Followers

Thursday, February 18, 2010

வானம்பாடிக்கு எதிர் நாவல்

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல தாவிற்றாம்" பாட்டு ஸ்வரம் எழுப்பி வானம்பாடிகள் இடுகையில் அயன்ராண்ட் பற்றி சொன்ன போது உள்ளே தூங்கிகிட்டு இருந்த ஷிட்னி ஷெல்டனுக்கு வான்கோழி கொக்கரக்கோ சொல்லிடுச்சு.

நசரேயன் குடுகுடுப்பையாருக்கு எதிர் கவுஜயெல்லாம் போடும் போது எதிர் நாவல் போட்டா இன்னா தப்பு:)

எனவே நமக்கெல்லாம் எதுக்கு அயன்ராண்ட்,ரோர்க்கு மாதிரியெல்லாம் ஆகவேண்டும் என்ற கெட்ட(!) எண்ணமெல்லாம்.ரோர்க் மாதிரி நம் கண் முன்னால இருந்தவனை விமர்சிக்க மட்டுமே நம்மால் இயலும்.

ஓசுல கிடைக்கிறது இல்லைன்னா அண்ணாசாலையில கூறுகட்டி விற்கிறத வாங்குறதுதான் நம்ம பொழப்பு.ஹிக்கின் பாதம்ஸ்,ஸ்பென்சர் எல்லாம் பெரிய பெரிய படிப்பாளிக,டாவு சமாச்சாரங்க.நமக்கு தூரத்து காதல் பார்வை(சைட்) தவிர அது சரிப்பட்டு வருவதில்லை.எனவே ஓசு ரசிப்போ இல்ல ரோட்டுல மேஞ்ச பின் மல்லாந்து படிக்க ஆரம்பித்ததோ The other side of midnight.
நாவல்,திரைப்படம்,தொலைக்காட்சி மெகா,நம்மூர் சினிமா காபின்னு சக்கை போடு போடும் கதை.

முழுக் கதை வேணூமா கதைச் சுருக்கம் வேணுமா?

முழுக்கதை வேண்டுமென்றாலும் கதை படிச்சே எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இங்கே

http://www.ammas.com/uploadedfiles/14690827979669_1467-the-other-side-of-midnight.pdf

சத்யராஜ் ஸ்டைலில் கதை கேட்பவர்களுக்கு மட்டும் சுருக்கம்:

இரண்டு கதாநாயகி,ஒரு கதாநாயகன் கதை.

நேரா ரெண்டு கையும் வச்சுகிட்டு பிலிம் பிடிக்கிற ஸ்டைலில் காமிரா இரண்டாம் உலக யுத்த பிரான்ஸ் நாட்டுக்கு போகுதுங்க சார்.அங்க நோயல் நோயல்னு (ஒரே நோயல்)ஒரு பிரான்சு பொண்ணுங்க.அப்படியே காமிராவ இந்தப் பக்கம் திருப்பினா லாரி டக்ளஸ்ன்னு ஒரு விமான பைலட்.ரெண்டு பேருக்கும் லவ்வாயிடுச்சு.அப்படியே பிரான்ஸ்ல ஒரு காதல் டூயட் பாடி அதுக்குள்ளேயே கசாமுசாவெல்லாம் ஆயிடுது.லாரி லோடு செய்துட்டு வந்து கல்யாணம் செய்துக்கிறேன்னுட்டு அமெரிக்கா போயிடறான்.போனவன் போனவன்தான் ஆள் அம்பேல்.இதனால் கோபமடைந்த நோயல் எப்படியாவது பணமும் புகழும் பெறவேண்டுமென்று நடிகையாகி விடுகிறாள்.சினிமாவில் புகழடைந்த பின் கான்ஸ்டாண்டின் டெமரிஸ் என்ற கிரேக்கப் பணக்காரனை கல்யாணம் செய்து கொள்கிறாள்.

காமிராவை ஒரு லாங்க் ஷாட்ல சிகாகோவுக்கு திருப்பறோம்.இங்கே காதரின் அலெக்ஸாண்டர்ன்னு ஒரு பெண்ணை லாரி டக்ளஸ் திருமணம் செய்து கொள்கிறான்.

இப்ப கதைல ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.

நோயல்,லாரி டக்ளஸ் சந்தர்ப்பவசத்தால் மீண்டும் சந்திக்கிறாங்க.எனவே லாரி டக்ளசை தனது விமான ஓட்டியாக நியமிக்கிறாள்.நோயலின் புதிய பணம்,நடிகை அந்தஸ்து போன்றவற்றை அறிந்த பின் பழைய நினைப்பு மீண்டும் மலர்கிறது.லாரி டக்ளஸ் காத்ரீனை விவாகரத்து செய்து விட்டு நோயலை மணம் முடிக்க விரும்புகிறான்.ஆனால் காத்ரீன் விவாகரத்துக்கு மறுப்பதால் நோயலும்,லாரியும் காத்ரீனை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.

கதையில் இன்னும் பல திருப்பங்கள்...கிளைமாக்ஸ் சொல்லிட்டா கதை போணியாகாது என்பதால் இத்துடன் கதை சொல்லி முடிக்கிறேன்.

3 comments:

vasu balaji said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையல:)). எமர்ஜன்ஸி டைம்ல படம் தடை. அபார்ஷன் சீனுக்காக. அப்புறம் அதை வெட்டி படம் காட்டி முதல்ல சரியா ஓடலை. ரி எண்ட்ரீல பிச்சிகிட்டு போச்சி:))

Raghu said...

ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி, அவ‌சிய‌ம் இந்த‌ புக் வாங்க‌றேன்:)

thiyaa said...

ஆஹா