Followers

Friday, April 18, 2014

இந்திய தேர்தல் களம் 2014

ஆளும் கட்சியின் பலவீனங்களே எதிர்கட்சியின் பலம் என்பதை தி.மு.கவின் தோல்வியும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததைப் போல் காங்கிரஸின் பலவீனங்களே பி.ஜே.பியின் பலமாக இந்திய தேர்தல் களம் 2014 அமைய்ப் போகிறது.

ஆலமரமாக வளர்ந்து விட்ட இந்திய ஜனநாயகம் மோடியின் ஐந்து வருட ஆட்சியால் வீழ்ந்து விடப் போவதில்லை.மாறாக இந்திய ஜனநாயக்ம் தன்னை மீண்டுமொரு முறை புதுப்பித்துக்கொள்ளும் இன்னுமொரு சந்தர்ப்பமே.முன்பு ஐந்து வருட ஆட்சியின் மறுபடியும் தொடர் ஆட்சியால் மட்டுமே இந்திய மக்களுக்கு தொடர் பலன் கிட்டும் என்ற பொய்யுரையை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.மோடியையும் ஐந்தாவது ஆண்டில் ஓய்வெடுக்க சொல்லலாம்.

மதச்சார்பையின்மை என்ற போர்வையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தங்களது சுயநலங்களை உள்வைக்கின்றன.கோத்ரா கலவரங்களுக்குப் பின் குஜராத்தில் வேறு மத கலவரங்கள் ஏதும் நிகழாதபடி மோடி ஆட்சி செய்துள்ளதாலும் தனது தவறை உணர்ந்து நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையை முன்வைக்கலாம்.அதற்கு பதிலாக வெறுப்புணர்ச்சியை மட்டுமே தூண்டி விடுவதால் குளிர் காயப் போவது அரசியல் கட்சிகள் மட்டுமே.மோடி ஆட்சிக்கு வருவதால் மோடி மஸ்தானாக மாறி இந்தியாவின் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார் என்ற சொப்பனத்தையும் மறபோமாக!

சவுக்கு தளத்தில் ஜாப்ர்சேட் அவர்கள் மன்னராட்சிதான் மேடம் என்ற சொம்படிக்கு இந்திய ஜனநாய்கத்தில் மன்னராட்சி முறைக்கு தற்காலிக விடுமுறை மட்டுமே.கம்யூனிஸ்ட்டுகள் குதிரை ஏறுவதை எப்போதோ தவிர்த்திருக்கலாம்.உண்டி எடுத்தே பணம் வளர்த்தேன் என்பவர்களுக்கு மாறாக உண்டி எடுத்தும் கட்சி வளர்க்கலாம்.முயற்சி செய்யுங்கள்.வங்காளம் தன்னை வளர்த்துக்கொள்ள வில்லையா? இப்ப மம்தா என்பவர்களுக்கு வங்காளத்துக்கும் ஒரு மாற்ற்ம வேண்டாமா?

ஊர் வம்படிக்க நேரமில்லாததாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லாததாலும் இத்தோடு முடிக்கலாம் என்று நினைக்கும் போது ஜாக்கிசேகரின் அப்பாவித்தனமான பஞ்சம் பொளக்கப்போனவங்களுக்கெல்லாம் ஓட்டு கூடாது என்ற பதிவு நினைவுக்கு வந்தது.
சாம் மார்த்தாண்டன்! இந்த பச்ச புள்ளைகிட்டயா கிள்ளி விளையாடுறீங்க:)

10 comments:

வவ்வால் said...

கைப்புள்ள பதிவுப்போட்டு கிளம்பிட்டார் இன்னிக்கு எத்தனைப்பேரை கலாய்க்க போறாரோ அவ்வ்!

# ரத்தம் குடிக்கும் வளைகுடா இந்துத்வா வெறியன் என பங்காளி முதல் சுபி.சுவாமிகள் வரையில் படை எடுத்து வரப்போறாங்க :-))

# ஏயப்பா எல்லாம் நல்லாப்பார்த்துக்குங்க நான் நட்ட நடு சென்டர் ,அதனால எம்பக்கம் யாரும் வரப்படாது சொல்லிட்டேன் அவ்வ்!

பழமைபேசி said...

2014ஆம் ஆண்டின் முதல் பதிவு. வாழ்த்துகள்.

குட்டிபிசாசு said...

மோடி ஆதரவா! போச்சு போங்க! நான் வரல இந்த விளையாட்டுக்கு.

வருண் said...

வாழ்க மோடி!

வாழ்க நடராசன்!

ஜெய்ஹிந்த்!

நாட்: ஒரு வருடத்துக்கு அப்புறம் நாலு பத்தி எழுதி இருக்கீங்க. இதுல அப்பாவி சாக்கி, அப்புறம் அனானிமஸ் ஜெட்லி.. அட அட அடா!

Nat said...

வவ்வால்!தீர்க்கதரிசி நீங்க:)பட்டும் படாமலே விட்டுடறேன்!

ரத்தம் பார்த்தால் மட்டுமல்ல சத்தம் கேட்டாலே எனக்கு பயம்.இதெல்லாம் நீங்க சொல்ற மாதிரி கைப்புள்ள பில்டப்தான்.

குட்டிப்பிசாசுக்கு பதில் சொல்லிட்டு வாரேன்!


Nat said...

பழம!நலமாக இருக்கிறீர்களா?தொழில் முனைவு.பதிவுகளுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.

Nat said...

குட்டிபிசாசு!நானே இரண்டு திராவிட கழகங்களும் அடிச்சு புரண்டுகிட்டு பிஜேபிக்கு தமிழகத்தில் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்துட்டாங்களேன்னு விசனத்துல இருக்குறேன்.

யதார்த்தங்களை மட்டும் தொட்டிருக்கிறேன்.பிரணாப் முகர்ஜி கூடத்தான் ஜனாதிபதியாக கூடாதுன்னு பதிவு போட்டேன்.நம்ம நினைக்கிற மாதிரியா நடக்குது.

மோடி வரக்கூடாதுன்னு நினைச்சாலும் மாற்றாக யாரை முன்வைக்கிறீர்கள்?

எனது நிலைப்பாடு இந்திய அளவிலும்,தமிழகத்திலும் மன்னராட்சி முறை வரக்கூடாது என்பதுதான்.இருந்தாலும் ஜெயலலிதா தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் மனபாவம், முக்கியமாக வாய்தா வாங்கியே காலம் ஓட்டும் வாய்ப்புக்கள் இறுதிக்கு வரும் நிலை ,ஆட்டத்தை குழப்பி போட்டு ஆடும் பிஜேபி கூட்டணிகள் தமிழகத்தில் மன்னராட்சி முறையையும்,ஒரு வேளை மோடி செய்யும் குழறுபடிகள் ராகுலுக்கும்,பிரியங்காவுக்கும் மன்னராட்சி சான்றிதழை தரப்போகிறது.

Nat said...

வாங்க வருண்!நலமா?நாலே வரிதான் சொல்லனுமின்னு வந்தேன்.ஆனால் என் கண்ணூக்கு இதுவே உண்மைத்தமிழன் பதிவு மாதிரிதான் தெரியுது:)

முன்னாடி ஜெயலலிதாவுக்கு காவடி தூக்குபவன்னு நீங்களே சொப்பனம் கண்டீர்கள்.கூடவே ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே ஒரு முறை இந்துத்வா பட்டம் வேற.பெயர்ச்சொல்லுக்கும் அப்பால் ஒரு மனிதன் யோசிக்க மாட்டானோ?

ஓட்டுப்போட முடியலைங்கிற அங்கலாய்ப்புல பதிவு போட்டிருக்கேன்.போற போது ஜாக்கியோட அப்பாவித்தனம் நினைவுக்கு வந்தது.

எரிமலை ஒன்று புறப்பட்டதேன்னு உங்க மாதிரியெல்லாம் எனக்கு பாட வராது:)

வருண் said...

****முன்னாடி ஜெயலலிதாவுக்கு காவடி தூக்குபவன்னு நீங்களே சொப்பனம் கண்டீர்கள்.கூடவே ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே ஒரு முறை இந்துத்வா பட்டம் வேற***

நாட்:

* நீங்க ஜெயலலிதாவுக்கு காவடி தூக்கியது கனவெல்லாம் இல்லை உண்மை. அதை சொல்ல ஏன் தயங்கிறீங்கனு தெரிய்லை.

* இப்போவும் இந்துத்தவா மோடிக்கு காவ்டி துக்குவதும் கனவெல்லாம் இல்லை. உண்மை. ஆனால் நீ இல்லனு மழுப்பிக்கிட்டு இருக்கீங்க.

நீங்க யாருக்கு வேணா காவடி தூக்கலாம். அது உங்க உரிமை. இதெதுக்கு இந்த நடிப்பு? அதான் எனக்குப் புரியலை.

Nat said...

வருண்!பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் தொடர்வதில்லையென்பதால் உங்கள் பின்னூட்டத்தை இப்பொழுதான் கவனித்தேன்.

நீண்ட காலமாக பதிவுகளை கவனிக்கும் போது ஒருவரது கருத்துக்களை எடை போடும் திறன் வளரும் என நினைக்கிறேன்.அமெரிக்கா போய் பதிவுகளில் அநாகரிகமாக சண்டை போடுவது எப்படி என்பதை மற்றுமே கற்று வைத்திருக்கிறீர்கள்.

திராவிடமும்,இந்துத்வா மறுப்பும் தமிழகத்தின் எல்லையை தாண்டவில்லை.இன்னும் சொல்லப்போனால் பெரியாரின் இறை மறுப்பு வளர்ந்த வேகத்துக்கு ஐயப்ப பக்தர்களும் தமிழகத்தில் வளர்ந்ததும் உண்மை.தமிழகத்தையும் தாண்டிய மோடி அலையும் காங்கிரஸின் குழறுபடி ஆட்சியால் முக்கியமாக மன்மோகன் சிங்கின் மௌனத்தால் அதற்கு மாறான மோடியின் உச்சக்குரல் மக்களை கவர்கிறது.இதனை தி.மு.க வின் துவக்க கால பேச்சு வன்மைக்கு ஒப்பிடலாம்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததே தமிழகத்தில் எதிர்பாராத நிகழ்வுகளில் ஒன்று என்று நினைப்பவன் நான்.

திராவிட இயக்கத்திற்கு முரண்பாடாக குடும்ப அரசியலையும்,ஆட்சியில் இருந்தும் இலங்கைப் பிரச்சினை திசை திரும்பி போய் விட்டதே என்ற அங்கலாய்ப்பில் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல பேரில் நானும் ஒருவன்.தவறுகளை எதிர்க்கும் கருத்து தெரிவிப்பதால் ஜெயலலிதாவுக்கு காவடி தூக்கியாகி விடாது.

எனது உரிமை என்று சொல்லிவிட்டு நடிப்பு என்றும் நீங்களே குழம்புவதற்கு நான் பொறுப்பா:)