Followers

Saturday, November 10, 2007

நவம்பர் மாத புகைப்பட போட்டிக்கு









நவம்பர் மாத அறிவிப்பு சாலைகள் என்று வந்தவுடன் அட!தெரு முழுவதும்தான் பாதைகளா கிடக்குதே....சும்மா அசத்திரலாம் என்று அன்றாடப் பணிகளை பார்த்துக் கொண்டும் வரும் போட்டி படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கும் போதுதான் போட்டி படங்களின் நம்ம ஊர் பசுமைகளின் வனப்பிலும்,வாத்து நடையிலும்,ஒட்டகத்தின் உயரத்திலும்,தொழில் நுணக்கங்களிலும் வந்த பயத்தில் சரி நாம இரவு நேரத்து இருக்கும் வெளிச்சத்தில் ஏதாவது முயற்சி செய்யலாம் என்று கிளிக்கியதில் ஏதோ இரண்டு படம் சுமாராக இருந்த மாதிரி தோன்றியது.நாட்கள் இருக்கின்றதே என்று கால தாமதப் படுத்தியதன் பயன் CVR அவர்கள் அழகாக பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க என்று கூப்பிட்ட பதிவு மூலம் மேலும் சில நுணக்கங்களை கற்றுக் கொள்ள முடிந்தது.விளைவு எடு பெட்டியை என்று இருட்டில் இருந்து வெளிச்தத்துக்கு வந்த இரண்டு படங்கள் பின் தயாரிப்பின் கற்றலோடு போட்டிக்கு.

கொசுரு:வெளிச்சத்தில் எடுத்த படங்கள் Pentax K10D காமிராவுடன் 18mm - 55mm லென்ஸ்.

இரவில் எடுத்தது அதே காமிரா ம்ற்றும் Tamron 70 - 300mm.

இருக்கும் பட்டன்களை பரிட்சிக்காமல் பச்சைக் கோட்டில் வைத்து ஒரே அமுக்கு. 3 மற்றும் 4 போட்டிக்கான படங்களும் நாட்டாமைகளின் பார்வைக்கும் காலை வெளிச்சத்தில் எடுத்தவை.இரவு நேரத்து கார்களின் வெளிச்சத்தில் எடுத்தவைகள் 1 மற்றும் 2 சும்மா போனஸ் பார்வைக்கு.
வணக்கம் அனைவருக்கும்.மீண்டும் காண்போம்.

12 comments:

Unknown said...

Nice photos. All the best :-)

மணிவண்ணன் said...

நன்றாக உள்ளது.
Tripod இல்லாத குறை முதல் படத்தில் தெரிகிறது. படத்தின் அளவை கொஞ்சம் சிறியதாக்கினால் ஒரு வேளை அந்த shake தெரியாமல் போகலாம்.
போட்டிக்கு 3,4 படங்களா? படம் #2இல், பின்னனியில் இருக்கும் இருட்டுப் பிரதேசத்தை வெட்டி விட்டால் நாலாவது படத்தை விட நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அப்பாஸ் Abbas said...

Night pictures, should have been taken with tripod!

Anonymous said...

excellentooo excellent

சதங்கா (Sathanga) said...

நட்டு,

கலக்கல் photos.
1,2 மெட்ரிக்ஸ் ஞாபகப் படுத்துகிறது. 3 அருமை. எனது ஓட்டு 4th க்கு, அதை கொஞ்சம் touch-up பண்ணினால் இன்னும் சூப்பரா இருக்கும். i.e. வலை நிறைய இடம் பிடித்திருக்கிறது, அதை crop செய்து, ஓரளவுக்கு வைத்தால் போதும். பின் தூரத்தில் இருக்கும் சைக்கிள் காரரை அலேக்காத் தூக்கிருங்க .... அவ்ளோ தான் ... ஒரு artistic சாலை ready.

Anonymous said...

3&4 - good choice

நானானி said...

இரவு நேரத்து சாலைகள் ஜொலிக்கின்றன.
நல்லாருக்கு.நட்டு!

சரண் said...

3rd photo is my choice. Good prespective!

Nilavan said...

பரபரக்குதுங்க.....!

வல்லிசிம்ஹன் said...

கல்யாண ஊர்வலம் போகிற மாதிரி அழகா இருக்கு.

நாகை சிவா said...

3 வது அருமையா இருக்கு

வாழ்த்துக்கள்

மணியன் said...

நல்ல போட்டோக்கள், வாழ்த்துக்கள் !!