நாட்டுச் சரக்குகள் உண்மைத்தமிழன்,செந்தில்,வானம்பாடிகள் பாலா இன்னும் பல முன்னணி பதிவிகள்,பதிவர்கள் போல அல்லாது நானும் ரவுடிதான் என்று காட்டிக்கொள்வதற்காக வேண்டியாவது பாதிக்கும் சில நிகழ்வுகளைப்பற்றி பதிவு போட வேண்டுமென்று நினைக்கும் போது உதவிக்கு வருவது பெரும்பாலான நேரங்களில் விக்கிபீடியா தளமே என்று போலிஸ் ஜீப்பில் ஏறி நின்று உறக்க சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.(குறிப்புகள் மட்டுமே விக்கி போன்றவர்களுக்கு சொந்தம்,எழுத்து நடை,மண்டைக்குள் முன்பே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டவை மற்றும் சரக்கு கலக்கல்,வார்த்தை அலங்காரம் எல்லாம் சொந்த சரக்கே:))
எந்தவிதமான லாப நோக்குமில்லாமல் அறிவு சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றஒரே அடிப்படையில் உருவான் தளம்.அமெரிக்காவின் பொருளாதார தட்டுப்பாடு வங்கிகள்,உலகப் பொருளாதாரத்தில் பின்னடைவு என்று துவங்கி விக்கிபீடியா போன்ற நல்ல நிறுவனங்களையும் பாதிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
விக்கிபீடியா தனது சேவையை மேலும் தொடர அனைவரின் பொருளாதார உதவியை நாடுகிறது.முடிந்தால் உதவுங்கள்.உதவ முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் உங்கள் தளத்தில் விக்கிபீடியா விட்ஜெட்டாவது ஒட்ட வைத்துக்கொள்ளலாம்.விக்கிபீடியாவுக்கு உதவி என்ற இடுகை பார்த்த என்னைப்போன்றவர்களில் சிலரது உதவிகளாவது போய் சேரட்டும்.
நல்லவைகளுக்கு நாடு,நிறம்,எல்லைகள் இல்லை.
6 comments:
//விக்கிபீடியா விட்ஜெட்டாவது ஒட்ட வைத்துக்கொள்ளலாம்.//
ஒட்டிட்டேன்
////விக்கிபீடியா விட்ஜெட்டாவது ஒட்ட வைத்துக்கொள்ளலாம்.//
ஒட்டிட்டேன்//
மிகவும் நன்றி!நசரேயன்.
உண்மையிலேயே என் பதிவுகளுக்கு மிகவும் உதவியாக இருப்பவைகளில் விக்கிபீடியாவுக்கு பெரும்பங்கு உண்டு.. என்னால் ஆன சிறுபங்கை கட்டாயம் செய்வேன்..
முதலில் ஓட்டிடறேன்...
||ஸ்மைலி போட்டா உறவு!கருத்து சொன்னா நட்பு!||
அடப்பாவிங்களா... இப்டி வேறயா...
சரி ஹெல்ப்புவோம்...
//உண்மையிலேயே என் பதிவுகளுக்கு மிகவும் உதவியாக இருப்பவைகளில் விக்கிபீடியாவுக்கு பெரும்பங்கு உண்டு.. என்னால் ஆன சிறுபங்கை கட்டாயம் செய்வேன்..
முதலில் ஓட்டிடறேன்...//
மிகவும் நன்றி செந்திலண்ணே!
//||ஸ்மைலி போட்டா உறவு!கருத்து சொன்னா நட்பு!||
அடப்பாவிங்களா... இப்டி வேறயா...
சரி ஹெல்ப்புவோம்..//
கருத்து சொன்னதுக்கு நன்றி ப்ரியா.
நசரேயனாவது ம்ம்ம் சொல்லி கருத்துதான்ன்னு சொல்லி தப்பிச்சிக்கிறார்.ஆனா வெறும் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகுறாங்களேன்னு போட்டது.நல்லாவே வேலை செய்யுது:)
ஹெல்ப்புவோம்ன்னுதான் முன்பொரு முறை பாலாண்ணா கிட்ட ஆலோசனை கேட்டேன்.ஆனால் இருவருமே கிடப்பில் போட்டுவிட்டோம்.என்னன்னு அவர்கிட்டயே கேளுங்க.
Post a Comment