Followers

Wednesday, December 26, 2012

இது கொத்து பரோட்டா அல்ல! நிஜமாவே பரோட்டா!:)

விடாம கொத்து பரோட்டா சாப்பிடற லோகத்துல பரோட்டா பற்றி ஒரு சின்ன ஆராய்ச்சி.நீ ரொம்ப நல்லவன்னு வருடக்கடைசி கிடங்கு கணக்கு சரி பார்க்க ஊர் கடத்தி விட்டதால் அவசரத்துக்கு சேட்டன் கடைக்கு பரோட்டா சாப்பிட போக சாப்பிடும் நேரத்தில் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு கெடுதின்னு யாரோ ஒருவர் பரோட்டா மேல் இருக்குற கோபத்தை இணையத்தில் கொண்டு வந்து கொட்டிய நினைவு வர மெய்யாலுமே பரோட்டா உடலுக்கு கெடுதியான்னு யோசனை செய்ய கும்கி யானை மாதிரி பிளிறிக்கொண்டு வந்த எண்ணங்கள் இவை:)

இணைய தேடலில்
ஒரு கருத்தின் மையமாக மைதாவில்

Benzoyl peroxide,
Alloxan .
Artificial colors,
Mineral oils,
Taste Makers,
Preservatives,
SUgar,
Saccarine,
Ajinamotto

போன்ற பொருட்களை கலப்பதாக யாரோ ஒரு மூல ரிஷி சொன்னதையே காபி பூனைகளாக பெரும்பாலோனோர் பரோட்டா செஞ்சு பதிவு என்னுடையதாக்கும் செய்திருக்கிறார்கள்.மேலும் இணையதேடலில் மாவு பேக்டரியில் பணிபுரிந்த ஒரு மேலாளர் மட்டும் கெடுதி ஆதரவு பதிவு ஒன்றில் ஆங்கில வார்த்தைளை கலப்பு செய்வதில்லை என்கிறார்.எப்படியிருந்த போதிலும் இந்திய தரக்கட்டுப்பாட்டுக்கு நான் கியாரண்டி அல்ல.
படம் தேடியதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில்  பொராட்டா சுடுகிறார்கள்.பரோட்டா லேயருக்காக எனது தேர்வு இது.

அரிசு மாவுல இட்லி, தோசை தினமும் சாப்பிடுவது கெடுதியா இல்லையா?ஜீரண சக்தியோடு ஒப்பிடும் போது இட்லி,தோசை பரவாயில்லை தான்.ஆனால் நம்ம வீட்டில் கல்லூரிக்குப் போகும் நம் சகோதரிக்கு அம்மா இட்லியை அவசரத்துக்கு டிபன் கேரியரில் அமுக்கி வைத்தால் என்னம்மா!தினமும் இட்லியா என தோழிகளோடு பிசா சாப்பிட போய் விடும்.சரி நாம் பொராட்டாவுக்கே வருவோம்.
புரோட்டாவா,பராட்டாவா.பொராட்டாவா என பெரிய சந்தேகம் இருப்பதால் அவ்வபோது புராட்டா,பரோட்டா,பொராட்டான்னு இடையிடையே ப்ளோவுக்கு தகுந்த மாதிரி சேர்த்துக்குவேன் சரியா?.

மேலே சொன்ன ஆங்கில மூலப்பொருட்கள் கலந்திருப்பது உடலுக்கு கெடுதியென்றால் மேலை நாட்டவர்கள் விடாமல் ரொட்டி,,பிஸ்கெட்,கேக் என செய்து சாப்பிட்டு விட்டு திடமாக இருக்கிறார்களே எப்படி? ம்!அவர்கள் நன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள் என சிலர் நினைக்கலாம். மிலிட்டரிக்கும்,தொலைகாட்சி சீரியலுக்கும் உடற்பயிற்சி செய்பவர்களோடு நிஜமாகவே உடற்பயிற்சி வாழ்க்கையின் ஒரு பகுதியென அன்றாட வாழ்வில் திணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது போக அமெரிக்கா ஓவர் வெயிட் கொலாஸ்டரல் பூமியென நினைக்கின்றேன். இது தவிர Cheese,Burgar,KFC,Fries என வேறு காரணங்களும் கூட..தமிழ் அமெரிக்கர்கள் கம்ன்னு கிடக்காம கருத்து சொன்னா எனக்கு தெளிஞ்சிரும்:)
பிராந்தியை அப்படியே வாயில் ஊற்றினோமான்னு இல்லாமல் கேக்குக்கு நெருப்பு வைக்கும் சதி:)

கேக் செய்தோமா  சாப்பிட்டோமான்னா இல்லாமல் அதில் பிராந்திய வேற ஊற்றி பிளாம்பே ன்னு ஒரு ஸ்டைல் வேற. புபேன்னு நின்னுகிட்டே சாப்பிட ஆட்கள் ஏற்கனவே சில ரவுண்டு வந்திருப்பார்கள் என்பதால் புபேக்களில் பிளாம்பே செய்வதில்லையென நினைக்கிறேன்.

புபே என்றதும் ஒரு செமினார்ல நீச்சல் குளத்து புபே ஒன்தில்  பார்த்த ருமாலி ரொட்டி ஞாபகம் வந்துடுச்சு..வட நாட்டில் ருமாலி ரொட்டின்னு ஒன்று இருக்குது.நாம் வடை சட்டியில எண்ணை ஊத்தி வடை சுட்டா ராஜஸ்தான்காரர்கள் வடை சட்டியை கவிழ்த்துப்போட்டு ருமாலி ரொட்டி சுடுகிறார்கள். புபேயில் ருமாலி மாஸ்டரை ஷோ காட்டும் பந்தாவுக்கு வைத்திருந்தாலும் கூட ருமாலி மாஸ்டர் ரொம்ப விசயம் தெரிஞ்ச ஆளாக இருக்க கூடும்.ஏன்னா ருமாலி ரொட்டியை ஆகாயத்துல தூக்கி வீசிட்டு கெத்தா திரும்பி நின்னுகிட்டார். ருமாலி ரொட்டி காற்றில் ஒரு நடனமாடி கவிழ்த்துப்போட்ட வடைச்சட்டியில் சரியா வந்து உட்கார்ந்துகிச்சு. ஆச்சரியமான அனுபவம்.
 
ருமாலி ரொட்டி கவிழ்த்துப்போட்ட வடைச்சட்டிக்குள் வந்து உட்கார்வதற்கு முன்னால்.ருமாலி ஷெஃப்!நீங்க வித்தைக்காரன் தான்.

சரி மறுபடியும் பரோட்டா ஆராய்ச்சி.

இட்லி மட்டுமே பெயர் மருவாமல் அப்படியே இருக்குது.தோசை,தோசா என வடநாட்டுல பெயர் மறுவுவது போல் இது இந்த வம்பே வேண்டாமென வளைகுடாவில் இதனை சப்பாத்தி என்றுதான் அழைக்கிறார்கள். வளைகுடாவில் பிரபலமான மூன்று உணவுகள் பிரியாணி,பரோட்டா,சமோசா எனலாம். இதில் பரோட்டாவை மற்றும் இங்கே ஆராயலாம். குப்புஸ் என்ற மைதா,அரிசி மாவு கலந்த ரொட்டி காலை,மதியம்,இரவு உணவுகளில் உண்பது போலவே பரோட்டா காலை,மாலை,இரவு என சாயாவோடு கிடைக்கிறது. இதில் முக்கியமாக காலை உணவாக பணீ அவசரத்தில் இருக்கும் பல உழைப்பாளர்களுக்கும்,ருசி காரணமாக அரபியர்கள், எகிப்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என காலை உணவாக புரோட்டாவே பிரதானம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னா குப்புஸ்ல எண்ணை கலப்பு குறைவு.பரோட்டாவில் எண்ணை வளம் அதிகம்.எண்ணைப் பிசு பிசுப்பு கொலாஸ்ட்ரலுக்கு காரணம் என்பதால் பரோட்டா பயமுறுத்தல்கள் எனலாம்.

மேலும் பரோட்டா ஜவ்வு மாதிரி இழுபடுவதால் நார் சத்து குறைவாக,மற்றும் குறைந்த விலை எண்ணை,வெஜிடபிள் ஆயில் என கலக்க கூடுமென்பதால் உடல் கெடுதிக்கான சாத்தியங்கள் இருக்க கூடும்காபி பூனை பதிவர்கள் சொல்லிய இன்னுமொரு விசயம் கேரளத்தைப் பாரு,பொராட்டாவை தடையே செய்துட்டாங்கன்னு இன்ன்மொரு ஆகா!ஓகோ கேரளத்துக்கு.

ஆனால் வளைகுடாவில் இன்னும் பொராட்டாவை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் சேட்டன்மாரே.சரக்கு மாஸ்டர்கள் அப்படியே நுகர்ந்து பார்த்தே சரக்கின் தரத்தை எடை போடும் மது கொனாசியர்கள் போல் பரோட்டா சாப்பிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு பரோட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்.

இப்படி ஆராய்சி செய்ததுல பொராட்டாவுக்கான முக்கியமானதும், சரியானதுமான பொருட் கலவை என்னன்னா மைதா, முட்டை, பால், சர்க்கரை, எண்ணை,இத்துணூண்டு உப்பு,கலந்து பிசைய கொஞ்சம் தண்ணீர்.இந்த கலவையில பொராட்டா செஞ்சாதான் நல்லாயிருக்கும்.ஆனால் பால் விற்கிற விலைக்கு பொராட்டா போட்டு கட்டுபடியாகாதுன்னு  அப்படியும் யாராவது பொராட்டா மாவில் பால் கலக்கும் பொராட்டா மாஸ்டர் விசயம் தெரிந்த அனுபவசாலியாக இருக்க கூடும்..பொராட்டா மாவை உருட்டி உருண்டையா எடுத்து தட்டையா செஞ்சா நல்ல பொராட்டாவே வராது.பொராட்டா நுணுக்கமே துணி மாதிரி துணி போட்டு ஊறவைப்பதிலும்(Fermentaion)மாவை துவைச்சு காயப்போடுவதிலும்தான் இருக்குது.

கும்கி படத்துல யானைக்கு கவளம் தருகிற உருவத்துல இருக்கிற பொராட்டா மாவை மெல்லிடையாள் என எஸ்.பி.பி மென்மையா பாடுகிற மாதிரி பேப்பரை சுத்துற மாதிரி பதத்தில் அடிச்சு மிருதுவாக்கி மாவை வட்டமா சுருட்டி வச்சு மறுபடியும் பொராட்டா அளவு செய்து பொன்னிறத்தில் சுட்டு எடுத்து மாஸ்டர் பொராட்டா சூட்டோடு சூடா பொராட்டாவை இரண்டு உள்ளங்கையாலும் ஒரு குத்து விட்டா பொராட்டா சுருள் சுருளா வரணும்.இந்த நுட்பம் பொராட்டா மாஸ்டருக்கு மட்டுமே கை வந்த கலை.

சரி!பரோட்டாவை தமிழகத்தில் கடையில் வாங்கினால் உண்ணும் முறை பெரும்பாலும் அப்படியே பிச்சுப்போட்டு,சால்னா ஊத்தி முழுங்கிடறது.அதிலும் நம்ம சரக்கு அண்ணாத்தைகள் சாப்பிடற கெத்தே தனி. சிரிச்சிக்கிறேன்:)
பரோட்டாவில் கொஞ்சம் சர்க்கரை தெளித்து பாலை ஊற்றி 3 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு ஊட்டலாம்.நம்ம ஊர்ல டீயில் பண்ணை முக்கி சாப்பிடுவது போல் பரோட்டாவுக்கும்,சாயாவுக்கும் ஏகப்பொருத்தம்.

பரோட்டா பெரும்பாலும் காலை உணவாக சாப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்.இரவிலேதான் சாப்பிடுவேன்னு அடம் புடிக்கிறவங்க கல்லூரி வயசா இருந்தா தப்பில்ல. முன்பெல்லாம் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துட்டு கால்நடையா நடந்தா கோவை அவினாசி ரோட்டில் காசு போட்டா பாட்டைக்கேளு யந்திரத்தோடு பொராட்டாவும்,மட்டன் குருமாவும் ஈரானி ஓட்டல் ஒன்றில் மட்டுமே கிடைக்கும்.
 தூவிய கொத்துமல்லிக்காக பரோட்டாவுக்கு தொட்டுக்க இந்த படம்.

இப்பொழுது எங்கும்,எதிலும் பொராட்டா மையம் என்பதால் பொராட்டாவோடு ஆட்டை சாப்பிட்டாலோ,கோழிதான் பிடிக்குதுன்னாலோ முக்கியமா கவனிக்க வேண்டியது பொராட்டா, குருமா, பாயாவோடு கேரட், வெள்ளரிக்காய், லெட்யூஸ், முட்டைக்கோஸ், தக்காளி,வெங்காயம், எலுமிச்சம் பழம் என பச்சைக்காய்கறிகளையும் சேர்த்தே உண்ணவேண்டும்.குருமிளகு தூள் சேர்த்துகிட்டா இன்னும் ஒஸ்தி,உப்பு பத்தியமில்லாட்டி உப்புச் சிதறல் கூட கொஞ்சமோ கொஞ்சம்.தமிழகத்தில் அத்தனை காய்கறிகளும் விளையுது.ஆனால் பச்சைக்காய் கறியில்லாத உணவாகவே நிறையபேர் உண்கிறார்கள்.தமிழக ஓட்டல்களில் முதலில் தண்ணீர் தருவது மாதிரி உணவு வரும் வரை சாலடை சாப்பிடச் சொல்லும் பழக்கம் வரவேண்டும்.முடியலைன்னா ஒரு கேரட்,தக்காளியை அப்படியே கொண்டு வந்து கடிக்கச்சொல்லியும் கூட புது ஐடியா கொடுக்கலாம்:) 

சமையல்கட்டு அவசரத்துக்கு வெட்டினாலும் கூட எளிமைக்கான தேர்வு.

கேரட் உடலுக்கு நல்லதுன்னுதான் இதுவரையிலும் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.முந்தா நாள் ஒருவர் நீரிழிவு நோய்க்காரர்களுக்கு கேரட்  தரவே கூடாதென்றார்.இதற்கும் யாராவது ஆராய்ச்சி செய்தால் பரவாயில்லை.ஏனென்றால் நீரிழிவு நோயில் இந்தியா ஒலிம்பிக்ஸ் தங்கம் வாங்குதாம்.யாராவது ஒன்றை சொன்னால் அதை அப்படியே பின்பற்றும் காபி,பேஸ்ட் நிறையவே இருக்கிறார்கள்.சிந்திக்க மாட்டீர்களா:)

இந்திய மழை,வெயில்,காற்று முக்கியமாக உழைப்பு,யோகா சூழலில் நீரிழிவு நோயில் இந்தியா முதலிடம் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.குஜராத்திகள் நிறைய இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதால் சர்க்கரைக்கு வேணும்ன்னா மோடியையும் குஜராத்திகளையும் பிடிக்கலாம்:)நாம் ஹார்போஹைட்ரேட்காரர்கள்.கரைத்து விடலாம்தானே!

வேலை வாய்ப்பு,திரைப்படத் துறையில் நுழையனும்ன்னு மெட்ராஸ்,சென்னை போன இளைஞர்கள், கலைஞர்கள் காலை சாப்பாடுமில்லாமல்,மதிய சாப்பாடுமில்லாத நேரமாப் பார்த்து பசி தாங்கிப் பரோட்டா அல்லது காலை உணவு,இரவு உணவு தவிர்த்த புல்மீல்ஸ் மட்டுமே சாப்பிட்ட நீராகார நினைவுகள் இருக்கலாம்.

படமெல்லாம் போட்டு விட்டு சரியான உணவு கிடைக்காத மக்களும் இந்தியாவில் இருக்கிறார்களே என வினவு தோழர்களின் குரலும் மெல்லிதாக காதில் ஒலிக்கிறது. தீர்வுகளுக்கானவர்கள் இந்தியா வறுமைக்கோட்டுக்கும் அப்பால் நகர்ந்து விட்டதென்கிறார்கள்.

தற்போதைய வாழ்க்கை,உணவு மாற்றங்களில் எதை சாப்பிட்டாலும் சாப்பாடு கறைந்து போகும் உடல் உழைப்பு,உடற்பயிற்சி அவசியம்.உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலை. பார்வையிட்டவர்களுக்கு நன்றி.






5 comments:

ஜோதிஜி said...

ரெண்டு பேரும் ஒரே மாதிரியா யோசிச்சோமோ? படித்தவுடன் சிரித்து விட்டேன்.

குழந்தைகளுக்கு புரோட்டா என்றால் அத்தனை இஷ்டம். அதிலும் முபு கொபு என்று (முட்டை புரோட்டா, கொத்து புரோட்டா) என்று பட்டியல் வைத்து திடீர் என்று கேட்பார்கள்.

ஒரு மகிழ்ச்சியான தகவல் உங்களுக்கு காத்து இருக்கின்றது.

வவ்வால் said...

ராச நட,

ரொம்ப சொந்தமாக கண்டுப்பிடிச்சு எழுதிட்டீர் போல இருக்கு :-))

ஒய் உமக்கு தெரிஞ்ச பரோட்டா வித்தை இம்புட்டு தான் ....நானெல்லாம் மறுபடியும் பரோட்டாவை கொத்து விட்டா அதகளம் ஆகிடும் சொல்லிப்புட்டேன்.

பரோட்டா வகைகளை சொல்லுறேன் தெரிஞ்சாவது வச்சுக்கோங்க,

பரோட்டா,

எண்ணை பரோட்டா/நெய் பரோட்டா,

வீச்சு பரோட்டா,

வீச்சு முட்டை,

கொத்து பரோட்டா,

சைவ கொத்து,அசைவ கொத்து, முட்டை கொத்துனு இருக்குங்கோ.

கைமா பரோட்டா,

சில்லி பரோட்டா,

முட்டை லாப்பா இதையே சிலோன் பரோட்டா என்பார்கள்(அப்படின்னு சொன்னாங்க, சிலோனு சிங்கள பொண்ணுங்க சினுங்கிடப்போறாங்கோ)

ஸ்டப்டு பரோட்டாவில், ஆலு,பனீர், சிக்கன்,மட்டன்,மஷ்ரூம் எல்லாம் இருக்கு.

நான் பரோட்டாவில்,

சிக்கன் கீமா, மட்டன் கீமா, போன்றவை.

பனீர் நான் பரோட்டா.

இதெல்லாம் சாப்பிட்டு செரிச்ச ஆளு தான், இன்னும் எதாவது புதுசா இருக்கான்னு தேடிக்கினு இருக்கேன்:-))

இந்திய தர நிர்ணயம்னா என்னனு தெரியாம ,பரோட்டா சாப்பிட்டா குழந்தைங்க நல்லா வளரும்னு சொல்லிக்கிட்டு திரிங்க, அதுக்கும் சூப்பரப்புன்னு சொல்ல ஒரு சமூக புலி வந்திருக்காரு :-))

எது கலக்கிறாங்களோ இல்லையோ , மைதா போன்ற மாவில் பூச்சிப்பிடிக்காமல் இருக்க இரசாயன ஃபியுமிகேஷன் செய்றாங்க, பல இடங்களில் மாதம் ஒரு முறை குடோனில் ஃஃபியுமிகேஷன் செய்து ,மைதாவை பத்திரமா பார்த்துக்கிறாங்க :-))

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!கீழ் பெஞ்சில் உட்கார்ந்துகிட்டிருப்பவர் எப்ப பார்த்தாலும் உங்களை கிள்ளி விட்டுகிட்டேயிருக்கிறார்.எனக்கு வலிக்குதுல்ல:)

முன்பு பஞ்சம் வந்த நேரத்தில் கேரளாக்காரர்கள் புட்டு செய்ய அரிசி கிடைக்கலைன்னு மரவெள்ளிக்கிழங்கு,மீன் வறுவல்,சரக்குன்னு மெனுவை மாத்திகிட்டாங்க.என்னதான் பசுமையா இருந்தாலும் கேரள கம்யூனிச சங்க தொல்லைகளால் பஞ்சம் பொழைக்க ஊர் விட்டு ஊர் வந்து முதலில் கோவையில துவங்கினதுதான் இந்த பரோட்டா சமாச்சாரமாக இருக்குமென நினைக்கின்றேன்.அப்புறம் ருசி கண்டு திருச்சி,மதுரை,நாகர்கோயில்,மெட்ராஸ்ன்னு ஊர்வலம் வந்திருச்சு. கேரளாவில் ரயில் பிடிச்சா நேரா கோடம்பாக்கம் டேரா போட்ட இன்னுமொரு கேரளக் கூட்டம் இருப்பதை இன்னுமொரு சமயம் பேசுவோம்.

நான் அப்புறமா பேசுறேன்.

ராஜ நடராஜன் said...

அய்யா ஊர் சுத்தி வவ்வால்! கோவை அரசு மருத்துவமனைக்கும் முன்னாடி ராஜவீதி போவதற்கும் முன்னாடி கோவை ரயில்வே ஸ்டேசன் ரயில் பாலம் இருக்குமே.அதற்கு நேர் எதிர்த்த சிலோன் ஓட்டலில் சிலோன் பரோட்டா பிரசித்தம்.நாம் பேச்சுக்கு ஒரு பரோட்டாவைப் பத்தி சொன்னா நாம என்னமோ பரோட்டாவையே பார்க்காத மாதிரி என்னமா பட்டியல் போடுறீங்க பாருங்க!இருந்தாலும் பொராட்டா பதிவுக்கு இன்னும் கொஞ்சம் மெனு சேர்த்த மாதிரிதான் இருக்குது.நன்றி.

பார்த்ததையும்,கேட்டதையும்,உணர்ந்ததையும்தானே பதிவிலும்,பின்னூட்டத்திலும் சொல்றேன்.அதென்ன சொந்தமா கண்டுபிடிச்சேட்டுன்னு நையாண்டி மோளம்:)


நம்பள்கி said...

நல்ல சப்பாத்தி போட ஒரு சமையல் குறிப்பு (tip): கல்லு நல்லா சூடா இருந்தா சப்பாத்தி சுளுவா போடலாம்!