Followers

Wednesday, August 6, 2008

கண்ணில் படும் தங்கிலீஷ்

பின்னூட்டம் படிக்கும் விளைவினால் உண்டான பதிவு.

பதிவுகளிடுவதை விட அதிகமாக சக பதிவர்களின் மனவியலுக்குத் தக்கவாறான பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்வையிடுவதில்தான் ஆவல் அதிகரிக்கிறது.ஒரு பதிவரின் கருத்துக்கள் பல கோணங்களில் வந்து விழும் பின்னூட்டங்களே பதிவின் சுவையையும், பார்வைகளின் பரிணாமங்களையும் அதிகரிக்கின்றன.

பெரும்பாலான பதிவுகளைப் பார்வையிட்டு பின் தொடரும் பின்னூட்டங்களைக் காணும்போது பெரும்பான்மையான பின்னூட்டங்கள் உண்மையிலேயே அசத்துகின்றன.ஆனால் எனக்குப் புரியாத மொழியொன்று பின்னூட்டங்களில் திடீரென குட்டிக்கரணம் போட்டு பார்வையின் முன்வந்து நிற்கின்றது. எழுத்தில்லா மொழிகள் எத்தனையென்று எனக்குத் தெரியாது.துளுவுக்கு எழுத்தில்லை என அறிகிறேன்.(தவறாக இருந்தால் அறியத்தரும்பட்சத்தில் திருத்திக்கொள்ள விரும்புகிறேன்) அதேபோல் கோவா மாநிலத்தில் பேசப்படும் கொங்கணிக்கும் எழுத்துரு கிடையாது.இன்னும் கொஞ்சம் தேசம் கடந்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படும் தகாலக் (Tagalog) மொழிக்கும் எழுத்துரு கிடையாது.

இங்கு குறிப்பிட்ட மொழிகள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உச்சரிப்பின் நிலைகொண்டு மொழியாகத் தோற்றம் கொள்கிறது. உதாரணத்துக்கு, ஆடுமாடு வின் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் பதிவின் நடையில் சில சொற்றொடர்கள் பார்வைக்கு.

நலமா? = பொராமரே? என்ற கோவாவின் கொங்கணி வார்த்தை ஆங்கில எழுத்துருவுக்கு மாறும்போது = Poramare?

நலமா?=கொமஸ்தக்கா? என்ற பிலிப்பைன்ஸ் தேசத்து தகாலக் வார்த்தை ஆங்கில எழுத்துருவுக்கு மாறும்போது = Komastaka?

இனி தங்கிலீஷ்க்கு வருவோம். பதிவிற்கு பதிவன்பர் பின்னூட்டமிடுகிறாராம்!

ungal pathivu ass athukirathu.enaku ore athisayam eppadi ungalal ippadi kirukka mudikirathenru?

மேலே குறிப்பிட்ட தங்கிலீஷை இகலப்பையில் உழுதோ 99 ல் நிபுணத்துவம் இருந்தால்

//உங்கள் பதிவு அசத்துகிறது.எனக்கு ஒரே அதிசயம் எப்படி உங்களால் இப்படி கிறுக்க முடிகிறதென்று?//

என்று பின்னூட்டமிட்டால் தமிழுக்கும் அழகு!பதிவர் வட்டத்துக்கும் ,என்னைப் போன்ற தங்கிலீஷை உற்று நோக்கியோ தடவி தடவியோ படிப்பவர்களின் மணித்துளிகள் வீணாக்கப்படாமலும் முக்கியமாக மண்டைக்குடைச்சல் இல்லாமலும் இருக்கும். தங்கிலீஷ் வரும்போது பெரும்பாலும் படிக்காமல் தாண்டிவிடுகிறேன். அதனால் தங்கிலிஷ் எழுதிய உங்களுக்கும் உங்கள் எழுத்து என்னைப்போன்றவர்களுக்குப் போய்ச்சேராத இழப்பு.

பதிவிலும் ஆழ்ந்துவிட்டு ஏனைய பின்னூட்டங்களையும் ரசித்துவிட்டு ஒரே ஒரு தங்கிலிஷ் பின்னூட்டத்தைப் படிக்காமல் இழக்கும்போது அழகான ஓவியத்தை ரசித்துவிட்டு அதில் ஏதோ ஒன்று குறையான உணர்வு.

சில சமயம் வேலைப்பளுவின் ஊடே இகலப்பையில் உழ முடியாத தருணங்கள் நேரிடும் போது இப்படியாவது

You are looking at one side of the coin! Let me explain my point of view....

என்று ஆங்கிலத்திலாவது பின்னூட்டம் போடலாமே!

கும்மியர்களுடன் கொட்டம் அடிப்போம்,நகைச்சுவை காண்போம்:)உரைநடை பழகுவோம்,கவிதை வடிப்போம்,இலக்கியம் கொண்டு வருவோம்,எழுத்து வாசனை அறிவோம்,பார்வைகளின் பரிணாமங்களைத் தொடுவோம்,சி,வி.ஆர். சித்திரம் பழகுவோம்,பிரேம்ஜி தொழில்நுட்பம் உணர்வோம்.சிந்தனை கொள்வோம்,பதிவுகள் வளர்ப்போம்,புரியாத பின்நவீனத்துவ வார்த்தை ஜாலங்களையாவது பதிவில் கொண்டு வருவோம்.இன்னும் விட்டவைகளையும் தொட்டுக்கொள்வோம்!எழுத்து நயத்திலாவது மூளை அணுக்கள் எதனையாவது கிரகித்துக் கொள்ளட்டும்!

டிஸ்கி: அடுத்தவர் தங்கிலீஷ் எழுத்துரிமையில் தலையிடுவது நல்லதில்லைதான்.ஆனால் இந்த எழுத்துக்கள் என் கண்ணையல்லவா நோகடிக்கிறது:)

27 comments:

பிரேம்ஜி said...

இந்த விஷயத்தை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது. கலக்கிட்டீங்க.

Anonymous said...

//அடுத்தவர் தங்கிலீஷ் எழுத்துரிமையில் தலையிடுவது நல்லதில்லைதான்.ஆனால் இந்த எழுத்துக்கள் என் கண்ணையல்லவா நோகடிக்கிறது:)//

sariyaha.. ops sorry,

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். நானும் சில பதிவுகளில் இப்படித்தான் முந்தி பின்னுட்டமிட்டு வந்தேன்.
இப்போதுதான் NHM Writer கிடைத்தது தமிழில் ஒரு பதிவை ஆரம்பிக்கவும் முடிந்தது.
தமிழில் எழுதுவதன் இலகுதனத்தை சரியாக அவர்களுக்கு தெரியப்படுத்தினால் இதற்கு தீர்வு காணலாம்.
நான் இப்போதுதான் தமிழில் எழுத கற்றுவருகிறேன் பாமினி யுனிகோடு மூலம்.
இன்னமும் பு,லு, க்கான நெடிலை எப்படி போடுவது என்றும் தெரியாது.
மற்றவர்களும் சீக்கிரம் மாறுவார்களென்று எதிர்பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராஜநடராஜன்.
தங்லீஷில் டைப் செய்யும்போது அஸ் ஆஸ் ஆகிவிட்டதே.

சேர்த்து கோர்த்துப் படிப்பதற்குள் அசந்து போய் விடும்.:)
இகலப்பை கிடைக்காத நேரம் ஆங்கிலத்திலியே எழுதலாம்.

சென்ஷி said...

//டிஸ்கி: அடுத்தவர் தங்கிலீஷ் எழுத்துரிமையில் தலையிடுவது நல்லதில்லைதான்.ஆனால் இந்த எழுத்துக்கள் என் கண்ணையல்லவா நோகடிக்கிறது:)//

நல்ல பதிவு...

நானும் சில நேரங்களில் இதுபோன்று தமிழ்ங்கிலீஷ் தவறுகளில் ஈடுபட்டதுண்டு.. இப்போது கூடுமானவரை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறேன். புதிய தகவல்களுக்கும் நன்றி நண்பரே :))

ச்சின்னப் பையன் said...

மொழி வளர்ச்சி, அது இதுன்னு இல்லேன்னாக்கூட, தொடர்ச்சியாக தமிழ்ப் பின்னூட்டங்களைப் படிப்பதற்கு ஒரு பிரச்சினைதான் இது.

ச்சின்னப் பையன் said...

ஒண்ணு தமிழ்லே அடிக்கணும் - இல்லேன்னா ஆங்கிலத்திலே அடிக்கணும் - ரெண்டுங்கெட்டானா இருக்கக்கூடாது. அப்புறம் கன்னடத்திலே மன்னிப்பு கடிதம் எழுதறா மாதிரி ஆயிடும்...

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

லதானந்த் said...

romba nalla pathivu. enathu paaraattukkal.

அய்யய்யே! குழப்பம் ஆயிடிச்சே!

ராஜ நடராஜன் said...

//இந்த விஷயத்தை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது. கலக்கிட்டீங்க.//

பிரேம்ஜி!உங்களுக்கு நன்றி நவிழல் தகுமா? :)

ராஜ நடராஜன் said...

//சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். நானும் சில பதிவுகளில் இப்படித்தான் முந்தி பின்னுட்டமிட்டு வந்தேன்.
இப்போதுதான் NHM Writer கிடைத்தது தமிழில் ஒரு பதிவை ஆரம்பிக்கவும் முடிந்தது.
தமிழில் எழுதுவதன் இலகுதனத்தை சரியாக அவர்களுக்கு தெரியப்படுத்தினால் இதற்கு தீர்வு காணலாம்.
நான் இப்போதுதான் தமிழில் எழுத கற்றுவருகிறேன் பாமினி யுனிகோடு மூலம்.
இன்னமும் பு,லு, க்கான நெடிலை எப்படி போடுவது என்றும் தெரியாது.
மற்றவர்களும் சீக்கிரம் மாறுவார்களென்று எதிர்பார்க்கிறேன்.//

NHM Writer புதியதாக இன்று உங்களிடம் கற்கிறேன்.இந்த தங்கிலீஷ் தட்டும் அதே விரல்கள்தான் பெரும்பாலும் இகலப்பைக்கு வருகிறது.வெட்டிப்பயல் மூலம்தான் எனக்கு இகலப்பை அறிமுகம்.இந்த தருணத்தில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜ நடராஜன் said...

உண்மைதான் ராஜநடராஜன்.
தங்லீஷில் டைப் செய்யும்போது அஸ் ஆஸ் ஆகிவிட்டதே.

சேர்த்து கோர்த்துப் படிப்பதற்குள் அசந்து போய் விடும்.:)
இகலப்பை கிடைக்காத நேரம் ஆங்கிலத்திலியே எழுதலாம்.

நீங்கள் சரியாகத்தான் கண்டுபிடித்துள்ளீர்கள் அம்மா! வேண்டுமென்றே அஸ் ஆஸ் ஆகிவிட்டது:)

இகலப்பை கிடைக்காத நேரம் ஆங்கிலத்தில் எழுதலாம் என்பதுதான் எனது பார்வை.

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு...

நானும் சில நேரங்களில் இதுபோன்று தமிழ்ங்கிலீஷ் தவறுகளில் ஈடுபட்டதுண்டு.. இப்போது கூடுமானவரை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறேன். புதிய தகவல்களுக்கும் நன்றி நண்பரே :))//

தங்கள் வருகைக்கு நன்றி செனஷி.கொஞ்சம் அலுவல்.முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..

Syam said...

"ஈ கலப்பை இல்லை என்றாலோ அல்லது ஆங்கிலத்தில் சரியான எழுத்து புலமை இல்லை என்றாலோ பின்னுட்டம் இடாமல் சென்று விடுங்கள்"

உங்கள் பதிவை நான் புரிந்து கொண்டது...சரியா?

ராஜ நடராஜன் said...

//மொழி வளர்ச்சி, அது இதுன்னு இல்லேன்னாக்கூட, தொடர்ச்சியாக தமிழ்ப் பின்னூட்டங்களைப் படிப்பதற்கு ஒரு பிரச்சினைதான் இது.//

தொடர்ச்சியாக தமிழ்ப் பின்னூட்டங்களைப் படித்துவந்தாலே மொழி வளரும் போல்தான் தெரிகிறது:)

ராஜ நடராஜன் said...

//ஒண்ணு தமிழ்லே அடிக்கணும் - இல்லேன்னா ஆங்கிலத்திலே அடிக்கணும் - ரெண்டுங்கெட்டானா இருக்கக்கூடாது. அப்புறம் கன்னடத்திலே மன்னிப்பு கடிதம் எழுதறா மாதிரி ஆயிடும்...//

ச்சின்னப்பையன்!இன்றைய பின்னூட்டத்தின் சிறப்பு விருந்து உங்களுக்குத்தான்!

சில நாட்களாய் உங்களிடம் கேட்கவேண்டுமென்றிருந்த சந்தேகம்.நான் போகும் பதிவுகளுக்கு முன்பே துப்பாக்கியோட தயாராக உள்ளீர்கள்.யாரைத் துரத்துகிறீர்கள்:)?

ராஜ நடராஜன் said...

//பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.//

முதலில் உங்களது இரவு எட்டு மணி கணக்கு அமெரிக்காவுக்கு சரிப்பட்டு வருமா?அங்கே பட்டனை தொடும் சாத்தியமிருந்தால் மட்டுமே ஏனைய மண்ணுக்கு இது சாத்தியம்!

ராஜ நடராஜன் said...

//romba nalla pathivu. enathu paaraattukkal.

அய்யய்யே! குழப்பம் ஆயிடிச்சே!//

லதானந் சித்தரே!வணக்கம் சொல்லிக்கிறேன்.உங்க பதிவுகளுக்கு வந்து விட்டு பின்னூட்டமிட்டால் வங்கியில் ஃபவுன்ஸ் ஆன செக்கு மாதிரி திரும்ப பின்னூட்டங்கள் என்னிடமே வந்து சேர்ந்து விடுகின்றன.நானும் அரைக்கணினி படிக்காதவன் என்பதால் காரணம் விளங்கவில்லை.நானும் பின்னூட்டமிட்டு சலித்துப்போய் உங்களுக்குப் பின்னூட்டமிடுவதில்லை.

ராஜ நடராஜன் said...

// "ஈ கலப்பை இல்லை என்றாலோ அல்லது ஆங்கிலத்தில் சரியான எழுத்து புலமை இல்லை என்றாலோ பின்னுட்டம் இடாமல் சென்று விடுங்கள்"

உங்கள் பதிவை நான் புரிந்து கொண்டது...சரியா? //

வாங்க ஷியாம்!வணக்கம். இப்படியும் ஓர் பார்வையிருக்கிறதா?ஆங்கிலப் புலமையில்லைன்னாப் பரவாயில்லைங்க.ஆனால் இகலப்பை ஒன்றும் கம்பசூத்திரமில்லை.

தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் இதற்காகவே கணினிக்கரம் கொண்டு வரவேற்கிறது.

http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html

வல்லிசிம்ஹன் said...

அ.க.ப.

இது நல்லா இருக்கே. க.கை.நா தான் கேள்விப்பட்டு இருக்கேன்:)

வல்லிசிம்ஹன் said...

அ.க.ப.

இது நல்லா இருக்கே. க.கை.நா தான் கேள்விப்பட்டு இருக்கேன்:)

சதங்கா (Sathanga) said...

"arumayaaka solli irukkireergal"

இது தங்க்லீஷ் என்றால்

"யூ ஹேவ் செட் இட் வெல்"

இது ஆமிழா ???? :)))

கிரி said...

//ஒரு பதிவரின் கருத்துக்கள் பல கோணங்களில் வந்து விழும் பின்னூட்டங்களே பதிவின் சுவையையும், பார்வைகளின் பரிணாமங்களையும் அதிகரிக்கின்றன.//

உண்மை தான்

//தொடர்ச்சியாக தமிழ்ப் பின்னூட்டங்களைப் படித்துவந்தாலே மொழி வளரும் போல்தான் தெரிகிறது:)//

மறக்காமல் இருந்தால் சரி ஹி ஹி

ராஜ நடராஜன் said...

//"arumayaaka solli irukkireergal"

இது தங்க்லீஷ் என்றால்

"யூ ஹேவ் செட் இட் வெல்"

இது ஆமிழா ???? :)))//

வாங்க சதங்கா! உங்களுடையப் பின்னூட்டத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.கூட்டத்தில் போய் ஒளிந்து கொண்டு இப்பத்தான் கண்டு பிடித்தேன்.

இந்த ஆமிழா ???? வின் துவக்க உரை நடத்தியது எனக்குத்தெரிந்து சுஜாதா தான்.அவரிடம் கேட்கவேண்டிய கேள்வி.அவரில்லாத நிலையில் அவரின் சகலபாடிகள் அல்லது அல்லக்கைகள் என்று பதிவுகளில் காணும் வார்த்தையுடன் இன்னும் அதே நெடியில் எழுதும் எழுத்தாளர்களை கேட்கலாம்.

ராஜ நடராஜன் said...

//தொடர்ச்சியாக தமிழ்ப் பின்னூட்டங்களைப் படித்துவந்தாலே மொழி வளரும் போல்தான் தெரிகிறது:)//

//மறக்காமல் இருந்தால் சரி ஹி ஹி//

மறந்து விடுமா என்ன? தொப்புள்க்கொடியில் துவங்கிய சுவாசமாச்சே:)

ச்சின்னப் பையன் said...

யாரையும் துரத்தலீங்க.. எல்லாரும் ஒழுங்கா தமிழ்லே அடிக்கறாங்களான்னு பாக்கறேன்...

ஜோசப் பால்ராஜ் said...

இப்பதிவு காலத்தின் கட்டாயம். மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
எழுதுவ‌தில் ம‌ட்டும‌ல்ல‌, பேச்சிலும் இதை செய்ய‌ வேண்டும் என்ப‌தே என் விருப்ப‌ம்.

நான் தஞ்சை பூண்டி புட்பம் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த முனைவர். மெய்பொருள் ஒரு தமிழ் ஆசிரியர். அவர் பேசும் போது ஒன்று தூய தமிழில் பேசுவார், இல்லையெனில் ஆங்கிலத்தில் பேசுவார். இரண்டையும் கலந்து பேசுவது மிக கொடூரமான குற்றம் என கூறுவார்.

முடிந்தவரை அதை நானும் கடைபிடிக்கிறேன். சில நேரங்களில் இயலாமல் போய்விடுகின்றது. நான் தமிழ் சொற்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் சில சொற்கள் கூட பிறமொழிச் சொற்காளாக இருக்கின்றன. அந்தளவுக்கு நம் மொழியுள் பிறமொழிகள் கலந்துள்ளன. அதிலும் ஆங்கில கலப்பு மிக அதிகம்.

வாய்புகள் கிடைக்கும் போது தமிழிலேயே எழுதவும் பேசவும் வேண்டும், வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதும், பேசுவதும் தவறில்லை.

கயல்விழி said...

எனக்கும் இந்த தங்களீஷ் பின்னூட்டம் ரொம்ப எரிச்சலைக்கொடுக்கும். ஒரு அனானி அடிக்கடி என்னை தங்க்ளீஷில் திட்டு விட்டு போவார். அதை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் திட்டுங்களேன் என்றாலும் கேட்பது இல்லை. :) :)