அமெரிக்க, சோவியத் ரஷ்ய பனிப்போர் காலத்தில் இரு நாடுகளின் கொள்கைகளை மட்டுமல்ல உலக நாடுகளின் கொள்கைகளையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கு வகித்தவை அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் சோவியத் ரஷ்யாவின் கேஜிபி உளவு நிறுவனங்கள்.கேஜிபியின் குறிக்கோள் கம்யூனிசம் சார்ந்து நாடுகளை உருவாக்குவதும் அமெரிக்காவிற்கான எதிர்ப்பும்.அமெரிக்க சி.ஐ.ஏ நோக்கம் ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் போன்று உருவாகாமல் தடுப்பதும் (அப்ப 9/11?) பல துறைகளாக இயங்கும் PD,FBI,Pentagon,Congress,Foreign Policy போன்றவற்றின் செயல்பாடுகளை துறை சார்ந்தும் இவை அனைத்தையும் சார்ந்து நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுமாகும்.
கியூபா ,சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் தலையீடு,பனாமா ராணுவ தாக்குதல்,ஈராக்கில் சதாம் ஹுசைன் பதவியேற்பு,ஈரானின் இஸ்லாமிய ஆட்சி,ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, முஜாஹிதீன்களுக்கான அமெரிக்க ஆதரவு, காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க தலையீடு என பலவற்றை சொல்லலாம்.
இதன் பின்ணனியில் இரு நாடுகளின் பொருளாதார நலன்களோடு தம்மைச் சார்ந்து மட்டுமே ஏனைய நாடுகள் இயங்க வேண்டுமென்ற அழுத்தங்களாக நாட்டை ஆள்பவர்களுக்கு அன்பளிப்பு என்று ஸ்விஸ் வங்கி கணக்கு திறக்குமளவுக்கு பணம் தருவதோ தமது நலன்களுக்கு உதவவில்லையென்றால் பயமுறுத்தல்,விபத்து போன்று மரணத்தை ஏற்படுத்துவதோ அல்லது மக்களே கலவரம் உருவாக்கட்டும் என கலவரங்களுக்கான சூழல்களை உருவாக்குவதோ நிகழும்.
இணங்கிப் போவதின் மூலம் தனது நலன்,தன்னை சார்ந்து ஆட்சி புரிபவர்கள் நலன்,இவர்களோடு மேல் நிலையில் உள்ள பீரோகிராட்டிக்காரர்களோடு வசதி வாய்ப்புக்கள் நின்று விடும்.இணங்கிப் போகாமல் நாட்டுப்பற்று என்ற கொள்கைகளோடு ஆட்சி செய்ய முடிந்தாலும் பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது போன்றவைகள் நிகழும்.எப்படியிருந்த போதிலும் ஆட்சி நிர்வாகத்தில் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களே.மேலும் ஊழலுக்கான சூழலை உருவாக்குவதும் கூட உளவுத்துறைகளின் முக்கிய பணியாகும்.
இவ்வாறான பனிப்போர் காலத்தில் இந்தியாவில் நுழைந்த ஊழல் இந்திரா காந்தியின் கால கட்டமும் அதன் தொடர்ச்சியாகவே அரசு அலுவலகங்களில் உதவியாளர் ( பியூன் ) காசு கேட்பதோ வாகன,சாலை விதி ஒழுங்குபடுத்திலில் துவங்கி அரசு அலுவலர்கள்,மண்,மணல்,நிலம்,,கார்பரேட் 2G,பிரதமர் மன்மோகன் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் என எங்கும் எதிலும் வியாபித்திருக்கிறது.இந்தியா போன்ற பெரிய பெடரல் அமைப்பில் ஊழல் பரவுவது எளிதாகவும் அமைகிறது என்பதோடு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிறது.
இப்போதைய நிலையில் பனிப்போர் காலத்து ரஷ்யாவையோ, அமெரிக்காவையோ குறை சொல்லி விட முடியாது என்ற போதிலும் அப்போதைய விதை விருட்சமாக வளர்ந்துள்ளதை மக்களின் மனம் பிரதிபலிக்கிறது.முன்பிருந்த பனிப்போர் சூழல் இல்லாததை உலக வங்கி கடன்,என்ரோன் போன்ற மின்சார திட்டங்கள்,பொருளாதார,விவசாய திட்டங்கள் என புதிய நவீன முறைகள் கையாளப்படுகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு டாலர் என எந்தப் பணியுமில்லாத ஆயிரக்கணக்கான சீனர்களுக்கு நைக் போன்ற காலணிகள் நிறுவனங்கள் மேலோட்டமாக மக்களுக்கு கிடைத்த வரம் மாதிரியாக தோன்றினாலும் மூன்று மாத காலவரைக்குள் நிறுவனத்தின் லாபம் எவ்வளவு என்பதில்தான் நிறுவனம் குறியாக இருக்கும்.உலகப் பொருளாதார பின்னடைவு போன்ற சிக்கல்களில் நிறுவனத்தின் பணியாளர் வேலை குறைப்பு,நிறுவனம் இயங்காமலே போவது அல்லது இன்னொரு தேசத்திற்கு மாற்றி விடுவதென பொருளாதார தடுமாற்றங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன.
உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவ திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன. உலகப்போருக்குப் பின் ஜப்பான் தன்னை உருவாக்கிக்கொண்டது.ஐரோப்பிய நாடுகள் உலகப்போரில் இழந்தவை அதிகம் என்ற போதிலும் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன.பெட்ரோலிய பொருளாதாரத்தால் அரேபிய நாடுகள் வளமாக இருக்கின்றன.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு சாத்தியப்படுமா?
உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவ திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன. உலகப்போருக்குப் பின் ஜப்பான் தன்னை உருவாக்கிக்கொண்டது.ஐரோப்பிய நாடுகள் உலகப்போரில் இழந்தவை அதிகம் என்ற போதிலும் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன.பெட்ரோலிய பொருளாதாரத்தால் அரேபிய நாடுகள் வளமாக இருக்கின்றன.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு சாத்தியப்படுமா?
23 comments:
ராச நடை,
இப்படியே நிறைய பெயர்களை அள்ளிப்போட்டு அமுக்கி எழுதுங்க , சொல்லப்பட்ட தலைப்புக்கும், கருத்துக்கும், காலத்துக்கும் எல்லாம் முட்டிக்கிட்டு இருக்கு :-))
//இதே நிலை இந்தியா///
இருக்கிற வளம் காணாமல் போகாமல் இருக்குமா என்பதுதான் கேள்வி??
வணக்கம் சகோ,
உங்களுக்குப் பொழிப்புரை எழுதுவது நம்க்கு பிடித்த பணி! செய்கிறோம்!
1.பனிப்போர் அமெரிக்கச் சோவியத் கூட்டமைப்பு இடையே நிகழ்ந்தது உண்மைதான்.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நோக்கில் இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கியதும் அமெரிக்காதான்.
சரி
2.இதன் அடிப்படையில் இந்தியாவிலும் இரு நாடுகளின் உளவாளிகளும் அரசியல்,நிர்வாகத் துறைகளிலும் ஊடுருவினர். உலகளாவிய ஊழல் சுவிஸ் வங்கி வரை சென்றது.
சரி
3.//இவ்வாறான பனிப்போர் காலத்தில் இந்தியாவில் நுழைந்த ஊழல்//
சரியா?
ஊழல் என்பது மிக மிகப் பழமையானது. ஆகவே பனிப்போர் காலத்தில்தான் ஊழல் என்பது இந்தியாவில் முதலில் நுழையவில்லை.வேண்டுமானால் இபோதுள்ள ஊழல் முறைகளான் சுவிஸ் வங்கியில் பணம் இடப் படுதல்
உள்ளிட்ட உல்களாவிய ஊழல் முறை என்று சொல்லலாம்.
4./முன்பிருந்த பனிப்போர் சூழல் இல்லாததை உலக வங்கி கடன்,என்ரோன் போன்ற மின்சாரத் திட்டங்கள்,பொருளாதார,விவசாயத் திட்டங்கள் எனப் புதிய நவீன முறைகள் கையாளப்படுகின்றன.//
கடன் வாங்கியே ஆக வேண்டும்.அதனை மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாக நெடுங்காலம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே பொருளாதார முன்னேற்றம். இது த்னை மனிதனில் இருந்து நாடு வரை பின்பற்றப்பட வேண்டிய சந்தைப் பொருளாதார விதி ஆகும்.
5./.உலகப் பொருளாதாரப் பின்னடைவு போன்ற சிக்கல்களில் நிறுவனத்தின் பணியாளர் வேலை குறைப்பு,நிறுவனம் இயங்காமலே போவது அல்லது இன்னொரு தேசத்திற்கு மாற்றி விடுவதெனப் பொருளாதாரத் தடுமாற்றங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன./
இதுவே உலக மயமாக்கலின் வெற்றித் தந்திரம் ஆகும்.எங்கே விலை குறவோ அங்கே வாங்கி எங்கே விலை அதிகமோ அங்கே விற்க வேண்டும். இதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம். முதல் போடுபவன் இலாபம் சம்பாதிக்கப் போடுகிறான் என்ன்னும் சிந்தை இல்லாமல் அவனுக்குக் குறைந்த விலையில் இடம்,சலுகை என அள்ளிக் கொடுத்தல் இப்படித்தான்.
6.//உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவத் திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன.//
இப்படிப் பட்ட நாட்டில் குடியுரிமை பெற்று வாழவே பலரும் விரும்புகிறார்!.
அமெரிக்க நலமாய் இருப்பது பிற நாடுகளைச் சுரண்டியே என்றால் நாம் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டை என அழைக்கப் படுவோம்!.
7/.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்குச் சாத்தியப்படுமா?/
நம்மிடம் என்ன இருக்கிறதோ அதில் எது சாப்பிட்டால் செரிக்குமோ அதனையே உண்ன வேண்டும். நமது இயற்கை வளம் சார் பொருளாதாரம்,வாழ்வையே மேற்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் சொன்னா யார் கேட்பார்?
நன்றி!!!!!!!!
சகோ ராஜநடராஜன்!
//உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவ திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன.//
அமெரிக்காவின் தற்போதய நிலை நீங்கள் குறிப்பிடும்படியாக இல்லை. இன்னும் 10 ஆண்டுகள் போனால் நம் நாட்டில் வேலை கேட்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :-)
// .பெட்ரோலிய பொருளாதாரத்தால் அரேபிய நாடுகள் வளமாக இருக்கின்றன.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு சாத்தியப்படுமா? // ஏன் உங்களுக்கு சந்தேகமாக இருக்குதா ??
JUST WAIT & SEE அமெரிக்காகாரன் நம் நாட்டு கம்பனிகளில் வேலைக்காக அப்ளிகேசன் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை சகோ...
அதுசரி தலைப்பும், பதிவும் முட்டு சந்தில் முட்டிக்குதே ஏன் நண்பா ??? [ ஒரே கன்பூசன் ]
// .பெட்ரோலிய பொருளாதாரத்தால் அரேபிய நாடுகள் வளமாக இருக்கின்றன.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு சாத்தியப்படுமா? // ஏன் உங்களுக்கு சந்தேகமாக இருக்குதா ??
JUST WAIT & SEE அமெரிக்காகாரன் நம் நாட்டு கம்பனிகளில் வேலைக்காக அப்ளிகேசன் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை சகோ...
அதுசரி தலைப்பும், பதிவும் முட்டு சந்தில் முட்டிக்குதே ஏன் நண்பா ??? [ ஒரே கன்பூசன் ]
பணக்காரன் கடன் வெளியே சீக்கிரம் தெரியாது. தெரிந்தாலும் கடன் கொடுத்தவர்கள் தான் கலங்க வேண்டும். இயல்பாகவே ரௌடித்தனமான குணங்கள் ஒவ்வொரு பணக்காரன் மனதிலும் இருக்கும். மனிதனுக்கே இப்படியென்றால் நாடுகளுக்கு?
இப்போது அமெரிக்காவில் உள்ள மினுமினுப்பு எல்லாம் சீனா முதலீடு மற்றும் வளைகுடா முதலீடுகள். இதற்கு மேலும் ஒவ்வொரு நாட்டிலும் சுரண்டுவதால் கிடைக்கும் லாபம்.
எப்போது கலையும்? முதலீடு போட்ட நாடுகள் அத்தனை சீக்கிரம் எடுக்க முடியாத அளவுக்கு வலைபின்னலை பின்னிக் கொண்டே இருப்பதால் இது இன்னும் பல வருடங்களுக்கு இப்படித்தான் இருக்கும். ஒருவர் முழித்துக் கொண்டாலும் அமெரிக்காவுக்கு முழி பிதுங்கி விடும்.
நம் காலத்திற்குள்ளளே அந்த காட்சியை பார்க்க முடியுமா? ஆனால் அதற்குள் இந்தியா இருக்கின்ற இயற்கை வளங்களை எல்லாம் துடைத்து அனுப்பி விடும் போல.
பாஸ் ரா.ந.
சிலருக்கு உங்க மேலே ஏன் இத்தனை பொறாமை என்று தெரியவில்லை.
சுவனப்பிரியனின் அருள்வாக்கு பலித்துவிட்டால், அவரின் சாமியே உண்மையான சாமி. :))))
பனிப்போருக்கு பிறகு உலகமயமாக்கல், தாராளமயம், முதலாளிதத்துவ, தடையற்ற சந்தை என்பதுதான் சரியென்ற நிலை. வெற்றி பெற்றவர்கள் தோற்ற கொள்கையை எப்படி சரியென்று சொல்வார்கள்.
தற்போதிருக்கும் உலகமயமாக்கல் முதலாளிதத்துவ பொருளாதர கொள்கையின் தீமைகளை களைய, சோசலிசம் என்ற புது கொள்கைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றன. முதலாளிததுவத்தில் பொதுவுடைமையை கலக்க முயற்சிக்கிறார்கள்.
புத்திசாலி நாடு, மக்கள் நலத்தினை பிரதானமாக கொண்டு உலகமயமாகக்ள் தாராளமயமாக்கள் ஆகியவற்றின் தீமைகளை களைந்து, நாட்டின் வளங்களை எவ்வளவு காப்பாற்ற முடியுமோ அவ்வளவு காப்பாற்றி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவதுதான். இதை சீனா செய்கிறது. இந்தியா வீட்டை திறந்து போட்டு திருட நினைப்பவர்கள் எல்லாம் தாராளமாக திருடலாம் என்று அழைக்கிறது. அதுதான் தாராளமய கொள்கையோ என்னவோ. மவுனசாமி வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்.
ஒரு நாட்டின் ஆணிவேர் விவசாயம்தான், அதையும் நாட்டின் வேறு மரபு தொழில்களையும் மறந்தால் கிரேக்க தேச கதைதான்.
அமெரிக்காவின் சரித்தரத்தை பார்த்தால், அது சரித்தரத்தின் அழுத்ததிலிருந்து விடுப்பட்டுள்ளது. இப்போது என்ன என்று தான் நடக்கின்றது. பேலண்ஸ் ஷீட்தான் அதற்கு முக்கியம்.
ஒபாமாவின், டிமாக்கிரிட்டிக் கான்பரண்ஸ் பேச்சை கேளுங்கள். அமெரிக்கா நீண்ட நாட்களுக்கு இருக்கும், தற்போது இருக்கும் நாட்டாண்மைதனத்துடன் இருக்கும். அமெரிக்காவின் மக்களின் குணம் அந்த மாதிரி. சவால்களை தைரியமாக சாமார்த்தியமாக சமாளிப்பார்கள். இதை கற்றுக்கொள்ளாமல் வேறு எல்லாவற்றையும் கற்று கொள்கிறோம்.
நன்றி
நரேன்,
//இதை சீனா செய்கிறது. //
அப்போ இந்தியாவில் சீனாவின் கம்யூனிசம் வரணும்னு சொல்றிங்களா எனக்கேட்பார், நீங்க ஒரு கம்யூனிஸ்ட் :-))
//இந்தியா வீட்டை திறந்து போட்டு திருட நினைப்பவர்கள் எல்லாம் தாராளமாக திருடலாம் என்று அழைக்கிறது. அதுதான் தாராளமய கொள்கையோ என்னவோ. மவுனசாமி வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்.//
நீங்க வேற சும்மா ஒன்னும் திறந்து விடுவதில்லை , வாங்க வேண்டிய கமிஷனை வாங்கிய பிறகே திறந்துவிடுவார்கள். மேலும் மறைமுகமாக வியாபாரக்கூட்டும் வைத்திருப்பார்கள்.
ஆனால் நமக்கு சொல்வதோ நாட்டின் வளர்ச்சிக்காக அன்னிய முதலீடு என்ற புளிப்பு மிட்டாய் கொடுப்பார்கள் :-))
1000 கோடி முதலீட்டிற்காக 2000 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 10 கோடிக்கு மக்களிடம் இருந்து பிடிங்கி கொடுத்துவிட்டு ,பொருளாதார வளர்ச்சி என்பார்கள் :-))
இப்படி பிடுங்கி கொடுக்க தனி ரேட் பேசி வாங்கிவிடுவார்கள் நம்ம ஆட்கள் :-))
அமெரிக்க டாலர் சர்வதேச செல்வாணியாக இருக்கும் வரையில் சு.பி. சுவாமிகளின் தீர்க்க தரிசனம் எல்லாம் நடக்காது :-))
சும்மா ஒன்னும் திறந்து விடுவதில்லை , வாங்க வேண்டிய கமிஷனை வாங்கிய பிறகே திறந்துவிடுவார்கள். மேலும் மறைமுகமாக வியாபாரக்கூட்டும் வைத்திருப்பார்கள்.
ஆனால் நமக்கு சொல்வதோ நாட்டின் வளர்ச்சிக்காக அன்னிய முதலீடு என்ற புளிப்பு மிட்டாய் கொடுப்பார்கள் :-))
1000 கோடி முதலீட்டிற்காக 2000 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 10 கோடிக்கு மக்களிடம் இருந்து பிடிங்கி கொடுத்துவிட்டு ,பொருளாதார வளர்ச்சி என்பார்கள் :-))
இப்படி பிடுங்கி கொடுக்க தனி ரேட் பேசி வாங்கிவிடுவார்கள் நம்ம ஆட்கள் :-))
நடாஜி இப்ப ஒத்துக்குறீங்களா? நம்ம வவ்வால் வள்ளுவர் மாதிரி.
சுருக்கமாக சொல்லிவிட்டாரே?
அமெரிக்கா ஒரு இராணுவ,தொழில் நுடப் வல்ல்ரசு மட்டுமல்ல விவசாய வல்லரசும் கூட!!!.
http://en.wikipedia.org/wiki/Agriculture_in_the_United_States
Agriculture is a major industry in the United States and the country is a net exporter of food. As of the last census of agriculture in 2007, there were 2.2 million farms, covering an area of 922 million acres (3,730,000 km2), an average of 418 acres (1.69 km2) per farm.[1]
அமெரிக்கா இபோது பொருளாதார நெருக்கடியில் இருப்பினும் அதன் முக்கிய காரணம் அதன் அதீத நுகர்வு மட்டுமே.
வளர்ச்சி மட்டுப்படும் என்றாலும் அதிக பட்சம் மத்திய கிழக்கில் எண்ணெய் தீர்ந்தவுடன், வேறு இயற்கை வளம் உள்ள இடங்களைத் தேடும்.
கிடைத்தல் அங்கே சவுதி மன்னன் குடும்பம் போல் ஒரு ஆட்சி அமைத்து சுரண்ட வேண்டியதுதான். பிரச்சினை இல்லை!!
அப்படி கிடைக்காத பட்சத்தில் உலக அளவில் செயல்படுவதை குறைத்து விடும்.ஆதாயம் இல்லாமல் அமெரிக்காவும் செயல்படாது!!!
அமெரிக்காவின் விவசாயம் வலிமையாக் உள்ளதால் சூழலுக்கு ஏற்ற தன்னிறைவு பெறும் வாழ்வுமுறைக்கு மாறிவிடுவார்கள்.
இந்தியாவை விடவே அதிக நிலத்தில் சாகுபடி செய்கிறார்கள்.!!!
http://en.wikipedia.org/wiki/Agriculture_in_India
As of 2011, India had a large and diverse agricultural sector, accounting, on average, for about 16 percent of GDP and 10 percent of export earnings. India's arable land area of 159.7 million hectares (394.6 million acres) is the second largest in the world, after the United States.
நன்றி!!
வவ்வால் ட்ரெயிலர் மாதிரி சொன்னதுக்கே இப்படி உதட்டை சுளிச்சுக்கிறீங்களே!உங்களுக்காக வேண்டியாவது இந்த தலைப்பை விடாமல் கதையும் எழுதி க்ளைமாக்ஸும் வேற சொல்லனும் போல இருக்குதே!
விட்டேனா பார்:)
பழமைண்ணா!நலமா இருக்கிறீர்களா?மேக்கத்த சீமை கதையெல்லாம் நீங்க சொல்ல வேண்டியது.வனாந்தரத்துல உட்கார்ந்துகிட்டு நான் ஏதோ பினாத்துகிறேன்.
வவ்வாலுக்காக வேண்டி கதை இன்னும் இரண்டு பாகம் தொடருது.படிச்சிட்டு கருத்து சொல்லுங்க:)
சகோ.சார்வாகன்!உங்கள் துறை சார்ந்த பரிணாம விருந்து இனி வரும் பாகங்களில் கொஞ்சம் தொட்டு விடுவதாலும் பொழிப்புரை எழுதி விட்டதாலும் இத்தோடு விட்டு விடலாமென்றுதான் பார்த்தேன்.ஆனால் கருத்துக்களில் கண்கள் கொஞ்சம் சொருகுவதால் விடறமாதிரியில்ல:)
3. நீங்க ஏதோ பத்திரத்தை எழுதிக்கொடுத்து விட்டு இங்கிலாந்துக்காரன் வரி வசூல் செய்ததுக்கெல்லாம் போவீங்க போல இருக்குதே!முந்தைய நிலை பல ஆக்கிரமிப்புக்களாலும்,இந்தியா என்ற சுதந்திர நாடாகவும் அமையாமல் இருந்த காலம்.நாம் அதனை புறம் தள்ளி விட்டு சுதந்திர இந்தியா காலத்தை நோக்கினால் நேருவின் காலம் ஐந்தாண்டு திட்டங்கள் எனவும் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் சீனாவை எப்படி சமாளிப்பது என்ற நிலையில் இருந்தது என நினைக்கின்றேன்.ஆனால் பீரோகிரசியில் கையூட்டு வாங்கும் சூழல் இல்லையென்பதாகத்தான் தெரிகிறது.போலீஸ் கையை நீட்டும் காலம் மெல்ல இந்திராகாந்தியின் காலத்திற்கு பின்பே உருவாகி இன்றைய ஸ்விஸ் வங்கி வரை வளர்ந்திருக்கிறது.
7. இந்தியா அமெரிக்க நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி செல்லாமலும் அதே நேரத்தில் ஊழலற்ற நிர்வாக அமைப்பான பொருளாதார மாடலை நோக்கி செல்வதே மக்கள் தொகை அதிகமுள்ள நமக்கு பகிர்ந்தளிப்பு என்ற முறையில் செயல்பட முடியும்.
இருக்கின்ற மின்சார தட்டுப்பாடு,மக்கள் வாழ்க்கை முறை போன்றவற்றில் அமெரிக்க வானுயர்ந்த கட்டிட முதலாளித்துவ வாழ்க்கை இந்தியாவுக்கு பொருந்தாது என்றே நினைக்கின்றேன்.நமது வளம் விவசாயம் சார்ந்தும் தொழில் சார்ந்தும் என்ற பொருளாதார மாடலிங் மட்டுமே என்ற கோட்டில் பயணிப்பது மட்டுமே இந்தியாவுக்கு நலன் பயக்கும்.
ஹோமோசெபியன் பற்றியெல்லாம் நீங்க கதை கதையா சொல்லியும் யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களேன்னு வருத்தமெல்லாம் படாதீங்க.இதனை உலகளாவிய அளவில் பள்ளி முதற்கொண்டு சொல்லித்தரவேண்டுமென்ற குழுமங்கள் இருப்பதை சென்ற வாரம்தான் கண்டு பிடித்தேன்.
பதிவுக்கும்,இந்த பின்னூட்டத்துக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு வவ்வால் பின்னாடியே பறக்குது.அதனால் ரகசியம் அடுத்து அடுத்து பதிவில் அம்பலப்படுத்தப்படும்:)
சகோ.சுவனப்பிரியன்!அமெரிக்க பொருளாதார பின்னடைவின் பின்னணியில் போர் செலவுகள்,உள்நாட்டுப் பிரச்சினை என்பவற்றோடு உலகளாவிய டாலர் மாற்ற வியாபார முறையில் அமெரிக்க நலன் சார்ந்து இல்லாத பணமாற்றங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதும் கூட அமெரிக்க மந்தநிலைக்கு காரணம்.அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியைப் பொறுத்தே உலக பொருளாதாரம் அமையும் படியான அமெரிக்க டாலர் பெக் கட்டமைக்கப்பட்டுள்ளது.இதனை மிகவும் தாங்கிப்பிடிப்பதில் அரேபிய பெட்ரோலிய வர்த்தகமும் ஒன்று.
அரசியல் நலன் சார்ந்து அமெரிக்கா சுயநலத்தோடு செயல்பட்டாலும் உலக நலன் சார்ந்தும் புதிய சிந்தனைகள் அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் சார்ந்தும் வெளிப்படுகின்றன.ஆனால் இதனையும் முன்னெடுத்து செல்பவர்கள் அமெரிக்க அறிவு ஜீவிகளே.
//10 ஆண்டுகள் போனால் நம் நாட்டில் வேலை கேட்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :-)//
ரொம்பத்தான் ஆசை:)
நாசர்!வவ்வால் என்ன உங்க பக்கத்து வீடா?அவரோட சேர்ந்து கன்பூசன்னு மத்தளமடிக்கிறீங்க:)
பனிப்போரிலிருந்து வரலாறு துவங்கினா நான் தனியா புத்தகம்தான் போடனும்.ஏதோ மேலோட்டமாக தொட்டா விடமாட்டீங்க போல இருக்குதே.இன்னும் 2 பதிவு இதைப்பற்றிப் போடாமல் விடப்போவதில்லை:)
அமெரிக்காகாரன் கீழே விழுந்துட்டா கைகொட்டி சிரிக்கிற மாதிரி தெரிகிறதே! விட்டேனா பார்ன்னு உங்களை ஓடி வந்து துரத்துலேன்னா பாருங்க:)
ஜோதிஜி!விசயத்தை கப்புன்னு புடிச்சிட்டீங்க.அடிபட்ட அனுபவமாச்சே!
அமெரிக்க பெக் என்ற வட்டத்துக்குள்ளேயே உலக பொருளாதாரம் இன்னும் சுழல்கிறது.ஈரோ மாற்றாக வந்தாலும் மாற்றங்கள் இல்லை.
நாளைக்கு ஸ்விஸ் வங்கிகள் இருப்பில் இருக்கும் டாலர்கள் செல்லாது என்ற சூழலிலும் இல்லை.டாலர் சேமிப்பில்தான் ஸ்விஸ் வங்கிகளும்,ஸ்விஸ் நாட்டின் பொருளாதாரமே இயங்குகின்றன.
நம் காலத்திலேயே பார்க்க முடியுமாவா?அதான் மலை முழுங்கி மகாதேவன்கள் இருந்த மலையையே சுரண்டி எடுக்குறாங்களே!நம்ம காலத்திலேயாவது பார்த்தோமேன்னு ஆறுதல் பட வேண்டியதுதான்.
இவை மாற மாற்று சிந்தனைகள் மிகவும் முக்கியம்.அதனை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
பாஸ் நரேன்!வாங்க...வாங்க...மறுபடியும் ஜோதியில் கலந்துக்கோங்க!
சகோ.சுவனப்பிரியன் ஒரே புள்ளியில் உட்கார்ந்து கொண்டு மந்திரம் ஓதுவதால் அருள் வாக்கு பலிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.அமெரிக்காவின் ஒரு முகத்தை மட்டுமே காண்பித்திருக்கிறேன்.இன்னுமொரு முகத்தை அடுத்த பதிவிற்கும் அடுத்த பதிவில் காண்போம்ன்னு சொல்வதற்கு முன்பு
//பனிப்போருக்கு பிறகு உலகமயமாக்கல், தாராளமயம், முதலாளிதத்துவ, தடையற்ற சந்தை என்பதுதான் சரியென்ற நிலை. வெற்றி பெற்றவர்கள் தோற்ற கொள்கையை எப்படி சரியென்று சொல்வார்கள்//
அமெரிக்காவின் பலம் புதியவற்றை பரிட்சித்துப்பார்ப்பது மட்டுமல்ல...செயல்படுத்த நினைத்ததின் தோல்விக்கு காரணம் என்ன என்ற அனைலைஸ் செய்வதும் கூடவே.
முதலாளித்துவ கொள்கைகளுக்கு மாறாக சோசலிச கொள்கைகளையே இன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் கடைப்பிடிக்கின்றன.கியூபா கம்யூனிச சித்தாந்தங்களோடும்,சோசலிச பொருளாதாரத்தை அமெரிக்காவின் எதிர்ப்போடும் இவ்வளவு நாட்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.வெனிஸ்லேவின் சாவேஸ் போன்றவர்கள் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிராகவும் சிலி,ஈகுவேடர்,பொலிவியா நாடுகள் ஒன்றாக இணைந்த பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க முயல்கின்றன.இவை வெற்றியடையும் பட்சத்தில் எர்னஸ்டோ செகுவாராவின் லத்தீன் அமெரிக்க கனவு நிறைவேறும் சாத்தியங்கள் அமையக்கூடும்.
ஆனால் அமெரிக்கா தனது தவறுகளை அனைலைஸ் செய்யும் வலிமையோடும் புதிய உலக சிந்தனைகளோடு உலகளாவிய கருத்து பரிமாற்றங்களை முன்வைக்கும் மாற்று அரசியல் தளத்தை உருவாக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகிறது.
தாரளமயமாக்கல்,வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவின் முகத்தை மாற்றியிருக்கிறது.ஆனால் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதில் இந்தியா தவறி விட்டதும் இதில் மவுனசாமிக்கு முக்கிய பங்குண்டு என்பதோடு நிர்வாகத்திறனற்ற செயல்படாத பிரதமர் என்பதை டைம்ஸ்,நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளும் சொல்லி விட்டன.
இன்றைக்கு இணைய தொடர்புகளும் கருத்துப் பரிமாற்றங்களும் அதிகரித்து விட்ட போதிலும் இவற்றிற்கெல்லாம் அடிப்படையான உணவு என்ற முக்கியத்துவத்தை மிஞ்சி எதுவுமில்லை.தொழில்நுட்ப வளர்ச்சியில் என்னதான் செவ்வாய் கிரகத்திற்கே பிரவேசித்தாலும் உணவு என்ற மனித உடல் நுட்பத்தை மாற்ற முடியாது.இயற்கையாக கிடைத்த வரமான விவசாயத்தை தொடர்ந்து முன்னெடுப்பது இந்தியாவின் நிரந்தரமான வளர்ச்சிக்கு உதவும்.
தற்போதைய நிலையில் ஒன்று செய்யலாம்.பெட்ரோல் ஒரு லிட்டர் உலக சந்தையில் என்ன விலைக்கு விற்கிறதோ அதே விலைக்கு ஒரு லிட்டர் அரிசியையும் விலை நிர்ணயம் செய்து விடலாம்.இப்பொழுதெல்லாம் அரேபிய ஷேக்குகளே பிரியாணி இல்லாம சாப்பிட மாட்டேன்கிறாங்க:)
//தற்போது இருக்கும் நாட்டாண்மைதனத்துடன் இருக்கும். அமெரிக்காவின் மக்களின் குணம் அந்த மாதிரி. சவால்களை தைரியமாக சாமார்த்தியமாக சமாளிப்பார்கள். இதை கற்றுக்கொள்ளாமல் வேறு எல்லாவற்றையும் கற்று கொள்கிறோம்.//
வவ்வால் தூண்டி விட்டதால் தொடர்ந்து நான் சொல்ல வருவதை நீங்க சொல்லி முடிச்சிட்டீங்க.நன்றி.
யப்பே!வவ்வால் மறுபடியும் பறந்து வந்துடுச்சா:)
கருணாநிதி பற்றி பேசினால் ஜெயாவோட பக்கவாத்தியம்,இஸ்லாமிய சகோக்களுடன் விவாதித்தால் இந்துத்வாவாதிங்கிற மாதிரி நரேனை கம்யூனிஸ்ட்டுன்னு சொல்றதுக்கு நானென்ன அமெரிக்கா பங்காளியா:)
நியாயமா பார்த்தா இது மாதிரி சப்ஜெக்ட்,ஜாக்கெட்டெல்லாம் அமெரிக்க குடிவாசிகள் விவாதிக்க வேண்டியது.வனாந்தரத்தில் ஒட்டகை மேய்ச்சுகிட்டு இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்குதே!என்ன கொடுமை சார் இது!
உங்க சிரிப்பானெல்லாம் சரிதான்.ஆனால் இதனை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதற்கு கூட நம்ம துறைசார் இந்தியர்கள் சிலர் அமெரிக்கா போய்த்தான் விவாதம் நடத்துறாங்க.
சுப்ரமணி சாமியை இப்ப அமெரிக்காவுக்கு கூப்பிடதில்லை என்பதோடு அவருக்கு கொஞ்சம் சீனா காதலும் இருப்பதால் இப்போதைய நிலைக்கு சீனாவுக்கே கொடி பிடிப்பார்.ஒரு வேளை பிஜேபி சுப்ரமணியையும் இந்துத்வா கோட்டாவில் சேர்த்துகிட்டு ஆட்சிக்கும் வந்தால் சாமி கேட்கிற வரமே சீன வெளியுறவுத்துறைன்னு புதிதாக ரூம் போடுவதாகத்தான் இருக்கும்.
சாமின்னு சொன்னதும் நேற்றைக்கு சோ புதிய தலைமுறைக்கு சொன்ன பேட்டி காணநேர்ந்தது.இதுவரைக்கும் இலங்கை செய்ததெல்லாம் சரிதானாம்.ஆனால் இலங்கை இனியும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கலேன்னா இதுவரை கொடுத்த ஆதரவை வாபஸ் செய்துக்குவாராம்!என்ன கொடுமை சார் இது!
இந்த கான்டக்ஸ் லென்சை எங்கேயோ வைத்து விட்டேனே:)
ஜோதிஜி!வவ்வால் கறுப்பா?செவப்பான்னே தெரியாது.அதுக்குள்ளே நீங்க வள்ளுவர்ன்னு தாடி மீசையெல்லாம் ஒட்ட வைத்துப் பார்க்கிறீங்களே:)
நல்ல வேளை போட்டோவெல்லம் நீங்க ஒட்ட வெச்சீங்க!பின்னூட்ட பகுதியில் லபக்குன்னு உங்க பின்னூட்டத்தை மட்டும் பிடிக்கிறதுக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது.
ஜோதிஜி!நீங்க சொல்வதின் பின்புலம் என்னவென்று யோசித்தால் எஸ்.ராமகிருஷ்ணன் வன்முறை என்பது நம்ம வாழ்க்கையோடு ஒன்றர கலந்திருக்கிறது என அம்மா குழந்தையை சாப்பிடுன்னு பயமுறுத்துவதிலோ அல்லது பள்ளி மாணவன் இன்னொரு மாணவனை கிள்ளி விடுவது,வாத்தியார் மாணவனை அறைந்து விடுவதோ,அடிப்பதோ என்று துவங்குவது போல் ஊழலும் கூட அடுத்தவனின் பென்சிலை திருடுவது,மிட்டாய் வாங்க அப்பாவின் பாக்கெட்டுக்குள் கைவைப்பது என்று சிறு சிறு தவறுகளாக துவங்கி நிர்வாகத்தின் உச்சம் வரை நிறைந்து காணப்படுகிறது.
ஜெர்மனியில் கணக்கு எழுதும் கிளர்க் கையூட்டு வாங்கினால் சட்டப்படி குற்றமாம்!ஆனால் டெபுடி என்ற அளவில் மினிஸ்டர் வாங்கிக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
நம்மூரில் எப்படித் திருடலாமென்று சொல்லிக்கொடுப்பவர்களே ஐ.ஏ.எஸ் போன்ற பொறுப்பான நிலையில் இருப்பவர்கள் என்று புள்ளி விபரக் கணக்குகள் சொல்கின்றன.
இதற்கு ஊசி போட மாற்று வழிகள் கட்டாயம் இருக்கும்.ஆனால் நாம் யோசிப்பதில்லை:)
சகோ.சார்வாகன்!மொத்த கொள்ளளவு,ரசாயன உரங்களை விமானத்தின் மூலம் தெளித்து லேபர் நேர,செலவுகளைக் குறைப்பது என்று அமெரிக்கா முன்னிலையில் இருந்தாலும் ஆர்கானிக் பெர்ட்டிலைசர் என வவ்வால் இங்கேயோ அல்லது அவரது தளத்திலோ குறிப்பிட்டது மாதிரி மண்புழு விவசாயத்திற்கு உதவி செய்கின்றன என்று மண்புழு,மக்கிப்போன இலை தழைகள்,நீரை சுத்தப்படுத்த மீன் வளர்ப்பு என மாற்று விவசாய முறையையும் அமெரிக்கர்கள் செய்வதோடு இதன் விழிப்புணர்வாக பலருக்கும் சொல்லிக்கொடுக்கவே செய்கிறார்கள்.
நீங்கள் சொன்னது போல் விவசாயத்திலும் அமெரிக்கா முன்னிலையிலே இருக்கிறது.ஒரு பக்கம் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் ரசாயன உரங்கள்,மறுபக்கம் ஆர்கானிக் விவசாயம் என்பதோடு இப்பொழுதெல்லாம் ஆர்கானிக் உணவு என்று லேபிளும் கூட குத்தி விடுகிறார்கள்.
இதே போன்ற விவசாயத்தை மாட்டுச்சாணம்,மூத்திரம்,நீர் என கலக்கி தமிழ்நாட்டிலும் விவசாயம் செய்வதை மக்கள் தொலைக்காட்சியில் காண முடிந்தது.(அருள்!உங்களுக்கும் சகோ.சுவனப்பிரியனுக்கும் சண்டை மூட்டி விடுகிறேன்னு முன்னாடி யாரோ கத்துனமாதிரி தெரிகிறதே!நான் ரொம்ப.....ரொம்ப....:))
நல்லவேளை சகோ.சார்வாகனுக்கும் சகோ.சுவனப்பிரியனுக்கும் சண்டைமூட்டி விடலைன்னு குற்றம் சுமத்தாத வரைக்கும் சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்:)
இனி யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை போல இருக்குதே!
ராசா,
வழமை போல குழப்பிட்டு ,என்னமோ நான் சொன்னதா சொல்லிக்கிட்டு :-))
அரைப்ப்பக்க பதிவை குழப்பி எழுதிட்டு இன்னும் சொன்னால் 2 பாகம் போகும்னு சொல்ல வேண்டியது, நான் முழுசா விலாவாரியா எழுதினாலும் அதைப்படிக்காமலே குத்துமதிப்பா சொல்ல வேண்டியது.
இந்த அரைவேக்காடு பதிவுக்கே இவ்ளோ நோவுதுன்னா , அப்புறம் எப்படி நீங்க எல்லாம் என் பதிவில வந்து அதை சொல்லி இருக்கலாமே , இதை சொல்லி இருக்கலாமே என சொன்னதை விட்டுவிட்டு சொல்லாததை மட்டும் பேசிக்கொண்டு இருந்தீர்கள்?
நான் எப்பவும் சொல்ல நினைப்பதை தான் சொல்வேன் , யாருக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து சொல்வதில்லை எனவே மண்டையில் கொட்டி விட்டதாக நினைத்தால் , அது என் பிழையில்லை!
Post a Comment