Followers

Friday, March 23, 2012

இலங்கை நிகழ்வுகளின் தொகுப்பும் எதிர்கால தீர்வுகளும்-பகுதி 3

இலங்கையும்,விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழம் கனவையும் இலங்கையில் தமிழர்கள்,சிங்களவர்கள் மற்றும் தமிழகம்,இந்தியா,உலகம் சார்ந்த மொத்த பரிமாணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே விமர்சனத்துக்குட்படுத்தியும்,புரிதலுக்கும்,நினைவுபடுத்தலுக்கும் மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு உலக அரங்கிற்குள் நுழைந்து விட்ட தமிழர், சிங்களவர்களின் தேவையும்,இனி இலங்கை எப்படி முன் நகரலாம் என்பதை பார்க்கலாம்.

இலங்கைப் பிரச்சினையை தமிழர் சம உரிமை மறுப்பு என்ற சிங்கள் பேரினவாதம்,அஹிம்சை போராட்டம், தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனக்கட்டவிழ்ப்பு,ஆயுதப் போராட்டம்,தமிழீழம் என்ற நோக்கம், ஆயுதப்போராட்டத்தின் வன்முறைகள்,இந்தியாவின் இலங்கை தலையீடு தோல்வி,ராஜிவ் காந்தி சிங்கள ராணுவ வீரரின் துப்பாக்கி பின் புற தாக்குதல்இந்திய ராணுவத்தின் மீறல்கள்,கலைஞர் கருணாநிதியின் இந்திய ராணுவத்தை வரவேற்காமை,வை.கோ,நெடுமாறன்,எம்.ஜி.ஆரின் பிரபாகரன் குழுவின் ஆதரவு,விடுதலைப்புலிகளின்  வளர்ச்சியும்,பிரபாகரனின் மொத்த ஆளுமையும்,புலம்பெயர் தமிழர்களின் பங்கீடும்,ஏனைய தமிழ் குழுக்களின் அழிப்பு,ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு தரப்பு தலைவர்கள் படுகொலை,வட கிழக்குப் பகுதியிலிருந்து சிங்கள,முஸ்லீம் தமிழர்கள் விரட்டியடிப்பு,ராஜிவ் காந்தியின் கொலை, கிழக்கில் கருணா,பிள்ளையான் துரோகத்தால் விடுதலைப்புலிகள் இரண்டுபட்டதும், வடக்கு,கிழக்கு என்ற பிரிவினையும்,பல இன்னல்களுக்கும் இடையிலும் சோர்ந்து போகாத விடுதலைப்புலிகளின் தமிழீழ இலக்கை நோக்கிய மன உறுதியும்,நார்வேயின் பேச்சு வார்த்தை தோல்வியை அடைந்தது தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் பேரிழப்பு என்பதோடு இல்லாமல் மனித உரிமைகளில் முதன்மையில் இருக்கும் நார்வேக்கும் களங்கமான ஒன்றாகப் போனது.

ஈழப்போரில் கடல்,வான்,நிலம் என்ற கட்டமைப்போடு இலங்கை அரசின் கட்டமைப்புக்களை தகர்க்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் போராட,இலங்கை அரசு பல நாட்டு உதவியுடன் போரிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் என்ற நோக்கில் குழந்தைகள், பெண்கள்,முதியோர் என பாரபட்ச மற்ற ராணுவ படுகொலைகள்,இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்,ஆயுதப் போராட்டத்தின் மௌனம்,தமிழகத்தில் கருணாநிதியின் சுயநலம்,கட்சிகள் பிரிந்த ஆதரவு,உலக ஊடகவியளாளர்கள் அனுமதி மறுப்பு,இலங்கை ஊடகவியளாளர்கள் படுகொலை,சிஙளவர்களின் போர் வெற்றிக் களிப்பும் அதனைத் தொடர்ந்து பொன்சேகாவுக்கே சிறை தண்டனையும், ராஜபக்சேக்களின் தவறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள், ஐ.நாவின் செயல்படா தன்மை,மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களால் இலங்கை போர் குறித்த மூவர் குழு மற்றும் அறிக்கை,ஐ.நா அறிக்கைக்கு எதிரான இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு என்ற முகப்பூச்சு, 3 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்கான தீர்வினை தராமை,புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்பு,இந்தியா பூகோள மற்றும் ராஜிவ் காந்தி படுகொலை என்ற இரு நிலைகளில் இலங்கை அரசுக்கு உதவியும் இந்தியா சார்ந்தும் சாராத நிலையாக இந்திய நட்பும் கூடவே சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் என்ற கவசங்களை அணிந்து கொண்ட நிலை,போர்க்குற்றம் செய்த உயர் ராணுவ அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சூழ்ச்சியில் தூதரக,ஐ.நா வரை பதவி அமர்த்தல்,நாடு கடந்த தமிழீழ அரசு,உட்பூசல்கள்,வலுவற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு துயரங்கள்,சேனல் 4 ன் பங்கு,ஐ.நாஅமெரிக்காவின் தலையீடு என்ற இப்போதைய நிலை வரை இலங்கைப் பிரச்சினையைப் பார்த்தால் இலங்கையின் ஆட்சி பீடம் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு தனது தேவைக்கேற்ப உலக அரங்கில் வலம் வரலாம் என்பது தவறான ஒன்றாகவே இனியும் அமையும்.

இந்திரா காந்தியின் காலத்திலேயே திரிகோணமலை கனவு நிறைவேறாத அமெரிக்கா விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடத்தில் தென் ஆசிய பூகோள அரசியலில் பங்கு தேடவும்,கூடவே இலங்கை மனித உரிமை மீறலகளால் குரல் கொடுக்க, சோர்ந்து போயிருந்த தமிழர்கள் சிறு நம்பிக்கை வெளிச்சம் வீசுவதை உணரத்தொடங்கையிருக்கிறார்கள். அமெரிக்காவின் இலங்கை சார்ந்த தீர்மானம் என்று வைத்துக்கொண்டாலும் கூட அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின்பே இலஙகைப் பிரச்சினை சூடு பிடித்திருக்கிறது.

தமிழர்களின் தேவை தமிழீழம் என்ற போதிலும் அந்தக் கோட்டை தொடுவதற்கான வலிமையாக பேச்சு வார்த்தை, ஆயுதப் போர் இருந்த போதும் அவை மரணித்து விட்ட தருணத்தில் அமெரிக்கா சார்ந்த தமிழர்களின் நிலையே தமிழர்களுக்கும்,அனைத்தையும் இழந்த அப்பாவி தமிழர்களுக்கு தற்போதைக்கான முதல் தேவையாக மறுவாழ்வுக்கான வழியை உருவாக்கும்.

 இந்த கணத்தில் யாரும் தொடாத உலக அரசியல் நிகழ்வொன்றையும் குறிப்பிடுவது சரியாக இருக்கும். சதாம் ஹுசைன் குவைத் மீது தொடுத்த போர் குற்றத்திற்காக அமெரிக்கா கோபி அனான் காலத்து ஐ.நாவில் தீர்மானம் போட்டு ஈராக் விற்கும் பெட்ரோலின் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குவைத் நாட்டு மக்கள், குவைத்தில் பணி புரிந்த அனைத்து வெளி நாட்டினருக்கும் அவரவர் நாட்டு தூதரகம் மூலமாக இழப்பீடை வாங்கி தந்தது.குவைத்தில் பணிபுரிந்த,தொழில் புரிந்த இந்தியர்கள் எவ்வளவு மில்லியன் ஈட்டுத்தொகை பெற்றார்கள் என்பதை ஐ.நா கணக்கும்,இந்திய வங்கிகளும் சொல்லக்கூடும்.ஈட்டுத்தொகையில் கோவாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலை கட்டிய ஈட்டுத்தொகை வரலாறுகள் கூட உண்டு.

.அதே போல் இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் வீடு,நிலம்,தொழில் உதவி என உலக வங்கிக் கடன் மூலமாகவோ,நட்பு நாடுகளின் உதவிகளோடு இலங்கை இழப்பீடு வழங்குவது அவசியம.இது போர்க்குற்றஙகளுக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மட்டுமே. இதனை அடுத்து வட கிழக்கு தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தனி நாடோ அல்லது ஒன்று பட்ட இலங்கையென்ற நிலையில் அதிகாரப் பகிரவும்,சமநிலை அரசியல் சாசன மாற்றமும் தேவை. அகதிகள்,புலம் பெயர் தமிழர்களை உள் வாங்கிக்கொள்ளும் தன்மையும்,மக்களின் தேவைகளுக்கேற்ப பெடரல் அமைப்போ,கனடா போன்ற இரு ஆட்சிமுறை இலங்கையின் நீண்ட எதிர்கால நலனுக்கு உதவும். தமிழர்கள்,சிங்களவர்களின் புரிந்துணர்வில் இரு நாட்டுக்கொள்கை கூட அவசியமான ஒன்றே.இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கு சரியான பாதையாக அமையும்.தமிழர்களின் போராட்டம்,சிங்கள அரசின் செயல்படும் திறன்,உலக நாடுகளின் சுயதேவைகள் என்ற மூன்று அடிப்படையில் மட்டுமே இனி நிகழ்வுகள் வலம் வரக்கூடும்.

மக்கள் வாழ்வுக்கு தீர்வுகள் காணும் பட்சத்தில் இலங்கைக்கு பூகோள ரீதியாக வெளி அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை.தேவைக்கான பாதுகாப்புக்கு பூகோள ரீதியாக இந்தியாவை சார்ந்து இருப்பது தேவையற்ற பாதுகாப்பு பட்ஜெட் செலவீனங்களை குறைக்க முடியும்.முக்கியமாக இலங்கை,தமிழகம் என்ற நட்பை கொண்டு வரும் ஸ்டேட்ஸ்மேன் அரசியல்வாதி இலங்கைக்கு தேவை.

உலக சந்தை என்ற ரீதியில் சீனாவுடன் பொருளாதார உறவுகள் கொள்வது இலங்கைக்கு தேவையான ஒன்றே.இதனையும் தாண்டி சீனாவுடன் ஆயுத வலுப்படுத்தல் என்ற கோட்பாடு இலங்கைக்கு எதிர்காலத்தில் அழிவையே கொண்டு வரும்.இலங்கையின் இரட்டை நிலையை நிலம்,கடல் கடந்து பாகிஸ்தானிடம் உறவு கொள்வதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.ஒரு புறம் தமிழர்களின் நலன் நோக்காமலும் இன்னொரு புறம் அப்பாவி சிங்களப்பெண்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பும் சிறு தொகையின் மொத்த கூட்டின் ஒரு பகுதியை ஆயுதஙக்ள் வாங்கவும், லாபிகளுக்கு செலவிடுவதும் வளமான இலங்கையை உருவாக்காது.ஒரு புறம் சிங்கள இனவாதம் பேசுபவர்கள் இருந்தாலும்,கல்வியறிவும்,தொழில் சார்ந்த நிபுணர்களும்,இலங்கையின் சமத்துவ எதிர்காலம் குறித்த அக்கறை கொண்ட சிங்கள மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.இவர்களை அடையாளம் காண்பதும் முன்னிலைப்படுத்துவதும் இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்வாழ்வுக்கும் உதவும்.

தற்போதைக்கான முக்கிய தேவையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேர்வதற்கு இலகுவான வழிகள் தேவை.எந்த உதவியும் இலங்கை அரசின் மூலமாக,ராணுவ துணை கொண்டு என்றில்லாமல் சுயாதீனமாக செயல்படும் அமைப்புக்கள்,தமிழகத்தின் உதவி போன்றவை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இலஙகை எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கையின் செயல்பாடுகள் பற்றிய திறனாய்வு ஐ.நாவில் மீண்டும் ஒரு முறை திறனாய்வு செய்யப்படும் வரையிலான கால கட்டத்தின் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்போம்.

75 comments:

James Anand said...

சீனாவும்.. ஹிந்தியாவும் அடிபடனும்.. சிங்களவனும் பாகிஸ்தான் முஸ்லீம்களும்.... சீனா பக்கம் சாயனும்.. இந்தியா அடிவாங்கனும்.. அப்புறம்.ஐயோ அம்மான்னு.. ஹிந்தியா.. தமிழங்கட காலில வந்து விழ வேணும்.. நமக்கும் கொஞ்ச இடம் தாங்க.. உங்க பலம் அறியாம தப்பிப் பண்ணிட்டோன்னு.. சிங்கும்.. சோனியாவும் கதறி அழுது மன்னிப்புக் கேட்கனும்..!

அதுக்கு நாங்க.. தமிழீழம் வாங்கித் தாங்க.. மிச்சம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லனும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99725

இது என் கருத்து அல்ல. இலங்கை தமிழர்கள் தமிழ் போரங்களில் எழுதும் கருத்துகள். இது ஒரு சாம்பிள்தான்.

இப்படி பட்ட கேடு கெட்ட ஆட்களுக்கு உங்களை போன்றவர்கள் வக்காலத்து.

ராஜ நடராஜன் said...

ஈழ விடுதலைப்போராட்டத்தில் கம்யூனிஸ தோழர்களின் பங்கையும்,ராமதாஸ்,திருமாவளவன்,சீமான்,மே 17 இயக்கங்களின் பங்கை குறிப்பிட மறந்து விட்டேன்.மன்னிக்கவும்.இனியும் விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் நண்பர்கள் யாராவது குறிப்பிட்டால் நல்லது.

James Anand said...

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இலங்கை பிரச்சனைக்கு காரணமே யாழ்பாண மேலாதிக்க திமிர்தான். கிழுக்கு மற்றும் மலையக தமிழர்களை புறம்தள்ளி அப்பாவி மக்களை கொன்றதே பிரபாகரன் கூட்டதின் வெற்றி.

இந்த உலகில் யாரும் அப்பாவிகள் மேல் அப்படி பல பிரயோகம் செய்து விட முடியாது.

இலங்கை யாழ்பாண தமிழர்கள் தனக்கு நண்மை என்றால் நெருங்கிய நண்பனை கூட பலியிட தயங்க மாட்டார்கள்.

இப்படி யாழ்பாண தமிழர்கள் எழுதுவதை தமிழ் பாரங்கள் எல்லா இடங்களில் பார்க்கலாம்.

தனக்கு ஈழம் வேண்டும் என்றால் இந்தியா அழிய வேண்டும் என்று கூச்சபடாமல் சொல்லும் அறிவிலிகளைதான் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

மேலும் ஒரு சாம்பிள்

”மனித கழிவுகளை அகற்றவே இந்தியாவுக்கு இன்னும் பல பத்தாண்டுகள் எடுக்கலாம்.இந்த லட்சணத்தில் அணுக்கழிவுகளை இவர்கள் அகற்றி விட்டாலும்..... ”

”அடேயப்பா.. உபி, மபி, காபி எல்லாம் கவனமா விடுபட்டிருக்கு..!

ஏன்.. கங்கையிலதான் நிறையத் தண்ணி வருமே.. பக்கத்தில அமைக்கிறதுதானே? ”

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99569

இப்படி தேவை இல்லாமல் இந்தியாவை பேசும் ஆட்கள், இந்தியா மேப்பில் எங்கு மபி உபி இருக்கிறது என அறியாத முட்டாள்கள் இவர்களுக்கா உங்கள் ஆதரவு??

இவர்கள் யாழ்பாணத்தில் கீழ் சாதி என பல பேரை கொடுமை படுத்தி வருகிறார்கள். அகதியாக கனடா போனாலும் ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல பம்மாத்து வேறு

உங்கள் கருத்துகளை மறு பரிசீலனை செய்யும் நேரம் இது.

ராஜ நடராஜன் said...

ஜேம்ஜ் ஆனந்த்!வணக்கம்.நம்ம கடைக்கு புது வரவு மாதிரி தெரிகிறீர்கள்.

உங்கள் பின்னூட்டத்தின் சாரம் நேற்றைய வியன்னா தீர்மானத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் போல தெரிகிறது.நிகழ்வுகளின் தொகுப்பையும்,தீர்வுக்கான வழிகளையும் சொல்லியிருக்கிறேன்.இதனையும் தாண்டி தமிழர்களின் உரிமைக்கு வக்காலத்து என்ற பிம்பம் எனக்கு உடன்பாடே.நன்றி.

ராஜ நடராஜன் said...

ஜேம்ஜ் ஆனந்த்!நேற்று வியன்னா கூட்டம் பற்றி நேரலை கண்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.இருந்தாலும் இணையம் தேடிப்பாருங்கள் உலக அரசியல் எப்படி செயல்படுகிறதென்ற புரிதல் வரும்.யாழ்ப்பாண தமிழன்,ஜப்னா தமிழன் என்ற குறுகிய வட்டங்களில் உலகம் வருவதில்லை.இந்த மனோபாவம் கூட தமிழர்கள் தங்கள் இலக்கை அடையாத காரணங்களில் ஒன்று.பரந்த பார்வை கொள்ளுங்கள்.தமிழர்கள்,சிங்களவர்களின் எதிர்கால நலனுக்கான சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள்.நன்றி.

James Anand said...

தங்கள் அறிவுரைக்கு நன்றி. என் நாட்டை அழிக்க வேண்டும் என் மக்கள் அழிய வேண்டும் என நினைக்கும் கூட்டதிற்க்கு நான் என்றுமே என் தன்மானத்தை விட்டு ஆதரவாக நடக்க மாட்டேன்,

நானும் முத்துகுமார் தீ குளிப்பிற்க்கு பின் ஈழ ஆதரவு என மாய வலைக்குள் சிக்கினேன். பின் இலங்கை தமிழர்கள் பிற நண்பர்கள் தமிழ் பாரங்கள் என பழகும் போது தான் அவர்களின் உண்மை முகம் தெரிந்தது.

James Anand said...

சும்மா நியாத்தை நடப்பை பேசுபவனிடம் அதை பார்த்தாயா இதை படித்தாயா என்று சதாய்க்க வேண்டாம். பாய்ஸ் படத்தில் ஒரு காட்சியில் பஸ் ஸ்டாப்பில் பரத் ஓவராக பீட்டர் உட்டு சீன் போடுவார். ஏதோ எதோ ஆங்கில படங்களை பார்த்தாயா என கேட்பார் அதற்க்கு பதில் கடைசியாக நான் பார்த்த ஆங்கில படம் ஷோலே என வரும்
அப்புறம் பரத் மூக்கு உடைவது போல க்ராபிக்ஸ் காட்சி வரும். தேவைஇல்லாமல் அந்த காட்சி எனக்கு நினைவிற்க்கு வருகிறது.

நான் போட்ட பின்னோட்டத்திற்க்கு பதில் சொல்லுங்கள் அதை விட்டு சம்பந்தம் இல்லாமல் உளற வேண்டாம்

ராஜ நடராஜன் said...

ஜேம்ஸா!ஆனந்தா!எப்படி நான் உங்களை இன்னும் நட்போடு அணைத்துக் கொள்வது எனப்தை முதலில் சொல்லுங்கள் அடுத்த பின்னுட்டத்தில்.

நீங்கள் உபி,ம்பி எனும் போதே பதிவிற்கு தேவையில்லாத ஒன்று என்று கருத்து சொல்லவில்லை.இப்ப பாய்ஸ் படத்துக்கு வேற தொடுப்பு கொடுக்கிறீங்க:)

James Anand said...

உபி மபி என்று உளறுவதே அதே நீங்கள் ஆதரிக்கும் இலங்கை தமிழர்கள் தான். பதிவில் நீங்கள் பேசுவது இலங்கை தமிழர்கள் தொடர்பாக. அதை இந்திய தமிழர்கல் ஆதரிக்க வேண்டும் என்று வேறு சொல்கிறீர்கள். இது தொடர்பாக கடந்த ரெண்டு பதிவுகளிலும் இதே போல தான் சொல்றீங்க.இது எல்லாம் பதிவுக்கு தொடர்பாகதானே.

நான் மலேசியா மொரீசியஸ் தமிழர்கள் தொடர்பாக பேசவில்லை

நான் என்ன சொல்றேன்னா

இப்படி எல்லாம் தரகுறைவாக பேசும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டுமா என்பது தான்!!

James Anand said...

மேலும் சாம்பிள்கள்

நீங்க இந்தியாவில் தனிதமிழ்நாடு காண தொடங்குங்கோ நாங்க ஆதரவு தாரம். எங்கையென்டாலும் தமிழனுக்கு ஒரு நாடு அமைத்தா சரிதானே. அது ஏன் ஈழத்தில தான் நடக்கனும் என்டு எதிர் பார்க்கிறீங்க. 30 வருசம் முயற்சித்தம் முடியள்ள. நீங்க எல்லாம் தூர இருந்து கூத்து பாத்தீங்க. நந்திக்கடலோட நடுத்தெருவில் விட்டீர்கள்.
பிறகும் நாங்களா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99735

James Anand said...

இன்னும் சாம்பிள்கள்



எமக்கு ஆதரவு தந்த கூடன்குளம் மக்களுக்கு ஆதரவு தந்து புலத்தில் உள்ள தமிழர்கள் அமைப்புக்களும் போராட்டங்களை நடாத்த வேண்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டும்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=99737


தெரியாமதான் கேட்கிறேன் ஒரு நாடு இல்லாத அகதியாக இப்படி அலையும் போதே தேவைஇல்லாத வேலை செய்யும் இவர்களை எப்படி நம்பி ஆதரிப்பது??.

ராஜ நடராஜன் said...

எனது நண்பர் ஒருவர் ஜேம்ஸ்!அதனால் அப்படியே உங்களை விளிக்கிறேன் ஜேம்ஸ்.

ஜேம்ஸ்!ஒற்றை நிலையில் இருந்து விவாதிக்க வேண்டும்.அல்லது பொதுவான பார்வைகள் வேண்டும்.இதனை விடுத்து முத்துக்குமார் காலத்திலிருந்து பரிணாமம் அடைந்து விட்டேன் என்பது எனக்கு ஒப்புதலாக இல்லை.இலங்கை பற்றியோ,ஈழத்தமிழர்கள் பற்றியோ பேசினால் இந்தியாவில் டாய்லெட் இருக்கா என்று சம்பந்தமே இல்லாமல் பேசுவது என்ன விதமான வாதம் என புரியவில்லை.இந்தியாவின் வலிமை என்ன என்பதும்,அதன் குறைகள்,பலவீனங்கள் என்ன என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறோம்.பிரதமர் மன்மோகன் சிங்கை கூட விமர்சனம் செய்யும் கருத்துரிமை கொண்டது இந்தியா.கூடவே இந்தியாவின் மனித உரிமை மீறல்களையும் விமர்சனம் செய்யுமளவுக்கு அரசியல் சாசனமும்,கருத்து சுதந்திரமும் இந்தியாவின் வலிமை.அந்தளவுக்கு அண்டை நாடான இலங்கையும் வளரட்டும்.

ஆமா!எனது வக்காலத்தைத்தான் நீங்க கண்டு பிடித்து விட்டீர்களே!நீங்க எந்த சார்பில் நின்று கொண்டு பேசுகிறீர்கள் என அறிந்து கொள்ளலாமா:)

ராஜ நடராஜன் said...

ஜேம்ஸ்!உங்கள் கருத்துரிமை,எனது பார்வை போலவே யாழ் நண்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் இருக்கும்தானே!அதென்ன யாழ் தளம் தமிழர்களின் அரசியல் சாசனமா என்ன?பதிவர்கள் கருத்துக்கள் என்றால் தமிழ்மணத்தில் பல பரிமாணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நான் ஒற்றைக்கோட்டில் நின்று கொண்டு எப்பொழுதும் கருத்து சொல்வதேயில்லை.சில சார்புகள் எனக்கும் உள்ளதென்றாலும் மாற்றுக்கருத்துக்களையும் இன்னும் சொல்லப்போனால் ராஜபக்சே,கோத்தபய முதற்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்ற உள்வாங்கலையும் வாங்கிக் கொண்டே கருத்து சொல்கிறேன்.

ஒருமித்த கருத்து இருந்தால் நல்லதுதான்.ஆனால் எதிர்ப்புக்களையும் தாண்டி தமிழர்களுக்கான குரல் ஒலிக்கவே செய்யும்.காரணம் இலங்கை அரசின் பரந்த பார்வையின்மை.தமிழீழம் என்பதோ ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றுமையாக வாழ்வதோ தமிழர்கள்,சிங்களவர்களைப் பொறுத்தது.இப்போதைய நிலையில் எந்த சம உரிமையும் இல்லாததாலும் பத்திரிகைகள் தனது கடமையை சரிவர செய்யாததாலும் குரல்களாக பதிவுகள் போட வேண்டியிருக்கிறது.

நான் என்ன சொல்றேன்,நீ என்னய்யா உளறிக்கொண்டு இருக்கிறாய் என்று நினைக்கிறீர்களோ:)

ராஜ நடராஜன் said...

ஜேம்ஸ்!கூடங்குளம் பற்றிக் கூறியிருந்தீர்கள்.நான் இதுவரை கூடங்குளம் பற்றி பதிவுகளோ அல்லது சார்ந்தோ அல்லது எதிர்த்தும் கூட பின்னூட்டம் போடவில்லை.காரணம் தமிழகம் மின் உற்பத்தி தேவையை பூர்த்தியை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஒரு புறமிருக்க இன்னொரு புறம் ஜப்பான் போன்ற விபத்துக்கள் நிகழக்கூடாதென்ற கவலையும்,போராட்டங்களும் நிகழ்கின்றன.தமிழகத்து தேவை யான மின்சாரம்,சுற்றுச்சூழல் என்ற அடிப்படையிலேயே கருத்துக்கள்,ஆதரவு வேண்டும்.அதனை தவிர்த்து தமிழகம் ஈழ ஆதரவை தருகிறது.அதனால் நாம் கூடங்குளத்தை ஆதரிப்போம் என்பது தவறான செயல்பாடு என நினைக்கின்றேன்.

ராஜ நடராஜன் said...

ஜேம்ஸ்!இந்தியாவின் கூட்டாட்சி என்ற அடிப்படியில் தமிழ்நாடு தனியாகத்தான் இருக்கிறது:)வட கிழக்கு இலங்கை பூர்வீக தமிழர்களின் பூமி.இருக்கும் பூர்வீக சொத்தை விற்று விட்டு புதுசா சொத்து வாங்கலாம் என ஐடியா தருகிறீர்களே.உங்களுக்கு பாய்ஸ் நினைப்பு வந்தது போல் எனக்கும் ஒரு ஈழத்தமிழ் சகோதரன் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.அப்பா வளைகுடாவுக்கு வேலைக்குப் போய் விட்டதால் மகன் இருந்த வீட்டை கொளுத்தி விட்டாராம்.கேட்டால் அதுதான் அப்பா பெட்ரோல் காசு அனுப்புவாரே புதுசா வீடு கட்டிக்கொள்ளலாம் என்றாராம்.இது ஒன்றும் கதையல்ல.அப்பாவான அவரும் நானும் சிரித்துக்கொண்ட நிகழ்வு:)

James Anand said...

நான் பதிந்த கருத்துகள் எல்லாம் ஈழ தமிழர்கள் சொன்னவை. அவை என் கருத்துகள் அல்ல. நான் யாழ் களத்தில் இருந்து இங்கு பதிந்தவை

ஈழ தமிழர்கள் ( வெளிநாட்டு அகதிகள்) பெரும்பால்னோர் விரும்புவது

1. தமிழ்நாடு தனியாக பிரிய வேண்டும்
2. தமிழ்நாட்டில் எந்தவித ஒருப்படியான காரியங்களும் நடக்ககூடாது. கூடங்குளம் உட்பட
3. தமிழ்நாட்டு அரசியல் ஈழதமிழர்கள் சொல்படி நடக்க வேண்டும்.

கருத்து உரிமையை யாரும் தடுக்க வில்லை . ஆனால் அவர்கள் கருத்துகள் தமிழ்நாட்டின் தமிழர்களின் எதிர்காலத்துக்கு சரியானவை அல்ல என்பதால் நான் எதிரிக்கிறேன்;

James Anand said...

இலங்கை யாழ்பாண தமிழர்கள் பல காலங்களாக போர் காரணமாக ரத்த வெறி பிடித்த கருத்துகளை சொல்லி வருகிறார்கள். இந்த போர் நடக்க மூலகாரணமே யாழ்பாண தமிழர்கள் சிங்களவர்கள் மேல் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி அவர்களை அடிமையாக நடத்தியதே.

கருப்பு ஜீலை எனப்படும் படுகொலைக்கு காரணம் என்ன/

இலங்கை பிரச்சனையை தமிழர்களின் பிரச்சனை என்பதை நிறுத்தி வெரும் யாழ்பாண தமிழர்களின் பிரச்சனை என கொள்வோம்.

ஏன் மலையகதமிழர்கள் இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை??

ஏன் இந்தியா யாழ்பாணதமிழர்களை ஆதரிக்க வேண்டும்?

இந்த கேள்விகளுக்கு பதில் இது வரை நான் பேசிய யாவரிடமும் வரவில்லை

James Anand said...

நீங்கள் என் பின்னோட்டங்களை சரியாக படிக்காமல் பதில் சொல்வதாக என்ன தோண்றுகிறது.

ராஜ நடராஜன் said...

ஜேம்ஸ்!நான் உங்கள் பின்னூட்டங்களை உள்வாங்கிக் கொண்டே மறுமொழி சொல்கிறேன்.பதிவின் சாரமும் நான் பின்னூட்ட களத்தில் சொல்வதும் உங்களுக்கு திருப்திகரமாக இல்லை என நினைக்கிறேன்.இருந்தாலும் என்னோட சட்டியில் என்ன இருக்கிறதோ அதனையே என்னால் பரிமாற முடியும்:)

தமிழகம் இந்தியாவின் ஜனநாயகத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்ந்து 100ம் ஆண்டை நோக்கி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.தனி நாடு கோரிக்கை பெரியாரின் காலத்து சமூக,அரசியல் தேவைகளின் அடிப்படையில் உருவான ஒன்றும் அது அரசியல் சூழல்களில் திசை மாறிப்போன ஒன்றும் தேவையில்லாத ஒன்றுமான நிலைக்கு இந்திய ஜனநாயகம் வளர்ந்து விட்டது.
இக்கரையில் தமிழகமும்,அக்கரையில் ஈழமும் சிஙக்ளத்துடன் கை குலுக்கிக் கொள்ளும் ச்மாதான நிலையே இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது என்பது எனது நிலை.

தமிழகம் என்ன செய்ய விரும்புகிறது என்பதை மக்களும்,கட்சிகளும்,ஜனநாயகமும் தீர்மானிக்கின்றன.இதனை யாழ் ந்ண்பர்களோ,நீங்களோ அல்லது நானோ மாற்றி விட முடியாது.எனவே மறுபடியும் நான் உங்களை வலியுறுத்துவது அகன்ற பார்வையில் பிரச்சினையின் பின்னூட்டங்களை அளியுங்கள் என்பதே.

அடுத்த பின்னூட்டத்துக்கு தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

ஜேம்ஸ்!நீங்கள் திருவிளையாடல் தருமி மாதிரி கேள்விகள் மட்டும்தான் கேட்பீர்களா?அல்லது விடைகளையும் உங்களுக்குள் வைத்திருக்கிறீர்களா?

நேற்றைய வியன்னாவின் இலங்கை தீர்மானம் என்ற ஒற்றைச் சொல்லை தாங்கி நின்றாலும் அதன் பின்புலத்தில் என்ன என்ன நிகழ்ந்தது என்பதை கடந்த 2 பதிவுகள் விளக்கும்.அது போலவே ஒரு நிகழ்வின் தாக்கம் ஒன்றை பதிவு செய்தாலும் அதன் பின் புலத்தில் பல காரணிகள் இருக்கும்.நீங்கள் சொல்லும் கருப்பு ஜூலையின் பின்புலத்திலும் பல கிரியா ஊக்கிகள் இருக்கும்.

கருப்பு ஜீலை எனப்படும் படுகொலைக்கு காரணம் என்ன

ஏன் மலையகதமிழர்கள் இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை?ஏன் இந்தியா யாழ்பாணதமிழர்களை ஆதரிக்க வேண்டும்?

நீங்கள் இலங்கையின் நுண்ணிய அரசியல் பேச விரும்புவதாலும்,இலங்கை பற்றி என்னைப் போல் மேக்ரோ பார்வை கொள்ளாமல் கேள்வியை முன் வைப்பதால் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்காமல் பிரதேச வாதம் என்ற குறுகிய நிலையில் உங்கள் கேள்விகள் உள்ளன என நினைக்கிறேன்.

Robin said...

சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணம், புலிகள்தான். இதைச் சொன்னால் துரோகிப்பட்டம் கிடைக்கும் என்பதால் பலரும் அமைதியாக இருந்துவிடுகின்றனர். புலிகளின் தவறை மறைத்து அப்படியே பிரச்சினைக்கு இந்தியாதான் காரணம் என்று திருப்பிவிடுகின்றனர். கருணாநிதிக்கும் துரோகி பட்டம் கிடைத்தது. ஏதோ கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டுதான் புலிகள் எல்லா அநியாயங்களையும் செய்தார்களா? புலிகளின் ஹிட்லிஸ்டில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஈழத்தை பட்டம் கொடுக்கப்பட்ட காமெடியும் நடந்தது. இந்தியா பக்கமும் தவறு உண்டு, ஆனால் இந்தியாதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது பிரச்சினையை திசை திருப்பும் செயல். இந்தியாவுக்கு பல நிர்பந்தங்கள் உண்டு.

Robin said...

தமிழ்நாட்டு தமிழர்கள் சிங்கள அரசுக்கு தங்கள் எதிர்ப்பை சாத்வீக வழியில் தெரிவித்தார்கள். இரண்டுபேர் தற்கொலையும் செய்துகொண்டார்கள். இவ்வளவுக்கும் அவர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் பீத்தமிழர்கள்தான். ஆனால் நாம் தாயுள்ளத்தோடுதான் இலங்கைத்தமிழர்கள் பிரச்சினையை அணுகுகிறோம். ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் சிலர் தமிழ்நாட்டை தனியாக பிரிக்கவேண்டும் என்று தூண்டிவிடுகிறார்கள். இங்கும் ரத்த ஆறு ஓட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. பல நிறை குறைகள் இருந்தாலும் இந்தியாவின் ஒருபகுதியாக இருப்பதுதான் நமக்கு நல்லது. இல்லை என்றால் பக்கத்து மாநிலத்துக்கு செல்லவேண்டும் என்றால்கூட விசா வாங்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் யாரும் தனித்தீவாக இருந்துவிடமுடியாது. கூடங்குளம் பிரச்சினை, தமிழக இடைத்தேர்தல் எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு அவசியமில்லாத ஒன்று. ஆனால் இதிலும் மூக்கை நுழைத்து நக்கல் அடிப்பது தவறான செயல்.

இங்கே, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதையோ புலிகளில் பலர் போர் நெறிமுறைகளுக்கு மாறாக சித்திரவதைப்படுத்தப்பட்டதையோ நான் ஆதரிக்கவில்லை. சமீபத்தில் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்ததை ஒரு நல்ல தொடக்கமாகவே பார்க்கிறேன்.

James Anand said...

ராஜ நடராஜன்
உங்கள் பார்வையில் ஈழ போராட்டத்தை புலிகள் பார்வையில் ஆதரிப்பதாக தோன்றியதால் நானும் அவர்களின் போராட்டதை மேக்ரோ கண்ணோடு பார்க்க நேர்ந்தது.

நேற்றைய வாக்கேடுப்பில் இந்தியா இலங்கையை எதிரித்ததால் நடக்க போவது என்ன?

இலங்கையில் தொழில் செய்யும் ஏர்டெல் பாரதி, டாடா டிவிஏஸ் மகேந்திரா என பெரு முதலாலிகளும் கூடவே ஏகப்பட்ட சிறு முதலாளிகளும் பாதிக்கபடுவார்கள்.

அமெரிக்காவிற்க்கு இலங்கை இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு நாடு ஆனால் இந்தியா அப்படி இல்லை. இதன் ஏற்றுமதி திறன் சில நாடுகளை மட்டுமே சார்ந்து உள்ளது.

தேவை இல்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கி உள்ளது இந்திய வெளியுறவு துறை.

James Anand said...

ஏற்கனவே இந்திய பொருட்களை புறக்கணிப்போம் என போராட்டம் இலங்கையில் தொடங்கி உள்ளது.

இந்தியா இலங்கையில் போர் முடிந்த பின்னர் செய்து இருக்கும் முதலீட்டின் எண்ணிக்கை மிக அதிகம். உள்நாட்டில் இன்னமும் ரயில் தொடர்பு நம்பிக்கை அளிக்காத போதும் யாழ்பாணம் ரயில் தண்டவாளங்களை அமைத்து வருகிறது. இதனால் இந்தியாவிற்க்கு பத்து பைசா கூட பயன் இல்லை..

என்ன தான் நாம் பீ தமிழர்களாக இருந்தாலும் நம் கடமையை செய்து வருகின்றோம். ஆனால் இலங்கை தமிழர்கள் என்றுமே இந்தியாவை நம்ப மாட்டார்கள்.

இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது, தமிழ்நாட்டின் தலைவர்களுக்கு பணம் கொடுத்து குழப்பத்தை விளைவிப்பது என அவர்களின் செயல்கள் மிக ஆபத்தாக இருக்கின்றன.

இலங்கை பிரச்சனையில் எந்த வித அடிப்படையும் தெரியாதவர்கள் மேலும் மேலும் குழப்பதை விளைவிக்கிறார்கள்.

மனித உரிமை பேசுபவர்கள் புலிகளின் மனித உரிமையை கண்டிக்காமல் விடுவது சுயநலம்

மாத்தையா, டெலோ இயக்க தலைவர்கள் தொண்டர்கள் ..மேலும் பல பல் தமிழர்களை எந்த வித மனித உரிமையும் பாராமல் கொலைசெய்தவர்கள் புலிகள்.

முள்ளிவாய்கால் படுகொலைக்கு புலிகளும் மிக முக்கிய காரணம். தோல்வி உறுதி என தெரிந்தும் மக்களை பகடை காயாக்கி விளையாண்டது அவர்களே

ராஜ நடராஜன் said...

சகோ.ராபின்!விடுதலைப்புலிகள் மீது எந்த விதமான விமர்சனத்தையும் முன் வைக்கலாம்.சேனல் 4ல் டேவிட் மில்பான்ட் ஒரு கருத்தை சொன்னார்.ஒரு ஆயுதக்குழுவிற்கும்,ஜனநாயக அரசாங்கத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.அதனால்தான் அரசாங்கங்கள் செயல்படுகின்றன்.பாதுகாப்பு பகுதி என்ற பகுதியை அமைத்து அதற்குள் மக்களை போக சொல்லி விட்டு விடுதலைப்புலிகள் குண்டு வீசினார்கள்,அதனால் நாங்களும் குண்டு வீசுனோம் என்பது ஏற்புடையதல்ல.ஒரு லட்சம் மக்களை ஒன்றாக ஆயுத பலத்தால் மட்டும் ஒன்று சேர்க்க முடியும் என நம்ப இயலவில்லை.இறுதிக்கட்ட போரின் சூழல்கள்,சூழ்ச்சிகள் அனைத்தும் இணையத்தில் ஏற்கனவே வந்து விட்டது.வெறுமனே விடுதலைப்புலிகள் மீது விரல் காட்டுவது தனிப்பட்ட கோபமாகவே இருக்க முடியும்.

முந்தா நாள் ஓட்டுப் போடும் வரைக்கும் இந்தியாவின் நிலை இலங்கை சார்ந்த ஒன்றே.இந்தியா தனது வெளிநாட்டுக்கொள்கையை சரியாக அமைத்திருந்தால் சீனா,பாகிஸ்தான் என்ற புதிய கள சூழல்கள் உருவாகி இருக்காது.சிவசங்கர மேனன்,நாராயணன் போன்றவர்களின் சூழ்ச்சிகள் இணையம் அறிந்த ஒன்றே. ராஜபக்சே முன்பு நாராயணன்,மேனன்கள் பம்மிகிட்டு உட்கார்ந்திருந்ததை சேனல் 4 வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது:)

கலைஞர் கருணாநிதி பற்றி நீங்கள் சொல்லும் போது கொலவெறிப் பாடல் ஹோலி கவ்வு பாடல்தான் எனக்கு நினைவு வருகிறது:)

Robin said...

//ஒரு லட்சம் மக்களை ஒன்றாக ஆயுத பலத்தால் மட்டும் ஒன்று சேர்க்க முடியும் என நம்ப இயலவில்லை.// ஒரு லட்சம்பேர் என்ன ஒரு கோடி பேரைக்கூட ஆயுத பலத்தால் அடக்கி வைக்க முடியும். இன்றைக்கு பல சர்வாதிகார நாடுகள் அப்படிதான் நடந்து கொள்கின்றன. ஆனால் இதெல்லாம் நீண்ட காலத்துக்கு ஒத்துவராது.

//வெறுமனே விடுதலைப்புலிகள் மீது விரல் காட்டுவது தனிப்பட்ட கோபமாகவே இருக்க முடியும்.// எனக்கும் புலிகளுக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு ஒன்றுமில்லை. வெறுமனே சுட்டிக்காட்டவில்லை, ஆதாரங்கள் உண்டு.

//இந்தியா தனது வெளிநாட்டுக்கொள்கையை சரியாக அமைத்திருந்தால் சீனா,பாகிஸ்தான் என்ற புதிய கள சூழல்கள் உருவாகி இருக்காது.// இந்தியா தனது வெளிநாட்டுக்கொள்கையை எப்படி அமைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ராஜ நடராஜன் said...

சகோ.ராபின்!ஒரு முறை பங்களாதேஷ்காரன் ஒருவன் அவனது கடையில் பொருள் விலையை கேட்டு விட்டு பொருள் வாங்கவில்லை என சண்டைக்கு வந்து விட்டான்.இதனால் பங்களாதேஷ்காரனுக்கு சுதந்திரம் கிடைத்ததே தப்புன்னு நான் வாதித்தால் என்னைப் போல் முட்டாள் இருக்க முடியாது.பிரதேச வாதங்கள் பேசுபவர்களும்,தமிழக தமிழர்கள் மீதும்,இந்தியா மீதும் வெறுப்பு கொண்ட தமிழர்கள் இருக்கிறார்கள்.கூடவே சிங்களவர்களும் கூட.மாறாக தமிழகத்தையும்,இந்தியாவையும் நேசிக்கும் தமிழர்களும்,சிங்களவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.ஒரு சிலரின் பார்வையில் ஒரு இனத்தின் உரிமைப் பிரச்சினையை பின் தள்ளி விட முடியாது.

ராஜ நடராஜன் said...

சகோ!ராபின் ஐ.நா நோக்கிய ராஜதந்திர நகர்வுகளை நோக்கி நமது பார்வை விரிவடைய வேண்டும்.நேற்றைய நிகழ்வுகளை நேரடியாக பார்க்கும் போது நாம் இன்னும் கற்றுக்கொள்ள் வேண்டியது நிறைய இருக்கிறதென்றே தோன்றுகிறது.ந்மது கருத்துக்களையெல்லாம் பின் தள்ளிவிட்டே உலக அரசியல் செயல்படுகிறது.

Robin said...

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ளாமலேயே பதில் எழுதியிருக்கிறீர்கள். எதற்கும் இன்னும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

Robin said...

குறள் 471: வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

விளக்கம்:
தான் செய்யத் துணிந்த செயலின் வலிமையையும், அதைச் செய்யப்போகும் தன் வலிமையையும், அதை எதிர்க்க வரும் பகைவனின் வலிமையையும், இருவருக்கும் துணையாக வருபவரின் வலிமையையும் ஆராய்ந்து பார்த்து, தன் வலிமை அவர்களிலும் மிகுதியாக இருந்தால் அச்செயலைச் செய்ய வேண்டும்.

குறள் 472: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

விளக்கம்: தம்மால் செய்வதற்கு இயலும் செயலையும், அதன் தொடர்பாக அறிய வேண்டிய எல்லாவற்றையும் அறிந்து, அம் முயற்சியில் உறுதியாக மனதை ஊன்றிப் பகைமேல் செல்லும் அரசர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

குறள் 473: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

விளக்கம்: தம்முடைய உண்மையான வலிமையைச் சரியாக அளந்து அறியாமல் ஊக்க மிகுதியால் தம்மை விட வலியவரோடு போர் செய்ய முயன்று, அவர் தாக்குதலைப் பொறுக்க முடியாமல் இடையே கெட்டுப் போன அரசர் உலகத்தில் பலராவர்.

குறள் 474: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம்: வெற்றரசரோடு இணக்கமாக நடந்து கொள்ளாமலும், தன் வலிமையின் அளவை அறியாமலும், தன்னை உயர்வாக மதித்து அவரோடு பகை கொண்ட அரசன் விரைந்து கெடுவான்.

http://www.thirukuralonline.org/valiyarithal.php

ராஜ நடராஜன் said...

சகோ.ராபின்!ராணுவ கட்டமைப்பு,சர்வாதிகாரம் என்ற ஒரு நாட்டின் அமைப்பில் மக்களை அடக்குவதையும் Virtually on gun point என்ற சூழலையும் ஒன்றாக இணைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதனால்தான் ஒரு கோடி மக்களையும் கட்டுப்படுத்த முடியும் என்கிறீர்கள்.மக்கள் போராட்டத்தில் ஆயுதங்களும் தோற்றுப் போகும் என்பதற்கு ஜாலியன்வாலாபாக் துவங்கி இப்போதைய எகிப்து புரட்சி வரை சொல்ல முடியும்.

இந்தியா வெளிநாட்டுக் கொள்கையில் சிவசங்கர மேனன்,நாராயணன் போன்றவர்களின் ஆளுமையின் கீழ் கட்டமைத்த்திருக்க கூடாது.மாறாக இந்தியா,தமிழக,இலங்கையை உணர்ந்து கொண்ட தமிழரையும் வெளியுறவுக் கொள்கைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.தமிழக கட்சிகளின் குரலை புறம் தள்ளி விட்டு இலங்கை அரசின் சார்பான நிலை மட்டுமே எடுத்திருக்க கூடாது.அப்படியே இலங்கை சார்ந்த நட்புற்வை நாடியும் கூட சீன,பாகிஸ்தான் ராணுவ சார்பாக இலங்கை தன்னை வலுப்படுத்திக் கொள்வதை உணர்ந்து சேனல் 4 முதல் காணொளி மற்றும் ஐ.நாவின் மூவர் குழுவின் அறிக்கையை வலுப்படுத்துவது மாதிரி செயல் பட்டிருக்க வேண்டும்.டிப்ளமோட்டிக்காக சீனா,பாகிஸ்தான் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் வந்து விட்டதாக தகவல்கள் கசிகின்றன.உண்மையாகும் பட்சத்தில் அதற்கான தடுப்புக் கொள்கையை வகுத்திருக்க வேண்டும்.13ம் சட்ட வரைவை இலங்கை செயல்படுத்தும் என கிருஷ்ணா அறிவித்த மறு நாளே நான் அப்படி சொல்லவேயில்லையே என்று ராஜபக்சே சொன்னதை ஏன் என்று கேட்டிருக்க வேண்டும்.இந்திய வெளியுறவுக்கொள்கை சரியாக செயல்படாத காரணம் கொண்டும்,தமிழர்கள் பிரச்சினையை முழு அளவில் கையாளாத தன்மை கொண்டே தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கின.இப்பொழுது அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றும் வரையில் இந்திய வெளியுறவுக் கொள்கை உறங்கிக் கொண்டே இருந்தது.

ராஜ நடராஜன் said...

ச்கோ.ராபின்!நீங்களும் ஜேம்ஸ் சொன்னது போலவே புரிந்து கொள்ளாமலே மறுமொழி சொல்கிறேன் என்கிறீர்கள்.புரியாமல் நான் எப்படி நீள நீளமா மறுமொழி சொல்ல இயலும்:)

விடுதலைப்புலிகள் வெற்றி பெற்ற நிலையில் இருந்தாலும் கூட திருக்குறள் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன சகோ ராபின்.நம்முடைய இப்போதைய தேவையெல்லாம் தமிழர்களின் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதும் இலங்கை அரசின் முரட்டு சுபாவத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே.இன்னும் குறைகள் சொல்லும் கால கட்டத்தை தாண்டி ஐ.நா தீர்மானம் வரையிலான நகர்வுகள் வளர்ந்து விட்டன.

Robin said...

//மக்கள் போராட்டத்தில் ஆயுதங்களும் தோற்றுப் போகும் என்பதற்கு ஜாலியன்வாலாபாக் துவங்கி இப்போதைய எகிப்து புரட்சி வரை சொல்ல முடியும்.// சரியாகச் சொன்னீர்கள். இலங்கையில் தமிழர்கள் ஒன்றிணைந்து போராடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அப்படி ஒற்றுமையில்லாமல் போனதற்கு யார் காரணம்? சக போராளிகளையும் மிதவாதிகளையும் ஒழித்துக்கட்டியது யார்?

//டிப்ளமோட்டிக்காக சீனா,பாகிஸ்தான் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.// அது எப்படி என்று சொல்லுங்களேன்.

Robin said...

//விடுதலைப்புலிகள் வெற்றி பெற்ற நிலையில் இருந்தாலும் கூட திருக்குறள் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன சகோ ராபின்.// புலிகள் வெற்றி பெறுவார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டதே உண்மை. வெறும் ராணுவ பலம் மட்டும் வெற்றியை தந்துவிடாது.

//நம்முடைய இப்போதைய தேவையெல்லாம் தமிழர்களின் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதும் இலங்கை அரசின் முரட்டு சுபாவத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே.இன்னும் குறைகள் சொல்லும் கால கட்டத்தை தாண்டி ஐ.நா தீர்மானம் வரையிலான நகர்வுகள் வளர்ந்து விட்டன.// ஆனால் இன்னும் தங்கள் பக்கம் உள்ள தவறை மறைத்து மற்றவர்கள்மேல் எல்லாப் பழியையும் போடுகிறார்களே.

சார்வாகன் said...
This comment has been removed by the author.
சார்வாகன் said...

நல்ல பதிவு

சுருக்க்மாக‌ தமிழ் ஈழ வரலாற்றை அருமையாக சொல்லி விட்டீர்கள்.இரண்டு சகோக்கள் மாற்றுக் கருத்து கூறுகிரார்கள்.

வரலாற்றின் பாடங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் த்வறுகள் நிகழாமல் இருக்க முயற்சிப்பதே அறிவு.

தமிழ் ஈழமா,சுய நிர்ணய உரிமையுடன் குடிய ஒன்றுபட்ட இலங்கையா என்பது தமிழ் ஈழத்தில் வாழும்,புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விடயம்.தமிழர்கள் என்றால் மதம் சாராமல் அனைவரையும்தான் குறிப்பிடுகிறேன்.இது இப்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்ட ஈடும் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட்ட பின் ஓட்டெடுப்பு மூல்ம் முடிவு செய்யலாம்.

இப்போது தமிழ் ஈழத்தில் வளர்ச்சி ப்பணிகள்,இலங்கை அரசின் போலிஸ்,இராணுவத்தில் இருந்து பாதுகாப்பு,தமிழ் ஈழம் குறித்த உலக நாடுகளின் கண்காணிப்பு மிஅக் அவசியம்.அனைத்து தமிழ் பிரிவினரும் கூடிய கூட்டு ஆசு அமைக்க்லாம்,ஐந்து வருடம் முடிந்தபின் நிலமை சக்ஜமான் பின் நிச்சயம் ஓட்டெடுப்பு நடத்தலாம்.

சிங்களர்கள் தமிழர்களின் எதிரிகள் அல்ல,சிங்கள் இனவாத அரசியல்வாதிகள்தான் எதிரிகள்.இப்போது கூட இத்தீர்மானத்தை சிங்களர்களுக்கு எதிராக காட்ட இராஜபக்சே&கோ பல் முயற்சிகளை செய்யும்.

விடுதலைபுலிகள் த்வறு செய்தார்கள் [ஒருவேளை]என்றால் அதற்கும் தமிழர்கள் உரிமை பெறுவதற்கும் என்னய்யா தொடர்பு?

தமிழ் ஈழம் அமைந்த பின் இதற்கு நியாயமான் விசாரணை நட்த்தி தண்டனை வழங்க ஆவண செய்யப்படும் போதுமா??????


தமிழர்களின் உரிமை சிங்களர்களை பாதிக்கும் என்றே பிரச்சாரம் முடுக்கி விடப்படும்,இணையத்திலும் பல் போலி ஐடியில் பல் வேடங்களில் இராஜபக்சே
தொண்டர்கள் வலம் வருகிறார்கள்.

ஜாக்கிரதை!!!!!!!

நிச்சயம் இத்தீர்மானம் நம்பிகை தருகிறது.எனினும் காங்கிரஸ் கட்சியை நம்ப முடியாது.

ஒரு சகோ கூறிய விடயங்களில் இந்தியா என்பதற்கு பதில் காங்கிரஸ் என கூறி இருந்தால் நானும் அதை வழி மொழிகிறேன்.காங்கிரஸ்தான் தமிழர் எதிரி,இந்தியா அல்ல!.தமிழ் ஈழம் இந்தியா பாய் பாய்!!!!!!!!!!!

தமிழக்த்திலும் நடுவணரசிலும் தமிழர் ஆதரவு சக்திகள் வர வேண்டும்!


இன்னும் தீர்வு குறித்து நிறைய எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

நன்றி

Robin said...

//விடுதலைபுலிகள் த்வறு செய்தார்கள் [ஒருவேளை]என்றால் அதற்கும் தமிழர்கள் உரிமை பெருவதற்கும் என்னய்யா தொடர்பு?// அப்படி தொடர்பு இருக்குதுன்னு யாருய்யா சொன்னது?

//.காங்கிரஸ்தான் தமிழர் எதிரி,இந்தியா அல்ல!// காங்கிரசுக்குப் பதில் பா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தாலும் கருணாநிதிக்கு பதில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தாலும் எதுவும் மாறியிருக்காது.

//தமிழ் ஈழம் இந்தியா பாய் பாய்!!!!!!!!!!!// அப்படியா?

Bibiliobibuli said...

ம்ம்ம்ம்..... இங்க ஏகப்பட்ட கூட்டம் போல தெரியுதே.

இருங்கோ வாறன் நடா நானும் என் பங்கிற்கு சண்டை போட... :)

ராஜ நடராஜன் said...

சகோ!ராபின்.விடுதலைப்புலிகளின் வரலாற்றுத் தவறுகளை நிறைய சுட்டிக்காட்டலாம்.அதன் காரணம் கொண்டே அவர்களுக்கெதிரான விமர்சனங்களும் எழுகின்றன என்பதும் உண்மையே.விமர்சனங்கள் மட்டுமல்லாமல் கோபங்களும் கூட பதிவுகளில் வெளிப்படுகின்றன்.இதற்கு சமீபத்து உதாரணமாக பிரபாகரன் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று படம் போட்டு விளக்கும் தமிழர்கள் கூட உண்டு.ஆனால் பிரபாகரன் போரிலே கொல்லப்பட்டார் என்று சில தினங்களுக்கு முன்பு கோத்தபய ராஜபக்சே கூறுகிறார்.

சரி!உங்கள் வாதத்தின் படியே பிரபாகரன் சக போராளிகளை ஒழித்து விட்டார் என்று வைத்துக்கொண்டாலும் முந்தைய போராளிகளாய் இன்றைய இலங்கை அரசுக்குள் சங்கமித்து விட்ட கருணா,பிள்ளையான்,டக்ளஸ் போன்றவர்கள் இந்த மூன்று ஆண்டுகளில் என்ன சாதித்து விட்டார்கள்.அரசுடன் இணைந்தும் கூட அவர்களால் குறைந்த பட்ச தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலவில்லையே.இதில் என்ன கொடுமைன்னா இந்தியாவின் 13ம் வரைவும்,அமெரிக்காவின் தீர்மானமும் காவல்துறை தமிழர்களிடம் இருக்க வேண்டுமெனும் போது கருணா,பிள்ளையான் நிலைப்பாடு என்ன என்பதையும் உணர வேண்டும்.

இப்பொழுதுதான் விடுதலைப் புலிகள் இல்லையே!மக்களுக்கு தீர்வு காட்டுபவன் யார்?

Robin said...

//சரி!உங்கள் வாதத்தின் படியே பிரபாகரன் சக போராளிகளை ஒழித்து விட்டார் என்று வைத்துக்கொண்டாலும் முந்தைய போராளிகளாய் இன்றைய இலங்கை அரசுக்குள் சங்கமித்து விட்ட கருணா,பிள்ளையான்,டக்ளஸ் போன்றவர்கள் இந்த மூன்று ஆண்டுகளில் என்ன சாதித்து விட்டார்கள்.// என் வாதப்படி அல்ல. புலிகள் பிற இயக்கங்களை அழித்தனர் என்பது வரலாறு. எல்லாரையும் அழித்துவிட்டு மிச்சம் மீதி இருக்கிறவன் என்ன செய்தான் என்று கேட்பது என்னவிதமான வாதம் என்று தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

///டிப்ளமோட்டிக்காக சீனா,பாகிஸ்தான் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.// அது எப்படி என்று சொல்லுங்களேன்.////

சகோ.ராபின்!நீங்க என்ன என்கிட்ட போட்டு வாங்குறீங்களா என்ன:)

தூதரக அலுவலகங்கள் என்ன விஸ்கி சாப்பிடவும்,பார்ட்டி நடத்துவும்,புள்ள குட்டிகளை நல்ல இடத்தில் படிக்க வைச்சு கல்யாணம் பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்புறதுக்கு மட்டுமா இருக்குது?

பார்ட்டின்னு சொன்னதும் இப்படித்தான் ஒரு இந்தோனேசியா தூதுவர் வீட்டுக்குப் போனேன்.மதுவிலக்கான நாட்டில் தூதுவர்கள் மது அருந்தினால் தப்பில்லையாம்.இது எப்படியிருக்குது!

ஐ.நா விவாதம் நடந்துகிட்டிருக்கும் போதே Chairman Joint Chiefs of Staff Committee of Pakistan arrives in Sri Lanka

இதனை டெய்லி மிரர் படத்தோடு செய்தி விட்டிருந்தது.உங்களுக்காக இன்னுமொரு ஆதாரமாக

http://www.slhcpakistan.org/

தமிழர்கள் ராஜபக்சே லண்டன் வந்தா துரத்துறாங்கன்னு நேரா சீனாவுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து விடுகிறார்.வெளிநாட்டுக்குப் போனா கை,பை நிறைய பொருட்கள் எடுத்துகிட்டு வர்ற மாதிரி ராஜபக்சே சீனா போனா ஒரு மிலிட்டரி ஒப்பந்தமும்,ஆயுதங்களும் வாங்கிட்டு வருகிறார்.ஆயுதம் குவிச்ச எந்த ஒரு நாடாவது உருப்படியானதா வரலாறு உண்டா?

எப்படின்னு சொல்லுங்கள் என்பதற்கு நான் பிரதம மந்திரியாக இருந்திருந்தால் ஐ.நா மூவர் குழுவை சாக்காக வைத்தே கடுகு மாதிரி இருந்துகிட்டு எனக்கா தண்ணி காட்டுறேன்னு ராஜபக்சேவை உலக நீதிமன்றத்துக்குள் தள்ளும் படி லாவகமாகவும்,டிப்ளமோட்டிக்காகவும் செய்திருப்பேன்:)

எவரெஸ்ட் சிகரத்துல இந்தியாவுக்கு சாதகம்ங்கிற மாதிரி புவியியல் அரசியலில் இலங்கை இந்தியாவுக்கு சாதகமான 2000க்கும் மேலான ஆண்டுகள் தொடர்புடையது.புவியியலில் சீனாவும்,பாகிஸ்தானும் இந்திய,இலஙகை நட்பை மீறி செயலபட முடியுமா?ஆனாலும் இலங்கை செயல்படுகிறது.காரணமென்ன?

சிவானந்தம் said...

என்ன நடராஜன் சார், பதிவு எழுதறத விட பின்னூட்டம் எழுதவே நேரம் சரியா இருக்கும் போலிருக்கு.

இங்கே ஒரு நண்பர் யாழ் ஃபாரம் பத்தி எழுதி இருந்தார். எனக்கும் அது போன்ற அனுபவம் உண்டு. சிறையில் சிலர் பேசிய பேச்சுக்கள் அப்படிப்பட்டவைதான். கோபத்தில் பேசுகிறார்கள் என நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்னொரு இலங்கை தமிழர் (ஈழத்தமிழர் அல்ல) `இவனுங்க இங்கியே இவ்வளவு பேசறானுங்க. இதெல்லாம் (சிறை) போலீஸ்காரங்க காதுல விழுந்தா என்ன ஆகும்?` என்றார். நுணலும் தன் வாயாலே கெடும் என்பதை இவர்கள் உணர வேண்டும்

Robin said...

//புவியியலில் சீனாவும்,பாகிஸ்தானும் இந்திய,இலஙகை நட்பை மீறி செயலபட முடியுமா?ஆனாலும் இலங்கை செயல்படுகிறது.காரணமென்ன?// காரணம் உண்டு, கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன் உஙகள் புரிதலுக்கு நன்றி.உங்க மாதிரி அகன்ற பார்வையோடு அனைத்து மதம் கடந்தும் தமிழர் பிரச்சினையை நோக்கினால் இலஙகை பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்.

என்னது!ராஜபக்சே பக்தர்கள் பதிவுலகிலும் வலம் வருகிறார்களா:)நீங்கள் மதவாதங்களுக்கு நட்பாக பதில் தருவது போலவே நாகரீகமாக எழுப்பும் கேள்விகளுக்கு இயன்றளவு பதில் சொல்ல காத்திருக்கிறேன்.கலந்துரையாடல்கள் பல பரிமாணங்களை உருவாக்கும்.எது சரி என்பதை தீர்மானிப்பதும்,எனது நம்பிக்கைகளை விட்டு விலகமாட்டேன் என்று விடுதலைப்புலிகள் விமர்சனம் செய்வதும் அவரவர் கருத்துரிமை.

ராஜ நடராஜன் said...

சகோ.ராபின்!காங்கிரஸ்,பிஜேபி,கருணாநிதி,ஜெயலலிதா யாராக இருந்தாலும் அவரவர் செயல்படும் தன்மை பொறுத்தே கருத்துக்களும்,விமர்சனங்களும் அமையும்.காங்கிரஸால் இயலாத பொக்ரான் பிஜேபியினால் எப்படி அமைந்தது? இந்திப் போராட்டத்தால் தி.மு.க எப்படி தமிழகத்தையே திருப்பி போட முடிந்தது? யாராக இருந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை நான் நம்பவில்லை.2009ம் வருடத்தில் தி.மு.கவின் அழுத்தம் வெறும் கண் துடைப்பே.அதனை மூன்று மணி நேர உண்னாவிரதம்,வானம் தூறல்,ராஜினாமா பயமுறுத்தல் போன்றவை உறுதிப்படுத்தும்.ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு அறிந்த ஒன்றே.ஆனால் கலைஞரின் நிலைப்பாடு அப்படியல்ல.இப்பொழுது கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அப்பொழுது ஏன் கலைஞரால் செய்ய இயலவில்லை?இன்னுமொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.ஜெயலலிதாவின் காய்நகர்த்தலுக்கு ஏற்ப கலைஞரும்,கலைஞரின் திட்டங்களுக்கு ஏற்ப ஜெயலலிதாவின் நடவடிக்கையும் உள்ளன என்பதையும் உணரவேண்டும்.

ராஜ நடராஜன் said...

சிவா!நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் சிறைவாசம் போல எனக்கு அனுபவமில்லை.ஒரு சில தனிப்பட்டவர்களின் கருத்து அடிப்படையில் மட்டும் நாம் ஒரு பிரச்சினையின் முழு வடிவத்தையும் பார்த்து விட முடியாது.இதோ நேற்று வரை இந்தியா மீதும்,கருணாநிதி மீதும் கோபமாக இருந்த தமிழர்கள் இன்று கொஞ்சம் சமாதானமாக உணர்வது போல் தனிப்பட்ட கோபங்கள்,நிலைப்பாடுகள் அடிப்படையில் பிரச்சினைகளை அணுக கூடாது.மொத்த தமிழகமும் ராஜிவ் காந்தியின் மரணத்தின் போது இருந்த மன நிலைக்கும்,இனப்படுகொலைகள் நிகழ்ந்த பின் உள்ள மன நிலைக்கும் வித்தியாசங்கள் உள்ளது.எனவே மொத்த உணர்வுகள் எப்படி பிரதிபலிக்கின்றன என்பதை உணர்வது அவசியம்.

ராஜ நடராஜன் said...

சகோ.ராபின்!நல்லா டென்னிஸ் விளையாடுவீங்க போல தெரியுதே!உடனே பந்தை நம்ம கோர்ட்டுக்கு தள்ளி விட்டுட்டீங்க:)

நீங்க உங்களுக்கு தெரிந்த காரணத்தை சொல்லுங்கள்.நான் என்னோட கார்டை அப்புறமா காட்டுறேன்:)

ராஜ நடராஜன் said...

ரதி!இங்கே கூட்டமெல்லாம் இல்லை.இருக்குற இரண்டு மூன்று பேரே கூட்டம் சேருகிற மாதிரி தொடர் பின்னூட்ட கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.இன்னும் ஹெவி வெயிட் சாம்பியனெல்லாம் களத்துக்குள்ள குதிக்கவேயில்லை வேற.

கூட்டம் சேர்க்கனுமுன்னா சொல்லுங்க.அதுக்கு ஒரு பதிவு போட்டு கூட்டம் சேர்த்திடலாம்:)

வவ்வால் said...

ராஜ்,

நிறைய புள்ளி வைத்த பெரிய கோலமாக இருக்கிறது எந்த புள்ளியை தொட, விட :-))

இங்கே இருந்து ஆரம்பிக்கிறேன்,
//.!இந்தியாவின் கூட்டாட்சி என்ற அடிப்படியில் தமிழ்நாடு தனியாகத்தான் இருக்கிறது:)//

ஃபெடரல் கவர்ண்மென்ட் என்பதையே நிறைய மக்கள் சரியாக புரிந்துக்கொள்வதில்லை, ஒரு மாநிலத்துக்கு பெரும்பாலான சுயாட்சி உண்டு, ஒரு சிலவற்றை தவிர நமது மாநில தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லாமையால் சுயாட்சியின் வீச்சு சரியாக பயன்ப்படுத்தபடாமல் என்னமோ அடிமையாக இருப்பது போன்ற எண்ணத்தை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சமிபத்திய மாநில தன்னாட்சியின் பலத்தின் எடுத்துக்காட்டு கூடங்க்குளம் அணு உலை ,மாநில அரசு முடிவுக்கு பின்னரே மாறியது, மத்திய அரசு என்ன செய்ய முடிந்தது.

நமது அரசியல் நிர்ணய சட்டத்தில் ஏகப்பட்ட தன்னாட்சி அதிகாரம் மக்களாட்சி முறைக்கு கொடுத்துள்ளது ஆனால் அதை சரியாக பயன்ப்படுத்த ஆட்கள் தான் இல்லை.

வெளிநாட்டில் ஒரு நகர ஷெரிப் அமெரிக்க ஜனாதிபதி எங்கள் ஊருக்கு வரக்கூடாது கூட சொல்ல முடியும், அமெரிக்க மாகாணங்களின் விருப்பம் போல சட்டம் போட முடியும், பல மாகாணங்களில் மரண தண்டனை இல்லை என சட்டம் இருக்கு.

நம் நாட்டிலும் கிட்ட தட்ட அத்தகைய அதிகாரம் இருக்கு ஆனால் பயன்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை,என்பதே உண்மை.

நம் நாட்டில் ஊராட்சி சபையில் தீர்மானம் இயற்றினால் அதை தடுக்க உச்ச நீதி மன்றத்தால் கூட முடியாது அந்த அளவுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சக்தியுண்டு. உதாரணமாக கூடங்குளத்தில் அணு உலை வேண்டாமென ஊராட்சியில் தீர்மானம் இயற்றி இருந்தால் அங்கே திட்டமே துவங்கியிருக்க முடியாது. அப்போது கொண்டுவரலாம் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நம்ம அரசியல் கட்சிகள் தான் உரிமையை விருப்பப்பட்டு இழக்கின்றன.

அவ்வபோது கலைஞர் கூட அறிக்கை விடுவார் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று அப்படினா என்ன என்று அவருக்கு புரியுமா என்றே இப்போது எனக்கு சந்தேகம் :-))

ஏன் எனில் இப்போது இருக்கும் சுயாட்சி அதிகார எல்லைகளையே பயன்ப்படுத்திக்கொள்ள தெரியாத அரசியல்வாதிகள் தான் எல்லாருமே. இதுக்கும் மேல அவர்கள் எதிர்ப்பார்ப்பது மன்னராட்சி போன்ற அதிகாரமா ?

மற்றவை தொடரும் ...

ராஜ நடராஜன் said...

வவ்!பின்னூட்டம் போட்ட களைப்பில் மறுபடியும் ஒருவரும் தேறாததால் நான் சகோ.சார்வாகன் கடையில் ஜங்க் ஜீன்னா குப்பை ஜீன் என்ற சொற்பத சண்டையை பார்த்துக்கொண்டிருந்தேன்.திரும்ப வந்தால் நீங்க உட்கார்ந்துகிட்டிருக்கீங்க.நேற்று முந்தைய பதிவுகளில் ஒன்றுக்கு பதில் சொல்லும் போது கார் மெக்கானிக் போன் வந்ததுல பாதியிலேயே விட்டு விட்டு ஓடி விட்டேன்.என்ன சொன்னேன் என்பதே மறந்து விட்டது.மறுபடியும் உங்க பின்னூட்டத்தைப் பார்த்தால் ஏதாவது தேறும்.இப்ப உங்க பின்னூட்டத்துக்கு...

நீங்க சொன்ன பின்னூட்ட தகவல் எனக்கும் கூட புதுது என்பதோடு இதனை இதுவரை யாராவது வெளிப்படுத்தியிருப்பார்களா என்பதே சந்தேகமே.இதில் கருணாநிதி அவர்கள் எங்கே போய் தெரிந்து வைத்திருக்கப் போகிறார்.ஒரு வேளை யாராவது சட்ட நுணுக்கம் பற்றி சொல்லியிருந்தால் அவரது நினைவிலிருந்து நேரம் பார்த்து எடுத்து விட்டு கைதட்டல் வாங்கியிருப்பார் என்பதால் அதற்கான சாத்தியமே இல்லை என உறுதியாக ந்ம்பலாம்.

ராஜ நடராஜன் said...

வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் விமர்சனம் செய்யாமல் அரசியல் நிர்ணய சட்டம்,தன்னாட்சி அதிகாரம் முக்கியமாக கூடங்குளம் பற்றி சொன்ன ஊராட்சியின் அதிகாரம் போன்ற விழிப்புணர்வுகளையெல்லாம் கிராம,சிறு நகர் பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும்.

அரசியல்வாதிகள் ஒரு மார்க்கமாத்தான் மக்களை மந்திரிச்சு விட்டுருக்காங்க இல்ல:)

வவ்வால் said...

ராஜ்,

ராபின், ஜேம்ஸ் சொல்வது போல இணையத்தில் உலாவும் இலங்கை தமிழர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் வெறுப்புணர்ச்சியுடன் பேசுவார்கள், அவர்களுடன் தொடர்ந்து பேசினால் அன்னியன் விக்ரம் போல ஸ்பிளிட் பெர்சான்லிட்டிகளாக பேசுவதை உணரமுடியும், எனவே நீங்கள் சொன்னாற்போல அப்படிப்பட்டவர்கள் இலங்கை தமிழர்களின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள் அல்ல என ஒதுக்கிவிட்டு பார்ப்பதே நலம்.

இத்தனைக்காலமாக இலங்கைப்பிரச்சினையில் சாதகமான முடிவு எட்டாததற்கு முதல் காரணம் வேறு யாரும் அல்ல இலங்கை தமிழர்களே என்பேன்.

இரண்டாவது காரணம் அரசியல்வாதிகள்(தமிழகம் மற்றும் தேசிய)

மூன்றாவது காரணம் புலிகள் மற்றும் இதர போராளி குழுக்கள்

நான்காவது காரணம் இலங்கை ஆட்சியாளர்களின் சூழ்ச்சி என்பேன்.

இந்திரா காந்தி போன்ற அரசியல்வாதி மத்தியில் இருந்திருந்தால் ,,அவருக்கு சரியாக எடுத்து சொல்லப்பட்டிருந்தால் போதும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

அதே போன்று சந்தர்ப்பவாத மாநில அரசியல்வாதிகள் இன்னொரு கூடுதல் காரணம்.

இந்திரா காந்தி என்ன உத்தம அரசியல்வாதியா எமெர்ஜென்சி ,சீக்கிய தாக்குதல் எல்லாம் உண்டே எனலாம், உண்டு தான் ஆனால் வழ வழ கொழ கொழ என இழுத்திருக்க மாட்டார்.அவர் அபாயகரமான அரசியல்வாதி என்ன்று கூட சொல்லலாம் ஆனால் அவருக்கு சரியான வகையில் சொல்லப்பட்டு முடிவு எடுக்க வைத்திருந்தால் ஏதோ ஒரு ரிசல்ட் தெரிந்திருக்கும்.

இந்தியாவை அமெரிக்காவோ இன்ன பிற வல்லரசுகளோ பெரிதாக எதுவுமே செய்து விட முடியாது என்பது தான் உண்மை காரணம் நமது பலவீனம் எனப்படும் மக்கள் தொகையே பெரும் பலம், மேலும் நமது வாங்கும் திறன், எனவே இந்தியா என்ற பெரும் சந்தையை இழக்க ,எதிர்க்க எந்த நாட்டுக்கும் மனம் வராது.

நாம் பஞ்சப்பரதேசி கூட்டமாக இருந்தாலும் நேரடியாக நம்மீது ஈராக் , லிபியா போல தாக்க யாராலும் முடியாது,அப்படி இருக்கும் போது நாம் தான் பயந்துக்கொண்டு வளைந்து போகிறோம்.

நமக்கு மறைமுகமாக தொல்லைக்கொடுக்கவே அனைவரும் முயல்வார்கள், உ.ம்: அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு, சீனாவின் இலங்கைப்பாசம் போன்றவை. இப்படிப்பட்ட சூழல்களை அவதனித்து இந்தியாவுக்கு சாதகமான விளைவுகளை உண்டாக்கும் வண்ணம் நம் தலைவர்கள் செயல்ப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஒத்திப்போட்டு பிரச்சினையை சமாளிக்கும் டிப்ளமசியை தான் அதிகம் பயன்ப்படுத்தினார்கள் நம் தலைவர்கள். அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்நாட்டு விவகாரங்களிலும்,அயலுறவு விவகாரங்களிலும் உண்டு.

தொடரும்...

மன்மோஹன் சிங்க் போன்ற மண்டையாட்டியை எல்லாம் 100 கோடி மக்களின் தலைவராக காட்டி இந்தியாவையே முதுகெலும்பு இல்லாத நாடாக சித்தரிக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது சோனியா காங்கிரஸ்.

ராஜ நடராஜன் said...

வவ்!நான் ஹெஸ்டனில் உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.அதற்குள் நீங்க முழுப்பரிமாணத்தை ரத்தின சுருக்கமாக கொண்டு வந்து விட்டீர்கள்.ஒருவேளை இந்தமாதிரி Transparency யான வெளிப்படைத்தன்மை கொண்ட எலைட்கள் இருந்திருந்தாலும் கூட பிரச்சினைக்கான தீர்வு வெளிப்பட்டிருக்கும்.என்னமோ டிப்ளமசின்னாலே மூடுமந்திரம் மாதிரி பத்திரிகைகளில் ஒன்றை கசிய விடுவதும் உள்குத்து வேலைகளுமாக செய்து கடைசியில் விக்கிலீக்ஸ் அசாங்கி வந்து மூக்குடையற மாதிரியான வெளியுறவுக்கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்.

நீங்கள் பஞ்சப்பரதேசி கூட்டம் என இந்திய ஜனத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும் போது ஜெயகாந்தன் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது.அதாவது இந்தியா குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையே தவறு என்று.இலங்கை தமிழர்களாவது குடும்ப கட்டுப்பாடு என்ற கொள்கையை தவிர்க்க வேண்டும்.

பூகோள அமைப்பிலும் மனித உளவியலிலும் பாகிஸ்தானுக்கும்,இலங்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது.இதனை இந்தியா உணர்ந்து கொண்டு இரு வேறு விதமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பது அவசியம்.

80க்கும் முன்பான காலத்தில் தமிழகத்திற்கும்,சிங்களவர்களுக்கும் என்ன சண்டை.அப்படி ஒரு இனம் இருப்பதே கூட தெரியாமல் நிறைய பேர் வளர்ந்து இருப்பார்கள்.இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் வெறுமனே எதிர்ப்புக் குரல் மட்டும் கொடுத்து விட்டு கச்சத்தீவை தாரை வார்க்க விட்டிருப்போமா?

போர் காலத்தில் கூட தெரியாத சீனர்கள் இப்பொழுது இலங்கையில் வலம் வருவதாக தகவல்கள்.ஹம்பன்கோட்டாவை இந்தியாவுக்குத்தான் கொடுத்தோம் ஆனால் இந்தியா மறுத்து விட்டதென்று இலங்கை சொல்கிறது.

தலையை விட்டு வாலைப் பிடிப்பதற்கு பதிலாக தமிழர்களுக்கான உரிமைகளையும்,தமிழகத்துடனான நட்பை பாராட்டினாலே போதும் இலங்கையின் பிரச்சினை முடிந்திருக்கும்.மாறாக தவறுக்கு மேல் தவறுகளை இழைத்து தனக்கு தீங்கையே கொண்டு வருகிறது என்பதை காலம் உணர்த்தும்.

பிரதமர் மன்மோகன் சிங்கை நிறைய ஊடகங்கள் விமர்சித்து விட்டார்கள்.இவர் நரசிம்ம ராவுக்கும் தாத்தா மாதிரியே நடந்து கொள்கிறார்:)
அணு ஆயுத ஒப்பந்தம் போட்டதால் அமெரிக்கா மட்டுமே இவரை ஸ்டேட்ஸ்மென் என புகழ்கிறது.

A good economist but a bad politician.

வவ்வால் said...

ராஜ்,

சோறு போட்டா ஒரே அடியா போட்டு மூக்கு வழி வருது இல்லைனா பெருங்குடல் சிறுகுடலை சாப்பிடும் நிலை , அப்படி இருக்கு உங்க பதிவுகளின் வேகம்ம் :-))

டிரான்ஸ்பரன்சி வீசம் என்ன விலை கேட்கிற மங்கூஸ் மண்டையன்கள் தான் தூதர்கள் , ஏன் வெளியுறவு துறை அமைச்சர்களும் அப்படியே! அப்புறம் எங்கே பிரதமர் எல்லாம் செயல்பட (இவர் என்ன செய்தாலும், செயல்பட மாட்டார் அது வேற)

நம்ம மக்கள் அசாத்திய பொறுமைசாலிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை உணர்ச்சி வேலை செய்யும் அப்போவும் சரியா தீனி கிடைச்சா அடங்கிடும் :-))

//இலங்கை தமிழர்களாவது குடும்ப கட்டுப்பாடு என்ற கொள்கையை தவிர்க்க வேண்டும்.//

அவர்களை போல மாங்காக்களை வேறு எங்கும் பார்க்க முடியாது, காயம் பட்டவர்களை கிண்டல் செய்யக்கூடாது என்ற ஒரு நாகரீகத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இந்த பிரச்சினைக்கு மூல காரணம் மற்றும் தீர்க்கப்படாமல் இழுபடுவதற்கு காரணமே இலங்கை தமிழர்களின் சுயநலம் / பல கூட்டுக்காரணங்கள்.

இலங்கையிலே சிக்கி இருப்பவர்களும், தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் இருப்பவர்களுமே உண்மையான கஷ்டத்தை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் , அவர்களுக்காகவே இலங்கையில் நல்ல நிலமை திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இரட்டை வேடம் போடுபவர்களே.

//இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் வெறுமனே எதிர்ப்புக் குரல் மட்டும் கொடுத்து விட்டு கச்சத்தீவை தாரை வார்க்க விட்டிருப்போமா?//

அரசியல்வாதிகளின் சுய நலன் தான் எப்போதும் முன்னிலையில் , உண்மையில் இவர்கள் போராடி எதையும் மாற்ற மாட்டார்கள், ஒரு விஷயம் நடக்கும் என்று தெரிந்த பின்னரே குரல் கொடுப்பார்கள், நடந்த பின் நாங்க சொல்லி தான் நடந்துச்சுனு சொல்வார்கள். இல்லைனா எல்லாத்துக்கும் பொதுவா ஒரு மாதிரி குன்சா என்னனு விளங்காத போல சொல்லி வைப்பாங்க , எப்படி முடிவு வந்தாலும் அத தான் அப்போவே நான் சொன்னேன் சொல்வதற்கு :-))

கச்ச தீவு விஷயத்தில் அது ஒரு தேவை இல்லாத மணல் தீவு அப்படினே அப்போதைய அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். (ஆட்சியாளர் பக்கத்தில் யார் இருக்காங்க என்பதும் முக்கியம்) அதே நேரத்தில் சர்க்காரியா கமிஷன் வேறு மு.க வை மிரட்ட விட்டுக்கொடுத்தார் என்று வரலாறு சொல்கிறது.

//A good economist but a bad politician.//

குட் பொலிடிசியன் சொல்லி இருந்தா கூட அமைதியானவர்னு நினைச்சு சொல்லிட்டிங்க என எடுத்துக்கொள்வேன், ஆனால் எக்கனாமிஸ்ட் என்று சொல்லி கடுப்பேத்திட்டிங்க பாஸ்!

படித்தால் மட்டும் போதுமா படம் அல்ல உண்மை சம்பவம் தான் மன்னு!
இதுக்கு தனியா ஒரு பதிவே போடலாம் போல இருக்கு :-))

குறும்பன் said...

உண்மையான அதிகாரம் மண்ணு மோகன் சிங்கிடம் இல்லை என்பது தெரிந்தும் அவரை இதில் விமர்சிப்பது தவறு. அவரே பொம்மை. மாநில அதிகாரங்கள் பற்றி வவ்வால் கூறியது எனக்கு புது செய்தி. தற்போதைய (இந்திராவுக்கு அப்புறம்) இந்தியாவின் வழ வழ கொழ கொழ வெளியுறவுக் கொள்கையே நிலைமை மோசமானதுக்கு காரணம். நமது வெளியுறவுக் கொள்கை சீர் படாமல் இப்படியே இருந்தால் ஈழ தமிழர்களுக்கு விடிவு இல்லை. அது நமக்கும் நல்லதில்லை.

Bibiliobibuli said...

ராஜ நட, என்ன தமிழிலும் முற்றுப்புள்ளி ஒன்று இருக்கிறது என்பதையே மறந்திட்டீங்களோ :) அவ்ளோ நீளமா வசனம்.

உங்க இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் போது எனக்குள்ளே ஓடிய கேள்வி, ராஜ நட தனித்தமிழீழ கோரிக்கையை ஆதரிக்கிறாரா இல்லையா என்கிற குழப்பம்!!!


நீங்க இலங்கைக்கு சில முன்யோசனை திட்டங்களை முன்வைத்திருக்கிறீர்கள். தசாப்தங்களாக திருந்தாத சிங்கள பெளத்த அரசியலும், அரசியல்வாதிகளும், கொள்கைவகுப்பாளர்களும் ஒரு அமெரிக்க தீர்மானத்தின் மூலம் திருந்துவார்கள் என்பது..... யதார்த்தம் மிஸ்ஸிங்.

போரினால் பாதிக்கப்பட்ட பூமிக்கும், மக்களுக்கும் மறுவாழ்வு அதற்குரிய திட்டங்கள் என்கிற குறுகியகால தேவைகள் இருக்கவே செய்கின்றன. அதையெல்லாம் இலங்கை அரசு செய்யக்கூடிய வசதிகள் இருந்தும் ஒன்றையுமே தமிழர்களுக்கு வழங்குவதில்லை.

நிறைய சொல்லலாம். ஆனா அது பிரயோசனமில்லை.

எந்த முடிவும் தற்காலிக தீர்வே. பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எங்களுக்குரிய இறுதித்தீர்வு எது என்பதை. தீர்வு தனித்தமிழீழம் என்பதில் பெரும்பானமையான ஈழத்தமிழர்கள் உறுதியோடு தான் இருக்கிறார்கள்.

மற்றப்படி கொஞ்சம் disappointed உங்க போஸ்ட்!

இலங்கை தீவிற்குள்ளேயே அழிக்கப்பட இருந்து ஒரு இனத்தை, அதன் உரிமைப்பிரச்சனையை இன்று ஐ. நா. சபை கொண்டுசென்றதில் ஈழத்தமிழர்கள் நிறையவே சாதிதிருக்கிறார்கள். இன்னும் மேலே செல்வோம் என்கிற நம்பிக்கையோடு உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் உள்வாங்குகிறோம்.

Bibiliobibuli said...

//ராஜபக்சே முன்பு நாராயணன்,மேனன்கள் பம்மிகிட்டு உட்கார்ந்திருந்ததை சேனல் 4 வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது:)//

நானும் காணொளியில் கவனித்து சிரித்துக்கொண்டேன் இதற்கு . சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத குற்றங்கள், Naming and Shaming என்கிற அடிப்படையில் அமைத்திருந்தார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொன்னார்கள். அப்போ தான் அதன் அர்த்தம் இந்தியா விடயத்திலும் புரிந்தது.

நேற்று பால் நியுமன் பேட்டியும் பார்த்தேன் அவர் சொன்னது, மலையாளிகள் தான் நீண்டகாலமாக இந்திய வெளியுறவு அமைச்சர்களாக, அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் Pro-China கொள்கை கொண்டவர்கள் என்று!!!!

Bibiliobibuli said...

//அவர்களை போல மாங்காக்களை வேறு எங்கும் பார்க்க முடியாது, காயம் பட்டவர்களை கிண்டல் செய்யக்கூடாது என்ற ஒரு நாகரீகத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை.//

வவ்வால், ச்சே... ச்சே.... எங்களுக்கு ரொம்ப கெட்டியான இதயம். சும்மா பயப்படாம, யோசிக்காம அடிங்க.

எங்க மேல பரிதாபப்படுகிறவர்களை தான் எங்களால் சகிக்க முடியாது. சிங்களன் அடிக்கிறதை விடவா அடிக்கப்போறீங்க...


No Problem, go ahead :)

Bibiliobibuli said...

ராஜ நட, இதுக்கு மேலயும் இங்கே நான் கருத்து சொல்லிக்கொண்டிருந்தால் அது தமிழகத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்கிற தேவையில்லாத இலங்கை அரசுக்கு துணைபோகிறவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தான் அமையும்.

இபோது விடைபெறுகிறேன். மீண்டும் இன்னோர் பதிவில் சந்திப்போம் :)

ராஜ நடராஜன் said...

வவ்!மன்மோகன் நல்ல பொருளாதாரவாதி மோசமான அரசியல்வாதின்னு சொல்லிட்டு பின்னூட்டம் எதுவும் காணாமல் தூங்க போய் விட்டேன்.

நான் சபையர் தியேட்டர் புளு டைமண்ட் பற்றி சொன்னால் இங்கேயும் ஒரு புளு டைமண்ட் இருக்குதான்னு குழப்பம் மாதிரி மன்மோகன் நல்ல பொருளாதாரவாதி என்பதையும் தவறாக புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.1990 கால கட்டத்தில் உலக வங்கியில் பணி புரிந்தவர் இந்திய அரசியலுக்கு வருவதெல்லாம் எட்டிப்பார்க்க முடியாத கற்பனை.பி.ஜே.பி கொண்டு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி யஷ்வந்த் சின்ஹா மாதிரியான புரமோசன் வகைதான்.கொஞ்சம் பின்னாடி போனா சி.சுப்ரமணியம் மாதிரி உள்ளூர் பொருளாதாரவாதிகள் மட்டுமே.ரஷ்யாவின் கம்யூனிஸம் உடைந்த பின் இந்தியாவில் சோசியலிஸ கொள்கைகளும் முடிவுக்கு வரும் போது 1990ன் பொருளாதார கொள்கையின் கட்டமைப்பிலேயே நாம் இது வரை பயணம் செய்கிறோம்.பொருளாதார சீர்திருத்தங்களில் நிச்சயம் நரசிம்ம ராவின்,மன்மோகன் சிங்கின்,ப.சிதம்பரத்தின் பங்கு உள்ளது.இப்போதைய பொருளாதார குறைகள் எல்லாம் உலக மயமாக்கலின் பக்க விளைவுகளாகவும் இந்திய கொள்கைகளின் குறைபாடுகளாகவும் இருக்க கூடும்.

உங்கள் பார்வையில் மன்மோகன் சிங் மீதான பொருளாதாரவாதி விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு விமர்சனம் என்பதை உங்களின் தொடர் பின்னூட்டங்களின் மீது உணர முடிகிறது.குறைகள் பல இருக்கலாம்.ஆனால் இறுதியில் அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை மொழியாளன் என்ற அளவில் இல்லாமல் சம உரிமை என்ற அடிப்படையில் அனைவரும் வரவேற்க வேண்டும்.அதுவல்லாது அவர்களின் மீதான விமர்சனங்களின் அடிப்படையில் கருத்துக்கள் முன் வைப்பது இலங்கை அரசின் தவறுகளுக்கும்,போர்க்குற்றஙகளுக்கும், சிங்கள பேராண்மை மட்டுமே என்ற கொள்கைக்கும் துணை போவதாக அமைந்து விடும் என கருதுகிறேன்.

கச்சத்தீவு இப்பொழுது புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது.போதாத குறைக்கு அந்த பகுதிகளில் தோரியம் தாதுப்பொருள் கிடைப்பதாக வேறு புதிய தகவல்கள்.இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தெற்காசிய புதிய கடல் போட்டிகளை வருங்காலத்தில் காணலாம்.

ராஜ நடராஜன் said...

வாங்க குறும்பன்!ஹைபோதெட்டிக்கலாக இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி செய்திருப்பார்,அப்படி செய்திருப்பார் என்று சொல்வதை விட நண்பர் வவ்வால் சொல்வது போல் இலங்கைப் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு வந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.கூடவே அமெரிக்க தலையீடு என்பதெல்லாம் நிகழ்ந்திருக்கவே கூடாத சாத்தியம்.

ராஜ நடராஜன் said...

ரதி!நான்,வவ்வால் போன்றவர்கள் சும்மாவே பின்னூட்டத்தில் காய்ச்சுவோம்.நாங்களே பேசிகிட்டு என்னய்யா இப்படி இழுக்குறீங்களேன்னு கருத்து சண்டைக்கு வந்தவங்ககிட்ட கூட காய்ச்சியிருக்கிறோம்.

ஈழப்பிரச்சினை உணர்ச்சி ரீதியாகவும்,உணர்வு ரீதியான ஒன்று என்பதோடு யதார்த்தம் என்பதையும் உள்ளடக்கியதோடு,இலங்கை அரசு எப்படி செயல்படுகிறது என்பதையும் உள்வாங்கிக் கொண்டு ஈழம் பிரச்சினையின் தேவைகளோடு,குறைகளின் விமர்சனங்களையும் முன் வைப்பதால் நான் தமிழீழத்தை ஆதரிக்கிறேனா என்ற குழப்பம் உங்களுக்கு வருவது இயல்பான ஒன்றே.

I am just pragmatic on my expression.Pro stand is not blindly accepting a goal.

நான் வெறும் விமர்சகன் மட்டுமே.
நான் தமிழீழத்தை ஆதரிக்கிறேனா இல்லையா என்பதை விட வடகிழக்கிலும்,புலம்பெயர் தமிழர்களும் இணைந்து ஆதரிக்கிறார்களா என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

நான் இலங்கைக்கு சொன்ன ஆலோசனைகள் யதார்த்தமாய் என்பதை விட இப்படியிருந்தால் நலமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே.தமிழ்,சிங்களம் என்ற இன அடிப்படையில் இலஙகை வேறுபட்டுப் போனது போல் இந்தியாவும்,பாகிஸ்தானும் இந்து,முஸ்லீம் என்று வேறுபட்டு மக்கள் நலன்களை பின் தள்ளிவிட்டு பாதுகாப்புக்கு ஆயுதங்களுக்கு பட்ஜெட் வெளியிட்டு இறுதியில் நியுக்ளியர் ஸ்டேட் என்ற தகுதிகளை வளர்த்துக்கொண்டு புதையல் காதத பூதங்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதிலும் பாகிஸ்தான் A failed state என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு அமெரிக்க பொருளாதார,ஆயுத உதவியால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.30 வருட போரின் தாக்கத்தை அடுத்து இலங்கை சீனா,பாகிஸ்தான்,இந்தியா என்று தன் கழுத்தில் கயிறை இறுக்கிக் கொண்டால் எதிர்காலத்தில் மூச்சு விடுமா என்பதே சந்தேகம்.

ஈழப்பிரச்சினையை ஈழத்தமிழர்கள் ஐ.நா வரை கொண்டு போயிருக்கிறார்கள் எனபதில் எனக்கு உடன்பாடில்லை.2009ம் ஆண்டு காலத்தில் கலைஞர் கருணாநிதி ஒன்றும் செய்யாமல் இப்பொழுது தி.மு.க அழுத்தம் கொடுத்த காரணத்தால் தான் இந்தியா அடிபணிந்தது என்று சொல்லிக் கொள்ளும் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது மாதிரி புலம் பெயர் தமிழர்கள் ஐ.நா. மூவர் குழு தீர்மானத்தை விட்டு விட்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஐ.நா வரை சென்றுள்ளோம் என்று கூறிக்கொள்வது மாதிரி இருக்கிறது.புலம்பெயர் தமிழர்களின் போராட்ட குணத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பின்னூட்டத்தில் சகோதரர் ஜேம்ஸ் ஆனந்த் என்பவர் பிரதேச வாதம் பேசியது போல் புலம்பெயர் தமிழர்கள் குழுக்களாய் செயல்படுவதும்,உட்பூசல்கள் இல்லாமல் செயல்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டிருக்க வேண்டும்.தமிழ் தேசிய கூட்டணியில் முரண்பட்ட கருத்துக்கள்.கருணா,பிள்ளையான்,டக்ளஸ் அரசு ஊது குழல்கள் என பல குழப்பங்கள் தமிழர்களிடையே உள்ளன.

ஐ.நா தீர்மானத்திற்கு பங்களிப்பார்கள் என்றால் போர்க்குற்ற காணொளிகளைக் கடத்தியவர்களும்,சேனல் 4 தொலைக்காட்சியுன்,விவரிப்பாளர் ஜான் சுனோ,இயக்குநர் கெலம் மெக்ரா போன்றவர்களும்,அமெரிக்காவின் தலையீடும்,சாத்வீகமாக ஐரோப்பாவில் போரட்டங்களை முன்னெடுத்த தமிழர்கள் மட்டுமே.இதில் மொத்த புலம் பெயர் தமிழர்களுக்கும் பங்கில்லை:)

ராஜ நடராஜன் said...

ரதி!பால் நியுமன் இணைப்பு கொடுங்கள்.நான் இன்னும் காணவில்லை.

ஏனைய உறவுகள் அனைவரும் தமிழர்கள் மட்டுமே.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்துடனே சொல்லிப் பழகுவோம்.காரணம் இந்தியா என்ற அரசியல் சாசனத்தின் அங்கத்தினனாக தமிழகம்.மேலும் மொத்தமாக தமிழர்கள் என்று சொல்வதால் தமிழகமும்,ஈழத்தமிழர்களும் இணைந்து தனிநாடு கோரிக்கை வைக்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரம் முன் வைக்கப்படும் திசை திருப்பல்கள் நிகழ்கின்றன.ஈழத்தமிழர்கள் என்ற சொற்பதம் தனிமைப் படுத்தல் அல்ல.மாறாக ஈழத்தமிழர்கள் என்பது தமிழீழம் என்பதற்கான அடையாளப் படுத்தலே.

ஆமாம்!ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.ஒரு வேளை தமிழீழம் எனும் கனவு நிறைவேறும் பட்சத்தில் தமிழீழத்துக்குள் வாழ விரும்பாத ஈழத்தமிழர்களை என்ன செய்வதாக உத்தேசம்?

என்னடா வில்லங்கமான கேள்வியை முன் வைக்கிறானே என்று எண்ண வேண்டாம்.முன்பே சொன்னேன் யதார்த்தங்களை மட்டுமே நான் முன்னிலைப்படுத்துகிறேனென்று.இதற்கான முன் திட்டங்கள் எல்லாம் தமிழீழ வரைவுக்குள் முன்பே யோசிக்கப்பட வேண்டும்.இது பற்றியெல்லாம் யாரும் கருத்து வெளியிட்ட மாதிரி தெரியவில்லை.அதற்காகவே இங்கே வெளிப்படையான பின்னூட்டங்கள்.

தற்போதைய நிலையில் அமெரிக்காவின் ஆதரவை புலம்பெயர் தமிழர்கள் தக்க வைத்துக் கொள்வது கனவுக்கான பாதையை நோக்கி நகர உதவும்.

Bibiliobibuli said...

ராஜ நட, //இந்தியா என்ற அரசியல் சாசனத்தின் அங்கத்தினனாக தமிழகம்.மேலும் மொத்தமாக தமிழர்கள் என்று சொல்வதால் தமிழகமும்,ஈழத்தமிழர்களும் இணைந்து தனிநாடு கோரிக்கை வைக்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரம் முன் வைக்கப்படும் திசை திருப்பல்கள் நிகழ்கின்றன.//

ம்ம்..... இது போன்ற திசைதிருப்பல்கள் நானும் கவனித்திருக்கிறேன்.

அடுத்து, தமிழர் பிரச்சனை ஐ. நா. வரை சென்றிருக்கிறது என்று நான் சொன்னது அமெரிக்க தீர்மானத்தின் அடிப்படையில் அல்ல. அது தமிழர்களின் நீண்ட, பாரிய முயற்சியிலும் தான், தருஸ்மன் அறிக்கை உட்பட. அதற்கு தமிழர்களின் அழுத்தமும் காரணம்.

இந்த முயற்சிக்கு சனல் 4 ஆவணப்படம் உதவியது தான் மறுக்கவில்லை. ஆனால், அவர்களின் கோணமும் முற்றுமுழுதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அது பற்றி காலம் வரும்போது பேசுவோம். இப்போதைக்கு அவர்களுக்கும் நன்றி நவிலல் தான் :)

இந்த தீர்மானம் என்கிற வரையில் ஐரோப்பிய தமிழர்களின் உழைப்பு அதிகமாய் இருந்திருக்கலாம், மறுக்கவில்லை. ஆனால், மற்றைய நாடுகளிலிருந்தும் அங்கே இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவே ஈழத்தமிழர்கள் முதல் தமிழ் நாட்டு தமிழர்கள் சிலர் வரை சென்றிருக்கிறார்கள். இணைந்து தான் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த இணைப்பை பாருங்கள்.

http://www.sangam.org/2012/03/UN_Resolution.php?uid=4658

பேராசிரியர் திரு. நியுமன் காணொளி கிடைக்குமா தெரியவில்லை. அது இங்கேயுள்ள தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. அவர்கள் அதை யு டியூப்பில் ஏற்றுவதில்லை. கிடைத்தால் கொடுக்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,,

என்ன இது எல்லாத்துக்கும் விலாவாரியா விளக்கனும் போல இருக்கே? உங்க ஊர்லயும் புளுடைமண்ட் இருக்கானு கேட்டது தமிழ்நாட்டுல உங்க ஊர்ல என பொருள், குறிப்பாக புளுடைமண்ட்னு பேரு சொல்லும் போது நல்லா பதிந்து இருக்குகேனு கேட்டேன் சரி விடுங்க அடுத்து பார்ப்போம்,

நிறைய படிச்சு , பெரிய நிறுவனத்தில் வேலை செய்தவர் என்பதால் அவர் செய்தவை சிறப்பானவை என்று நீங்க நினைக்கிறிங்க போல :-))

//.இப்போதைய பொருளாதார குறைகள் எல்லாம் உலக மயமாக்கலின் பக்க விளைவுகளாகவும் இந்திய கொள்கைகளின் குறைபாடுகளாகவும் இருக்க கூடும்.//

கடைசியில் இப்படியும் சொல்கிறீர்கள் , நடுவில் இவர் தான் கொள்கை வகுத்தார்னும் சொல்றிங்க, அப்போ கடைசியில் சொன்ன குறைப்பாடுகளுக்கு இவர் தானே பொறுப்பு :-))

அதை தானே நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், விரிவாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன், இப்போ ஒரு சில வார்த்தைகள் , சீர் திருத்தம் என்பது மாற்றம் கொண்டு வர ,அப்படி ஏற்படும் மாற்றம் அனைவருக்கும் பரவலாக நன்மைகள் தரவேண்டும் , ஒரு சாரருக்கு நன்மையும் பெரும்பாலோருக்கு தீமையும் செய்யும் மாற்றம் சீர்திருத்தம் அல்ல. அதாவது பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான் என்ற நிலை வரக்கூடாது.

பணம் இருந்தால் உலகத்தர மருத்துவம் கிடைக்கும் ஒரு நாட்டில் சாதாரண வாந்திப்பேதி வந்தால் கூட மருத்துவம் கிடைக்காமல் சாகவும் செய்கிறார்கள்.தில்லி வரை செல்லும் ரயிலில் பயணம் செய்தால் பார்க்கலாம் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பெரும்பாலும் காலியாக கிடக்கும், ஆனால் இரண்டாம் வகுப்பு , முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கழிவரை செல்லும் வழியெங்கும் மக்கள் அமர்ந்துக்கொண்டு பயணிப்பதைக்காணலாம். ஏற்ற தாழ்வுகள் மறையாமல் சீர்திருத்தம் செய்தேன் என்பது எப்படி சரியாகும்.

------
//ஆனால் இறுதியில் அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை மொழியாளன் என்ற அளவில் இல்லாமல் சம உரிமை என்ற அடிப்படையில் அனைவரும் வரவேற்க வேண்டும்.//

இதைத்தான் தெளிவாக சொல்லி இருக்கிறேன் ,பார்க்கவில்லையா? எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும் வாழ்வுரிமை அடைய வேண்டி ஒன்றுப்பட்டு குரல் கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சொல்வதோடு இன்றைய சிக்கல்களுக்கு காரணமான கடந்த கால தவறுகள் தொடர்துக்கொண்டே இருக்குமானால் முடிவே எட்டப்படாது என்பதையே சொல்ல வருகிறேன்.

தமிழ் நண்டு குணம் இலங்கை தமிழர்களிடையே அதிகம் இருப்பதே காரணம். நீங்கள் 80க்கு முன்னர் என்னாச்சு என்று கேட்டதோடு விட்டு விட்டீர்கள், இப்பிரச்சினை இலங்கை பிரிட்டீஷ் இடம் இருந்து விடுதலையான காலத்தில் இருந்தே இருக்கிறது , அப்போதே சிங்களர்கள் துவங்கிவிட்டார்கள் ,கூட இலங்கையின் பூர்வ குடிகள், குடியேறியவர்கள் என்று பிரித்து குடியேறிய தமிழர்களை வெளியேற்ற பூர்வக்குடி தமிழர்களையே பயன்படுத்தி தமிழர்களை பலகீனப்படுத்தினார்கள், 80 களில் வெளிப்படையாக எல்லாம் செய்தார்கள்.

இப்பொழுதும் இலங்கை தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாமையே பெரிதாக சாதிக்க தடையாக இருக்கிறது.

தனி ஈழம் தான் முடிவு என்கிறார்கள் , சரி ஆனால் அது என்று வரும் , அதுவரை முகாம்களில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்காமல் பேசுகிறார்கள் , அயல்நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஆட்ப்படாமல் வாழ வழி இருக்கும் சிலர் எப்போ தனி ஈழம் கிடைக்குதோ அது வரைக்காத்திருக்க தயாராக இருக்கலாம்.

ஆனால் இலங்கையில் முகாம்களிலும், தமிழகத்தில் முகாம்களிலும் ஒரு நாள் கழிவதே பெரும் பிரச்சினையாக வாழ்க்கையோடு போராடிக்கொண்டு இருப்பவர்கள் கதி என்ன என நினைத்துப்பார்ப்பதில்லை.

இலங்கை தமிழர்ப்பிரச்சினையை பல கட்டங்களாக பிரித்துக்கொண்டு, படிப்படியாக இலக்கை அடைய போராட வேண்டும்.

----

கச்சத்தீவின் நில அமைப்பின் படி பார்த்தால் தோரியம் இருக்க வாய்ப்புண்டு என்பது உண்மையே. ஆட்சியாளர்கள் கொள்கை முடிவு எடுப்பதில் அதிகாரிகள் பங்கு பெருமளவு உண்டு அப்போதைய அதிகாரிகளின் அலட்சியமே விட்டுக்கொடுக்க வைத்துவிட்டது. சர்க்காரியா கமிஷன் பயத்தில் கலைஞரும் கண்டுக்கொள்ளவில்லை. திரும்ப பெறலாம், ஆனால் ஆட்சியாளர்களுக்கு எதிலும் அக்கரையில்லை எதாவது தலைப்போகிற அளவுக்கு நடந்தால் தான் சோம்பல் முறித்து கிளம்புவார்கள்.
----

//வடகிழக்கிலும்,புலம்பெயர் தமிழர்களும் இணைந்து ஆதரிக்கிறார்களா என்பது மிகவும் முக்கியமான ஒன்று.//
//ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.ஒரு வேளை தமிழீழம் எனும் கனவு நிறைவேறும் பட்சத்தில் தமிழீழத்துக்குள் வாழ விரும்பாத ஈழத்தமிழர்களை என்ன செய்வதாக உத்தேசம்?//

இதே கேள்விகள் எனக்கும் உண்டு , முன்னரே பல ஈழ பதிவர்களிடமும் கேட்டுள்ளேன் இப்பொழுதும் கேட்கலாம் ஆனால் கேட்டால் கோபப்படுவார்கள் என்பதால் இப்போதெல்லாம் இக்கேள்விகளை நான் கேட்பதில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டாலும் மழுப்பலாக மட்டுமே பதில் வரும்.

Bibiliobibuli said...

ராஜ நட, ஏதோ நினைவில் உங்கள் கேள்வியை தவறவிட்டுவிட்டேன். உங்கள் கேள்வி தமிழீழத்தில் இருக்க விரும்பாதவர்கள் பற்றியது.

தமிழீழம் உருவாக்குவதைக் கூட விரும்பாதவர்கள் தான் பெரும்பாலும் அங்கே இருக்க விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். அது இன்று நேற்றல்ல ஈழவரலாற்றில் சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கிற பேச்சு, முயற்சிகள் வரும்போதெல்லாம் வெளிப்படும். அப்படித்தான் வெளிப்பட்டிருக்கிறது. இன்றும் கூட ஐ.நா. வின் பத்தொன்பதாவது மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக பதினைந்து நாடுகள் வாக்களித்ததும் அதே தியரி தான்.

இன்னொரு விடயம், நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்தவர்கள் ஒரு வீதம். அது குறித்து ப்ரையன் செனிவிரட்னே ஒரு முறை எழுதியிருந்தார் இப்படி. அந்த ஒரு வீதத்தினர் பெரும்பான்மையாய் வாக்களித்த தமிழர்களுக்கு என்னதான் தீர்வு என்று நினைக்கிறார்கள் என்று. அதையே தான் நானும் கேட்கிறேன். அவர்கள் உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்பட்ட, இனவழிப்புக்கு உட்பட்ட இனம் தன் சொந்த மண்ணில் சுதந்திரத்துடனும், கெளரவத்துடனும் இருக்க விரும்புவதை மிகச் சிறுபான்மையினருக்காக விட்டுக்கொடுத்து அழியவேண்டுமா.

இது போன்ற பிரச்சனைகள், அதாவது ஒரு இனக்குழுமத்தின் அல்லது ஒரு சாராராரின் விடுதலையை விரும்பாதவர்கள் இருப்பதும் உலகவரலாறு.

தமிழீழத்தில் இருக்க விரும்பாதவர்களுக்கு இன்னொரு நாடு உருவாக்க வேண்டும் என்பது தான் உங்களின் கேள்வியா???

Bibiliobibuli said...

தமிழீழத்தில் இருக்க விரும்பாதர்களும் காரணங்களை அலசி ஆராய்ந்து ஒரு பொது தளத்திற்கு (Common ground) வருவது நல்லது. இது பற்றி முந்தைய பேச்சு வார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜ நடராஜன் said...

வவ்!உலகமயமாக்கலில் பக்கவிளைவுகள் உள்ளன.மறுப்பதற்கில்லை.ஆனால் முந்தைய சோசலிஸ கொள்கைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது உலகமயமாக்கலும்,இந்திய பொருளாதார கொள்கைகளும் மேல் என்றே சொல்வேன்.சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்க வைக்கும் காலம் சோசலிஸ காலம்.இப்பொழுது இந்தியாவில் ஒரு நாளைக்கு 28 ரூபாய் சம்பாதிக்கிற ஆளு வறுமைக்கோட்டுக்கு அப்பாற்பட்ட ஆளாம்:)

பணக்காரனை மேலும் பணக்காரன் ஆகவும் ஏழை மேலும் ஏழை ஆகிறான் என்பதை விட பணக்காரன் விகிதாச்சாரம் அதிகரிக்க கூடும் என நினைக்கிறேன்.இப்பொழுது இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் சம அளவிளான பொருளாதார சந்தை இருந்தும் கூட இந்தியாவால் சீனாவோடு போட்டி போட முடியவில்லை.காரணம் சோசலிஸ ரெட் டேப் இன்னும் பீரோகிரசி மூலமாக வெளிப்படுகிறது.பொருளை உற்பத்தி செய்து விடலாம்.ஆனால் அதனை சந்தைப் படுத்துவதற்குள் விவசாயிக்கோ அல்லது தொழில் முனைவோருக்கோ தாவு தீர்ந்து விடும் என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.இவையெல்லாம் உலகமயமாக்கலின் பக்கவிளைவுகள் என்பதை விட இன்னும் கடுபிடியான பீரோக்கிரசி மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் குறைபாடுகள்.மூன்று புறமும் கடலை வைத்துக்கொண்டும் சீனாவை விட கப்பல் உப செலவீனங்கள் விலை குறைவுக்கு சாத்தியமான சூழல்கள் இருந்தும் நம்மால் போட்டி போட முடியவில்லை.

ரயில் பயணங்களில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன.ஆனால் முதல் வகுப்பு காலியாகவும்,இரண்டாம் வகுப்பில் மக்கள் தரையில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யும் நெரிசல்களை இன்னும் மாற்ற இயலவில்லை என்பது உண்மையே.நெரிசல் காரணம் கொண்டே ரயில்வே துறை லாபம் ஈட்டும் அரசுத்துறையாக விளங்குகிறது.

பழைய கலைஞரை நினைவுபடுத்திப் பார்த்தால் பொதுப்பணித்துறை,வீராணம்,அண்ணாவுக்கு பின் நாற்காலியைப் பிடிக்கும் சூழ்ச்சிகள்,உண்டியல்,எம்.ஜி.ஆரை கவிழ்க்கும் சிந்தனை,பொதுக்கூட்டம்,மாநாடு,சுருட்டல்,முரசொலி,எழுத்து,ஆட்சி என்கின்ற வட்டத்திலேயே வலம் வந்த மாதிரி தெரிகிறது.சர்க்காரியா கமிசனுக்கும்,கச்சத் தீவுக்கும் சம்பந்தமேயில்லை என நினைக்கிறேன்.ஒரு வேளை சர்க்காரியா கமிசனுக்கும்,இரு கட்சிகள் உடன்படிக்கைக்கும் சம்பந்தம் இருக்கலாம்.தமிழக,இலங்கை மீனவர்கள் தவிர கச்சத்தீவை அப்போது யாரும் பெரிதுபடுத்தவில்லை என்றே உணரமுடிகிறது.

பாஸ்:)நீங்க சிங்களவர்களை பிரிட்டிஷ் காலத்துக்கு கொண்டு போனதும் பதிவிலும்,பின்னூட்டங்களிலும் புத்த பிட்சுக்களை குறிப்பிடாதது நினைவுக்கு வருகிறது.

தமிழர் தரப்பில் பல குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் இரண்டு கரம் தட்டினால் மட்டுமே ஒலி என்கிற மாதிரி இலங்கை அரசின் சிங்கள பேரினவாதத்தோடு இலங்கை அரசியல் கலப்பில் புத்த பிட்சுக்கள் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறார்கள்.அது ஈழப்போரின் காலத்திலும் சரி,இப்போதைய கால கட்டத்திலும் புத்த பிட்சுக்களின் அரசியல் இலங்கையில் சமாதானம் உருவாகாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம்.புத்தனை போதிக்க வேண்டிய பிக்குகள் இன்றைய இலங்கை அரசியலில் ஒரு முக்கிய அங்கமாக தமிழர் எதிர்ப்பு நிலை கொள்கிறார்கள்.பொன்னியின் செல்வன் சைவ,பௌத்த பின்புல கதைக்கு தகுந்த இடம் இலங்கைதான்.

ராஜ நடராஜன் said...

ரதி!தமிழீழத்தில் இருக்க விரும்பாதவர்களுக்கு இன்னொரு நாடு உருவாக்க வேண்டும் என்பது தான் உங்களின் கேள்வியா??? என்ற உங்கள் கேள்வியிலிருந்தே துவங்குவது சரியாக இருக்கும்.கேள்வியையும் கேட்டு பதிலையும் நானே சொல்கிறேன்:)

இரு தனி நாடுகளாக பிரிந்து வாழ்வது என்ற சூழலில் என்ன நிகழலாம் என்பதற்கு சில உதாரணங்களை சொல்லலாம்.

பாகிஸ்தான் முழு இஸ்லாமிய நாடாகவோ அல்லது இந்தியா முழு இந்துக்களாகவோ இல்லை.சிலர் இரு புறமும் இடம் மாறினார்கள்.சிலர் தமது பூர்வீக மண் என்று மதம் கடந்தும் இரு பக்கமும் அப்படியே தங்கி விட்டார்கள்.

இதே மாதிரி பாலஸ்தீனிய,இஸ்ரேல் சூழலிலும் உருவானது.

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் எந்த சார்பு நிலையை எடுப்பார்கள்?
அதே போல் சிங்களவர்களில் இன்னும் ஒரு பிரிவு இருப்பதாக அறிகிறேன்.இவர்கள் எந்த முடிவை எடுப்பார்கள்?இவையெல்லாம் யோசிக்கப்படவும் தீர்வுக்கான வழிகளை உருவாக்கும் பட்சத்தில் மட்டுமே இவர்களின் குரலும் இணைந்து ஒலிக்கும்.

வடகிழக்கு இணைப்புக்கு பிள்ளையான்,கருணா போன்றவர்கள் தடையாக இருப்பது மாதிரி செய்திகள் வருகின்றன.கூடவே டக்ளஸ் போன்ற இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்கள் நிலைப்பாடுகள் அறிந்ததே.இவையெல்லாம் எதிர்மறையான நிலைகள்.இந்தாளுகளையெல்லாம் இரண்டு மூன்று வருடம் மேற்கத்திய நாடுகளில் தங்க வைத்தால் ஓரளவுக்கு பரந்த பார்வை வரலாம்.அதிலும் கருணா சூட்டுல கோட்டு சூட்டுல அமெரிக்க தீர்மான தர்ணா செய்தாராம்:)

மீண்டும் பிரிவினை சண்டைகள்,இலங்கையின் மொத்த பொருளாதாரத்தை பங்கிடுதல்,சிங்கள இனவாதம் போன்ற பல காரணங்களுக்காக இலங்கை தமிழீழ கோரிக்கையை நிறைவேற்ற விரும்பாது.

சங்கடங்கள்,எதிர்ப்புக்கள் பல இருந்தாலும் போர்க்குற்றங்களின் அடிப்படையிலும்,தமிழர்களின் நீண்ட சாத்வீகமான ஜனநாயக போராட்டங்களாலும்,ஐ.நா.வாக்கெடுப்புக்கான சூழல் உருவாகும் பட்சத்தில்,உலக நாடுகள் முக்கியமாக அமெரிக்காவின் சார்பு நிலை தமிழர்களுக்கு உருவாகும் பட்சத்தில் தமிழீழம் அமைவதற்கான சாத்தியங்கள் உண்டு.

இரு நாடுகள் அல்லது ஒற்றை ஆட்சி முறையில் பெடரலிசம் மட்டுமே சாத்தியம்.பெடரலிஸம் என்கின்ற நிலையில் அனைத்து சார்பும் தமிழர்களுக்கு உருவாகும் என்பதில் ஐயமில்லை.வரலாற்றை மாற்றும் சக்தி யாரிடம்?

நீங்கள் அன்ரன் பாலசிங்கம் பற்றிக் குறிப்பிடும் போது நினைவுக்கு வருவது அரசியல் சார்ந்த லாபி செய்பவர்களை அதிகம் உருவாக்குவது நல்லது.

புலம்பெயர் பசங்களையெல்லாம் அரசியல் கல்வியறிவோடும் வளர்க்க சொல்லுங்கோ:)தமிழ் தொலைக்காட்சிகளில் மானாட்டம்,மயிலாட்டம்,ஒயிலாட்டம்,விஜய் மாதிரி பாடறது,பொப் பாடல்ன்னு மட்டுமே ஊக்குவிக்கிறாங்க போல.தமிழ் பேசவும்,மேடைப் பேச்சு நுணுக்கங்களையெல்லாம் சொல்லிக் கொடுக்க சொல்லுங்க.எங்க ஊருல பேசி பேசியே ஆட்சிக்கு வந்து ஆட்டய போட்ட கதையெல்லாம் நிறைய இருக்குது:)

ஐ.நா பிரதிநிதிகள் எப்படி செயல்படுறாங்க,உலக அரங்கம் எப்படி செயல்படுகிறது என்பதையெல்லாம் கற்றுக் கொடுங்க.

Bibiliobibuli said...

ராஜ நட,

"...தமிழீழம் அமைவதற்கான சாத்தியங்கள் உண்டு...."

அதேதான் :) இதை நோக்கியே எங்கள் முயற்சிகள் இருக்கவேண்டும் என்பது எனது அரசியல் அபிலாஷை ஒரு ஈழத்தமிழாக.

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் எந்த சார்பு நிலை எடுப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

சிங்களப்பெரும்பான்மையிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர் தமிழர் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதும் ஒரு வழிதான். உதாரணம், இடது சாரி கொள்கைக்காரர் திரு. கருணாரட்ண.

ஆனா, இலங்கை சர்வதேச கடனில் மூழ்கும் போது தமிழர்களை சிங்களர்கள் ராஜபக்‌ஷேக்களுக்கு எதிராக போராட துணைக்கு அழைப்பார்களோ :)

வடக்கு-கிழக்கு இணைப்பு பிரச்சனை வரதாஜப்பெருமாள் காலத்திலேயே இந்தியாவால் அவரை கைப்பொம்மையாய் உருவாக்கி, இறுதியில் அது கூட உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. இலங்கை-இந்திய 1987 ஒப்பந்தப்படியும், அதுக்கு மேலும் வரலாற்று ஆவணப்படியும் கிழக்கு தமிழர்கள் தாயகபூமி. பிறகு இதை இணைப்பதும், பிரிப்பதும் என்று அரசியல் நடத்தி அமெரிக்காவுக்கு தாரை வார்க்கவா!அன்று, வரதராஜப்பெருமாள், இன்று கருணா, அவ்வளவே. கிழக்கில் அமெரிக்கா காலூனிறினால் என்று ஏன் தமிழீழத்தில் வாழவிரும்பாதவர்கள் யோசிப்பதில்லை!

இன்றும் அமெரிக்காவின் ஊதுகுழலாய் இருக்கும் சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group) ஈழத்தமிழர்களை சிறுபான்மனையினர் (உண்மையில் நாங்கள் ஒரு தனி தேசிய இனம் என்கிற உண்மையை திட்டமிட்டே மறைத்து யாருக்கு நீதி கேட்கிறார்கள்) எனவும், வடக்கைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டு கிழக்கை பற்றியோ அது தமிழர் தாயகம் என்பது பற்றியோ பேசுவதேயில்லை.

தமிழ் நெட் படித்துப்பாருங்கள் தெளிவாய் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் விளக்கியிருக்கிறார்கள் சர்வதேச நெருக்கடிகள் குழுவின் நிகழ்ச்சி நிரல் (Agenda) என்ன என்பதை. இதை விட மே 17 திருமுருகன் நேரடியாகவே சொல்லியிருக்கிறார் இந்த போலிகளைப்பற்றி.

ஆக, தமிழீழம் என்பது மலர ஈழத்தமிழர்களின் கழுத்தை பாம்பாய் சுற்றியிருப்பது தமிழீழத்தில் வாழ விரும்பாதவர்கள் மட்டுமல்ல, அடுத்தவன் கொத்து கொத்தாய் செத்தாலும் பரவாயில்லை என்கிற அமெரிக்க, இந்திய சுயநலக்கொள்கைகளும் தான்.

இந்தியாவை தமிழ் நாட்டு தமிழர்கள் பார்த்துக்கொண்டாலே எங்களுக்கு ஒரு விதத்தில் உதவிதான் :)

இப்படி பேசிக்கொண்டே போகலாம். ஆனாலும் இத்தோடு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

இன்னும் விவாதிப்போம் எதிர்காலத்தில் :)

வவ்வால் said...

ராஜ்,

உங்களுக்கு தனியா ஒரு பொருளாதார சீர் குலைவுனு ஒரு பதிவே போடனும் போல இருக்கே.

ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கிறார்கள் குறிப்பிடும் படியான முன்னேற்றம் இல்லை வேறு மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கிறார்கள் அப்போது இதய துடிப்பு முன்னேறுகிறது ஆனால் கிட்னி ஃபெயிலியர் ஆகி விடுகிறது. இப்போ யார் நல்ல மருத்துவர், முன்னவரா ,பின்னவரா?

ரெட் டேப்பிசம் மன்மோஹனுக்கு முன்னும் இருந்தது பின்னும் இருக்கு ஆனால் விதி தளர்ச்சிகள் எல்லாம் பெரும்பணக்காரணுக்கு சாத்தியமாகவும், மற்றவர்களுக்கு அசாத்தியமாகவும் ஆகிவிட்டது அவ்வளவே.பின்னர் விரிவாக பொருளாதாரம் பேசலாம்.
----

சர்க்காரியா கமிஷன் நேரடியாக கச்சத்தீவை பற்றியா பேசும் :-)) அப்போதைய நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பேசப்பயந்தார் கலைஞர் என்று பொருள், எல்லாவற்றுக்கும் நேரடியாக தொடர்பு இருந்தால் அரசியலை அனைவரும் புரிந்துக்கொண்டு வித்தைக்காட்ட மாட்டார்களா?

புத்த பிக்குகளோ ,புனிதர்களோ அவர்களையும் சிங்களவர் என்றே கருதி விட்டாச்சு, நான் சொல்ல வந்தது தமிழர்களுக்குள் இருந்த வேற்றுமையை. அதனைக்கொண்டே தமிழர்களை பலவீனப்படுத்தி இன்று வரையில் அமைதியின்மையை உருவாக்கினார்கள் சிங்களர்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இலங்கை விடுதலை அடைந்த போது சிங்களர்கள் மற்றும் இதர தமிழர்கள் விகிதாச்சாரம் கிட்டத்தட்ட சமம் என சொல்லும் அளவுக்கு இருந்தது. எனவே எளிதாகப்பேசி தனி நாடுக்கேட்டிருக்கலாம், ஆனால் பிரிட்டிஷாரிடம் விடுதலைப்பற்றிப்பேசும் போதே எவ்வளவு பேரை வெளியேற்ற வேன்டி இருக்கும் என்று பேசினார்கள்.ஏன் எனில் குடியேற்றியவர்கள் பிரிட்டீஷார் எனவே அவர்களை வைத்தே வெளியேற்ற ஒரு கொள்கை வகுத்தார்கள். அப்போதெல்லாம் யாருக்கும் தாய் மண் , தொப்புள்கொடி உறவெல்லாம் நினைவில் வரவில்லை :-))

இப்போதும் தனி நாடு ஏற்பட்டாலும் இலங்கையின் பூர்வகுடிகள் என்று சொல்லிக்கொள்ளூம் தமிழர்களுக்கே என்பது போலவும் மற்றவர்கள் பற்றி பேசக்கூடாது என்பதாகவும் பேசுகிறார்களே ஏன்? ஒட்டு மொத்த இலங்கை தமிழர்கள் என்று சிந்திக்க கூட தயாரில்லை.

இலங்கை விடுதலை அடைந்த போதே பிரிட்டீஷாரிடம் இந்தியா- பாக் போல தனிநாடு கேட்டிருக்கலாம், இலங்கை வாழ் மக்களுக்கு இந்தியாவில் என்ன நடந்தது என்று தெரியாமலா போய் இருக்கும். ஆனால் அப்போது குடியேறிய தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்றே கவலைப்பட்டு எதிர்காலத்தை கணிக்க தவறிவிட்டார்கள். அது எவ்வளவு பெரிய பிழை என்பது இன்று வரை நீடிக்கும் போராட்டத்தின் பின்னரும் உணர அவர்கள் தயாரில்லை.

இப்போது சில கேள்விகள்,

தமிழ் ஈழம் அமைந்தால் எத்தனை புலம் பெயர் தமிழர்கள் மீள்குடியேற விரும்புவார்கள்?

தனி ஈழத்தின் தலைப்பொறுப்பு யாருக்கு? தேர்தல் நடக்கிறது என்றால் தலைவராக யார் முன்னிறுத்தப்படுவார்கள்?

இந்தியா ,அமெரிக்கா ஆகியவை சுயநலத்தோடு அனுகுவதாக சொல்லிக்கொண்டே ஏன் அந்நாடுகளின் மூலம் முடிவை தேட வேண்டும், ஒரே அடியாக நீங்கள் உங்கள் வேலையைப்பாருங்கள் என்று சொல்லிவிடலாமே, அவர்களை எதிர்ப்பார்க்க போகத்தானே அவர்களது அரசியல் அபிலாஷைகளை உட்புகுத்துகிறார்கள். இது எதுவும் தெரியாமலா இம்மக்கள் இருக்கிறார்கள்?

இப்போது பேசும் போதும் ஒரு சாரர் நாங்கள் தான் தேசிய இனம் எங்களை மையமாக வைத்தே பேச்சு வார்த்தை, உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும் என்பதாக பேசுவதலேயே தனி நாடு என்ற கோரிக்கை நீர்த்துப்போகிறது. தமிழ் பேசும் மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்ப்பட வேண்டும். குறைந்த பட்சம் தன்னாட்சி பெற்ற ஃபெடெரல் அரசாவது தமிழர்களுக்கு அமைய வேண்டும் என்ற நோக்கில் பயணித்தால் மட்டுமே முகாம்களில் மற்றும் வெளியில் இருந்தாலும் அச்சமுடன் வாழும் இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும். மற்றபடி அயல் நாட்டில் வசதியாக வாழ்ந்துக்கொண்டு அடைந்தால் தனி ஈழம் இல்லையேல் போராட்டம் ஓயாது என்று பேசிக்கொண்டிருந்தால் இன்னும் ஒரு நூறாண்டு ஒடும் :-))

தொடரும்...
----

வவ்வால் said...

தொடர்ச்சி...

முள்வேளி முகாம் மிக கொடுமை என இலங்கை முகாம்களைப்பற்றிப்பேசும் தமிழக தலைவர்கள்(வைகோ,சீமான், பழ.நெடுமாறன்) எத்தனைப்பேர் தமிழக அகதிகள் முகாம்களின் நிலையைப்பற்றி பேசி இருக்கிறார்கள்.

இலங்கையிலாவது முகாம் வாழ்கை இப்போது தான் , தமிழகத்தில் 80 களில் இருந்தே துவங்கிவிட்டது, மொத்தம் 67 இடங்களில் முகாம்கள் இருக்கு என நினைக்கிறேன். எல்லாமே குடிசைகள், தகரக்கொட்டகைகள், அவற்றில் குறைவான பொது கழிவிடம்/குளியலரை, ரேஷன் அரிசி, மண்ணென்னை, சிறிய உதவி தொகை, வேலை வாய்ப்பின்மை ,கல்விக்கு பல தடைகள் ,பட்ட கல்விக்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும், மருத்துவம், பொறியியல் கல்விக்கு சிறப்பு அனுமதி தேவை, இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை எல்லாம் இல்லை.எனவே பெரும்பாலோர் நல்ல கல்வி பெறுவதில்லை. இப்படியான கடின சூழலில் பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக சில லட்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என எவரும் யோசிப்பதில்லை.

என்றாவது யோசித்திருப்பார்களா ஏன் தமிழக முகாம்களில் இருப்பவர் ஒருவரும் இணையத்தில் உலாவுவதில்லை என ,ஏன் எனில் கணினி என்பதே எட்டாக்கனி அவர்களுக்கு அப்புறம் எங்கே இணையத்தில் கருத்து சொல்ல வரப்போகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

ரதி!உங்கள் கருத்துடன் பின்னூட்டத்தை முற்றுப்புள்ளி வைக்கலாமென்றிருந்தேன்.ஆனால் பதிவர் வவ்வாலின் தொடர் கருத்துரைகளால் மீண்டும் மறுமொழி வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்கிறது.

விடுதலைப்புலிகளின் இறுகிய தன்மையாலும்,தமிழீழம் மட்டுமே என்ற கோட்பாட்டால் வளையாத தன்மையாலும்,30 வருட கால ஆயுதப் போரின் வன்முறைகள் காரணத்தால் இயக்கத்திற்கு எதிரான நிலை பெரும்பாலான நாடுகளால் உருவானது.தடை மற்றும் 9/11ன் உலக அரசியல் மாற்றம் போன்றவை விடுதலைப்புலிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

மேலும் உலக ஊடகவியளாலர்களுடன் கிளிநொச்சியில் நிகழ்ந்த கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வு.அன்ரன் பாலசிங்கத்தால் மட்டுமே ஊடகவியளாலர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தது. ராஜிவ் காந்தியின் மரணத்தை துன்பியல் என்ற ஒற்றைச் சொல்லால் முடித்து விட்டது,அன்ரன் பாலசிங்கத்தின் இறப்பு,தமிழ்ச்செல்வன் இழப்பு.கிளிநொச்சி இடப்பெயர்ச்சி போன்றவை விடுதலைப்புலிகளுக்கு மிக மிக பின்னடைவுகள்.

இதே ஜி.எல் பெரிஷ் தலைமையில் பேச்சுவார்த்தை மேசைக்கு உட்காரும் தகுதிகளையெல்லாம் வளர்த்துக்கொண்டும் கூட தீர்வுக்கான வழிகளைத் தேடியும்,இந்திய,அமெரிக்க தலையீடுகள் இல்லாத நேரத்தில் தவறவிட்டு விட்டது கூட விடுதலைப்புலிகளுக்கான பின்னடைவாகவே தோன்றுகிறது.

இன்னும் நமக்கு தெரியாத உண்மைகள் நிறைய மரணித்து விட்டன.விமர்சனங்களுக்கும் நிறைய நிகழ்வுகள் உள்ளன.ஆனால் இவைகளையெல்லாம் தாண்டி சாத்வீக,ஆயுதப் போராட்டத்தின் அடிப்படையிலும்,மக்கள் துயரங்களின் அடிப்படையிலும்,சம உரிமையற்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும்,சுதந்திரத்தின் தேவைகள் இன்னும் நீரு பூத்த நெருப்பே. பிரதேச வாதங்களைக் கடந்து வடக்கும்,கிழக்கும் இன்னுமொரு முறை ஜனநாயகப் போராட்டத்துக்குள் குரல் கொடுக்கலாம்.ரத்தம்,ஆயுதத்தை விட மக்கள் குரல் வலிமையானது.ஆனால் உலகம் முழுக்க கேட்க கால அவகாசம் இன்னும் தேவைப்படும்.அதற்கான சூழல் இப்பொழுது ஆரம்பம் என்ற போதிலும் தமிழர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தும்,இலங்கை அரசின் அணுகுமுறைகள் பொருத்தும் நிகழ்வுகள் அமையும்.

இங்கே குறைகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கான ஜனநாயக போராட்டம் இன்னும் தேவையான ஒன்றே.அதுவே குறைகளையும் தாண்டிய உச்சம்.

ராஜ நடராஜன் said...

வவ்!உங்களுக்கு மன்மோகன் சிங் எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும்?அவரை பொருளாதாரவாதின்னு ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்கிறீர்கள்:)

சரி!அவரை விடுங்க.கலைஞர் கருணாநிதி கறுப்பு,சிகப்பு துண்டிலிருந்து மஞ்சள் துண்டு வரைக்கும்,சர்க்காரியாவிலிருந்து 2G வரைக்கும் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டார்.

http://parvaiyil.blogspot.com/2011/02/blog-post_16.html

இந்தப் பதிவோடு கச்சத்தீவு பற்றிய தினமணியின் தலையங்கம் ஒட்டவைத்திருந்தேன்.காக்கா தூக்கிட்டு போயிடுச்சு போல.தேடி தாவு தீர்ந்து விட்டது.நாளை தேடலை தொடர்ந்து மீண்டும் பதில் சொல்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,,

மன்னு உங்களுக்கு எவ்ளோ கொடுத்தாரோ அவ்வளவு எனக்கு கொடுக்கணும் :-))

அவரை கழுவி கழுவி ஊத்துற அளவுக்கு எல்லாம் சமாச்சாரம் இருக்கு , எனக்கு பொறுமை இல்லை அதனாலேயே கிடப்பில் கிடக்கு கூடிய சீக்கிரம் ஒரு பதிவு தயார் செய்கிறேன்.

கலைஞருக்கு வீராணம் காலத்தில இருந்து மஸ்டர் ரோல் போல பல புராணம் இருக்கு, எல்லாமே அரசியல் மேடையில் பலராலும் பாடப்பட்டாச்சு மக்களுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்பதால் காலம் தள்ளுகிறார் மஞ்சள் துண்டு.

கச்சத்தீவு பதிவு படிச்சேன் எதுவும் விரிவாக இல்லையே, ஒரு வேளை காணாமல் போன தினமணி தலையங்கத்தில இருக்குமோ?

2011 இல் அம்மையார் கச்ச தீவு மீட்க ஒரு தீர்மானம் போட்டு அரசியல் சட்ட உதாரணம் எல்லாம் காட்டி இருக்காங்க மேற்கு வங்கப்பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டு அப்போத்ஐய மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய் உச்ச நீதி மன்றத்தில் வழக்குப்போட்டு மீட்டதன் அடிப்படையில் அத்தீர்மானம் இருக்கு, சட்டப்படி முன்னுதாரணம் இருப்பதை ஏன் இத்தனை நாளாக யாரும் பயன்ப்படுத்தவில்லை என்பது ஒரு பெரிய மர்மமே.