Followers

Wednesday, August 8, 2012

முந்தைய பதிவுக்கும் முந்தைய பதிவு - பின்னூட்ட பகுதி 2

கருத்தும் சொல்றாங்க அதை விட  கொம்பு மான்கள் டமால்ன்னு முட்டிக்கிற மாதிரி இருக்குது பின்னூட்ட ஹெவி வெயிட் சாம்பியன்களின் சில பின்னூட்டங்கள்.அழுவதா அல்லது சிரிப்பதா அல்லது சிவாஜிகணேசன் மாதிரி சிரித்துக்கொண்டே அழுவதான்னு தெரியவில்லை.கருத்துக்கு கடை பொறுப்புன்னு..பேச அனுமதி கொடுத்தால் வாஷிங்கடனிலிருந்தோ, பரங்கிமலைல விமானம புடிச்சு இதோ வாரேன் பார்ன்னு உதார் விடுவதற்கும் இத்துணூண்டு இந்த டீக்கடை என்ன செய்ய முடியும்?வடிவேலு செய்யும் அலம்பலுக்கு.டீ ஆத்துபவர் அப்பாவித்தனமா பார்த்துகிட்டிருக்கிற நிலமை எனக்கு.ஆட்டத்தை துவங்கி வச்சதே நான் என்பதால் வேறு வழியில்லாமல்
இனி விட்டேனா பார்ன்னு முந்தைய பதிவுக்கு முந்தின பதிவுக்கான பின்னூட்டஙகளின் தொடர்ச்சியாக விட்டுப்போன கருத்துக்களின் தொடர்ச்சி.

உண்மைகள்: வெளி நாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு என்றால் இந்தியா மறுபடியும் 1990 கால கட்டங்களை மீண்டும் நெருங்கிக் கொண்டிருக்கிறதா அல்லது அதிக தங்க பயன்பாட்டால் உற்பத்தி தேவை என்ற அடிப்படையில் தங்க விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியா இது?

தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் மீது ஏன் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.நாம் தங்கத்துக்கு தரும் மதிப்பை அமெரிக்காகாரர்கள் வெள்ளிக்கு தந்து சேமிக்கிறார்கள்.

நரேன்: வழக்கமாக சகோ.சார்வாகன்,பாஸ் வவ்வால் கடையில்தானே டீ குடிப்பீர்கள்:) இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.

செஞ்சிலுவை சங்க சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.ஒரு தேசம் மக்களையும்,மரணத்தையும் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது போர் காலகட்டத்தில் புரிந்து விடும்.ருவாண்டா மற்றும் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளோடு ஆசிய நாட்டின் சாட்சியாக கம்போடியா கேமர் ரூச் படுகொலைகளும்,புத்த பூமியாய் இலங்கையின் கொலைக்களமும் சாட்சி.

இந்தியாவில் அரசாங்க ஊழியர்கள், அமைப்புகள், இறந்தவரின் உடலை நடத்தும் விதம், உண்மையில் மனிதாபிமானமற்றது. சென்னை பொது மருத்துவமனை சவகிடங்கில் ஒரு நாள் இருந்தால் அதன் உண்மை, வலி தெரியும். என்ற உங்கள் கருத்தோடு துளசி டீச்சரும் ஏற்கனவே சென்னையின் மரண அவலங்களை பதிவு செய்திருக்கிறார்.

//இந்தியாவில் பலரும் பலவிஷயத்துக்கும் இலஞ்சம் வாங்குகிறார்கள், சவுதியில் மன்னர் குடும்பம் மட்டுமே அனைத்து விஷயத்துக்கும் இலஞ்சம் வாங்கிவிடுகிறது, மற்றவர்கள் வாங்கினால் அதோகதிதான். அதனால் இந்தியாவில் இலஞ்சம் சவுதையை விட அதிகம் இருப்பதை போல வெளித்தோற்றத்தில் தெரிகிறது. //

இந்தக் கருத்து சவுதிக்கு பொருந்துமா என்பது தெரியவில்லை.நம்மூரில் மேசைக்கு அடியில் நிகழும் Kick backs மேசையின் மீதே சதவீத ஒதுக்கீடு என்ற முறையில் நாட்டின் பெரும் திட்டங்களில் நிகழ்ந்து விடக்கூடும்.ஆனால் பெட்ரோலிய வருமானத்தின் தொகையை நாட்டின் நலன் திட்டங்களுக்கும் செலவிடுகிறார்கள் என்பதும் உண்மை.குவைத் ஒரு படி மேல் போய் நாளை பெட்ரோல் தீர்ந்து விட்டால் எதிர்கால சந்ததி என்ன செய்யும் என்ற தூரப்பார்வையில் விற்கும் பெட்ரோல் பேரலின் ஒரு விகிதாச்சார டாலரை குவைத் பண்ட் என உருவாக்கி வளர்ச்சியற்ற நாடுகளின் உதவிக்கு கடன் வாங்கிக்கொள்ளும் படி உதவி வருகிறார்கள்.

நீங்களும் அரேபிய நாடுகள் குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்து கலந்து கொள்கிறீர்கள் என்று அவதானிப்பதால் மொத்த வளைகுடா நாடுகளுக்கான எதிர் விமர்சனங்களும் சவுதியின் காரணம் கொண்டே எழுகிறதென நினைக்கின்றேன்.

இந்தியாவில் இலஞ்சம் சவுதியை விட அதிகம் இருப்பதை போல வெளித்தோற்றத்தில் தெரிகிறது என்பது எப்படியிருக்கிறதென்றால் வக்கீல்  குற்றம் செய்த தனது கேஸ்காரருக்கு எப்படியும் வெற்றியைப் பெற்றுத்தந்து விடவேண்டுமென்று வாதாடுகிற மாதிரி இருக்கிறது:)

வருண்: மல்லுக்கட்டனுமின்னே சுத்துவீங்களா? இல்ல சுத்திகிட்டே மல்லுக்கட்டுவீங்களா?போன பின்னூட்டத்துல வேகநரிகிட்ட உங்களுக்குத்தான் சிபாரிசு செய்து பேசினேன்.இப்ப வேகநரிக்கு வக்காலத்து வாங்கறேன்.ஓடி ஓடிப் போய் பின்னூட்டம் போடறதால அவர் வேகநரின்னு ஆங்கிலத்தில் பெயர் வச்சுகிட்டார்.பின்னூட்டங்களில் ஆங்கில புலமை காட்டுவதில்லையே என்பது அவரது வாதம்.முன்னாடியெல்லாம் ஒருத்தர திட்டனுமின்னா ஆங்கிலத்தை பயன்படுத்துவீங்க.இப்ப தமிழ்பாண்டித்யமும் தெரியுது.எப்படித்தான் எல்லோருடமும் வாங்கி கட்டிக்கனுமின்னே அலட்டிக்காம சிக்ஸர் அடிக்கிறீங்களோ! வேகநரியெல்லாம் ஜுஜுபி.போன வருசமோ அதுக்கு முந்தின வருசமோ  ஒருத்தர்(பெயர் மறந்து விட்டதே) உங்க பதிவில் அசராம ஆடுனார் பாருங்க.அது ஆட்டம்:)

ராவா இருந்தாலும் சரக்கு நல்லா இருக்குதுங்கிற மாதிரி காட்டுமிராண்டி நாட்டுல போயி எதுக்கு நிக்கிற?  என்ற கேள்வி சரியான ஒன்றே.

மறுபடியும் உங்க பின்னூடத்துக்கான தொடர்ச்சி

எதையாவது உளறுவதற்கும் கூட மேதாவித்தனம் தேவையானதுதான் வருண்:! அதுவும் இரவலாக தேடி கண்டுப்டிச்சாலும் கூட அதனை எழுத்துக்குள்,பதிவுக்குள் கொண்டு வருவது கடின உழைப்பு.அதனைக் கொச்சைப்படுத்தாதீங்க.முடிஞ்சா வவ்வாலின் பதிவுகளில் உள்ள குறையை அவரது பதிவுகளில் சுட்டிக்காட்டுவது உங்க புத்திசாலித்தனத்தைக் காட்டும்.

உங்கமாதிரியே வவ்வாலும் எதிர் விமர்சனங்களை நோக்காமல் தனது கருத்தை ஆழமாக எங்கேயும் முன்வைப்பவர். என்பதால் வாங்கி கட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டாக கூடும்.ஆனால் கருத்து விவாதத்தில் யார் வெல்கிறார்களா என்பதே முக்கியம்.வவ்வால் செய்வது சண்டித்தனமென்றால் நீங்க செய்வதற்கு பெயர் என்னங்க வருண்?உடனே முன்பு நீங்க சொன்ன மாதிரி வவ்வாலுக்கு சார்ந்து பேசுறேன்னு சொல்லாதீங்க.அவரிடமும் சில சமயம் சண்டித்தனம் வெளிப்பட்டாலும் உங்க சண்டியர்தனம் நீங்க சொல்லும் பட்டைச் சாராயம் மாதிரியே ரொம்ப ராவாத்தான் இருக்குது:)

வவ்வால்:அப்பாலிக்க ஒப்பாறி வச்சு அய்யோ வவ்வால் என்னை கொல்லுறான்னு ராஜ நடைக்கிட்டே பஞ்சாயத்து வைக்க கூடாதுங்கிற வரிகளைப் படிக்காமல் மனதில் இருந்தைதான் மேலே வருணுக்கு பதில் சொன்னேன்:).உங்க இரண்டு பேருக்கும் என்னதான் பிரச்சினை?யார் எட்டடியிலிருந்து பதினாறு பாய்வதென்ற போட்டியா?அல்லது பேட்டைக்கு சண்டியர் யாருன்னா? இருவருக்குமான பதிவுலக நிலைப்பாடு இதுதான்னு தெரிந்த பின்பும் கண்டுக்காம விலகிச் செல்வதை விட்டு விட்டு இது என்ன சின்னபுள்ளத்தனமா ஒருத்தருக்கு ஒருத்தர் எகிறிகிட்டு.வருண் சொல்லும் கருத்துக்களில் நியாயமில்லாமலில்லை.அதே போல் இந்தியாவை கொண்டு வந்து முட்டுக்கொடுக்காமலிருந்தால உங்கள் விவாதத்திலும், சகோ.சார்வாகன் வாதத்திலும் பொருள் இருப்பதோடு சரியான விவாதமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.ஆனால் நடைமுறை சாத்தியம் என்ன என்று ஒப்பிடும் போது இந்திய ஒப்பீடு உங்கள் கருத்துக்களை பின் தள்ளி விடுகிறது என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆமா!ஓல்டு மாங்கா ன்னா:? மாங்கேதானா,மாங்கா அல்லது மிலிட்டரியா:)

வருண்:எதுக்குய்யா காட்டுமிராண்டி நாட்டுக்குப் போயி வாழனும்?நம்ம ஊர்லேயே இருக்க வேண்டியதுதானே என்ற உங்க கேள்வியும் பதிலும் சரியே.ஆனால் வெற்றிக்கொடு கட்டு படம் வந்த பின்பும் காட்டுமிராண்டி ஊருக்குப் போவதில் மாற்றமிருக்கிறதா என்றால் இல்லையென்பதுதான் உண்மை.

பச்சை லேபிள் ஜானிவாக்கரை ஏர்போர்ட்ல பார்த்தேன்.பிளடி மேரியக்கூடத் தெரியும்.யாரது க்ளெண்டிஃபிஷ் மாரி?

வேகநரி:வவ்வாலும்,வருணும் நல்லா விவாதம் செய்றாங்க என்ற போதிலும் அவஙக மொழி நடை  பதிவின் விவாத களத்தை திசை மாற்றுகிறது என்பதில் சந்தேகமேயில்லை.கூட மத்தளம் போடும் நீங்களும் அதே தவறைத்தான் மென்டலான்னு கேள்வி கேட்டவரையே மென்டலான்னு வடிவேலு மாதிரி திருப்பிக் கேட்கிறீங்க;கச்சேரி நடத்துறவங்களையே பூட்டி வச்சிட்டா அப்புறம் உட்கார்ந்து சங்கீதம் கேட்பது யார்?மாடரேசன் பதிவுலகில் இதுவரை எனக்குப் பிடிக்காத வார்த்தை..போகும் வரை போகட்டும்.

வருண்: இதோ மேலே வேகநரி சொல்லி முடிக்கலை.நீங்க கச்சேரியை ஆரம்பிச்சிட்டீங்க.பொறம்போக்கு ஐடி வச்சிருக்கிறது தப்புன்னா முதலில் கூகிளைத்தான் திட்டனும் நீங்க.பக்கத்துலதானே இருக்கிறீங்க.ஒரு எட்டு கூகிள் ஆபிஸ் போயிட்டு வர்றது:)

வவ்வால்: இதோ வந்துட்டாரு எதிர்ப்பாட்டு வில்லு:)வாய் மட்டும் வாஷிங்க்டன் வரைக்கும் கிழியுது:-)) எங்கிருந்துதான் சுரம் பிடிக்கிறீங்களோ:)

இஸ்லாமியர்கள் அமெரிக்கா போனால் ஏர்ப்போர்ட்டில் கடுமையாக நடத்துறாங்கன்னு நிறைய பேர் அமெரிக்காவே போவதில்லை.என்னோட சின்ன பாஸே அமெரிக்காவில் படிச்ச படிப்பை விட்டுட்டுத்தான் இங்கே என்னோடு குப்பை கொட்டுகிறார்.9/11 க்குப் பின் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அமெரிக்காவை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை அதிகம்.அதேபோல் போகவிரும்பாதவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

அதே போலவே இங்கு இருந்தும் காட்டுமிராண்டி நாட்டுக்கு ஒரு கும்பல் போகுது, என்ன செய்ய,அதுக்காக சாகடிச்சா கேட்காம இருப்பாங்களா? என்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான்.ஆனால் சில நேரங்களில் கேட்காமல் இருக்கின்ற சூழலே என்பதால் உங்கள் விவாதம் வெற்றி பெறுகிறது.இதோ இந்தப் பின்னூட்டத்தை தட்டச்சு செய்யும் போது உபவாச காலங்கள் புனித நாட்களாக கருதப்படும் இந்த நேரத்திலும் Raped victims cry for help என்ற தலைப்போடு இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட irreversible திரைப்படம் மாதிரியான  செய்தி வருகிறது. இது மொத்த மக்களின் குணநலன் பிரதிபலிப்பாக இல்லாத போதும் இந்தியாவில் இதுபோன்ற தவறுகளுக்கு குறைந்த பட்சம் சட்டப்படி குற்றங்களுக்கான புகார் செய்து விடமுடியும்.

வருண்:அவன் நாட்டு சட்டம் பிடிக்கலைனா போகக்கூடாது, அம்புட்டுத்தான். இல்ல நான் போவேன்னு நின்னா, அது முட்டாள்த்தனம். என்பதை மேலே அமெரிக்காவிலிருந்து 9/11க்குப் பின் திரும்பியவர்களோடு ஒப்பிடலாம்.நிறைய பேர் அப்படி வந்திருக்காங்க.ஆனால் இந்தியர்களும் அப்படி செய்ய முடியாத பொருளாதார சூழ்நிலைகள் இன்னபிற காரணிகள் இருக்கின்றன என்பதே பிரச்சினை.

சுவனப்பிரியன்: நீங்க வருணுக்குப் போடும் அடிச்சு விளையாடுறீங்க முதுகு தட்டல் கருத்து சார்ந்து சரியானதே.இந்திய பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒரு காரணியாக வளைகுடாப் பொருளாதாரம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.வீட்டுப் பணிப் பெண்கள் உட்பட முடிந்தவரை பணத்தை தமது நாட்டுக்கே அனுப்பி விடுகின்றனர்.

இந்தியர்களை அரபு நாட்டுக்கு அனுப்ப நம் அரசு தடை விதித்தால் அவர்கள் பங்களாதேஷிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ ஆட்களை எடுத்துக் கொள்வார்கள். இந்த வகையிலும் நஷ்டம் நமக்குத்தான். என்ற உங்கள் கருத்தை நானும் பிரதிபலித்திருக்கிறேன்.

ஒரு அரபி பணிப்பெண்களிடம் தவறாக நடந்தால் அதற்கான தண்டனை பெற்றுத்தரும் சட்டமுறை இல்லையென்பதுதான் வவ்வாலின் வாதம்.நீண்ட நேர பணி,உடலியல் தவறுகள் அரபுநாடுகளில் இல்லாமல் இல்லையென்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய வாதமே.ஆண்களை விட பெண்களே தூதரகங்களில் அதிகம் தஞ்சம் புகுவது இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

ரியாஸ்: நீங்களுமா திட்டக் குழுவில் சேர்த்தி!அவ்வ்வ்வ்வ்.

வருண்: தவறில்லாத இடம் ஏது என்பது மேல்பார்வைக்கு சரியாக இருந்தாலும் இந்தியாவில் கத்த முடியும்,சண்டை போட முடியும்,போலிசுக்கு புகார் செய்ய முடியும்.தர்ணா செய்ய முடியும்,முடிந்தளவுக்கு தவறுக்கு ஆமை வேகத்தில் தண்டனையும் வாங்கித் தந்து விடமுடியும் என்பதால் இந்தியா உசத்தி.இங்கே சட்டப்படி வேகமாக தண்டனை வாங்கிக்கொடுக்கும் சட்டவரைவுகள் இருந்தாலும் இறுதி வாய்ப்பான நீதிமன்ற படிக்கட்டுக்களை நெருங்குவதில் சிரமங்கள் உள்ளன என்பதால் உடனடி நிவாரணங்களுக்கான சாத்தியங்கள் இல்லாமல் போகிறது.

இன்னொரு நாட்டுக்குப் போனால் அங்கே உள்ள சட்டதிட்டங்கள் படி நடந்தால் பிரச்சினை வராது என்பது நீங்கள் குறிப்பிடும் கள்ளக்குடி,தப்பு செய்வது  போன்றவற்றில் உங்கள் வாதம் சரியானது.

வவ்வால்:பின்னூட்டங்கள் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சா இப்பத்தான் பார்ம் ஆகிறீங்கன்னு நீங்களும் வருணும் பார்ம் ஆகுறதைப் பார்த்தா கருத்துக்களிடையேயும் நீங்க சொன்ன வாய் வாஷிங்கடனுக்கும் பரங்கிமலையையும் தாண்டி கூவத்து பாலம் வரைக்கும் வந்துடுச்சு.இனி தொபுக்கடீர்ன்னு கீழே குதிக்க வேண்டியதுதான்.இரண்டு பேருக்கும் விவாதிக்கிற திறமை எவ்வளவு இருக்குதோ அந்தளவுக்கு முண்டாசு தட்டறதிலேயும் குறைவேயில்லை.அந்தக்கடைசிக்கும் இந்தக்கடைசிக்கும் உட்கார்ந்துகிட்டே இவ்வளவு வாயாடித்தனம்ன்னா சட்டசபை சண்டைகளையெல்லாம் குறை சொல்லவே முடியாதுங்கிற மாதிரி இருக்குது உங்க வாய்ச்சண்டை. இருவருக்குமிடையேயான பொது வாக்கு வாதத்திற்கு பரம்பரையையெல்லாம் ஏன் இழுக்கனும்?இளுக்கு.
வருண் வாயாடும் சந்தர்ப்பத்தையும் நீங்களேதான் உருவாக்கிக் கொடுக்கிறீங்க.

மீண்டும் உங்கள் பின்னூட்டத்துக்கே தொடர்ச்சி

கமரூதீன் நிலையிலிருந்து கொஞ்சம் யோசியுங்கள்.நீங்க சுவனப்பிரியனை வாக்குவாதத்திற்காக கேட்கிற கேள்வி சரி மாதிரி தோன்றினாலும் மனிதாபிமான அடிப்படையில் சரியாக இருக்காது.நிகழ்வுகள் எதுவென்று சரியாக நமக்குத்தெரியாது.ஆனால் ஒருவருக்கு உதவி செய்யும் முயற்சியை விமர்சனம் செய்வானேன்?

வருண்:யாருக்கு மறை கழண்டுடுச்சுன்னு பின்னூட்டங்களைப் படிப்பவர்களுக்கே இப்ப மறை கழண்டிருக்கும்:) சங்கரராமன் கொலை வழக்கில் சட்டம் இதுவரை வளைஞ்சு கொடுக்குது என்பது மட்டும் உண்மை.தெய்வம் இன்றும் கொல்லவில்லை.அரசு நின்று கொல்லுமா என பார்க்கலாம்.

வவ்வால்:கமரூதினுக்கான தண்டனையாகட்டும் அல்லது சங்கர ராமன் கொலை வழக்காகட்டும் உங்கள் நிலைப்பாடு இரண்டுக்கான விமர்சனங்களோடு அடிப்படையில் மனித நேயம் என்பதை உங்களுக்கான ஏகமொத்த பதிவுலக பின்னூட்டங்கள் பறைசாற்றும் என்பதில் சந்தேகமில்லை.வக்கீலுக்கான பணம் செலவழிக்கும் திறமையைப் பொறுத்தும்,குற்றத்தின் தன்மை பொறுத்தும் தீர்ப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆனால் கமாரூதினுக்கு ஒரு சட்டம்,கந்தசாமிக்கு ஒரு சட்டமென பாகுபாடுகள் இல்லை.குற்றத்தின் தீவிரத்தன்மையாக கொலைக்குற்றம், போதை மருந்துகள் கடத்தல் போன்றவற்றிற்கு கடும்தண்டனைகள் உள்ளன.இரண்டு வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்.அரச பரம்பரையின் இளம் ஷேக் ஒருவனே போதை மருந்து வியாபாரத்தை இந்தியாவில் ஆந்திராவை சார்ந்த வாகன ஓட்டி உட்பட பெருமளவில் செய்ததை வாகன ஓட்டி போலிஸால் அகப்பட்டு  குற்றம் நீதிமன்றம் வரை சென்று இளம் ஷேக்குக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 
சில நியாயம்,போராடும் வலிமையைப் பொறுத்து நீதிமன்றத்தில் வென்று விடலாம்.என்னை ஏமாற்றியதுமில்லாமல் நாய்க்குட்டி வளர்த்தற்காக ஒரு மணிநேரம் கம்பியில்லா லாக்கப்பில் என்னை நிறுத்தி வைத்த பக்கத்து வீட்டு சேட்டனுக்கு தண்டனை வாங்கித் தந்ததை முன்பு பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன் என்பதும் கூட கொசுறு தகவல்:)

கைக்கு கை,கண்ணுக்கு கண் என்ற தண்டனையிருந்தால் உலகில் பார்வையுடையவர்களாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்ற காந்தியின் வாக்குப்படியென்றால் மரண தண்டனை உட்பட காட்டுமிராண்டி சட்டம் என்பதில் உங்கள் விவாதம் வெல்கிறது.

சுவனப்பிரியன்:கமரூதின் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டாரோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிறைவாசம் அனுபவிக்கிறாரோ அவரை சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்க நீங்க போட்ட பதிவுக்கு பாராட்டுக்கள்.விவாதத்திற்கு வேண்டுமென்றால் வவ்வாலின் வாதம் சரியாக இருக்ககூடும்.கமரூதீனின் பெற்றோர்,உறவினர்கள் நிலையிலிருந்து கமரூதீன் பிரச்சனையை அணுகவேண்டும்.

ஏற்கனவே பதிவும்,பின்னூட்டங்களும் ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுத்துகிட்டுப் போகுது.ஆத்தாவையும்,தாத்தாவையும் இங்கே இழுத்தால் இந்த விவாதக்களம் இப்போதைக்கு முடிஞ்ச மாதிரிதான்:)

வேகநரி:வந்துட்டீகளா ஷேக்சாபோன் வாத்தியக்காரரே:)செந்துறை என்ற தமிழ்கிராமத்தை சார்ந்த கமரூதீன் என்று நீங்க துப்பறிவதைப் பார்த்தால் நீங்க என்னமோ எனக்கு தெரிஞ்ச நரி மாதிரி தெரியுதே!ஐ.பி இன்னபிற துப்பறியும் உபகரணங்கள் மீதெல்லாம் எனக்கு விருப்பமே கிடையாது.தொடர்ந்து பின்னூட்டம் போடுங்கள்.நரியை லபக்கென்று பிடித்து விடலாம்:)

சிறைத்தண்டனை பல அனுபவத்தை கொடுக்குமென்பதால் யாருக்கும் ஏண்ண மாற்றங்கள் வருவது இயல்பானதுதான்.

வருண்:மறுபடியும் சங்கரராமனா!நீங்க சொன்னமாதிரி அவரோட ஆவி அலையறதுங்கிறது உண்மையாக இருக்குமோ?
உங்களுக்கு வவ்வால்,வேகநரின்னு இரண்டு (அப்)பிராணிகள் கிடைச்சுருக்குங்ற குசில எப்படியாவது சூப்பு வச்சு குடிச்சிடனுமின்னு சுத்திறீங்க போல இருக்குதே:)சரி இவங்கதான் உங்களைக் கடிக்கிறாங்கன்னா பார்ப்பான்ங்கிற வேதாளம் எங்கே வந்து தொலைந்தது?வருண் நீங்க நல்லவரா இல்ல கெட்ட கெட்டவரா?
என்னமோ நரிதான் தண்டனையை ஒழிச்சு வச்சிருக்கிற மாதிரி உண்மையை சொல்லு!!கொலை செஞ்சவன் சாகிறதுக்காக காத்து இருக்கீங்களா??ன்னு கொட்டையெழுத்து போடுறீங்க:)
கிரிமினல் சட்டத்தின் ஓட்டைகளையெல்லாம் நீங்களே சொல்லிக்கொடுத்து கேஸை கவிழ்த்துப்போடுவேள் போல இருக்கே!

Srinivasan: You sound great but an applause in english also prohibited here:) However your comment of "there are people different in all place" is valid here.Thank you sir.

வவ்வால்: வருணுக்கு சரக்கு தீர்ந்து போச்சுன்னா வேணுமின்னா சொல்லுங்க.சுவனப்பிரியன் வெறும் ஹலால் பீர்தான்.இப்ப அதுவுமில்லாமத்தான் இருக்கார்.

”கமாருதீன் நிராபராதி என்று சொன்னால் ,சவுதி சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மை ஆகிவிடும்,

சவுதி சட்டம் சரியானது என்றால் கமரூதீன் குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்”


உங்களுக்கும் ஜெத்மலானிக்கும் ரியால் கொடுத்து டிக்கெட் எடுத்து சவுதிக்கு அனுப்பித்தான் வாதாட வைக்க வேண்டும்.அருமையான வாதம்.என்ற போதிலும் நாம் அனைவருக்குமே நம்மையறியாமல் இந்திய,அரபு தேச ஒப்பீடுகள் வந்து விடுவதால் ஒரு தேசத்தின் குறை இன்னொரு தேசத்துக்கான வலுவாகவும் இன்னொரு தேசத்தின் வலு மற்றொரு தேசத்தின் குறையாகவும் காணப்படுகிறது.இந்திய பிரச்சினையை இந்தியாவொடும்,அரேபிய பிரச்சினையை அரேபிய தேசம் சார்ந்து விவாதித்தால் மட்டுமே ஒரு நிலையான தீர்ப்புக்கு நாம் வர இயலும்.

வருண்: தட்டச்சில் கீழே நீங்க நின்று கூவுவதை நான் கவனிக்காமலே இந்திய பிரச்சினையை தனியாகவும் அரேபிய பிரச்சினையை தனியாகவும் பார்க்கலாமென்றேன்.கமரூதீன் பிரச்சினையென்றாலும்,சங்கரராமன் பிரச்சினையென்றாலும் அவரவர்களுக்கான துயரப்பிரச்சினை.என்ற நினைப்பில் பேசுவோமே?உங்கள் மொழியியல் நீங்கள் வைக்கும் கருத்தின் தரத்தை குறைக்கிறது என்பதோடு எழவு சொற்கள் நீங்கள் கமரூதீனுக்கும்,சங்கரராமனுக்கும் வாதாடுகிறீர்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தாமலில்லை.

சுவனப்பிரியன்: சகோ.வவ்வாலின் வாதம் நியாயமான ஒன்றே.ஆனால் கமரூதீனுக்கும்,அவர் குடும்பத்துக்குமான மனிதாபிமான உதவிகளை யோசிப்போம்.குறைந்த சம்பளத்திற்காக பீகாரிகளை வேலைக்கு அமர்த்திக்கொள்வது இப்பொழுது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை எப்படி கையாள்கிறோம்,உணர்கிறோம் என்பதைப் பொறுத்து கிட்டத்தட்ட அரேபிய நாடுகளுக்கான உள்ளூரி தீர்வுகள் தெரிந்து விடும்.

வேகநரி: கிரியா ஊக்கியா திரி பத்த வைக்க ஒரு தீர்மானமாகத்தான் சுத்துறீங்க.வருண் உங்களை திட்டுவது தப்பேயில்லைங்கிற மாதிரியே அவருக்கு எதிர்க்கேள்வி போடறீங்களே!எப்படித்தான் இப்படியெல்லாம் பின்னூட்டம் போட மனசு வருதோ:(

இக்பால் செல்வன்: சகோ.சுவனப்பிரியனுக்கு நீங்க வைக்கும் கேள்வி சரியாக இருந்தாலும் வேதங்களின் காலமும் இந்துக்கள் என்பவர்களின் வரலாற்றின் ஆதி மூலம்தான்.ஆனால் நம்மைப்பொறுத்த வரை வரலாறு சைவ,சமண மதங்களின் போராட்ட காலமாகவும் தற்போதைய தசாதவர ராமனுஜ நம்பியாக கமலஹாசனின் நடிப்பு அரிதாரமும் அதையும் கூட பின் தள்ளிய இலங்கைப் போரட்ட சமகாலமே.

மதங்கள் குறித்தும் குறிப்பாக இஸ்லாமியம் குறித்தும் உங்களுடன் விவாதிப்பது சரியாக இருக்கும்.தற்போதைய சூழலில் 9/11க்குப் பின்பு இஸ்லாமியத்திற்கு எதிரான குரல்கள் அதிகமாகவே ஒலிக்கின்றன. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கில்லாமல் சார்ந்தும்,எதிர்த்தும் குரல்கள் ஒலிக்கவே செய்கின்றன.பைபிளின் பழைய ஏற்பாடு மாதிரி புனித நூல் என்றளவில் வார இறுதி பிரார்த்தனைகளில் எடுத்துக்காட்டாக மட்டும் இருந்தால் பரவாயில்லை.இதுவே வாழ்க்கை முறை,சட்ட முறை என்கிற போது நவீன வாழ்க்கைக்கான முரண்பாடுகளுடன் மோத வேண்டிய அவசியமிருப்பதால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.ஆனாலும் இஸ்லாமியத்தின் மறுபக்கங்களான மென்மையான தன்மைகளும்,உலகம் சார்ந்த பெட்ரோலிய சார்புகளும் இன்னும் இஸ்லாமியத்தை உலக மதங்களில் ஒன்றாக தக்கவைத்துக்கொள்ளூம்.

பெட்ரோலிய வளங்கள் இல்லாமல் ஆனால் பெட்ரோலிய விலையை நிர்ணயிக்குமளவுக்கும்,திட்டமிடல்,கடின உழைப்பாலும் முன்னேறிய சிங்கப்பூர் ஆசியநாடுகளில் ஒரு வித்தியாசமான நாடுதான்.

வவ்வால்: எங்கே இடி இடிச்சு மழைத்தூறல் மட்டும் வீசுதேன்னு பார்த்தேன்.வருண பகவானை தேடிகிட்டு ஓடியாங்க! சு.பி ஒன்னும் சுண்ணாம்பு இல்ல.நீங்கதான் இருட்டுக்குள்ளேயே சுத்திகிட்டிருந்துட்டு வெள்ளையா இருப்பதெல்லாம் சுண்ணாம்புன்னு நினைக்கிறீங்க. வேகநரி,வருண்,உங்ககூட ஒப்பிடும் போது அவர்மீதான தாக்குதலுக்கும் அவர் பொறுமையாகத்தானே பதில் சொல்கிறார்.ஹதீஸ்களை இடைச்செறுகல்கள் செய்தாலும் திட்டாமலே பதில் சொல்வது அவரது பலம் என நினைக்கிறேன்.

வேதாளம்தான் முருங்கை மரமேறுமென விக்கிரமாதித்தன் கதைகள் சொல்லுது.வவ்வாலும் சுத்தி சுத்தி காட்டுமிராண்டி காட்டுக்குள்ளேயே சுத்துதே.டேவிட் ஆட்டன்பரோவை விட்டுத்தான் இன்பிரா ரெட் காமிராவில் வவ்வாலைப் புடிக்கனும்.ஆஹா!பீகாரிகளுக்கான மாற்றுப் பார்வையில் மறுபடியும் ஒரு பாயிண்ட் ஸ்கோர் செய்றீங்க.அருமையான வாதம்.

சுவனப்பிரியன்: சகோ.இந்திய சட்டத்தில் ஓட்டைகள் இருக்கின்றன.ஆனால் வாதாடவும்,போராடவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பது வவ்வாலின் வாதம்.நியாயமாகப் பார்த்தால் கோயில்களுக்குள் துப்பாக்கியே போகக்கூடாது.ஆனால் வி.ஐ.பிகள் பாதுகாப்புக் கருதி காவல் சகிதம் கோயில்களுக்குப் போய் பிரார்த்தனை செய்து விடலாம்.இப்போ வி.ஐ.பிக்களுக்கு தனி மரியாதை கிடையாதுன்னு கோர்ட் மூலமாகவே சொல்லி வச்ச மாதிரி சட்டங்களை தேவைக்கேற்ப வளைத்து விட முடியும்.இவை ஷரியத் சட்டங்களால் இயலாதல்லவா?

வவ்வாலுடன் சண்டை போட வருணை இழுக்காதீங்க.இருவரும் சேர்ந்தால் எனக்குத்தான் டங்குவார் அவிறுது.

வருண்: இதோ சுவனப்பிரியன் சொல்லி முடிக்கல.உள்ளேன் அய்யா சொல்லிட்டார்:)வவ்வாலுக்கு காட்டுமிராண்டி சட்டம்ன்னா வருணுக்கு சங்கரராமன்.காட்டுமிராண்டி சட்டமும் சரி,சங்கரராமனின் ஆவியும் சரி சும்மா விடாது தெரியுமோ?வெள்ளைக்காரன் சட்டத்துக்கு தாத்தாதான் புதுசட்டம் வரையனுமின்னா நிறைய தாத்தாக்கள் புது சட்டவரைவுகள் மாற்றங்கள் செய்திருக்காங்க. செய்றாங்க.செய்வாங்க.காட்டுமிராண்டி சட்டம்ன்னு வவ்வால் சொல்வதும் ஒரு தாத்தா வரைஞ்சது.அதுவும் வெள்ளக்காரன் காலத்துக்கு முந்தியோ முந்தி.எது சிறப்புன்னு நீங்க நினைக்கிறீங்க வருண்.வவ்வால் மேல இருக்குற கொடைச்சலுக்கு பதில் சொல்லாமல் நீங்க உணர்வதை சொல்லுங்க.

நல்லாவே கேள்வி கேட்டுகிட்டு வந்து திடீர்ன்னு இதோ துவேசத்துக்கு மாறிட்டீங்க.ஊரெல்லாம் பட்டம் தருகிறேன் பேர்வழின்னு எத்தனை பேர் சுத்துறீங்க! திட்டல் மன்னன் வருண என்று யாராவது பட்டம் கொடுங்களேன்.
வேகநரி மேலும் ஒரு பிராண்டலா?வேகநரிக்கு தேவைதான்.

கோவி கண்ணன்: அதானே!உங்க கண் சுவனப்பிரியன் மேல்தானே இருக்கும்:) நாலு ஸ்வரங்கள் பாடறதுன்னா குளியலறையில் பாடுபவர்கள் கூட பாடகர்கள்தான்.ஆசையப்பாரு!!பூணுல் போடனுமாம்!ஏன் நீங்க முதலில் போட்டுக்காட்டறது:).

வவ்வால்:சரக்கு காலியாயிடுச்சு சரக்கு காலியாயிடுச்சுன்னே சொல்லிகிட்டிருக்கீங்க!நீங்க கேட்காமலேதானே வருண் ஊத்திகிட்டிருக்கார். என்னா போதையோ இருவருக்கும்.இதுல சு.பியை வேற கம்பெனி கேட்பது கொடுமையிலும் கொடுமை:)

வருண்:ஒலிம்பிக்ஸ் போனா பரிசு நிச்சயம்.இங்கே முதல் பரிசு யாருக்குன்னு நீங்க இரண்டு பேரும் முட்டிக்கிறதுதானே பிரச்சினை.

வந்து சேர்ந்தீங்க பாரு இரண்டு பேரும்.கூடவே வேகநரியும் நேரம் பார்த்து பிடில் வாசிக்கவும்,மத்தளம் கொட்டவும்,சண்டை போட்டு கருத்து மோதல் செய்தவர்களுக்கும் மோதாமலே நாசுக்காக கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.



.




.





10 comments:

Anonymous said...

//தற்போதைய சூழலில் 9/11க்குப் பின்பு இஸ்லாமியத்திற்கு எதிரான குரல்கள் அதிகமாகவே ஒலிக்கின்றன. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கில்லாமல் சார்ந்தும்,எதிர்த்தும் குரல்கள் ஒலிக்கவே செய்கின்றன.//

உண்மை தான் ! 9/11 முன்னரே இஸ்லாமிய தீவிரவாதங்கள் உலகெங்கும் இருந்த போதும். யாரும் பெரிதாக சாட்டை செய்யவில்லை. பலர் இஸ்லாமிய குரான்களை படித்துப் பார்த்ததும் இல்லை. இஸ்லாம் என்பதே நமது பக்கத்து வீட்டு இஸ்லாமியரின் வாழ்க்கை முறையை மட்டும் வைத்துக் கணித்துவந்தோம். அவர் நல்லவர் என்றால் இஸ்லாமும் நல்லது. கெட்டவர் என்றால் இஸ்லாமும் கெட்டது என்பதோடு போய்விடுகின்றது.

கவனிக்க வேண்டியது என்னவெனில். 9/11 பிறகு இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் பல.

1. பின் லேடன் செய்தது சரி ! அவன் ஒரு வீரன் என்றுக் கருதும் கூட்டம் பெருகியது

2. வகாபியம் என்றும் இல்லாத அளவுக்கு பிற இஸ்லாமிய பிரிவுகளையும், கலாச்சாரங்களையும் விழுங்கத் தொடங்கியது

3. எதிர்மறை விளைவாக மேற்கு நாடுகளில் பலர் இஸ்லாமினை அறியமுற்பட்ட போது, தீவிரவாதத்தின் ஆணிவேர் குரானிலேயே இருப்பதாக அறிந்துக் கொள்ள முற்பட்டனர்.

4. பலர் நாத்திகக் கருத்துக்களுக்கு மாற்றமடையத் தொடங்கினார்கள்.

5. அதே போல 9/11 பிறகு உலகின் இணையப் பாவணை, தொழில்நுட்பப் பாவணை அதிகரித்துவிட்டன. அதனால் பல் ஊடகங்களில் இஸ்லாம் உட்பட மதங்கள் விவாதப் பொருளானது. organized religion-களுக்கு எதிராக மாற்றுக் கருத்தாளர்கல் இணையத்தில் organized ஆனார்கள்.

Anonymous said...

//.பைபிளின் பழைய ஏற்பாடு மாதிரி புனித நூல் என்றளவில் வார இறுதி பிரார்த்தனைகளில் எடுத்துக்காட்டாக மட்டும் இருந்தால் பரவாயில்லை.இதுவே வாழ்க்கை முறை,சட்ட முறை என்கிற போது நவீன வாழ்க்கைக்கான முரண்பாடுகளுடன் மோத வேண்டிய அவசியமிருப்பதால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.//

முற்றிலும் உண்மை. விவிலியம், வேதம், தோரா போன்றவற்றின் வன்முறைப் பக்கங்களை அவர்கள் பெரிதும் கவனிப்பதில்லை. அடிப்படைக் கோட்பாடுகளை மட்டும் பேசிவிட்டு போகின்றனர். அத்தோடு அவர்களின் வேதங்களும் சட்டத்தில் சமயத்தை புகுத்த கோரிக்கைகள் வைத்திருந்தும். அவர்கள் அதனை கண்டுக் கொள்ளாமல் விட்டதால் சட்டங்கள் மீறப்படவில்லை.

ஆனால் இஸ்லாமில் அவர்களின் ஷரியா, வாழ்க்கை முறை அனைத்தையும் சமத்துவ நாடுகளில் புகுத்த முனைகின்றார்கள். வெளிப்படையாகவே பக்கிங்காம் அரண்மணை மசூதியாக மாற்றுவோம், வெள்ளையர்கள், நாத்திகர்கள் போன்றோரை சாத்தானோடு ஒப்பிட்டு பேசியும் வருகின்றார்கள். அத்தோடு இல்லாமல் இஸ்லாம் மீது வரும் விமர்சனங்களை பேச்சளவில் இல்லாமல் ஆயுதங்கள், வன்முறை ஊடாக அடக்க நினைக்கின்றார்கள். இது தான் பிரச்சனைகளின் ஆணிவேர்.

Anonymous said...

//ஆனாலும் இஸ்லாமியத்தின் மறுபக்கங்களான மென்மையான தன்மைகளும்,உலகம் சார்ந்த பெட்ரோலிய சார்புகளும் இன்னும் இஸ்லாமியத்தை உலக மதங்களில் ஒன்றாக தக்கவைத்துக்கொள்ளூம்.//

மென்மைப் போக்குடைய முற்போக்கு இஸ்லாமியர்கள் பல இடங்களில் அடக்கப்பட்டு வருகின்றார்கள். கனடாவில் கூட முற்போக்கு கொள்கையுடை கனடிய முஸ்லிம் காங்கிரஸுக்கு கடும் போக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பையும், மிரட்டல்களையும் கொடுக்கின்றார்கள்.. ஆக ! இஸ்லாமின் மென் பக்கம் அழியத் தொடங்கினால் இஸ்லாமும் அழியும் என்பதில் ஐயமில்லை .. குறிப்பாக குரானிஸ்ட் எனப்படும் முற்போக்கு இஸ்லாம் முக்கியத்துவம் பெறுமானால் பல வெள்ளையர்கள் கூட முஸ்லிமாக மாற விரும்புவர். ஆனால் இவர்கள் ஹடித், ஷரியா எனப் போனால் - '' ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் '' என்ற அவ்வையின் வாக்கை பொருத்திக் கொள்ளுங்கள்.

மத்தியக் கிழக்கின் பெற்ரோல் வளம் அடுத்த 30 - 50 ஆண்டுகளில் காலியாகும் போது உலகம் பெரும் மாற்றத்தை சந்திக்கவுள்ளது.

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமது சொந்த ண்ணெய் வளங்களை இன்னும் பயன்படுத்தாமல் பாதுகாத்து வருவது. எதிர்காலத்தில் பெரும் மாற்றங்கள் வரும் போது தம்மை தக்க வைத்துக் கொள்ள என்பதையும் நினைவில் கொள்க !!!

Anonymous said...

//பெட்ரோலிய வளங்கள் இல்லாமல் ஆனால் பெட்ரோலிய விலையை நிர்ணயிக்குமளவுக்கும்,திட்டமிடல்,கடின உழைப்பாலும் முன்னேறிய சிங்கப்பூர் ஆசியநாடுகளில் ஒரு வித்தியாசமான நாடுதான்.//

சிங்கப்பூர் போல உலகம் மாறிவிட்டால் பூலோக சொர்க்கம் இங்கு படைக்கப்பட்டதாக இருக்கும் !

வவ்வால் said...

ராஜ்,

இங்கே இன்னொரு பதிவு போட்டாச்சு போல,அதுக்கு தான் அங்கே அழைப்பு மணி அடிச்சீங்க போல :-))

// இருவருக்குமான பதிவுலக நிலைப்பாடு இதுதான்னு தெரிந்த பின்பும் கண்டுக்காம விலகிச் செல்வதை விட்டு விட்டு இது என்ன சின்னபுள்ளத்தனமா ஒருத்தருக்கு ஒருத்தர் எகிறிகிட்டு//

உங்களை சொல்லி குற்றமில்லை, உங்களுக்கு கோலும் உடைய கூடாது பாம்பும் சாகக்கூடாது. கண்டுக்காம உளறிட்டு போகட்டும்னு தான் விட்டேன் வா..வான்னு கூப்பிட்டா ,உங்கள் முதல் பகுதி பதிவை பார்க்கவும், சரி ஒரு ஆடே கசாப்புக்கடைக்கு வந்து பிரியாணி ஆகிறேன்னு சொன்னா விட முடியுமா?

நம்முடையா ஆயுதத்தை தீர்மானிப்பது நம்மோடு சண்டை செய்பவனைப்பொறுத்து என்பார்கள் அதே தான் என்னுடைய மொழியை தீர்மானிப்பது என்னோடு பேசுபரின் தரத்தை பொறுத்து ,பண்டாரம், மெண்டல்ல், முட்டாள்,முண்டம்னு பேசினால் நான் அதை விட மட்டமாக கையாள்வேன்,எனக்கு நாகரீக நல்லவன் பட்டம் எல்லாம் தேவை இல்லை,நல்லவன்னு பேரு வாங்கி நாக்கு கூட வழிக்க முடியாது.
--------------------

சு.பி சுண்ணாம்பு என்பதன் பொருள் அவரின் நச்சு தன்மையினை உருவகப்படுத்த, வெள்ளையாக இருக்கு வெண்னைனு கண்ணில் வைக்க முடியாது. மேலும் ஒரு ரைம்முக்கு அடிக்கிறது தான் :-))

அவரால் சமாளிக்க முடியவில்லை என்றவுடன் , இன்னொருவரை கொம்பு சீவி விடும் அல்பத்தனம் ஏன்?


மேலும் சரக்கு காலி என்பது பேசியதை நிருபிக்க முடியாத போது அதற்கு முன்ன ,அதற்கு முன்ன என பழைய சமாச்சாரங்களை இழுத்து வந்து இப்போது பேசிக்கொண்டிருப்பதை மறக்கடிக்க செய்யும் அரசியலை சொல்ல வந்தேன்.

நீங்க சொன்ன மனிதாபிமானம் அனைவருக்கும் தானே , அதனை அனைவருக்கும் காட்டாத போது நான் மட்டும் காட்ட வேண்டுமா?

கமாருதின் என்பவர் தமிழ்நாட்டில் சாட்சி இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டால் அப்போதும் சட்ட ரீதியாக மனிதாபிமான அடிப்படையில் போராட உதவுங்கள் என்பதோடு நிறுத்தி இருப்பாரா சு.பி?

முஸ்லீம்களுக்கு எதிரான "இந்து அரசு ,சட்டம்னு" கண்டனம் சொல்லி இருக்கமாட்டார்?

எனவே தான் மனிதாபிமான ரீதியில் பேசும் போது , அப்பாவியை தண்டிக்கும் அச்சட்டத்தின் "தகுதி" என்ன என்பதை சொல்லிவிடுங்களேன் என்று கேட்கிறேன்.

மேலும் இதுவே இப்பிரச்சினையில் எனது இறுதிப்பின்னூட்டம்,இங்கே யாருக்கும் உண்மையை எதிர்நோக்க விருப்பமில்லை, எந்தளவுக்கு வார்த்தைகளை திரித்து பேசலாம் என்பதிலே மட்டுமே நாட்டமிருக்கிறது.

மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் , முட்டாள் ,மெண்டல், முண்டம் எனப்பேசுபவருக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது,மாட்டினால் கைமா தான் என பேசவே செய்வேன். அதற்காக நீங்கள் நியாய தர்மம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.

வருண் said...

ராஜ்: சுவனப் பிரியன் மத நம்பிக்கை உள்ளவர். அதை வெளிப்படையாக சொல்லிக்கிட்டு இருக்கார். குறையில்லாதவன் எவனும் இல்லை.
சு வ பிரியன் நச்சுத்தன்மை உடையவர் என்றெல்லாம் எனக்குத் தோனவில்லை. தன் கருத்தை வெகுளித்தனமாக முன் வைக்கிறார். அவ்வளவுதான்.
--------------

நரியுடைய பின்னூட்டங்களை வாசிச்சுப் பார்த்தீங்கனா அவருடைய ஒரே வேலை (இந்த நரி அவதாரில்), இசுலாமியர்களை கோபத்துக்கு உள்ளாக்குவது. 100% இந்த ஐடி யில் அவர் செய்யும் ஒரே வேலை இதுதான். இதை ஒரு இஸ்லாமியர் சொன்னால் எவனும் கண்டுக்கிறதில்லை. நான் சொன்னால், நீ இஸ்லாமியன் ஜால்ரா அடிக்கிறனு எவனும் சொல்ல முடியாது! அதற்காகவே இங்கே நரியைப் பத்தி சொல்ல வேண்டியிருக்கு.

அதனாலென்ன? என்களாம் நீங்க.

நீங்களோ நானோ கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் பல பிரச்சினைகளை பேசுறோம் விவாதிக்கிறோம். இதுபோல் ஒரே வேலையை ஒரு ஐ டி வைத்துக்கொண்டு திரியும் நரியை மதிக்கத் தோனலை, அதுபோல செய்கிற யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை.

--------------

மற்றபடி, 1000 குற்றவாளிகள் இந்திய சட்டத்தில் உள்ள லட்சம் ஓட்டைகளை வைத்து தப்பிக்கிறதையும், ஆயிரத்தில் ஒரே ஒரு குற்றவாளி (ஏழை, அரசியல் செல்வாக்கில்லாதவன், மதகுரு அல்லாதவன்) தண்டிக்கப் படுவதையும் பெருமையாக சொல்லிக்க என்ன இருக்குனு எனக்குத் தெரியவில்லை???

காட்டுமிராண்டி சட்டத்தால் பயந்துகொண்டு தப்பு செய்யாமல் இருக்கவன் அதிகமாக இருக்கலாம்.
அதே சமயத்தில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கிற கேவலமான சட்ட சூழலில் இருப்பதால் பலரையும் இந்தியாவில் குற்றம் செய்ய தூண்டி, ஈஸியாக தப்பிச்சுடலாம் என்ற காரணத்தால், குற்றங்கள் அதிகமாக நம்ம ஊரில் நடந்துகொண்டு இருக்கலாம். இதில் எது நல்லதுனு விவாதிச்சுக்கிட்டே இருக்கலாம்.

சங்கர் ராமன் கேஸ், மேலும் நான் என் அனுபவத்தில் பார்த்த் உதாரணம் (இன்னும் இதுபோல் 100 சொல்ல முடியும்), இதிலிருந்து நான் விளங்கிக்கொண்டது, இவ்ளவு ஓட்டை உள்ள நம்ம சட்டத்தை வச்சுக்கிட்டு அடுத்த நாட்டில் போயி உக்காந்துக்கிட்டு, அவனை காட்டுமிராண்டி என்பது அநியாயம்.

யாரு வெற்றி பெருகிறார் என்பதல்ல விவாதம் செய்வது. பல விசயங்களை அனுபவத்தை முன் வைப்பது. அவ்வளவுதான்.

I dont want to make a mess here too! Take care! :)

suvanappiriyan said...

//ராஜ்: சுவனப் பிரியன் மத நம்பிக்கை உள்ளவர். அதை வெளிப்படையாக சொல்லிக்கிட்டு இருக்கார். குறையில்லாதவன் எவனும் இல்லை.
சு வ பிரியன் நச்சுத்தன்மை உடையவர் என்றெல்லாம் எனக்குத் தோனவில்லை. தன் கருத்தை வெகுளித்தனமாக முன் வைக்கிறார். அவ்வளவுதான்.//

நன்றி வருண்!

குறும்பன் said...

இதைப்படிக்கவே மணி நேரம் ஆகுதே யம்மாடி. வர்ற பின்னூட்டத்தைப் பார்த்தா பின்னூட்டப் பகுதி-3 என்ற இடுகை வராது போல இருக்கே. நடராசனுக்கே சோதனையா :)

naren said...

டீ இங்கேதான் லைட்டாக கிடைக்கிறது )))

////வக்கீல் குற்றம் செய்த தனது கேஸ்காரருக்கு எப்படியும் வெற்றியைப் பெற்றுத்தந்து விடவேண்டுமென்று வாதாடுகிற மாதிரி இருக்கிறது:)////

அப்படியெல்லாம் அரேபியருக்கு எதிராக வெறுப்பும் இல்லை எதிரியும் இல்லை.

இறந்த உடலை யார் நல்ல முறையில் பேக் செய்து, இறந்தவர் நாட்டிற்கு யார் சிறந்த முறையில் அனுப்புகிறார்கள் என்றால், சட்டங்கள் என்னவாக இருந்தாலும் அதை இயக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருந்தால் எந்த சட்டமும் சிற்ந்ததுதான்.

இந்த விவாதம், வேறுவகையாக சென்று, மறுமொழிகள் மூலம் எல்லா நாட்டில் குற்றவியல் நடைமுறையில் ஓட்டைகள் இருக்கிறது என்ற உண்மை வெளிப்படுகிறது. இதில் எந்த ஓட்டை பெரிய ஓட்டை சிறிய ஓட்டை என்பது தனிவிவாதம்.

அதனால் அனைவரின் தீராத தாகம், குறையில்லாத குற்றவியல் நடைமுறை சட்டம் வேண்டும் என்பதுதான். இந்தியாவில் ஓட்டை தவறுகள் இருக்கிறது, அதை நல்லதாக மாற்ற அவைகளை களைய வேண்டும், நல்ல சட்டமாக மாற்ற வேண்டும் என்பதுதான். இது மாபெரும் போராட்டம் செயல்.

இதில் தான் நண்பர் சு.பி, இண்ஸ்டண்ட் ரிலீப் தருகிறார்.
ஒன்று, சவுதியில், கடவுளின் சட்டம் அங்கு நடைமுறைபடுத்துகிறது, கடவுளின் சட்டமாதலால் மார்க்கமாதலால் சிறந்தது தப்பே நடக்க வாய்பில்லை.

இன்னொன்று, மதம் சம்பந்தபடாத அல்லாத சட்டங்களிலும் அங்கு சிறப்பாக தப்பே இல்லாமல் நடைப்பெறுகிறது.

இவை இரண்டும் உண்மையானால், உலகத்திற்கு குற்றவியல் நடைமுறை சட்டதிற்கு ஒரு வரப்பிரசாதம் அனைவரும் பின்பற்றலாம். ஏன் நான் கூட ம(த)னம் மாற்றம் அடைந்து அந்த மார்க்கத்தில் இணையலாம். அது உண்மையா இல்லையா என்று அறியவே கேள்விகள் கேட்கிறேன். மத, இன வெறுப்பு கிடையாது.

ஜோதிஜி said...

வந்துருக்கும் பின்னூட்டங்களும் பதிவு போலத்தான் இருக்கு,