Followers

Thursday, August 7, 2008

மேசை நாகரீகம்

இந்தப் பதிவு புதுகைத் தென்றலின் மேசை நாகரீகம் பதிவைப் படித்ததன் விளைவு.பெரும்பாலான விசயங்கள் அங்கேயே காணக்கிடைக்கின்றன.விட்டுப்போனதையும் எனக்குத்தெரிந்ததையும் சொல்லிப்போகிறேன்.

உணவு விடுதிகளில் குடும்பம் நண்பர்கள் சகிதம் போகும்போது ஆண்கள் நாற்காலியை பின்புறம் இழுத்து குழந்தைகள், பெண்கள் உட்காருவதற்காக உதவி புரியலாம். மேசையில் உட்கார்ந்தவுடன் வெயிட்டர் எனும் உணவுப் பரிமாறுபவர் ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்கிறாரா என்று கவனியுங்கள்.அவர் வேலைப் பளுவில் சொல்ல மறந்து போனாலும் நீங்கள் அவருக்கு ஒரு புன்முறுவலுடன் ஹலோ சொல்லலாம்:)

பரிமாறுபவர் முதலில் தண்ணீர் கொண்டு வந்து கிளாஸ் எனும் குப்பியில் ஊற்றவேண்டும். அவர் ஊற்றும் நீரின் அளவு குப்பியின் முக்கால் பாகத்தை தொடவேண்டும்.அவரின் "தல" அவருக்கு சரியாகப் பயிற்சி தந்திருந்தால் நீரை உங்களுக்கு வலதுபுறமாகவே குப்பியில் ஊற்றவேண்டும். கிடைக்கிற சந்துலயெல்லாம் எட்டி எட்டி தண்ணீரை ஊற்றினார்ன்னு வச்சுக்குங்க!தம்பி பரிமாறல் கலையில் அரைகுறைன்னு அர்த்தம்.உணவு பரிமாறும் போதும் உங்களுக்கு இடது புறமாகவே பரிமாறவேண்டும்.

அப்புறம் மெனு படிக்கிறதும் பட்ஜெட்டும்தான் உங்களுக்குத் தெரியுமே! ஆனால் பரிமாறுபவருக்கு சொல்லும்போது ஐந்து வகையான உணவுகளைக் கொண்டு வரச்சொல்வது முறை.முதலில் அபிடைசர் எனும் சூப் அடுத்து ஆண்ட்ரே எனும் சின்ன நொறுக்குத்தீனி அதற்கடுத்து மெயின் டிஷ் எனும் முக்கிய உணவு,பின் டெசர்ட் எனப்படும் இனிப்பு பின் காபி அல்லது சாயா.(இந்த காபிக்கும் மதுவுக்கும் ஒரு தொடர்பு உண்டு.மதுவிலக்கின் காரணமாக அதுபற்றியெல்லாம் கூவ மாட்டேன்.வேண்டுமென்பவர்கள் பக்கத்துல இருக்கும் "பார்" க்கு ஒரு மெல்லிய நடைப்போய்விட்டு வந்து விடுவது நல்லது).

புதுகைத் தென்றலின் பதிவின் நான் மாறுபடும் இரண்டு டிப்ஸ்.

1 .கையில் எடுத்த நாப்கின்னை மடியில் விரித்துக்கொள்ளலாம் அல்லது கழுத்தின் முன்புறமும் மாட்டிக்கொள்ளலாம்.

2. ஃபோர்க் & ஸ்பூனை உங்களது பிளேட்டின் இடது புறமும் வலது புறமும் ஒன்றையொன்று கண்ணும் கண்ணும் நோக்கினால் நான் இன்னும் சாப்பாட்டை முடிக்கவில்லை.பரிமாறுபவரே தொடாதே தட்டையென்று அர்த்தம்.அதையே உங்களுக்கு நேராக ஒன்றையொன்று தொட்டிக்கொள்ளும்படி வைத்தால் நீங்கள் உணவை முடித்துவிட்டதாக அர்த்தம்.சொல்லிக் கொண்டே போகலாம் உணவு என்ற கடோத்கஜ கலையை.உண்ணும் உணவு மனிதனின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அது இடத்துக்கு இடம் தேசத்துக்கு தேசம் மாறுகிறது.

எனக்கு இதுவரை புரியாத உணவகங்களின் மேசை நாகரீகம் என்னவென்றால் எல்லோருமே உணவைப் பரிமாறுபவர்க்கே டிப்ஸ் வழங்குவது.சமயலறையில் உஷ்ணத்தில் உணவு தயாரிக்கும் சமையல்காரர்களை யாருமே கண்டு கொள்வதில்லை.உணவு உண்பதின் மகிழ்ச்சியில் பெரும்பான்மையான பங்கு அவர்களுடையது.இந்த மேசை நாகரீகத்தை இனி கொஞ்சம் தலைகீழாக்கிக் காட்டவேண்டும்.

இந்த தொந்தரவே வேண்டாம் சாமி சொல்றவங்களுக்கு உடுப்பி மாதிரி உணவகம் இருக்குது.சில்வர் தட்டில் குட்டி குட்டியான பக்கவாத்திய காய்கறிகளுடன் சப்பாத்தி,பூரியுடன் சாதமும் கலந்தடித்து பருப்பு,ரசம்,தயிர்,இனிப்பு எனவும் ஏப்பம் விடலாம்.

குசும்பன் மாதிரி சில புது மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.அபி அப்பா மாதிரி ஆட்கள் வீட்டுக்கு விருந்துக்குப் போய்விட்டு புத்தகங்களையும் ஆட்டையப் போட்டு வந்து விடுவார்கள்.வீட்டுச்சாப்பாடு,ஓட்டலுக்கு சாப்பிடப்போறோமாக்கும்ன்னு அவங்க தோட்டத்துல எப்பவுமே முப்போகம்தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கமுன்னு ஒரு கூட்டம் இருக்குது.அவங்களுக்கும் சின்ன டிப்ஸ்.கண் கண்ட இடத்தில் ருசிமட்டுமல்லாது சுகாதாரமும் தரும் சைவ அசைவ உணவகங்களில் பூந்து விளையாடுங்க.அமீரகமாக இருந்தால் சேட்டன்களின் மெம்பர் மட்டுமே துணை.மேற்குப் பக்கம் சுத்தறவுங்களுக்கு KFC யும் சிப்சும்,பிஸாவும் பெப்சியுமே வரம். கிழக்குப்பக்கம் சுத்துபவர்களுக்கு கிடைப்பதெல்லாம் சாப்பிடுங்க.ஆனால் தவளை மாதிரி உணவுகளுக்குத் தாண்டி விடாதீங்க.திருவல்லிக்கேணிப் பக்கமிருந்து வாழ்க்கையை அனுபவிக்கிறவர்களுக்கு மூலை மூலைக்கு மெஸ்களிருக்கும்.வாழை இலையில் சாதத்தை பாத்தி கட்டி அடிங்க ஒரு நாள் வாழ்வின் திசை மாறும் என்ற நம்பிக்கையுடன். மதுரைப்பக்கம் முக்கியமாக கோயம்புத்தூர் பக்கம் இருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்வது உணவு விசயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பதிவு இன்னும் நீளும் போல் தெரிகிறது.அதனால் இப்போதைக்கு இதுவரைக்கும்.......

28 comments:

குசும்பன் said...

//நாற்காலியை பின்புறம் இழுத்து குழந்தைகள், பெண்கள் உட்காருவதற்காக உதவி புரியலாம். //

ஹி ஹி பாதிபேரு அவுங்க போகும் பொழுது பின்னாடியே நாற்காலியை தூக்கிட்டு போய் அவுங்களுக்கு போட்டு உட்கார வைக்கும் ஆட்களாக இருக்கிறார்கள்:))அவர்களுக்கு என்ன சொல்வது!!!

குசும்பன் said...

//வேலைப் பளுவில் சொல்ல மறந்து போனாலும் நீங்கள் அவருக்கு ஒரு புன்முறுவலுடன் ஹலோ சொல்லலாம்:)//

வெயிட்டர் பிலிப்பைனி தேசத்து பெண்களாக இருந்தா நாங்க கை கொடுத்து ஹாய் சொல்லுவோம் நீங்க என்னாடான்னா சும்மா ஒரு ஹலோ சொல்ல சொல்றீங்க!!!

குசும்பன் said...

//கிடைக்கிற சந்துலயெல்லாம் எட்டி எட்டி தண்ணீரை ஊற்றினார்ன்னு வச்சுக்குங்க!//

இப்படி சில முறை ஊற்றி நான் உச்சா போனது போல் என் பேண்ட் மேலேயே ஊற்றி இருக்கிறார்கள்..நல்ல நேரம் அது சுடுதண்ணீர் இல்லை :)))))

குசும்பன் said...

//அப்புறம் மெனு படிக்கிறதும் பட்ஜெட்டும்தான் உங்களுக்குத் தெரியுமே!//

ம்கும் வெளங்கிடும் நான் ஒரு முறை மெனு படிச்சுட்டு வெறும் முட்டைகோஸ்,சில பல தழைகள் போட்டு நடுவில் ஒரு துண்டு லெமன் வெச்சு கொடுத்துட்டு 20 Dhs வாங்கிட்டான்.

பேரு அரபியில் டிபரண்டாக இருந்ததால் சொல்லிட்டேன்:((((

குசும்பன் said...

//இந்த மேசை நாகரீகத்தை இனி கொஞ்சம் தலைகீழாக்கிக் காட்டவேண்டும்.//

அப்ப மேசையை தலைகீழா கவுத்து போட்டுவிடலாமா?

குசும்பன் said...

//
குசும்பன் மாதிரி சில புது மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.//

மிக்க நன்றி நீங்களாவது என்னை புது மாப்பிள்ளை என்றதுக்கு:))

கல்யாணம் ஆகி 4 வது நாளே தம்பி என்னா கல்யாணம் ஆகி 4 நாட்கள் ஆவுது இன்னும் நீ புது மாப்பிள்ளை இல்லை போய் நீயே உன் வேலைய பாரு என்று சொன்னார்கள்!!!

குசும்பன் said...

எக்ஸ்கூயுஸ் மீ பதிவு சூப்பர் ஆனால் ஒரே ஒரு டவுட்...

“நாகரீகம்” என்றால் என்னா மீனிங்!!!

(அடிக்கடி இன் டீசண்ட் பாய் என்று திட்டுவாங்குவதால் மீனிங் புரியவில்லை)

ராஜ நடராஜன் said...

//ஹி ஹி பாதிபேரு அவுங்க போகும் பொழுது பின்னாடியே நாற்காலியை தூக்கிட்டு போய் அவுங்களுக்கு போட்டு உட்கார வைக்கும் ஆட்களாக இருக்கிறார்கள்:))அவர்களுக்கு என்ன சொல்வது!!!//

உணவகங்களில் நாற்காலியெல்லாம் எடுக்க விடமாட்டாங்க!நீங்க சொல்ற நாற்காலியெல்லாம் தனியா செய்யறது:)

ராஜ நடராஜன் said...

// வெயிட்டர் பிலிப்பைனி தேசத்து பெண்களாக இருந்தா நாங்க கை கொடுத்து ஹாய் சொல்லுவோம் நீங்க என்னாடான்னா சும்மா ஒரு ஹலோ சொல்ல சொல்றீங்க!!!//

நான் KFC,பிஸாசுக் கடைக்கெல்லாம் அதிகமாப் போறதில்லை.அப்படியே போனாலும் பிலிப்பைனி ( இதனை உச்சரிக்க சிரமப் பட்டோ அல்லது அவர்களுக்கு புரியவேண்டாம் என்றோ புலி என்றும் இங்கே சிலர் கூறுகிறார்கள்) கொஞ்சும் " Hallo sir! " தான் இங்கே.

ராஜ நடராஜன் said...

//இப்படி சில முறை ஊற்றி நான் உச்சா போனது போல் என் பேண்ட் மேலேயே ஊற்றி இருக்கிறார்கள்..நல்ல நேரம் அது சுடுதண்ணீர் இல்லை :)))))//

:))))) !

ச்சின்னப் பையன் said...

நான் முதன்முதலில் ஒரு ***** நட்சத்திர ஹோட்டலுக்குப் போயிருந்தபோது - எனக்கும் என் நண்பருக்கும் எலுமிச்சைச் சாறு வைத்தனர். அவர் அதை எடுத்துக் குடித்துக்கொண்டிருந்தார். நானோ சர்வரிடம் எனக்கு அது வேண்டாம், ஆப்பிள் சாறு கொண்டு வருமாறு கூறினால், அவரோ, அது குடிப்பதற்கு இல்லை, கை கழுவுவதற்கு என்றார்......

கயல்விழி said...

நல்ல பதிவு :)

நீங்க என்ன Finishing school சென்றீர்களா? JK :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

after a gap அண்ணே நான் ஆஜர்

புதுகைத் தென்றல் said...

nalla iruku.

nandri

ராஜ நடராஜன் said...

//நான் முதன்முதலில் ஒரு ***** நட்சத்திர ஹோட்டலுக்குப் போயிருந்தபோது - எனக்கும் என் நண்பருக்கும் எலுமிச்சைச் சாறு வைத்தனர். அவர் அதை எடுத்துக் குடித்துக்கொண்டிருந்தார். நானோ சர்வரிடம் எனக்கு அது வேண்டாம், ஆப்பிள் சாறு கொண்டு வருமாறு கூறினால், அவரோ, அது குடிப்பதற்கு இல்லை, கை கழுவுவதற்கு என்றார்......//

நகைச்சுவை உங்களுக்கு கைவந்த கலை போல் இருக்கிறதே:)

ராஜ நடராஜன் said...

//“நாகரீகம்” என்றால் என்னா மீனிங்!!!

(அடிக்கடி இன் டீசண்ட் பாய் என்று திட்டுவாங்குவதால் மீனிங் புரியவில்லை)//

டீசண்ட் உள்ள பாய் என்று அர்த்தமோ?

ராஜ நடராஜன் said...

// நல்ல பதிவு :)

நீங்க என்ன Finishing school சென்றீர்களா? JK :)//

வணக்கம் மேடம்! கேடரிங் டெக்னாலஜியை உங்க பக்கம் அப்படியும் சொல்கிறார்களா?

ராஜ நடராஜன் said...

// அண்ணே நான் ஆஜர் //

அண்ணே வாங்க!இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுத்திட்டு வாங்க!(தமிழ்மணத்துக்கு வருவதே ஓய்வு எடுக்கிறமாதிரிதானே:))

ராஜ நடராஜன் said...

// nalla iruku.

nandri //

மேடம்! நான் உங்க பதிவுக்கு வந்ததற்கு தண்டனையா நான் உங்களை கண்ணில் படும் தங்கிலீஷ்க்கு சிபாரிசு செய்வது?

அது சரி said...

டிப்ஸா? நாமெல்லாம் "அக்கவுண்ட்ல எளுதிக்க" அப்டின்னு சொல்றது தான் வளக்கம். இனிமே மறக்காம ஒரு 15 பைசா டிப்ஸையும் சேத்து அக்கவுண்ட்ல எளுதிக்க சொல்லிட்றேன்.

குடிக்றதுக்கு தண்ணியே வைக்க மாட்டேன்றானுவ, இதுல முக்கா கிளாஸ் ஊத்னானானு எங்க பாக்க?? அவன் சந்து பொந்துல ஊத்னானலும் சரி, நம்ம டவுசர்குள்ள ஊத்தாம இருந்தா சரிதேன். அப்புறம் நம்ப என்னமோ டவுசர்ல ஒண்ணாம் நம்பர் போன மாறி பயபுள்ளக ஓட்டி தள்ளிருவானுவ.

என்னமோ புளிப்பைன்சு குட்டிய பத்தி சொல்றிய. அந்த கெரகத்த நான் எங்க கண்டேன்? இங்க ஒரு கோனாருல்லா நமக்கு இட்டிலி போடுறாரு. வேணும்னா அந்த ஆள "குளிப்பைன்சு"ன்னு வச்சிக்கலாம். ஏம்னு கேட்டியள்னா, அந்த ஆளு கடசியா எப்ப குளிச்சான்னு நமக்கு நெத நாளு ஒரு டவுட்டு உண்டு பாத்துகிடுங்க.

ராஜ நடராஜன் said...

// டிப்ஸா? நாமெல்லாம் "அக்கவுண்ட்ல எளுதிக்க" அப்டின்னு சொல்றது தான் வளக்கம். இனிமே மறக்காம ஒரு 15 பைசா டிப்ஸையும் சேத்து அக்கவுண்ட்ல எளுதிக்க சொல்லிட்றேன். //

அக்கவுண்ட்ல எளுதிக்கன்னு சொல்றவரா இருந்தா திருவல்லிக்கேணிப் பக்கம் சுத்துறீங்களோன்னு நினைச்சு பதிவோடு தனியாவும் தைரியம் ஊட்டலாமுன்னு நினைச்சா திடீர்ன்னு உங்க புரோபைல் லண்டன்னு நேற்றுப் படிச்சதா நினைவு.லண்டனில் பெங்களாதேசும்,சர்தார்களும் உணவுத்துறையில் கொடிகட்டிப் பறப்பதாக கேள்விப்பட்டேன்.அல்லது நம்மாளுக லண்டன் போயும் குளிக்கப் பயந்துகிட்டு துண்டை தோள்ல போட்டுகிட்டு சமைக்கிறார்களான்னும் தெரியலை.

புளிப்பைன்சுக நிறையா இருக்குறாங்க.மேல்தகவல்களுக்கு குசும்பன்கிட்ட சொன்னீங்கன்னா தனிப்பதிவே இடுவார்:)

பிரேம்ஜி said...

இந்த விஷயத்தையும் இதுவரை யாரும் இப்படி விளக்கமா சொன்ன மாதிரி தெரியலை.உங்க பதிவுகள் வர வர வித்தியாசமா புதுமையா வந்திட்டிருக்கு. கலக்குங்க.

கயல்விழி said...

//வணக்கம் மேடம்! கேடரிங் டெக்னாலஜியை உங்க பக்கம் அப்படியும் சொல்கிறார்களா?//

இல்லை, மேஜை நாகரீகம், பேச்சு நாகரீகம் போன்றவை கற்றுக்கொடுக்கும் இடத்தை "ஃபினிஷிங் ஸ்கூல்" என்று அழைக்கிறார்கள்.

அது சரி said...

//
அக்கவுண்ட்ல எளுதிக்கன்னு சொல்றவரா இருந்தா திருவல்லிக்கேணிப் பக்கம் சுத்துறீங்களோன்னு நினைச்சு பதிவோடு தனியாவும் தைரியம் ஊட்டலாமுன்னு நினைச்சா திடீர்ன்னு உங்க புரோபைல் லண்டன்னு நேற்றுப் படிச்சதா நினைவு.
//

உங்க நல்ல மனசுக்கு நன்றி அண்ணாச்சி. அந்த பின்னூட்டம் ச்சும்மா ஜாலிக்கு கும்முனது. மத்தபடி நான் இருக்கிறது வேல்ஸ் தான். பேருக்குத்தான் வேல்ஸுன்னு அட்ரசே ஒழிய நாம பெரும்பாலும் வாழ்றது ஹோட்டல்ல தான்.

ராஜ நடராஜன் said...

// இந்த விஷயத்தையும் இதுவரை யாரும் இப்படி விளக்கமா சொன்ன மாதிரி தெரியலை.உங்க பதிவுகள் வர வர வித்தியாசமா புதுமையா வந்திட்டிருக்கு. கலக்குங்க.//

வணக்கம் பிரேம்ஜி.எப்படியிருக்கீங்க?மொத்த வார்த்தைகளிலும் சொல்ல வேண்டியவைகளைத்தான் நீங்க படம் போட்டு சுருக்கமாக விளக்கி விடுகீறீர்களே:)

ராஜ நடராஜன் said...

// இல்லை, மேஜை நாகரீகம், பேச்சு நாகரீகம் போன்றவை கற்றுக்கொடுக்கும் இடத்தை "ஃபினிஷிங் ஸ்கூல்" என்று அழைக்கிறார்கள்.//

மீண்டும் வணக்கம் மேடம்.நீங்கள் சொல்லும் தகவல்கள் எனக்குப் புதிது.பேச்சு நாகரீகம் வேறு இருக்கிறதா!!! இந்த சென்னை மக்களை தஞ்சாவூர்,கோயம்புத்தூர் பக்கம் அனுப்பி விட்டு,கோயம்புத்தூர்,தஞ்சாவூர்க்காரர்களை சென்னைக்கும் நிரந்தரக் குடியேற்றி விட்டால் தமிழ் பேச்சு நாகரீகம் வளரும் என்று நான் நினைக்கிறேன்.

நானானி said...

தட்டுல வாங்கி வாயில போடுறதுக்குள்ள இவ்ளோ சமாச்சாரமா? பசி வந்த பத்தும் பறந்து போம். அது இந்த மேஜை மரியாதைக்கும் சேத்துத்தானா?
ராஜநடராஜன்? பதிவு நல்லாருக்கு.
குசும்பனின் குசும்பையும் சேர்த்துத்தான்.

ராஜ நடராஜன் said...

// தட்டுல வாங்கி வாயில போடுறதுக்குள்ள இவ்ளோ சமாச்சாரமா? பசி வந்த பத்தும் பறந்து போம். அது இந்த மேஜை மரியாதைக்கும் சேத்துத்தானா?
ராஜநடராஜன்? பதிவு நல்லாருக்கு.
குசும்பனின் குசும்பையும் சேர்த்துத்தான்.//

பசி வந்தா வீட்டை விட்டா நமக்கெல்லாம் இந்த கையேந்தி பவன்,பவன்,அன்னபூர்ணா இந்தமாதிரி இடங்கள்தானுங்க சரிப்பட்டு வரும்.குசும்பனின் குசும்புகள்தான் தமிழ்மணம் அறிந்ததே:)