Followers

Friday, August 1, 2008

பாவமய்யா குசேலன்

பின்னூட்டங்கள் போட்டுப் போட்டு வந்த வண்ணத்துப்பூச்சி விளைவினால் இந்தப் பதிவு.(அதுதாங்க chaos theory ன்னு இப்பவெல்லாம் அடிக்கடி பதிவுகள்ல படுதே)

எல்லோரும் சேர்ந்து இப்படி மொத்து மொத்துன்னு மொத்துனா அந்த மனுசன் என்னதான் பண்ணுவார் பாவம்? விட்டுடுங்கய்யா கைவலிக்குது.போகிற பக்கமெல்லாம் வாங்கய்யா மொத்தறதுக்குன்னுதான் சத்தம் கேட்குது.விட்டுடுங்கய்யா அப்பாவிய.(என்னச்சொன்னேன்)

திருவான்மியூரு கடலுப்பக்கம் நாலஞ்சு பேரோட முன்னால காமிராவ வச்சிகிட்டு ஒருத்தரு பின்னாலேயே நகர இவரு காமிராவுக்கு முன்னால மெல்ல அந்த மணல்ல ஓடுறாரு. மனுசன் தலையில முடியெல்லாம் விக் வெக்காம அசலாவே இருந்தாரு.அப்படி கம்முன்னு கடற்கரைப் பக்கம் தனியா ஓடிகிட்டுக்கிடந்த மனுசன யாரு எப்ப தலையில தூக்கிவெச்சிகிட்டாங்களோ தெரியல.மனுசன் தமிழ்நாட்டுலேயே பெரிய ஆளா ஆகிட்டாரு.

கையத்தூக்கினா ஸ்டைலு,வாயத் திறந்தா மைக் பதிவுன்னு மனுசன் இப்ப ஜமாய்க்கிறாரு.இப்ப அவரு தலையில தொப்பி போட்டுகிட்டுப் பேசினா சத்தம்.நான் சாதாரண மனுசன்னு சொல்லி அவரோட தாய்மொழியில பேசினா குத்தம்.மனுசன் அரசியலுக்கு வரலியேன்னு சிலருக்கு கோபம்.எப்படியாவது அவர அரசியலுக்குள்ள கொண்டுவந்துடனுமுன்னும் சிலருக்கு தாபம்.துவக்கமா கருப்புத்துண்டு போட்டுகிட்டு வை.கோவும்,மொட்டத்தலையோட சோவும் முயற்சி பண்ணி தோத்துப்பிட்டாங்க.அந்த மனுசனுக்கும் வரலாமா வேண்டாமான்னு டைலமொ டைலமொன்னு பாட்டுச்சத்தம் வேற காதுக்குள்ள கேட்டுகிட்டே இருந்தது.இப்ப மொத்தற மொத்துல கொஞ்சம் நஞ்சமிருந்த ஆசையும் விட்டுப்போயிருக்குமுன்னு உறுதியா நம்பலாம்.

பதிவர்கள் மொத்தறுதுக்கு முன்னாடியே மைக்கப் பிடிச்சிகிட்டு இதுதான் சந்தர்ப்பமுன்னு படப்பொட்டி தியேட்டருக்குள்ளே போறதுக்கு முன்னாடியே சகலபாடிகள் பாடித்தீர்த்துட்டாங்க.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணகாரியங்கள்.நமக்கு அரசியல தனியா பார்க்கப் பிடிக்கிறதுல்ல.கூடவே சினிமாவும் சேர்ந்தாத்தான் சுவையாயிருக்குது. அரபிநாட்டுக்காரன் லிப்டன் டீய மட்டும் தனியாக் குடிச்சிடறான்.நம்ம நாக்குக்கு டீயோட வடையும் இருந்தாத்தான் டீ ருசிக்குது.எல்லாமே எதுகையும் மோனையுமா இருந்தாத்தான் வாழ்க்கை இனிக்குது.

நம்மவர்களுக்கு வேணுமின்னா தலையில தூக்கி வெச்சிக்கிடறது.வேண்டாமுன்னா எட்டி ஒரே உதை.அப்படியே பழக்கமாயிடுச்சு.
நமக்கு கோபத்திலும் அன்புக் காட்டறது எப்படின்னு ஒரு சின்ன உதாரணம்.(ச்சின்னப் பையானா இருக்கும்போது மருதமுத்துன்னு நண்பன் அவன் தங்கைய இப்படித்தான் அன்பு காட்டுவான்."ஜெயா!எட்டி உதைச்சேன்னா அப்படியே அட்டாலிக்குப் போயிடுவே!ஜாக்கிரதை)அப்படித்தான் குசேலன் சகபதிவுகளையும் படிக்கும்போதும் மனசுக்குப் பட்டது.

தொப்பி போட்டிகிட்டு பேசிகிட்டுப் பேசிய தமிழையும் அரசியல் சூழலைத்தனியாகவும் மேக்கப்போடாமல் வியாபார சூழலுக்கான காமிரா முன்னால் தனியாகப் பேசிய கன்னடத்தையும் தனியாகப் பிரிக்கும் பாங்கும் இருந்தால் பதிவுகளிலும் மைக்குகளிலும் அந்த அப்புராணி மனுசனை இந்த வாங்கு வாங்கி வறுவல் செய்யத் தேவையிருக்காது.மலையாள மொழிக்காரனைத்தவிர தென்னகத்தில அரசியலும் சினிமாவும் அண்ணன் தம்பிகளா ஆகிப்போன அவலங்களில் சிக்கிக்கொண்டு வேண்டாமய்யா இந்த வம்புன்னு இமயமலை வரைக்கும் ஓடியும் கூட அந்தப் புள்ளப்பூச்சிய நாம் விட்ட பாடாக் காணோம்.

ஒரு தலைவன் தவறு செய்யும்போது ஒரு தொண்டன் கோபம் கொள்வதில் அர்த்தமிருக்கிறது.தலைவனில்லாத தலைவனாகும் விருப்பமில்லாத மனிதனை தலைவனாக தானே கற்பனை செய்யும் கோளாறுகளினாலும்,சொல்வதெற்கெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கும் வியாக்கியானங்களால் வரும் விபரீதங்கள் இந்தக் கோபங்கள்.எப்படியோ அடுத்த திகில் சம்பவங்களோ,தினசரி மாற்றங்களோ நிகழும் வரை எங்களிடம் சரக்கிருக்கிறது புலம்பித்தீர்க்க.

இனி மொத்தறதுக்கும் வறுவலுக்கும் வழிவிட்டு விலகி நிற்கிறேன்.அனானிகள் மட்டும் அந்த மூலையிலே நின்னு வேடிக்கை பாருங்க:)

49 comments:

சின்னப் பையன் said...

சரி. நீங்களும் ஐக்கியமாயிட்டீங்களா....

ராஜ நடராஜன் said...

// சரி. நீங்களும் ஐக்கியமாயிட்டீங்களா...//

இப்போதைக்கு ஹி...ஹி... மட்டும் சொல்லிக்கிறேனுங்க:)

பிரேம்ஜி said...

இன்னொரு சூடான இடுகை ரெடி..

ராஜ நடராஜன் said...

// இன்னொரு சூடான இடுகை ரெடி..//

பிரேம்ஜி! உங்கள் பதிவுகள் சூடான இடுகையில இடம் பிடிக்கிறதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது:)

G.Ragavan said...

ஐயா.... நான் என்னைக்குமே ரஜினி ரசிகர் கெடையாது. அவரு நல்ல படம் நடிச்சா கண்டிப்பா பாத்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனா எனக்கு வெவரம் தெரிஞ்சி அவரு நல்லபடம் நடிக்கலை. அவரு நடிச்ச நல்ல படமெல்லாம் பழைய படங்களா இருக்குது. அதையும் பாத்திருக்கேன்.

அவரு வெறும் நடிகர்தான். அப்படித்தான் நான் முந்தியும் நெனச்சிக்கிட்டிருந்தேன்..இப்பவும் நெனைச்சிக்கிட்டிருக்கேன்.

ஆனா அவரைத் தலைவர்னு நம்ம பயக ரொம்பப் பேரு சொல்றாங்க. அதுவும் அப்பிடியோன்னு நெறையப் பேரு நம்பீட்டாக வேற.

இப்பத்தானத் தெரியுது. அவரைத் தலைவர்னு சொன்னவங்களுக்கே அவரு புள்ளப்பூச்சியாத் தெரிஞ்சிருக்காருன்னு. இது மொதல்லயே தெரிஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனைகள் வந்திருக்காதுல்ல.

ஆனா ஒன்னுங்க.. இனிமே ரஜினி சினிமால சண்டை போட்டா... கண்டிப்பா சிரிப்புதாங்க வரும். :D

கயல்விழி said...

//.மனுசன் அரசியலுக்கு வரலியேன்னு சிலருக்கு கோபம்//
சும்மா இருந்த மக்களை படம் ஓடறத்துக்காக, "இதோ வரேன், இப்போ வரேன், வந்துகிட்டே இருக்கேன்" என்றெல்லாம் ஏமாற்றி பிறகு அல்வா கொடுத்தால் யாருக்கு தான் கோபம் வராது?

//எப்படியாவது அவர அரசியலுக்குள்ள கொண்டுவந்துடனுமுன்னும் சிலருக்கு தாபம்.//

இப்போ கன்னடர் காலில் விழுந்த பிறகு பஞ்சாயத்து தேர்தலில் கூட இவர் நிக்க முடியாது.


உங்களுடைய பின்நவீன எழுத்து நல்லா இருக்கு.

துளசி கோபால் said...

கணக்குவழக்கில்லாம 27 புள்ளைங்களைப் பெத்துக்கிட்டுக் கஷ்டப்பட்டவரைப் பாவமுன்னா சொல்றீங்க?

அட..... நான் தலைப்பைப் பற்றி(தான்) சொல்றேங்க.

கோவை விஜய் said...

பரபரப்பு விசயத்தை வித்தியாசமாகச் சொல்லியுள்ளீர்கள்.



கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ராஜ நடராஜன் said...

//நான் என்னைக்குமே ரஜினி ரசிகர் கெடையாது. அவரு நல்ல படம் நடிச்சா கண்டிப்பா பாத்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனா எனக்கு வெவரம் தெரிஞ்சி அவரு நல்லபடம் நடிக்கலை. அவரு நடிச்ச நல்ல படமெல்லாம் பழைய படங்களா இருக்குது. அதையும் பாத்திருக்கேன்.//

வாங்க ஜி.ரா.வணக்கம்.
நான் அறிந்து முள்ளும் மலரும்.அந்த சாதனை கூட மகேந்திரனின் கதைக்கும் இயக்கத்துக்கும் சொந்தமானது.பாலசந்தரின் இயக்கத்திலும் மனுசன் கொஞ்சம் வித்தியாசம் காட்டவே செய்தார்.ஸ்டைல் முத்திரைகளுக்கும் கொஞ்சம் மார்க் தரலாம்.

ராஜ நடராஜன் said...

// சும்மா இருந்த மக்களை படம் ஓடறத்துக்காக, "இதோ வரேன், இப்போ வரேன், வந்துகிட்டே இருக்கேன்" என்றெல்லாம் ஏமாற்றி பிறகு அல்வா கொடுத்தால் யாருக்கு தான் கோபம் வராது?//

எல்லோருக்குமே ஒரு காலத்தில் அவருக்கு சிம்மாசனத்தை தாம்பூல தட்டுல வைத்துக்கொடுக்கும் ஆசை இருந்தது.கலைஞர் , ஜெயலலிதாவின் காழ்ப்பு அரசியலுக்கு மாற்றுக்கருவியாக இருப்பாரோ என்ற நப்பாசையில்.

நான் எப்ப வருவேன்னு யாருக்குமே தெரியாது.ஆனால் வரவேண்டிய நேரத்துக்கு கட்டாயம் வந்திடுவேன் வசனமெல்லாம் அந்த ஆசை இருந்த காலத்துல மேடம்.இப்ப அந்த வசனமெல்லாம் மழையில நனைஞ்ச பட்டாசு.

ராஜ நடராஜன் said...

// இப்போ கன்னடர் காலில் விழுந்த பிறகு பஞ்சாயத்து தேர்தலில் கூட இவர் நிக்க முடியாது. //

நிக்கிற தைரியம் இனியும் வருமுன்னு நினைக்கிறீங்க?

ராஜ நடராஜன் said...

// உங்களுடைய பின்நவீன எழுத்து நல்லா இருக்கு. //

மேடம்! இந்த பின்நவீன எழுத்து எனும் வார்த்தையையே நான் தமிழ்மணத்துக்கு வந்துதான் கற்றுக்கொண்டேன்.சரி அப்படீன்னா என்னன்னு சக பின்நவீனத்து பதிவர்களைப் படித்தால் தலைகால் புரியாத எழுத்துக்கள்.என்னையும் அந்த லிஸ்டுல சேர்த்திட்டீங்களே:)அதுல நல்லாயிருக்குன்னு ஒரு குட்டு வேற.

ராஜ நடராஜன் said...

// கணக்குவழக்கில்லாம 27 புள்ளைங்களைப் பெத்துக்கிட்டுக் கஷ்டப்பட்டவரைப் பாவமுன்னா சொல்றீங்க?

அட..... நான் தலைப்பைப் பற்றி(தான்) சொல்றேங்க.//

இருவருமே பாவமய்யா குசேலன்கள்தானுங்க மேடம்:)

ராஜ நடராஜன் said...

// கணக்குவழக்கில்லாம 27 புள்ளைங்களைப் பெத்துக்கிட்டுக் கஷ்டப்பட்டவரைப் பாவமுன்னா சொல்றீங்க?//

மேடம் அக்கம்பக்கத்துல 27 புள்ளைக தலைமுறை யாராவது இருந்தா கேட்டுச்சொல்லுங்க!அவங்ககிட்டேயும் இந்த நவீனக் குசேலனைப் பற்றிக் கருத்து என்னன்னு கேட்டுவிடலாம்:)

ராஜ நடராஜன் said...

// பரபரப்பு விசயத்தை வித்தியாசமாகச் சொல்லியுள்ளீர்கள். //

இந்த பரபரப்பு இன்னும் கொஞ்ச நாட்களில் ஓய்ந்துவிடும்.வாங்க நாம் உங்க புகைப்பேழைப் பக்கம் போகலாம்.

கோவை விஜய் said...

அவரின் முகவரி..

திரு.லோகநாதன்
எஸ்.எம்.இன்ஜீனியரிங்,
697,ராமநாதபுரம்,
கோயம்புத்தூர்-45.

செல்- 99526 21150

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

குரங்கு said...

உண்மை.

ரெம்ப பாவம் ரஜினி...

Anonymous said...

"We know Rajini belongs to Karnataka and we are sure that he had been pressurised to make anti-Kannada statements. But now with this apology he has proved to be a golden hearted personality who is prepared to accept his mistake. Being an icon in the film industry, he has proved that he is also a great human being who can assuage the hurt feelings of people by a simple apology. He has really risen in our esteem," Gowda, president of Karnataka Rakshana Vedike said.

புதுகை.அப்துல்லா said...

ஒரு தலைவன் தவறு செய்யும்போது ஒரு தொண்டன் கோபம் கொள்வதில் அர்த்தமிருக்கிறது.தலைவனில்லாத தலைவனாகும் விருப்பமில்லாத மனிதனை தலைவனாக தானே கற்பனை செய்யும் கோளாறுகளினாலும்,சொல்வதெற்கெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கும் வியாக்கியானங்களால் வரும் விபரீதங்கள் இந்தக் கோபங்கள்.
//

சபாஷ்!சரியான வார்த்தைகளில் சரியான கோணம்.

பரிசல்காரன் said...

குசேலனைப் பொறுத்தவரை நடுனிலை விமர்சகர்கள் ரஜினியை குறிவைத்து திட்டுவதாக உங்கள் பதிவு ஆதங்கப்படுகிறது. ரஜினியை யாரும் குறை சொல்லவில்லை. படத்தில் ஒரு மண்ணும் சரியில்லை என்பதுதான் வருத்தமே.

இந்த லட்சணத்தில், ரஜினியையாவது சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
அதையும் வாசு செய்யவில்லை!
ரஜினியும் காமெடி என்ற போர்வையில் வரும், காம நெடிக்கு துணை போவது வருத்தமோ வருத்தமான விஷயம்!
அதுதான் என்னைப் போன்றோரின் வருத்தமே!

ராஜ நடராஜன் said...

// உண்மை.

ரெம்ப பாவம் ரஜினி...//

குரங்கு கூட ரஜினி ரெம்ப பாவம்ங்குது:)

ராஜ நடராஜன் said...

// சபாஷ்!சரியான வார்த்தைகளில் சரியான கோணம்.//

அண்ணா!சபாஷ்க்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

// ரஜினியை யாரும் குறை சொல்லவில்லை. படத்தில் ஒரு மண்ணும் சரியில்லை என்பதுதான் வருத்தமே.//

பரிசல்காரரே! நான் இன்னும் படமே பார்க்கவில்லை.என்னுடைய ஆதங்கமெல்லாம் அந்த மனுசனை ஒரேயடியாக தலையில் தூக்கிவைத்துக்கொள்வதும் பின் டமால்ன்னு கீழே தள்ளிவிட்டு விடுவதும்தான்.பாவம் மனுசன்!புகழை எப்படி கையாள்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறார்.

rapp said...

ராஜ நடராஜன், நான் நெனச்சதையே தெளிவா எழுதியிருக்கீங்க.

//நமக்கு அரசியல தனியா பார்க்கப் பிடிக்கிறதுல்ல.கூடவே சினிமாவும் சேர்ந்தாத்தான் சுவையாயிருக்குது. அரபிநாட்டுக்காரன் லிப்டன் டீய மட்டும் தனியாக் குடிச்சிடறான்.நம்ம நாக்குக்கு டீயோட வடையும் இருந்தாத்தான் டீ ருசிக்குது.எல்லாமே எதுகையும் மோனையுமா இருந்தாத்தான் வாழ்க்கை இனிக்குது.
//
சூப்பரான வரிகள்.

//ஒரு தலைவன் தவறு செய்யும்போது ஒரு தொண்டன் கோபம் கொள்வதில் அர்த்தமிருக்கிறது.தலைவனில்லாத தலைவனாகும் விருப்பமில்லாத மனிதனை தலைவனாக தானே கற்பனை செய்யும் //
சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க :):):)
கடைசி கடைசியா எனக்கொரு சந்தேகம், இருக்கிற கோவத்தில் வேற எங்கயாவது கேட்டா பயங்கரமா திட்டு விழுமோன்னு பயமாயிருக்குங்க ராஜ நடராஜன். அதனால் இங்கக் கேக்குறேன், எல்லாரும் அவர் வெளியிட்ட அறிக்கைய இந்த கும்மு கும்மறாங்களேன்னு, நாளிதழை எடுத்து அறிக்கயப் படிச்சேன், அதுல அவர் 'நான் அப்போ ரவுடிங்களைத்தான் ஒதைக்கனும்னு சொன்னேன், இப்போவும் அதுக்கு நான் மன்னிப்பு கேக்கலை, ஆனா ஒருவேளை கன்னட பொதுமக்கள் மனசு புண்பட்டிருந்தா மன்னிப்பு கேட்டுக்கரேன்னுதானே', என்கிற தினுசில்தான் சொல்லிருக்காரு, அப்புறம் ஏன் எல்லாரும் அவர் வாட்டாள் நாகராஜ் கால்ல விழுந்துட்டாமாதிரி திட்டறாங்க? இது சந்தேகம்தான், நான் படிச்ச நாளிதழ்ல மாத்தி கொடுத்திருந்தா, எல்லாரும் இதை சொன்னதுக்கு மன்னிச்சுக்கங்க :):):)

Anonymous said...

What I see here is a good human being being crucified because he does not meet, off screen, your expectation of loyalty to language. A scoundrel, be he a politician or an actor, will be embraced and tolerated if only he exhibits chauvinism or loyalty to Tamil. But someone from Karnataka. Earning from TN. Does not matter if he is a good man. He WILL be under a constant litmus test for his loyalty to Tamil and WILL be crucified at all available opportunities. Ketta, you will say he is the one who espouses the cause of tamil in movies. So? You are the guys who say an actor should be seen as an actor. The free advice that what he is seen as in the movies should not be confused with what he is off screen. Aren't you doing the same thing that Rajini fans do? We are quick to see the hypocrisy in others. And blind to our own. Ragavan will laugh at Rajini the next time he sees a Rajini as a hero. Well, I assume he will also, since he is not a hypocrite, laugh at Kamal when Kamal plays a monogamist. I am sure he keeps track of all professionals as to what they do outside, compare with what they do in their profession and have a scorecard for laughing index. Whatever. The crab story is being played in action. So time to play Rajini's frog story too. Off to see Kuselan. To be fair, I have to admit, I am disappointed with Rajini and this affair has punctured the mood of celebration. I wish Rajini was circumspect in his statements. But then I don't see him as a god, just as someone I like on screen and admire off screen. So what? Instead of 10 whistles, I will do with three. And I wish him well.
I forgot. The boycott of Rajini movies? My wishes for it to swell and become like a Swadeshi movement or Salt Satyagraha. One hundred years from now, when Tamil lives, you will be hailed as this genearation's Gandhi protecting tamil honour by organizing a boycott of Rajni films.

Natarjan, 'You' here does not mean you! Sorry for the comment in English. I don't have ekalappai anymore.

Swami

புதுகை.அப்துல்லா said...

ச்சின்னப் பையன் said...
சரி. நீங்களும் ஐக்கியமாயிட்டீங்களா....

//

rippeettu

அகஆராய்ச்சியாளன் said...

// உண்மை.

ரெம்ப பாவம் ரஜினி...//

குரங்கு கூட ரஜினி ரெம்ப பாவம்ங்குது:)//

குரங்கோட வருத்தமும்,அதுக்கு உங்க ரியாக்க்ஷனும் தூள்.

ராஜ நடராஜன் said...

// rippeettu //

அண்ணா இதை ரிப்பீட்டேய் ன்னு சொல்லணும்:)

ராஜ நடராஜன் said...

// உண்மை.

ரெம்ப பாவம் ரஜினி...//

குரங்கு கூட ரஜினி ரெம்ப பாவம்ங்குது:)//

குரங்கோட வருத்தமும்,அதுக்கு உங்க ரியாக்க்ஷனும் தூள். //

அகஆராய்ச்சியாளரே! இப்பத்தான் பார்த்தேன்.ரெம்ப பாவம் சொல்லிட்டு உங்கப் பின்னூட்டத்தப் பார்த்துவிட்டு சிரிக்க வேற செய்யுது:))))) சந்தேகமிருந்தா குரங்கோட படத்தைப் பாருங்களேன்:)

குசும்பன் said...

பதிவில் பல அறிய நல்ல கருத்துக்கள் கிடைப்பதால் நான் கும்முவது போல் நச்சுன்னு ஒரு பதிவு பிளீஸ்!!!

குசும்பன் said...

//அரபிநாட்டுக்காரன் லிப்டன் டீய மட்டும் தனியாக் குடிச்சிடறான்.நம்ம நாக்குக்கு டீயோட வடையும் இருந்தாத்தான் டீ ருசிக்குது//

ஆமாங்க இங்க வரும் நம்ம ஊரு பயமக்காவும்...கட்டாஞ்சாயான்னு சொல்றானுங்க என்னாடான்னு பார்த்தா பால் போடாம வெறு டீ தூள் போட்டு கொதிக்க வெச்ச தண்ணி.

இதே வீட்டில் போட்டு கொடுத்தா பயபுள்ள கொத்ச்சு போய் இருக்கமாட்டானுங்க:)))

குசும்பன் said...

//எல்லாமே எதுகையும் மோனையுமா இருந்தாத்தான் வாழ்க்கை இனிக்குது.//

அப்ப ரம்பாவும்,மேனகையும் இருந்தா வாழ்கை என்னா கசக்குமா?:))

குசும்பன் said...

//தலைவனில்லாத தலைவனாகும் விருப்பமில்லாத மனிதனை தலைவனாக தானே கற்பனை செய்யும் கோளாறுகளினாலும்,சொல்வதெற்கெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கும் வியாக்கியானங்களால் வரும் விபரீதங்கள் இந்தக் கோபங்கள்.//

For யுவர் இன்பர்மேசன்-- விசு விட்டு போன அரட்டை அரங்கம் சேர் சும்மா இருக்காம்

குசும்பன் said...

//தினசரி மாற்றங்களோ நிகழும் வரை எங்களிடம் சரக்கிருக்கிறது புலம்பித்தீர்க்க. //

சரக்கை பதுக்கி வைப்பது அந்த நாட்டு சட்டபடி தப்பு இல்லையா?

குசும்பன் said...

எக்ஸ் கூயுஸ் மீ ஜெண்டில் மேன் தலைப்பு பாதியில் நிற்கிறது..

பாவமய்யா குசேலன் என்று அதோடு

“படம் பார்த்தவர்கள்” என்று சேர்த்து தலைப்பை நிறைவு செய்யவும்.

குசும்பன் said...

G.Ragavan said...
ஆனா ஒன்னுங்க.. இனிமே ரஜினி சினிமால சண்டை போட்டா... கண்டிப்பா சிரிப்புதாங்க வரும். :D//

அப்ப இது வரை வரவில்லையா? :((
படையப்பாவில் சட்டைய கழட்டிவிட்டு அடிக்கும் பொழுது ...அப்பாஸ் வாவ் என்று சொல்லும் பொழுது சிரிக்கல ..பொய் சொல்லாம சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

// பதிவில் பல அறிய நல்ல கருத்துக்கள் கிடைப்பதால் நான் கும்முவது போல் நச்சுன்னு ஒரு பதிவு பிளீஸ்!!!//

மெய்யாலுமா? வார இறுதியில் கும்முறதுக்கு ஏதாவது தேறுதான்னு பார்க்கிறேன்.

அய்! நான் இப்ப காமிரா பெரியவரப் பார்க்கப்போறேனே!வந்து பின் மிச்சத்துக்குப் பதில் சொல்வேனாம்:)

குசும்பன் said...

Blogger ராஜ நடராஜன் said...
அய்! நான் இப்ப காமிரா பெரியவரப் பார்க்கப்போறேனே!வந்து பின் மிச்சத்துக்குப் பதில் சொல்வேனாம்:)//

அப்ப நான் கும்முவதற்கு ஒரு பதிவு வர போகுது:))))

//மெய்யாலுமா? வார இறுதியில் கும்முறதுக்கு ஏதாவது தேறுதான்னு பார்க்கிறேன்.//

அப்படி சொல்லிட்டே ஒரு மைல்ட் கும்மி நடந்து இருப்பதை கவனிக்கவில்லையா:))ஆபிசர்

ராஜ நடராஜன் said...

// ஆமாங்க இங்க வரும் நம்ம ஊரு பயமக்காவும்...கட்டாஞ்சாயான்னு சொல்றானுங்க என்னாடான்னு பார்த்தா பால் போடாம வெறு டீ தூள் போட்டு கொதிக்க வெச்ச தண்ணி.//

அமீரக சேட்டன்க கூட பழகி இதுகூடத் தெரியல.கட்டாஞ்சாயா என்பது சுடுதண்ணிக்குள்ள டீதூள் போட்டு வெல்லமோ கருப்பட்டியோ நறுக்குன்னு ஒரு கடி கடிச்சிட்டு டீத்தண்ணிய அப்படியே ஒரு மொடக் விடுவதற்குப் பெயர்தான் கட்டாஞ்சாயா.

உங்க மாதிரி ஆளுகளுக்காக வேண்டியே இட்ட பதிவுதான் " சாரே இவ்ட வந்னு மலையாளம் படிக்கா" :)

ராஜ நடராஜன் said...

// எக்ஸ் கூயுஸ் மீ ஜெண்டில் மேன் தலைப்பு பாதியில் நிற்கிறது..

பாவமய்யா குசேலன் என்று அதோடு

“படம் பார்த்தவர்கள்” என்று சேர்த்து தலைப்பை நிறைவு செய்யவும். //

"படம் பார்த்தவர்கள்" இதுக்குப் பேருதான் குசும்பன் என்பது:)

ராஜ நடராஜன் said...

// படையப்பாவில் சட்டைய கழட்டிவிட்டு அடிக்கும் பொழுது ...அப்பாஸ் வாவ் என்று சொல்லும் பொழுது சிரிக்கல ..பொய் சொல்லாம சொல்லுங்க.//

இப்ப கட்டாயம் சிரிக்கிறோம்:)))))

அப்பாஸின் வாவ் சட்டையக் கழட்டுனதுக்கா அல்லது அடிக்கிற ஸ்டைலுக்கா?

ராஜ நடராஜன் said...

// அப்ப நான் கும்முவதற்கு ஒரு பதிவு வர போகுது:)))) //

கூட பரிசல்காரனையும் சேர்த்துக்குங்க! அவர்தான் உங்கள் கும்மிப்பாட்டுக்கு சரியான மத்தளம்.

ராஜ நடராஜன் said...

swami!Basically rajani is a good human being and did not constructed his personal way of life into self image creation.What made everybody to get angry with him is that the movie propaganda of saying his passion for tamils and not reflecting that statement in his real life.Its really surprise to see the younger generation of his fanfanatic acts. Err is human and rajani is too not above that nature's law.He got caught between two different situation issues and it's lession for him to think and utter a word in near future.

One way to compromise ourselves is that his present statement could patch up the ill feelings in near future between tamilnadu and karnadaka.Atleast he should aim at that direction to resolve the enemity between the two states.

Thanks for your visit.

ராஜ நடராஜன் said...

//அப்ப ரம்பாவும்,மேனகையும் இருந்தா வாழ்கை என்னா கசக்குமா?:))//

ரம்பாவை மானாட மயிலாட நிகழ்ச்சியில் புன்சிரிப்புடன் பார்க்கிறேன்.அது யாரு மேனகை?

ராஜ நடராஜன் said...

//கடைசி கடைசியா எனக்கொரு சந்தேகம், இருக்கிற கோவத்தில் வேற எங்கயாவது கேட்டா பயங்கரமா திட்டு விழுமோன்னு பயமாயிருக்குங்க ராஜ நடராஜன். அதனால் இங்கக் கேக்குறேன், எல்லாரும் அவர் வெளியிட்ட அறிக்கைய இந்த கும்மு கும்மறாங்களேன்னு, நாளிதழை எடுத்து அறிக்கயப் படிச்சேன், அதுல அவர் 'நான் அப்போ ரவுடிங்களைத்தான் ஒதைக்கனும்னு சொன்னேன், இப்போவும் அதுக்கு நான் மன்னிப்பு கேக்கலை, ஆனா ஒருவேளை கன்னட பொதுமக்கள் மனசு புண்பட்டிருந்தா மன்னிப்பு கேட்டுக்கரேன்னுதானே', என்கிற தினுசில்தான் சொல்லிருக்காரு, அப்புறம் ஏன் எல்லாரும் அவர் வாட்டாள் நாகராஜ் கால்ல விழுந்துட்டாமாதிரி திட்டறாங்க?//

ராப்!ஒகேனக்கலின் காலகட்டத்தின் அந்தக்கூட்டத்தில் எல்லோருமே கோபத்தின் உச்சத்தில் இருந்தாங்க!ரஜனியின் பிரச்சினை என்னவென்றால் அவருக்கு மனசுக்குள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரிவதில்லை.அந்த சூழலின் மனநிலையில் அவர் பேசியது உதைக்கவேண்டாமா என்ற கொச்சை வாயில் வராமலிருந்தால் மனுசன் தப்பித்திருப்பார்.கலைஞரைப் பாருங்க என்ன வார்த்தை ஜாலம்?எத்தனை கேள்விகளின் அம்பு வீச்சுகளுக்குப் பதில்கணை தொடுக்கிறார்?

ராஜ நடராஜன் said...

// சரக்கை பதுக்கி வைப்பது அந்த நாட்டு சட்டபடி தப்பு இல்லையா? //

குசும்பரே! ஏன் இந்த கத்து கத்துறீங்க?போலிஸ்காரன் காதுல விழுந்து தொலைக்குப் போகுது!

ராஜ நடராஜன் said...

// விசு விட்டு போன அரட்டை அரங்கம் சேர் சும்மா இருக்காம் //

அந்த மனுசனைப் பத்திப் பேசி மறந்துபோயிருக்கிறவங்களையெல்லாம் கொதிக்க வைக்காதீங்க.இன்னும் குசேலன் கோபமே தீராம பதிவர்கள் இன்னும் பதிவு போட்டுகிட்டு இருக்குறாங்க.

aathirai said...

சத்யராஜ் கூட நல்லா பொடி வெச்சு பேசறார். ரஜினி எழுதி வைத்து பேசலாம். உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையா வார்த்தைகள் வந்து விழ மாட்டிகிட்டார். இவர் எல்லா கன்னடர்களையும் அடிக்க சொல்லலை என்றுதான் நினைக்கிறேன். இந்த விளக்கத்தை மட்டும் கொடுத்துட்டு விட்டிருக்கலாம். lkg மாதிரி பாடம் கத்துகிட்டேன். இனி இப்படி பேச மாட்டேன். இப்படியெல்லாம் சொல்லி வாட்டாள் மாதிரி ஆட்களுக்கு இப்போ டானிக் கொடுப்பது போல இருக்கு. அதுதான் பிரச்சினையே. அடுத்த முறை இன்னும் தெம்பா கலாட்டா பண்ணுவாங்க.

இந்த அரசியல் பிரச்சனைகளில் சினிமாக்காரன் தலையிட்டா , அசல் பிரச்சினை காணாமல் போய் அவன் என்ன சொன்னான், அவன் சொன்னதை பத்தி இவன் என்ன சொன்னான் அதப்பத்தி இன்னொருத்தன் என்ன சொன்னான் நு பத்திரிகைகள் , (இப்ப பதிவுகளும்) எழுதி குவிச்சுடறோம். பத்திரிகைக்கு இதில் நிறைய துட்டு வருது.

ராஜ நடராஜன் said...

//சத்யராஜ் கூட நல்லா பொடி வெச்சு பேசறார். ரஜினி எழுதி வைத்து பேசலாம். உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையா வார்த்தைகள் வந்து விழ மாட்டிகிட்டார். இவர் எல்லா கன்னடர்களையும் அடிக்க சொல்லலை என்றுதான் நினைக்கிறேன். இந்த விளக்கத்தை மட்டும் கொடுத்துட்டு விட்டிருக்கலாம். lkg மாதிரி பாடம் கத்துகிட்டேன். இனி இப்படி பேச மாட்டேன். இப்படியெல்லாம் சொல்லி வாட்டாள் மாதிரி ஆட்களுக்கு இப்போ டானிக் கொடுப்பது போல இருக்கு. அதுதான் பிரச்சினையே. அடுத்த முறை இன்னும் தெம்பா கலாட்டா பண்ணுவாங்க.

இந்த அரசியல் பிரச்சனைகளில் சினிமாக்காரன் தலையிட்டா , அசல் பிரச்சினை காணாமல் போய் அவன் என்ன சொன்னான், அவன் சொன்னதை பத்தி இவன் என்ன சொன்னான் அதப்பத்தி இன்னொருத்தன் என்ன சொன்னான் நு பத்திரிகைகள் , (இப்ப பதிவுகளும்) எழுதி குவிச்சுடறோம். பத்திரிகைக்கு இதில் நிறைய துட்டு வருது.//

வணக்கம் அதிரை!உங்களுடைய பார்வையும் சரியாகத்தானிருக்கு.இவ்வளவு நாட்கள் ரஜனி பொதுப்பார்வையில் இருக்கிறார்.வார்த்தைகளை அளந்தே பேசியிருக்கலாம்.நீங்கள் சொல்வதுபோல் ஒகேனக்கல் பிரச்சினை திசை மாறும் ஆபத்தும் உண்டு.நேற்று துரைமுருகன் திட்டம் நிறைவேறும்,கர்நாடகா போல் பரபரப்பு செய்திகள் விடமாட்டோம் என்கிறார்.கர்நாடக அரசோ ஆற்றின் மேற்கு புரத்தில் மீன்வளத்துறை நிறுவுவதற்கான திட்டங்களை தயாரிக்கிறது.காவிரி மாதிரி ஒகேனக்கலும் இருமாநிலங்களின் நல்லுறவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சாத்தியங்கள் இருக்கும்போல் தெரிகிறது.

பத்திரிகைகள் வியாபார நோக்குடன் துட்டு சம்பாதிக்கும் நினைப்பில் செய்திகள் இடுகிறது.நாம் அப்படியா?நாம் கருத்து பரிமாறல்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்லவா எழுதுகிறோம்.