Followers

Friday, August 15, 2008

ஆகஸ்ட் மாத படப்போட்டிக்கு

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.இறுதி நேரத்தில் எனது படங்களும் ஆகஸ்ட் மாதப் போட்டிக்கு.இன்றைக்கு சுதந்திர தினக் கொடியேற்றத்துக்கு காலையில் குவைத் தூதரகம் போய்விட்டு தூதரகக் கொடியேற்றுவிழாவை படம் எடுத்துப்போடலாம் என நினைத்தேன்.முன்பெல்லாம் எந்த வித ராணுவ போலிஸ் பாதுகாப்பும் இன்றி கொடியேற்று விழா இனிதே நடக்கும்.மாறும் காலங்கள் வரிசையாக கார்களில் தேடல்கள்.மேலும் காமிரா அனுமதியில்லை.எனவே கொடியேற்று விழாவுக்குப் பதிலாக சாலைகளில் அலைந்து கிடைத்தப் படத்தில் பின் தயாரிப்புடன் உங்கள் பார்வைக்கு.முதல் படம் போட்டிக்கு.


தொழுகைக் கூடமும் கூடவே துணையிருக்கும் ஜீப் செரோக்கியும்

சின்ன தனியார் மருத்துவ மனை வீட்டின் பக்கத்தில்
மனித உழைப்பைக் குறைத்து இயந்திரங்கள் உழைத்துக் களைத்து ஓய்வு.
சூரியப் பார்வை
கடற்கரைக் காற்றும் சூரிய அஸ்தமனமும்.


அனைவருக்கும் மீண்டும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன்

ராஜ நடராஜன்.

22 comments:

பிரேம்ஜி said...

சிறப்பான புகைப்படங்கள்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.கடைசி இரண்டு படங்களும் மிக நன்றாக உள்ளன.

ராஜ நடராஜன் said...

நான் உங்களின் பதிவை தேடிகிட்டு இருக்கிறேன். சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சூர்யா said...

சூர்யப்பார்வை.. கலக்கல்...

கயல்விழி said...

அந்த சூர்யப்பார்வை படம் மிகவும் அழகாக இருக்கிறது. அனைத்து படங்களும் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

முதல் படத்தின் கோணமும் பிற்தயாரிப்பில் வானத்தின் அழுத்தமான வண்ணமும் அருமை. ஆனால் "சூரியப் பார்வை" சூப்பருங்க!

மதிபாலா said...

பார்வையில் ப்ளாக்கில் சூர்யப்பார்வை

பிரமாதம்.....!!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

ச்சின்னப் பையன் said...

சூரியப்பார்வை சூப்பர்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்..

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

சின்ன தனியார் மருத்துவ மனை வீட்டின் பக்கத்தில்
//

என்னாது சின்ன மருத்துவமனையா? நம்ப ஊரு அப்போலோ மாதிரி இருக்கு?

நானானி said...

கடைசி ரெண்டு படங்கள் நல்லாருக்கு.
எது போட்டிக்கு?
வாழ்த்துக்கள்! ராஜ நடராஜன்!!

ராஜ நடராஜன் said...

//சூர்யப்பார்வை.. கலக்கல்...//

வணக்கம் சூரியா.உங்கமாதிரி தல கிட்ட அபிப்ராயம் கேட்காம விட்டது தப்பாப் போச்சு.

ராஜ நடராஜன் said...

//அந்த சூர்யப்பார்வை படம் மிகவும் அழகாக இருக்கிறது. அனைத்து படங்களும் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!//

மறுபடியும் சூரியப் பார்வைக்கு ஓட்டு?
குருவி எப்படியிருக்குது மேடம்:-)

ராஜ நடராஜன் said...

//முதல் படத்தின் கோணமும் பிற்தயாரிப்பில் வானத்தின் அழுத்தமான வண்ணமும் அருமை. ஆனால் "சூரியப் பார்வை" சூப்பருங்க!//

நீங்களுமா சூரியப் பார்வைக்கு ஓட்டு? உங்க படத்தைப் பார்த்துத்தான் சூரியன்,கடல்,பேரிச்சைமரமா தேடிகிட்டு இருந்தேன்.மூன்றும் கோணம் சரியாக அமையவில்லை.

ராஜ நடராஜன் said...

// சூரியப்பார்வை சூப்பர்... //

வணக்கம் ச்சின்னப்பையன்.நீங்களுமா? தேர்தலுக்கு தவறான நபரை அனுப்பிவிட்டேனோ?

ராஜ நடராஜன் said...

// பார்வையில் ப்ளாக்கில் சூர்யப்பார்வை //

நீங்களுமா?கொஞ்சம் முந்தியே படத்தை அனுப்பியிருந்தா நாட்டாமைகிட்ட தீர்ப்ப மாத்திச் சொல்லு ன்னு சொல்லியிருக்கலாம்.இறுதி நாளில் இறுதி நேரம்.தங்கள் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

// என்னாது சின்ன மருத்துவமனையா? நம்ப ஊரு அப்போலோ மாதிரி இருக்கு? //

பெரிய ஆஸ்பத்திரிகளின் பரப்பளவை எப்படி ஒப்பிடலாம்?

அடையாரில் தரமணியில் எல்லா டெக்னாலாஜி இன்ஸ்டிடுயுட்டுகளும் சேர்ந்த மாதிரி பரப்பளவில் ஒரு மருத்துவ மனையும் அல்லது கிண்டி குதிரை ரேஸ் மைதானத்துக்குள்ளானதுமானது இன்னொரு மருத்துவ மனைப் பரப்பளவும் அமையும்.இப்பவெல்லாம் மருத்துவ செலவுக்கு காசு புடுங்க ஆரம்பிச்சிட்டாங்க.இருந்தாலும் நம்ம ஊரோட பார்க்கும்போது நம்மகிட்ட நல்ல மருத்துவர்களும் மோசமான கட்டமைப்பும் , இங்கே நல்ல கட்டமைப்பும்,உலகத்தர நவீனக்கருவிகளும் உள்ளன.மருத்துவர்கள்தான் சரியாக அமைவதில்லை.நம்மூர் மருத்துவர்களும் அத்திபூத்தமாதிரி மூலைக்கு ஒருவர் இருப்பார்.ஆனால் இந்திய நர்ஸ்களின் பணியும்,கடின உழைப்பும்,நோயாளிகள் கவனிப்பும் பாராட்டத்தக்கது.

ராஜ நடராஜன் said...

//கடைசி ரெண்டு படங்கள் நல்லாருக்கு.
எது போட்டிக்கு?
வாழ்த்துக்கள்! ராஜ நடராஜன்!!//

நீங்களுமா? இங்கே வெயில் காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் குளிர் காலம்
துவங்கும்.உங்க கண்ணுல படும் பறவைகளையெல்லாம் கொஞ்சம் இந்த ஊருக்கும் அனுப்பி வையுங்க.வாத்து,நாரையின்னு எதுவாயிருந்தாலும் சரி:)

கிரி said...

தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

கடைசி மூன்று படங்கள் அருமை..சூப்பரா எடுத்து இருக்கீங்க..வாழ்த்துக்கள்.

அது சரி said...

கடைசிப்படம் பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு இருக்கு. ஒரே படத்தில், நீர், வானம், நிலம்,வெளிச்சம், இருட்டு என்று எல்லாத்தையும் கவர் செய்துவிட்டீர்கள். சூப்ப‌ர். நீங்க‌ள் ப்ரொஃப‌ஷ்ன‌ல் ஃபோட்டோகிராஃப‌ரா??

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்.

(அப்பிடியே ந‌ம்ம‌ வெள‌ம்ப‌ர‌த்தியும் ஓட்டிக்கிறேன். விக்கிர‌மாதித்த‌ன் க‌தைக‌ள்னு புதுசா ரெண்டு ப‌திவு போட்ருக்கேன். கொஞ்ச‌ம் டைம் கெட‌ச்சா, ந‌ம்ம‌ க‌டைக்கும் வாங்க‌!)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

what happened? not posting any thing for such long time? r u well and o.k?

கிரி said...

நடராஜன் எங்கே போய்ட்டீங்க ..ரொம்ப நாளா ஆளையே காணோம்

tamilraja said...

உண்மையில் ஒளி ஓவியம் இது!

tamiljunction said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com