Followers

Saturday, December 22, 2012

குளிக்காமல் இருந்தா?

தாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு  சிவசேனாவாதி அடைமொழி கொடுத்திடாதீங்க:)

உலகில் 2.5 பில்லியன்,ஆப்பிரிக்காவில் 450 மில்லியன்,தென்னாப்பிரிக்காவில் 5 மில்லியன் பேர் குளிக்க முடியாதபடி தண்ணீர் தட்டுப்பாட்டில் இருப்பதாக லுட்விக் மாரிசன் என்ற பல்கலைக்கழக மாணவர் புள்ளி விபரம் தருகிறார்.இதில் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் குளிக்க முடியாத சிரமத்தில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் யாருக்காவது தெரியுமா? 

குளிக்காமல் இருப்பது எவ்வளவு சுகமான அனுபவம் என்பது தந்தை பெரியாருக்கு மட்டுமே தெரியும் என்பதோடு காவிரி நீர்ப்பிரச்சினையெல்லாம் வரும்ன்னு சிம்பாலிக்காக குளிக்காம இருந்தாரோ என்னவோ?.ஒரு வேளை தமிழர்கள் குளிக்காமல் இருந்தால் தமிழக நீர்ப்பிரச்சினை ஓரளவுக்கு குறையும் வாய்ப்பு இருக்குமா?

முன்பு ஏரி,குளம்,ஆறு,கடல் என நீர் வளத்தில் சற்றும் குறைவில்லாத ஐந்து வகை நில வளங்களோடு யானை கட்டி போரடித்த தமிழகத்திற்கு இப்பொழுது காவிரி நீர் கிடைப்பதில்லையென்பதே உலக நீர்வநீள பற்றாக்குறையின் முதல் அறிகுறி.தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை அழகாக சொன்ன படம் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர். இப்பொழுது தா நீர்! தா நீர்.

யாராவது தண்ணீரை விட பெட்ரோல்தான் விலை அதிகம் என்று நினைத்தால் தவறு.அதிக விலை கொடுப்பது தேவை,உற்பத்தியோடு உபரி செலவுகளையெல்லாம் உங்கள் தலையில் சுமக்க வைக்கும் உலக பொருளாதர விலை..எனக்கெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்தான் விலை அதிகம்.ஒரு லிட்டர் பெட்ரோல் 60/65 பில்ஸ்.ஒன்றரை லிட்டர் மினரல் வாட்டர் 150 பில்ஸ்.
 
தமிழகத்தில் தண்ணீர் தாகம் தீர்ப்பது தவிர தமிழக சமையல் முறையில் அரிசி கழுவுதல்,சாம்பார்,ரசம்,மோர் என அனைத்திலும் பயன்படுகிறது. இதோடு கை கழுவ, சாப்பிட்ட பாத்திரம் கழுவ,கால் கழுவ,முகம் கழுவ என எங்கும் நீர் மயம்.பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையை மாற்றுவதில் சிரமங்கள்,சிக்கல்கள் இருந்தாலும் கூட மனிதர்கள்,குறிப்பாக தமிழர்கள் குளிக்காமல் இருந்தால் எப்படியிருக்கும்? 

பிரெஞ்சுக்காரன் குளிருக்கு கொஞ்சம் வெந்நீரில் டவலை மட்டும் முக்கி உடலை துடைத்து விட்டு பிரெஞ்சு பாத் செய்து கொள்வது இன்னும் கொஞ்சம் நீர் சிக்கனம் என்ற போதிலும் குளிக்காமலே இருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு முன்னாடி நாம் ஏன் குளிக்கிறோம்ன்னு யோசித்தால் முதல் காரணம் உடல் நாற்றம் தவிர்க்க,இரண்டாவது காரணம் நோய் கிருமிகள் உடலை தாக்காமல் இருக்க.இரண்டு பிரச்சினைகளையும் தவிர்க்க மாற்று வழிகள் இருக்கிறதா?குளிர் பிரதேசங்களான காஷ்மீர், ஊட்டி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற இடங்களில் வியர்வைப் பிரச்சினை இல்லையென்பதோடு குளிக்க வேண்டிய அவசியமில்லை.அப்படியே குளிக்க நினைத்தால் சுடு நீர், குளிரில் உடை மாற்றம் போன்ற பிரச்சினைகள் உள்ளன..காஷ்மீர்,ஊட்டி குளிரெல்லாம் சினிமா டூயட் பாடலுக்கு மட்டுமே அழகாக இருக்கும்.

எனவே குளிர் பிரதேசத்தில் இருந்தால்,அக்னி வெயில் சென்னையில் இருந்தாலும் குளிப்பதற்கு மாற்று இருக்குது.நமக்கு தண்ணீர் பிரச்சினை போலவே தென்னாப்பிரிக்காவில் ஒரு பக்கெட் குடிதண்ணீர் கொண்டு வர ஒரு மைல் போக வேண்டியிருந்ததோடு குளிப்பதென்பது சிரமம் என்பதோடு முகம் கழுவாமல் இருந்த பல ஆப்பிரிக்க குழந்தைகள் ட்ரெக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்துள்ளார்கள்.

குளிப்பதற்கு சோம்பேறித்தனப்பட்ட லுட்விக் மாரிசன் கணினி வசதியில்லாமல் நோக்கியா மொபைல் போனின் இணைய தொடர்போடு விக்கிபீடியா,கூகிள்  என தேடியிருக்கிறார். எது எதுக்கோ மெயில் அனுப்பும் ஆப்பிரிக்கர்கள் இது பற்றி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தா ஏனப்பா  லுட்விக் உலகம் முழுதுமா தேடற! இதோ இந்த சுட்டிக்குப் போன்னு  அசின் பிரியர்,புள்ளி விபர நிபுணர்  பெயரை சொல்லியிருக்க மாட்டேனா:)

லுட்விக் இணைய தேடலில் அத்தனை பன்னாட்டு கழிம்பு,கிரிம்   என கண்டுபிடித்ததுதான் உலர் குளியல் கிரிம்.எடுத்து உடம்பு முழுதும் தேய்ச்சால் அன்றைய குளியல் முடிந்தது.லுட்விக் மாரிசன் கண்டுபிடிப்பை  குளிக்க இயலாத நீண்ட விமான பயணம் செய்பவர்களுக்கும்,ராணுவ வீரர்களுக்கும் தரப்படுகிறது.இந்தியாவில் என்னென்னமோ கார்பரேட் கிரிமெல்லாம் வந்தும் கூட உலர் குளியல் கிரிம் எப்படி வராமல் போனது?வியாபாரம் போணியாகாது போயிடும்னு ஜி.எம் நிறுவனம் கண்டு பிடிச்ச எலெக்ட்ரிக் கார்களை திரும்ப வாங்கிக்கொண்ட  கதை மாதிரியாக இருக்குமோ என்னவோ?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்துலேகா என்ற முடி எண்ணை (ஹேர் ஆயில்) பற்றி ஒருவர் பதிவு போட்டிருந்தார்.சரி!அப்படி என்னதான் இருக்குமென்று பார்த்தால் நம்ம கேரளத்து சேட்டன் யாரோ தேங்காய் எண்ணையோட சில இலைகளையும் சேர்த்து இருப்பார் போல இருக்குது.ஆனால் கொஞ்சம் வேப்பெண்ணை வாடையும் கொஞ்ச நேரத்துக்கு மூக்கை துளைக்கிறது.தலை முடி உதிர்தல் குறைக்குமா என தெரியவில்லை.இன்னும் பரிட்சித்துப் பார்த்து விட்டு பின்பு உறுதி செய்கிறேன்.இதை இங்கே ஏன் சொல்கிறேன்னா அமேசான் காட்டில் விளைந்த இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது எர்வாமெட்டின் என தொலைக்காட்சி விளம்பரங்கள் வர முடி உதிர்தலுக்கு மாற்றாக இந்துலேகா தேங்காய் கலப்பு எண்ணை வருகிறது.

தலைமுடி உதிராம இருக்கணுமின்னா கண்ட கண்ட ஷாம்பு போடுவதை விட தலையைக் கழுவாமல் இருந்தாலே  முடி உதிர்வது குறைந்து விடுமென படித்தேன்.இதுவும் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.எப்படியோ நோய்க் கிருமிகள் தோலை தாக்காமலும்,குளிக்காத தைலமோ,கிரிமோ தயாரிப்பது கர்நாடகத்திடமிருந்து தண்ணீருக்கு கெஞ்சுவதை நிறுத்த மாற்று வழிகளையும்,மாற்று வாழ்க்கை முறையையும் உருவாக்கும். நாளைக்கு செவ்வாய் கிரகத்து குடியேறினாலும் கூட தண்ணீர் பஞ்சம் வராத படி குளிக்காமல் இருப்பது உதவியாக இருக்கும்.

பதிவுக்கான கரு: TED

7 comments:

வவ்வால் said...

ராச நட,

நானும் ஆட்டத்தில் இருக்கேன்னு காட்ட இந்தப்பதிவா?

குளிக்காம இருந்தா தண்ணீர் பஞ்சம் தீர்ந்திடுமா? என்ன ஒரு கண்டுப்பிடிப்பு :-))

பெரியார் கையில் ஒரு கோல் வைத்திருந்தார் எதுக்கு தெரியுமா, இது போல குதர்க்கமா பேசுறவங்களை நாலு போடு போடத்தான்.

//முன்பு ஏரி,குளம்,ஆறு,கடல் என நீர் வளத்தில் சற்றும் குறைவில்லாத ஐந்து வகை நில வளங்களோடு யானை கட்டி போரடித்த தமிழகத்திற்கு இப்பொழுது காவிரி நீர் கிடைப்பதில்லையென்பதே உலக நீர்வநீள பற்றாக்குறையின் முதல் அறிகுறி.//

காவிரியில் தண்னீர் வரவில்லை என்பது நீர்வளப்பற்றாக்குறை என்பது , தேவையான கால நிலையைப்பொறுத்தே, ஆனால் ஆண்டு சராசரி நீர்வரத்து என்பது ,நம் தேவைக்கும் மேல் இருக்கு, ஆனால் அவை எல்லாம் மழைக்காலத்தில் வெள்ளமாக வருகிறது, நாம் அந்நீரை கண்மாய்,ஏரி என தேக்கி வைக்கலாம், அக்காலத்தில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏரிகள்,கண்மாய்கள் இருந்தன, அதனால் தான்ன் கோடையில் நீர் காவிரியில் வரும் அளவு நம்மை அதிகம் பாதிக்கவில்லை, இப்பொழுது அக்கண்மாய்கள், ஏரிகள், பாசனக்கால்வாய்கள் ஆக்ரமிக்கப்பட்டதாலே , காவிரி நீரின் தாக்கம் அதிகம் இருக்கிறது.

சுமார் இரண்டு லட்சத்து அறுபதினாயிரம்ம் கண்மாய்கள் காணாமல் போய்விட்டதாக ஒரு அறிக்கை சொல்கிறது. நாமே நீர் ஆதாரன்ங்கலை அழித்துவிட்டு நீர்வளம் சுருங்கிவிட்டது, இயற்கை காலைவாரிவிட்டது என புலம்புவதே வாடிக்கையாக போய்விட்டது. இதில் பாலவனத்தில் பெட்ரோல் கிணற்று மேல் குந்திக்கொண்டு பெட்ரோல் விலை கம்மி ,தண்ணி விலை கூட என வியாக்கியானம், உலக மக்கள் எல்லாம் அரேபிய பாலைவனத்திலா வாழ்கிறார்கள்.

அண்டார்டிக்காவில் ஒரு கிலோ தக்காளி விலை தங்கத்தை விட கூட என சொன்னாலும் அவசியம் என்றால் வாங்கித்தான் ஆக வேண்டும்.

செய்தி:

தமிழகத்தின் மேற்பரப்பு நீர்வள ஆதாரம், 853 டி.எம்.சி.,யாகும். இதில் அண்டை மாநிலங்கள் நமக்கும் அளிப்பது 261 டி.எம்.சி., தமிழகத்தில் 75 பெரிய அணைகள், ஏழு சிறிய அணைகள் மூலம் 233.2 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இதில், 13 ஆயிரத்து 710 ஏரிகள், நீர்வளத்துறையினரால் பராமரிக்கப்படுகிறது. கடந்த 2008 -09ம் ஆண்டு கணக்கின் படி, 72.43 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், 18.93 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆற்று கால்வாய் மூலமும், 13.34 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏரிகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மீதம், அதாவது பாதி அளவிற்கு மேல், 39.89 ஏக்கர் நிலம் நிலத்தடி நீர்மட்டத்தையும், இதர நீர் ஆதாரத்தையும் நம்பியே உள்ளன. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் 85 சதவீதம் பயன்படுவதால், அது வேகமாக குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 145 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாப்பு இருக்கிறது. எட்டு ஒன்றியங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்øமையை அடைந்துள்ளது. 57 ஒன்றியங்கள் மிக அபாயகரமாகவும், 33 ஒன்றியங்கள் அபாயகரமான அளவிலும் நீர்மட்டம் உள்ளது. 142 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட காரணம், மழை நீரின் அடிப்படை ஆதாரங்களான ஆறு, குளம், கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததே ஆகும்.

தகவல்: தினமலர்,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=261872&Print=1

நமக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு ,மனிதனால்ல் உருவாக்கப்பட்டது, இயற்கை இன்னும் பழிவாங்க ஆரம்பிக்கவில்லை, உண்மையாக இயற்கை ஆவேசம் அடையும் முன் அரசும் மக்களும் விழித்துக்கொண்டு ,தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

#// கணினி வசதியில்லாமல் நோக்கியா மொபைல் போனின் இணைய தொடர்போடு விக்கிபீடியா,கூகிள் என தேடியிருக்கிறார். எது எதுக்கோ மெயில் அனுப்பும் ஆப்பிரிக்கர்கள் இது பற்றி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தா ஏனப்பா லுட்விக் உலகம் முழுதுமா தேடற! இதோ இந்த சுட்டிக்குப் போன்னு அசின் பிரியர்,புள்ளி விபர நிபுணர் பெயரை சொல்லியிருக்க மாட்டேனா:)//

இது என்ன வஞ்சப்புகழ்ச்சி அணியா?

எப்படியாகினும் ,நமக்கு சுட்டிப்போட்டதற்கு நன்றி!

இங்கே நாமளும் கைப்பேசி இணையத்தில் தானே காலம்ம் தள்ளுகிறோம், என்னைப்போல லூட்விக்கும் இல்லாதப்பட்ட ஆளு போல.

உலர் குளியல் கிரீம் என பயன்ப்படுத்தினாலும், தொடர்ந்துப்பயன்ப்படுத்தினால் சரும பாதிப்பு உண்டாகலாம், இயற்கைக்கு மாறான எதுவும் பக்க விளைவுகளையே தரும்.

மனிதன் குளிப்பதற்கு காரணம் உடல் தூய்மை ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் உயிரியல் ரீதியானது, பாலூட்டிகள் பெரும்பாலும் வெப்பரத்த உயிரினங்கள், எனவே உடல் வெப்ப நிலை அதிகரிக்காமல் சரியாக்க வைக்க குளிக்க வேண்டியுள்ளது, யானைகள் நீரை வாரை அடித்துக்கொள்வதும், பன்றிகள் சேற்றில் புரல்வதும் உடலை குளிர்விக்கவே.

ஆப்கானிஸ்தானில் கூட மனிதர்கள் சேற்றுக்குளியல் செய்ய என குழி வெட்டி வைத்துள்ளார்களாம், போய் ஒரு சேற்றுக்குளியல் போட்டு வாரும். :-))

ராஜ நடராஜன் said...

நிபுணரே!புள்ளி விபரத்துக்கு நன்றி.கண்மாய்,ஏரி,குளமெல்லாம் கெடுத்து விட்டு பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சதை நிறுத்த முடியுதா?முதலில் இதை நிறுத்துங்க இல்லை குளிக்கற்தை நிறுத்துங்க.வசதி எப்படி?

யானை என்ன விடாமலா தண்ணீர் வாரி இறைச்சுக்குது.வெயில் சூடு தாங்கலேன்னா நாமும் ஒரு பூவாளி வச்சு நீர் ஊத்திக்கலாம்:)பூவாளி கூட வேண்டாம்.மினரல் வாட்டர் பாட்டில் அடியில் கொஞ்சம் ஓட்டை போட்டாலோ போதும்.யானை ஷவர் செய்துக்கலாம்.

நம்ம உணவு முறைகள் அனைத்தும் நீரை அடிப்படையாகக் கொண்டது.பிசா,KFC காரனைப் பாருங்க.தின்னமா ,துடைச்சமான்னு போய்கிட்டே இருக்கான்.அரேபிய உணவுகள் கூட இதே தின்னோம்,துடைச்சோம் கதைதான்.டெல்லியில் ரொட்டி,தால்,வெங்காயம்,தக்காளின்னு முடிஞ்சது கானா.கல்கத்தாவில் சப்பாத்திக்குள் சிக்கன்,மட்டன் வறுவலை வைத்து சாண்ட்விச் சாப்பிட்டு விடலாம்.நமக்கு மட்டுமே கஞ்சு வடிச்சு கொட்டனும்,கொழம்பு வைக்கனும்,ரசம் வைக்கனும்,மோர் வைக்கனும்.சிந்திக்க மாட்டீர்களா?

ஆப்கானிஸ்தான் காரன் சேத்துக்குளியல் போடறதை மட்டும்தான் பார்த்தீங்களாக்கும்.சேத்துல புரண்டு விட்டு நீர்வீழ்ச்சியில் சுகிப்பதை பார்க்கலையா?இதெல்லாம் பின்லேடனை அமுக்குன சந்தோசத்துல எப்பவாவது ஓய்வில் செய்யறது.தண்ணியில்லாத காட்டுக்குள் போஸ்ட் போட்டா உலர் குளியல்தான் வசதி.

ராணுவம்ன்னு சொன்னவுடன் பகைவன் பக்கத்தில் வராமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.தூங்காமலும் ஆனால் தூங்கும் ஒரு ராணுவ டெக்னிக் இருக்குது!தெரியுமா உங்களுக்கு?

வவ்வால் said...

ராச நட,

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டி நிலத்தின் விலையை ஏற்றுவதே அயல்நாட்டு இந்தியர்களும், ஐ.டி மக்களும் தான், அதனால் தான் கடந்த சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு ஆகாசத்துக்கு போயிடுச்சு.

இந்திய பொருளாதாரத்தில் வெளியில் இருந்து இப்படி வரும் திடீர் பணமே சமநிலையை குலைக்குது, அதை நிறுத்தினால் தானா நிலங்கள் ஃப்ளாட்டுகளாக மாறும் வேகம் குறையும்.

யானை தினமும் குளிக்கும், அப்படி குளிக்காமல் சூடேறும் யானைகளே மதம் பிடிக்கின்றன, பெரும்பாலான கோயில் யானைகள் சரியாக குளிக்க வைக்காமல் அலட்சியமாக விடுவதால் மதம் பிடித்து பாகனையே கொல்வதாக வனத்துறையினரே சொல்லி இருக்கிறார்கள்.

சும்மா நெட்டு புளிக்குதுல மொக்கை படம் பார்க்காமல் பொது அறிவையும் வளர்த்துக்கோங்க.

# வெளிநாட்டுக்கு போயிட்டா வெள்ளைக்காரன்/அரபினு நினைச்சுக்க வேண்டியது :-))

அவர்களும் ஃபுல்கோர்ஸ் மீல்ஸ் சாப்பிடுவார்கள்,அதில் எல்லா ஐட்டெமும் நீர் தேவையானதாகவே இருக்கும், அவன் சிக்கன் சூப் சாப்பிடுவான்,நாம ரசம்னு சோத்துல போட்டு சாப்பிடுறோம்.

சின்ன புஷ்ஷு நெல் பயிரிடுவதால் தான் புவி வெப்பம் ஆகுதுன்னு சொன்னார்ப்போல, தமிழ்நாட்டுல ரசம், சாம்பார் சாப்பிடுறதால தான் தண்ணி பஞ்சம் வருதுன்னு சொல்லும் உங்க மூளையை மியுசியத்துல தான் வைக்கனும் :-))

நம்ம ஆளு ஒரு சொம்பு தண்ணியில குண்டி கழுவிடுவான், பேப்பர்ல தொடைக்கிற வெள்ளைக்காரன் ஃபிளஷவுட்டுல கேலன் கணக்குல தண்ணீ ஊத்துறான் :-))

சேத்துக்குளியல் போட்டால் உடம்பு குளிர்ச்சியாகுமாம், நீங்கதான் சூடேறி கிடக்கிங்க போய் சேத்துல பொறண்டுவாங்க ,அப்பவாச்சும் வெக்க சூடு தணியுதான்னு பார்ப்போம் :-))

ராஜ நடராஜன் said...

என்ன!நான் அங்கே கடிக்கிறேன்னு இங்கே எசப்பாட்டா:)ஐடி மக்களும்,அயல் நாட்டு வாழ் மக்களும் விலையேத்தின காலமெல்லாம் போயிடுச்சுங்க!ஆனால் இந்திய சேமிப்புன்னு டாலர்,டினார்,ரியால்,திரஹாம்களை மாத்துனா நல்லதுன்னு நினைச்சு இந்திய சேமிப்பு வேணா இன்னும் வளரலாம்.நிலங்களை ஆட்டையப் போட்டவங்களையெல்லாம் விட்டுடுங்க.பஞ்சம் பொழக்க போனவங்களை கரிச்சுக் கொட்டுங்க.

என்னது!யானை தினமும் குளிக்குமா?நீங்கதான் அந்த கும்கியா:)நீங்க சொல்றது கோயில் யானையா இருக்கும்.காசு சம்பாதிச்சு கொடுக்குதேன்னு பாகன் தண்ணீர் ஊத்துவார்ன்னு நினைக்கிறேன்.மனுசனுக்கு சொம்பு தண்ணிக்கே வழியக் காணோம்.யானைக்கு தண்ணீர் ஊத்தி சாமரம் கேட்குதாம்:)

நான் பார்த்த யானைகள் ஈ மொய்ப்பதற்கும்,கொசுக்கடிக்கும் தனக்குத் தானே மண்ணை வாரி போடுபவை.

அப்ப கேரளாவுல அம்புட்டு தண்ணீர் இருக்குதே!அந்த யானைகளுக்கு ஏன் மதம் புடிக்குது?எறும்பு ஏதாவது காதுக்குள்ள பூந்துகிடறதால மதம் புடிக்குதுன்னு சொல்லுங்க.

சிறுதுளி பெரு வெள்ளம்.இம்புட்டு கணக்கு போடுறீங்க!6கோடிக்கும் மேல ஜனத்தொகைக்கு எவ்வளவு நீர் செலவாகுதுன்னு கணக்குப் போட்டுப் பார்க்கறதுதானே!இதோ புள்ளி விபரம்:)

தமிழ் நாட்டுல கஞ்சி வடிக்கிறது,சாம்பார் வைக்கிறது,ரசம் தாளிக்கிறது,மோர் கலக்கறது இத்தனையும் பத்தாதுன்னு காபி,டீ,சர்பத் வேற!அப்பறம் தண்ணிப் பஞ்சம் வராம என்ன செய்யும்?

முக்கியமானதை மறந்துட்டேனே!சரக்கு,அதுக்கு சோடா,பெப்சி,கோலா.எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு மினரல் வாட்டர் கலக்குற ஆளுக வேற:)

வெள்ளைக்காரன்,அரபி இரண்டு பேருமே நம்மள அடையாளம் கண்டுக்கிற மாதிரி தனி நடை,உடை,பாவனை....A classical Indian....கௌரவ அடையாளத்தையல்லவா அயல் வாழ் மக்கள் வைத்திருக்கிறோம்?

வெளிநாட்டுக்காரன் சிக்கன் சூப் என்ன மட்டன் சூப்பு,நண்டு,கவுதாரி,கிரிம் சூப்,கிளியர் சூப் (இது காய்கறி,மிஞ்சுன எலும்புத் துண்டு,முட்டையோடு,இஞ்சி,வெங்காயம்,குருமிளகெல்லாம் போட்டு simmering point ல வச்சு வடிச்செடுக்கறது) எல்லாமே சாப்பிடுவான்.காரணம்க ஆறு போன்ற பூமி ஆதாரங்களை பகிர்ந்துக்க செய்றாங்க.இல்லைன்னா உபரி நீர் இருக்குது.நாம்தானே தண்ணிக்கு அல்லாடறோம்?

இங்கே இப்ப 23 டிகிரிதான்!அங்கே:)

வருண் said...

முடி உதிர்வதற்கு காரணம் ஒரு ஹார்மோன்னு நெனைக்கிறேன். ஒரு கொஞ்ச வயசு ஆள், முடி போகுதுனு (முடி போறதுதான் நடுவயது ஆண்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை) கவலையில் ஏதோ ஒரு மருந்தை சாப்பிட தடவ ஆரம்பிச்சு, அவருக்கு செக்ஸ்ல இண்டெரெஸ்ட் இல்லாமல்ப் போச்சுனு அவரு மனைவி புலம்புதாக அவர் மனைவி ஃப்ரெண்டு சொன்னதாகக் "கேள்வி".

தண்ணியால தலைமுடி உதிருது, ஷாம்புவால முடி உதிருதுது சொல்றது ஓரளவுக்கு உண்மைதான். அதெல்லாம் ரொம்பப் பெரிய விளைவை உண்டாக்காதுனு நெனைக்கிறென்.

நம்ம ஊர்ல ஆண் பெண் எல்லாருமே முழுமொட்டையடிச்சுட்டா என்ன? வெயில் அதிகமாக இருப்பதாலும், தண்னீர் பிரச்சினை போன்றவைகளுக்கு இது ஒரு தீர்வு. :)

ராஜ நடராஜன் said...

வருண்!வாங்க.என்ன குண்டைத் தூக்கிப் போடுறீங்க.தலைக்கு தடவுனா தலக்கு செக்ஸ்க்கு பிரச்சினையா:)

ஆண்,பெண்ணுக்கு மொட்டையென்பது பேஷன் என்பதோடு வழுக்கைக்கு நல்ல நிவாரணி.என்னோட பாஸ் யூல் பிரின்னர் மாதிரி எப்பவுமே மொட்டைதான்.யோசித்துப் பாருங்க!மொத்த மொட்டையான ஊரில் முடி வச்சிருக்கிறவன் அசிங்கமானவன்:)

எனக்கு முடி இன்னும் கெட்டியாத்தான் இருக்குது.உதிர் காலம் ஆரம்பிக்கும் போது மொத்தமா அறுவடை செய்துடப் போறேன்.

துளசி கோபால் said...

எங்கூர்லே ட்ரை ஷாம்பூன்னு ஒரு ஸ்ப்ரே கிடைக்குது. அதை தலையில் கொஞ்சம் அடிச்சுக்கிட்டா தலைக்குக் குளிச்ச மாதிரி!