Followers

Tuesday, November 20, 2012

பால் தாக்கரே

பால் தாக்கரேயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தேவை அரசியல்,இந்தி திரைப்படம் சார்ந்தவர்களுக்கு இருக்கலாம்.ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இந்திய குடிமகன்களுக்கு தாக்கரேவும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதோடு விமர்சன பதிவுகள் சில வெளிவந்துள்ளது வரவேற்க தக்கது.

நேற்று சேட்டைக்காரனுக்கு பின்னூட்டம் போடும் போது கூட பம்பாய்,மும்பாய் மீதான பால் தாக்கரேவின் தாக்கங்கள் என்ற அளவிலே கருத்து சொல்லியிருந்தேன்.ஒரு தனி மனிதனாகவும்,அரசியல் பதவிகள் இல்லாமலும் கூட மராட்டிய மக்களை,அதிலும் குறிப்பாக பம்பாய்-மும்பாய் மராட்டிய மக்களை தன்பால் ஈர்த்த வசீகர வலிமை தவிர ஒரு காட்பாதர்க்கான பயம் மட்டுமே தாக்கரேயின் பலம் எனலாம்.

 கால வெள்ளத்தில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மதராசி வெளியே போ என பம்பாய் மராட்டியர்களை ஒன்று திரட்டிய கலவரத்தில் தாராவி வர்தா பாய்,இன்னும் கேரளத்து சேட்டன்களின் எதிர் தாக்குதலில் பால் தாக்கரேயின் கோசம் வெற்றி பெறாமல் இன்றும் தாராவி தென்னிந்தியர்களில் குறிப்பாக தமிழர்களின் வாழ்விடமாகவும்,இந்தியாவின் மிகப்பெரிய சேரியாகவும் விளங்குகிறது.சேரியாக இருந்தாலும் மும்பாய்க்குள் நிகழும் மைக்ரோ பொருளாதார வளம் கொண்டது தாராவி.1960-70 பதுகளில் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட பம்பாயின் மில் தொழிலாளிகளின் போராட்ட பின்னடைவுக்கும்,கேரளா,வங்காளம் போல் கம்யூனிசம் வளர்வதற்கான அத்தனை கூறுகள் இருந்தும் கூட கம்யூனிசத்தை பின் தள்ளி சிவசேனா வளர்ந்ததற்கு தாக்கரே என்ற பெயர் சொல்லே காரணம்.

பிஜேபியின் இந்துத்வா வளர்ந்த காலத்தில் இந்து முஸ்லீம் பிரிவினையை பாம்பேயில் தூண்டியதற்கு சிவசேனா ஒரு முக்கிய காரணம்.வர்தா பாயை வேலு நாயக்கர் என  நாயகனில் பெயர் மாற்றம் செய்த இயக்குநர் மணிரத்னம் சூழல்கள் அறிந்து பம்பாயின் முதல் கலவரத்தை தொடாமல் போனாலும் கூட பம்பாய் படத்தில் தாக்கரேயை மெல்லியதாய் தொட்டதில் இயக்குநர் மணிரத்னத்துக்கு பயமுறுத்தல் வந்ததாக செய்திகள் கசிந்தன.கசிந்த செய்தியை விடவும் தமிழக இஸ்லாமிய சகோக்கள் கதாநாயகி மனிஷா கொய்ராலாவை முஸ்லீம் பெண்ணாக உருவகப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மணிரத்னம் வீட்டில் கல்லெறிந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.கல்லெறிந்து எதிர்ப்பு காட்டுவதிலிருந்து இப்பொழுது துப்பாக்கி சென்சார் போர்டாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்.உண்மைகளை அப்படியே முன்வைப்பது மட்டுமே இந்த பதிவின் நோக்கமென்பதோடு மீண்டும் தாக்கரே பக்கம் திரும்புவோம்.

முந்தைய காலகட்டத்தில் கிரிக்கெட் மீதான வெறித்தனமென்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போது மட்டுமே என்பதை சொல்லித் தெரிவதில்லை.முன்பு போல் கிரிக்கெட் பார்ப்பதில் மஜா இல்லையென போன மாதம் ஒரு பாகிஸ்தானிய நண்பர் புலம்பிக் கொண்டார்.இரு நாட்டு அரசியல் செயல்பாடுகள் சாதாரண மனிதர்களை எப்படி பாதிக்குமென்பத//ற்கு முந்தைய இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தாக்கமும்,வாஜ்பாய் அரசு ரயிலு விட்டும்,முஷ்ரப் டெல்லி வந்தும்,காஷ்மீர் பிரச்சினை கொஞ்சம் பிசுபிசுத்த பின் இப்பொழுது thaw (பனிக்கட்டியிலிருந்து உருகிய நிலை) ஆகிப் போனதால் கிரிக்கெட்டின் முந்தைய நிலை இப்பொழுது இல்லை.தாக்கரே மும்பாய்க்குள் பாகிஸ்தானியரை விளையாட விட மாட்டோம் என்ற அறைகூவல் சரியானதா தவறானதா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்ற போதிலும் முந்தைய சூழலில் தாக்கரேவுக்கான துணிச்சல் என்பதோடு கிரிக்கெட் சார்ந்து பெரிதாக எதுவும் பிரச்சினை வளரவில்லையென்பது பாராட்ட தக்கது.

இன்றைக்கு சமாதி புகழாரம் அரசியல்வாதிகள் பலர் பாடினாலும் கூட தாக்கரேவின் நீதிமன்ற வாரண்டு புறக்கணிப்பெல்லாம்  இந்திய இறையாண்மையை கேலி செய்வதாகவே இருந்தது.சத்ரபதி சிவாஜி, விடுதலைப்புலிகள் ஆதரவு,ஹிட்லர் பற்றிய புகழாரம் போன்றவை பல விமர்சனங்களுக்குட் பட்டதாயினும் வலிமையான ஆளுமையை தாக்கரே விரும்புகிறார் என்பது மட்டும் புரிகிறது.

இதுவரை சொல்லி வந்தவை முன்கதை சுருக்கம் மட்டுமே.மெயின் கதை என்னன்னா மும்பாய் பெண்களின் பேஸ்புக் கருத்து துணிவு.உண்மையான பெண் கல்வியென்ற வெளிப்பாடு இதுவே.அதிலும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து கொண்டு ஒரு பெண்ணின் கருத்து வெளிப்பாடு சுற்றுசூழலில் பாதிக்கப்பட்டோ அல்லது கேள்வி ஞானத்தாலோ இப்படியானதாகத்தான் இருக்க முடியும்.இஸ்லாமிய குண்டு வெடிப்பு தீவிரவாதங்கள் எப்படி இந்திய இறையாண்மைக்கு தீங்கானதோ அதுபோலவே சிவசேனாவின் இந்து இஸ்லாமிய பிரிவினையும். நம்ம பதிவுலக சகோக்கள் போல் பெயர்சொல் காரணமான ஆதரவும்,எதிர்ப்புமென்பதல்ல,.சரியானது எதுவாக இருக்க முடியும் என்பதே நமது நிலைப்பாடு.அந்த விதத்தில் அனைவருக்குமான கருத்துரிமை பேஸ்புக் கருத்து தெரிவித்த பெண்ணுக்குமுண்டு..கருத்து தெரிவிப்பது பொது வெளியில் நடமாடுபவர்களுக்கு எதிரானது என்றால் இணைய வளர்ச்சியை இந்தியாவில் முடக்கி விடலாம்.இல்லையென்றால் சுதந்திரமான கருத்துக்கள் வெளிவரவேண்டும்.

39 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு .எனினும் கருத்தில் மாறுபடுகிறேன்.
முதலில் உங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
எது சரி?.
1. ஒரு தனி மனிதன் அல்லது சிறு குழுவினர் தங்களின் தனிப்பட்ட கொள்கைகளை , பெரும்பானமை மக்கள் மேல் ஏற்றி சிறுபான்மையினரை ஒடுக்கி,ஆட்சி அதிகாரம் கைப்பற்ற முடியும்.

2.சூழல் பொறுத்தே ஆட்சியாளர்கள். மக்களின் பெரும்பானமை பொதுப்புத்தியில் உள்ளதை பிரச்சாரம் செய்யும் அரசியல்(மத,கொள்கை)வாதியே ஆட்சி அதிகாரம் கைப்பற்றுகிறான்.

இக்கேள்விகளின் விடை இந்த உப கேள்விகளில் உள்ளது.

அ)ஏன் இந்துத்வா கருத்துகள் வட மாநிலங்களில் எடுபடுகிறது? தமிழ்நாடு உள்ளிட்ட பல் மாநிலங்களில் எடுபடவில்லை.

ஆ) திராவிடம் என்பதை தமிழ்நாடு தவிர இதர மாநிலங்கள் ஏற்கவில்லையே ஏன்?
********
மேலே வைத்த கேள்விகளுக்கும் பால்தாக்கரேக்கும் என்ன தொடர்பு.

வாதம்(1) ஐ ஏற்பவராக இருந்தால் பால்தாகரேக்கும் அஞ்சலில் செலுத்த முடியாது. அவர் ஒரு எதிர் நாயக்னே

வாதம்(2) ஐ ஏற்பவராக இருந்தால் பால்தாக்கரேக்கும் அஞ்சலி செலுத்தலாம் முடியாது. அவர் ஒரு பிறர் போல் சூழல் சார் அரசியல் செய்த சந்தர்ப்பவாத அரசியல் தலைவர் மட்டுமே.வரலாற்றில் பெரும்பான்மையான தலைவர்கள் போல்தான் பால்தாக்க்ரே.

ஹி ஹி நான் வாதம்(2) தான் பெரும்பங்கு என்கிறேன்.


சிந்திக்க மாட்டீர்களா!!!

நன்றி!!!

வருண் said...

***எப்படி இந்திய இறையாண்மைக்கு தீங்கானதோ அதுபோலவே சிவசேனாவின் இந்து இஸ்லாமிய பிரிவினையும்.****

நம்ம எப்படி???

இந்து - இஸ்லாமிய ஒற்றுமைக்காக போறாடுறோமா??

இல்லை இஸ்லாமியரை விமர்சிச்சு விமர்சிச்சு அவர்களை இன்னும் தூண்டிவிட்டு இந்து-இஸ்லாமிய ஒற்றுமை நாசமாக்கிறோமா??

நம்ம "பங்கு" என்னனு சொன்னால் நல்லாயிருக்கும்.

------------

ஒரு ஆள் செத்துட்டான்னா, பொதுவா அவனை யாரும் - எதிரிகள்கூட - திட்டமாட்டாங்க..அவனில் இருந்த ஏதாவது நல்லவைகளை சொல்லி இரங்கள் தெரிவிப்பதுதான் மனிதாபிமானம்.

Unknown said...

எக்காரணத்தை கொண்டும் அரசியல் சட்டத்திற்குட்பட்ட தனி மனித சுதந்திரம் பறிபோகக்கூடாது என்பதே நம் ஆசை!

வவ்வால் said...

ராச நடராசர்,

ஹி...ஹி நடு நிலை தவறிவிட்டீர்கள்,உங்கள் இந்துத்வா பாசம் வெளிப்படுகிறது, உங்கள் காவி சாயம் வெளுத்துவிட்டது :-))

இப்ப்படிக்கு மார்க்கபந்து!!!
-----------------
கருத்து சுதந்திரம் நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்!

வவ்வால் said...

ராச நடராசர்,

ஹி...ஹி நடு நிலை தவறிவிட்டீர்கள்,உங்கள் இந்துத்வா பாசம் வெளிப்படுகிறது, உங்கள் காவி சாயம் வெளுத்துவிட்டது :-))

இப்படிக்கு மார்க்கபந்து!!!
-----------------
கருத்து சுதந்திரம் நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்!

ஜோதிஜி said...

இது குறித்து நீங்க நிச்சயம் எழுதுவீங்கன்னு நினைத்தேன்.

பார்வையில் என்று பெயர் வைத்து விட்டு பொதுப் பார்வையாக சொல்லிட்டீங்களே?

நச்சுன்னு வவ்வால் பயப்படுற மாதிரி அல்லவா சொல்லியிருக்கோனும்.

naren said...

சார்வாகன் சொன்னதுதான்,
///
சூழல் சார் அரசியல் செய்த சந்தர்ப்பவாத அரசியல் தலைவர் மட்டுமே
///
அவருக்கு சரியாக இருக்கும். அவரை பற்றி சொல்லும் அனைத்தும் குறை கூறுபவர்களிடமும் உள்ளது.
அவரை போலாக வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம்.

இதை பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று தோன்றுகிறது.

பிராமன பனியா இந்து ஆர்ய ஆர்.ஸ்.ஸ் பாசிச இந்துத்வ பிற்போக்குவாதி கும்பலை சேர்ந்தவரா நீங்கள் :)))

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!உங்க விடுகதையின் விடை கொஞ்சம் குழப்பமாக இருக்கிற மாதிரி தெரிகிறதே!

பால் தாக்கரே கார்டூனிஸ்டாக இருந்து பின் அரசியல் கருத்துக்கள் சொல்பவராகவும்,பத்திரிகை தலையங்கம் எழுதுபவராகவும் துவங்கி பின் சிவசேனாவை பலப்படுத்தினார் என நினைக்கின்றேன்.

பால் தாக்கரே சூழல் பொறுத்து உருவாகியவர் என்று சொல்ல முடியாது.சூழல் பொறுத்து அரசியல் வாழ்வு அமைந்தது நரசிம்ம ராவ்,தேவ கவுடா மற்றும் நம்ம மவுன மோகன்சிங்க் போன்றவர்களுக்கே பொருந்தும்.

பால் தாக்கரே ஒரு வித்தியாசமான அரசியல்வாதி எனலாம்.காரணம் அரசு பதவிகளில் இல்லாமலும் அதே நேரத்தில் மும்பையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமையை ஒரு காட்பாதருடன் மட்டுமே ஒப்பிட முடியும்.எதிலும் இல்லை ஆனால் எல்லாவற்றிலும் தனது தாக்கத்தை செலுத்தியவர்.

எனவே தனிமனிதனாக தனது தனிப்பட்ட கொள்கையென்று மட்டுமல்லாமல் ஆண்டி ஹீரோ மாதிரியாகவே அரசியல் ஆதிக்கம் செலுத்தினார் என நினைக்கிறேன்.

இந்துத்வா தமிழகத்தில் வேரூன்றாததற்கு காரணம் திராவிட இயக்கங்கள் வேரூன்றியதோடு மட்டுமல்லாமல் கால கணக்கில் பிஜேபி இன்னும் சிறு குழந்தையே எனலாம்.

யார் கண்டது.... நம்ம சகோக்கள் போகும் ரூட்டைப் பார்க்கும் போது இந்துத்வாவும் தமிழகத்தில் நிலைகொள்ளவோ அல்லது இந்துத்வாவாதிகளே டகால் வேலைகள் செய்து நிலை கொள்ளும் சாத்தியங்களிருக்கின்றன.

சுஷ்மா ஸ்வராஜ்க்கு தமிழகத்தில் கடை விரிக்க இலங்கை பயணம் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.ஆனால் ராஜபக்சேவே புதிய புத்தனென்று நினைவுக்கல் நாட்ட அழைத்ததில் சந்தர்ப்பம் கோயிந்தா:)

ஆ) திராவிடம் என்பதை தமிழ்நாடு தவிர இதர மாநிலங்கள் ஏற்கவில்லையே ஏன்?

மொழியின் சாயல்,எழுத்து நடை போன்றவைகளையெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு யாரும் கொண்டு போய் சேர்க்கவில்லையென நினைக்கிறேன்.

தமிழகத்தில் கர்நாடகா,கேரளா,ஆந்திரா என வேற்றுமைகள் இருக்கிறது.எல்லைகள் தூரமாக தூரமாக வித்தியாசங்கள் மறைந்து போவதையே உணர்கிறேன்.

அதென்ன இப்பவெல்லாம் சிந்திக்க மாட்டீர்களான்னு ஒரு புது கோசம்:)

ராஜ நடராஜன் said...

வருண்!நிகழ்வுகளை எடை போடவும்,அசை போடவுமான தனி மனித பார்வையாளன் மட்டுமே நாம்.

பதிவுலகில் மதப்பிரச்சாரம் என்ற நிலையில் துவங்கியதுதான் மதம் சார்ந்த விவாதங்கள்.

பதிவுலக நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்தும் கூட நம்ம மேல் விரல் நீட்டினால் என்ன நியாயம்?

மனிதாபிமானம் பால் தாக்கரேவுக்கான சந்தர்ப்ப சொல்லாடலா அல்லது கசாப் வரை கூட நீளுமா:)

ஒரு மனிதனின் வாழும் நாட்களின் செயல்களைக் கொண்டே நல்லவனா அல்லது கெட்டவனா என தீர்மானிக்கப்படுகிறான்.கார்டூனிஸ்ட்,எழுத்தாளன்,மக்கள் தலைவன் என பல அங்கீகாரங்கள் இருந்த போதிலும் தாக்கரேயின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குரியவை.

மத நல்லிணக்கம்,சுய ஒழுக்கம்,இந்திய ஒற்றுமை என்ற தூரப்பார்வை கொண்ட ஒரே மனிதன் மகாத்மா காந்தி மட்டுமே.ஆனால் காந்திக்கும் எதிராக கூட கருத்து வெளியாகும் காலமிது.

பேஸ்புக் பெண்களுக்கான கைது நிகழாமல் இருந்திருந்தால் இந்த பதிவை விமர்சனங்களோடு இரங்கலோடு முடிந்திருக்கலாம்தான்.


ராஜ நடராஜன் said...

விஜயகுமார்!உங்களை எப்படி அழைப்பது என அறியாமல் விழிக்கிறேன்:)

உங்கள் பதிவுகள் பல ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் ரகசிய போலிஸ் 115 மாதிரியே தெரிகிறது.அப்படி முன்போ அல்லது இப்பொழுதோ இருந்தால் வாழ்த்துக்கள்.

அரசியல் சட்டத்திற்குட்பட்ட தனி மனித சுதந்திரம் என்ற போதிலும் அரசியல் சட்ட உட்பிரிவுகளும் கூட பல சிக்கல்களைக் கொண்டு வரும் சாத்தியமிருக்கிற மாதிரியே தெரிகிறது.

நேற்று கருத்துரிமைக்கு ஆதரவாக நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குரல் எழுப்பியிருப்பது 66A க்கு எதிராகவும்,அதிகார வலிமையில் கைது செய்வதை கண்டித்திருப்பதும் கருத்துரிமையாளர்களுக்கு சிறிய நம்பிக்கையை தந்திருக்கிறது.நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சாயம் வெளுத்து விட்டதுன்னு முன்பு இன்னொரு மார்க்கபந்து சந்துல சிந்து பாடியிருந்தார்:)

பங்கு வேற இந்துத்வா ,மார்க்கத்தில் உங்க பங்கு என்ன என்கிறார்:)

நல்லவேளை எம்.எஃப் ஹுசைனுக்கு போட்ட பதிவையெல்லாம் நம்ம வட்டத்துக்குள்ளேயே பேசி முடிச்சாச்சு.உங்க கடைக்கு மறுபடியும் வடை சாப்பிட யாராவது வந்தாங்களா?

//கருத்து சுதந்திரம் நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்!//

ஆட்சியில் இருப்பவர்களுக்கான ஊது சாதனமாக விளங்கிய வானொலி,தொலைக்காட்சி போன்றவைகளும்,சோசலிச கார்பரேட்டுகளின் கைகளில் இருந்த பத்திரிகை ஊடகமும் முந்தைய கால கட்டம்.பின் தனியார் தொலைக்காட்சி இந்தியாவுக்கு சில மாற்றங்களையும் அதிகமாக கேளிக்கைகளை மட்டுமே தந்தது.சாதாரண மனிதர்களின் குரல்கள் கேட்கும் இணைய சமூக தளங்கள் பல மாறுதல்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் சாத்தியமிருப்பதோடு எதிர்விளைவுகளையும் கூட ஆளும் வர்க்கத்திற்கு கொண்டு வந்து விடுமோ என்ற அச்ச உணர்வின் வெளிப்பாடுகளே தமிழகம்,மராட்டிய மாநிலங்களின் கைது படலம் எனலாம்.

பதிவர் விஜயகுமாரின் பின்னூட்டத்தில் சொல்லியது போல் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு போன்ற சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்களின் ஆதரவு பெருகுவதைப் பொறுத்து கருத்துரிமை நமது பிறப்புரிமை எனபதை உறுதிசெய்யலாம்.

தமிழகம் தாண்டி மும்பை வரையிலும் 66A போய் சேர்ந்திருப்பது நல்லதுதான்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!வணக்கம்.

வர்தா பாய்,இயக்குநர் மணிரத்னம் பற்றியெல்லாம் சொன்னது பொதுவான கருத்தா என்ன?முந்தைய தகவல்களை சேகரிப்பது கூகிள்,யாகூ துப்பாக்கி பாட்டை விட ரொம்ப கஷ்டமான விசயம்.

பதிவுல தாக்கரே பற்றி சொல்ல மறந்து போன இன்னுமொரு விசயம் தாக்கரேவுக்கான பாதுகாப்பு.பாதுகாப்புன்னு சொன்னதும் ஏதோ ராணுவ,போலிஸ் பாதுகாப்புன்னு நினைக்க வேண்டாம்.அம்ச்ச முனிஸ்(நம்மாளு) மராட்டிய சாதாரண தொண்டர்களே.நண்பர் ஒருவர் கூரியர் எடுத்துகிட்டு டெலிவரிக்கு போனால் 2 கி.மீட்டருக்கு முன்னாடியே நீ யாரு?எங்க போறன்னு கேள்வி கேட்டு பார்சலையும் டெலிவரிக்கு எடுத்துகிட்டாங்களாம்.

யாரு?வவ்வாலு!பயப்படற ஆளு:)

ராஜ நடராஜன் said...

நரேன்!வாங்க!வணக்கம்.

பால் தாக்கரே ஒரு யூனிக் கேரக்டர்.அவரைப் போல ஆகவேண்டுமென்று உதய் தாக்கரேவை தவிர்த்து ஒருத்தர் கூட விரும்ப மாட்டார்கள்.

மனிதன் பல இயல்புகளின் கலவையின் கூட்டுக்கலவையே.அதனால்தான் நிறைய சராசரி மக்கள்.சந்தர்ப்பங்களை எதிர்கொள்வதோடு Manipulate செய்பவர்கள் தனித்து நிற்கிறார்கள் அல்லது செய்தி வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

//பிராமன பனியா இந்து ஆர்ய ஆர்.ஸ்.ஸ் பாசிச இந்துத்வ பிற்போக்குவாதி கும்பலை சேர்ந்தவரா நீங்கள் :)))//

இந்த சந்தேகம் உங்களுக்கு ரொம்ப தாமதமாக வருகிறது.நமக்கு ஏற்கனவே இந்துத்வா முத்திரை குத்திய 'பங்கு' மேலே உட்கார்ந்துட்டிருக்குது:)

காவி சாயம் வெளுத்துவிட்டதுன்னு கூடவே மார்க்கபந்து வவ்வால் வேற:)

ராஜ நடராஜன் said...

வருண்!உங்களுக்கான முதல் பின்னூட்டத்தில் கசாப் பற்றிய ஒப்பீடு திடீரென முளைத்த யதேச்சையான கேள்வி.கசாப் இன்று தூக்கிலிடப்பட்டதை அனைத்து பின்னூட்டங்களிட்டு விட்டு தமிழ்மணம் பார்வையிடும் போதே அறிந்தேன்.

Now it is a minus smiley statement only.

வவ்வால் said...

ராச நட,

மார்க்க பந்துக்கல், பங்கு தந்தை எல்லாம் என்னா சொல்லுவாங்கன்னு சோசியம் தானே சொன்னேன், நான் சோசியம் சொல்லிக்கிட்டு இருக்கிற சைக்கிள் கேப்ல கெடா வெட்டிக்கிட்டார் பங்கு.

நம்ம மக்கல் எல்லாம் அமெரிக்காவை திட்டினாலும் எல்லாம் அமெரிக்க கொள்கையாளர்களே, சின்ன புஷ்ஷு சொன்னாரில்ல எங்களோட இல்லையா அப்போ நீங்க தீவிரவாதி ஆதரவாளருன்னு அதையே தான் இந்த மார்க்கர்களும்,பங்கும் செய்வது ,அவங்க சொல்லுறதுக்கு ஆமாம் போடலையா நீ காவின்னு நடுநிலையா பேசுறவங்களை சொல்லிடுவாங்க :-))

ஆனா பாரும் கோராமைய, சந்தர்ப்பம் வாய்த்தா அதே காவியுடன் கைக்கோர்த்து நாம எல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் , நாத்திக நடுநிலையை அழிப்போம்னு கூசாம கூவுவாங்க:-))

என்ன செய்ய கெரகம் நல்லா பொழுது போவும் இவுக கூட பேசினா :-))

எனவே cool buddy...lets have fun thats all!!!

Amudhavan said...

இனப்பாசத்தை அரசியலாக்கிக் கடைவிரித்த கலையில் துவங்குகிறது அவருடைய வெற்றியின் ரகசியம். லதா மங்கேஷ்கர் சுனில்தத் போன்ற அன்றைய பிரபலங்களும் அமிதாப்பச்சன் போன்ற அதற்கடுத்த பிரபலங்களும் தாதா தாதா என்று அவரிடம் பணிந்து நிற்க மீடியாவின் வெளிச்சம் மிக அருமையாகப் பாய, கூடவே இந்துத்வா முஸ்லிம் கிறிஸ்துவ எதிர்ப்பு என்றெல்லாம் மிகச்சுலபமாக கலவர அரசியல் செய்யதுவங்கினார் அவர்.
வரதாபாய் போன்றவர்களின் அசுரத்தனமான வளர்ச்சி அவரின் ஒரு பகுதி செயல்பாடுகளை முடக்கிவிட சாமர்த்தியமாக பாகிஸ்தான் எதிர்ப்பு கிரிக்கெட் எதிர்ப்பு என்று வேறு வழிப் பயணங்கள் அவருக்குக் கைகொடுத்தன.
எல்லாவற்றுக்கும் எதிர்ப்பாளராக இருந்தபோதிலும் தொடர்ச்சியான மக்கள் கூட்டம் அவரை மகாராஷ்டிரத்தின் ஈடு இணையற்ற தலைவராக உயர்த்தியே பிடித்திருந்தது கடைசிவரைக்கும்.
இதற்கேற்ற செயல்பாடுகள் ஏதும் அவரிடம் இருந்ததாகவும் தெரியவில்லை. சரியான செயல்பாடுகள் இல்லாத போதிலும் காலம் சில பேர்களை அப்படி உச்சத்திலேயே தூக்கி நிறுத்திப் பிடிப்பதைத்தான் நாம் பலர் விஷயத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோமே தமிழ்நாட்டிலேயே.
உங்கள் மதிப்பீடுகள் சரியானவையாகவே இருக்கின்றன.

Prakash said...

தமிழர்களை கொன்றதிலும் சரி, வடமாநில மக்களை விரட்டியதிலும் சரி, முஸ்லீம் மக்களை கொன்றதிலும் சரி ஒரு கொலை வெறியனாக செய்லாற்றிய ஒரு கிரிமினலை இந்துத்வா பற்றில்லாமல் எப்படி மிதமாக பதிவு போட முடியும்?

சார்வாகன் said...

சகோ இராசநட,
நான் சொல்ல் வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை ஒரு தனி மனிதனோ,சிறு குழுவோ தங்கள் கொள்கைகளை பல்ர் ஏற்கும் படி செய்ய முயல்வதற்கு சூழல்,பெரும்பான்மை பொதுப் புத்தி ஏற்கும் த்ன்மை இருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகம் ,இந்தியாவின் பிறபகுதிகளை விட வித்தியாசமாக இருந்தது, அதிகம் முஸ்லிம் ஆட்சியாளர்களால் ஆளப்படாதது, சைவ மதம், சிறு தெய்வ வழிபாடே முத்னமை, மொழிப் பற்று என்பது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வித்தியாசப் படுத்தி காட்டியது.இந்த சூழலில் திராவிட வாதம் இங்கு மட்டும் எடுபட்டது.

எங்கெல்லாம் முஸ்லிம் அரசுகள் நீண்ட நாள் இருந்ததோ, முஸ்லிம் அரசர்களை எதிர்த்த‌வர்களே மக்களின் நாயகர்கள். மாகாராஷ்ட்ராவில் சிவாஜி‍‍ ஔரங்கசீப் மோதல் என்பது இராமன் இராவணன் போர் போல் மக்களின் மன‌தில் இடம் பெற்றது.இதனை மன‌தில் கொண்டு சிவாஜின் படை என்னும் சிவசேனா முக்கிய அரசியல் மராட்டி மண்ணில் ஆனது.

பால் தாக்கரே ஒருவேளை இச்சூழலை பயன்படுத்தாமல் இருந்து இருந்தால் வேறு எவரோ பயன்படுத்தி இருப்பார்.
சிவாஜி என்பவரை மிகவும் உயர்வாக ,விமர்சனக்களுக்கு அப்பால் பட்டவ்ராக காட்ட சிவசேனை முனைந்தது. ஒரு இயக்கத்திற்கு எதிரிகள் வேண்டும்,
பிற மாநிலத்வர், சிறுபான்மையினர் எதிர்ப்பில் வளர்ந்தது.

பால் தாக்கரே சூழல் சார் சந்தர்ப்பவாதி அரசியல்வாதியே!!!

ஒருவேளை தமிழ் நாட்டில் பிறந்து இருந்தால் திராவிட வாதம் பேசி இருக்கலாம்.
நன்றி

வருண் said...

****ராஜ நடராஜன் said...

வருண்!உங்களுக்கான முதல் பின்னூட்டத்தில் கசாப் பற்றிய ஒப்பீடு திடீரென முளைத்த யதேச்சையான கேள்வி.கசாப் இன்று தூக்கிலிடப்பட்டதை அனைத்து பின்னூட்டங்களிட்டு விட்டு தமிழ்மணம் பார்வையிடும் போதே அறிந்தேன்.

Now it is a minus smiley statement only.***

LOL

ஏங்க, பால் தாகரே செத்தது சம்மந்தமாத்தானே கருத்துச் சொன்னேன்.

நீங்க ஏதோ "விரமா" பேசுறேன்னு கசாப்பு பொணத்தை இழுந்துட்டு வந்துட்டு, "ஐயோ கசாப் செத்துட்டான்" அந்த ஸ்மைலியை எடுத்துடுறேன் னு சொல்றீங்க!!!

எதுக்கு இதெல்லாம்???

கசாப்பை கட்டி இழுத்து வந்தது நீங்க. இப்போ கசாப் உயிரு போயிடுத்தேனு ஸ்மைலிப் போடுங்க, இல்லை எடுங்க, அது என் பிரச்சினை இல்லை! என்னை ஏன் இதிலே இழுக்குறீங்கனு தெரியலை!

வருண் said...

****பதிவுலகில் மதப்பிரச்சாரம் என்ற நிலையில் துவங்கியதுதான் மதம் சார்ந்த விவாதங்கள்.

பதிவுலக நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்தும் கூட நம்ம மேல் விரல் நீட்டினால் என்ன நியாயம்?***

என்னங்க நீங்க!!! பதிவுலகில் "சமரசம் உலாவும் இடம்" ஆக்க நீங்க ஆற்றிய தொண்டு நெறையா இருக்குல்ல.. அதெல்லாம் எப்படி மறக்கிறது? அதில் உங்க பங்குக்கு உங்களைத்தான் கை காட்டனும். "இல்லை இல்லை நான் "சமரசம் கொண்டுவர ஒண்ணும் செய்யலை" "னு நீங்க சொல்றது உங்க "பெருந்தன்மை"! :))))

அதுக்காக உங்களுக்கு கொடுக்க வேண்டிய "க்ரிட்டிட்" கொடுக்காமல் விட்டுற முடியுமா என்ன?? :)))

வேகநரி said...

உங்க நல்ல பதிவு.
//சரியானது எதுவாக இருக்க முடியும் என்பதே நமது நிலைப்பாடு.அந்த விதத்தில் அனைவருக்குமான கருத்துரிமை பேஸ்புக் கருத்து தெரிவித்த பெண்ணுக்குமுண்டு//
பெண் ஷாகீனுக்கோ, இஸ்லாமிய பெண்ணுக்கோ என்ன உரிமை இருக்கிறது என்றால் ஒரு பிறமதத்தை சேர்ந்த நல்ல தலைவரோ கெட்ட தலைவரோ அவரை தாராளமாக திட்டி கருத்து தெரிவிக்கலாம். பெண்கள் மூடி பர்தா கண்டிப்பா போடணும் என்று கருத்து தெரிவிக்கலாம்.ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வது அவசியம் என்று கருத்து தெரிவிக்கலாம். மற்றும் படி கடையநல்லூரில் தூரப்ஷாவுக்கு நடந்த கொடுமையையோ,செங்கொடிக்கு நடந்த பயமுறுத்தல்கள் பற்றி எதிர்த்து கருத்து தெரிவிக்க முடியாது, பி.ஆர்.பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களின் பெண்களை பூப்பெய்த பிறகு பெண்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்று ஜமாஅத்தால் மிரட்டி கல்வியை நிறுத்தியுள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து கருத்து தெரிவிக்க அனுமதி கிடையாது.

Prakash said...

நாலு செவத்திற்குள் தானே இருக்கிறது கணிணி யாருக்குத் தெரியும் தான் லைக் பண்ணியவர்களைத் தவிர என அந்தப் பேதைப் பெண் நினைத்திருக்கலாம். ப்ச் அந்த செயல் துணிச்சலானதோ இல்லையோ, மெய்நிகர் உலகிலும் கருத்துச் சுதந்திரம் எந்தக் கோடு வரை அனுமதிக்கப்படும் என்பதை மெய்நிகர் கனவான்கள் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறாள்.

வவ்வால் said...

வேகநரி,

நீங்கள் சொல்வது சரியே, ஆனால் அதற்காக பால் தாக்கரே பற்றி கருத்து சொல்லக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும், எனவே அதுக்கும் உரிமை வேண்டும், இதற்கும் உரிமை வேண்டும்,மொத்தமா சொன்னா பூரண உரிமை வேண்டும்.

யாரோ ஒருவர் இறந்தால் துக்கம் செலுத்த சொல்லலாம் ,ஆனால் கட்டாயப்படுத்த கூடாது.

விருப்பப்பட்டு செய்வது வேறு கட்டாயத்தின் பேரில் செய்வது வேறு.

ஆனால் மார்க்கப்பந்துக்கள் அவர்கள் மதத்தில் கட்டாயம் என சொல்வதை கடமை என்பார்கள்,நாம் தான் அவர்களை நல்வழிப்படுத்தனும்.

வேகநரி said...

வவ்வால்,
பால் தாக்கரே பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று இல்லை,அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு அனுமதிக்கபட்ட உரிமைகள் அவ்வளவே என்பதை சொன்னேன்.
இப்போ பாருங்க வவ்வால் இலங்கையில் ஒரு இஸ்லாமிய பெண்எழுத்தாளர்,சமூக செயற்பாட்டாளர் சர்மிளா செய்யத் என்பவர் ஒரு சமூக அக்கறை கொண்ட சுதந்திரமான கருத்தை வெளியிட்டார்.
பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று சொன்னார்.
இலங்கை பெண்கள் சவூதி அரேபியாவில் இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாக்கபடுவது தெரிந்ததே. பெண்ணாக இருந்து கொண்டு இப்படி கருத்து சொல்ல முடியாது, இஸ்லாமிய விரோத கருத்து என்று மார்க்கப்பந்துக்கள் கொதித்து எழுந்திட்டாங்க( தமிழ்நாட்டில் என்றால் மார்க்கப்பந்துக்கள் அவர் தலைக்கு விலையே பேசியிருப்பார்கள்) இப்போ சர்மிளா செய்யத் தலைமறைவாகியுள்ளார். அவரை சொன்ன கருத்தை திரும்ப பெறும்படியோ அல்லது அப்படி நான் சொல்லவில்லை என்ற அறிவிக்க வைப்பதற்க்கு கடும் முயற்ச்சிகளை மார்க்கப்பந்துக்கள் செய்வதாக அறிந்தேன். இது தான் இஸ்லாம்.இஸ்லாமில் கருத்து சுதந்திரமாவது புடலங்காயரவது.கருத்து சுதந்திர ஆசை வந்தா ஆசைக்கு ஒரு காபீரை, வவ்வாலை, இக்பால் செல்வனை திட்டி தீர்க்கலாம். அல்லது பர்தாவால் மூடிவைக்கபட வேண்டிய தேவை,ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்ய வேண்டிய தேவை இவைகளை பற்றி எழுதலாம்.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121121_sharmilacontroversy.shtml

ராஜ நடராஜன் said...

வவ்வால்!உங்க மார்க்கபந்து அடையாளம் புரிகிறது.உங்களை பாராட்டும் ஒரே பந்து சகோ.சு.பி மட்டுமே.ஆனால் புத்திசாலித்தனத்தை சரியான மார்க்கத்தில் செலுத்துவதில்லையென்ற சிணுங்கல் வேற:)

தாசு இறை நம்பிக்கையாளர்கள் எல்லோரும் சேர்ந்து முதலில் இறை மறுப்பாளர்களை கெடா வெட்டனும்ன்னு பதிவு போட்டார்.அதுக்குள்ள உங்களுக்கு பதிவு போட்டு தூக்கி விட்டார்.படிக்காத பாவியானேன்.

இந்துத்வாவும்,மார்க்கமும் இணையும் நாள் எதுவோ?பொன்னாள் அது இனி வருமா?

ராஜ நடராஜன் said...

வருண்!சமரசமும்,பரிணாமமும் சமீப கால தோற்றங்கள்.மதம் பரப்பல் அதற்கும் முந்திய இணைய கல்வெட்டுக்கள்:)

அறிவுஜீவித்தனம் எங்கிருந்தாலும் அதனை ரசிப்பதே அடியேனின் இணைய பணி.அதனால் சமரசம் எனக்கு பிடித்திருக்கிறது.

மேலும் சமரசத்தின் கடும் உழைப்புக்கான பலனே உலாவுகிறது.இதில் நமது பெருந்தன்மையென்பதெல்லாம் ஓவரா தெரியல உங்களுக்கு:)

சென்ற பின்னூட்டத்திலேயே குறிப்பிட மறந்து போய் பின் பொறி தட்டிய ஒரு விசயம் என்னன்னா சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு குற்றவாளி ஒருவனை பொதுவில் வைத்து தூக்கிலிடுவதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம்.அதனை வேடிக்கை பார்க்க விரும்பாமல் அலுவலகத்தில் நானும் என்னோட பாஸும் உட்கார்ந்திருந்தோம்.

நான் பெரியாரின் நேரடி சீடன்.இருந்தாலும் வலிய தரும் 'கிரடிட்டை' வேண்டாம்ன்னு சொல்ல முடியுமோ:)

ராஜ நடராஜன் said...

வேகநரி!தமிழகத்தில் பர்தா இடவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறதா?

தமிழகத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் பலதார மணத்தோடு வாழ்கிறார்கள்?

சின்ன வீடா வரட்டுமா?பெரிய வீடா வரட்டுமான்னு சினிமா பாடல்தான் ரிமோட்டை தட்டினால் கேட்கிறது:)

கடையநல்லூரில் தூரப்ஷாவுக்கு நடந்த கொடுமையும்,செங்கொடிக்கு நடந்த பயமுறுத்தல்கள் நிச்சயம் கண்டிக்கபடவேண்டியவை.

வாய் எச்சில் நிரம்ப உச்ச குரலில் மார்க்க பரப்புரைகள் நிறைய தொலைக்காட்சிகளில் கேட்கவே செய்தாலும் பெண் கல்விக்கு எதிரான ஜமாத் மிரட்டல் நான் அறியாத ஒன்று.

ராஜ நடராஜன் said...

பிரகாஷ்!நலமாக இருக்கிறீர்களா?

ஆட்சி மாறினதுக்குப் பின் பின்னூட்டங்களில் ஆளையே பார்க்க முடியலையே.

நிச்சயமாக பெண் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் மனநிலையிலேயே பேஸ்புக் பெண் கருத்தை வெளியிட்டிருக்க முடியும்.கருத்து வெளிப்பாடு மட்டுமே உண்மையை சொல்கிறது.கைது செய்ததும்,மன்னிப்பு கேட்க வைத்ததும் பொய்மையான வேசங்களே.

ராஜ நடராஜன் said...

வவ்வால் & வேகநரி!

மறுபடியும் விலாவாரியா பேசலாமே.பை.

வருண் said...

****தாராவி வர்தா பாய்,இன்னும் கேரளத்து சேட்டன்களின் எதிர் தாக்குதலில் பால் தாக்கரேயின் கோசம் வெற்றி பெறாமல் இன்றும் தாராவி தென்னிந்தியர்களில் குறிப்பாக தமிழர்களின் வாழ்விடமாகவும்,இந்தியாவின் மிகப்பெரிய சேரியாகவும் விளங்குகிறது.சேரியாக இருந்தாலும் மும்பாய்க்குள் நிகழும் மைக்ரோ பொருளாதார வளம் கொண்டது தாராவி.1960-70 பதுகளில் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட பம்பாயின் மில் ***

நடராஜன்: தாராவியில் வாழும் தமிழர்கள் (தமிழ் இஸ்லாமியர், ஆதி திராவிடர்கள், நாடார்கள்) அங்கே இருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வந்து வாழ்ந்து நிம்மதியாக இருக்கட்டுமே.

பால் தாக்கரே ஒரு மதவெறியன், இன வெறியன் என்பது ஒரு புறமிருக்கட்டும்..

தாராவியில்ல் தமிழர்கள் வாழும் வாழக்கையை பெருமையாக சொல்லிக்கொள்ள முடியுமா என்ன???

என்னைப் பொருத்தவரையில் ஸ்லம் எல்லாமே அகற்றப்படனும். அங்கே இப்படி வாழ்வதற்கு இவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் வந்து ஏதோ சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் என்ன???

தாராவியில் தமிழர்கள் வாழும் வாழ்க்கையை எல்லாம் பெருமையாகச் சொல்லும் ஒரே ஆள் நீங்கதான்.

வருண் said...

****மதம் பரப்பல் அதற்கும் முந்திய இணைய கல்வெட்டுக்கள்:)****

சும்மா என்னத்தையாவது விடாதீங்க. நீங்க 2007 ல இருந்து இருக்கீங்க. "மதம் பரப்புதல்"னு நீங்க சொல்வது எப்போ வந்தது??

நீங்க கண்டுக்காமல் விட்டு இருந்தால் அதுவும் ஆடி அடங்கியிருக்கும். தீயை அழிக்கிறேன்னு அதில் பெட்ரோலை ஊத்தி வளர்த்து விட்டது யாரு???

வவ்வால் said...

வேகநரி,

இஸ்லாமிய ,பெண்ணோ இந்து பெண்ணோ,ஆணோ கருத்து சொல்ல உரிமையுண்டு, அதற்கு மறுப்பு சொல்லவும் உரிமையுண்டு, அதற்கு பதில் அடக்குமுறை கூடாது அவ்வளவே.

பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக செய்தால் தான் ஒரு பெண் பிழைக்க முடியும் என்ற நிலையை சமூகத்தில் உருவாக்கு ,சமுகத்தின் இயலாமை, கயமை.

அதே போல சட்டவிரோதம் என சொல்லிவிட்டு , திருட்டு தனமாக நடத்துவது அரசின் கையாலாகத தனம்.

ஒருவன் பிழைக்க பல மாற்று வழிகளும் ஒரு சமூகத்தில் இருக்கணும்.

நம் நாட்டில் உடல் உழைப்புக்கு மிக குறைந்த ஊதியம் தரும் சமூக அமைப்பு இருப்பதே சரியல்ல.

அமெரிக்காவில் ஒரு எலெக்ட்ரிசியன் கூட நம்ம ஊரில் இருந்து சென்ற மென்பொருள் வல்லுனரை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற உண்மையை அங்கே போன மக்கள் மட்டும் மறந்தும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

சமூகத்தில் உழைப்புக்கு ஊதிய வேறுபாடு பெரும் வித்தியாசம் இருக்கக்கூடாது.

அதே போல இன்னார் தன் இன்ன தொழில் செய்யலாம் என சொல்லும் பிற்போக்கு தனம் களையப்பட வேண்டும், ஆனால் அதை எல்லாம் செய்யாமல் ,மதம், சாதி என தூக்கிப்பிடிக்கிறார்கள்.

இது போன்ற பிரிவினையை அரசியல்வாதிகள் பிழைக்க பயன்ப்படுத்திக்கொள்கிறார்கள்.

வவ்வால் said...

ராச நட,

//!உங்க மார்க்கபந்து அடையாளம் புரிகிறது.உங்களை பாராட்டும் ஒரே பந்து சகோ.சு.பி மட்டுமே.ஆனால் புத்திசாலித்தனத்தை சரியான மார்க்கத்தில் செலுத்துவதில்லையென்ற சிணுங்கல் வேற:)
//

சு.பி.சுவாமிகள் பாராட்டும் அளவுக்கு நமக்கு அறிவு இன்னும் பெருகவில்லை, மார்க்க வாதங்கலை எதிர்க்காமல் இருந்தா நல்ல பாதியில் புத்தி போகுது என சொல்வாராயிருக்கும்.

முயலுக்கு மூனூ கால் என்றாலும் அவர் நிதானமாக கையால்வார் மற்றவர்கள் முரட்டுவாதமாக பேசுவார்கள்,அவ்வளவே.


//இந்துத்வாவும்,மார்க்கமும் இணையும் நாள் எதுவோ?பொன்னாள் அது இனி வருமா?//

இந்துத்வமும் ,இஸ்லாமும் இணையலாம், ஆனால் வைதீக மதம் இணையாது, இணைய விடாது என்பதே உண்மை.

இந்துத்வா என்பது வேறு வேத வைதீக மதம் என்பது வேறு , ஆனால் வேத மதம் இந்துத்வா போர்வையை போர்த்திக்கொண்டு , ஒட்டு மொத்தமாக அது தான் இது என்கிறது.

இறை நம்பிக்கையாளர்களை கூப்பிட்ட கையோடு , சைவ உணவே மனிதனுக்கு படைக்கப்பட்டது என பதிவு போடுவதன் பின்னால் இருப்பது வைதீக நம்பிக்கையே.

சைவ ,அசைவ உணவுப்பழக்கம் என்பது காபி குடிப்போர், டீ குடிப்போர் பொல ஒரு பிரிவு சிலர் காபி, டீ இரன்டும் குடிப்பாங்க. ஆனால் அதனை இதான் மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்டது என கோட்பாட்டினை உருவாக்குவது வைதீக மதமே ஆகும்.

எனவே வைதீக கோட்பாடு கடைப்பிடிக்க படும் யாரும் இன்னொரு இறை நம்பிக்கையை ஏற்க மாட்டார்கள்.

இதெல்லாம் எதிரிக்கு எதிரி நண்பன் பாலிசியில் பேசிக்கொள்வது.

இதில் இன்னொரு காமெடி என்ன தெரியுமா? கடவுளுக்கு முன்னால் வேதங்கள் படைக்கப்பட்டுவிட்டது, கடவுள் பிரமானரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என ரிக் வேதத்தில் எழுதிவைத்துக்கொண்டுள்ளார்கள்.

இதனால் தான் பார்ப்பனர்கள் கடவுள் சந்நிதானத்தில் கூட குற்றம் செய்கிறார்கள், உண்மையான இறை மறுப்பாளர்கள் வேதம் படித்தேன் என சொல்லும் பார்ப்பனர்களே :-))

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!வருகைக்கு நன்றி.

இந்திராகாந்தி காலத்தின் சிக்மகளூர் தொடர்ந்த அரசியல் அவதானிப்புக்களை செய்யும் உங்களுக்கு பால் தாக்கரே அரசியல் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.மராட்டிய மக்களின் அபரீதமான விசுவாசம் ஒன்றைத் தவிர தாக்கரேயின் பாசிட்டிவ்ன்னு பார்த்தால் ஒன்று கூட தென்படவில்லை.

சினிமா பிரபலங்கள் அடிபணிந்து போகும் அவசியமிருப்பதால் அவர்களை குறை சொல்ல முடியாது.

மும்பாயின் சுற்றுப்புறங்களை தவிர்த்த பால் தாக்கரேயின் ஆதிக்கம் இல்லையென்றே நினைக்கிறேன்.

//காலம் சில பேர்களை அப்படி உச்சத்திலேயே தூக்கி நிறுத்திப் பிடிப்பதைத்தான் நாம் பலர் விஷயத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோமே தமிழ்நாட்டிலேயே.//

உங்க விடுகதை எனக்கு புரிகிறது:)

வந்தோரை வாழ வைக்கும் மாநிலம் தமிழகம் மட்டுமல்ல,மராட்டிய மாநிலமும்தான்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!நாம தொண்டு செஞ்சுதான் சமரசம் உலாவுதுன்னு நம்ம பங்கு ரொம்பவே பீல் பண்றார்:)

நீங்க சொல்வதை நான் உள் வாங்கிக்கொள்ளவில்லையென்று நீங்க பிராது கொடுத்தாலும் கூட //எங்கெல்லாம் முஸ்லிம் அரசுகள் நீண்ட நாள் இருந்ததோ, முஸ்லிம் அரசர்களை எதிர்த்த‌வர்களே மக்களின் நாயகர்கள்.// என்பதிலும் கூட முரண்படுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு வேங்கட சீனிவாசன் என்பவர் நேருவின் காலத்து சீன யுத்தம் பற்றியும் அதற்கு முந்தைய சீன,இந்திய,ஆங்கில கால சூழல்களை அருமையாக சொல்லியிருந்தார்.பள்ளியில் வரலாற்று வகுப்பில் கூட இப்படி பாடம் சொல்லிக்கொடுக்க படவில்லை.ஆனால் இந்திய மன்னர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டதன் காரணமாகவே அனைத்து படையெடுப்புக்களும் இந்தியாவில் நிகழ்ந்தன என்று சொல்லித் தந்தார்கள்.எனவே வரலாற்றை சிவாஜி,அவுரங்கசீப் என பிரித்து வைத்து விட முடியாது.இப்பொழுது மராட்டியம் பற்றி பேசுவதால் சிவாஜி அவுரங்கசீபை எதிர்ப்பதற்கான துணிச்சலோடு மராட்டிய மலைப்பகுதிகள் போன்றவை போரிடுவதற்கான களத்தை தந்தது.மலைப்பகுதியென்றவுடன் சொன்னவுடன் செஞ்சி கோட்டையும் அதன் வரலாறும் நினைவுக்கு வந்து விட்டது.

சிவாஜியின் சாகசங்களாய் கூறப்படும் பெரிய கூடைக்குள் ஒளிந்து தப்பித்து சென்றது போன்றவை மக்களிடம் வரவேறபை பெற்றிருக்க கூடும்.

//பால் தாக்கரே ஒருவேளை இச்சூழலை பயன்படுத்தாமல் இருந்து இருந்தால் வேறு எவரோ பயன்படுத்தி இருப்பார்.//

பம்பாயின் காஸ்மோபொலிட்டன்,பொருளாதார சூழல்களை கவனிக்கும் போது பால் தாக்கரேயின் தடாலடி அரசியல் ஒரு பக்கம்,அன்றாட ரயில்,பஸ்,டாக்சி,கார்,ஆட்டோ பயணங்கள் நிற்கும் தருணங்கள் மட்டுமே சிவசேனாவை நினைவு படுத்தின.

தாக்கரே இல்லாமல் இருந்திருந்தாலும் மும்பாய் இப்படித்தான் இருந்திருக்கும்.தாக்கரேவுக்கு மாற்று ஆள் சரத் பவார் இருக்கிறாரே!



ராஜ நடராஜன் said...

வேகநரி!சாருவும்,பாலியல் தொழிலாளராக இருந்து எழுத்தாளராக மாறிய பெண் ஒருவர் பற்றிய பதிவு போட்டுள்ளேன்.நேரமிருந்தால் தேடிப்பிடித்து படிக்கவும்.முடியலன்னா பதிவு சுருக்கம் இதுதான்.பாலியல் வேட்கை தேவையான ஒன்று என்பதற்காக அதனை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக கொண்டு வந்துவிட வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடில்லை.அது ஏதோ சமூகத்தின் வட்டத்துக்குள் எங்கோ இலை மறை காயாக இருந்துட்டுப் போகட்டுமே என்பதற்கு நல்ல ஒப்பீடு தமிழகத்தின் மது விலக்கை ரத்து செய்த பின்பான தமிழக மது நுகர் கலாச்சாரம்.

இலங்கை இன்னும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் பாலியல் தொழிலை சட்டமயமாக்கால் இன்னும் பல பிரச்சினைகளையே உருவாக்கும்.

நீங்க அவிழ்த்த முடியை கட்டமாட்டேன்னு சவுதிக்கு எதிரா கங்கணம் கட்டிகிட்டு சுத்தற மாதிரி தெரியுதே:)

சில பிரச்சினைகளை தூதரகங்கள் மூலமாக மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும்.அதற்கான முதுகெலும்பு எந்த சார்க் நாட்டிற்கும் கிடையாது என்பதோடு நாடுகளின் சமூக பிரச்சினைகளை கூட இன்னொரு நாட்டின் பொருளாதார வலிமையே தீர்மானிக்கின்றன.எந்த ஆசிய நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் தனது ஸ்விஸ் வங்கி கணக்குதான் முதல் என்ற நிலையில் ஆட்சி செய்யும் போது நீங்கள் எழுப்பும் குரல் எழுத்துக்களில் பதிவு செய்யப்படுகிறது என்ற ஒரு நன்மையைத் தவிர கிணற்றுள் விழுந்த கல்மாதிரியான சப்தமே.

ராஜ நடராஜன் said...

வவ்வால்! நீங்க நம்ம மார்க்க சகோக்களை நல்வழிப்படுத்திட்டாலும்!சகோக்கள் வைக்கும் கருத்துக்களின் ஓட்டைகள் கண்டுபிடித்து பின்னூட்டம் போடும் புத்திசாலித்தனம் தவிர வேற ஒரு நல்வழியும் காணோம்.

சரி!யாராவது ஒருவர் கன்வின்ஸ் செய்யற மாதிரி தனது வாதத்தை முன்வைத்தாலாவது ஆமாம் சரியேன்னு சொல்லலாம்ன்னு பார்த்தால் அடுத்து நேரடி விவாதத்திற்கு தயாரா என்ற கேள்வியை போட்டு விடுகிறார்கள்:)

இன்று ஒரு சிரியாக்காரனிடம் சிரியா பற்றியும் அரபுநாடுகள் பற்றியும் விலாவாரியா பேசிக்கொண்டிருந்தேன்.பதிவு போட இயலுமான்னு தெரியவில்லை.பார்க்கலாம்.

//முயலுக்கு மூனூ கால் என்றாலும் அவர் நிதானமாக கையால்வார் மற்றவர்கள் முரட்டுவாதமாக பேசுவார்கள்,அவ்வளவே.//

மூணே கால் என்றாலும் சகோ.சு.பியின் நிதானம் எனக்கு பிடித்திருக்கிறது.மற்றவர்களின் அந்த பொறுமை இல்லையென்பதே அவர்களது வாதத்தின் பலவீனமாக போய் விடுவிறது.

சகோ.சார்வாகன் சொன்னதை நான் கிரகிக்கவில்லையென்றார்.உண்மையை சொன்னா நீங்க சொல்லும் வைதீக மதம் பற்றி நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

வேகநரிக்கு நீங்க போட்ட பின்னூட்டம் எனக்கு பிடித்திருக்கிறது என்பதோடு சிந்தனைக்குரியது.

ராஜ நடராஜன் said...

வருண்!உங்களுக்கு பதில் சொன்னா நான் பெட்ரோலில் தீயை ஊத்துறேன்னு சொல்வீங்க:) அணைஞ்சாலும்,இணைஞ்சாலும் எனக்கு சம்மதமே!

வேகநரி said...

நான் முக்கியமாக சொல்லவந்தது பேஸ்புக் கருத்து தெரிவித்த பெண்ணு ஏதோ வீராங்கனை என்ற கணக்கில் கதை போகிறது அவர்களது மதம் அனுமதித்த அவர்களுக்கு பிடிக்காத பால் தாக்கரேயை தாக்கலாம் அவ்வளவே தான் அந்த பெண் செய்திருக்கு. சுதந்திரமாக கருத்து தெரிவித்த சர்மிளா செய்யத் மதவாதிகளுக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார் என்பதே பெண்கள் நிலை.
தமிழக மது நுகர் கலாச்சாரம்- தமிழர்களுக்கு மது மேல் அதிக ஆசை மது அருந்திவிட்டு வீரம் கதைப்பது மனைவியை அடிப்பது எல்லாம் மரபியல் குறைபாடோ தெரியலை! சகோ சார்வாகன் தான் தெளிய வைக்கணும்.
பாலியல் தொழிலை மேலைநாடுகளை போல் சட்டமயமாக்க வேண்டும் என்பதே என் கருத்து நான் சந்தித்த இந்தியர் ஆசியநாட்டவர்களும் இதே கருத்தை தான் தெரிவிச்சாங்க. இந்தியாவில் சட்டவிரோதம் என்று விட்டு முழுக்க வெளிவே ஷம் தானே நடக்கிறது.முக்கியமா சவூதிஅரேபியாவில் பாலியல் தொழிலை சட்டமயமாக்கபட வேண்டும். இந்த வருடம் 400 இலங்கை பெண்கள் அரபிகளால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக செய்தி சொல்லுது. மற்றும் அரபிகளால் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட ஆசிய பெண்கள், இஸ்லாமிய நாடுகளான பங்களாதேஷ், இந்தோனெசிய பெண்கள் தொகை தனி.
சிந்திக்க மாட்டீர்களா:)