Followers

Monday, March 7, 2011

கருணாநிதி ,ஸ்பெக்ட்ரம்,தேர்தல்-ஓர் பார்வை

வழக்கமாக தமிழக தேர்தல் களம் சூடு பிடித்தே துவங்கி தேர்தல் முடிவில் கண்ணா ரெண்டு லட்டு தின்னு கொண்டாட்டங்களும்,தலையில் துண்டு போட்டுக்கொள்ளும் படலங்களும் நிரந்தரமான ஒன்று.சாராயம்,பிரியாணி, வெத்தலை பாக்கோடு பணம் திருட்டு ஜனநாயகமெல்லாம் புதிதாய் பிறந்தவை.மக்கள் விரோத ஜனநாயகத்தை அரசு இயந்திரமான தேர்தல் ஆணையமோ,மக்களின் சமூக அக்கறை கொண்டவர்களோ விரும்பவில்லை.இதனை விரும்புவர்கள் சுயநல நோக்கோடு தமது எதிர்காலம் சிறக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே.

இதில் அ.தி.மு.க தற்போது பதவியில் இல்லாவிட்டாலும் சமூக விரோத பங்கில் இந்தக்கட்சிக்கும் பங்குண்டே.இப்போதைக்கு ஆட்சியில் இல்லாத காரணத்தாலும்,கடந்த கால ஊழல்களோடு ஒப்பிடும் போது தி.மு.க வின் சாதனை பெறுவதாலும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதாலும் விமர்சனத்தை தி.மு.க அரசு மீது முன்வைக்கலாம்.இரவு 9 மணி வாக்கில் ஜெயலலிதா-விஜயகாந்த் கூட்டணி உடன்படிக்கையை முடிவு செய்த அதே தினம் இரவு 12 மணிக்கு 60 சீட்டுக்கு ஒப்புக்கொண்டோம் ஆனால் காங்கிரஸ் 63 கேட்கிறார்கள் கூடவே தாம் விருப்பபடும் தேர்தல் இடங்களையும் கேட்கிறார்கள் இது நியாயமா என்று அறிக்கை விடுகிறார்.பக்கச்சார்பின்றி பார்த்தால் மத்தியில் தாம் விரும்பிய இடங்களை வாங்கும் போது கூட்டணி நியாயப்படி காங்கிரஸ் கேட்கும் 63ம் ஆட்சியில் பங்கு,விரும்பும் இடங்கள் என்பவை நியாயமானவையே.முழு மனதான கூட்டணி எனும் போது இவைகள் ஒரு பொருட்டே அல்ல என்பது அரசியல் நோக்கர்களுக்குப் புரியும்.பின் கூட்டணி முறிவு வரையிலுமான முடிவுக்குப் பின் புலமென்ன?

1.ஸ்பெக்ட்ரம் என்ற பூதத்தின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகள்.
2.அதனைத் தொடர்ந்த சி.பி.ஐ ரெய்டுகள்
3.கலைஞர் தொலைக்காட்சி ரெய்டும் பணமாற்றங்களும்,
4.ஒருவேளை இனியும் காத்திருக்கும் அதிர்ச்சிகளும்
5.தமிழக ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸின் கோரிக்கை

ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பாமல் இருந்திருந்தால் தமிழக ஆட்சியென்ற கோரிக்கையும் கூட தி.மு.கவின் நிர்வாக குழுவின் ஆலோசனைக்கு விடப்பட்டிருக்கும்.ஸ்பெக்ட்ரம் காலத்து தேர்தலில் தனக்கோ,தனது கட்சிக்கோ ஆபத்தும் வந்து விடக்கூடாது,அதே நேரத்தில் காங்கிரஸையும் தமிழகத்தில் கவிழ்க்கவேண்டுமென்ற இரவு 12 மணி அறிக்கை தி.மு.க அனுதாபிகள் பார்வையில் சாணக்கியன் என்ற அடைமொழி வியப்பும்,காங்கிரஸின் பார்வையில் நம்பினவரை கழுத்தருப்பவர் கருணாநிதி என்ற கோபமும் இருக்கும்.

தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கான வெற்றி வாய்ப்புக்களை கருணாநிதியே வலிய உருவாக்கி கொடுத்துள்ளார்.இதில் தனிப்பட்ட மகிழ்ச்சியா என்றால் இல்லை.மனிதர்களின் முகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சுயநலங்களை உண்ணாவிரதங்களும்,குஜராத்தின் பூகம்பத்துக்கு அள்ளிக்கொடுத்த தமிழகம் இறையாண்மை பொய் பேசி இனப்பழி சுமந்த கோபத்திலும் இயலாமை என்ற சொல்லுக்கும் அப்பால் சக மனிதனுக்கு குரல் கொடுக்கவே முயலாத காலங்களாய் இதோ ஸ்பெக்ட்ரத்தின் குரல்களாய் தனக்குத்தானே போட்டுக்கொண்ட மதியோ மத்திய அரசின் சதியோ ,சிலர் நம்பும் விதியோ

தீரா பழி சுமந்தாய் நீ!

12 comments:

vasu balaji said...

2ஜி ய வச்சே 2ஜி விஷயத்த டேப் பண்ணி கவுத்துப்புட்டாய்ங்களே.

ராஜ நடராஜன் said...

//2ஜி ய வச்சே 2ஜி விஷயத்த டேப் பண்ணி கவுத்துப்புட்டாய்ங்களே.//

ஒரு ஜி பிரணாப் முகர் ஜி!இன்னொரு ஜி எங்கே?

ஜோதிஜி said...

ரசினி அய்யா இப்படி வேறு சொல்லியிருக்காரா? லதாவுக்கு தெரியுமா?

தீரா பழி சுமந்தாய் நீ.

அழுத்தமான கவிதையான வார்த்தைகள். ஆனால் முக வுக்கு மூக்கு சளி துடைத்து விட்டு போற மாதிரி.

Anonymous said...

நடுநிலை முகமூடி, சில இடங்களில் பொருந்தவில்லை. அதை கொஞ்சம் சரிசெய்து கொள்ளவும்.

ராஜ நடராஜன் said...

//இனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...

சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ

http://mugamuddi.blogspot.com//

வரும்போதே முகம் மூடியா:)

புது வார்த்தை பிரயோக ஜல்லியடிக்கான காலம் வலை ஏறிப்போச்சு.இன்னுமா இவர் பேச்சு விலை போகும்?

Prakash said...

Pls write about..Jaya's Black Money with Hasen Ali

http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm

ராஜ நடராஜன் said...

//ரசினி அய்யா இப்படி வேறு சொல்லியிருக்காரா? லதாவுக்கு தெரியுமா?

தீரா பழி சுமந்தாய் நீ.

அழுத்தமான கவிதையான வார்த்தைகள். ஆனால் முக வுக்கு மூக்கு சளி துடைத்து விட்டு போற மாதிரி.//

ஜோதிஜி!நம்ம நிலைமைய பார்த்தீங்களா!பின்னூட்டத்தில குசலம் விசாரிக்கிற மாதிரி ஆயிடுச்சு:)

ஆமா! என்ன சொன்னீங்க?மூக்கு சளி துடைத்து விட்டுப் போற மாதிரியா?
நிறைய பேர் அப்படித்தான் சொல்றாங்க.

எத்தனை அடிச்சாலும் தாங்குறாரு வடிவேலு காமெடி தலீவருக்குத்தான்.

ராஜ நடராஜன் said...

//நடுநிலை முகமூடி, சில இடங்களில் பொருந்தவில்லை. அதை கொஞ்சம் சரிசெய்து கொள்ளவும்.//

இது யாரு கொக்க்ரக்கோன்னு கூவறது:)
கழக கண்மணியா:)

ராஜ நடராஜன் said...

//Pls write about..Jaya's Black Money with Hasen Ali

http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm//

Why?Do you like she wants me to file a defamatory case along with Midday,Morosoli and Kalaingar TV:)

Nobody is arguing in TN, JJ is a holy cow.If her ruling starts we will estimate of her opinion.

ராஜ நடராஜன் said...

Mr.Prakash!JJ is denying her role in Hassan Ali.If anything substanstial docs emerge in the media,somebody will come forward to expose the real truth.For time being.....

Jayalalithaa's counsel P H Manoj Pandian said in the notice that the "preposterous claim made without any verification is not backed by any documentation."

"My client states that the report by Mid-Day quotes an anonymous investigating officer as saying that investigations into huge cache of money in the possession of Hasan Ali Khan, who is at the center of a controversy for reportedly evading Income Tax to the tune of several thousand crores, pointed to 'a woman politician, who was also Chief Minister of a state from South India. This is mischievous, scurrilous, malicious and insinuating journalism at its very worst," he said.

Chitra said...

தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கான வெற்றி வாய்ப்புக்களை கருணாநிதியே வலிய உருவாக்கி கொடுத்துள்ளார்.


.....தேர்தல் முடிவு வரை, என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ?

ராஜ நடராஜன் said...

//....தேர்தல் முடிவு வரை, என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ?//

தேர்தல் வரைக்கும் ஏன் போறீங்க?இப்ப நடக்கிற கூத்தே இதோ இன்னைக்கு காலை 10.30 PMO சந்திக்கும் நேரம் கொடுத்தார்களாம்.பிரதமர் அவர்களை மாலை வரச்சொல்லுங்க பார்க்கலாம்ன்னு சொல்லி விட்டாராம்.
மறுபடியும் ஒரு நாள் அவகாசம் ராஜினாமா செய்ய.

எனக்கென்னமோ கருணாநிதியின் இரவு 12 மணி முடிவை காங்கிரஸ் அடிச்சு புடிச்சு ஓடிவரும்ன்னு எதிர்பார்த்த ஒன்று நிகழாததால் தயாநிதி மாறன்,ஸ்டாலின் போன்றவர்கள் சமரசத்துக்கு போகலாம் என்கிற கருணாநிதியின் கருத்து மீறுதல் மாதிரியான காட்சிகள் நிகழ்வதாகவே தெரிகிறது.

பார்க்கலாம் அரசியல் சதுரங்கத்தில் இன்னும் எத்தனை கூத்துகள் என்று:)