அமெரிக்க வரலாற்றில் முதலாளித்துவம் சார்ந்த ஊடகங்களே முன்னிலை வகிப்பதால் கம்யூனிஸம் சாராத சோசியலிச சிந்தனைகள் அமெரிக்காவில் வலம் வந்தாலும் அவை உலகளாவிய அளவில் தெரிவதில்லை.சோசியலிசம் என்ற சொல்லை ரஷ்ய கம்யூனிசம் ஹைஜாக் செய்து கொண்டு போய் விட்டதால் அதன் முழுப்பொருள் கம்யூனிசம் சார்ந்து அமெரிக்காவில் முதன்மைப் படுத்தப் படவில்லை.உணவு,வீடு,சுகாதாரம்,குறைந்த நேர வேலை,அதிக நேர ஓய்வு அனைத்து மக்களுக்கும் உலகளாவிய அளவில் கிடைப்பதே சோசியலிசத்தின் அடிப்படை என்கிறார் ஹொவார்ட் ஜீன் (Howard Zinn).
படம் போட்டு ரொம்ப நாளாச்சு!ஹோவார்ட் ஜீன் படம் சேர்ப்பது இந்த பதிவுக்கு அழகு சேர்க்கும்.பட உதவி: அவரது தளமே!Howard Zinn.org மேலும் பல தகவல்களை தரக்கூடும்.
முந்தைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் காலத்து வியட்நாம் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் பலரிடமிருந்து வந்தாலும் வியட்நாம் போருக்கான முதல் குரல் ஒலித்தது ஹொவார்ட் ஜீனிடமே!மார்ட்டின் லூதர் கிங் பிரபலமான அளவுக்கு ஹொவார்ட் ஜீன் உலகளவில் அறியாமல் போனது வரலாற்றுப் பிழையே!1922ல் பிறந்த ஹோவார்ட் ஜீனின் பெற்றோர்கள் புருக்ளின் பகுதியில் வாழ்ந்த உழைப்பாளர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதால் புத்தகங்களையே கண்ணில் பார்க்காமல் வளர்ந்தவர்.சில பக்கங்கள் சிதைந்து கீழே வீசப்பட்ட புத்தகமொன்றை கொண்டு வந்து படிக்கும் ஹோவார்ட் ஜீனின் ஆர்வம் கண்ட பெற்றோர்கள் 10 சென்ட் உடன் கூப்பன் ஒன்றை நியுயார்க் போஸ்ட்டுக்கு அனுப்ப தொடர்ந்து வந்த சார்ல்ஸ் டிக்கன்சனின் எழுத்துக்கள் ஹோவார்டின் வாசிப்புக்கு தளம் அமைக்கிறது.
தனது பதின்ம வயதில் கப்பல் கட்டுமானத்துறையில் பணி புரிந்த அனுபவத்தின் அடிப்படையிலும் விமானப்படையில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது.ஹிட்லரின் பாசிஸத்திற்கு எதிராக பெர்லின், செக்கோஸ்லா விக்கியா,ஹங்கேரி போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசும் 490 விமான குண்டு வீச்சு குழுவினரோடு பணிபுரிகிறார்.1945ம் வருடம் பிரான்ஸின் ரோயன் பகுதியில் நப்தீனிக் ஆஸிட்,பால்மிடிக் ஆஸிட்.பெட்ரோலியம் கலந்த நபால்ம் என்ற குண்டுகளை ஜெர்மன் வீரர்களை நோக்கி வீச கட்டளையிடப்படுகிறார்..ஒன்பது வருடங்கள் கழித்து தனது டாக்டரேட் ஆய்வுக்காக பிரான்ஸில் வசிப்பவர்களிடம் நேர்காணல,முனிசிபல் ஆவணங்கள்,நூலகத்தின் பழைய செய்தி துணுக்குகள் போன்றவற்றை சேகரிக்கிறார்.தனது குண்டு வீச்சால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடிமக்களும்,போர் முடிவதற்காக காத்திருந்த ஜெர்மன் வீரர்கள் சிலரும் இறந்து போனதை அறிவது ஹோவார்ட் ஜீனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது.
இதனை அரசியல் வரலாறு (The politics of History) என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்.பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு நாடாக இருந்தாலும் போர் முடிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் தங்கள் பதவி உயர்வுக்காக எப்படி குண்டு வீச்சுக்காக கட்டளையிடுகிறார்கள் என்பதை சொல்கிறார்.
வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்தது மட்டுமலாமல் போரில் பிடிபட்ட முதல் மூன்று விமானிகளை அமெரிக்கா கொண்டு வந்த சேர்த்த பெருமை ஹோவார்டுக்கே உரியது.
பின்பு அமெரிக்க்காவின் தென்பகுதியில் கறுப்பு நிறம் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது வரலாற்று ஆசிரியர் பணியை தொடர்கிறார்.இங்கேயிருந்து ஹோவர்டின் சோசியலிச கலகம் துவங்குகிறது. தொழிலாளர் யூனியன் போராட்டங்களில் பங்கு கொண்டு FBIன் பார்வைக்கு வருகிறார்.நீதிமன்றத்தில் கறுப்பு இனத்தவர்கள் தனியாகவும் வெள்ளை நிறத்தவர்கள் தனியாகவும் உட்கார வேண்டுமென்ற நீதிபதியின் கட்டளையைப் புறக்கணித்து அரசியல் சாசன விதிகளை நீதிபதிக்கு அறிவுறுத்தி அனைவரையும் கலந்து உட்கார வைக்கிறார்.கல்லூரியின் முதல்வருக்கு பதவி,பொருளாதார் பலமிருந்த போதும் தன்னோடு 400 மாணவர்களின் பலத்தோடு போராடியதை சொல்லி சிரிக்கிறார்.
இரண்டாம் உலகப்போர்,வியட்நாம்,பனாமா,கிரனடா என அமெரிக்காவின் போருக்கு முடிவேயில்லை என்ற விமர்சனத்தோடு ஈராக் போரையும் எதிர்க்கிறார்.
மனித உரிமை,உழைப்பாளர் நலன்,போர்களுக்கு எதிர்ப்பு,நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு,போஸ்டன்,யேல் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்லூரி மாணவர் களிடையே சொற்பொழிவு,விழிப்புணர்ச்சி,ஆய்வு,அமெரிக்க வரலாற்றுக் கட்டுரைகள்,புத்தகங்கள், நேர்காணல் என்று ஹோவார்ட் ஜீனின் மனித நலன்களுக்கான பணி அளவிட முடியாதது.அமெரிக்காவின் முதலாளித்துவ தவறுகளை விமர்சிக்கும் நோம் சாம்ஸ்கிக்கும் முன்னோடி ஹோவர்ட் ஜீன்.
பதிவுக்கான கரு:
Ellis, Deb and Mueller, Denis. Howard Zinn: You Can't Be Neutral on a Moving Train. (film 2004)
மேலும் தகவல் இணைய தேடலில் January 27, 2010ல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொன்டிருக்கும் போது இதய அழுத்தத்தால் இறந்து விட்டார் என்கிறது விக்கிபீடியா.

5 comments:
ராச நடராசர்,
ஹோவர் ஜீன் கூட உங்களுக்கு இத்தனை கால பழக்கமா ,நம்பவே முடியலை, நீங்க அமெரிக்காவில் வசிப்பவர் என சொல்லவும் இல்லை :-))
பஜ்ஜி எல்லாரும் சுட்டுக்கிட்டு அடுத்தவன் பஜ்ஜி சுட்டா மட்டும் அது நல்லா இல்லைனு சொல்றாங்கப்பா ...நான் இப்போ தான் பிரெட் ஆம்லெட் சாப்பிட்டேன் :-))
பி.கு : பதிவை இனிமே தான் படிக்கணும், படித்தால் ஏதேனும் சொல்கிறேன்.
வவ்ஜி!நான் உங்களுக்கு முந்தைய பதிவில் பின்னூட்ட பதில் சொல்லிகிட்டிருந்தேன்.இப்பத்தான் கவனிச்சேன்.ஹோவர்ட் ஜின் பற்றி யாராவது தமிழில் சொல்லியிருக்காங்களான்னு கூகிளேன்.ஒருத்தரும் சொன்ன மாதிரி தெரியலைங்கிறதால நாம துண்டு போட்டு வெச்சுக்குவோமேன்னு தமிழ்த்தொண்டு.
பஜ்ஜியெல்லாம் நீங்க நல்லாத்தான் சுடறீங்க!ஆனால் இந்த மொளகாய் பஜ்ஜி மட்டும் கொஞ்சம் தூக்கலாப் போயிடறதால எல்லோரும் ஆ...ஊன்னு கத்துறாங்க:)
வணக்கம் சகோ,
நல்ல பதிவு ,
நோம் சாம்ஸ்கி நம்க்கு பிடித்த சமூக ஆய்வாளர் என்ற முறையில் அவ்ரின் முன்னோடி அறிமுகம் செய்ததற்கு நன்றி. அவரின் கருத்துகள் பற்றி அறிய முயல்வோம்.
நாம் சொல்வது இதுதான்.
மார்க்சீயம் மட்டுமே பொது உடமை அல்ல!
டார்வினியம் மட்டுமே பரிணாமம் அல்ல!
பெரியாரியம் மட்டுமே நாத்திகம் அல்ல!
அனைத்தும் பல பரிமாணம்,பலரின் பங்களிப்பு உடையவை. இவ்வகையில் பொது உடமைக்கு திரு ஜீன் அவர்களின் பங்களிப்பு பற்றி கற்க முயல்வோம்.
நன்றி
சகோ.சார்வாகன்!வருகைக்கு நன்றி.உங்களின் தேடல்களுக்கு உங்களுக்கெல்லாம் சுட்டி கொடுக்க வேண்டிய அவசியமேயில்லை.
ஹோவர்ட் ஜின் மனித உரிமை வரலாற்றில் முக்கியப்படுத்தப் படவேண்டியவர்.
சகோ.சார்வாகன்!வருகைக்கு நன்றி.உங்களின் தேடல்களுக்கு உங்களுக்கெல்லாம் சுட்டி கொடுக்க வேண்டிய அவசியமேயில்லை.
ஹோவர்ட் ஜின் மனித உரிமை வரலாற்றில் முக்கியப்படுத்தப் படவேண்டியவர்.
Post a Comment