Followers

Tuesday, November 6, 2012

Me oppose present I-T Act 66A, Demanding change on it

ஒவ்வொருவரின் எண்ண வெளிப்பாட்டின் விகிதம் வித்தியாசப்படுகிறது.அதன் காரணமாகவே சார்ந்தும்,சாராத பதிவுகளும்,பின்னூட்டங்களும் இணையதள பகிர்வாக அமைகின்றது.என்னைப்பொறுத்த வரையில் எனது கருத்து வெளிப்பாடுகளை விட யார் என்ன சொல்கின்றார்கள் என்பதை உள்வாங்கிக் கொள்ளுவதையே முதன்மை படுத்துகிறேன்.தற்போதைய பதிவுலக விவாதங்கள் பலரின் மனதிலும் ஒரு திருப்பத்தையும், வேண்டாம் ஆணி என்ற சிந்தனையையும் தோற்றுவித்திருக்கும்.பணி,குடும்பம்,பதிவுகள் என்ற முக்கோணத்தில் பதிவுகளுக்கான கால நேரத்தை அதிகம் ஒதுக்க முடியாத முந்தைய தருணங்களில் வெறுமனே பார்வையாளனாக மட்டும் இருந்து விடலாமே என்று தோன்றியதுண்டு.

ஆனால் தற்போதைய சூழலில் ஒதுங்கி கொள்ளலாமே என்ற யோசனையை விட இது எதுவரை போகும் தூரம் என்ற எண்ணமே வலுவாக நிற்கிறது.பதிவுலகில் முதல் அடி எடுத்து வைக்கும் போது விட்டுப்போன தமிழை தொட்டுப்பார்க்கலாமே என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.அடுத்து பின்னூட்டங்களின் பல பரிமாண கவர்ச்சி பதிவுலகில்  சிக்க வைத்தாலும் கூட  தொடர் நடையில் சமூக ரீதியாக என்னை பாதித்த விசயங்கள் இரண்டு.ஒன்று ஈழப்போராட்டமும்,அதனோடு தொடர்புடைய தி.மு.கவின் ஆட்சி முறையும்.தி.மு.க பற்றி சொல்வதாலேயே தற்போதைய அ.தி.மு.கவுக்கான அங்கீகாரமென்று பொருளில்லை.இப்போதைய ஆட்சி சூழலை திருப்பி போடும் வலு ஜனநாயக தேர்தல் என்ற ஆயுதத்திலும் மக்கள் மறதி என்ற குணத்தாலும் மாறிப்போகலாம்.ஆனால் வரலாற்றை திருப்பி போட முடியாத நிகழ்வின் ரணங்களை மாற்றும் சக்தி ஒட்டு மொத்த தமிழர்களுக்குமில்லாத சோகத்தை எங்கே புலம்புவது?

இன்னொரு புறம் இந்திய அரசியல் கோமாளித்தனங்களும்  அதனால் வருங்கால சந்ததிகளின் பாதிப்புக்கான கவலையும்,உலக நாடுகளின் சுயநலங்கள் மட்டுமே கலந்த வியாபாரத்தனமும் நோக்கும் போது எவையும் என்னோடு சக்திக்கு அப்பாற்பட்ட விசயமே என்ற போதிலும் மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த ஒரே ஆயுதம் பதிவுகள் மட்டுமே.சமூகம் எப்படியோ நாசமாகப் போகட்டும் என்று ஒதுங்கிக் கொண்டால் நுகர்வு கலாச்சாரத்துக்கென பலவழிகள் இருக்கின்றன.ஆனால் கருத்து வெளிப்பாடுகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பொருள் இருக்கிறது.குறைந்த பட்சம் பின்னாளில் சொன்னதை எடை போடும்,அசை போடும் அனுபவமிருக்கிறது.

மேலே சொன்னது போல் விட்டுப்போன பழக்கமான வாசிப்பே முதன்மையென்பதாலும் தினத்தந்தி,குமுதம் என்ற அரிச்சுவடிகளிலிருந்து இலக்கிய வாசம் வரை கொஞ்சமோ கொஞ்சம் முதிர்ச்சியடைந்து இப்போதைய இணையகாலத்தில் பொது ஊடகங்களை நோக்கும் போது வியாபாரமும்,சார்பு நிலையும் மட்டுமே முதன்மையாக நிற்பதால் நீ சொல்!நான் கேட்கிறேன் என்றும் சமரசம் செய்ய முடியாத சூழலில் ஜார்ஜ் புஷ் சொன்னமாதிரி இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்.....
பதிவுலக இரண்டு பெருசுக பதிவை அப்படியே ஒத்தி எடுத்து  ஒட்டவெச்சுடலாமென்றுதான் பார்த்தேன்.அப்புறம் தட்டச்சு செய்தவுடன் பதிவு இப்படி பிரசவமாகி விட்டது.அதனால் பெருசுகளை இணைப்பில் கட்டிப்போட்டுவிட்டேன்.


பெருசு 2: http://vovalpaarvai.blogspot.com/

சுருக்கமாக ரவி சீனிவாசன் என்ற அறிமுகமேயில்லாத அடக்கி வாசித்த பதிவருக்கும் குரல் கொடுக்க வேண்டிய அவசியமிருப்பதால்

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.


9 comments:

வருண் said...

உங்க போராட்டம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்!

எனக்கென்னவோ சின்மயி போட்ட கேஸ்தான் எல்லாரையும் இப்போ தூண்டிவிடுது.

ஜெயமோஹன் - எஸ் வி ராஜ துரை மேட்டரும் இப்போ பெருசாகிற மாரி இருக்கு.

ராஜ நடராஜன் said...

வருண்!வணக்கம்.வாங்க!

கருத்துரிமையின் அடிப்படையில் கைது என்று பார்த்தால் முதல் கைது சவுக்கு தளமாகும்.அதற்கு பெரும்பாலான பதிவர்கள் அக்கறை கொண்டாலும் கூட பலரும் அடக்கி வாசித்த மாதிரியே தெரிகிறது.

சின்மயி விசயத்தில் பெண் என்ற காரணம் என்பதை விட காவல்துறையை நெருங்கும் நெருக்கமே பக்க சார்பான கைதாக நினைக்கின்றேன்.

சின்மயி கேஸ் கிரியா ஊக்கியாக இருக்கலாம்.ஆனால் பதிவர் ரவி சீனிவாசனின் கைது கருத்துரிமைக்கான தேவையை வலுப்படுத்துகிறது.

ராஜ நடராஜன் said...

வருண்!நம்மாளு ஒபாமா மறுபடியும் கெலிச்சு வருவார்தானே!

பி.கு: எம்மாம் பெரிய வரலாற்று பின்னூட்டம்!இதையெல்லாம் விட்டுட்டுப் போடான்னு சொன்னா....
அஸ்கு!புஸ்கு.

வவ்வால் said...


ராச நடராசரே,

அது என்ன ஓய் மீ அப்போஸ்ன்னு , இங்கே எல்லாம் வீ தான்,:-))

---------
66.ஏ ல நிறைய பேரு ,பல மாநிலத்தில கைதாகி இருக்காங்க, அதெல்லாம் ஒருதருக்கும் ,இன்னொருதருக்கும் உள்ள பகைனு முடிச்சுட்டாங்க.

மம்தா வை பற்றிய கார்ட்டூனுக்கு ஒரு பேராசிரியர் கைதானது தான் அரசியல் ரீதியாக கருத்து சொல்லி 66ஏ ல மாட்டினது என நினைக்கிறேன்.

ஒருத்தர் ஒரு செய்தியை வெளியிடனும்னு அவசியம் இல்லை பகிர்ந்தாலே கைது என மோசமான உதாரணம் அது , நம்ம மக்கள் அது மேற்கு வங்கம் இல்ல , நமக்கு என்னனு இருந்தோம் :-))

உண்மையில் இந்தியா முழுக்க எதிர்க்க வேண்டிய விஷயம்.

66 ஏவில் முக்கியமாக காபி பேஸ்ட் பதிவர்களுக்கு இதில் செம ஆப்பு இருக்கு :-))

வவ்வால் said...

ராச நடை ,

சந்தடி சாக்கில் என்னையும் பெருசுகள் லிஸ்ட்டில் சேர்த்த உமது நுண்ணரசியலை கண்டித்து ஏன் 66ஏ பிரிவின் கீழ் வழக்கு போடக்கூடாது?

நான் போய் புகார் கொடுத்தா கமிஷ்னர் ஆபீஸ் சென்ட்ரி கூட வாங்க மாட்டார், நாம என்ன செவப்பா இருக்கிற பாடகியா என்ன :-))

வருண் said...

நடராஜன்: ஈஸ்ட் கோஸ்ட் ரிசல்ட் இன்று இரவு 10 பி எம் போல் வெளிவர ஆரம்பிக்கும் (எங்க ஊர்/நாட்டு ஈஸ்டன் டைம்).

If Obama gets, PA, (பெண்சில்வேனியா) NH,(நியுஹாம்ஷைர்) OH (ஒஹையோ) and VA (வெர்ஜீனியா) then that's it. Obama is re-elected for another 4 years. Most likely that is what we are going to see. :-)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நேற்று டீச்சர் துளசி இந்த பின்னுட்டக்காரர்களுக்கும் என்று ஏதோ பொடி வச்சு க்கும் சொன்னாங்க.பின்னூட்டத்தில் என்னை விட ரவுண்டு கட்டி அடிச்சாலும் நானும் கையை வச்சுகிட்டு சும்மா இருக்காம எதையாவது சொல்லித் தொலைக்கிறேன்.நாளைக்கு ஏதாவது எசகு பிசகா பத்திரிகை சுட்டியைப் பார்த்து கதை சொன்னா வரும் ரவி சீனிவாசன் வில்லங்கத்துக்குத்தான் மீ மட்டும் போட்டுக்கிட்டேன்:)

மொத்த இந்தியாவுக்குமே என்றால் இணைய கருத்து கைதுகள் இன்னுமொரு எமர்ஜென்சி நிலைதான்.அப்ப வீ சொல்லிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சென்னையில் இருந்தால் அனுபவ ரீதியா நிறைய கதைகளும்,மொக்கைகளும் போடலாம்.எனவே பத்திரிகை தகவல்கள் என்ற அடிப்படையில் நான் கட் அண்டு பேஸ்டுக்காரனே!ரவி சீனிவாசனும் இதையேதான் செய்தார்.

அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ் தேறுமான்னு தெரியல.இல்லாட்டி காங்கிரஸ் இப்படியாக்கும்,அப்படியாக்கும்ன்னு சொல்லியாவது கார்த்தி சிதம்பரம்கிட்டருந்து தப்பிச்சுக்கலாம்:)

முந்தா நாள் வரை கார்த்தியைப் பற்றி கண்டுக்காதவங்க ஒரு புகார் மூலமா பிரபலமாகிட்டாரு.தமிழ் நாட்டுல ஆண்டி ஹீரோயின் அங்கிள் ஹீரோ ஆகனும்ன்னா பேசாம பதிவர்களில் ஒருவரை கிள்ளி விட்டா போதும்!பத்துக்கும் போல இருக்குதே:)

பெருசு லிஸ்ட்ல சேர்த்ததுக்கு நுண்ணரசியல் எதுவும் கிடையாது.இன்றைக்கு யதேச்சையா புதுசா ஏதாவது சொல்லியிருக்கிங்களான்னு வந்தேன்.பதிவைப் பார்த்ததும் அப்படியே ஒட்டவச்சுடலாமென்றுதான் நினைத்தேன்.தருமி அய்யா வேற ஆதரவு மட்டும் போதாது பதிவுகளும் தேவைன்னு சொன்னது மனசுல உறுத்திகிட்டிருந்தது.எனவே இருவரையும் சேர்த்து விட்டேன்.

நுண்ணரசியல்ன்னு எடுத்துகிட்டாலும் ரெண்டு பேரும் பதிவுலக பெருசுகதானே:)நான் பதிவுலக அனுபவத்தை சொன்னேன்.

கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு!
இப்ப என்னமோ சரசர சாரக்காத்து வீசுதாம்.

முந்தைய கால கட்டத்தில் நடிப்பு,இசை,பாடல் என்று மூன்றும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும்.உதாரணமாக சிவாஜி,எம்.எஸ்.வி,கண்ணதாசன்னு அப்படி ஒரு காம்பினேசன் அமைவது தமிழுக்கு மிக மிக கஷ்டம்.கறுப்பு கலருக்கும்,குரலுக்கும் மட்டுமே.சரசர சாரக்காத்து இனியாவின் முகபாவங்களுக்கு மட்டுமே.

ராஜ நடராஜன் said...

வருண்!தகவலுக்கு நன்றி.உங்க கிளி ஜோஸ்ய தேர்தல் முடிவுக்கு ஆவலோடு காத்துகிட்டிருக்கேன்:)

ஒபாமாவின் ஜனாதிபதி அணுகுமுறை கடந்த நான்கு ஆண்டுகளில் பரவாயில்லையென்கிற மாதிரிதான் இருக்கிறது.வெற்றி பெறட்டும்.