?.ஒரு காவல் நிலையத்திற்கு சென்று ஒருவர் மீது புகார் அளித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாட்டார்கள்.கட்டை ப்ஞ்சாயத்து செய்யவே பர்ப்பார்கள்.இணையம் மூலமே பதிவு செய்து ஒரு எண் தானியங்கியாக் கிடைப்பது போல்,அதன் மீது 7 நாட்களில் நடவடிக்கை எடுத்து பதிவு செய்ய வேண்டும் என்றால் இது குறையாதா?.
தமிழ்நாடில் மட்டும்தான் இந்த "அன்னா" விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கிறோம்.மற்ற மாநிலங்கள் எல்லாம் அவரை அவதார புருஷன் போல் விவாதிக்கிறார்கள்.
நன்றி.

செங்கோவி said...

அன்னா ஹசாரேவிடம் ஏதோவொன்று குறைவது போல் ஒரு பிரமை..நான் தெளிவான பிறகு பேசுவதே நல்லது..வர்றேன்..

ராஜ நடராஜன் said...

அன்னியன் முதல் பின்னூட்டத்திற்கும்,நீணட கருத்துக்கும் நன்றி.

இந்தியாவின் மனபாவம் உங்கள் எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.அரசாங்கம் இயங்கும் சூழலைப் பொறுத்தே மக்களின் மனநிலையும் என்பதற்கு இந்தியாவும்,மேற்கத்திய நாடுகளும்,கொஞ்சம் தடாலடியாக வளைகுடா நாடுகளையும் கூறலாம்.

மம்தா பானர்ஜி எளிமையாக இருக்கிறார் என்பது உண்மை.ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறாரா என்றால் இல்லையென்றே சொல்வேன்.இயங்கும் தளத்தின் வேகத்துக்கு தகுந்தவாறு அவரும் நீந்திக்கொண்டிருக்கிறார்.அவ்வளவே.

ஜனலோக்பால் வரைவு மேல்மட்ட அரசியல் வாதிகளை மட்டுமே குறி வைத்து அல்ல.எனது முந்தைய லோக்பால் பதிவைப் படித்தீர்கள் என்றால் ஹசாரே குழுவுக்கும்,அரசு தரப்புக்கும் உள்ள மாற்றுக்கருத்துக்கள் என்ன என்பது புரியும்.

அரசு தரப்பு பிரதமரையும்,நீதிபதிகளையும் விசாரிக்க கூடாது என்பது இதில் முக்கியமான ஒன்று.அதாவது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கின்ற காரணத்தினால் லவன்ஸ்கியை வம்புக்கு இழுக்ககூடாதுன்னு வாதிக்கிற மாதிரி:)

ஏதாவது ஒரு புள்ளியில் மாற்றங்களுக்கான குரல் எழும்ப வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

ராஜ நடராஜன் said...

ஆற்றல் அரசு உங்கள் நீண்ட கருத்துக்கும் நன்றி.

இதுவரையிலும் இந்திய வரலாற்றில் இல்லாத நிகழ்வுகளாக ஏற்கனவே 2G,CWG போன்ற ஊழல்களில் மேல்மட்டத்திலான குற்றங்கள் துவங்கி விட்டது.நீதிபதிகளிலும் சவ்மித்ரா சென் Impeachment முதல் முறையாக செயல்படுத்தப் பட்டுள்ளது.தமிழகத்திலும் தி.மு.க அரசியல் காழ்ப்புணர்சி என்று சொல்லிக்கொண்டாலும் எம்.எல்.ஏக்கள் அளவிலிருந்தே அதிரடிகள் துவங்கியுள்ளன.இவற்றை இன்னும் கொஞ்சம் கீழிறங்கி ஐ.ஏ.எஸ் பீரோகிரட்டிக் வரை கொஞ்சம் விழிப்புணர்வு செய்து விட்டால் இன்னும் கீழ் நிலைப் பணியாளர்களுக்கும் பயம் வந்து விடும்.

கீழ் மட்ட பணியாளர்களை சீரான நிலைக்கு கொண்டு வ்ருவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை.அந்த அந்த பகுதி மக்களே இவர்களை சரி செய்து விடுவார்கள்.ஊழல் தவறு என்ற பயம் வருவது மட்டுமே முக்கியம்.
ஏற்கனவே அன்னா ஹசாரேவுக்காய் சேர்ந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு அந்த பயம் வந்து விட்டது.

ஏனைய மாநிலங்கள் முக்கியமாக டெல்லி,பம்பாய்,இன்னும் கல்கத்தா கூட (இனி இப்படியே அழைப்பதாக உத்தேசம்...நேரத்துக்கு ஒரு பெயர் மாற்றம்) மத்தளம்,நடனம்,முகப்பூச்சு,பஜன் என்ற நிலையிலேயே அரசியலையும் அணுகுகிறார்கள்:)நாம் வித்தியாசமாக நோக்குகிறோம் என்பது உண்மையே.அதே நேரத்தில் தகவல் அறியும் சட்டம் வடமாநிலங்களில் வெற்றி பெற்ற ஒன்று என்பதும் தமிழகம் தோற்றுவிட்டது என்பதற்கு காரணம் காவல்துறை,அரசு ஊழியர்களின் நாட்டாமை மனபாவமும் மக்கள் ஆண்டான் அடிமை குணநலனுமே காரணம்.இதையெல்லாம் எந்த அமைப்பும்,தொலைக்காட்சிகளும் சொல்லிக்கொடுக்காத நிலையில் இணைய கருத்துரையாடல்களாவது ஓரளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வருமென்று நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

அன்னா ஹசாரேவிடம் ஏதோவொன்று குறைவது போல் ஒரு பிரமை..நான் தெளிவான பிறகு பேசுவதே நல்லது..வர்றேன்..//

பாஸ்!அடிச்சு ஆடும் நீங்களே அப்பீட்டாகிட்டா எப்படி?இப்போதைய சூழலில் ஜன்லோக்பால் சட்டத்தை எப்படி திசை திருப்புவது அல்லது ஆற்ப்போடுவது என்ற நோக்கிலேயே மத்திய அரசு செயல்படுகிறது.அதே நேரத்தில் சட்டத்தை இன்னும் விரிவாக விவாதிக்க காலமும் தேவையென்ற அரசின் நிலைப்பாட்டில் உண்மையும் இருக்கிறது.குறைந்த தினங்களுக்குள் இதனை செயல்படுத்து என்ற அன்னா ஹசரே குழுவின் நிர்பந்தம் தவறென்ற போதிலும் இந்த மக்கள் எழுச்சியை நழுவ விட்டு விட்டால் அரசாங்கம் ஆறப்போட்டு ஏமாற்றி விடும் என்று அவர்கள் கவலைப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது.ஆழ்ந்த விவாதிப்போ அல்லது ஏமாற்று வித்தையோ இரண்டில் எது நிகழும் என்பதை பதிவும் இப்போதைய பின்னூட்ட்மும் இனி வரும் காலங்களில் காட்டிக்கொடுத்து விடும்.அன்னா ஹசாரே குழுவின் குறுகிய கால நிர்பந்தம் சாத்தியமில்லாத ஒன்று என்பதில் மட்டும் அரசு தரப்பில் உடன்படுகிறேன் இப்போதைக்கு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//ஜன் லோக்பால் சட்ட வரைவுக்கு எதிரானவர்கள் ஊழல்வாதிகளும்,கறுப்பு பணம் சேமிப்பாளர்களும்,அரசியல் சுயநலவாதிகளும் மட்டுமே.இவர்களுடன் சேர்ந்து ஜன்லோக் பால் சட்ட வரைவுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களும் ஊழலுக்கு துணை நிற்பவர்களே.//
உண்மையிலும் உண்மை .

MANO நாஞ்சில் மனோ said...

அடேங்கப்பா......நாடு உருப்படுமா....???

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//ஜன் லோக்பால் சட்ட வரைவுக்கு எதிரானவர்கள் ஊழல்வாதிகளும்,கறுப்பு பணம் சேமிப்பாளர்களும்,அரசியல் சுயநலவாதிகளும் மட்டுமே.இவர்களுடன் சேர்ந்து ஜன்லோக் பால் சட்ட வரைவுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களும் ஊழலுக்கு துணை நிற்பவர்களே.//
உண்மையிலும் உண்மை .//

வாங்க சார்!தொட்ட தொண்ணூறுக்கும் மாற்றுக்கருத்து என்பது எனக்கு ஆச்சரியமான விசயமே.சிலவற்றிற்கு நெகட்டிவாக யோசிப்பதில் தவறில்லை.ஆனால் அனைத்தையும் பாசிட்டிவாகவே பார்க்கமாட்டேன் என்ற கருத்துரிமையில் எனக்கு உடன்பாடில்லை.நன்றி.

ராஜ நடராஜன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

அடேங்கப்பா......நாடு உருப்படுமா....???//

மனோ அண்ணே!நம்ம மாதிரி அமெரிக்காகாரங்கிட்ட கணினி வாங்குனோமா,நீர்வீழ்ச்சியிலே நின்னு அனுபவிச்சோமா,அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோமான்னு இல்லாம கட்டுற வேட்டி,சேலைகள் தவிர,கொஞ்சம் கார் சொகுசு,அன்றாட அரசியல் அலுப்புக்கு பங்களாவில் கொஞ்சம் ஓய்வெடுத்தோமா,பிள்ளைகளுக்கும் கொஞ்சம் சேர்த்து வைத்தோமான்னு இல்லாமல்,அசையும்,அசையா சொத்து,கள்ளப்பணம்,ஸ்விஸ் பணம்ன்னு பூதம் காக்கும் வேலையை ஏன் செய்கிறார்கள் என்று புரியவில்லை.

நம்ம ஊர் அரசியல் பேசி அலுத்து விட்டது.ஆந்திராவுக்கு போயிடுவோம்.Y.ராஜசேகர ரெட்டி முதல் மந்திரி பதவியில் இருந்ததால் அல்லவா மகன் ஜெகனால் அளவுக்கு மீறிய சொத்துக்களை சேர்க்க முடிகிறது?இதுல ராம் கோபால் வர்மாவும் உண்மைத் தமிழனும் இணைந்து தயாரிக்கும்:) ரத்தக்களறி பின்புல வரலாறுகள் வேறு.

ஊழல் கணக்கைப் பார்த்தா பில்கேட்ஸே அலறுவாருல்ல:)

அன்னியன் said...

Thank u

அன்னியன் said...

என் கருத்து சரியாகப்புரியப்படவில்லை.

அண்ணா ஹாசாரேவின் இயக்கம் மேல்மட்ட ஊழலை அழிக்க. நான் சொல்வது என்ன்வென்றால், அது கீழ்மட்ட ஊழலை அழிக்காது என்பதே. நான் இப்படிச்சொல்வதால், ஹாசாரேயின் இயக்கம் வேண்டாமென்பதல்ல., அது வேண்டும். ஆனால் கீழ்மட்ட ஊழலை அழிக்கவும் ஒரு இயக்கம் வேண்டும். அல்லது அதை அவர் லோக்பால் இயக்கம் முடிந்தது செய்யலாம். ஒருவேளை அப்படி நினைத்துக்கொண்டிருக்கலாம்.

வீட்டு முன்புறத்தை வெள்ளையடிக்கமட்டும் காண்ட்ராக்ட் கொடுத்துவிட்டீர்கள். நான் கேட்கிறேன்: உள்ளே எவரடிப்பார் ? உங்கள் பதில்: அதுவும் செய்யப்படும் பின்னர் என்றுதான் இருக்கவேண்டும். மாறாக, கேட்பவன்,

முன்புறவெள்ளையடிக்கவே கூடாது என்று சொல்வதாக பொருள் எடுக்கலாமா. ஆனால் அப்படித்தான் நீங்கள் எடுக்கிறீர்கள் என நினைக்கிறேன் நடராஜன்.

Amudhavan said...

மேல்மட்டம் சரியானால் கீழே எல்லாமே சரியாகிவிடும் என்பதும் நடைமுறை சாத்தியம் அற்றதே. சமீப காலத்தில்கூட மொரார்ஜி தேசாயை ஊழல் மற்றும் பல்வேறு நடைமுறை தவறுகளுக்கு எதிரானவராகத்தான் பார்க்கமுடியும். மனிதப்புனிதர் என்றுதான் தமிழருவிமணியன் மொரார்ஜியை விளிப்பார். ஆனால் அவர் காலத்தில்கூட அவர் தன்னை மட்டும் தூய்மையானவராக வைத்துக்கொண்டேரே தவிர எந்தத் துறையையுமே அவர் தூய்மைப் படுத்தியதாகவோ ஊழலற்ற சீரான நிர்வாகத்தைக் கொண்டுவந்துவிட்டதாகவோ சொல்வதற்கில்லை. காவல்துறை இதற்கு மிகச்சிறந்த உதாரணம். மிகமிக நேர்மையான கண்டிப்பான கமிஷனர்களும், டிஜிபிக்களும் அவ்வப்போது பல மாநிலங்களிலும் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் அவர்கள்வரை நியாயமாக இருந்துவிட்டுப் போய்விடுவது என்பதை மட்டும்தான் அவர்களாலும் செய்ய முடிகிறது. மேலே வருகிறவரும் சரியாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் கீழிருந்தும் சரிசெய்யப்படவேண்டும் என்றமுறையில் இரு திசைகளிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும். மற்றபடி அன்னாஹசாரேயின் வாதங்களை மட்டுமே ஒப்புக்கொள்ளமுடிகிறது.நடைமுறைப் போராட்டங்களைப் பொறுத்தவரையில் செங்கோவி சொன்னதுபோல் என்னவோ ஒன்று குறைகிறமாதிரிதான் தெரிகிறது.

ஓசூர் ராஜன் said...

//அரசாட்சியில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மற்றவர்கள் திருடுவது குறையும்.மந்திரிகள்,எம்.பி, எம்.எல்.ஏ என்பவர்களுக்கான சலுகைகள்,வசதிகளுக்கும் அப்பால் பண ஆசை கொண்டவர்களாக இருப்பதும்,இவர்களை தூண்டி தவறான வழிகளைச் சொல்லும் பீரோகிராட்டிக் துவங்கியே ஊழல் இந்தியாவில் அடிமட்டம் வரை வருகிறது//இதுதான் சரி

ஜோதிஜி said...

மம்தா பானர்ஜி எளிமையாக இருக்கிறார் என்பது உண்மை.ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறாரா என்றால் இல்லையென்றே சொல்வேன்.இயங்கும் தளத்தின் வேகத்துக்கு தகுந்தவாறு அவரும் நீந்திக்கொண்டிருக்கிறார்.அவ்வளவே.


நடா எவரும் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்கள்.

எளிமை என்பது வேறு? எதார்த்தம் என்பது வேறு.

ராஜ நடராஜன் said...

அன்னியன்!மீள்வருகைக்கு நன்றி.

நானே வீட்டுக்குள் வெள்ளையடித்து விட்டு மராமத்து வேலைகள் காரணமாக வெளியே வெள்ளை அடிக்க முடியாமல் சிரமப் பட்டுக்கொண்டிருக்கிறேன்:)

இந்திய ஊழல் ஒரு வலைப்பின்னல்.இரண்டு பக்கங்கள் கொண்டதல்ல.ஏதாவது ஒரு நுனியிலிருந்து வலுவாக அறுத்து விட்டு விட்டால் பின்னலே போய்விடும்.மேல்மட்டம் என்று மன்மோகன் முதல் ஆரம்பிப்போம்.பின் மந்திரி,பின் எதிர்க்கட்சி,பின் மேல்மட்ட பீரோகிராட்ஸ்,நீதிபதிகள்.இந்த எண்ணிக்கை குறைவானதால் இதனை சுத்தப்படுத்துவதோடு ஊழல் பணத்தின் பெரும்பான்மையும் கறுப்பு பணமும் குறையும்.அதனால்தான் புள்ளி விபரம் கொடுத்துள்ளேன்.

மேலும் பொருளாதார ரீதியாகப் பார்த்தோமானால் கீழ்மட்டத்தில் வாங்கும் பணம் கறுப்பு பணமாகவோ ஸ்விஸ் கணக்காகவோ மாறுவதில்லையென்பதோடு இந்தியாவுக்குள்ளே சுழலும் பணம் அது என்ற கருத்தையும் முன்வைக்கிறேன்.

யூடியுப்பில் கடையில் லஞ்சம் வாங்கிய காவல்துறை பெண்மணி ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறையை சார்ந்த ஒருவர் கையும் வீடியோவுமாகப் படம் பிடித்ததை அந்தம்மா காலைப்பிடித்துக் கெஞ்சினாங்க.நமக்குள்ளேயே உலவும் நம்மோட மனிதர்கள் இவர்கள்.இவர்களைக் குணப்படுத்தி விடலாம் நிச்சயமாக்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!ஒரு முறையாவது பிரதமராகி விட வேண்டுமென்று எல்.கே.அத்வானி இப்பொழுது கனவு காண்பது போல் மொரார்ஜி தேசாய் ஒரு முறை பிரதமராகும் வாய்ப்பு கிட்டியதாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.தமிழக ஆடுகளத்தில் கலைஞர் எப்படி தவிர்க்க முடியாத சக்தியோ அதே போல் மத்தியில் இந்திராகாந்தி அவர்கள்.சோசியலிச லைசென்ஸ் முறைகளாலும்,இந்திரா காந்தியாலுமே ஊழல் பீரோகிரசி வரை வந்ததாக கேள்வி.அப்படியும்

கிருஷ்ணமாச்சாரி துவங்கி ஹர்சத் மேத்தாவுக்கும் முந்தைய கால கட்ட இடைவெளியை நோக்குங்கள்.பெரும் ஊழல்களின் கால இடைவெளி அதிகம் என்பதோடு போலிஸ்காரர்கள் கையேந்தி காசு வாங்குவதும் கூட எமர்ஜென்சியை அடுத்த கால கட்டங்களில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.அப்போதைய காலகட்டத்தில் மொரார்ஜி தேசாய்க்கும் கூட லஞ்சம் பெரிய நோயாக வளராமல் இருந்ததே என்று நினைக்கிறேன்.தப்பு செய்தால் ராஜினாமா செய்து விடுவேன் என்று மிரட்டியே ராஜினாமாவும் செய்த வி.பி சிங் கால கட்டத்தில் கூட மொத்த இந்திய அளவில் ஊழல்கள் தற்போது போல் பெரிதான பிரச்சினையாக உருவாகவில்லை என நினைக்கிறேன்.

இன்னும் சொல்லவேண்டியவைகளை அடுத்த மறுமொழியில் பகிர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!இந்த மறுமொழி உங்களுக்கு மீண்டும் தொடர்ச்சியாக.
காவல்துறையும் கூட சரியாகவே இயங்கிக்கொண்டே இருந்தது எனலாம்.அனைத்து துறைகளிலும் பரவிய நோய் இங்கேயும் வலிமை காரணமாக அதிகமாக பரவி விட்டது.இதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளே என்பேன்.

இப்பொழுது அன்னா ஹசாரே தரப்பில் காந்தியன் என்ற அவரது பிம்பம் தவிர இரு சிறந்த முன்னாள் நீதிபதிகளாய் சாந்தி பூசன்,ஹெக்டே,மகசே விருது பெற்றவரான கேஜர்வால்,சிறந்த ஐ.பி.எஸ் பெண்மணியாய் கிரண்பேடி என ஊழல்கள் இல்லாத அல்லது காங்கிரஸ் குற்றச்சாட்டுப்படியும் கூட ஊழல்கள் குறைந்தவர்களும் எதிர் தரப்பில் பிரணாப் முகர்ஜி,கபில்சிபல்,சிதம்பரம்,வீரப்ப மொய்லி,சல்மான் குர்சித் என்ற ஒரு திரு(ட்டு)க்கூட்டமே இருப்பதிலிருந்தே லோக்பால் சட்டம் Good vs Evil என்று தெளிவாகத் தெரிகிறது.

உங்கள் கருத்தான //அதேநேரத்தில் கீழிருந்தும் சரிசெய்யப்படவேண்டும் என்றமுறையில் இரு திசைகளிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.// என்பது உடன்பாடான கருத்தே.ஆடிக்காற்றில் அம்மியே அசையும் போது இன்னொரு திசையில் உமிகளை ஊதுவது சிரமமான வேலையே அல்ல.
அன்னாஹசாரே குழுவின் குரல் பரவலாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும்.ஓரளவுக்கு சேர்ந்திருக்கிறது.பார்க்கலாம் விளைவுகள் எப்படி நிகழ்கிறதென்று.வெல்வது மக்கள் இயக்கமா அல்லது அரசு இயந்திரமா என்பது இன்னும் ஐந்து வருட காலங்களில் தெளிவாகத்ட் தெரிந்து விடும்.நன்றி.

ராஜ நடராஜன் said...

////ராஜன் said...

//அரசாட்சியில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மற்றவர்கள் திருடுவது குறையும்.மந்திரிகள்,எம்.பி, எம்.எல்.ஏ என்பவர்களுக்கான சலுகைகள்,வசதிகளுக்கும் அப்பால் பண ஆசை கொண்டவர்களாக இருப்பதும்,இவர்களை தூண்டி தவறான வழிகளைச் சொல்லும் பீரோகிராட்டிக் துவங்கியே ஊழல் இந்தியாவில் அடிமட்டம் வரை வருகிறது//இதுதான் சரி////

ஒரே மனநிலையில் பயணிக்கிறோம் என்பதை உங்கள் ஆல் இன் ஆல் பதிவுகளும் பின்னூட்டங்களும் பிரதிபலிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ராஜ நடராஜன் said...

//JOTHIG ஜோதிஜி said...

மம்தா பானர்ஜி எளிமையாக இருக்கிறார் என்பது உண்மை.ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறாரா என்றால் இல்லையென்றே சொல்வேன்.இயங்கும் தளத்தின் வேகத்துக்கு தகுந்தவாறு அவரும் நீந்திக்கொண்டிருக்கிறார்.அவ்வளவே.


நடா எவரும் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்கள்.

எளிமை என்பது வேறு? எதார்த்தம் என்பது வேறு.//

ஜோதிஜி!யதார்த்தமென்று பார்த்தால் ஊழல் என்ற இந்தியா சார்ந்த பெரும் கல்லை அன்னாஹசாரே குழு என்ற நெம்புகோல் நகர்த்துமா என்றால் சந்தேகமே.ஆனால் அவரது குழுவுக்கு சேர்ந்த இளைய தலைமுறையினர் கல்லை உருட்டி விடலாம் என்ற நம்பிக்கையை தருகிறார்கள்.இதுவெறும் ராம்லீலா மைதான நினைவுகள் என்பதோடு நின்று விடக்கூடாது என்பது மட்டுமே எனது எதிர்பார்ப்பு.

vidivelli said...

/அரசாட்சியில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மற்றவர்கள் திருடுவது குறையும்./

உண்மைதான்..
நல்ல அலசல்//