Followers

Thursday, August 30, 2012

அச்சு பதிவுகள் சாத்தியமா?

மச்சி!மறுபடியும் ஓப்பன் த பாட்டில்!நான் என்னைச் சொன்னேன்:)

முதற்கண் பதிவர் குழுமம் விவாதங்களையும் தாண்டி வெற்றிகரமாக அமைந்ததற்கு மகிழ்ச்சியோடு அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரலை,பதிவுகள்,புகைப்படங்கள் காணும் போது பதிவர் குழுமத்தாரின் உழைப்பு,நிர்வாகத் திறன் போன்றவற்றை உணர முடிகிறது.சந்திப்பை தொடர்ந்து பட்ஜெட் தணிக்கை அறிக்கை வெளியிட்ட வெளிப்படத்தன்மை போன்றவையும் வரவேற்க கூடியவை.

முந்தைய கால கட்டமான பதிவர் குழுமம் வேண்டும் என்று பலரும்,இப்படியே போகட்டுமென்று சிலரும் நினைத்த இரட்டை குணத்தை தாண்டி பதிவர் குழுமம் அவசியம் என்பதை ஒன்று கூடல் உறுதிப்படுத்துகிறது.பலரின் எண்ணங்களுக்கு வடிகாலாக திரட்டிங்கள் உதவுகின்றன என்ற போதிலும் பதிவுகளின் சாரம் கணினி உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை,கணினி உபயோகிப்பாளரகளின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்கும் போது இன்னும் பத்திரிகை, புத்தகங்கள் சார்ந்தே மக்களின் வாசிப்பு நிலை இருக்கிறது.

கூகிள் இடத்தைப் பட்டா போடச் சொல்லி பதிவுகள் எழுத இலவசமாக தளம் அமைத்துக்கொடுத்தாலும் கூட கூகிளுக்கு பொருளாதார ரீதியான நலன்களும் உள்ளடங்கியிருக்கிறது.பலர் தங்கள் கால நேரத்தை செலவழித்து சொல்லும் கருத்துக்கான அன்பளிப்பு பின்னூட்ட உற்சாகம்  மட்டுமே.

பதிவுகள் பொருளாதார ரீதியாகவும், கருத்துக்கள் பலரையும் சென்றடையும் சாத்தியமாக பதிவுகளை அச்சுப்படுத்தும் சாத்தியம் உள்ளதா?அப்படி ஒரு சாத்தியமேற்படும் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை பெரும்பாலோனோருக்கு கொண்டு செல்வது இயலும்.

பத்திரிகைகள் வாசிப்போரின் கட்டணத்தொகையை விட விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை நம்பியே பத்திரிகை நடத்துகின்றன.பதிவுகளும் பத்திரிகை,புத்தக வடிவாகும் போது கட்டணத்தொகையோடு விளம்பரஙகளை  பெறவும் முடியும்.

மருத்துவம்,சட்டம்,கவிதை,திரைப்படம்,உரையாடல்கள்,உலக அரசியல்,ஈழம், மொழி,அறிவியல்,தொழில் நுட்பம்,சமையல் என ஒரு பத்திரிகை தருவதற்கும் அதிக பங்களிப்பை பதிவுலகம் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும்.அச்சுத்துறை சார்ந்தும் கூட நம்மிடம் பதிவர்கள் இருக்கிறார்கள்.இதே குழும சிந்தனையோடு பதிவுகள் அச்சாவதில் உள்ள சாதக பாதகங்களை பதிவுகளாக, பின்னூட்டங்களாக வருவதை வரவேற்கிறேன்.

23 comments:

வவ்வால் said...

ராச நடராசர்,

அச்சுப்பதிவுகள் என்பது சக்கரத்தை மறுபடிக்கண்டுப்பிடிப்பது.

டான் பிரவுன் நாவல்ப்பற்றி சில் ஆண்டுகளுக்கு முன்னர் படித்தது, அச்சுப்பதிப்பை விட மின்பதிப்பே அதிகம் விற்பனை ஆச்சாம்.

அச்சுப்பிரதிகள் இந்தியா போன்ற ஏனைய நாடுகளில் தான் வரவேற்பாம்.

முன்னால் செல்வது என்றால் மின்வெளியில் போவது தான்.இந்தியாவில் இணையம், கணி மெதுவாக ஊடுருவினலும் 10 ஆண்டுகளில் மாற்றம் வரலாம்.

சென்னையிலேயே சில ஹோட்டல்களில் ஆர்டர் எடுக்க ஐ போன் பயன்ப்படுத்தறாங்க. இங்கே ஆர்டர் அடிச்சா கிச்சனில் டிஸ்பிளே ஆகும் :-))

பி.கே.பி பதிவர் சந்திப்பில் ஆற்றிய உரையை கணேஷ் பதிவில் பாருங்க.

வவ்வால் said...

சுட்டிப்போட மறந்திட்டேன்,

http://minnalvarigal.blogspot.com/2012/08/blog-post_30.html

Riyas said...

வணக்கம்

ராஜ நடராஜர்,

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகளை அச்சுப்பதிவுகளாக வெளியிடுவது வரவேற்க தக்கதுதான்..பல்சுவை வார இதழ்களில் எழுதுபவர்களை விட சிறப்பாக எழுதக்கூடியவர்கள் நிறையபேர் பதிவுலகில் இருக்கிறார்கள்..

இன்னொன்று இந்த இணையப்பயன்பாடு என்பது மிகக்குறுகிய சதவீதத்தினரையே சென்றடைகிறது..எதிர்காலத்தில் நிலைமை மாறலாம்!!

அநேக கிராமங்களுக்கு இணையம் என்பது இன்னும் எட்டாக்கணிதான்!!

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு.அச்சு பதிவு என்பது பொருள் செலவு,அதிக மனித உழைப்பு கொண்டது.ஆகவே அரசோ சில நல்ல உள்ளங்களோ முன்னெடுத்தால் மட்டுமே சாத்தியம்.

எனினும் இணையத்திலேயே துறை சார்ந்து பதிவு நூலகம் அமைக்கலாம் என்பது என் கருத்து!!.அச்சினை விட குறைவான் பொருள்,உழைப்பு தேவைப்படலாம்!!!

இது பல்விதங்களில் சிந்தித்து விவாதித்து முன்னெடுத்தல் நன்மையே!!!.

நல்ல கருத்து விதை ஊன்றி உள்ளீர்கள். பார்க்கலாம்!!!

நன்றி!!!

சக்தி கல்வி மையம் said...

பகிர்வுக்கு நன்றிகள் தோழரே,,,

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

இதனால் எழுத்துக்கள் பாமரனையும் அடையும். நல்ல முயற்சி. வெற்றியடைய பலரின் பங்களிப்பு அவசியம்.

வவ்வால் said...

ராச நடராசர்,

//பத்திரிகைகள் வாசிப்போரின் கட்டணத்தொகையை விட விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை நம்பியே பத்திரிகை நடத்துகின்றன.பதிவுகளும் பத்திரிகை,புத்தக வடிவாகும் போது கட்டணத்தொகையோடு விளம்பரஙகளை பெறவும் முடியும்.//

அச்சு ஊடகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை சொல்கிறேன்,

#விளம்பரம் கிடைக்க "ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷனில்" நல்ல இடம் இருக்க வேண்டும்.

#மேலும் ஆரம்பக்கட்ட முதல் ,திரட்ட வேண்டும், சில ,பல மாதங்கள்,லாபம் இல்லாமல் இயங்கக்கூடிய அளவுக்கு முதலீடு இருக்கணும்.

#பிரதியை விற்று ஏஜன்டுகளிடம் இருந்து திரும்ப காசு எடுப்பது குதிரைக்கொம்பு.


# சிறுப்பத்திரிக்கை நடத்துவோர் எல்லாம் கடனாளிகிவிட்டார்கள்.

#இப்போ பொதுவா இதனை நடத்தும் போது யாரோட படைப்பு அச்சுக்கு போக வேண்டும் என தேர்வு செய்வதில் அடிதடி நடக்கும் , இப்போ மகுடத்துக்கே அடிச்சுக்கலையா?

மேலும் முன்னர் தமிழ்மணத்தில் பூங்க என இணைய இதழ் ஆக சிறப்பான பதிவுகள் தனித்து தேர்வாகி வெளியாகும், அப்போவும் பிரச்சினையாகி அந்த இதழ் என்பதே நின்று போச்சு(என்னுடைய அறிவியல் கட்டுரைகள் அதில் அவ்வப்போது வரும் அநேகமாக துச்சமாக முகமூடி என சொல்லப்பட்டாலும் எனது பதிவும் இடம் பிடிக்கும்)

# இப்போ எல்லாருமே அவங்க பதிவுகளை அச்சிட்டு புத்தகமாக விற்றுக்கொள்கிறார்கள்,எனவே அதெல்லாம் அவங்க சொத்து அதனை பொதுவாக வெளியிட விடுவார்களா?

அச்சு வெளியீடு என்பது எழுத்துலகில் பின்னோக்கி போவதான ஒன்று , இப்போ எல்லாம் புத்தகமே அமேசன்,கிண்டில் என போய்கிட்டு இருக்கு.

வருங்காலத்தில் அச்சிட்ட நூல்கள் என்பது அருங்காட்சியகத்தில் மட்டும் காணக்கிடைக்கும் என நினைக்கிறேன்.

இதனை வைத்து ஒரு கதையோ ,படமோ இருக்கு.

கவர்ன்மெண்டே பேப்பர்லஸ் ஈ-கவர்னன்ஸ் பத்தி பேசிக்கிட்டு இருக்கு அய்யா , திரும்பவும் அச்சடிக்கப்பார்க்கிறார் :-))

டி.என்பி.எஸ்.சி க்கே இப்பலாம் அப்ளிகேஷன், ஹால் டிக்கெட் எல்லாம் இணையம் தான்.

நிறைய பேப்பர் சேமிக்கப்படுகிறது.முன்னர் எல்லா ஆவணங்களும் பிரதி எடுத்து ,அட்டெஸ்ட் செய்து அனுப்ப வேண்டும் ,இப்போ இன்டெர்வியுக்கு போகும் போது சான்றிதழ் காட்டினால் போதும், இதனால் ஒவ்வொரு தேர்வுக்கும் 10 லட்சம் பேரு தலா 10 சான்றினை அதாவது 1 கோடி பேப்பர் பிரதி எடுத்து அனுப்பி காகிதம் விரயம் செய்தது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதை யாரும் பதிவாக போட்டாங்களானு தெரியலை.

எனவே நட்ராஜ் ஐபி.எஸ்க்கு ஒரு ஷொட்டு !


ஹேமா said...

சோம்பேறித்தனம் கூடிவிட்டமாதிரித்தானே இருக்கு நடா.கேட்பதும் பார்ப்பதும்தானே சுலபமான விஷயமாயிருக்கு.இணையங்களில்கூட அச்சில் பெரிய பதிவாய்ப் போட்டால் வரவேற்பில்லையே !

ராஜ நடராஜன் said...

வவ்வால்!எங்கே புது பதிவு ஒன்றையும் காணோம்!பின்னூட்டங்களுக்கு ஓடிட்டீங்க போல இருக்குதே!

நீங்க சொல்லும் டாட் பிரவுன் நாவல் மொத்த உலக அளவில்.நான் சிந்திப்பது இப்போதைய பதிவர் குழும சந்திப்பின் அடிப்படையில்.

கைபேசிகளில் இந்தியா சாதனை படைத்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.ஆனால் கணினி நுட்பம் மின்சாரம்,மற்றும் கணினி அடிப்படை காரணமாக கைபேசி போல் கிராம அளவிற்கு சென்றடையவில்லை.கணினி மாற்றம் 10 ஆண்டுகளில் வரலாம் என எந்த அனுமானத்தில் குறிப்பிடுகிறீர்கள்?ஜெயலலிதா கணினி மய தேர்தல் பிரசாரத்தை தாண்டி இலவச தொலைக்காட்சிகள் இடம் பிடித்துக் கொண்டதும்,இப்பொழுது ஜெயலலிதாவின் ஆட்சியில் பள்ளி,கல்லூரி என்ற அளவிலே கணினி குறுகி விட்டது.மின்சாரம் ஒரு பெரிய பிரச்சினை.கூடம்குளம் வெற்றியடைவதைப் பொறுத்தும்,அடுத்த தேர்தல் வாக்குறுதியைப் பொறுத்தும் சில மாற்றங்கள் வரலாம்.ஆனால் 10 ஆண்டுகள் எதிர்பார்ப்பு இப்போதைய ஆமை வேகத்தில் இயலாத ஒன்றே என நினைக்கின்றேன்.

KFC போன்ற பன்னாட்டு கோழி,பர்கர் விற்பவர்கள் ஐபோனுக்கு முன்பே ஆர்டர் அடிச்சா கிச்சனில் தெரியும் நுட்பத்தை 90களின் பகுதியிலேயே கொண்டு வந்து விட்டார்கள்.

நம்ம பதிவின் சாரம் இப்பொழுது பதிவு துறையில் இருப்பவர்களின் தேர்ந்தெடுத்த சிறந்த கருத்துக்கள் பள்ளியில்,கல்லூரிகளில்,பஸ்,ரயில் உட்கார்ந்து படிப்பவர்களுக்கும் முக்கியமாக் கிராம அளவில் போய் சேரவும் இன்னும் நிறைய பேர் கருத்து பதிவு செய்து சமூக மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இருப்பதை நோக்கி.

வாரம் முழுவதும் நேரலையும்,படங்களும்,பதிவர் சந்திப்பு பதிவுகளும்தானே நம்ம மேய்ச்சல்.இன்னுமொரு முறை கணேஷ் பதிவை பார்க்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

ரியாஸ்!நலமாக இருக்கிறீர்களா?தினசரி,வார,மாத இதழ்களுக்கு விளம்பரம் சார்ந்தும்,அரசு சார்ந்தும்,தனிநபர் கருத்து திணிப்புக்கள் சார்ந்த கட்டாயங்கள் இருக்கின்றன என்பதால் முழுநேர தொழில் சார்ந்து அச்சு ஊடகமாக செயல்பட்டாலும் கூட அவர்களில் சிறந்த எழுத்தாளர்கள்,நிருபர்கள் இருந்தாலும் கருத்து சார்ந்து தனித்து செயல்பட முடியாது.பதிவுகளும் அச்சு சார்ந்து செயல்படும் போது இது போன்ற அழுத்தங்களை சந்திக்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம்.

இத்னையெல்லாம் தாண்டி பதிவுகள் நீங்கள் சொல்லும் கிராமத்து எட்டாக்கனியை நோக்கித்தான்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!இந்த பதிவின் நோக்கம் முழுக்கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்வதுதான்.துறை சார்ந்து பதிவு நூலகம் என்பது எனக்கு எட்டாத சிந்தனைதான்.அச்சு பதிவுகள் என்பது இப்போது இருக்கும் ஊடக தகவல்கள்,கருத்துக்களுக்கு மாற்றாக சுதந்திரமாக செயல்படவும்,சமூக பங்களிப்போடு கிராம அளவில் சென்றடையும் சாத்தியமிருக்கிறதா என்பதுவே.

ராஜ நடராஜன் said...

கருண்!வருகைக்கு நன்றி.பதிவர் குழுமத்தில் இணைந்து செயல்பட்ட உங்களைப் போன்றவர்கள் பதிவுகள் மூலமாக இதற்கான சாத்தியங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.நம்மிடம் அனைத்து கட்டமைப்புகளும் இருக்கின்றன.பொருளாதாரம்,முன்னெடுத்து செல்லும் வலிமை மட்டுமே தேவையான ஒன்று.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!வருகைக்கு நன்றி.முன்னெடுத்துச் செல்லும் குழுவும்.பொருளாதாரம் மட்டுமே உருவாக்க வேண்டிய ஒன்று.பலரின் பங்களிப்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்பொழுதே பதிவுலகில் காணப்படுகின்றன.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!மாற்றுக் கருத்துக்களுக்கு நன்றி.பிரச்சினைகளைத் தாண்டியும் பதிவர்களின் குழுமத்தின் சந்திப்பு சாத்தியம் நிகழ்ந்திருக்கின்றது.சென்னை,ஈரோடு,மதுரை,கோவையென தனிமனிதர்களின் உழைப்பை பதிவர் சந்திப்பின் மூலம் கண்டிருக்கிறோம்.நிர்வாக குழுவினரின் முடிவே இறுதியானது என்ற டிஸ்கியெல்லாம் மகுடம் போன்ற சண்டைகளைக் குறைக்கும்.ஒன்றை முன்னெடுத்து நகரும் போது மாற்றுக்கருத்துக்களும்,வேறுபாடுகளும் உருவாகத்தான் செய்யும்.அதையெல்லாம் தாண்டி நகர்வதுதான் வெற்றியே என்பதை தமிழ்மணம் நிருபித்திருக்கிறது.

நீங்க சொல்லும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன் அரசு விளம்பரங்களுக்கென நினைக்கின்றேன்.தனியார் விருப்பங்களும் இதில் உள்ளடங்கியதா?

எந்த வியாபாரமும் Break even point என்ற பொருளாதார அடிப்படையைச் சந்தித்தே தீரவேண்டுமென்பதால் லாபமில்லாமல் நகரவேண்டியது அவசியமான ஒன்றே.

ஏரியா சார்ந்து ஒரு சில பதிவர்களே ஏஜண்டுகளாக உருவாகும் போது காசு வாங்கும் குதிரைக்கொம்பு பிரச்சினை வராது என நினைக்கின்றேன்.நீங்கள் சொல்வது போன்று பதிவுலகிலும் நிகழ்ந்திருக்கிறது.அது நோக்கி விவாதித்தால் பதிவின் சாரம் வேறு திசை நோக்கி சென்று விடுமென்ற போதிலும் தவறுகள் நிகழ்வதை குறைக்கும் இயற்கை தணிக்கை முறை பதிவுலகில் ஏற்கனவே இருக்கிறது.

சிறு பத்திரிகை நடத்துவோர் கடனாளிகளாகி விட்டதற்கு முதற்காரணமாக எழுத்து மக்களிடம் போய்ச் சேராத வண்ணம் ஒரு சிலரின் எழுத்து ரசனையை சார்ந்து மட்டுமே துவங்கியதாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்.
முதலீடு செய்யப்பட்ட பணத்தை தொடாமல் வரும் வட்டிப்பணத்தை சார்ந்து மட்டுமே பத்திரிகை நடத்திய எழுத்தாளர் ஒருவர் பற்றி முன்பு படித்தேன்.பெயர் நினைவில்லை.

மகுட சண்டை ஓட்டு குத்தும் சித்து விளையாட்டில் நிகழ்கின்றது.ஏன் என் பதிவு வரவில்லையென்ற சண்டையெல்லாம் வராமல் முன்னெடுத்துச் செல்லும் தலைமை தேவை.அவை ஏற்கனவே இருக்கின்றது என்பதை பதிவர் குழுமம் நிரூபித்திருக்கிற்து.இணையத்தில் நிறைய டிஸ்கிளைமர்கள் இருக்கின்றன.உதாரணமாக ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்தால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்காமல் நாம் ஓகே என்று மட்டும் பட்டனை அழுத்தி விடுகிறோம்:)

நீங்கள் தமிழ்மணம் பூங்கா குறித்து குறிப்பிட்டதால் மீண்டும் பூங்காவை கூட உயிர்ப்பிக்கும் முயற்சியை கூட செய்து பார்க்கலாமே!மேலும் பூங்கா போன்றவை லாப நோக்கு கருதாமல் நடத்தியதால் தோல்வியடைந்திருக்க கூடுமென நினைக்கின்றேன்.பொருளாதார நலன் கருதாத சமூக விழிப்புணர்வு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு இயங்கினால் காலப்போக்கில் முடங்கிப் போகும்.இடம்,கட்டமைப்பு,முழுநேர உழைப்பு,ஊதியம்,செலவீனங்கள்,ஆடிட்டிங் என ஒரு நிறுவனத்துக்கு தேவையான அத்தனையும் இருந்தால் மட்டுமே இயங்க முடியும்.

தற்போதைய நிலையில் பதிவர் குழும சந்திப்புக்களில் கூட மெல்ல வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கலாம்.

பதிவுகளை ஏற்கனவே அச்சிட்டு வெளியிட்டவர்கள் கருத்து சொல்வதுதான் உங்கள் வினாவுக்கு பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

அமேசன் காடுகளில் அலைய முடியாமல் நிறைய பேர் இருக்கிறார்களே என்பதற்குகாகத்தானே இந்த பதிவின் சாத்தியமா கேள்வி:)

அச்சிட்ட நூல்கள் வரலாறாகிப் போகாதென்றே நினைக்கின்றேன்.இணைய மாற்ற துவக்க்த்தில் Paperless office என்று விண்டோஸ் ஸ்கீரின்,டிஸ்க் போட்டு செமினார் நடத்தியதையும் தாண்டி பேப்பர்ல கையெழுத்து இருந்தாதான் செல்லுமென்ற நிலையே இப்பொழுதும் இருக்கின்றன.வங்கி போன்ற கார்பரேட் நிறுவனங்கள் அச்சடிச்ச பேப்பருக்கு கையெழுத்து தேவையில்லையென்று மட்டும் சொல்லி பிரிண்ட் போட்டுக்கோ என்றே சொல்கின்றன.

அரசாங்கத்தின் இ-கவெர்னென்ஸ் எப்படியென்று தூரத்தில் உட்கார்ந்துகிட்டு அனுபவிச்சாத்தான் தெரியும்.நீங்க தியரி மட்டும் படிக்கிறீங்க:)தேர்வு விண்ணப்பம்,ரயில்வே முன்பதிவு போன்றவை வரவேற்க தக்க மாற்றங்களே.ஆனால் இவை மட்டும் இ-கவர்னென்ஸ் ஆகி விட முடியாது.
அமெரிக்க,வளைகுடா சிவில் ஐடி கார்டுகள் சார்ந்த தகவல் தொகுப்புக்கள் அனைத்து துறை சார்ந்தும் ஓரளவுக்கு இ கவர்னென்ஸை முன்கொண்டு செல்கின்றன.

நடராஜ் ஐ.பி.எஸ்க்கு சொட்டு வைப்பதோடு பரிட்சைக்கு முன்பே வினாத்தாள் வெளியானதற்கு ஒரு கொட்டும் வைக்கலாமே!





ராஜ நடராஜன் said...

ஹேமா!நலமா இருக்கிறீர்களா?

பக்கம் பக்கமா வாத்தியம் வாசிக்கிற வவ்வால்,என்னைப்போன்றவர்கள் கவலைப்பட வேண்டிய விசயமிது.சொல்ல வந்ததை பத்து வரியில் சொல்லும் உங்க கவிதையெல்லாம் தப்பித்து விடும்.கவலையே படாதீங்க.கூடவே கவிஞர்கள் பகுதியில் கூட்டம் குறைவாகவே இருக்குது.அச்சு சாத்தியமானால் உங்க காட்டுல மழைதான்.

தனிமரம் said...

குறிகிய வாசகர் வட்டம் இணையத்தில் அச்சில் இன்னும் பலரைச்சேரும் நிஜம்தான் ஆனால் அதுக்கு வரவேற்பு தேடிச்செல்லும் வாசகன் கையில்!

வவ்வால் said...

ராச நடராசர்,

// இ-கவர்னென்ஸ் ஆகி விட முடியாது.
அமெரிக்க,வளைகுடா சிவில் ஐடி கார்டுகள் சார்ந்த தகவல் தொகுப்புக்கள் அனைத்து துறை சார்ந்தும் ஓரளவுக்கு இ கவர்னென்ஸை முன்கொண்டு செல்கின்றன.//

தொழில்நுட்பம் குறித்தான எதிர்மறை சிந்த்தனை, நீங்கள் அஞ்சலட்டையில் வாசகர் கடிதம் எழுதி அனைவருக்கும் அனுப்பவும் :-))

ஓலைச்சுவடியில் பதிவுகளை எழுதி வெளியிடலாம் ,சங்ககால பழக்கம் அதுவே :-))

வவ்வால் said...

ராசா,

//நம்ம பதிவின் சாரம் இப்பொழுது பதிவு துறையில் இருப்பவர்களின் தேர்ந்தெடுத்த சிறந்த கருத்துக்கள் பள்ளியில்,கல்லூரிகளில்,பஸ்,ரயில் உட்கார்ந்து படிப்பவர்களுக்கும் முக்கியமாக் கிராம அளவில் போய் சேரவும் இன்னும் நிறைய பேர் கருத்து பதிவு செய்து சமூக மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இருப்பதை நோக்கி.
//

இப்போ விற்கிற விகடன்,குமுதம் எத்தனை கிராமத்தினர் படிக்கிறாங்க?

மேலும் விலையில்லாமலா அச்சடிச்சு கொடுக்க முடியும், எனவே விலை வச்சா ,அது வாங்க தகுதியான்னு யோசிச்சு மக்கள் வாங்க வேண்டாமா?

இன்றும் குமுதம் பலப்பிரச்சினைகள் இடையே நஷ்டம் இல்லாமல் ஓடக்காரணம், மக்கள் வாங்குவதால் தான்.

புதிதாக வரும் பலப்பத்திரிக்கைகள் , ரிடர்ன் தான் அதிகம் ஆகுது.

//!மேலும் பூங்கா போன்றவை லாப நோக்கு கருதாமல் நடத்தியதால் தோல்வியடைந்திருக்க கூடுமென நினைக்கின்றேன்.//

இணையத்தில் திரட்டியின் ஒரு அங்கமாக இலவசமாக வந்ததே லாபநோக்கு கருதணும் என நினைக்கிறிங்க, அதன் மூடு விழாவுக்கு காரணம் என்னனே தெரியாமல்.


அப்படியானால் லாபநோக்கு கருதி வெளியிடும் ஒன்றில் இன்னும் எத்தனை சண்டைவரும் என தெரியாத ஏட்டு சுரைக்காயா நீங்கள்?


//அரசாங்கத்தின் இ-கவெர்னென்ஸ் எப்படியென்று தூரத்தில் உட்கார்ந்துகிட்டு அனுபவிச்சாத்தான் தெரியும்.நீங்க தியரி மட்டும் படிக்கிறீங்க:)தேர்வு விண்ணப்பம்,ரயில்வே முன்பதிவு போன்றவை வரவேற்க தக்க மாற்றங்களே.ஆனால் இவை மட்டும் இ-கவர்னென்ஸ் ஆகி விட முடியாது.
அமெரிக்க,வளைகுடா சிவில் ஐடி கார்டுகள் சார்ந்த தகவல் தொகுப்புக்கள் அனைத்து துறை சார்ந்தும் ஓரளவுக்கு இ கவர்னென்ஸை முன்கொண்டு செல்கின்றன.
//

ஏங்கய்யா அவங்களும் ஒரு நாள் தமிழ் நாடு போல ஏதோ ஒரு துறையில் இருந்து தான் ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு யோசிக்காம அங்கே அப்படி இருக்கு ,இங்கே இப்படி இருக்குன்னு சொல்லுங்க :-))

நான் என்ன சொல்லி இருக்கேன்,


//கவர்ன்மெண்டே பேப்பர்லஸ் ஈ-கவர்னன்ஸ் பத்தி பேசிக்கிட்டு இருக்கு அய்யா , திரும்பவும் அச்சடிக்கப்பார்க்கிறார் :-))//

அடுத்த கட்டம் நோக்கி அரசு போகப்போகிறது என உடனே அமெரிக்கா, வளைகுடா அளவுக்கா போகலியே என்றால் என்ன செய்ய?

ஒரே அரசு உத்தரவில் ஓவர் நைட்டில் எல்லாம் அமெரிக்கா அளவுக்கு மாறணும் என எதிர்ப்பார்க்கிறிங்களா?

1000 ரூ நன்கொடைக்கே பொதுவெளியில் சச்சரவு அப்போ அச்சடிக்க காசு கொடுக்க யாரு இருக்கா? காசு கொடுத்தவங்க படைப்பை மட்டும் தான் வெளியிடுவாங்க என நிலை வரும் :-))

இப்போவும் வலைச்சரம் என ஒன்று இருக்கு வாரம் ஒரு ஆசிரியர் , நல்லப்படைப்புகளை தேடி தொகுக்கிறாங்க, லாப நோக்கமில்லாமல், நீங்க அதெல்லாம் படிக்கிரதே இல்லை என நினைக்கிறேன்.

இணையம் என்பதாலும் தேர்வு செய்றவங்க முடிவு என்பதாலும் யாரும் என்பதிவு ஏன் குறிப்பிடவில்லைனு கேட்பதில்லை, அச்சடிச்சு வெளியிட்டால் என் படைப்பு ஏன் வரவில்லை என நீங்களோ உங்க பங்காளி அமெரிக்கனோ சண்டைக்கு வரலாம் :-))

ஆக மொத்தம் குழுமத்துல வெட்டுக்குத்துக்கு ஐடியா சொல்லுறிங்க :-))


ராஜ நடராஜன் said...

தனிமரம்!வருகைக்கு நன்றி.இணையம்,திரட்டி,பதிவுகள் என அனைவரையும் போய்ச் சேரவில்லை என்றே நினைக்கின்றேன்.அச்சுப் பதிவுகள் ஒரு மாற்று முயற்சியென்றே நினைக்கின்றேன்.

ராஜ நடராஜன் said...

வவ்ஜி!எனக்கு எசப்பாட்டு பாடுற ஒரே ஆள் நீங்கதான்.அவ்வளவு லேசா விட்டுடுவேனா என்ன?

அதென்ன!அஞ்சலட்டைன்னு லேசா சொல்லிட்டீங்க!உலகில் சிறந்து விளங்கும் தபால் துறையில் இந்தியாவும் ஒன்று.பெருங்காய டப்பா வேணுமின்னா பழசாக இருக்கலாம்.

ஓலைச்சுவடின்னு சொன்னதும் பைபிளில் வில்லனாக சித்தரிக்கப்படும் யூதாஸ் காரியேத் எழுதியதாக சொல்லப்படும் ஹீப்ரு காஸ்பெல் புத்தகம் யூதாஸ் காரியேத் எழுதியதுதான் என்று எகிப்தின் குகையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதை அசல்தான் என்று நிருபணம் செய்யும் நேஷனல் ஜியாக்ரபி காணொளி ஒன்று கண்டேன்.உங்க கணினி மின்கதிர்களுக்கான உத்தரவாதமென்ன?

விகடன்,குமுதம் பஸ்,ரயிலில் பயணம் செய்பவர்கள்,கல்லூரி ஹாஸ்டல்,நூலகம்,டீக்கடை என வலம் வருகிறதுதானே!இப்போதைய பத்திரிகை ஊடகம் அச்சு ஊடகத்தோடு எதிர்காலத்துக்கு பயன்படுமே என இணையமும் கலந்து இரட்டை ஸ்கோர் செய்றாங்க!பதிவுகள் தளம் இதுவரை ஒரு வழிப்பாதை மட்டுமே!

இ-கவர்னென்ஸில் சில துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன.ஆனால் மொத்த விகிதாச்சாரத்தில் இன்னும் ஆமை நடையே!நம்மிடம் இந்த கால கட்டத்திற்குள் இதனை சாதிக்க வேண்டுமென்ற கால வரையறைகள் எதுவும் கிடையாது.தி.மு.க காலத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஆன்லைன் கார்பரேசன் மென்பொருள் அ.தி.மு.க வந்ததும் மாற்றம் பெற்று விட்டது.ஆனால் அடிப்படை செயல்பாடு என்னவோ ஒன்றேதான்.புதிய மென்பொருள் நிர்வாக சீர்கேடுகளை குறைத்திருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாம்.அல்லது நீங்களே வாக்குமூலம் தரலாம்:)

மாற்று ஊடகத்துக்கான அத்தனை சரக்கும் இணைய பதிவுகளில் இருக்கின்றன.எனவே குமுதம்,விகடன் ஒப்பீட்டளவில் இன்னும் சிறப்பாகவே செயல்படுமென நினைக்கின்றேன்.

நீங்க முன்னாடி டி.ஆர்.பி ரேட் பற்றி சொல்லியிருந்தீங்க!கலைஞர் செய்திகள்தான் முதலிடத்தில் இருப்பதாக அவர்களே அவர்களுக்கு புகழாரம் சூட்டிகிட்டாங்க.ஆனால் செய்தி தொகுப்பில் புதிதாய் வந்த புதிய தலைமுறையே களைகட்டுகிற மாதிரி தோன்றுகிறது.

இணைய பதிவு அச்சு ஊடுருவல் புதிய அரசியல்,பொருளாதார,சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.எப்படி நகர்த்தி செல்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

கடைல வடைய சுட்டு வெச்சாத்தானே வியாபரம் ஆகுதா இல்லையான்னு தெரியும்.அதை விட வடை சுடும்போதே நம்ம கடை வடை ரொம்ப ருசி.வியாபாரமாகிடும் என்ற தன்னம்ப்பிக்கையோடு சுடனும்:)

இந்து பத்திரிகையெல்லாம் அஞ்சு ரூவா கணக்கில் ஆரம்பித்தது.இன்னும் நிலைத்து நிற்பதற்கு அதன் ஆங்கில வளம்,உழைப்பு,அரசாங்கத்தை காக்கா பிடிப்பது எப்படியென்ற நுணுக்கம் போன்றவை உள்ளது.எதையும் இப்படி ஆகிடுமோ,அப்படி ஆகிடுமோ என்று பயப்படுவதை விட இப்படியானால் என்ன செய்யலாம் என்ற மாற்று சிந்தனை துணைபுரியும்.

சண்டைகள் இல்லாமலா இருக்கும்?இன்னும் அதிக சண்டைகளையும் பதிவர்கள் சார்ந்தும்,வாசகர் சார்ந்தும்,அரசியல் சார்ந்தும் கூட நிச்சயம் எதிர்பார்க்கலாம்.ஆனால் சண்டைகளையும் தாண்டிய நிர்வாகத்திறனும்,தலைமையும் முக்கியம்.நம்ம கலைஞரு மேல எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் தண்ணீர்க்குள்ளே இப்பவே தள்ளி விட்டும் மிதக்கிற கட்டுமரமாக இருப்பது அவரது தலைமைக் காட்டுகிறது.

அமெரிக்க பங்காளி வந்து ஆகா!நீ தி.மு.க காரன்னு ஸ்டாம்பை தூக்கிட்டு வந்துடப் போறாரு:)

சண்டைப்போடறதெல்லாம் நீங்க!வவ்வாலுக்கு வக்கீலுன்னு வாங்கி கட்டிக்கிறதெல்லாம் நாங்க.

பங்காளிக்கு யாரையாவது கிள்ளி விட்டு வேடிக்கை பார்கக்னும்ன்னு நெனப்புத்தானே தவிர என் படைப்பு ஏன் வரவில்லைன்னு சண்டைக்கு வரமாட்டார்.அந்த விதத்தில் நாங்க சேம் பிளட்:)




ராஜ நடராஜன் said...

வவ்ஜி!சொல்ல மறந்துட்டேனே!மொளகாய் பொடிக்கு பொழிப்புரை கேட்டீங்களே!ஒரு பின்னூட்டம் போட்டா மூணு பின்னூட்ட பதில் வருது!நானும் மொளகாய் நல்லாவே வேலை செய்யுதுன்னு நினைச்சு சிரிச்சுகிட்டே அப்புறமா அந்தப்பக்கம் போகவேயில்லை:)

வவ்வால் said...

ராஜ்,

உங்கக்கிடே பேசுவதே நேர விரயம் ,

அச்சடிச்சா கிராமம் போகும்னு சொன்னீங்க, அப்புறம் விகடன் எத்தனை பேரு கிராமத்தில் படிக்கிறாங்க கேட்டால் நகரத்தில் படிப்பதை சொல்றிங்க :-((

அப்புறம் இன்னும் பி.கே.பி என்னப்பேசினார்னு பார்க்கவே இல்லை,பார்த்துட்டு வாங்க,சும்மா இப்படியும் அப்படியும் மாற்றிப்பேசிப்பயன் இல்லை.

தகவலுக்காக.

பல அஞ்சலகங்கள் மூடப்பட்டு வருகிறது.

அஞ்சலட்டை அச்சடிக்க செலவு ஆவதால் அதனை நிறுத்திவிடலாமா என அரசு யோசிக்கிறது.

உங்களுக்கு இந்திய நடப்பு என்னவென்றே தெரிவதில்லை, ஆனாலும் தொ.கா பார்த்துவிட்டு ஏதோ சொல்வது.

இந்தியாவந்தால் ஊரை சுத்தி என்ன நடக்குதுன்னும் பாருங்க.

Amudhavan said...

இணையம் என்பது என்னதான் விஞ்ஞானத்தின் மிகப்பெரும் வளர்ச்சி என்றபோதிலும் படிக்கின்ற அனுபவம் என்பது வேறு. வெராந்தாவில் அல்லது புழக்கடையில் நாற்காலி போட்டு அமர்ந்து படிப்பது, ஈஸிசேரில் சாய்ந்துகொண்டே படிப்பது,படுக்கையில் படுத்தபடியே படிப்பது என்று நிறைய இருக்கின்றன. ஏன் பாத்ரூமில் படிப்பது என்றுகூட இருக்கிறது. இந்தப் பழக்கங்கள் எல்லாம் இருக்கும்வரைக்கும் அச்சுபுத்தகம் என்பது தவிர்க்க முடியாததே.எல்லாத்துறைகளுக்கும் வார,மாத இதழ்கள் வந்துவிட்ட நிலையில் இணையத்தில் வரும் விஷயங்களும் இதழ்களில் வந்தால் நிச்சயம் வாசகர்வட்டம் படித்துப்பார்த்து சந்தோஷமாக அதிரலாம்.
இப்போதுதான் டாப்லெட்,செல்லில் இணையம் என்றெல்லாம் வந்துவிட்டதே என்பதெல்லாம் இன்னமும் முப்பதுவருடம் தாண்டி வாதாடவேண்டிய விஷயங்கள். உங்களுடைய ஆசை மற்றும் சிந்தனை வரவேற்க வேண்டியதே.
இதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன என்பது உண்மைதான். அதைத்தாண்டி வரவேண்டும் என்பதுதான் விஷயம்.
ட்விட்டரில் வரும் வரிகளை மட்டும் சில பக்கங்களில் பத்திரிகைகள் வெளியிடுவதுபோல் ஃபேஸ்புக்கில் வரும் விஷயங்களை அப்படியே அச்சில் கொண்டுவர ஒரு திட்டம் இருக்கிறது என்று என்னுடைய பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். அவர் சொல்லி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னமும் அவருக்கு அந்தத் திட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
உங்கள் சிந்தனையைத் தொடர்ந்து யாரேனும் அப்படியொரு இதழைக் கொண்டுவரத் துணிந்தால் மறக்காமல் பேடண்ட் உரிமையைக் கேட்டு வாங்கிவிடுங்கள்.