இந்தியாவில் மிகவும் தெரிந்த கண்ணுக்கு தெரிந்த ஆனால் யாரும் அலட்டிக்கொள்ளாத மூலப்பொருள் லஞ்சம் என்ற சொல்.
ஊழலின் காரணங்கள் எது? லஞ்சத்தை எப்படி பிரிக்கலாம்?
லஞ்சம் என்பது அரசு இயந்திரம் சரியாக இயங்காத காரணத்தால் தனி மனிதனை மற்றும் மொத்த சமூகத்தை பாதிக்கும் ஒன்று.இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்களே.
ஊழல் எப்படி ஏற்படுகின்றது?
அரசு அமைப்பில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பதவியை உபயோகிப்பது
நிறுவனங்கள் விலை,டெண்டர் போன்றவைகளை நிர்ணயிக்க கையூட்டு தருவது
வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போலீசுக்கு பணம் தருவது மட்டும் கேட்பது, விமான நிலையத்தில் சுங்கவரி அதிகாரிகள் கையூட்டு கேட்பது போன்றவை.அரசு நிறுவனங்களில் தனிமனிதனுக்கு அரசியல் சட்டப்படி சேரவேண்டிய உரிமைகள்,தேவைகளை பூர்த்தி செய்ய கையூட்டு வாங்குவது.
அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக இலவசங்களாக உணவு,பயண செலவு,பணம்,சாராயம் என அள்ளி தருவது.
இவைகள் நிகழ்வதற்கு காரணங்கள்.
அரசு கட்டமைப்பின் செயல்களில் வெளிப்படையான ஒளிவு மறைவு இன்மை (Tranaparency)
ஒரு செயலின் நன்மை,தீமைகளுக்கான பொறுப்பு (Accountability)
(உதாரணமாக திட்டங்களை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தலையைக் குடைந்து செயல்பட்டால் தலிவர்கள் ரிப்பன் வெட்டி பெயரை தட்டிக்கொண்டு போவதும் அதோடு கூட நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அதே அரசு அதிகாரிகள் தூண்டுகோலாக அமைவதும் )
சமுதாயத்தின் ஊழலின் வகைகள்
லஞ்சம் (bribe) - அரசு ஊழியருக்கு தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் தருவது.
வன்முறை (Nepotisim) - கட்டை பஞ்சாயத்து வில்லன்கள் மூலம் பணம் கொடுத்து அடியாள் மூலம் ஏற்படும் கொலைக்குற்றங்கள்.
சார்பு நிலைகள்(Favoritism) - கட்சி,நண்பர்கள்,சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் என பக்கசார்பாக செயல்படுவது.
ஊழல் (Curruption) - அரசாங்க கட்டமைப்புக்களை பல்வேறு ஆவணப்படுத்தல் குளறுபடிகள் மூலம் ஏமாற்றுவது
திருட்டு (Fraud)- அரசாங்க பணம் மற்றும் சொத்துக்களை திருடுவது
அரசு அலுவலகங்களின் ஊழல் (Administrative curruption) - அரசாங்க கொள்கைகள் மற்றும் சட்டங்களை திரிப்பதும் மாற்றுவதும்.உதாரணமாக ஒரு டெண்டர் அல்லது அரசு ஆவணத்தில் தகுதியில்லாதவர்கள் பெயரை சேர்ப்பதும் சட்டத்திற்கு புறம்பாக கையெழுத்திடுவதும்.
அரசியல் கட்சிகளின் ஊழல் (Political curruption) - சட்டம்,நீதி,ஒழுங்கு மற்றும் கொள்கைகளை (ஸ்விஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்க) மாற்றியமைப்பதும் தமக்கு தேவையானவர்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும்.
ஊழலின் விளைவுகள்
நீங்கள் நேரடியாக ஊழலில் ஈடுபடாவிட்டாலும் ஊழல் உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது.முதலாவதாக ஊழல் உங்கள் வாழ்க்கை தரத்தை குறைக்கிறது காரணம் ஊழல் கட்டமைப்பில் வணிகம் செய்வதற்கான சூழலையும் பொருளாதார நம்பிக்கையையும் குறைக்கிறது
ஊழல் இல்லாத அல்லது குறைந்த நாடுகளை விட ஒரு தனிமனிதனின் சராசரி வருமானம் மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.
இதன் காரணமாக ஒரு அரசு ஊழியருக்கான மாத வருமானம் அரசாங்கத்தால் தருவது குறைவதோடு அரசின் வாங்கும் திறனும் குறைகிறது.அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்கீடு செய்யும் திட்டங்கள் குறைகின்றன.
இதன் விளைவு பள்ளி,மருத்துவம்,நல்ல சாலைகள்,கழிவுகளை அகற்றும் முனிசிபல் திட்டங்கள்,காவல்துறைகள் போன்ற முக்கியமான தேவைகள் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைந்து காணப்படும்.
இதனோடு தனிமனித குணநலன்களின் கூட சமுதாயத்தினாலேயே கட்டமைக்கப்படுகின்றன.தனிமனித குணநலன்கள் நேர் அல்லது எதிராக மாறுவதைப் பொருத்தே ஊழலின் அளவு குறைவதும் வளர்வதும்
மேலும் குழந்தைகள் கருத்தரிப்பில் அல்லது பிறந்தவுடன் இறப்பு மற்றும் படித்தவர்களின் விகிதாச்சாரம் போன்ற பக்கவிளைவுகளை உருவாக்கும்
இதோடு கூட ஊழல் பணம் வைத்திருப்போர் மற்றும் அவரோடு சார்ந்திருப்பவர்களை சட்டத்தை வளைக்கவும் அரசியல் சட்டங்கள் அவர்களுக்கு ஏதுவானதாகவும் இருக்க உதவி செய்யும்.
விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத அளவுக்கு ஊழலின் ஆக்கிரமிப்பு நமக்கு கண்ணுக்கு தெரியாமலே செயல்படும்.
ஊழல் சமூக சூழலை பாதிப்பதோடு அரசாங்கம் சரியாக செயல்படாத நிலைக்கு தள்ளப்படுவதால் அரசு மீதான நம்பிக்கையை குறைக்கும்.
டிஸ்கி: மேலே சொன்ன உலகவங்கி தியரிகள் அத்தனையும் ஊழல் கொண்ட எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.இந்தியா இதில் அடக்கமா?ஜெய் ஹோ!
படங்கள் உதவி: உலக வங்கி மற்றும் கூகிளண்ணன்
9 comments:
சமூகப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்ட இடுகை...
நன்றி!
அன்புடன்,
ஆரண்ய நிவாஸ்
ஆர்.ராமமூர்த்தி
உதிரிப்பூக்களில் விஜயன் சொல்வார் "நான் செஞ்சதிலியே பெரிய தப்பு, உங்களையும் என்னை மாதிரியே மாத்தனது" என்று. இன்றைய அரசியல்வாதிகள் அதைத்தான் செய்கிறார்கள்.
//சமூகப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்ட இடுகை...
நன்றி!
அன்புடன்,
ஆரண்ய நிவாஸ்
ஆர்.ராமமூர்த்தி//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//உதிரிப்பூக்களில் விஜயன் சொல்வார் "நான் செஞ்சதிலியே பெரிய தப்பு, உங்களையும் என்னை மாதிரியே மாத்தனது" என்று. இன்றைய அரசியல்வாதிகள் அதைத்தான் செய்கிறார்கள்.//
ஆஹா!மதிப்பீடு நல்லாயிருக்குதே!அப்ப அடிச்சு ஆடிட வேண்டியதுதான்:)
பாருங்க நமது சமுதாயத்தோட நிலையை,லஞ்சம் கொடுப்பதோ வாங்குவதோ வெட்கமில்லாமல் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி மாதிரி அரசியல் கட்சிகளும்,தலைவர்களும்,அரசு அதிகாரிகளும் மாத்தி வச்சிருக்காங்க.இது ஒவ்வொரு தனிமனிதனையும்,வாழ்க்கையையும் பாதிக்கிறது என அறியாமலேயே கட்சி கோசங்களுடனும் எழுதப்படா சாசனமாக அடிமையெனும் உள்கட்ட அமைப்பாக நான் எப்பவுமே இந்தக்கட்சியென்றும் கட்சித்தொண்டனென்றும்,கட்சிக்காரன் என்றும் , கட்சித்தாவல்கள் என்றும் எந்த இயக்கமாவது ஜனநாயக நெறியோடு இருக்கிறதா?
நீங்க சொன்னது மாதிரியே இன்றைய அரசியல்வாதிகள் அவர்களின் இழுப்புக்கும்,வளைப்புக்குமல்லவா மக்களை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
கூடுதலாக உதிரிப்பூ என்ற காவியத்தை நினைவுபடுத்தியதற்கு உங்களுக்கு நன்றி.
இப்பத்தான் ஒரு பதிவு படிச்சேன் நடா.சின்னப்பிள்ளையில இருந்தே ஊழலும் லஞ்சமும் அம்மாகிட்ட இருந்தே தொடங்குதாம்.
எப்பிடின்னா...நிலாவைப் பிடிச்சுத் தரேன்...சாப்பிடு சாப்பிடு !
//இந்தியாவில் மிகவும் தெரிந்த கண்ணுக்கு தெரிந்த ஆனால் யாரும் அலட்டிக்கொள்ளாத மூலப்பொருள் லஞ்சம் என்ற சொல்.//
மிக்க அவசியமான அலசல் தலைவா...
//இப்பத்தான் ஒரு பதிவு படிச்சேன் நடா.சின்னப்பிள்ளையில இருந்தே ஊழலும் லஞ்சமும் அம்மாகிட்ட இருந்தே தொடங்குதாம்.
எப்பிடின்னா...நிலாவைப் பிடிச்சுத் தரேன்...சாப்பிடு சாப்பிடு !//
ஹேமா!யாரோ தப்பா சொல்லிக்கொடுத்திருக்காங்க போல தெரியுதே?
அம்மா கொடுக்கறேன்னு சொல்வதெல்லாம் அன்பளிப்பு கணக்கில அல்லவா சேரும்?இப்ப ஒரு கல்யாணத்துக்கு போகிறோம்.நம்ம விருப்பத்துக்கு அன்பளிப்பு வாங்கிட்டுப் போகிறோம்.
வாழ்க்கையில் சில பிரதிபலன்கள் எதிர்பாராதவை.
////இந்தியாவில் மிகவும் தெரிந்த கண்ணுக்கு தெரிந்த ஆனால் யாரும் அலட்டிக்கொள்ளாத மூலப்பொருள் லஞ்சம் என்ற சொல்.//
மிக்க அவசியமான அலசல் தலைவா...//
தல!ஸ்பெக்ட்ரம் இந்திய ரூபாயின் பூஜ்யம் கணக்கு நீளமா போயிகிட்டே இருக்கறதால 4 பில்லியன்னு சுருக்கமா நினைச்சிகிடலாம்.அப்பவும் கூட நினைச்சா மூச்சு வாங்குது.
கடைசி வரை அலட்டிக்கொள்ளாத ஆ.ராசாவின் குரலும் சப்பைக்கட்டு வாதமும் கல்மாடி காமன்வெல்த் முடிச்சிகிட்டு ராஜினாமா என்ற ஒற்றை சொல்லில் தப்பித்துக் கொள்வதும் இன்னும் சில நாட்களில் புதிய பரபரப்பு வரும் போது இந்த ஊழல் என்ற சொல்லும் திருடர்களும் பொறுப்பாளிகளும் நமது நினைவலைகளிலிருந்து போய்விடுவார்கள்.
இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? பாட்டு பாடுவோம்.
அதை ஒழிக்க ஏதாவது வழி சொல்லுங்க தல...
Post a Comment