எனக்கு தெரிந்த மிசா காலங்கள் எல்லாம் தமிழ் பத்திரிகைகளில் அரசல் புரசலாக படித்த ஸ்டாலின் ஜெயிலுக்குப் போனாரு,கண்ணப்பன் காரு ஓட்டினாரு போன்றவைகளே:)நேற்றைய மேய்ச்சலில் பின்னூட்டமிட்டபின் பின் வாசகர் பரிந்துரையிலும் வந்த பதிவர் ரஹீம் கஸாலி எழுதிய அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி என்ற தலைப்பே முதல் முறையாக மிசா காலத்தைப் பற்றி ஓரளவுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இப்பொழுது எல்லோரின் அவுட்லுக்கின் பார்வையும் எங்கேயென்று சொல்லத்தேவையில்லை.ஆனால் அவுட்லுக்கில் என்னைக்கவர்ந்தது சித்தார்த்த சங்கர் ரேயின் நினைவுகள் பற்றி டோலா மித்ரா என்பவர் எழுதியது.முழுமையான ஆங்கில மூலத்துக்கு இங்கே செல்லவும்.என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்கிறேன்.
இந்திராவும் நானும்:
(இந்திராவும் சித்தார்த்தாவும் இளம் வயது முதல் குடும்ப நண்பர்கள் என்ற சிறுகுறிப்புடன் இனி...)
21 டிசம்பர் 1980: அன்பின் சித்தார்த்தா!உன்னுடைய குதுகலப்படுத்தும் வார்த்தைகள் நரை அல்லது கண் வளையங்களை(Wrinkles)நிறுத்தாது.உலகம் வருத்தப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.மனிதன்,எல்லா சந்தர்ப்பங்கள் இருந்தும் முன்நோக்கி பார்க்கிறான் ஆனால் இடறி கீழே விழுகிறான்.நான் இப்பொழுதுதான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியை பார்த்து வந்தேன்.85ம் வயதிலும் வயதானவர் என்று நம்பமுடியாத தோற்றம் ஆனால் மனிதத்தின் அவரது பார்வை நம்பிக்கையிழக்கச் செய்கின்றன.
Allied Powers: Siddhartha Shankar Ray with Indira Gandhi in New Delhi, 1972
Reminiscences
The Wind Has Followed Us
இந்திரா காந்தியும் சஞ்சயும்:
இந்திராவை நான் குழந்தைபருவம் முதல் அறிவேன்.ஆனால் எங்கள் வாழ்க்கை முழுவதுமான நட்பு மிசா(Emergency) காரணமாகவும்,சஞ்சயின் தலையீட்டாலும் களங்கத்தை உருவாக்கியது.இது பற்றி இந்திரா பலமுறை தனது இயலாமையை புலம்பியிருக்கிறார்.அவர் பலமுறை அழுதுருக்கிறார்.அவர் அடிக்கடி என்னிடம் “சித்தார்த்தா!என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்தப் பையனை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?” நான் ஆலோசனைகள் சொன்னாலும் சஞ்சய் சொல்வதையே இறுதியாக கேட்பார்.சஞ்சய் மீது அவர் பயம் கொண்டவ என்றே சந்தேகப்படுகிறேன்.சஞ்சயைப் போல் அல்லாது ரஜிவ் காந்தி மிகவும் நல்ல திறமையானவர்.இவரே என்னை பஞ்சாபின் ஆளுநராக ஆலோசனை கூறினார்.அவரது மரணம் எனக்கு பேரிழப்பாகும்.அவருக்கு பின் காங்கிரஸ் தலையில்லாமல் போனது.சோனியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் மாதிரி ஒரு அமைப்பை நடத்துவதற்கு மிகவும் புத்திசாலியாகவே இருக்க வேண்டும்.
எனது சட்டவியல் பயிற்சி நான் சட்டமைப்பு வழக்கறிஞராகவே அறிமுகப்படுத்துகிறது.ஆனால் அந்த எண்ணத்தில் சட்டவியலை ஆரம்பிக்கவில்லை.இந்திய சட்டமைப்பு உருவாகும்போது நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தேன்.வெறுமனே பரிட்சையில் வெல்ல வேண்டுமென்பதற்கு மேல் எனது குறிக்கோள் எதுவுமில்லாததாக இருந்தது. தத்துவமும்,பொருளாதாரமும் எனக்கு ஈடுபாடில்லை.ஆங்கிலத்தையும் பெங்காலி இலக்கியத்தையும் அதிகம் விரும்பினேன்.ரபீந்தரரின் பாடல்கள் என்னை மயக்கியது.எனக்கு கிரிக்கெட் மிகவும் விருப்பம்.எனது சட்டப்பயிற்சி காலத்திலேயே அரசியல் சட்டத்தின் நுணுக்கங்களையும் சட்டப் பிரச்சினைகளையும் புதிய ஜனநாயகத்தில் எதிர்கொள்ள வேண்டியதை உணர ஆரம்பித்தேன்.அரசியலமைப்பின் சிந்தாந்தங்கள் என்னை கவர்ந்ததை விட சமூக சிக்கல்களை தீர்ப்பதை விரும்பினேன்.சட்டங்களைப் பொறுத்தவரையில் யதார்த்தவாதியாகவே இருந்தேன்.
முக்தி பாகினிக்கு கிடைத்த தன்னம்பிக்கையும் ஆதரவும்:
(முக்தி பாகினி என்பது பெங்களாதேஷ் என்ற தனி நாடு உருவாவதற்கு காரணமான விடுதலைப்புலிகள் போன்ற தனிநாடு கோரிக்கை போராளிகள் அமைப்பு.தற்போதைய பெங்களாதேஷ் 1971க்கும் முன்பான காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் என்றே அழைக்கப்பட்டது.)
1971ல் பெங்களாதேஷ்க்கும் முன்னால் இந்திரா காந்தி என்னிடம் சொன்னது டெல்லியிலிருந்து பெங்காலி பேசும் மந்திரி ஒருவர் உற்சாகமும் தைரியத்தையும் தரும் பேச்சு பெங்களாதேஷ் முக்தி பாகினிக்கு (Liberation rmy)பெரிய தன்னம்பிக்கையாக இருக்கும்.நீங்கள் வெற்றி பெற்றால் இதுபற்றி யாருக்கும் தெரியாது அதேபோல் இது தோல்வியடைந்தாலும் உங்களை யாரும் குற்றம் சுமத்த மாட்டார்கள்.
இதன் அர்த்தம் இந்த பயணம் அதிகார பூர்வமானதல்ல.நிச்சயமாக இதை நான் புரிந்துகொண்டேன்.அப்பொழுதெல்லாம் சுதந்திர இயக்கங்களின் உலக சட்டங்கள் அவ்வளவு தெளிவானதாக இல்லை.நிச்சயமாக இந்தியாவும் ஏனைய நாடுகளின் தனி நாடு கோரிக்கைகளுக்கு நேரடியாக ஆதரவு தர விரும்பவில்லை.இந்த முடிவை அவர் சுயமாகவே எடுத்தாரா அல்லது யாராவது ஆலோசனையின் பேரில் எடுத்தாரா என்று நான் ஒருபோதும் அவரிடம் கேட்டதில்லை.
(1971, Pakistan Surrenders: Ray was CM of Bengal during the birth of Bangladesh. (Photograph by Corbis, From Outlook, November 29, 2010)
நான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றதில் எனது பாதுகாப்பில் மிகவும் கவலைப்பட்ட நண்பர் ஒருவரின் கூட்டம் நிறைந்த வீட்டில் தங்கியதும் அடங்கும்.அடுத்து கிழக்கு வங்காளத்தின் அடர்ந்த காடுகளின் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அமர் சோனர் பெங்களா (பெங்களா நாடு எங்களுடையது) என்று பாடிய ஆயிரம் போராளிகள் என்னை வரவேவற்றார்கள்.நான் கண்ணீரோடு அதனை உணர்ந்தேன்.
ஜோதிபாசுவும் ஏனைய கம்யூனிஸ்ட் தோழர்களும்.
ஜோதிபாசுவும் நானும் அரசியல் எதிராளிகளாக இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.அரசியலில் நாங்கள் சண்டை போட்டோம்.எதிர்வாதம் செய்தோம்.1962ல் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஜோதி அமைதியாக இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அது தீவிரமான ஆதரவாக இருந்தது.ஜோதி விஸ்கியை மிகவும் விரும்பினார்.பொதுமக்கள் முன் அவர் சிரித்தது மிகவும் குறைவே ஆனால் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வுடையவர்.நாங்கள் பல நினைவுகளை பகிர்ந்துகொண்டோம்.
ஒருமுறை நானும் ஜோதியும் சந்தன்நகர் பிரச்சாரத்திற்காக செல்லும்போது அழகிய பெண்களின் குழுவொன்று எங்களை சூழ்ந்துகொண்டு எங்களிடம் ஆட்டோகிராப் கையெழுத்து கேட்டார்கள்.என்னை விட ஜோதி மேல் மட்டுமே அவர்கள் அதிக ஆர்வமாக இருந்ததுடன் என்னிடம் ஒரு கையெழுத்து வாங்கியதுடன் விட்டு விட்டார்கள்.ஆனால் ஜோதியிடம் பெங்காலியில் சில வார்த்தைகளாவது எழுதி தரவேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.ஆனால் ஜோதி மறுத்துவிட்டார்.பின் நாங்கள் கல்கத்தாவுக்கு காரில் போகும்போது சில வரிகளை பெங்காலியில் எழுத ஏன் மறுத்துவிட்டாய் என ஜோதியிடம் கேட்டேன்.உடனே ஜோதி என்னிடம் “Arrey, parley toh likhbo ”(பெங்காலியில் எழுத தெரிந்திருந்தால் எழுதியிருப்பேன்).
மேலும் சோம்நாத் சட்டர்ஜியிடம் சில நகைச்சுவையான நிகழ்வுகளை காணக்கிடைத்தது.இவர் ஒரு அருமையான வழக்கறிஞர்,ஆனால் அரசியலில் சேர்ந்து வீணாகிப்போனார்.கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒருவருக்கு ஆதரவாக நான் சோம்நாத் சட்டர்ஜியுடன் எதிர் விவாதம் செய்த நினைவு வருகிறது.நான் நீதிபதியிடம்”யுவர் ஹானர்!மதிப்புக்குரிய எதிர் தரப்பு வக்கீலின் வாதங்கள் மிகவும் தீவிர நம்பிக்கையுடையதாக இருக்கிறது” என்ற பொருளில்(Your honour, my respected opponent’s arguments are bullish.”) உடனே சோம்நாத் சட்டர்ஜி நீதிபதியிடம் ‘நீதிபதி அவர்களே1மதிப்புக்குரிய எதிர் தரப்பாளர் நான் அசிங்கமாக இருப்பதால் என்னை மாடுமாதிரி என்கிறார்.(“Your honour, my respected opponent is calling me a bull because I am ugly.”)
ஏனைய கம்யூனிஸ்ட்களில் நிதியமைச்சர் ஆசிம் தேஷ்குப்தா படித்தவராக திறன் வாய்ந்தவராக உணர்கிறேன். இவர் MIT படித்தவர்.ஆனால் தவறான கட்சியில் இருக்கிறார்.அடுத்து புத்ததேப்பட்டாச்சார்யா ஒரு நல்ல மனிதர்.நேர்மையானவர்.ஆனால் முதல் மந்திரிக்கான தகுதி இவரிடமில்லை. இவர் பதவி விலகவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு இந்தியாவின் பாதை பலவிதங்களிலும் தடம் புரண்டு விட்டதும் காங்கிரஸ் தனது பாதையிலிருந்து எவ்வாறு மாற்று வழியில் நடந்து திணறுகிறதென்பதும் பதிவுகள்,நிகழ்வுகள் மூலம் கண்கூடாக காண்கிறோம்.இருந்தும் இந்திய ஜனநாயகத்தின் வேர் அனைத்து புயல்களையும் கடந்து இன்னும் வளரும் எனபது மட்டும் உறுதி.
Democracy is not a good system but there is no other alternative either to compete-எங்கோ கேட்டது.
15 comments:
மூலத்திலிருந்து இடம் பெயர்ப்பது என்பது கல்லையும் நகர்த்த வேண்டும். காயமும் படக்கூடாது என்பது போன்றது. ஆனால் இது போன்ற விசயங்களை வேறு விதமாக கையாண்டால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகம் இருந்துருக்குமோ?
சஞ்சய் காந்தி பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேகரித்து எழுத முடியுமா? என்று பாருங்களேன்.
வந்தேன் ஐயா !
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி..
பல சாம்ராஜ்யங்கள் புத்திர பாசத்தினால்தான் அழிந்து போயிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று..!
ஹூம் .. ஒரு பெருமூச்சுதான் விட்டுக்க முடியுது...
//மூலத்திலிருந்து இடம் பெயர்ப்பது என்பது கல்லையும் நகர்த்த வேண்டும். காயமும் படக்கூடாது என்பது போன்றது. ஆனால் இது போன்ற விசயங்களை வேறு விதமாக கையாண்டால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகம் இருந்துருக்குமோ?
சஞ்சய் காந்தி பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேகரித்து எழுத முடியுமா? என்று பாருங்களேன்.//
தல!எனக்கு சஞ்சய் காந்தியைப்பற்றித் தெரிந்த மூன்றே விசயங்கள்.
1.இந்திரா காந்தியின் மூத்த மகன்
2.மிசா காலத்தில் கட்டாய கருத்தடையின் நாயகன்.
3.ஹெலிகாப்டர் விமானத்தில் மரணமடைந்தார்.
//வந்தேன் ஐயா !//
ஹேமா!இந்த பதிவின் சாரத்தை உங்களைப் போன்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம்.
இந்திரா காந்தி இருந்திருந்தால் பெங்களாதேஷ் உருவானது போல் நிச்சயம் ஈழம் மலர்ந்திருக்கும் என்பது மட்டும் உண்மை. பெங்களாதேஷ் உருவாவதற்கு போராடிய போராளிகளைக்கு ஆதரவு தந்ததைப் போல் விடுதலைப் புலிகளுக்கும் தமது ஆதரவை தொடர்ந்திருப்பார்.அவரது இழப்பு குழந்தை வயது நண்பனான சித்தார்த்த சங்கர் ரேவுக்கு இழப்பு போல் ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பே எனலாம்.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்து விட்டு தற்போதைய நிகழ்வுகளை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.
//நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி..
பல சாம்ராஜ்யங்கள் புத்திர பாசத்தினால்தான் அழிந்து போயிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று..!//
மெய்யாலுமா?அண்ணே!உண்மைத்தமிழன்!ஏது இந்தப்பக்கம்:)
//ஹூம் .. ஒரு பெருமூச்சுதான் விட்டுக்க முடியுது...//
செந்திலண்ணே!பெருமூச்சு விட்டுக்க முடியுது என்ற சொல் நம்ம சுந்தரத்தமிழில் கோ இன்ஸிடென்ஸ்ன்னு சொல்வோமே அதுவா?
அல்லது நாம் இருவரின் மன அலைகளும் ஒரே வேகத்தில் பயணிக்கிறதா?காரணம் உங்கள் பெருமூச்சைப் பார்க்காமலே நான் ஹேமாவின் பின்னூட்டத்துக்கு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்:(
//பல சாம்ராஜ்யங்கள் புத்திர பாசத்தினால்தான் அழிந்து போயிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று..!//
உண்மைத்தமிழன் நீங்க பதிவுப்பக்கம் வந்த மகிழ்ச்சியில் நீங்க சொன்னதற்கு பதில் சொல்ல மறந்து விட்டேன்.
ஏனைய வாரிசு அரசியலுக்கு அட்சாரமே இந்திராகாந்திதான் என்று சொல்லலாம்.சஞ்சய் காந்தியின் புத்திர சோகத்துக்குப் பின் நேரடியாக ராஜிவை மெல்ல அரசியல் லாபி செய்து அந்த அப்பாவி பையனை அரசியலுக்கு இழுத்து விட்டு விட்டார்.
ம்ம்ம்
// ஹேமா said...
வந்தேன் ஐயா !
//
இதெல்லாம் ஒரு பின்னூட்டமா ?
//// ஹேமா said...
வந்தேன் ஐயா !
//
இதெல்லாம் ஒரு பின்னூட்டமா ?//
ம்ம்ம் நசரு!நீங்களாச்சு ஹேமாவாச்சு:)
வந்தேன் ஐயாவுக்கு நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்.
//தல!எனக்கு சஞ்சய் காந்தியைப்பற்றித் தெரிந்த மூன்றே விசயங்கள்.
1.இந்திரா காந்தியின் மூத்த மகன்
//
தல! சஞ்சய் இளையவர். ராஜீவ் தான் மூத்தவர்.
இன்னொரு தகவல். மிசாவிற்கு மூல காரணமே சஞ்சய் தான். (விளக்கமாக பின்னூட்டமிட நேரமில்லை. )
////தல!எனக்கு சஞ்சய் காந்தியைப்பற்றித் தெரிந்த மூன்றே விசயங்கள்.
1.இந்திரா காந்தியின் மூத்த மகன்
//
தல! சஞ்சய் இளையவர். ராஜீவ் தான் மூத்தவர்.
இன்னொரு தகவல். மிசாவிற்கு மூல காரணமே சஞ்சய் தான். (விளக்கமாக பின்னூட்டமிட நேரமில்லை. )//
கும்மி!தகவல் பரிமாற்றத்துக்கும் பிழை திருத்தியமைக்கும் நன்றி.என்னோட இந்த லட்சணத்துல சஞ்சய் காந்தி பற்றி ஜோதி இன்னும் விவரமா சொல்லுங்கன்னா எப்படி சொல்வேன்?அவ்வ்வ்வ்......
1969 -இல் காங்கிரஸ் உடைந்த போது இந்திரா கட்சியில் வந்து சேர்ந்த வலது கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் இந்த சித்தார்த் சங்கர் ரே, மோகன் குமாரமங்கலம்,K .R .கணேஷ்,நந்தினி சத்பதி போன்றவர்கள்.லெனினை விட நீங்கள்தான் பெரிய சோசியலிஸ்ட் என்று இந்திராவை உசுப்பேற்றியவர்கள்.காமராஜ்,அசோக் மேத்தா,நிஜலிங்கப்பா போன்ற விடுதலை போராட்ட வீரர்கள் எல்லாம் பிற்போக்கு,c .சுப்ரமணியம்,பக்தவச்சலம்,கருணாநிதி எல்லாம் முற்போக்கு என்று இந்திராவிற்கு ஜாதி பிரித்து காண்பித்தவர்கள் இந்த முன்னாள் வலதுகள்.இவர்களில் ரொம்ப பேரை ஸ்காட்ச் சாராயம் மற்றும் பைப் இல்லாமல் பார்க்கமுடியாது.
Post a Comment