Followers

Saturday, September 22, 2012

பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய பொருளாதாரக் கொள்கைகளான டீசல் விலை உயர்வு,சிறு வியாபாரங்களில் அன்னிய முதலீடு போன்றவற்றிற்கு நிறைய எதிர்ப்புக்கள் தென்படுகின்றன.மன்மோகன் ஒரு சிறந்த பொருளாதாரவாதி ஆனால் மோசமான அரசியல்(தெரியாத)வாதின்னு சொன்னதுக்கு கீச் கீச்ன்னு  வவ்வால் கத்தியது நினைவுக்கு வருகிறது.:)
இப்பவும் நான் அந்த வாதத்தில் உறுதியாக இருக்கிறேன்.

1990களின் பொருளாதார மாற்றங்கள் இன்று வரையிலும் இரண்டு விதமாக நன்மையும் தீமையும் கலந்து இருந்தாலும் கூட சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டி போடும் நாடாக உயர்த்தியது..அதில் சரிவுகள் நிறைய என்பது வேறு.இந்தியா மெதுவாக அவசரப்படாமல் ஆமை மாதிரி பொருளாதார வேகத்தில் நகர சீனா எட்டுக்கால் பூச்சியாய் ஓடி ஆமையை எட்டுக்கால் பூச்சியே வென்றது.இருந்த போதிலும் உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலையில் இந்தியா ஓரளவுக்கு தாக்குப்பிடித்து வந்துள்ளதும் உண்மை.

பிரச்சினைகளுக்கெல்லாம் வாய்மூடி பரிதாபமாக பார்க்கும் பிரதமர் பொருளாதாரம் என்றவுடன் இது நம்ம பேட்டைன்னு பணமென்ன மரத்திலா காய்க்கிறது என நேற்று வாய் திறந்து விட்டார்.பிரதமர் வாய் திறந்த ஒரே காரணத்துக்கான ஆதரவே இந்தப் பதிவு.டீசல் விலையை ஏற்றாவிட்டால் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற சூழலுக்கு வந்து விடும் என்பதாலும் இரண்டணா அதிக செலவை ஈடுகட்டவே சிறுதொழில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வருவதாகவும் மன்மோகன் சிங்கின் வாதம்.

பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் நிரந்தரமானதல்ல.உலகின் எந்த ஒரு அசைவும்,சலசலப்பும் பெட்ரோலிய பொருட்களின் விலையை பாதிக்கும்.இதற்கு சமீபத்து உதாரணம் சொன்னால் ஒரு டாலருக்கு உதவாத சாம் பாசில் என்ற நகுல பாசில் எடுத்த முஸ்லீம்களின் அறியாமை ட்ரெய்லர் கூட பார்க்காத நியாயமான போராட்டம் ட்ரெய்லர் சொல்வது சரிதான் என்பது மாதிரி வன்முறையாக மாறிய நிகழ்வும் கூட பெட்ரோலிய விலையை பாதிக்கும்

.மக்களின் போராட்டங்கள் மட்டுமல்ல,அமெரிக்கா லிபியாவுக்கு 2 ராணுவக்கப்பலை அனுப்புகிறேன்ன்னு அறிக்கை விட்டாலும் விலை எகிறும்.பிரெஞ்சுக்காரன் கார்ட்டூன் போட்டாலும் சரி! கிரிஸ் பொருளாதாரம் சரிந்தாலும் சரி விலை நிர்ணயம் ஆடுபுலி ஆட்டம்தான்.டீசல் உபயோகிப்பாளர்கள் காசு இருக்குற ஆசாமிகள்தான் எனவும் பெட்ரோல் மக்கள் அதிகம் உபயோகிப்பதை மனதில் கொண்டு விலையேற்ற வில்லையென்றும் மன்மோகன் சொல்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் இது சரிதான் என்று தோன்றினாலும் பொருட்களை கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்கள் டீசல் விலை ஏறினால் ஒரு லோடு பொருளுக்கான விலை,இதர செலவுகளையும் ஏற்றி விடுவார்கள்.இந்த விலையேற்றம் மறுபடியும் உபயோகிப்பாளர்களான மக்கள் மீதே மறைமுகமாக சுமத்தப்படும்.தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்குவதைப் போல் நுகர்வுப் பொருட்கள் எவ்வளவு விலை அதிகமானாலும் மக்கள் வாங்கியே தீர்வார்கள்.இன்று  ஏழைகள் ஆயிரங்களிலும்,நடுத்தர வர்க்கம் லட்சங்களிலும்,பணக்காரர்கள் கோடிகளிலுமே பேசுகிறார்கள்.

அத்தியாவசிய தேவைகள்,தேவைகள்.ஆடம்பர தேவைகள் என்ற மூன்று நுகர்விலும் மக்களின் வாங்கும் சக்தி இன்று அதிகரித்துள்ளது.இதனை மனதில் கொண்டே பொருளாதார மாற்றங்கள் சலசலப்பை உருவாக்கினாலும் காலப்போக்கில் மக்கள் பழகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பொருளாதார மாற்ற கொள்கையை அரசு கையில் எடுத்துள்ளது.

அந்நிய முதலீட்டு சூப்பர் மார்க்கெட்டையெல்லாம் ஏற்கனவே நீரோட்டமிடப்பட்டு விட்டன.மொரார்ஜி தேசாயின் கோகாகோலாவுக்கான எதிர்ப்பையும் மீறி மறுபடியும் கோகாகோலாவும்,பெப்சியும் திரும்ப வந்து விட்டன.சாரு போகின்ற ஓசி ஐந்து நட்சத்திர பாரில் கோக் கலந்து விஸ்கி அடிப்பதெல்லாம் பேஷா பேசனாகிய மாதிரி சரக்குக்கும் கோக்,பெப்சி கலந்து குடிக்கும் அண்ணாத்தைகளுக்கு விஸ்கிக்கு பக்கவாத்தியமே சோடாவும்,ஐஸ் விரும்பினால் லெமன் சிலைஸ் ஆன் த நெக் என்பதை யாரும் சொல்லித்தருவதில்லை.

எல்லாமே மெல்ல மெல்ல பழகிப்போகும் என்பதோடு சிறுதொழிலில் அந்நிய முதலீடு இன்னும் பல நுகர்வுப்பொருட்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தும் என்பதோடு அந்நிய முதலீட்டுக் கொள்கையை சோதித்து பார்த்தே விளைவுகளை இனியும் பேசமுடியும்.

பிரதமர் மன்மோகன் சிங் மக்கா அல்லது கொக்கா என்பதை அடுத்து வரும் பி.ஜே.பியின் ஆட்சி காலத்தில் அசைபோடுவோம்.

ஒரே மன்மோகன் புகழ் பாடுற மாதிரி இருக்குதேன்னு சிலர் புலம்புவார்கள் என்பதால் இம்புட்டு பொருளாதார கொள்கை பற்றியெல்லாம் அக்கறைப்படும் பிரதமர் ஸ்விஸ் பேங்கில் இருக்கும் பணத்தையெல்லாம் வாய் திறப்பதேயில்லையே என்பதையும் சொல்லி வைப்போம்.கல்லுளி மங்கன் பிரணாப் எப்படியோ ஜனாதிபதி பதவியில் உட்கார்ந்து கொண்டு தப்பித்து விட்டார்.சிதம்பரத்தின் பெயரும் ரப்பர் ஸ்டாம்ப் ஒட்டி ஸ்விஸ் வங்கிக்காரன் முடக்கி வைத்துள்ளதாக நேற்று சாய்ராம் பதிவொன்றில் பார்த்தேன். இந்தியாவின் ஸ்விஸ் சேமிப்பு மட்டும் 56% என முதலிடத்தில்.ரஷ்யாக்காரன் 18% என இரண்டாம் இடத்தில்.மற்ற நாடுகள் அனைத்தும் குட்டி பயில்வான்கள்தான்.இதையெல்லாம் திரும்ப கொண்டு வரவும் மன்மோகனை வலியுறுத்துவோம்.

சாத்வீகமான போராட்டங்கள் எந்த பலனையும் அளிப்பதில்லை.போராட்டங்கள் மக்களின் உணர்வுகளைக் கொட்டும் ஒரு வடிகாலாக மட்டுமே தென்படுகிறது.ரோடு சரியில்லை,குழாயில் தண்ணீர் வரவில்லை,மணலை அள்ளிக்கொண்டு போகிறான் ,மின்சாரமில்லை என்ற் நியாயமான போராட்டங்களாகட்டும்,காவிரி நீர்,ராஜபக்சே நேற்று சாஞ்சியில் ஓதிய அகிம்சை வேதாள குரலுக்கு எதிராக வை.கோவும் ஏனைய தோழர்களும் மாநிலம் கடந்து சென்ற போராட்டமாகட்டும் அரசு இயந்திரம் மயிரே போச்சுன்னுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தொட்ட தொண்ணூறுக்குமான போராட்டத்தை நிறுத்துவது முக்கியமென படுகிறது.போராட்டமற்ற  வாழ்க்கையாவது சுபிட்சத்தைக் கொண்டு வருகிறதா என பரிட்சிப்போம்.அதுவும் மக்கள் வாழ்க்கையில் வசந்தத்தை தரவில்லையென்றால் இந்திய தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே ஒற்றைப் போராட்டத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றுவது அவசியம்.

21 comments:

வவ்வால் said...

ராச நடராசரே,

//மன்மோகன் ஒரு சிறந்த பொருளாதாரவாதி ஆனால் மோசமான அரசியல்(தெரியாத)வாதின்னு சொன்னதுக்கு கீச் கீச்ன்னு வவ்வால் கத்தியது நினைவுக்கு வருகிறது.:) இப்பவும் நான் அந்த வாதத்தில் உறுதியாக இருக்கிறேன். //

எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் நம்மளை இன்னும் நம்ப ஆள் இருக்கு#மன்மோகன்.

பெடோலிய பொருள்களின் விலையில் சர்வதேச சந்தையின் பாதிப்பை விட உள்நாட்டு அரசு வரிவிதிப்புகளே காரணம்னு பக்கம் ,பக்கமா பதிவு போட்டும், இன்னும் உலக சந்தை விலை ,நட்டம் தவிர்க்கனு ஒரு பழைய கதையே பேசிக்கிட்டு :-))

பெட்ரோல்,டீசல் எல்லாம் என்ன விலை விற்றாலும் மக்கள் திட்டிக்கிட்டே வாங்குவாங்க, இன்னும் சிலர் தடையில்லாமல் கிடைச்சா போதும் ரகம் தான், அதான் அரசு விலையை ஏற்றிக்கிட்டே இருக்கு.

டீசலில் 5 ரூ விலை ஏறினால் ,மக்கள் தினசரி வாங்கும் பொருளில் மொத்தமாக 50ரூ செலவீனம் அதிகமாகும் ,என்ற அடிப்படையை உணராத மன்னு மோகனும் அவரது சீடன் ராச நடையும் வாழ்க :-))

இனிமே பொருட்கள் எல்லாம் மாட்டு வண்டியிலே கொண்டு போய் விநியோக்கணும் அப்போ தான் சரிப்பட்டு வரும்.

மன்னு மோகன் போட்ட பொருளாதார திட்டங்கள் , வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலையில் இரு வேறுபட்ட சமூகத்தினையே உருவாக்கும்.

ஒரு பக்கம் கையில காசில்லாமல்ல் எதனையும் நுகர முடியாத மக்கள். மறு பக்கம் கையில நிறைய காசு, ஆனால் என்ன வாங்கன்னு பொருள் தேட முடியாத உயர் வர்க்கம் .

ஏழ்மைக்கும்,செல்வ செழிப்புக்குமான இடைவெளியை பெரிதாக்கிய புண்ணியம் மட்டுமே மன்னு மோகனுக்கு :-((

ராஜ நடராஜன் said...

நான் முந்தைய பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிகிட்டிருந்தேன்.வவ்வால் இங்கே வந்து உட்கார்ந்துகிட்டிருக்குது:)

உங்களுக்கு அடுத்த பொருளாதார மேதை யஷ்வந்த் சின்ஹா ஐ.ஏ.எஸ் ரெடியாகிட்டிருக்காரு.வந்து அப்படியே இந்திய பொருளாதாரத்தை அப்படியே கவிழ்த்துப்போட்டுருவார் பார்த்துகிட்டேயிருங்க:)

உள்நாட்டு வரி விதிப்புகள்,தனியார் மயமாக்கல் என்பவை தலைவலி மாத்திரையின் சைடு எபக்ட் மாதிரி.வரிவிதிப்பு மாற்ற்ங்கள்,தனியார் மயமாக்கலை அரசு மயமாக்கல் என்பதெல்லாம் அரசின் கைக்குள் இருக்கும் விசயம்.ஆனால் சர்வதேச சந்தையின் விலையை யாரும் கணிக்க முடியாது.உலக நடப்புக்களுக்கேற்ப ஆடும்,அமரும்,அலறும்.பெட்ரோலிய நாடுகளே நினைச்சாலும் கூட விலையை நிர்ணயிக்க முடியாது.

எண்ணை கச்சாப்பொருட்களின் விலையேற்றத்திற்கு சீனா,இந்தியா போன்ற ஜனத்தொகை அதிகமான நாடுகளின் நுகர்வும் ஒரு காரணம்.சைக்கிள்,பஸ் பயணமே கதின்னு இருந்த மக்கள் இன்று டுர் டுர்ன்னு மோட்டார் பைக்கும்,கீ,கீன்னு காரும் ஓட்டுகிறார்கள்.விலையேறினாலும் சரி பொருட்களை கொண்டு போய் விற்பார்களே தவிர மாட்டுவண்டி கனவெல்லாம் இனி நடக்க கூடிய ஒன்றல்ல.

இரு வேறுபட்ட பொருளாதார சமூகத்தை உருவாக்கவே செய்யும்.அதில் என்ன சந்தேகம்?90களுக்கும் முற்பட்ட காலத்தை விட கோடிஸ்வரர்களும்,உலக சந்தை பணக்கார இந்தியர்களும் பெருகியுள்ளார்கள்.அதே போல் ஏழை ஏழையாகவே இருப்பதும் உலகமயமாக்கலின் எழுதப்படாத சட்டமாகி விட்டது.இதில் மன்மோகனை குறை சொல்லிப்பயனில்லை:)

சார்வாகன் said...

வணக்கம் சகோ இராசநட,
சிறந்த நகைச்சுவை பதிவு. மன்மோகன் சிங் த்னக்கு ஒரு ஆதரவாளர் இருக்கிறர் என்றால் அவரே நம்ப மாட்டார்.

பெட்ரோல் விலை ஏறற இறக்கம் வெளியுலக் சூழலை சார்ந்து இருந்தாலும் இந்த விக்கி உலகின் பல் நாடுகளிலும் என்ன் விலை நிலவரம் என்பதை அலசுகிறது.
[http://en.wikipedia.org/wiki/Gasoline_and_diesel_usage_and_pricing]

Latest!!!

http://www.mytravelcost.com/petrol-prices/
நம் நாட்டில் ஒரு லிட்டர் 1.43 டால்ர் என்றால் பாகிஸ்தானில் 0.72 டாலர்[பாதி விலை ]

அமெரிகாவில் 1.024 டால‌ர்.

சீனா 1.06


ஏன் விலைக‌ளில் மாறுபாடு,வ‌ரித‌னே!! வ‌ரியை கூட‌ கொஞ்ச் நாளுக்கு மாற்ரி விலையை மாற்றாம‌ல் இருக்க‌ முடியாதா

வ‌ரி ப‌ற்றிய‌ விக்கி சுடி
[http://en.wikipedia.org/wiki/Fuel_tax]



நன்றி!!

புதியவன் பக்கம் said...

ராஜ நடராஜன்,
பெட்ரோல்-டீசல் விலைஉயர்வு சர்வதேச சந்தை விலை மாற்றத்தால் என்கிறீர்கள். எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துங்கள். உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு-டீசலுக்கு-மண்ணெண்ணெய்க்கு இறக்குமதி விலையுடன் சேர்த்து உற்பத்திச் செலவு என்ன, அதன்மீது விதிக்கப்படும் வரி என்ன, லாப விகிதம் என்ன என்று கொஞ்சம் தெளிவுபடுத்துவீர்களா? உள்நாட்டு உற்பத்தி 30 சதவிகிதத்துக்கும் அதிகம் என்கிறார்களே அதற்கும் இறக்குமதி மதிப்பை வைத்தே விலை நிர்ணயம் செய்து கொள்கிறார்களே அது ஏன்? சமையல் எரிவாயுவுக்கு சிலிண்டருக்கு 500 ரூபாய் வரை மானியம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்களே, 14.2 கிலோ எரிவாயுவின் உண்மையான விலை மதிப்பு என்ன, அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்று கூற முடியுமா...
ஒருபககம் மன்மோகன் சிறந்த பொருளாதார வல்லுநர் என்கிறீர்கள். அவர்தான் இந்த உலகமயமாக்கலை வலிந்து திணித்தவர். மறுபக்கம் //கோடிஸ்வரர்களும்,உலக சந்தை பணக்கார இந்தியர்களும் பெருகியுள்ளார்கள். அதே போல் ஏழை ஏழையாகவே இருப்பதும் உலகமயமாக்கலின் எழுதப்படாத சட்டமாகி விட்டது.இதில் மன்மோகனை குறை சொல்லிப்பயனில்லை// என்கிறீர்கள். இது என்ன விந்தை என்றும் கொஞ்சம் விளக்கினால் கொஞ்சம் உதவியாக இருக்கும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பர ராச நடராசன்,
முழுமையான பொருளாதாரப் பின்விளைவுகளை எண்ணாது எழுதிய பதிவு என்று தோன்றுகிறது..

பெட்ரோலியப் பொருள்கள் மீதான சப்சிடி பெரும் நிதிச் சுமையைத் தருகிறது என்பதும், அதைக் குறைப்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதும் உண்மை.

ஆனால் அந்த அளவு சப்சிடியை ஏன் பெட்ரோலியப் பொருள்களுக்கு இந்திய சந்தையில் வழங்க வேண்டியதிருக்கிறது என்பதைப் பார்ப்பதும் அவசியம்.

அதையை வவ்வால் வேறு வகையில் சொல்ல முயற்சிக்கிறார்.

பெட்ரோலியப் பொருள்கள் விலை விதிப்பில் என்ன நடக்கிறது என்பதை
இரண்டு
பதிவுகளாக
நான் எழுதியிருக்கிறேன்.

அவற்றைப் பார்க்கவும்.

இரண்டாவது, பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியாவில் கொண்டு வருவது மன்மோகன் சிங் இல்லா விட்டால் நடக்காது என்பது போன்ற பிம்பம் மாயை..2008 வரையான வளர்ச்சிக்குத் தேவையான உந்துவிசையை அளித்ததில் வாஜ்பயி அரசுக்கு முக்கிய இடம் உண்டு.

சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு வந்து விட்டால் எல்லாம் சுகமே நடந்து நாடு சுபிட்சம் கண்டு விடும் என்ற அளவிற்கு காங்கிரஸ் கோமாளிகள் வாயடிப்பதும், அதை அள்ளித் தெளித்தாற் போலக் கொண்டு வந்ததற்கும் ஊழலை மறக்கடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இருப்பதால் என்பதை முற்றாக ஒதுக்கி விட முடியாது..

இந்த பொருளில், என்ன செய்யப் பட வேண்டும் என்று நான் எழுதியிருக்கும் ஒரு பதிவு..

இந்து பத்திரிக்கையில் அருமையான தலையங்கமும் இது பற்றிய கருத்தை முன்வைத்திருக்கிறது.

வவ்வால் said...

அறிவன்,

நல்லா கேளுங்க, அப்போவாது ஏறுதான்னு பார்ப்போம், இதுல இவரு நடுநிலையாம் :-))

மன் மோகன் செய்தது என்ன வகையான பொருளாதார சீர் திருத்தம்னே தெரியாம அவர் சீர்திருத்தம் செய்திருக்கார்னு சொல்லிக்கிட்டு ,நான் ரொம்ப நல்லா அலசுவேனு சொல்லிக்கிட்டு இருக்கார்.

மேலும் பெட்ரோலிய சமாச்சாரங்களை பல பதிவுகளில் அலசியாச்சு ,அதையும் இவர் படிச்சுட்டு ஆஹா ,ஓஹோன்னு சொன்னவரு தான் :-))

----------

ரஹ்மான்,

நல்லா கேட்டிங்க , பெட்ரோல் விலை ரகசியம்னு போன ஆண்டே பதிவ எல்லாம் போட்டு விலாவாரியா விளக்கியாச்சு.

நம்ம ஊரு பெட்ரோலில் 40% வரி தான். இவ்வளவு ஏன் கோவா மாநிலம் மாரில வரியை குறைத்து சுமர் 16 ரூ விலை குறைவா பெட்ரோல் விக்குது.

சர்வதேச சந்தை விலையில் கூட 10% லாபம் வைத்து விற்றாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூக்கு மேல் போகாது.

தூங்குறவனை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எல்லாம் எழுப்ப முடியாது.
---------
சகோ.சார்வாகன்,

//சிறந்த நகைச்சுவை பதிவு. மன்மோகன் சிங் த்னக்கு ஒரு ஆதரவாளர் இருக்கிறர் என்றால் அவரே நம்ப மாட்டார்.//

ஹி...ஹி அதே ...அதே.

மன் மோகன் ஆச்சும் அவருக்கு ஒரு லாபம் இருக்கு இப்படிலாம் செய்ய,ஆனால் நம்ம ராச நடை அதையும் நம்புறார்னா என்னத்த சொல்ல :-))

----------

ஒரு விளம்பரம், பெட்ரோல் விலை, மாற்று எரி பொருள், மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பாக நான் இட்ட சில பதிவுகளின் பட்டியல்.

மாற்று எரிபொருள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெட்ரோல் விலை ரகசியம்!

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FALLING RUPEE:IMPACT ON INDIAN ECONOMY

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்குமா அரசு?

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஜம்பிங்க்,பம்பிங்க்,பெட்ரோல் பங்க்!

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெட்ரோல் விலை குறைப்பெனும் நாடகம்!

வவ்வால் said...

ராச நடை,

உங்கள் பதிவுகளில் உள்ளடக்கம் என்ற ஒன்றோ,சொந்த கருத்தோ இல்லாமல் செய்தி சேனலில் கொட்டுவதை மறு ஆக்கம் செய்து ,என்ன பேசுறோம்னே தெரியாமல் எழுதுவதாக உள்ளது, இதற்கெல்லாம் அதிகப்பட்சம் ஒரு சிரிப்பான் தான் போட வேண்டும், மெனக்கெட்டு விரிவா பேசுவது உங்களுக்கு எப்பொழுதும் புரிய வாய்ப்பே இல்லை.

இனிமேல் ஒரு சிரிப்பானுடன் கடந்து விடலாம் என நினைக்கிறேன்.

மதிபாலா said...

its utter nonsense to say foreign super markets will destroy to traditional shop keepers. not a single country is right example for it. if not Walmart then we do have domestic players like reliance. instead competition will bring lot of benefits to consumers. today brokers only making money. later super markets can ably able to buy directly from farmers. in many parts of world the selling price to consumers had very less difference over buying price from farmers. if we don't want foreign investment in retail them why we have in retail products? y v hv unilever, P&G , coke or pepsi?

வவ்வால் said...

மதிபாலா,

//today brokers only making money. later super markets can ably able to buy directly from farmers. in many parts of world the selling price to consumers had very less difference over buying price from farmers//

சாரியா சொன்னீங்க, சுருக்கமாக சொன்னாலும் இதான் உண்மையே. இதனை அடிப்படையாக வைத்து பல மாதங்களுக்கு முன்னரே விரிவாக பதிவு போட்டுள்ளேன்.

மேலும் நாம் தான் கொள்கை முடிவுகளை வரையறுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக சுதந்திரம் கொடுக்க கூடாது எனவும் சொல்லியிருப்பேன். வால் மார்ட் பற்றியும் , மன்னு மோகனின் தவறான பொருளாதாரக்கொள்கைகள் பற்றியும் சில பதிவுகளின் சுட்டி ,பார்க்கவும்.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: INDIA INC.,

வருண் said...

Economist madhibala:

***its utter nonsense to say foreign super markets will destroy to traditional shop keepers. ***

I dont see any nonsense it. Walmart destroyed all small business in US. No true americans are proud of shopping in walmart.

***not a single country is right example for it.**

USA!

*** if not Walmart then we do have domestic players like reliance. instead competition will bring lot of benefits to consumers**

What do you know about walmart, may I know???

வருண் said...

when montgomery ward went out of business after more 100 years business, people were cursing walmart.

Walmart does not take care of their employees properly either!

Why do you guys want Americans to take over all businesses??

வருண் said...

**** not a single country is right example for it***

NONSENSE!!

///Wal-Mart To Destroy Small Businesses, Time Magazine Reports

I'll keep the numbers small for simple math:

Let's say there's a town or city with 100X People with 12X stores. Walmart puts 10X stores out of business, and with those 10X stores going out of business 60X people lose their jobs.

Walmart hires 6X people. Which means 54X people are out of work.

Now, those 2X stores out of the 12X are still able to stay in business because they don't compete at Walmart.

The 2X Store loses 54X potential customers, but 46X customers are still able to purchase from them. Depending on what the specialty store sells, who knows how many of the 46X people or the 100X people (before) would actually buy from the specialty store.

In any case, 54X people are now unable to feed their children or themselves, or make home payments, car payments, car repairs, etc.

Those 54X people move out of the town. Empty houses start showing up on the block. There's 10X empty stores on main street. The crime rate goes up as desperate people start committing crimes to survive.

The town or city isn't making as much in taxes since 54X people out of the 100X people aren't able to pay taxes, and they have to let police and fire departments go. People start breaking into the 2X stores that survived, and the 2X store's insurance rates go or their losses are really high. Besides, why would these expensive 2X stores want to stay in an area that is now a ghetto? Eventually the 2X stores go out of business or move to a town or city where there is less crime and more people with money.

Even if the 2X stores manage to stay, the whole town or city is ruined because there's no work left for more than half its population.

Juggler of IL 11:56AM August 13, 2011
///

மதிபாலா said...

my dear varun. may i know what you know about wallmart?.

we need american jobs..

we will queue at american embassies day and night to geta visa.

we will kill all American jobs by bringing software jobs to Bangalore. call centre jobs to chennai.

Americans by heart they hate Indians as we are taking their jobs. agree?

then why unfair criticism against retailing? because it is controlled by a segment in society. i always welcome any move which removes domination. Indians also Stands fair chance to competite with foreign retailers. dont you agree. its all how we take it .

if you don't become competitive then you are out of office. can't complain to somebody. its you have to be blamed.


if v are interested then we should bring up strong mechanism to remove brokers. do we stand any chance for it in this corrupt political mechanism?

குட்டிபிசாசு said...

மதிபாலா,

அமெரிக்காவில் சாதித்ததாக சொல்லும் வால்மார்ட் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் வெற்றி பெறவில்லை. கேர்போர் நிறுவனம் ஜெர்மனி, சிங்கபூரிலிருந்து வெளியேறிவிட்டது. காரணம் போட்டிபோட முடியவில்லை.

இப்படிபட்ட வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் வந்தால் வேலைவாய்ப்பு பலருக்கு போய்விடும் என்கிறார்கள். நாமே பல கடைகளில் பார்த்திருப்போம், பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் தான் அதிகமாக வேலை செய்கிறார்கள். முறைப்படி வர்த்தகம் நடந்தால் இப்படி நடக்குமா? இப்படி கடை நடத்துபவர்கள் எத்தனை பேர் முறையாக வருமானவரி கட்டுகிறார்கள். அப்படியே வேலைசெய்பவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுவதில்லை, எதிலும் கலப்படமான பொருட்கள், தரமில்லை, உற்பத்தி அதிகமானால் வாங்க ஆளில்லாமல் விவசாயிக்கு பெருமளவு நட்டம், உபரிப்பொருட்களை சேமிக்க வழியில்லை, என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

// in many parts of world the selling price to consumers had very less difference over buying price from farmers. //
உண்மை.

நம் நாட்டில் விவசாயிகள் இப்படி ஏமாற்றப்பட்டு கொண்டிருந்தால் பிறகு விவசாயம் முற்றிலும் அழிந்தே போய்விடும்.

வவ்வால் said...

ராச நடரசர் பதிவை விட பின்னூட்டங்களில் தான் சரியான புள்ளியை மக்கள் தொடுறாங்க,

குட்டிப்பிசாசு,

அதே தான், இதனை தான் நான் பல இடங்களிலும் சொல்லி வருகிறேன், எனது பதிவிலும் இதான் சொல்லி இருப்பேன்.

வால் மார்ட் என சொல்லிக்கொண்டிராமல் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தகம் என பார்த்தால் உண்மை புலப்படும்.

இந்திய சில்லறை வர்த்தகத்தினை ஏன் முறைப்படுத்தவில்லை நம்ம ஆட்கள் என்பதில் இருக்கு முக்கியமான விடயம்.

இப்போ வால் மார்ட் இன்ன பிற வந்தாலும் அவர்கள் ஒரு பங்கினை தான் சந்தையில் எடுத்துக்கொள்ள முடியும், முழுக்க போகாது, ஏன் எனில் இந்த சந்தை அப்படி.

வெளிநாட்டில் எல்லாம் தெருவுக்கு தெரு கடை இருக்காது , ஒரு ஷாப்பிங் ஸோன்,மார்க்கெட் பிளேஸ் என இருக்கும். எனவே அங்கு பெரிதாக வால்மார்ட் வந்ததும் ,அருகே இருக்கும் சின்ன கடை அடிவாங்கியது.

இந்தியாவில் அப்படி இல்லை 100 வீடு இருக்கும் ஒரு பகுதிக்கும் ஒன்றிரண்டு கடை இருக்கும், ஊரின் மையத்தில் ஒரு கடைத்தெரு ,அங்கு நிறைய கடைகள் இருக்கும்.

வால் மார்ட் போன்ற பெரும் கடைகள் இது போல கடைத்தெரு பகுதிக்கு தான் போகும், 100 வீடு இருக்கும் இடத்தில் எல்லாம் கடை திறக்காது.

எனவே எல்லாரும் எப்போதும் வால்மார்ட்டில் வாங்க மாட்டார்கள்.

என்னோட கணிப்பு என்னவெனில் வால்மார்ட் வந்து நஷ்டம் அடையும் என்பதே :-))

காரணம் நம் மக்களின் வாங்கும் கலாச்சாரம் வேறு.

ஷாம்பு சாஷே எல்லாம் வெளிநாட்டில் பார்த்து இருக்கிறீர்களா, நம் நாட்டில் தான் இப்படி உண்டு. மைக்ரோ லெவல் ஷாப்பிங் நம்ம மக்களுது.

எனவே பெரிய இனெஸ்ட்மெண்டில் சில்லறை வர்த்தகத்தில் முதலீடு செய்து ஆரம்பிக்கும் போது ஓவர் ஹெட் அதிகம், அதற்கு ஏற்ப வியாபாரம் ஆகணும். இல்லைனா நஷ்டம் தான்.

இந்த காரணத்தினால் தான் ரிலையன்ஸ், டாடா , பிர்லா குருப்பின் மோர் , நீல்கிரிஸ் போன்றவை எல்லாம் பெரிதாக வளராமல் பெயரளவில் கடை நடத்தி வருகின்றன, எனவே வால்மார்ட் என்றால் அந்நிய முதலீடு என பயப்பட தேவை இல்லை.

அவர்கள் மூலம் உற்பத்தி விரயமாகாமல் கொள்முதல் செய்யப்பட்டால் அதுவே ஒரு நன்மை தான்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்! தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
அலுவாலியா,,வங்கி ஆலோசகர் ரங்கராஜன்,ப.சி எல்லோரையும் பின் இருக்கைக்கு தள்ளி விட்டு எனக்கு முன் இருக்கை போடுகிறீர்களே:)

ஏனைய நாடுகளின் விலைப்பட்டியலோடு ஒப்பிட்டு விட முடியாத படி நிர்வாக குழறுபடிகள்,நிலப்பரப்பு,உபயோகிப்பாளர்,,கட்டமைப்பு,தனியார்மயமாக்கல் என பல காரணிகள் இருக்கின்றன. ஒரு கப்பலின் கேப்டன் மாதிரி பிரதமர் மன்மோகன் சிங்.. பொருளாதார சரிவும் கடன் விகிதம் அதிகமாகுமென்பதை சொல்லும் போது கேட்டாக வேண்டியிருக்கிறது.சரி மன்மோகனின் பொருளாதாரக் கொள்கை தவறு என்று எழும் குரலுக்கு மாறாக மாற்று பொருளாதாரக் கொள்கையை பி.ஜே.பி போன்றவரகள் முன்வைக்கிறார்களா என்றால் இல்லை..

மேலும் மக்கள் நலன் கருதி பெட்ரோலின் விலையை உயர்த்தாமல் டீசல் விலையை மட்டுமே உயர்த்தியுள்ளதாக கூறுகிறார்.ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது டீசலின் உபயோகம் இந்தியாவில் அதிகம். தங்கம் விலை மாதிரி Supply and demand பொருளாதார கொள்கைப்படி டீசல் விலை உயர்வும் என்பதே பொருளாதார பார்வையில் மன்மோகனின் வாதம்.

ராஜ நடராஜன் said...

சாஜஹான் ரகுமான்,அறிவன்,வவ்வால்,வருண் மற்றும் மதிபாலா அனைவருக்கும் தர்க்கரீதியான பின்னூட்டங்களுக்கு நன்றி.விவாதம் செய்ய வேண்டுமென்ற நோக்கில் மட்டுமல்லாது எது சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் மட்டுமே பொருளாதாரப் பார்வையை நோக்க விரும்புவதாலும்,பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டிகள் மற்றும் அமெரிக்கா போய் வால் மார்ட்டையெல்லாம் பார்த்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாலும்,வேலைப்பளு காரணமாக பின்னூட்ட கதா காலச்சேபம் செய்ய முடியவில்லை என்பதாலும் பின்னூட்ட சுட்டிகளை உள்வாங்கிக்கொண்டு பதில் சொல்கிறேன்.முடியாவிட்டால் பின்னூட்டத்துக்கு பின்னூட்டமாக இன்னுமொரு பதிவை போட்டு விடுகிறேன்.பொருத்தருள்க.

ராஜ நடராஜன் said...

நாமும் ஆள் சேர்த்துவோமில்ல:)

http://satheeshchennai.blogspot.com/2012/09/blog-post_27.html?showComment=1348751242614#c3047673344269934836

YESRAMESH said...

இந்தப் புடுங்களை எப்பவோ பண்ணியிருக்க வேண்டியதுதானே.. கோல்கேட்ல இருந்து திசை திருப்பதானே

Best Business Brands said...


மாண்டி : நமது பிரதமர் மன்மோகன் சிங் அல்ல, மவுன மோகன் சிங் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டல் செய்துள்ளார்.

நம்பள்கி said...

உங்கள் பின்னூடங்களை வாசித்திருக்கிறேன்! இனி வருவது என் கருத்து. அது தவறாகவும் இருக்கலாம்...என் முதல் போனி!

மன்மோகன் ஒரு சிறந்த பொருளாதாரவாதி மேலை நாடுகளுக்கு; இந்தியாவைப் பொறுத்தவரை அவருக்கு அறிவு பத்தாது!

இங்கு ப்ளாக் எழுதும் மிடில் க்ளாஸ் மாதவன்களுக்கும், மாதவிகளுக்கும் மட்டும் இந்தியா ஆகாது; அனால், இவர்களுக்கு இவர் நல்ல பொருளாதாரவாதி. Period.

ஒரு நாடு என்பது எல்லோரையும் உள்ளடக்கியது. இந்தியாவில் 90கோடி மக்களுக்கு அடிப்படை வசதி கூட கிடையாது! ரூபாய் 28 சம்பாதிப்பவன் ஏழ்மைக் கோட்டிற்கு மேல்; ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கி இரண்டு லிட்டர் தண்ணீர வேண்டும் குடிக்க; அதற்கே ரூபாய் 28 பத்தாது.

அப்புறம் பேளுவத்ர்க்கு? ஒன்னுனா இரண்டு ரூபாய்; இரண்டுன்னா ஐந்து ரூபாய். ஆனால், இது சாப்பிடுபவர்கள் கவலைப் படவேண்டிய விஷயம்; அவனுக்குத் தான் குடிக்கக் கூட தண்ணி இல்லையே? அப்புறம் சொத்துக்கு எங்கே போவான்?

This single statement sums up the inefficiency of Indian Govt.

நம்ம தேசிய "கவி" இருந்தால் இப்போ இப்படி பாடியிருப்பார்; தனி மனிதனுக்கு தண்ணீர் இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்!