Followers

Wednesday, August 13, 2008

உற்பத்தியாளர்களுக்கு நல்ல செய்தி


உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத்தில் போர்,விலையேற்றம் போன்ற காரணங்களால் பெட்ரோலின் விலை உலகளவில் ஏற்றத்திலிருந்தாலும் பணவீக்கம் 11% ஏப்ரல்,மே மாதம் முதல் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளுக்கு இதுவரை அளித்து வந்த இறக்குமதியை கூட்டுறவு சங்கங்களே நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொண்டு வரத்திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் என்பது நமது ஊரின் சூப்பர் மார்க்கெட்டுக்களே.இங்கும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் உற்பத்தி செய்பவர்களுக்கு இந்த செய்தி உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்.

முக்கியமான உபயோகிப்பாளர்கள் பொருட்கள் என்னென்ன?

அரிசி
சர்க்கரை
குளிர்பதனப் படுத்தப்பட்ட கோழிகள்
காய்கறிகள்
சோப்
டிடெர்ஜெண்ட் எனப்படும் குளியல் வகையறாக்கள்.

இந்த கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகள் பாதி அரசாங்க சலுகை பெற்ற கடைகள் என்பதாலும்,பணம் கொடுக்கல் வாங்கல் முழுமையாக வங்கியுடன் இணைக்கப்பட்டதாலும் உற்பத்தியாளர்கள் letter of credit வங்கிப் பத்திரங்களுடன் தாராளமாக வியாபாரம் செய்யலாம். மக்கள் தொலைக்காட்சியில் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்விகள் நிறையவே எழுப்பப் படுகிறது. பதிவைக் காண்பவர்கள் நேரடியாகவோ அல்லது மற்ற உற்பத்தியாளர்களுக்கும் கூட தகவல் உதவலாம். உலக சந்தை வியாபாரத்தில் நமது பொருட்களுக்கும் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பங்கள் அமைகின்றன.சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்திய அரசாங்க அலுவல்காரர்களின் Bureaucratic கடுபிடிகள் குறைந்தால் அவர்களுக்கும்,மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

ஏற்றுமதிக்கு தேவையான முக்கிய சாராம்சங்கள்

1. Communication
2. Samples
3. Agreement plus terms & conditions
4. Payment methods .e.g - Letter of Credit.
5. Cost Plus over heads Calculation Plus busines margin

தற்போதைய ஒரு குவைத் தினார் = சுமார் ரூ 150 முதல் 156 வரை. உதாரணத்துக்கு திருப்பூரில் ஒரு டீசர்ட்டின் உற்பத்தி செலவும் லாபமும் சேர்ந்து சுமார் ரூ 25 முதல் 50 வரை ஆகிறதென்றால் இங்கே இறுதி உபயோகிப்பாளரிடம் விற்கும் போது அதன் விலை 125 முதல் 200 வரை ஆகிவிடுகிறது.இந்தக்கணக்கு வியாபாரி,தரகர், சிறுவியாபாரி நிலைகளைக் கடந்து வருவது.
இந்த நிலையைக் கடந்து வந்தால் அடுத்து ஏற்றுமதிக்காக தேவையான ஆவணங்கள்

1. Invoice
2. Packing List
3. Bill of Lading
4. Certificate of Origin

Certiificate of Origin should be certified and stamped by the Indian chamber of commerce or duly attested by the Kuwait Embassy in India.

நான் இதுவரை கவனித்த ஒரு விசயம் ஏனைய நாடுகளின் பொருட்களின் தரம் எந்த நிலையிலிருந்தாலும் பொருளின் packing என்ற கலையில் பொருளை அழகுபடுத்தி விற்பனை திறனை உயர்த்துகிறார்கள்.இதில் நாமும் கவனம் செலுத்துவது அவசியம்.மற்றவை மேற்கொண்டு சந்தேகங்கள் எழும் பட்சத்தில்.வணக்கம்.

15 comments:

பிரேம்ஜி said...

//நான் இதுவரை கவனித்த ஒரு விசயம் ஏனைய நாடுகளின் பொருட்களின் தரம் எந்த நிலையிலிருந்தாலும் பொருளின் packing என்ற கலையில் பொருளை அழகுபடுத்தி விற்பனை திறனை உயர்த்துகிறார்கள்//

சரியா சொன்னீங்க..

சின்னப் பையன் said...

நீங்க இப்படி ஏதாவது ஏற்றுமதி பண்ணிட்டிருக்கீங்களா? அல்லது அந்த மாதிரி ஐடியா இருக்கா?

சின்னப் பையன் said...

உற்பத்தியாளர்கள் இல்லாமே இந்த மார்க்கெடிங் / பாக்கேஜிங் ஆட்களும்கூட இந்த மாதிரி ஏற்றுமதிகளை செய்யலாம்தானே?

ராஜ நடராஜன் said...

//நீங்க இப்படி ஏதாவது ஏற்றுமதி பண்ணிட்டிருக்கீங்களா? அல்லது அந்த மாதிரி ஐடியா இருக்கா?//

நீங்க வேற!அனுபவங்கள் யாருக்காவது பயன்படுமான்னு நல்ல எண்ணத்தில் இந்த பதிவு.நான் தொஷிபா மடிக்கணினி விற்கிறவங்கிட்ட பொழப்பு நடத்திகிட்டு இருக்கேன்.

ராஜ நடராஜன் said...

//உற்பத்தியாளர்கள் இல்லாமே இந்த மார்க்கெடிங் / பாக்கேஜிங் ஆட்களும்கூட இந்த மாதிரி ஏற்றுமதிகளை செய்யலாம்தானே?//

கட்டாயம் செய்யலாம்.திறமையாகவும் செய்யலாம்.என்னைக் கேட்டால் பாக்கேஜிங் போட்டி குறைவு எனவேப் படுகிறது.

கயல்விழி said...

இது போன்ற informative பதிவுகள் ரொம்ப குறைவாகவே வருகிறது.

நல்ல தகவல்கள், நன்றி :)

PS: ப்ளாகில் அனைத்து பதிவுகளையும் ஒரே சிட்டிங்கில் படித்து கருத்து எழுதியதற்கு ரொம்ப நன்றி :)

புதுகை.அப்துல்லா said...

நல்ல தகவலுக்கு நன்றிங்கண்ணா!

ராஜ நடராஜன் said...

//நல்ல தகவலுக்கு நன்றிங்கண்ணா!//

தகவலுடன் யாருக்காவது பயன்படுமான்னு சொல்லிவையுங்கண்ணா.

குரங்கு said...

நல்ல தகவல்...

ஹும்ம்ம்ம்..

நான் என்ன் ஏற்றுமதி பண்ணலாம்?

எதாவது ஐடியா கொடுங்களேன் நடராஜன் பிளீஸ்?


கஷ்டபட்டு ரொம்ப நேரம் யேசுச்சதுல...

.

.

.
எனக்கு வால் ரொம்ப பொருசா இருக்கு... வெட்டி அனுப்பவ?? :D

Unknown said...

//ராஜ நடராஜன் said...
அவசர அவசரமாக சுதந்திரம் கொண்டாடுகிறீர்கள்.ஒரு நாள்தான் பொறுத்திருந்து பதிவை அனுப்புவது?//

"பட் ஐ எம் நாட் எ பேச்சிலர்".

ராஜ நடராஜன் said...

//எனக்கு வால் ரொம்ப பொருசா இருக்கு... வெட்டி அனுப்பவ?? :D //

வாலை நாங்க கூடத்தான் ஒட்ட நறுக்குவோம்.வெட்டுற வாலை எப்படி அழகாப் பெட்டியில வெச்சு அனுப்பிறீங்க என்பதில்தான் ஏற்றுமதி தந்திரமே இருக்கு:-)

ராஜ நடராஜன் said...

//"பட் ஐ எம் நாட் எ பேச்சிலர்".//

இதோ பாருங்கய்யா.தங்ஸ்கிட்ட மொத்து வாங்கறதுக்கு வேண்டி ஒரு நாள் முன்னாலேயே சுதந்திரம் கொண்டாடிறாங்களாம்.என்னத்த சொல்ல!

கூடுதுறை said...

உண்மையிலேயே மிக நல்லபதிவு...

ஆனால் மொக்கை மலர்களே மலரும் ஏரியில் தொழில்மலர் மலர்ந்துள்ளது...

நன்றி

ராஜ நடராஜன் said...

//உண்மையிலேயே மிக நல்லபதிவு...

ஆனால் மொக்கை மலர்களே மலரும் ஏரியில் தொழில்மலர் மலர்ந்துள்ளது...//

வணக்கம் கூடுதுறையாரே!மொக்கை மலர்களும் வேலைப் பளுவின் மன அழுத்தத்தைக் குறைக்கவே செய்கிறது.ஆனால் பிறருக்கு உபயோகமாகும் செய்திகளும்,தொழில்நுட்ப பதிவுகளும் இன்னும் அதிகரிக்கவேண்டும் என்பதே எனது பார்வை.பதிவுகளின் எண்ணிக்கையும் இன்னும் பரவலாக வேண்டும்.உங்கள் கருத்துக்கு நன்றி.

Unknown said...

ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.exportsguide.blogspot.com வாருங்கள்