Followers

Saturday, September 29, 2007

போட்டா போட்டி



இயற்கையின் சக்திக்கும் மனித சக்திக்கும் நடக்கும் போட்டா போட்டி.மாலை சூரியன் விளக்கணைக்கும் நேரம்.மனித திறனின் புகை கக்கலால் வானமும் காற்றும் மாசுப் படத்தான் செய்கிறது.ஆனால் இந்த புகை மூட்டமில்லாமல் ஒரு தேசத்திற்கு தற்காலிக வெளிச்சமில்லை அடுத்த நாள் சூரிய உதயம் வரை.இங்கு ஒளியும் வேண்டும்.காற்றும் மாசு படக்கூடாது.இதன் விடை தெரியும் வரை இந்த போட்டா போட்டி தொடரும்.

Sunday, September 2, 2007

எழுத்து என்ற ஆயுதம்

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே ! அட! நமக்கும் கூட தமிழ்ப் பட பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறதே.எல்லோரும் அசத்திக் கொண்டும் கூடவே அடித்துக் கொண்டும் வலை பதியும் போது எத்தனை அருமையான தகவல் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதனை நினைக்கும் போது மனம் வேதனைப் படுகிறது.நான் நடுவிலே பதிவுலக்கு வந்தவன் என்பதால் மூல காரிய தேடுதல் தெரியவில்லை.தற்போது இது மட்டுமே.அன்றாட அலுவல்கள் அழைக்கின்றது.