Followers

Tuesday, November 16, 2010

ஸ்பெக்ட்ரம் கோபிகிருஷ்ணன்

ஸ்பெக்ட்ரம் குறித்த தகவல்கள்,கருத்து பரிமாற்றங்கள் என பிரபல பத்திரிகைகள் மற்றும் பதிவுகள் அடக்கி வாசிக்க போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த என்.ராம் கூட இலங்கையுடன் சோரம் போய்விட ஸ்பெக்ட்ரம் குறித்த செய்தியையும் கூட இருட்டடிப்பு செய்து இங்கே 
(The article you are looking for is no longer available in this website. ) என்று சொல்லி விடும் அளவுக்கு சுயபரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இந்து பத்திரிகை.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் புலன்விசாரணையின் பரிசை டெய்லி பயனீர் தளம் தட்டிக்கொண்டு போகிறது.டெய்லி பயனீர் தளத்தின் கொச்சின் பிரிவின் நின்று போன பயனிரிலிருந்து டெல்லிக்கு வேலை தேடிப்போய் உதவித் தொகை வருமானத்துடன் தனது பத்திரிகை நிருபர் தொழிலை துவங்கிய கோபிகிருஷ்ணனின் அயராத உழைப்பால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்திருக்கிறது.கோபிகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
முழுப்பூசனிக்காயை தலித் என்ற சாயம் பூசி திசை திருப்பும் கருணாநிதி,வீரமணிகளை நினைத்தால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது.கூடவே ஜெயலலிதா,சுப்ரமணி சாமிகளின் அரசியல் பித்தலாட்டங்கள் ஸ்பெக்ட்ரம் குறித்த அவர்களது குரல்கள் அவர்களின் சொற்களுக்கான நம்பிக்கைத்தன்மையை சந்தேகிக்க வைக்கவும் நீ யோக்கியமா என்று எதிர்க்கேள்வியை கேட்டு வெட்கபட வைக்கவும் செய்கின்றன..தமிழக மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் குறித்த செய்திகள் போய்ச் சேர்வதில் அனைத்து தமிழக ஊடகங்களும் மலடாகிப் போய் இருக்கும் நிலையில் டெய்லி பயனீர் இணையம் மற்றும் பதிவர்களின் பங்களிப்பே மாற்றத்துக்கான நம்பிக்கையையும் உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும்.

ஸ்பெக்ட்ரத்தின் அணுவைக் கண்டுபிடிக்க இயலாதவாறு பெரும் வலைப்பின்னலை ராஜா பின்னியிருக்கிறார்.ஆனால் இது ஒரு தனிமனிதனால் சாத்தியமான ஒன்றல்ல என்பதோடு ஊழலின் நலன்கள் பெரும் நெட்வொர்க் வலையத்தில் கண்டு பிடிக்க இயலாத ஒன்றாக அனுமான் வாலாக நீளும்.மன்னர்கள் தொட்டு,அரேபிய படையெடுப்பு,ஐரோப்பியர் வருகை,சோசியலிஷ முக்காடு,ஜனநாயகமென இந்தியாவின் வளம் சுரண்டப்படுவது மட்டும் தொடர்கதையாக தொடர்கிறது.போபர்ஷ் துவங்கி ஸ்பெக்ட்ரம் வரை காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் ஊழல் தொடர்வதன் காரணமென்ன?Mr.Clean.மன்மோகனுக்கு முன்னாடியே ஒரு கொட்டு வாங்கியும் என்ன சொல்லி பித்தம் தெளிவிப்பதென தெரியவில்லை.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

பதிவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழ்கண்ட சுட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

1. இங்கே

2. இங்கே

3, இங்கே

4. இங்கே

5. இங்கே

6. இங்கே

7 comments:

bandhu said...

bofors corruption case was actually exposed by Arun Shourie when he was in Indian Express if I remember correctly. The Hindu does not have any credibility now. in last week news on CAG report, they carefully avoided even naming Raja in the article!

ராஜ நடராஜன் said...

//bofors corruption case was actually exposed by Arun Shourie when he was in Indian Express if I remember correctly. The Hindu does not have any credibility now. in last week news on CAG report, they carefully avoided even naming Raja in the article!//

Bofors started with N.Ram especially the credit should go to Chitra subramaniam.

Thanks for your comment.

வானம்பாடிகள் said...

சுட்டிக்கு நன்றிண்ணா. நாளைக்கு லீவுக்கு தீனியாச்சு. அரிசிமாவை அள்ளித்தின்ன கதையாப் போச்சு. :)).
/முழுப்பூசனிக்காயை தலித் என்ற சாயம் பூசி திசை திருப்பும் கருணாநிதி,வீரமணிகளை நினைத்தால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது.கூடவே ஜெயலலிதா,சுப்ரமணி சாமிகளின் அரசியல் பித்தலாட்டங்கள் ஸ்பெக்ட்ரம் குறித்த அவர்களது குரல்கள் அவர்களின் சொற்களுக்கான நம்பிக்கைத்தன்மையை சந்தேகிக்க வைக்கவும் நீ யோக்கியமா என்று எதிர்க்கேள்வியை கேட்டு வெட்கபட வைக்கவும் செய்கின்றன..//

பலே பலே:)

ராஜ நடராஜன் said...

//சுட்டிக்கு நன்றிண்ணா. நாளைக்கு லீவுக்கு தீனியாச்சு. அரிசிமாவை அள்ளித்தின்ன கதையாப் போச்சு. :)). //

சி.பி.ஐ குறிப்புகள்,கோபி கிருஷ்ணனின் புலனாய்வு போன்றவைகளும் இப்பொழுது CAG ரிப்போர்ட் போன்றவைகளையும் தாண்டி வெறும் காழ்ப்புணர்ச்சி அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமே கருணாநிதிக்கு வெற்றியை தரும்.இவை ராஜாவுக்கு உதவிக்கு வரும் கட்டத்தை தி.மு.க இழந்து விட்டதென்றே சுட்டிகள் காட்டுகின்றன.

யான் பெற்ற சுட்டிகள் பெறுக பதிவுலகம்:)

பர்கா தத் NDTV ல (சுப்ரமணிசாமி உள்பட) the buck stops here கருத்து பகிர்வு நடக்குது.கேட்டுட்டு வருகிறேன்.

ஜோதிஜி said...

இணைப்புகளை இணைத்து விடுங்கள்

ராஜ நடராஜன் said...

//இணைப்புகளை இணைத்து விடுங்கள்//

அப்படீங்கிறீங்க?செஞ்சுட்டா போச்சு.

அருள் said...

ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்

http://arulgreen.blogspot.com/