Followers

Wednesday, October 15, 2008

அக்டோபர் மாதம் விளம்பரப் படப் போட்டி


அனைவருக்கும் வணக்கம்.

பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடக் கூட நேரமில்லாமல் வேலை,வீடு,புதிய வலைத் தளம் முயற்சியென தலைக்குள் பல சிந்தனைகள்.என்னைப் பொறுத்தவரை தமிழ் மணத்தை நேரம் கிடைக்கும்போது தொட்டுப் பார்த்துக் கொண்டாலும் பதிவு எழுத தூண்டும் உந்துதல் பிட் பட வல்லுனர்களின் மாதாந்திர அறிவிப்புக்கள்தான். எனவே அக்டோபர் மாதம் ஒரு பதிவு.

கூடவே இந்த நேரத்தில் எனது வலைத்தளம் பற்றி அறிவிக்க வேண்டிய கட்டாயமாக சி.வி.ஆர்,ஆனந்த் ,நாதஸ் போன்றவர்களின் அன்பளிப்பு படங்கள் வலைத்தளத்தின் கடைசி பக்கத்தை அழகு படுத்த வைத்துள்ளது.பக்கங்களை மொட்டையாக வைக்கவேண்டாமே என எனது சில படங்களை தற்காலிகமாக ஒட்ட வைத்துள்ளேன்.

எனது வலைத்தளத்தின் பெயர் www.photocbe.com. நான் கோயம்புத்தூர்காரன் என்பதால் எங்க ஊர்ப்பக்கம் ஊரை cbe என அழைப்பதாலும் Photo concept business expression என அர்த்தத்தில் அந்தப் பெயர்.காமிராக் காதலாலும் ,நண்பர் வட்ட படங்களின் பிரமிப்புக்களை வாங்கிக் கொள்ளவும் கூடவே விளம்பரம்,வியாபார உத்திகளை கையாளும் நோக்கிலும் உருவானது இந்த வலைத்தளம்.குவைத் தொடர்பான எந்த விளம்பர படங்களும் தமிழ் மண பதிவர்களுக்கும்,பிட் வருகையாளர்களுக்கும் இலவசம். நிறைய பேரின் பதிவுகளை மேய்ந்து இமெயில் கிடைக்காததால் யாருக்கும் தனிக் கடிதம் போடவில்லை.எனவே இந்த பதிவின் மூலம் யாராவது படங்கள் அனுப்ப விருப்பப் பட்டால் விருப்பங்களைத் தெரிவிக்கவும்.கூடவே வலைத்தளம் போய் பிட் தலைகளின் அசத்தல் படங்களையாவது பார்வையிடவும். வலைத்தளம் திறக்க Flash அவசியம்.இது இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது. படங்கள் இன்னும் வரும்.


இந்த மாத பிட் விளம்பர பெயருக்கு ஏற்ற மாதிரி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமையல் உப்பு, அதே சமயத்தில் இதய பாதுகாப்புக்கான குறைந்த சோடியம் உள்ள ஒரு தயாரிப்பை இங்கே வணிகப் படுத்த வந்ததை விளம்பரப் படுத்துகிறேன்.கருத்துக்கள் கூறவும். மீண்டும் நன்றி அனைவருக்கும்.

11 comments:

கார்க்கி said...

இணையப்பக்கம் வேலை செய்யவில்லை நண்பரே. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

rapp said...

me the first?

rapp said...

//இந்த மாத பிட் விளம்பர பெயருக்கு//

தப்பா எடுத்துக்காதீங்க, (பிட்) இதை மட்டும் ஆங்கிலத்தில் எழுதுங்க.

rapp said...

போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

வணக்கம் கார்க்கி.Flash மட்டுமே துணை:)

ராஜ நடராஜன் said...

வணக்கம் ராப் கவிதாயினி!
கார்க்கி முந்திகிட்டார்:)

கிரி said...

உங்கள் புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் said...

அப்பப்போ வாங்க நடராஜன்..... படம் சூப்பர்.... உங்க புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....

ராஜ நடராஜன் said...

கிரி.உங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//அப்பப்போ வாங்க நடராஜன்..... //

தமிழ்மணம் ஒரு பார்வை விடுகிறேன்.பின்னூட்டம்தான் முடிவதில்லை.அதற்கான இன்னொரு காரணம் க்ரோம் தரவியக்கம்.உங்கள் வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்.

ராமலக்ஷ்மி said...

படமும் கருத்தும் நன்றாக உள்ளன.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.