Followers

Tuesday, October 18, 2011

எல்லா தமிழ்மண நண்பர்களும் முக்கியமானவர்களே!

ஏர்டெல்... தலைப்பு மாதிரிதான் வித்தியாசமான விதத்தில் நண்பர்கள் அடிக்கும் லூட்டிகளை தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகிறது. போன பதிவுக்கும் முந்திய பதிவு வரையில் தினசரி தமிழ்மண தரிசனம் செய்யாமல் வேறு ஆங்கில தளங்களில் நுழைந்து கொண்டு தேடல்களில் நாட்கள் நகர்ந்து விட்டன.இந்தப் பதிவு போடுவதற்கு முன்பு கூட உடல் களைப்பால் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு திடீரென இன்று தமிழ்மணம் எட்டிப்பார்த்த பாதிப்பால் சொல்லவா வேண்டாமா என்ற பூவா காயாவில் யாரோ கருத்து கோபம் கொள்கிறார்கள் நமக்கேன் வம்பு என்று அமைதியாக ஆட்டம் பார்ப்பதை விட தமிழ் பொதுவெளியில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதால் சொல்லியே விடுவது என்று தட்டச்சு செய்கிறேன்.

பதிவுலகில் எத்தனை சண்டைகள் பார்த்திருக்கிறோம் இதையும் பார்க்க மாட்டமா என்ன என்ற முந்தைய சண்டைகளுக்கும் இப்போதைய சண்டைக்கும் வித்தியாசம் இருக்கிறது.புராணக்கதை ஒன்றில் வரம் கொடுத்தவன் மீதே வரத்தை பரிட்சித்துப் பார்க்கிற மாதிரியான சூழல் இது.நகைச்சுவையாகவோ,மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட  நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்.இதற்கு விதிவிலக்கான பதிவுகளும் இருக்கும்.ஆனால் அலெக்சா ரேட்டில் மொக்கைகள் முந்திக்கொள்வது வாசிப்பின் தரமா அல்லது மனம் எங்கும் நிறைந்து கிடப்பதால் அவையே ருசிக்க கிடைக்கின்றனவா என்பது விவாதத்திற்குரிய ஒன்று. 

யாருக்கும் யார் மீதான கருத்து மாறுபாடுகள் மீதான  பதிவுகளோ அதன் பின்னூட்டங்களோ மாற்று கருத்து என்ற பெயரில் முன்வைக்கும் கருத்து சுதந்திரத்தை நான் எப்போதும் ஆதரிக்கவே செய்கிறேன்.ஆனால் இப்போது தமிழ்மணமே மன்னிப்பு கேள் பேனரை தூக்கிகிட்டு பதிவுலகை இந்தியன் ஏர்லைன்ஸ்  814 விமானத்தை தலிபான்கள் மதம் என்ற பெயரில் ஹைஜாக் செய்த மாதிரி பதிவு குழு சேர்க்கும் கருத்து வெளிப்பாடுகளை மறுக்கிறேன்.

இன்றைய தினம் வரைக்கும் பெயரிலி யாரென்றே நான் அறிந்திருக்கவில்லை.பெயரிலியாகவே அவர் தம் கருத்தை முன் வைத்திருக்கலாம்.நிர்வாகத்தில் ஒருவர் என்று அடையாளம் காட்டியது பதிவுலக கல்லூரி மாணவர்களுக்கு பேனர் தூக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்து விட்டது. அவரது ஆங்கிலம் கலந்த பின்னூட்ட விளாசல்களும், பின்னூட்ட தொடுப்பாக பெயரிலியின் 2003ம் வருடம் தொட்ட பதிவுகளைப் பார்க்கும் போதும் அவர் சொல்லும் விதத்தை உள்வாங்கிக்கொள்வதில் தவறியோ அல்லது வழக்கமான பின்னூட்ட வகையிலோ சிக்கிக்கொண்டு பின்னூட்டம் இடுவதற்கு மீண்டும் மீண்டும் அவர் மறுமொழி சொன்ன முறையில்  கோபம் கொண்ட்வர்களே அதிகம். பின்னூட்டங்களை கையாளும் பதிவுலக பின்னூட்டக்காரர்களுக்கு பெயரிலி விளாசியது உச்சமே.

அவரது பின்னூட்டத்திற்கு மறுமொழி சொல்லும்  தார்மீகப்பொறுப்பும் தளத்தின் பதிவ்ருக்கான உரிமை.அதனை விடுத்து கூட்டத்துப் பஞ்சாயத்தில் குரல் கொடுத்து சண்டை வளர்க்கும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமூக கடமைகள் நமக்கு இருந்திருந்தால் கூட பரவாயில்லை.தனது கருத்து வெளிப்பாடாய் பதிவுகள் போடுவது பதிவரின் உணர்வு சார்ந்த விசயம்.ஆனால் பதிவும் போட்டு ஒற்றைப் பார்வையாய் ஆள் சேர்த்து இணைத்துக்கொண்டு செல்வேன் என்பது மறுக்கவும் கண்டிக்க வேண்டிய ஒன்று.இதன் உச்சமாக பதிவர் ஒருவர் அமெரிக்காவில் இயங்கும் தளத்தை வளைகுடாவில் தடை செய்வேன் என்று எச்சரிக்கை விடுவது.ஆஹா!தொழில் நுட்ப திறன் புல்லரிக்க வைக்கிறது.இந்த தடை சராசரி மேய்ப்புக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்க கூடும்.அதனையும் தாண்டிய வாசிப்பு நேசிப்பு அசாங்கேகளுக்கு இது சரிப்பட்டு வராது.மேலும் தன் கையால் தன் கண்ணை  குத்திக்கொள்ளும் விவேகம் பற்றி மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் காலத்தில் தொடர்ந்த  பதிவர் சதிஷ் அரசியல் பதிவுக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள் சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவரது சோதிடம் சார்ந்த விசயங்கள் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதும் அவை தவிர்த்து அவரது கருத்துக்களை ஆதரித்திருக்கிறேன்.சமூக கருத்துப் பரிமாற்ற்ங்கள் என்ற தளத்தில் வியாபார அணுகுமுறையை அவர் முறைப்படுத்தியதால் பதிவுகள் இணைப்பதை தமிழ்மணம் மறுத்துள்ளதாகவும் அவரது பின்னூட்டங்கள் மூலமாக அறிய முடிகிறது.எந்த ஒரு  மென்பொருளையும் உபயோகிக்கும் போதும் I accept சொல்லியே அதன் சாரங்களைக் கூடப் படிக்காமல் உபயோகிக்க துவங்கி விடுவது பெரும்பாலோரான வழக்கம்.தமிழ்மணம் சில நெறிமுறைகளை செயல்படுத்தும் போது அதற்கு உட்பட்டே நடக்க வேண்டிய பொறுப்பு பதிவர்களுக்கு இருக்கிறது.இந்தப் பதிவின் நேரத்தை மைக்ரோ சாப்ட் vs சோனி என்ற தொழில்நுட்ப பதிவுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் மெருகு படுத்தி விட்டு இணைக்க இயலுமா என்று பார்க்கிறேன்.

உலகும்,அதன் விசயங்களும் பரந்து கிடக்கின்றன.எல்லாமே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.கொடுக்கலும்,வாங்கலும் என்ற பரிமாற்றத்தை தமிழ்மணம் இதுவரைக்கும் லாபகரமான நோக்கில்லாமல் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.வாங்குதல் தவிர்த்து கொடுத்தேனே காரணம் காட்டி தமிழ்மணத்தை மறுக்கும் செயல்கள் தவிர்ப்பது எனது நிலைப்பாடு.

கூடவே பதிவுலகம் மூலமாக பெயர்கள் அறிமுகமான நண்பர்களின் வெளிநடப்பும் வருத்த்தை தருகிறது.எத்தனையோ கடந்தோம்.இதனையும் கடப்பதே வாசிப்பின் நேசிப்பை தரும்.

39 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
பிரச்சினையை புரிந்து கொண்டு அதனை நடுநிலையோடு அணுகியதற்கு நன்றி.நான் தமிழ்மணத்தில் 3 மாதங்களாகவே இணந்து உள்ளதால் இந்த கருத்து மோதல் சரியாக புரியவில்லை.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இந்த பெயரிலி என்பவர் உண்மையிலேயே இப்போதைய தமிழ்மண நிர்வாகம் சார்ந்தவரா?இவருக்கு அதன் சார்பாக கருத்து வெளியிட அனுமதி உண்டா என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.

இது குறித்த தகவல்களை அறியாமல் இதில் கருத்து வெளியிட்டு விவாதிப்பது பிரச்சினையை தீர்க்காது.பல தமிழர்களின் பிரச்சினைகளே முன்னெடுக்கப்பட வேண்டிய வேளையில் இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படுவது தமிழ் உலகிற்கு நன்று.

நன்றி சகோ!!!!!

மதுரை மாக்கன் said...

நடுநிலையாக எழுதப்பட்ட பதிவு

இந்தப் பிரச்சனை எனக்கும் புரியவில்லை. தமிழ்மணமே மன்னிப்பு கேள் என்ற கோரிக்கை அபத்தமாக உள்ளது

இஸ்லாமிய சகோதரர்கள் இவ்வாறான கோரிக்கைகளை வைத்து மொத்த தமிழ்மணத்தையும் முடக்குவது சரியல்ல

தமிழ்மணம் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு இந்தப் பிரச்சனையை கடந்து செல்வதே நல்லது

அதை விட்டு இப்படி தமிழ்மணத்தை முடக்குவேன், மன்னிப்பு கேள் என்பதெல்லாம் சுத்த அபத்தம்

IlayaDhasan said...

அது உங்க பார்வையில்,இது என் பார்வையில்...

தமிழ் மணத்திற்கு பதிவனாகிய என் கேள்விகள்

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

Yoga.S.FR said...

வணக்கம் சகோதரா!இந்தப் பிரச்சினை கடந்த மாதமே இஸ்லாமிய நண்பர்களைச் சீண்டுதலில் தொடங்கியது என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன்.பார்க்க"என் இனிய தமிழ் மக்களே" வலைப்பூ.நறுமணம் தவிர...................!என்று தொடங்கும் பதிவு.நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவர்களை ஆபாச பதிவுக்காகவும் பின்னூட்டங்களுக்காகவும் நீக்குவோம் என்று சொல்லும் தமிழ்மணம் தனது நிர்வாகியே அதுவும் தமிழ்மணம் சார்பாக என்று சொல்லிக் கொண்டு அவ்வாறு செய்திருக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்ததும் இப்போது விளக்கம் கொடுக்கிறேன் என்று பொறுப்பை தட்டிக் கழித்திருப்பதும் சரியான முன்னுதாரணமல்ல.
(நீங்கள் பெயரிலியின் பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)

தமிழ்மணத்தை விமர்சித்தோ, கிண்டல் செய்தோ பின்னூட்டம் இட்ட பதிவர்கள் அனைவரும் உடனடியாக தமிழ்மணத்தில் இருந்தே தூக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்மணம் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களா? இந்த எதேச்சதிகாரப் போக்கை விரும்புகிறீர்களா? இந்த ஒரு காரணம்தான் பெரும்பாலான பதிவர்களின் சுயமரியாதையைத் தட்டி எழுப்பி அவர்களை தாமாகவே விலக வைத்திருக்கிறது. (மத பிரச்சனையை பற்றி நான் பேசவில்லை)

நன்றி!

ராஜ நடராஜன் said...

வணக்கம் சகோ சார்வாகன்!நான் மூன்று வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணத்தில் இருந்தும் பெயரிலி பற்றியெல்லாம் அறிந்திருக்கவில்லை:)நானும் கடந்த தினங்களில் ஒழுங்காக தமிழ்மண வகுப்புக்கு வராமல் போனதால் பிரச்சினையின் பின்புலம் பற்றியெல்லாம் அறிந்திருக்க வில்லை.தமிழ்மணம் பதிவுலகம் பக்கம் வருபவர்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்,பொது ஊடகங்களில் வெளிவராத தகவல்களை கொண்டு வருவதில் துணைபுரிகிறதென்ற வகையில் மட்டுமே அதன் பலம் இதுவரை இருந்திருப்பதாக நான் உணர்கிறேன்.பெயரிலி பின்னூட்டமிட்ட கும்மி பதிவில் தளம் சார்ந்த உரிமையாளருக்கான கருத்து மோதல்கள் இல்லாமல் பிரச்சினையை மற்றவர்கள் ஸ்வாகா செய்கிறார்களே என்ற வரையில் மட்டுமே எனது புரிதல்.பூதாகரமாக உருவாக்கும் அளவுக்கு இதில் பிரச்சினையில்லையென்ற விசால மனப்பான்மை இருக்கும் பட்சத்தில் இதன் குறுக்கு வெட்டு நீளம் கடுகின் அளவே.இணையத்தில் மதங்கள் சார்ந்தும் அதன் மறுப்புக் குரல்களையெல்லாம் கயிறு போட்டோ,விலங்கு மாட்டும் வலு யாருக்குமே இல்லை.நீங்கள் சொல்வது போல் தமிழர்களின் பிரச்சினைகள் முன்னெடுக்கப் பட வேண்டிய நேரத்தில் இந்த திசை மாற்ற நோக்கங்கள் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் கருவியே பழுதடைந்து போனால் நல்லா இருக்குமே என்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்த யாகம் செய்த மாதிரிதான்:( மீதி சொற்களை நண்பர்களின் புரிதலுக்கு விட்டு விடுகிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//மதுரை மாக்கன் said...இந்தப் பிரச்சனை எனக்கும் புரியவில்லை. தமிழ்மணமே மன்னிப்பு கேள் என்ற கோரிக்கை அபத்தமாக உள்ளது//மதுரை சொக்கனைத் தெரியும் திருவிளையாடல் படம் மூலமாக...இது யார் மதுரை மாக்கன் என பேட்டைக்கு புதுசா:) பெயரிலி அவரது தளத்தில் அவர் சொன்ன சொறகளுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.ஏற்றுக்கொள்வதோ,மேலும் கோபம் கொள்வதோ அது சார்ந்தவர்களைப் பொறுத்தது.ஒரு கவிதையின் வார்த்தைப் பிரயோகங்களை இந்த கவிஞருக்குரியது என்று உரிமை கொண்டாட முடியும்.பொதுவான வார்த்தை பிரயோக வெளிப்பாடுகளுக்காக வார்த்தை ஸ்வீகாரம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிப்பு என்பதை விட தமிழ்மணத்தை முடக்குவேன் என்பது பெயரிலியின் பின்னூட்டக் கருத்து உச்சத்துக்கு நிகரானது.இது சார்ந்தே எனது பதிவின் வெளிப்பாடு.நன்றி.

ராஜ நடராஜன் said...

இளையதாசன்! வாங்க!உங்கள் பார்வை என்னவென்று நீங்கள் கொடுத்த இணைப்பில் பார்த்தேன்.நாம் சின்ன குழந்தைகளாக இருக்கும் போது கோலி குண்டு விளையாடுவோம்தானே!எங்கள் நண்பர்கள் மத்தியில் பேந்தா என்போம்:)உருண்டையாக இருக்கும் சில குண்டுகளை அப்படியே பார்ப்பதற்கும்,மூன்று கண்ணாடிகளை பிரிஸம் மாதிரி துணியால் இணைத்து ஒற்றை பைனாகுலர் மாதிரி உள்ளே போட்டுப் பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் இருப்பதோடு பிரிஸத்துக்குள் இருக்கும் குண்டின் பிம்ப வடிவங்கள் இன்னும் குதுகலப்படுத்தும்.இங்கே மாறாக நீங்கள் இணைத்த பெயரிலி சொன்ன வார்த்தைகளை பின்னூட்டம் சார்ந்த மறுமொழியென்ற அளவில் அல்லாது தனியேப் பிரித்துப் பார்க்க அதன் வீரியம் தனியாகவே இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை.வருண் பின்னூட்டமிட்ட கருத்துக்களையும் பார்வையிட்டேன்.அவரது அந்தப் பதிவு குறித்த பின்னூட்ட வெளிப்பாட்டில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை.இந்தப் பிரச்சினையை தணிக்கும் வழிகளை யோசிப்போjavascript:void(0)மே!

ராஜ நடராஜன் said...

//UNMAIKAL said...
2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.//உங்கள் பெயர் பதிவுலகில் நினைவிருக்கிறது.ஆனால் உங்கள் பதிவு குறித்து எனக்கு எந்த விதமான உள்வாங்கலும் இல்லை.நான் தமிழ்மணத்துக்குள் நுழையும் காலகட்டத்தில் சிக்ஸர் போட்டுக்கொண்டிருந்தவர் ஓசை செல்லா!நீங்கள் கொடுத்த சுட்டிகள் படித்தும் பெயரிலிக்கும்,ஓசை செல்லாவுக்குமான பிரச்சினை என்ன என்பதை இன்றும் புரிந்து கொள்ளவில்லை.ஓசை செல்லா அவரது வழியில் பயணித்துக்கொண்டுள்ளார்.தமிழ்மணம் தளராமல் நடை போடுகிறது.பழைய கீறல்களை கீறுவது இப்போதைய புண்ணுக்கு மருந்து தடவுமா?

ராஜ நடராஜன் said...

//Yoga.S.FR said...
வணக்கம் சகோதரா!இந்தப் பிரச்சினை கடந்த மாதமே இஸ்லாமிய நண்பர்களைச் சீண்டுதலில் தொடங்கியது என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன்.பார்க்க"என் இனிய தமிழ் மக்களே" வலைப்பூ.நறுமணம் தவிர...................!என்று தொடங்கும் பதிவு.நன்றி!//வாங்க சகோ Yoga.S.FR! எனக்கு உண்மையிலே இன்னும் இதன் ஆழம் புரியவில்லை.மேலும் உங்கள் பின்னூட்டங்களிலிருந்து உங்கள் கருத்து நிலை அறியும் வாய்ப்பும் கிடைத்தது.இப்போதைய பிரச்சினை ஒன்றும் தீர்க்கப்பட முடியாத எல்லைச்சண்டை அல்ல.புரிந்துணர்வு நோக்கி நடப்போமே!நன்றி.

ராஜ நடராஜன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவர்களை ஆபாச பதிவுக்காகவும் பின்னூட்டங்களுக்காகவும் நீக்குவோம் என்று சொல்லும் தமிழ்மணம் தனது நிர்வாகியே அதுவும் தமிழ்மணம் சார்பாக என்று சொல்லிக் கொண்டு அவ்வாறு செய்திருக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்ததும் இப்போது விளக்கம் கொடுக்கிறேன் என்று பொறுப்பை தட்டிக் கழித்திருப்பதும் சரியான முன்னுதாரணமல்ல.
(நீங்கள் பெயரிலியின் பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)//இத்தனைப் பின்னூட்டங்களிலும் என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது உங்கள் பின்னூட்டமே.நான் உங்களுக்கு அதிகமாக பின்னூட்டம் போடுவது கிடையாது.ஆனால் உங்களது இன்ஸ்டாண்ட் நகைச்சுவைகளை ரசிப்பதுண்டு.சூழலுக்கேற்ற உடனடி நகைச்சுவைப் பின்னூட்டமிடுபவர் நீங்கள் என்பதை வெளிப்படுத்திக்கொள்கிறேன்.டெரர் கும்மி பதிவில் உங்களுக்கும் பெயரிலிக்குமிடையேயான எதிர் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் நான் இந்த பதிவு போட வேண்டிய அவசியமே இருக்காது.பெயரிலி தனது விளாசலை துவங்க ஆரம்பித்த பின் உங்களது இன்ஸ்டாண்ட் பின்னூட்டங்களிலிருந்து விலகிக் கொண்ட உங்களின் அப்போதைய மனநிலை நீங்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருக்கும்.உங்களுக்கான தளத்தின் கருத்து வெளிப்பாடுகளை இன்னொருவர் ஹைஜாக் செய்து குழு சேர்த்து திசை மாற்றம் செய்வதில் மட்டுமே எனது எதிர்ப்பை பதிவினூடாக தெரிவிக்கிறேன்.நீங்கள்,மனோ,ரமேஷ் இன்னும் பல பதிவுலகம் மூலமாக பெயர்கள் அறிமுகமான நண்பர்களின் வெளிநடப்பு வருத்த்தை தருகிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ராஜநடராஜன், பதிவிட்டே அன்றே வந்த கருத்துரைகளுக்கு பதில் அளித்திருந்தேன். (அப்போது பெயரிலியின் முதல் பின்னூட்டம் வந்திருந்தது, அச்சமயத்தில் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது, On behalf of tamizmanam என்று போட்டிருந்தாலும் profile பார்க்க முடியாததால் பதிலளிக்கவில்லை).

மறுநாள் அலுவலத்தில் தவிர்க்க முடியாத அவசர வேலைகள் வந்துவிட்டன. முடிந்து வந்து பார்த்தால் கருத்துரை மழை ஓய்ந்திருந்தது. இருப்பினும் பதிலளிக்கும் தார்மீக உரிமை எனக்கு இருக்கிறது என்று நான் அப்போதும் ஒருபதில் அளித்தேன்.

பின்னர் வெளங்காதவனின் வலைப்பூவில் மீண்டும் பெயரிலி வந்து அதே கேள்விகளை எழுப்பியதும், மறுபடியும் ஒரு நீண்ட பதில் அளித்தேன். ( http://velangaathavan.blogspot.com/2011/10/blog-post_15.html ).
ஆனால் பிரச்சனை அதுபற்றியல்ல. பெயரிலி அவர்கள் கருத்துரை அளித்த விதமே காயப்படுத்துவதாக இருந்தது. புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்,

தமிழ்மணத்திற்கு எதிராக பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் தேடித் தேடி மெயில் அனுப்பிய தமிழ்மணம், எங்களுடைய அப்பதிவினை ஆட்சேபித்து ஒரே ஒரு மெயில் அனுப்பி இருந்திருந்தால் இத்தனை பிரச்சனையும் வந்திருக்காது.

ராஜ நடராஜன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றி ராஜநடராஜன், பதிவிட்டே அன்றே வந்த கருத்துரைகளுக்கு பதில் அளித்திருந்தேன். (அப்போது பெயரிலியின் முதல் பின்னூட்டம் வந்திருந்தது, அச்சமயத்தில் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது, On behalf of tamizmanam என்று போட்டிருந்தாலும் profile பார்க்க முடியாததால் பதிலளிக்கவில்லை). //உங்கள் விளக்கம் தோரணை மிருதுவாக இருக்கிறது.இதனை நீங்கள் முன்னெடுக்காமல் போனதோ அல்லது பெயரிலி துவக்க்த்தில் பிரச்சினையை சரியாகத் தொட்டு பின் தொடர்ந்த பின்னூட்ட கோபங்களே பிரச்சினைக்கான மையப்புள்ளி என நினைக்கிறேன்.கூடவே பெயரிலி அவர்கள் கருத்துரை அளித்த விதமே காயப்படுத்துவதாக இருந்தது என்பது பதிவர்களின் மொத்தப் பின்னூட்டங்களிலிருந்து உணர முடிகிறது.நீங்கள் கூறுவது போல் முன்பு அப்பதிவினை ஆட்சேபித்து ஒரே ஒரு மெயில் அனுப்பி இருந்திருந்தால் இத்தனை பிரச்சனையும் வந்திருக்காது என்கின்ற நிலை இன்னும் கூட காலம் தாழ்ந்து விடவில்லை.பரஸ்பர தனி மெயில் கருத்துப் பரிமாற்றங்களை நீங்களோ தமிழ்மண குழுவோ செய்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?

வவ்வால் said...

ராஜ்,,
நீண்ட நெடிய வணக்கம்...ஹி.ஹி... ரொம்ப நாள் ஆச்சுள்ள. இப்ப தான் உங்க பிரபல பதிவுகளை ஒவ்வொண்ணா வாசிச்சுக்கிட்டு வரேன். இந்தப் பதிவும் பார்த்தேன், நடுநிலையோட சீர்தூக்கிப்பார்த்திருக்கிங்க,

//உங்கள் விளக்கம் தோரணை மிருதுவாக இருக்கிறது.இதனை நீங்கள் முன்னெடுக்காமல் போனதோ அல்லது பெயரிலி துவக்க்த்தில் பிரச்சினையை சரியாகத் தொட்டு பின் தொடர்Ī4;்த பின்னூட்ட கோபங்களே பிரச்சினைக்கான மையப்புள்ளி என நினைக்கிறேன்//

there you are... hitting the nail on its head! இதுவே தான் நானும் நினைத்தேன் ஒரு சிலப்பின்னூட்டங்கள் போட்டு இப்போ தான் ரி என்ரி ஆகிறேன் நிறைய வாசிக்கவில்லை அதனால் ரொம்ப பேசி வம்ப இலவசமா வாங்க வேண்டாம் என்று பராக்கு மட்டுமே பார்க்கிறேன்!

எனக்கு என்னமோ முன் விரோதம்... முன் விரோதம்னு சொல்வாங்களே அது ரொம்ப நாளா இருந்து இருக்குமோனு தோன்றது, இல்லைனே இப்படி ஆள் ஆளுக்கு கச்சைக் கட்டி ஆடி இச்சை தீர்ப்பர்களா?

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் அண்ணே! பிரச்சனை எதுவாக இருந்தாலும், தமிழ்மணத்தை விட்டுட்டு, வெளியே சென்று, தமிழ்மணம் இல்லாவிட்டால் என்ன....? என்ற ரீதியில் கருத்துக்கள் சொன்னவர்களை நான் இப்போதும் கண்டிகிறேன்!

மிக அழகாக பேசித்தீர்த்திருக்ககூடிய விஷயம் அது! அப்படி ஒரு பேச்சுக்கு அனைவரையும் அழைத்தேன்!

பலர் என்னை சந்தேக கண்கொண்டு பார்த்தார்கள்! தமிழ்மணத்தின் ஆள் என்று குத்திக் காட்டினார்கள்! குடைந்து குடைந்து கேள்வி கேட்டார்கள்!

“ மச்சி உன்னை நம்பலாமா?” என்ற மூன்று வார்த்தையைக் கேட்டுவிடு, என்னை தமிழ்மணத்தோடு பேச அனுமதித்திருக்கலாம்!

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்! அதை நான் நம்பினேன்!

இதெல்லாம் சுமுகமாக நடந்துகொண்டிருக்கும் போது, சிலர் வேண்டுமென்றே, “ சிங்கள எச்சில் பொறுக்கி” என்று என்னை வர்ணித்தார்கள்!

நான் எவ்வளவோ, எடுத்துச் சொல்லியும், “ நீ முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாய்? பக்கச் சார்பாக கதைக்கிறாய்” என்று பலரும் சந்தேகப்பட்டார்கள்!

இதற்குள் சம்மந்தமே இல்லாமல், பலர் தமிழ்மணத்தைவிட்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்! வேறு பலரை ஓடும்படி, சிலர் மெயில் மெயிலாக அனுப்பிக்கொண்டிருந்தார்கள்!

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்தது! அதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தேன்!

தமிழ்மணத்தைவிட்டு விலகி ஓடுவதன் மூலம் மட்டுமே, ஒரு பதிவரின் சுயமரியாதை நிலைநாட்டப்படும் என்பது மிகவும் புதினமானதும் புதிரானதுமான பின்நவீனத்துவ கோட்பாடாக இருக்கிறது!

முக்கியமாக தமிழ்மணத்தைப் பார்த்து நாக்கைப் புடுங்குறமாதிரி நாலுகேள்வி கேட்குற துணிச்சலும், ஆற்றலும், சொல்வன்மையும், நுண்மான் நுழைபுலமும் எந்தப் பதிவர்களிடமும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

நன்றி!

Amudhavan said...

வாருங்கள், உங்கள் மாதிரி நடுநிலையாளர்கள் இன்னமும் ஏன் வரவில்லை என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தமிழ்மணம் பிரச்சினையில் விவாதக்களங்களில் கலந்துகொண்டவர்கள் அத்தனைப்பேருமே ஒரு பக்கச்சார்பாகவே இருந்தனர். யாருக்குமே பிரச்சினை இரண்டு பக்கமும் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற முனைப்பு இருந்ததாகவே தெரியவில்லை. தமிழ்மணம் போன்ற எல்லோருக்கும் பொதுவான முன்னணியிலிருக்கும் ஒரு திரட்டியை அதன் நிர்வாகிகளிலொருவர் கொஞ்சம் அத்துமீறி வார்த்தை வீசிவிட்டார் என்பதற்காக முடக்கவேண்டும், புறக்கணிக்க வேண்டும், எல்லாரும் சேர்ந்துகொண்டு ஒன்றுமில்லாமல் செய்யவேண்டும் என்றெல்லாம் எதற்காக இத்தனை அமளிதுமளிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதும் விளங்கவில்லை. இவர்களைப்போன்ற ஒரு சில பதிவர்களால் அதனை சாத்தியப்படுத்த முடியுமா என்பதும் விளங்கவில்லை. நேரம் கிடைத்தால் நானும் இதுபற்றி விளக்கமாக ஒரு பதிவு எழுதலாமென்றிருக்கிறேன்.

சுந்தரவடிவேல் said...

பெயரிலியைப் பற்றியும், தமிழ்மணத்தைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வார்த்தைகளைக் கொட்டுபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை :(
இது எனது தனியே, தன்னந்தனியே தனிப்பட்ட கருத்து :)

சுந்தரவடிவேல் said...

அமைதியான பதிவுக்கு நன்றி!
பெயரிலியைப் பற்றியும், தமிழ்மணத்தைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வார்த்தைகளைக் கொட்டுபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை :(
நம்மில் பொறுமையும் ஒற்றுமையும் ஏற்றம் தரும்!


இது எனது தனியே, தன்னந்தனியே தனிப்பட்ட கருத்து :)

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி.
நலமா?

அடியேனும் இங்கே உள்ளேன்.

நடு நிலமையான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

ஹேமா said...

நடா...நான் நல்ல சுகம்.நீங்களும்தானே !

தமிழ் வார்த்தைகளில் சில எதார்த்தங்கள்கூட கஸ்டங்களக் கொண்டுவந்துவிடும்.கவனமப்பு !

ராஜ நடராஜன் said...

//வவ்வால் said...
ராஜ்,,
நீண்ட நெடிய வணக்கம்...ஹி.ஹி... ரொம்ப நாள் ஆச்சுள்ள. இப்ப தான் உங்க பிரபல பதிவுகளை ஒவ்வொண்ணா வாசிச்சுக்கிட்டு வரேன். இந்தப் பதிவும் பார்த்தேன், நடுநிலையோட சீர்தூக்கிப்பார்த்திருக்கிங்க,//
வாவ்...வவ்வால் என ஒரு முறை மனதில் கத்திக்கொள்கிறேன்:)பாரா நட்பும் கூட வருடங்கள் கழித்தும் மன மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும்.அந்த உற்சாகத்தை உங்கள் பின்னூட்டம் தருகிறது.நீங்கள் திரும்ப வந்ததை எப்படி தவறவிட்டேன்?உங்களை மாதிரி விஞ்ஞானம் சார்ந்த பதிவர் சார்வாகன் சமீபத்தில் தொத்திக்கொண்டுள்ளார்.இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்ய பதிவர்கள் ரசிக்க தாரை தப்பட்டை துவங்கட்டும்.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நான் பின்னூட்ட மறுமொழிக்குள்ளே போகவில்லை:)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!மகிழ்ச்சியை பதிவர் சார்வாகன் பகிர்ந்து கொண்ட பீத்தோவன் இசையிலிருந்து துவங்கலாம்:)

http://aatralarasau.blogspot.com/2011/10/blog-post_17.html

ராஜ நடராஜன் said...

//Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் அண்ணே! பிரச்சனை எதுவாக இருந்தாலும், தமிழ்மணத்தை விட்டுட்டு, வெளியே சென்று, தமிழ்மணம் இல்லாவிட்டால் என்ன....? என்ற ரீதியில் கருத்துக்கள் சொன்னவர்களை நான் இப்போதும் கண்டிகிறேன்!//

நீங்க எப்படி வரிசையிலிருந்து உள்ளே நுழைஞ்சீங்க:)ஒரு பத்து,இருபது நாட்கள் கடையப் பூட்டிட்டா வேற மேக்கப் போட்டுகிட்டு வந்திடுவீங்களா என்ன?உங்க புரைபைல் படங்களை யதேச்சையா முன்னாடி பார்த்த போது யாரோ பேட்டைக்கு புதுசு போலன்னு நினைத்தேன்.கடைசில பார்த்தா நம்ம மாத்தி யோசி போல இருக்குதே!நீங்களேதானா அது அல்லது புலம்பெயர் தொலைக்காட்சிகளில் உங்களை மாதிரியே குடையெல்லாம் வச்சிகிட்டு டமால்ன்னு ஒரு வெங்கலத் தட்டுல ஒரு தட்டு தட்டி காமெடி செய்வாரே...அதுவா நீங்கள்:)

சரி விசயத்துக்கு வருவோம்!என்னது!நீங்க நாட்டாமை செய்ய முயற்சி செய்தீர்களா?விசயம் இன்னும் வேறு பரிமாணங்களைத் தொடும் போல இருக்குதே!உங்களது சமீபத்து பதிவ்களையும்,பின்னூட்டங்களையும் படித்து விட்டு கருத்து சொல்வதே சிறப்பாக இருக்கும்.மறுபடியும் இங்கேயே அல்லது உங்கள் தளத்திலோ கருத்து சொல்கிறேன்.நன்றி

ராஜ நடராஜன் said...

// வணக்கம் அண்ணே! பிரச்சனை எதுவாக இருந்தாலும், தமிழ்மணத்தை விட்டுட்டு, வெளியே சென்று, தமிழ்மணம் இல்லாவிட்டால் என்ன....? என்ற ரீதியில் கருத்துக்கள் சொன்னவர்களை நான் இப்போதும் கண்டிகிறேன்!

மிக அழகாக பேசித்தீர்த்திருக்ககூடிய விஷயம் அது! அப்படி ஒரு பேச்சுக்கு அனைவரையும் அழைத்தேன்!

பலர் என்னை சந்தேக கண்கொண்டு பார்த்தார்கள்! தமிழ்மணத்தின் ஆள் என்று குத்திக் காட்டினார்கள்! குடைந்து குடைந்து கேள்வி கேட்டார்கள்!

“ மச்சி உன்னை நம்பலாமா?” என்ற மூன்று வார்த்தையைக் கேட்டுவிடு, என்னை தமிழ்மணத்தோடு பேச அனுமதித்திருக்கலாம்!

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்! அதை நான் நம்பினேன்!

இதெல்லாம் சுமுகமாக நடந்துகொண்டிருக்கும் போது, சிலர் வேண்டுமென்றே, “ சிங்கள எச்சில் பொறுக்கி” என்று என்னை வர்ணித்தார்கள்!

நான் எவ்வளவோ, எடுத்துச் சொல்லியும், “ நீ முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாய்? பக்கச் சார்பாக கதைக்கிறாய்” என்று பலரும் சந்தேகப்பட்டார்கள்!

இதற்குள் சம்மந்தமே இல்லாமல், பலர் தமிழ்மணத்தைவிட்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்! வேறு பலரை ஓடும்படி, சிலர் மெயில் மெயிலாக அனுப்பிக்கொண்டிருந்தார்கள்!

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்தது! அதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தேன்!

தமிழ்மணத்தைவிட்டு விலகி ஓடுவதன் மூலம் மட்டுமே, ஒரு பதிவரின் சுயமரியாதை நிலைநாட்டப்படும் என்பது மிகவும் புதினமானதும் புதிரானதுமான பின்நவீனத்துவ கோட்பாடாக இருக்கிறது!

முக்கியமாக தமிழ்மணத்தைப் பார்த்து நாக்கைப் புடுங்குறமாதிரி நாலுகேள்வி கேட்குற துணிச்சலும், ஆற்றலும், சொல்வன்மையும், நுண்மான் நுழைபுலமும் எந்தப் பதிவர்களிடமும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

நன்றி!

October 18, 2011 5:16 PM
Delete
Blogger Amudhavan said...

வாருங்கள், உங்கள் மாதிரி நடுநிலையாளர்கள் இன்னமும் ஏன் வரவில்லை என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தமிழ்மணம் பிரச்சினையில் விவாதக்களங்களில் கலந்துகொண்டவர்கள் அத்தனைப்பேருமே ஒரு பக்கச்சார்பாகவே இருந்தனர். யாருக்குமே பிரச்சினை இரண்டு பக்கமும் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற முனைப்பு இருந்ததாகவே தெரியவில்லை. //

அமுதவன் சார்!நலமாக இருக்கிறீர்களா?தமிழ்மணம் சார்ந்து மோதல்களை வளர்ப்பது பதிவுலகம் சார்ந்த அத்தனை பேருக்குமே இழப்பாகவும்,துயரமாகவும் முடியும்.ஆங்கில தளங்களிலும் கூட பின்னூட்ட சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள்.உதாரணமாக மைக்ரோசாப்ட் மென்பொருட்கள் சரியாக இயங்குவதில்லையென்பது மாதிரி கருத்துக்கள் முன்வைக்கிறார்கள்.அல்லது தங்களது மென்பொருட்களுக்கு,வன்பொருட்களுக்கோ உதவி கேட்பது போன்ற வகையிலேயே ஃபாரம்களின் தங்களை அதிகார பூர்வமாக இணைத்துக்கொண்டு கருத்துக்கள் வெளியிடுகிறார்கள்.தமிழ்மணம் போன்ற பன்முக பிரிவு பதிவர்களின் படைப்புக்களில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ்மணத்தை வலுப்படுத்துவதே தமிழர்களுக்கு நல்லதாக இருக்க முடியும்.மேலும் இதுகுறித்து என்ன சொல்ல!பதிவர்கள் கோபம் தணிந்தால் மகிழ்வேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//Blogger சுந்தரவடிவேல் said...

பெயரிலியைப் பற்றியும், தமிழ்மணத்தைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வார்த்தைகளைக் கொட்டுபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை :(
இது எனது தனியே, தன்னந்தனியே தனிப்பட்ட கருத்து :)//

இந்தப் பிரச்சினையை அடுத்தே பெயரிலியின் தளத்திற்கு சென்றேன்.வித்தியாசமான சிந்தனை தளம்.ஒரே பூவின் படம் போட்டு யோசிக்க வைத்த ரசனைப் பிடித்திருந்தது. jobs well done என்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அஞ்சலி பிடித்திருந்தது.இப்படியான ரசனையுடன்,நிர்வாகப் பொறுப்பில் இருந்து கொண்டு அவரது வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்வதில் பலருக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கிறதென்பதை பலரது கருத்துக்களும் உணர்த்துகின்றன.அதே சமயத்தில் அவரது வார்த்தை வெளிப்பாடுகள் குறித்து அவரது தளத்திலிருந்து உள்வாங்கிக் கொண்டு மேலும் முன்செல்வது மட்டுமே அனைவருக்கும் நல்லது.

ராஜ நடராஜன் said...

// அமைதியான பதிவுக்கு நன்றி!
பெயரிலியைப் பற்றியும், தமிழ்மணத்தைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வார்த்தைகளைக் கொட்டுபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை :(
நம்மில் பொறுமையும் ஒற்றுமையும் ஏற்றம் தரும்!


இது எனது தனியே, தன்னந்தனியே தனிப்பட்ட கருத்து :)

October 18, 2011 6:50 PM
Delete
Blogger நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி.
நலமா?

அடியேனும் இங்கே உள்ளேன்.

நடு நிலமையான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.//

சகோ நீரூ!நலமா!கிடைத்த கொஞ்ச நேரத்தில் மாமா பதிவ கவிதை மட்டுமே கண்ணைக் கவர்ந்தது.தொடர்ந்து முழுப் பதிவுகளை அவ்வப்போது படிக்க முடியவில்லை.இருந்தாலும் ஒரேயடியா படிச்சிட்டாப் போகுது:)

இங்கே சொன்னது பதிவே அல்ல!சில பதிவர்களின் தவறான கருத்து வெளிப்பாட்டுக்கு எதிரான எனது கருத்து சுதந்திரம் மட்டுமே!இதனையெல்லாம் கடந்து போவோம்.தமிழ்மணத்தை ஆதரிப்போம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//Blogger ஹேமா said...

நடா...நான் நல்ல சுகம்.நீங்களும்தானே !

தமிழ் வார்த்தைகளில் சில எதார்த்தங்கள்கூட கஸ்டங்களக் கொண்டுவந்துவிடும்.கவனமப்பு//

ஹேமா!கவிதைகள் மீண்டும் மலரட்டும்:)

நீங்கள் குறிப்பிடும் வார்த்தைப் பிரயோகம் பற்றி உணர்ந்தே இருக்கிறேன்.உங்கள் கவன ஈர்ப்புக்கு நன்றி ஹேமா.

ராஜ நடராஜன் said...

@சுந்தரவடிவேலுக்கு மீண்டும் ஒரு பின்னூட்டம்...

உங்கள் குழந்தைகள் பாட்டுக்குறித்து முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட மறந்து விட்டேன்.பகிர்வுக்கு நன்றி.

புதிய பரிதி said...

//,மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்// நூறு சதம் உண்மை..

Robin said...

//மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்// அது மொக்கைகளைப் படிப்பதற்காக கூடும் கூட்டம் அல்ல.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

ராஜ நடராஜன் said...

//புதிய பரிதி said...

//,மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்// நூறு சதம் உண்மை..//

நீங்கள் புதிய பரிதியா!புது பாரதியா!முதல் அறிமுகமாக இருக்கிறதே என பரிதிமழையில் சாமியும்,பூச்சாண்டியும் நனைந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.நான் கடந்து வந்த கனவுகள் மாதிரியான நினைவுகளைத் தந்தது:)நல்ல நடை எழுத்து.இன்னும் எழுத்தில் வளருவீர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//Robin said...

//மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்// அது மொக்கைகளைப் படிப்பதற்காக கூடும் கூட்டம் அல்ல.//

ராபின்!நிறைய பின்னூட்டம் மட்டும் பதிவர்களுக்குப் போடுகிறீர்கள்.கருத்துக்களையும் உங்கள் தளத்தில் அவ்வப்போது முன் வைக்கலாமே!

மொக்கைகளைப் படிப்பதற்காக கூடும் கூட்டம் அல்ல என்ற விடுகதையின் விடை எனக்கு தெரியவில்லை:)

ராஜ நடராஜன் said...

//அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html//

அருள்!நலமாக் இருக்கிறீர்களா? தொடுப்புக்கு நன்றி.

Dr. Butti Paul said...

பிரச்சினை என்ன என்பதை தாண்டி அது பலவகையிலும் திரிக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. அது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எழுத்துச்சுதந்திரம் என்பது மிக வலியதான ஒரு விடயம், அதை துஷ்பிரயோகம் பண்ணவோ, அடைமானம் வைக்கவோ மனசு இடம் கொடுக்கவில்லை.

Robin said...

//ராபின்!நிறைய பின்னூட்டம் மட்டும் பதிவர்களுக்குப் போடுகிறீர்கள்.கருத்துக்களையும் உங்கள் தளத்தில் அவ்வப்போது முன் வைக்கலாமே!//
கண்டிப்பாக விரைவில்.... :)
நன்றி!

//மொக்கைகளைப் படிப்பதற்காக கூடும் கூட்டம் அல்ல என்ற விடுகதையின் விடை எனக்கு தெரியவில்லை:)// சொல்கிறேன். மொக்கைப் பதிவுகளில் பெரும்பாலும் உருப்படியான விஷயம் எதுவும் இருக்காது. கடி ஜோக்குகள், உப்பு சப்பில்லாத உளறல்கள், டபுள் மீனிங் வசனங்கள், .. இந்த மாதிரிதான் இருக்கும். ஆனால் தலைப்புக்கள் கவர்ச்சியாக இருக்கும். உண்மையில் இந்த பதிவுகள் எல்லாம் எதையாவது கிறுக்கி வைத்து நண்பர்களை வரவழைப்போம் என்ற நோக்கத்திலேயே இருக்கும். இதில் முதல் பின்னூட்டமே "அய்! நான் தான் பர்ஸ்ட" என்று சிறு பிள்ளைத்தனமாக ஆரம்பித்து அவர்களுக்குள் மாறி மாறி ஏதோ பேசிக் கொள்வார்கள். அவர்களுக்குள் மாறி மாறி ஓட்டு போட்டுக் கொள்வார்கள். இதனால் குப்பைப் பதிவுகள்கூட மகுடம் ஏறிவிடும். இந்த கெட்ட பழக்கம் முன்பே உண்டு என்றாலும் தற்போது அளவுக்கதிகமாக போய் தமிழ்மணத்தை முழுக்க முழுக்க ஆக்கிரம்பிக்கும் அளவு போய் விட்டது. இதைக் கண்டு முகம் சுளித்த சிலர் ஒதுங்கி விட்டனர், சில வயதில் மூத்த பதிவர்கள் நாசூக்காக சொல்லி பார்த்தனர். ஆனால் அவர்களையும் இந்தக் கூட்டம் எள்ளி நகையாடியது. இவர்களின் இந்தப் போக்கு பிடிக்காமல் சில நல்ல பதிவர்கள் தற்போது தமிழ்மணம் பக்கம் வருவதேயில்லை.

பொழுது போக்கு பதிவுகள் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். ஒரு திரட்டியே தாங்களே ஆக்கிரமிக்கவேண்டும் என்ற வேகத்தில் கும்பலாக செயல்படுவதும் நல்லதல்ல. இப்போது தங்களை பெயரிலி என்பவர் அநாகரீகமாக பேசிவிட்டதாக குமுறும் இக்கூட்டம் சில பதிவர்களை அசிங்கமாக பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் கூட்டத்தில் இருப்பவர்களிலும் நல்ல பதிவுகள் எழுதத் தெரிந்தவர்கள் உண்டு, ஆனாலும் காலப் போக்கில் கூட்டத்தோடு சேர்ந்து இவர்களும் மாறிவிட்டனர்.

அம்பலத்தார் said...

வணக்கம். நடுநிலையான பதிவும் பின்னூட்டங்களிற்கு இட்ட உங்கள் பின்னூட்டங்களும் உங்கள் பார்வையின் விசாலத்தை உணர்த்துகிறது. இந்த மோதலில் ஈடுபட்ட இருபகுதியினருமே சற்று நிதானம் இழந்துவிட்டார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

ஜோதிஜி திருப்பூர் said...

பகிர்தலும் நன்றே!
இந்த நீண்ட உரையாடல்களை பொறுமையாக வாசித்தலும் நன்றே.