உங்களை நேற்று ஜீ.டிவியின் செய்தி பார்வை நிகழ்ச்சியில் காண நேர்ந்தது.நேற்று பதிவுலகில் வெளியாகிய அமெரிக்கா திவாலாகுமா என்ற பதிவின் சாரம் பற்றி சொல்லப்பட்டதைக் கண்டேன்.சில நேரங்களில் இணைப்புக் கிடைத்தும் சில நேரங்களில் Scrambled எனவும் வருவதற்கு காரணம் பெரும்பாலும் எனது ரீசிவரின் கோளாறாகவே இருக்குமென நினைக்கின்றேன்.நீங்களும் நீங்கள் இணைந்த ஊடகக் குழுவினர்,செய்தி வாசிப்பாளர்கள் தமிழக செய்தி அலசல்களிலிருந்து மாறுபட்டு செய்திப் பகிர்வைத் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.இதற்கான உழைப்பின் சிறு பகுதியையாவது ஏன் நீங்கள் உங்கள் பதிவில் கொண்டு வருவதில்லை?ஏனைய செய்திகளின் காபி பேஸ்ட்டை மட்டுமே ஏன் உங்கள் பதிவில் முன் வைக்கிறீர்கள்?முக்கியமாக தி.மு.க மற்றும் தமிழகம் சார்ந்த செய்தி விமர்சனங்களுக்கும் தகவல்களுக்கும் உங்களை விட தமிழகத்திலிருந்து பகிர்வு செய்ய நிறைய பேர் இருக்கிறார்களே?
பதிவுகள் என்பது கருத்து வெளியீடும் பரிமாறல்களுக்குமான சமூக பரிவர்த்தனைக்கான தளம்.ஒரு பொதுவெளி ஊடகத்திலிருந்து கொண்டு உங்களால் அந்தப்பணியை இன்னும் நிறைவாக செய்ய இயலும் நிலையில் வெறும் காப்பி பேஸ்ட் மட்டும் செய்வது உங்கள் நிலை சார்ந்த ஊடகப் பணிகளுக்கும் நிலம்,புலம் மற்றும் தமிழக இணைய பார்வையாளர்களுக்கு என்ன நன்மையை செய்து விட முடியுமென்று புரியவில்லை.எந்த வித பின்புலமும் இல்லாமல் டைம்ஸ் பத்திரிகை வரை குரல் கொடுக்கும் பதிவர்கள் இருக்கும் போது உங்களுக்கான இணையம் இணைந்த பணி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.
உங்கள் தளத்தில் யாருக்கும் பின்னூட்ட மறுமொழி சொல்வதாகக் காணோம். இல்லையென்றால் உங்கள் தளத்திலேயே இதனை பேசி முடித்துக் கொண்டிருக்கலாம்:)இதனை பதிவாக பொதுவில் வைக்க வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது.
ஏனையவர்களின் கருத்துரிமைகளில் தலையிடுவதில் எனக்கு விருப்பமில்லையென்ற போதிலும் விதிவிலக்காக உங்கள் பதிவுகள் பற்றி கருத்து தெரிவிப்பதன் காரணம் உங்கள் தளத்தின் ஆற்றல் இன்னும் அதிகமாக வெளிப்பட வேண்டுமென்ற நல்ல எண்ணத்தால் மட்டுமே.தமிழகத்தையும், பதிவர்களையும்,நிலம்,புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் வகையில் பதிவுகள் செய்து செயல்படுங்கள்.நன்றி.
9 comments:
யார் அவர் ,,, புரியல்லையே பாஸ்!!!
//கந்தசாமி. said...
யார் அவர் ,,, புரியல்லையே பாஸ்!!!//
நீங்க ஜிடிவி பார்க்கிறவராக இருக்கணும்.இல்லன்னா பதிவுகள் மொத்தத்தையும் மேய்கிறவரா இருக்கணும்.இதில் நீங்க எதில் சேர்த்தி:)
நல்ல பதிவு.
//Rathnavel said...
நல்ல பதிவு.//
உங்கள் வருகைக்கு நன்றி.
நானும் ஜீடிவி பார்க்கிறேன் !
நான் கூட நினைக்கிறது இவர் ஏன் செய்திகளை ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுதக்கூடாது என்று. இதை அவர் உங்கள் பதிவின் மூலம் கவனிப்பார் என்று நினைக்கிறேன்.
//ஹேமா said...
நானும் ஜீடிவி பார்க்கிறேன் !
//
ஹேமா!ஜிடிவியின் செய்தி வழங்கல் நன்றாகவே இருக்கிறதுதானே!
//Rathi said...
நான் கூட நினைக்கிறது இவர் ஏன் செய்திகளை ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுதக்கூடாது என்று. இதை அவர் உங்கள் பதிவின் மூலம் கவனிப்பார் என்று நினைக்கிறேன்.//
ரதி!ஹேமா மற்றும் உங்கள் பின்னூட்டம் கண்டபின் தான் சிவா அவர்கள் ஏதாவது காப்பி பேஸ்ட் இன்றைக்கு செய்திருக்கிறாரா என்று பார்த்தேன்.ஏமாற்றவில்லை அவர்:)
அவருக்கு பின்னூட்டம் சொல்லியிருக்கிறேன்.பார்க்கலாம்.
அன்பு சகோதரர் ராஜ நடராஜன் அவர்களுக்கு
எனக்காக ஒரு பதிவை எழுதியதற்குநன்றி
நான் எனது பதிவுகளை எழுதி பதிவேற்றம் செய்ய முடியாமல் இருப்பதற்கு நேரமின்மை ஒரு காரணமாகும்
அதிகாலை 3 மணில் இருந்து இரவு 11 மணிவரை ஜிரிவியின் செய்தி தயாரிப்பு உட்பட வேறும் அரசியல் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.நினைவழியா வடுக்கள் (மணற்கேணி இதழில் தொடராக வருகிறது) இரண்டாம் முள்ளிவாயக்கால் ஆகிய நூல்களையும் தற்போது எழுதி வருகிறேன.கடந்த காலத்தைப் போல ஆய்வுகளையும் அதிகளவு எழுத முடியாமல் இருப்பதற்கு காரணம் இதுவே செய்தி தயாரிப்பு பணியல் ஈடுபடும் போது எனது கண்ணில் படும் சில பதிவுகளை அவர்களது மூலத்தை குறிப்பிட்டு எனது புளக்கில் பதிவேற்றம் செய்கிறேன்.இதுவும் கூட எனக்கு புளக் ஒன்று இருப்பதை நான் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே எனது ஸ்கைப் ஐடி siva.sinnapodi அதில் தொடர்பு கொண்டு என்னோடு உரையாடலாம். மீண்டும் உரிமையோடு எனக்கு ஒரு பதிவை பதிவை எழுதியதற்கு மீண்டும் எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
Post a Comment