Followers

Thursday, February 4, 2010

வடிவேலு

திரைக்கும் அப்பால் உள்ள நடிகர்,நடிகைகளுக்கு ஒரு முகம் இருக்கக் கூடும்.திரைப்பட பார்வையாளனாக அதுபற்றி பொதுமக்களுக்கு அக்கறை இல்லை,சினிமா செய்திகள்,கிசு கிசுக்கள் என்ற பொது வைப்பு தவிர.பொதுப் பார்வையில் ஏதாவது வில்லங்கத்தில் மாட்டாத வரையில் எதுவும் யாருக்கும் தெரியப் போவதில்லை.குற்றங்களின் மூல காரணங்களை தேடினோமென்றால் மது,மாது,பணம்,அரசியல் என்று பெரும்பாலானவை சுருங்கி விடும்.அதே போல் மனிதனின் கோபங்களின் வெளிப்பாடுகளின் காரணங்களாகக் கூட இவை அமைந்து விடுகிறது.அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் வாய் வார்த்தைகளில் ஏதோ ஒரு புள்ளியில் விவகாரம் விசுவரூபமெடுத்து விடும்.

சொந்த அனுபவமாக நீண்ட நாள் நண்பனுக்கு வியாபார உதவிக்கு பணம் கொடுத்தேன்.பணம் திரும்பி வரவில்லை.அந்த சூழ்நிலையிலும் ஒரு நாள் குழந்தை மாதிரி அழுதுகொண்டு சாம்சங்க் கடைக்காரன் 6 மாதம் கட்டாத தவணைப் பணத்தை கேட்டு 1/2 நாள் மட்டும் அவகாசம் கொடுக்க என் கையிலிருந்த வீட்டு வாடகைப் பணம் உட்பட கொடுத்து சிக்கலில் இருந்து தப்பிக்க விட்டு பின் நான் வீட்டு வாடகை கூட கட்ட இயலாத சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.இப்படியாக துவங்கிய பணவிவகாரம் இன்று வரை இருவரின் நட்புக்கு சுவர் எழுப்பி இனி பணத்தை திருப்பி கேட்பதில்லை என்று விட்டு விட்டேன்.இதுவே இந்திய சூழலாய் இருந்திருந்தால் பிரச்சினை திசை மாறிப் போயிருக்கும்.

இனி வடிவேலு சிங்கமுத்துவின் பக்கம் திரும்பினால் சினிமாவில் நகைச்சுவை லூட்டிக்கும் பின்னால் நட்பு என்ற கோட்டில் இருவரும் பயணித்து இருக்கக் கூடும்.இருவரின் உடல் மொழிகளைப் பார்த்தால் சிங்கமுத்து வில்லனாக இருக்கக்கூடும்.கூடவே வடிவேலு தொழிலில் கொடி கட்டிப்பறப்பது சிங்கமுத்து உட்பட சிலருக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.நகைச்சுவை எவ்வளவு பெரிய வரம். முகபாவங்களால்,சொல்லின் நவரசத்தால் தமிழகத்தையே திரை,தொலைக்காட்சி,இணையத்தின் முன்னால் கட்டிப் போடுவதென்பது சாதாரண விசயமல்ல.எல்லோரும்தான் நகைக்க வைக்கிறார்கள் சிங்கமுத்து உட்பட.ஆனால் நகைச்சுவை தனித்துவம் என்பது திறன்,உழைப்பு,மனதை கவருவதில் வருவது.சொந்த வாழ்க்கை சிக்கலில்லாமல் இருந்தால்தான் நகைச்சுவையின் பரிணாமங்களை இன்னும் இன்னும் வடிவேலு வெளிப்படுத்த இயலும்.அந்த விதத்தில் அவர் சிக்கல்களில் விடுபட்டு நமது முகங்களை மலர வைக்க வாழ்த்துவோம்.

7 comments:

சின்னப் பையன் said...

ஆரம்பிக்கறதுக்குள்ளே முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு...

//சொந்த வாழ்க்கை சிக்கலில்லாமல் இருந்தால்தான் நகைச்சுவையின் பரிணாமங்களை //

இது 100% சரி. வீட்டுலே/ஆபீஸ்லே பிரச்சின்னா, நகைச்சுவையா ஒரு வரிகூட யோசிக்க முடியல.. :-((

vasu balaji said...

பாவமா இருக்கு சார். அவரை ஏமாற்றியது பணத்தை மட்டுமல்ல ஒரு நல்ல வெகுளியான மனத்தை, நட்பை, உழைப்பை. அதையும் கடந்து வருவார்.

நசரேயன் said...

// விதத்தில் அவர் சிக்கல்களில் விடுபட்டு நமது முகங்களை மலர வைக்க வாழ்த்துவோம். //

வாழ்த்துவோம்

goma said...

அவர் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு படிப்பினையாகியிருக்கிறது.

goma said...

ரஜினி படையப்பாவில் சொல்வார்...
பகைவனைக் கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகியை மன்னிக்க முடியாது ...
அவர் பன்ச் எல்லாமே பாடம்தான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்...
நடக்கப்போவது நல்லவையாக இருக்கட்டும்....

சுரேகா.. said...

தெளிவா..நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!

இதுதான் பதிவு! :)