Followers

Tuesday, September 4, 2012

லங்காபதியே! என்னை அசத்தாத முகமூடியே!

ஒரு முறையாவது அனானி முகமூடி அணிந்து பார்க்க வேண்டுமென்ற ஆசையை முந்தா நாள் ஒரு பாய் "ஒசூர் பாய் முகமூடியே நீதானய்யான்னு" புது கொலம்பஸ் கண்டுபிடிப்பாய் யுரேக்கா என கத்தி விட்டார்:)

ஆசை,தோசை,பின்னூட்ட வடை! இப்படியெல்லாம் சொன்னால் இது பதிவுலக முகமூடியென்றோ,அனானி பின்னூட்டம் பற்றியென்றோ யாராவது நினைத்தால் அடுத்த வருட ஏப்ரம் 1 ம் தேதி இப்பவே தமிழ் புத்தாண்டு எப்பங்கிற மாதிரி இப்பவே கொண்டாடி வேண்டியதுதான்..இன்றைக்கு அதிகமா வியாபரம் ஆவது இந்த  முகமூடிதான்.நம்ம பதிவுலக நண்பர்கள் போட்டுக்கிற முகமூடியெல்லாம் ஏதோ திருவிழாவுக்கு போற குழந்தைக்கு கண்ணாடி வாங்கிப் போட்ட மாதிரியும் ஜவ்வு மிட்டாய் கடிகாரம் கட்டின மாதிரியான முகமூடிகள் இவை.

 எந்திரனுக்கு மாற்று சிம்கார்டு போட்டு விட்ட மாதிரி வெளியே பார்த்தால் அரசியல்,வெளியுறவுக்கொள்கை.உள்ளே பார்த்தால் ரகசிய ஒப்பந்தம், சுவற்றுக்குள் பேச்சு வார்த்தை.ஊடகத்துக்கு ஒன்ரை சொல்.இன்னொன்றை செயல்படுத்துன்னு அரசியல் முகமூடி உத்தம புத்திரனில் சிவாஜி சிவாஜிக்கு மாட்டிவிட்ட முகமூடி மாதிரி அரசியல் ஆசனத்து இரட்டை வேடங்கள்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல,வெள்ளை உடுத்தியவரெல்லாம் காந்தியின் பேரனுமல்ல.தமிழகத்திற்கு மஞ்சள்தான் மங்களம்.அது அமங்களமாகிப் போய் ஆண்டுகள் பலவாகி விட்டன..பழகிய தோசத்துக்காக இன்னும் மஞ்சள் பையிலும்,திருமண அழைப்பிதழலின் மூலையிலும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

கறுப்பு நிறம் அழுகிறதா என்று இருட்டுக்குள் இருட்டாக....பார்க்கவே முடியவில்லை சிரிப்பு சத்தம் கேட்காவிட்டாலும் அவ்வப்போது விசும்பல் மட்டுமே கேட்கின்றது.

சிவப்பு?அது ஏதோ தொழிலாளர் குரலாக இங்குமங்கும் ஒலிக்கிறது.ராஜா மாதிரி இருக்க வேண்டியது.ரஷ்யாவுல கேட்டாங்க,சீனாவுல கேட்டாங்க,கியூபாவுல கேட்டாங்கன்னு சுக்கிர திசை அடிக்காத செவ்வாய் தோசமாம்.குடுகுடுப்பை ஜோஸ்யக்காரன்  ராவுல வந்து உடுக்கை அடிச்சுட்டுட்டார்.

சிவப்பும் கறுப்பும் கலந்த மாதிரி ராஜ பார்வையிருந்தாலும் காலை நேரத்தில் சிவப்பாவேன்,சூரியன் மறைந்தால் கறுப்புதான் எனக்கு புடிச்ச கலர் மாதிரி இரட்டை மன கலர்

காவி!பிரம்மச்சரியத்தின் அடையாளம் என்பதை புரட்டிப் போட்டு ரத்தம் பூசிக்கொண்டும் நீண்ட நாட்களாகின்றன.

இந்திய அரசியல் வர்ணங்களே வேண்டாமென விட்டாலாச்சார்யா குகை மந்திரவாதி மண்டையோடுகளை கழுத்தில் மாட்டிக்கொள்வது மாதிரி சிவப்போடு ரத்தம் தோய்த்த நீண்ட துண்டு போட்டுக்கொண்டு லங்காவதி.முன்பு பதவி பயத்தால் சத்தம் போடாதே பக்சே என்ற அம்ஜத்கான் வந்து புடிச்சிட்டுப் போயிடுவான் என்ற பூச்சாண்டி காட்ட தலீவர் இல்லாததால் இங்கே குரல் கொடுத்தால் அங்கே அப்பாவிகளை அடிப்பான் என்று குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் ஒரு சில கதர் கலரும்.கத்துவதே இந்திய ஜனநாயகம்ன்னு நாம சொன்னா கத்திக் கத்தி என்ன பலன்? டெல்லி வரும்போது  தமிழ் தலைகள் நேரா லங்காவதிகிட்டேயே சாஷ்டாங்கமாக காலில் விழுந்து பார்க்கலாமே என  நேத்தைக்கு ஒரு அதி புத்திசாலி மூத்த பத்திரிகையாளன். போர்க்குற்றமாவது வார்க்குற்றமாவது? 

தனித்தனியா நண்டு வளையமா இருந்தாலும் இப்போதைக்கு இருக்கிற வலுவானதோ அல்லது வலுவற்றதோ ஒரே ஆப்பு தமிழ்நாட்டுலருந்து வரும் குரல்தான்.அதனையும் புடிஙகி போட்டுட்டா கேட்கறதுக்கு ஆளே இல்லை.லங்காபதி ஆடு சிங்கே ஆடுன்னா எசப்பாட்டும் சேர்ந்தே பாடுறேன்னு 13க்கு அடுத்த 14 அல்ல 13+ புகழ் பாடும் தெக்கச்சிக்கு வில்லி சுஷ்மா என்ற கட்டச்சி.இருக்குறதெல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்தான்.சில்வர் முகம் பூசிக்கொண்ட ஈயக்கம்பிகள்தான்.எதற்கும் சூரிய ஒளிப்பிரகாசமில்லை.

சூரியனே மானோடும் மயிலோடும் சக்கர நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கிட்ட போது ஓட்டுப்பிச்சைக்காக பறந்து வரும் வால் நட்சத்திர ஒளியை நம்பிப் பயனில்லையென்பதை காவி(ய) காதலனுக்கு பட்டு குஞ்சம் சுத்திகிட்ட சுஷ்மிதமாக சொல்லி விட்டார்.நமக்கு பிறந்து வீடும் சரியில்லை.ஆமைகள் புகுந்த வீடும் சரியில்லை.

.பழைய காலத்து அனுமான்  வாலோடு லங்காவுக்கு பறந்த மாதிரி நவீனமா அனுமாளுக்கு பட்டுச்சேலை கட்டி விட்டு விமானத்தில் பறக்க விட சந்தித்தேன் உன்னை நான் சந்தித்தேன்!என்னை நீ  எப்போ சந்திப்பாய் என்று சுஷ்மிதமா டூயட் பாட கிடைத்த லொகேசன் தான் சாஞ்சி.நான் சீனாவோடு சோரம் போனாலும் ராத்திரியானா என்னைக் கட்டி அணைக்கத்தான் வேண்டுமென்ற வேண்டாத பொண்டாட்டியாய் இந்தியா.

இரண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி சீனாவோடும்,இந்தியாவோடும் லங்காவுக்கு ஒரே அஜால் குஜால் குத்துப்பாட்டுத்தான்..சின்ன வீடும் பெரிய வீடும் குடுமி சண்டை போடுமா இல்ல சக்களத்திகளாகவே இருந்து சமாதானமாகிப் போகுமான்னு போக போகத்தான் தெரியும்.எப்பவும் பெரிய வீடுதான் மூக்கை சிந்திகிட்டு முகாரம் பாடும்ங்கிற குடும்ப விதிக்கேற்ப இந்தியாவும் மூக்கை சிந்துவதற்கு இப்பவே சளி பிடித்து விட்டது.இந்தியா பெரியண்ணன் என்பதை பெரியக்கான்னு மாத்தி வருடம் மூணாச்சு. சின்ன வீடு சீனா மேலதான் லங்காவதியோட கண்ணே மணியே தாலாட்டு.எப்படியோ ரெண்டு பொண்டாட்டிக்காரன் அதிர்ஷடக்காரன்தான்.பெரியக்கா பாடுதான் பார்க்க சகிக்கல.

லங்காபதியின் இந்திய வருகை சுஷ்மா தூபம் போட்டு சாஞ்சிக்கு வந்த சாபம்.

30 comments:

வவ்வால் said...

முடியலை அவ்வ் :-((

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தமிழன் வாழ்வு போல்,
மூச்சை அடைக்கிறது பதிவு .
அருமை.

வவ்வால் said...

லஜ்ஜாவதி எல்லாம் கிழவி ஆனப்பிறகும் அந்த பாட்டையே இன்னும் கேட்டுக்கிட்டு இருக்காரே :-))

இந்தப்பதிவுக்கு யாராவது கோணார் நோட்ஸ் போட்டால் எனக்கு தகவல் கொடுக்கவும்!

ராஜ நடராஜன் said...

வவ்ஜி!நீங்க அவ்வ்வ் போட்டதோடு மட்டுமல்லாமல் அந்தப் பாட்டுக்கு ஆடுன பொண்ணு கல்யாணமான ஒரே காரணத்துக்காக கெளவின்னுட்டீங்களே!

மூணு தலைப்பு போட்டும் சரியா வரல.எங்கேயோ சுருதி பிடிச்சா எங்கோ ராகம் போய் இப்படி பிள்ளையாரா வந்து குந்திகிச்சு.நானென்ன செய்ய:)

ராஜ நடராஜன் said...

@நொரண்டு!சிரிப்புக்கும் அப்பால் மனதிற்குள் எல்லோருக்கும் சோகம் அப்பிக்கொண்டுதான் இருக்கிறது.இதனை திறக்கும் வாசல் கதவு மட்டும் தெரியவில்லை.

இப்ப சிவசங்கர மேனன் ஏப்ரல் 23,2009ம் தேதி வாக்கில் அமெரிக்காவோடு சேர்ந்து இலங்கையை கட்டுப்படுத்தனுமின்னு கேபிள் சங்கரானார் என விக்கிலீக்ஸ் செய்தி விட்டதாக செய்தி.நடப்புக்களும்,அறிக்கைகளும் ஏதாவது நம்புற மாதிரியாகவா இருக்குது? இருக்குற தந்தி வதந்திகள் போதாதுன்னு தந்தி பிதாமகன் கருணாநிதி பிரணாப் சொல்லித்தானய்யா நான் மதியம் லஞ்ச் சாப்பிடவே போனேன் என்று அறிக்கை விடுகிறார்.மூணு மணி நேர உண்ணாவிரத கால கட்டத்திலிருந்து பிரணாப்பை ஜனாதிபதியாக்க முதல் சாம்பிராணி போட்ட காலம் வரையிலும்,பிரணாப் மேல் பழியை,பலியை,பல்லியை வீசும் கால கட்டத்திற்கும் பேச்சுக்கும் செயலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா?

இன்னொரு விதமாக யோசித்தால் விடுதலைப்புலிகள் மூலம் இல்லாத தடுப்புச் சுவற்றை இலங்கையையும் தடவி விட்டு தமிழகத்தையும் கிள்ளி விடுகிற இரட்டை முகத்தை மத்திய அரசு காட்டுகிறதா என்றும் கூட ஐயப்பட வைக்கிறது.

பக்சே வந்து புடுங்காமல் அசோகன் காலம் முதல் இன்று வரை சாஞ்சி என்ன தெரியாத பேராகி விட்டதா என்ன?

நேற்று செகுவாரா பற்றி கொஞ்சம் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.நம்ம மக்கள் செகுவாரா பற்றி தமிழில் என்ன சொல்கிறார்கள் என்ற கூகுள் தேடலில் வந்து விழுவதெல்லாம் ராஜபக்சே செகுவாராவின் மனைவியை சந்தித்தார் என்பதே.வெளங்கிடும் சுதந்திரமும்,மனித உரிமைகளும்:(

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
இதென்ன புது விளையாட்டு, பின் நவீனத்துவ நடையா?. வித்தியாசமாக் நன்றாகவே இருக்கிறது!.

இராஜபக்சே,இந்தியா ,சீனா என்ற முக்கோணத்துக்குள் சிறைப்பட்ட தமிழர் பிரச்சினையை எடுத்துரைத்த விதம் அருமை சகோ.

காலம் மாறும்,சூழலும் மாறும் .எதுவும் நிரந்தரம் அல்ல!!!

****
நம் சகோ வவ்வாலுக்கு கோனால் கோனார் விளக்க உரை அளிக்கிறோம்.

இப்பதிவின் சுருக்கம் இந்த ஒரு வாக்கியம் மட்டுமே!
//லங்காபதியின் இந்திய வருகை சுஷ்மா தூபம் போட்டு சாஞ்சிக்கு வந்த சாபம்.//

பாஜக தலைவி திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை [இப்போதைய] அதிபர் இராஜபக்சே இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் பவுத்த ஆய்வு மையத்தை தொடங்கி வைக்க இம்மாதம் 21 ஆம் தேதி வருகிறார்.

இதுதான் விளக்கம்!!
Buddhist Monuments at Sanchi
http://whc.unesco.org/en/list/524

நன்றி

வவ்வால் said...

ராச நடராசர்,

// கூகுள் தேடலில் வந்து விழுவதெல்லாம் ராஜபக்சே செகுவாராவின் மனைவியை சந்தித்தார் என்பதே.வெளங்கிடும் சுதந்திரமும்,மனித உரிமைகளும்:(//

இப்போ தெரியுதா கூகிளில் தேடினால் எல்லாம் கிடைக்கும்னு மக்கள் எளிதா சொல்லிட்டு போயிடுறாங்க ஆனால் தேடப்போனால் குப்பையா கிடக்குதுன்னு நான் ஒரு பலமுறை புலம்பியதன் பொருள்,

அட நீங்க வேற நான் தமிழ் நாவல் இலக்கியம்னு தேடினா ஒரே காம இலக்கியங்களா வருது , தமிழில் இத்தனை காம இலக்கிய படைப்பாளிகளான்னு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் :-))


நல்லா உழைக்கிறாய்ங்கய்யா மக்கள் ,அதிலும் பலக்கதைகள் இலங்கைத்தமிழில் இருக்கு அவ்வ் :-))

ஹி...ஹி அதெல்லாம் நான் படிக்கலை அப்படின்னு சொன்னா நம்பனும் :-))

--------

சகோ.சார்வாகன்,

மெய்யாலுமே நீர் ஞானி தான், சுருக்கமா புரிய வச்சிட்டிங்களே , ஒரு அயல்நாட்டு அதிபர் இந்தியாவில் வந்து ஏதேனும் செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டாமா? சுஷ்மா கூப்பீட்டா போதுமா?

ஒன்னும் வேண்டாம் தமிழ்நாட்டில் இருக்க ஏதேனும் இலங்கை தமிழர் முகாம் உள்லே போகணும்னு அனுமதிக்கேளுங்களேன், தமிழ்நாட்டில ஆரம்பிச்சு டெல்லி வரைக்கும் அனுமதி கேட்கணும்னு சொல்லிடுவாங்க :-))

ஹி...ஹி நான் ஒரு முறை அனுமதியே வாங்காம போய் இருக்கேன், நாளாப்பக்கமும் தொறந்து கிடக்கு , முன்பக்கம் போனால் தான் அனுமதி கேட்கணும் :-))

சுவனப் பிரியன் said...

இலங்கை வீரர்களை விரட்டுவது: இலங்கை சுற்றுலா பயணிகளை சிரமப்படுத்துவது: ராஜ பச்ஷேயை இந்தியாவுக்குள் வர விடாமல் தடுப்பது: இதெல்லாம் அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் சிரமத்தை கொடுக்காதா? என்னவோ போங்க....எல்லாமே அரசியலா போச்சு...

ஹேமா said...

என்னமோ....சந்தோஷப்படுறமாதிரி இருக்கு நடா.நல்லதா நடந்தால் எல்லாருக்குமே சந்தோஷமே.நடக்கணுமே !

சார்வாகன் said...

சகோ சுவனப்பிரியன்,

இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்க்க வேண்டும்.நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவை எதிர்க்கா விட்டால் இராஜபக்சேவின் அரசியலை ஆமோதிப்பது போல் ஆகி விடும்.

ஆனால் சாதாரண சிங்கள மக்களை எதிர்க்க அவசியம் இல்லை.

எனினும் சூழல் மாறும் என்றே எதிர்பார்ப்போம்!

நன்றி

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்.நான் நீட்டி முழக்கி நண்பர் வவ்வாலுக்கு சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க!

ஆனாலும் அவர் விடற பாடா தெரியல!அவர்கிட்டேயே மோதிக்கிறேன்:)நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!வழக்கமா என்னைத்தான் காலை வாரி விடுவீங்க!முதல் தடவையா உங்கள் பின்னூட்ட சறுக்கலை காண்கிறேன்.என்னமோ சுஷ்மாவே விமான டிக்கெட்டுக்கு புக் பண்ணி போய் ராஜ பக்சேவை சந்தித்து விட்டு வந்த மாதிரி மத்திய அரசு அனுமதி இல்லாமல் எப்படி சுஷ்மா பக்சேவை வரவேற்க முடியும்ன்னு கேள்வி போடுறீங்க.எல்லாமே புரோட்டக்கல் படிதான் நடக்கும்.நாளை மன்மோகன் சிங்கும் ராஜபக்சேவும் சந்திப்பு ன்னு சொன்னா அதன் பின்புலத்தில் பீரோகிரஸி கடிதப் போக்கு வரத்து,சம்மதம்,முகூர்த்த தேதி,சனிப்பெயர்ச்சி,ராகுல் காலமெல்லாம் கணக்கிட்டே நடைபெறும்.

இன்னும் எதுக்கு நீட்டி முழக்கிட்டு.மத்திய அரசின் அனுமதியுடன் தான் இந்த வைபோகம் நிகழ்கிறது.போதுமா?

ராஜ நடராஜன் said...

வவ்வால்!தமிழில் ஒரு சொற்பிரயோகத்துக்கான தேடலுக்கு கூகிளுக்குப் போனால் அது நம்மை எங்கோயோ கொண்டு போய் விடுகிறது என்பது உண்மைதான்.தேடு சொற்பொருள் தமிழில் மிகவும் குறைவு என்பதால் மறுபடியும் நாம் ஆங்கிலத்துக்கே ஓட வேண்டியிருக்குது.நம்மாளுகளுக்கு காம இலக்கியங்களுக்கெல்லாம் எப்படி நேரமிருக்கிறதோ தெரியவில்லை.ஏதோ பள்ளி விடலைகளுக்கு பொதுச்சேவை செய்யனுமிங்கிற பொது தொண்டாக இருக்குமோ?பின்னூட்டம் ரூட் மாறிப்போகிற மாதிரி தெரிந்தாலும் இங்கே நீங்க ஆரம்பிச்சு வைத்து விட்டதால் இதனைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.தமிழர்கள் பாலியல் வரட்சியாளர்கள் (Sex starvation) என்பதை விட பாலியல் வாயாளர்கள் (Oral sex) எனலாம்.இதனை யதார்த்தமென்று பதிவுகளில் உச்சரிக்கும் த்தா வாகட்டும் (ஜாக்கி எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்:))பாடல் வரிகளின் வர்ணனைகளாகட்டும்,நகைச்சுவையென இரட்டை அர்த்தங்களாகட்டும் எங்கும் எதிலும் நிறைந்தே காணப்படுகிறது.

ஊருக்கு வந்த புண்ணியத்துக்கு சென்னை புழல் முகாமுக்கு போய் ஏதாவது உணவுப்பண்டங்கள் உதவி செய்வோமேன்னு நினைத்தால் நீங்க சொன்ன மாதிரிதான் இங்கே அனுமதி சீட்டு,கட்சி சிபாரிசுன்னு ஏகப்பட்ட தடைகளை இங்கேயே வைத்திருக்கிறோம்.இவையெல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை.இங்கேயே குடியுரிமை கொடுத்து விடலாமென்று ஒரு கட்சியும்,அவங்க பூர்வீக சொத்துக்கள் இலங்கையில் இருக்கிறது.எனவே திருப்பி அனுப்ப வேண்டுமென்று இன்னொரு கட்சியும் அறிக்கைகள் விடுவதில் கூட எது சரியென்ற சந்தேகங்களும் விவாதங்களும் வருகின்றன.இவர்களுக்கான மறுவாழ்வும்,இலங்கையில் சமமாக வாழும் அரசியல் சட்ட திருத்தங்கள் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!மேம்போக்காக பார்த்தால் ராஜபக்சேவுக்கான எதிர்ப்புக்குரல் அவருக்கு இன்னும் கோபத்தையே தூண்டும் என்று தோன்றினாலும் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்கள் என்றும் கூறலாமல்லவா?

அருகில் உள்ள நாடுகள் நட்புறவோடு இருப்பதுதான் இரு நாட்டுக்கும் நல்லது.ஆனால் தமிழ்நாட்டில் பகை உணர்ச்சி வளர்வதற்கு யார் காரணம்?நட்புறவோடு மத்திய அரசுடன் இணைந்தே செயல்படத் தவறியதும் சீனாவின் நட்பு என புதிய உலக அரசியல் களத்தை ஏற்படுத்துவதும் யாருடைய தவறு?

நாம் கேட்பதெல்லாம் தமிழர்களையும் சம உரிமையுடைவர்களாக அரசியல் சாசனம் செய் என்பதே.இதை செய்வதில் சிரமங்கள்,விருப்பமின்மை,சிங்கள மேலாண்மை,பிக்குகளின் எதிர்ப்பு என பல பிரச்சினைகள் இருந்தாலும் இதனை மீறி செயல்படுபவனே சரியான ஸ்டேட்ஸ்மேனாக இருக்க முடியும்.

சம உரிமை சாசனம் தமிழர் கோரிக்கையாக இருந்தாலும் அதற்கான தூரம் இன்னும் அதிகமென்றாலும் கூட இந்திய திட்டம் 13 என்ன ஆச்சு?13 மட்டுமல்ல பிளஸ் போட்டே தருவேன் என்ற சுஷ்மாவிடம் சொன்ன உறுதிமொழி என்னவாச்சு?தீர்வுக்கான ஏதாவது அறிகுறி இலங்கை அரசிடம் தென்படுகிறதா?

ராஜ நடராஜன் said...

ஹேமா!முந்தா நாள் பிங் பாங்க் அரசியல் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.லங்காபதி மீன் பிடிக்க ஆழம் பார்க்கும் அரசியலையே நடத்துகின்றார்.தீர்வுக்கான வழிகளை சிந்திப்பதாக தெரியவில்லை.நாலுபக்கம் கடலோடு ஒற்றைப் பிரச்சினையை வைத்துக்கொண்டு தீர்வுக்கு வழி தெரியலைன்னா அமெரிக்காவுக்கு பக்கத்திலிருந்து கொண்டு கியூபா,அர்ஜெண்டினா,பொலிவியா,சிலி,வெனிஸ்வேலா லத்தின் அமெரிக்க நாடுகள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டி வரும்?

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!முந்தைய கால கட்டங்களில் விடுதலைப்புலிகள்,சிங்களவர்கள் என்ற நிலை மாறி இப்பொழுது தமிழர்கள்,சிங்களவர்கள் என்ற புதிய வெறுப்பை இந்தியாவும்,இலங்கையும் தூண்டி விடுகின்றன.இது மிகவும் ஆபத்தான போக்காக இருந்தாலும் இதற்கான அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க இருநாடுகளும் முயற்சி செய்யாமல் தெற்காசிய கடல் பிராந்திய ஆளுமை என்ற நிலையிலேயே பிரச்சினை நீண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள்.

சாதாரண சிங்கள மக்கள் நட்புடையவர்களாகவே காணப்படுகிறார்கள்.பகைமைக்கான தூபம் போடுபவர்கள் சிங்கள பேரினவாத ஐடியாலிஸ்ட்டுகளும்,புத்த பிக்குகளும்,அரசியல் வாதிகளுமே.

தீர்வுகளுக்கான வழிகள் உருவாகும் போது இரு கடல் தாண்டி நட்பு கொள்வதில் பிரச்சினை என்ன இருக்க முடியும்.ஆனால் நீண்ட ரணமாக திசைகள் மாறிச் செல்கிறதே என்பதுவே நம் கவலை.

ஆனந்தி.. said...

////வவ்வால் :இந்தப்பதிவுக்கு யாராவது கோணார் நோட்ஸ் போட்டால் எனக்கு தகவல் கொடுக்கவும்!//

எனக்கென்னவோ இந்த பதிவு..முன்,பின் ,குறுக்கு,நெடுக்கு,வட்டம்,சதுரம் நவீனத்துவ பதிவு மாதிரி தான் தோணுது...ராஜநடராஜன் சார்...சீக்கிரம் இதை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுங்க..:-)) //

ராஜ நடராஜன் said...

ஆனந்தி!வணக்கம்.

நண்பர் வவ்வால் எப்பொழுதுமே கான்டக்ஸில் பேசுமய்யான்னு சொல்லிகிட்டிருப்பார்.இப்பத்தான் தெரிகிறது கான்டக்ஸுக்கு மறுபெயர் பின்நவீனத்துவம்ன்னு:)

இந்த பதிவு முகமூடின்னுதான் ஆரம்பிச்சேன்.ஆனால் நம்மளை விட முகமூடி போட்டுகிட்டு அரசியல்வாதிகள் ஆட்டம் போடுவதெல்லாம் நினைவுக்கு வந்தவுடன் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்குப் போனாங்களே,13+ பக்சே தருவார்ன்னு அறிக்கை விட்டாங்களே என்னாச்சுன்னு பார்த்தால் நவீன அசோக சக்ரவர்த்தியே ராஜபக்சேதான்னு சாஞ்சிக்கு அழைக்கிறாங்களாம்.

சாஞ்சிக்கும் ராஜபக்சேவுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதான்னு பார்த்தால் "ரத்தம்" சம்பந்தம் மட்டுமே இருக்கிறது.

ஆனந்தி.. said...

தலாய்லாமாவையும் ராஜபக்ஷேக்கு பேச்சு துணைக்கு கூப்ட்டு இருக்கலாம் சுஷ்மாக்கா...:-)

ஆனந்தி.. said...

/சாஞ்சிக்கும் ராஜபக்சேவுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதான்னு பார்த்தால் "ரத்தம்" சம்பந்தம் மட்டுமே இருக்கிறது./
இதுல ஏதாவது பூர்வ ஜென்ம வரலாறு இருக்கலாம் நடராஜன் சார்:-) அந்த கால பாட்னாக்கும்,இலங்கைக்கும் அசோகர் சம்பந்தபடுத்தி வச்ச போது, சுஷ்மா அக்காவும் மத்யப்ரதேஷ்க்கும்,இலங்கைக்கும் ஏன் செய்ய கூடாதுன்கிறேன்..;-))

வவ்வால் said...

ராச நடை,

//முதல் தடவையா உங்கள் பின்னூட்ட சறுக்கலை காண்கிறேன்.என்னமோ சுஷ்மாவே விமான டிக்கெட்டுக்கு புக் பண்ணி போய் ராஜ பக்சேவை சந்தித்து விட்டு வந்த மாதிரி மத்திய அரசு அனுமதி இல்லாமல் எப்படி சுஷ்மா பக்சேவை வரவேற்க முடியும்ன்னு கேள்வி போடுறீங்க.//

உங்கக்கிட்டே பல முறை சறுக்கலைப்பார்த்தாச்சு :-))

ஒன்னு புரியிற மாதிரி எழுதி இருக்கணும் , இல்லை ,நீங்கதை இப்படி புரிஞ்சிக்கிட்டாங்கன்னு எடுத்துக்கணும் ,ரெண்டும் இல்லை ,சறுக்கலாம் :-))

#முன்னர் இலங்கைக்கு சென்ற நாடாளுமன்றக்கூட்டு குழுவின் தலைவி சுஷ்மா அப்போது ஏற்பட்ட தனிப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவே இது.

#தமிழனை தமிழன் பார்க்கவே 1000 விதி சொல்லும் மத்திய அரசு, எதிர்க்கட்சி தலைவி அழைத்து பிரச்சினைக்குரிய ரஜபக்சே வருகிறார் என்பதை மிக நட்புறவாக அனுமதிப்பது ஏன் என்பதே நான் கேட்டதில் இருக்கும் கேள்வி?

#அப்படியானால் எதிர்கட்சியும் ,ஆளுங்கட்சியும் சும்மாச்சிக்கும் ஒருத்தர் குடுமியை ,ஒருத்தர் பிடிக்கிறாங்க,ஆனால் சில விடயங்களில் கூட்டுக்களவாணிகள் என்பதே நான் சொல்ல வந்தது.

எதிர்க்கட்சியின் ஏற்பாடு என்பதால் மறுத்திருக்கலாம், அல்லது இலங்கையின் அதிபர் ,தமிழர் பிரச்சினையை முன்னிட்டு மறுத்திருக்கலாம், இப்படி இரண்டுக்காரணம் இருந்தும்
மத்திய அரசு அனுமதி மறுக்கவில்லை எனும் போது ,மத்தியில் ஆட்சிமாறினாலும் இலங்கைப்பிரச்சினையை தீர்க்க உதவப்போவதில்லை.

நீங்கள் பத்திரிக்கைகள் அதிகம் படிக்கவில்லை ந்ன நினைக்கிறேன்,கொஞ்ச நாட்களுக்கு முன் பி.ஜேபி மாநில மாநாடு தமிழகத்தில் நடத்தியது அப்போது சுஷ்மா எல்லாம் கலந்துக்கொண்டு இலங்கை தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்க வைப்போம், பிஜே.பி ஆட்சியில் இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என முழங்கினார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு படி மேலே போய் இலங்கை தமிழர்கள் சுஷ்மாவை ஒரு தமிழச்சியாக பார்க்கிறார்கள் என புகழ்ந்தார்.

காங்கிரஸும் செய்யாது, பிஜே.பியும் செய்யாது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது, மேலும்,காங்க், பிஜேபி எல்லாம் இணக்கமாகவே இருக்கின்றன, ஆனால் மீடியாவுக்கு தான் எதிர்க்கட்சிகள் :-))

மஞ்சத்துண்டு வழக்கம் போல குடும்பத்தினை காப்பாற்றிக்கொள்ளவே குட்டிக்கரணம் அடிக்கிறார், அம்மையாருக்கு எல்லாம் லேட்டாகத்தான் தெரியும்.


புரியிறாப்போலவும்,சரியா "புள்ளியை" தொடுவதாகவும் எழுதினால் நன்றாக இருக்கும்.

நான் சார்வாகன் பொழிப்புரை வச்சே புரிந்துக்கொண்டேன், எழுதின உங்களுக்கே என்ன பேசினோம்னு குழப்பம் போல :-))

ராஜ நடராஜன் said...

//தலாய்லாமாவையும் ராஜபக்ஷேக்கு பேச்சு துணைக்கு கூப்ட்டு இருக்கலாம் சுஷ்மாக்கா...:-) //

ஆனந்தி!நான் பிரதமரானால் நீங்கதான் வெளியுறவுத்துறை அமைச்சர்:)பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்,ஆலோசகர்களுக்கும் கூட இந்த மாதிரி இலங்கை,சீனாவின் உறவை உடைக்கும் அதிபுத்திசாலித்தன ஐடியா வந்திருக்காது:)

சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் ஆகாது.தலாய் லாமாவும்,ராஜபக்சேவும் புத்த வழிபாட்டாளர்கள்.ஆகா!ஆகா!நல்ல காம்பினேசன் போங்க!

ராஜ நடராஜன் said...

ஆனந்தி!சுஷ்மாக்கா இந்துத்வாவாதி என்பதால் இலங்கையில் வட கிழக்கு தமிழர்கள் இந்து பாரம்பரியத்தை பேணுவதின் அடிப்படையில் ஏதாவது நன்மை செய்யலாம்.அதை விட்டுப்புட்டு ராஜபக்சேவுக்கும்,அசோகனுக்கும் ம.பிக்கும்,லங்காவுக்கும் தொடர்பு படுத்தினாலும் கூட அசோகன் மாதிரி திருந்துன கேசா ராஜபக்சே இருந்தாலும் கூட பரவாயில்லை.ஏதோ பூர்வ ஜென்ம தொடர்புன்னு கூட சம்பந்தப்படுத்தலாம்.

மண் சார்ந்து சரித்திரம் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் மீண்டும் உதிக்கும்.

எந்த ஒரு அரசுக்கும் புரட்சியை தடுக்கும் உரிமை உண்டு.ஆனால் பொதுமக்களை இனப்படுகொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

இந்தாளு இந்திய இலங்கை வரலாற்றுப் பிழை.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!என்னைக் குட்டாமல் இருந்தால் உங்களுக்கு பொழுது போகாதே:)

மஞ்சத்துண்டுக்கு மஞ்சளடிச்சுருக்குது பதிவில்.அம்மையாருக்கு காலையில ஒரு கலர் மாலையில் ஒரு கலர்ன்னு சொல்லியாச்சு.கோனார் நோட்ஸின் ஒரு பகுதி இது.மிச்சத்தைத்தான் சகோ.சார்வாகன் நோட்ஸ் போட்டுட்டாரே!

அடுத்த ஆட்சிக்கட்டில் காங்கிரஸ்க்கு இல்லைன்னு இப்பவே ஜோஸ்யம் சொல்லிடலாம்.மன்மோகன் சிங் எப்படா ஆளை விடுவாங்கன்னு காத்துகிட்டிருக்கார்.ராகுல் வருவதற்கு சகுனம் பார்த்துகிட்டிருக்காங்க.ஆனால் அடுத்த முறை ஊத்திக்குமே என்பது இப்பவே தெரிவதால் ராகுலுக்கும் தயக்கம்.

பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கை வகுத்தாச்சு என்பது முன்பு வெங்கட நாயுடு பேட்டி கொடுக்கும் போதே தெரிந்த விசயம்தான்.இருந்தாலும் காலியா கிடக்கும் தமிழக பிஜேபிக்கு வேண்டியாவது ஏதாவது தீர்வுக்கான வழிகள் சொல்வார்களென்று பார்த்தால் அதுவும் ஏமாற்றமே.

சினிமா பார்த்தா செய்தி படிக்கமாட்டேன்னு யார் உங்களுக்கு வத்தி வச்சது:)அதுதான் இணையம் முழுவதும் செய்திகளாகவே இருக்குது.ஒரு டீ போடப்பான்னு சொல்லி விட்டு பெஞ்சுல செய்தி படிச்சாத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதெல்லாம் தெரியும்ன்னு சொல்லுவீங்க போல இருக்குதே:)

காங்கிரஸும்,பிஜேபியும் சண்டை போடுறாங்களான்னு இல்லை நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகுற மாதிரி அழுன்னு நடிக்கிறாங்களான்னு தெரியல.ஆனால் கூட்டுக்களவாணிகள் என்பதற்கு உதாரணமாக முலாயம் சிங் ஒரு முறை ஒரு தேசிய இக்கட்டு (National crisis) எப்படி தவிர்க்கப்பட்டது என்பதை பத்திரிகைக்கு ஒன்றை சொல்லி பேட்டி கொடுத்து விட்டு காங்கிரஸ்க்கு வாக்களித்தது என்று சொன்னார்.அதை விட பத்திரிகைக்கு என்ன சொல்லனும்ன்னு புது நோட்ஸே கனியக்கா இப்ப போட்டிருக்காங்க என்பதால் கூட்டுக்களவானிகள் என்பதெல்லாம் பலருக்கும் இப்ப அரசியல் பால பாடம்.வேணுமின்னா களவானி!ஏய் களவானின்னு புதுப்பாடல் பாட வைக்கலாம்:)

//எதிர்க்கட்சியின் ஏற்பாடு என்பதால் மறுத்திருக்கலாம், அல்லது இலங்கையின் அதிபர் ,தமிழர் பிரச்சினையை முன்னிட்டு மறுத்திருக்கலாம், இப்படி இரண்டுக்காரணம் இருந்தும்
மத்திய அரசு அனுமதி மறுக்கவில்லை //

நீங்க சொன்ன மற்ற விகுதிகளை இப்போதைக்கு விட்டு விட்டு அடைப்பானை மட்டும் கொஞ்சம் அலசுவோம்.இது ஒரு நல்ல உற்றுநோக்கல் என்பதால் உங்களுக்கு ஒரு சபாஷ்!பலே!பலே!

எனக்கு என்னமோ அடைப்பானுக்கு உங்க தலைகீழ் விகித பார்வைதான் சரியா வரும்போல இருக்குது.தமிழகத்தின் பல தரப்பிலிருந்தும் இலங்கை அரசுக்கான எதிர்ப்புக்குரல்கள் வருகின்றன.அப்படியிருந்தும் மத்திய அரசு இலங்கை அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்குற மாதிரி ஏன் பிலிம் காட்டுகிறது?மத்திய அரசு மொத்த இந்திய பார்வையில் செயல்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட வாலும் தலையும் காட்டுற இரட்டைக்கொள்கை (Double headed policy)பின்பற்றுகிறதென்பதே உண்மை.

முந்தைய கால கட்டத்தில் தமிழர்,சிங்களவர்கள் வேறுபாடு இலங்கையை சார்ந்த ஒன்றாக இருந்தது போக இப்பொழுது இந்தியா,இலங்கை என நீள்கிறது.இந்த வேறுபாட்டை இந்தியா நீர் ஊற்றி வளர்க்கிறதென்றே தோன்றுகிறது,அடைப்பானுக்குரிய விடை இதுவாகத்தான் இருக்க முடியும்.

ராஜ நடராஜன் said...

வவ்வால் பொழிப்புரை போடறதுக்கெல்லாம் நேரமில்லை.

மேய்ச்சலில் B.Raman சொன்னதாக ரீடிஃப்ல் கிடைத்தது.இன்னுமொரு அலசல்.

http://www.rediff.com/news/column/sri-lanka-and-tamil-nadu-a-messy-situation/20120905.htm

naren said...

பாஸ் ரா.ந.

பதிவு, “வாசகர் வட்டத்தின்” தாக்கம் இருப்பதால்,பாதி புரிந்தது

//லங்காபதியின் இந்திய வருகை சுஷ்மா தூபம் போட்டு சாஞ்சிக்கு வந்த சாபம்//

இதற்கு யார் காரணம் என்று பார்க்கவேண்டும். நமது உலக வரலாற்றில் இடம்பெறப்போகும் தமிழக அரசியல் தலைவர்கள் தான் காரணம்.

இந்திய அரசாங்கம், அரசாங்க இயந்திரம், மக்கள் எல்லாம் ஈழதமிழர்களின் மீது அக்கறை காட்டாதபோது, அதை களைய நமது தலைவர்கள் முயற்ச்சிக்கவில்லை. ஏதோ கல்லூரி முதல்வரை எதிர்த்து ஸ்டிரைக் செய்வதை போல கோரிக்கைகளை வைகிறார்கள், ஏனோ கல்லூரியே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்பதை மறந்துவிட்டு.

தலைவர் என்பவர், தலைமை தகுதிக்கான அனைத்தையும் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக நிதர்சன அரசியல் (real politics) செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஈழப் போரில் சோனியா காந்தி வாழ்க என கோஷம் போட மனமிருக்கும் போது, அந்த காந்தி நம்பளை காப்பாற்ற மாட்டாள் என்று அப்பட்டமாக தெரிந்தபோது, மாற்று என்னவிருக்கோ அதை சிநேகிதம் செய்ய வேண்டும். அவர்களிடம் நட்பு பாராட்டி, லாப்பி செய்திருக்க வேண்டும். அவர்களை பின்பற்ற வேண்டும் ஆதரிக்க வேண்டும் என்பதல்ல, நமது காரியத்திற்கு அவர்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இது இராஜபக்சேவிற்கு தெரிந்திருக்கிறது. ஓரே நோக்கு ஈழப் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இருக்கின்ற நிலையில் அவ்வாறு செய்வதில் தப்பில்லை. ஆனால், இந்துத்வவாதிகள் என்று சொல்லி அவர்களிடம் அண்டாமல் இருந்தால், இந்துத்வாதிகளின் பரம எதிரியான புத்தமே காக்கா பிடித்து சாஞ்சி வரை வந்து விட்டது.

இந்துதுவவாதிகளுக்கு தமிழகத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிருக்கும்போது, யார் நண்பர்களாக அவர்களை குஷிப்படுத்த முனைவார்கள். இது காங்கிரசுக்கு ஒரு எதிர் சக்தியாகவே இருந்திருக்கும்.

ராஜபக்சேவிற்கு தெரிந்த வித்தைகள், நமது அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இதை பற்றி முழுபதிவு டிராப்டில் இருக்கிறது பதிவிட்டவுடன் உங்களுக்கு தூது அனுப்புகிறேன்.

நன்றி

வவ்வால் said...

//பதிவு, “வாசகர் வட்டத்தின்” தாக்கம் இருப்பதால்,பாதி புரிந்தது
//

நரேன்,

என்னய்யா பாதி தான் புரியுது சொல்றீர்?

ரொம்ப சறுக்கிட்டீர் - நடராஜர் சொல்வார் :-))


உண்மையில நீர் சொன்ன அரசியல் கடுப்பு தான் எனக்கும்.

சுஷ்மா தமிழச்சி ,பிஜே.பீ இருந்தா காப்பத்தி இருக்கும்னு பொன்.ராதால்கிருஷ்ணன் சொன்னது எனக்கு நினைவில் இருந்ததால் படிக்கும் போதே கடுப்பானேன்.

ராச நடைக்கு பதிவு போடும் போது பொன்.ராதா சொன்னது நினைவிலே இல்லை ,நான் சொன்னதும் ஆமாம் சொல்லிக்கிட்டு.

இதில இவரு
எழுதினதை சொல்லிட்ட்டா கொட்டிட்டாங்கன்னு , மஞ்சத்துண்டு போலவே சொல்றார் :-))

மத்தியில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்ற நம்பிக்கையும் அவுட் ஆனது தான் இப்போதைய நிகழ்வுகள்.

எனவே இனிமேல் புதிதாக ஒரு சூப்பர் ஹீரொ அரசியல்வாதி வரணும் ,அப்போ தான் எல்லா பிரச்சினையும் தீரும்(எவனாவது ராகுல் காந்தின்னு சொன்னா தேடி வந்து உதைப்பேன்)

சரி ரொம்ப பேசியாச்சு ... இனிமே இந்த சப்ஜெக்ட்ல பேசவே போறதில்லை.

ராஜ நடராஜன் said...

நரேன்!வணக்கம்.நீங்க முன்னொரு முறையே டீ குடிக்க வந்திருந்தும் சூட்டின் உக்கிரத்தில் கவனிக்காமல் இருந்து விட்டேன்.மன்னிக்கவும்.

அதென்ன வாசகர் வட்டம்!நாம் கிடைக்கிற இடத்துலேயெல்லாம் புல் மேய்ற ஆளுங்க!
உங்களைப்போல்,சகோ.சார்வாகன்,வவ்வால் போல் கிடைச்ச பக்கம் பேந்தா ஆடுறதோட சரி.

தமிழக அரசியல் உலக வரலாறு சொல்லி சொல்லி மாய்ந்ததுதான் மிச்சம்.ஸ்டேட்ஸ்மென்ஷிப் என்பது கலைஞருக்குமில்லை.ஆளும் ஜெயலலிதாவுக்குமில்லை.எல்லாம் பங்காளி சண்டை பிரியர்கள்.முதல் கோணல் முள்ளிவாய்க்கால் காலத்தில் கருணாநிதி ஆடிய இரட்டை வேடம்.இன்றைக்கு என்.ராம் கூட மத்திய அரசோடு மாநில அரசும் இணங்கி செயல்பட்டது என கருணாநிதியின் ஆட்சிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சர்டிபிகேட் தருகிறார்.

போராட்ட குணம் தி.மு.கவின் ஆட்சியில் கல்லூரிகளை மூடியதும்,நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை ஏவிவிட்டதிலும்,முத்துக்குமாரின் மரண திசை திருப்பலிலும் மரணித்து விட்டன.

தமிழக அரசியல் மிகக்குழப்பமான, கோபத்தை வெளிப்படுத்தும் சூழலில் மட்டுமே இருக்கிறது.

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராகவும் விமர்சனங்கள் இருந்த போதிலும் இந்தியாவைப் பொறுத்த வரையில் காய் நகர்த்தலை இலங்கை நலன் சார்ந்து சரியாகவே செயல்படுகிறார்.

இந்துத்வா சமணத்தை தழுவிக்கொண்டது என்ற உங்கள் கருத்து ஒரு புதிய கண்ணோட்டம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்வால் என்னை கொட்டுவதில் உங்களுக்கு அப்படி என்ன சுகமோ:)

நீங்க சொல்ற மாதிரி எப்படியாவது பித்தம் தெளியாதான்னு ஏறாத மலையில்லை,கும்பிடாத சாமியில்லைன்னு சொல்ற மாதிரி ஐ.நா மனித உரிமையினால் பித்தம் தெளியுமா இல்ல சுஷ்மாதான் ஓரளவுக்கு இலங்கைப் பிரச்சினை தெரிந்தவர்ன்னு ஐஸ் வச்சா பித்தம் தெளியுமா அதுவுமில்லாட்டி பெருசு போற காலத்துக்காவது புண்ணியம் தேடிகிட்டுப் போகனும்ன்னு டெசோ மூலமாவது திருஷ்டி கழியுமான்னு எல்லாமே வாழ்க்கையின் நம்பிக்கைதான்.

இருப்பதெல்லாம் போலிச்சாமியார்களாய் இருப்பதற்கு பக்தன் என்ன செய்வானய்யா:)

ராஜ நடராஜன் said...

வவ்ஜி!போடறதெல்லாம் சண்டை.பார்க்கிறதெல்லாம் ஜொள்ளு படம்.உருப்படியா செய்றதென்னமோ அறிவியல் பதிவுகள்தான்.மீறிப்போனா இந்த மாதிரி பதிவுகளுக்கான பின்னூட்டம்.இதுல இனிமே இந்த சப்ஜெக்ட்ல பேசவே போறதில்லைன்னு பிகு வேற:)