Followers

Tuesday, August 12, 2008

நளினி ஜமிலாவும் சாருவும்

ஜெயகாந்தன் எழுத்தான sex is sacred but sex appeal is commercial vulgarity ன்னு வாசித்து விட்டு பின்பு சோவியத் யூனியன் என்ற கம்யூனிஸ சித்தாந்தங்கள் தோற்றுப்போன பின் ஜெயகாந்தனும் எழுத்துக்களை குறைத்து விட இப்பொழுது தொழில்நுட்ப மாற்றக் கலாச்சாரத்துக்கு மாறியபின் சாருவின் கோணல்பக்கங்களை தமிழ்மணத்துக்கு வந்ததன் மூலம் பதிவர்களின் எழுத்துக்களில் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சியில் சாருவின் முக அசைவுகளை முதன்முறையாக கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது.

நேற்று ராஜ் தொலைக்காட்சியில் ஒலிம்பிக்ஸ் 2008 அபினவ் பிந்த்ராவின் 28 ஆண்டு கழித்து கிடைத்த தங்கத்தைப் பார்வையிட்டு விட்டு மக்கள் தொலைக்காட்சியில் அரசாங்க உதவித்தொகையை பெறுவதற்காக வேண்டி அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசாங்க அலுவலர்களின் கையூட்டு வாங்கும் பழக்கத்தால் படும் சிரமங்களின் வர்ணனைகளைப் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சிக்குத் தாவினால் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.நிகழ்ச்சியை நடத்துபவர் சேலையுடன் பெண்ணாகத் தோற்றமளித்தாலும் பேச்சுக்குரல் ஆணுக்குரியதாக இருக்கிறதே என்று கவனித்தால் அவர் திருநங்கைபோல் இருக்கிறது.அவருக்கு எதிரில் மற்றொரு பெண் பாலியல் பற்றி விவரித்துக் கொண்டுள்ளார்.அன்றாடத் திரைப்படங்களுக்கு மத்தியில் களம் புதியதாக தோற்றமளிக்கவே அலைவரிசையை மாற்றாமல் கவனித்தேன்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பெயர் நளினி ஜமிலா-பாலியல் தொழிலாளி-எழுத்தாளர் என்ற எழுத்துக்களுடன் உரையாடல் தொடர்கிறது.இடையில் வந்ததால் பேட்டி காணும் திருநங்கை யாரென்று பெயர் தெரியவில்லை.ஆனால் நிகழ்ச்சியின் இடைவேளைக்குப் பிறகு இப்படிக்கு தமிழுடனும் ரோஸ் ஆங்கிலத்துடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்த மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையெல்லாம் இந்தி நடிகர் அனுபம் கேரின் மனைவி கிரண் கேர் தொலைகாட்சிப் புற்றீசல்களின் துவக்கத்திலேயே நிகழ்த்தி அடித்து துவைத்து காயப்போட்டு விட்டார்.இம்மாதிரி நிகழ்ச்சிகள் இன்னும் வடக்கு திசையில் நிகழ்கிறதா எனத் தெரியவில்லை.

முன்பு கமலாதாஸ் எழுதிய சுயசரிதம் எண்ட கதா என நினைக்கிறேன்.கேரளாவிலும் ஏனைய எழுத்துழகிலும் ஒரு சலசலப்பை உருவாக்கியது.பின் அருந்ததி ராய் 1992 ல் தனது The God of Small Things புக்கர் பிரைஸ் முதல் நாவல் மூலம் அறிமுகமாகி, கம்யூனிசப் பார்வை,பொக்ரான் அணுகுண்டு சோதனை,நீதியக அவமதிப்பு ,அமெரிக்க எதிர்வாதம் என்று சொல்லி பிரபலமாகி விட்டார். இப்போது நளினி ஜமிலாவின் வலம் போல் தெரிகிறது. அவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதிய Oru Laingikattolilaliyute atmakatha - என்ற மலையாளப் புத்தகம் "Oru Paaliyal Thozhilaaliyin Suyacharithai" (An Autobiography of a Sex Worker) in Tamil translation, புத்தக சரிதையுடன் பேட்டியில் பங்கு கொள்கிறார். எப்படி பாலியல் தொழிலுக்கு வந்தார் என்று விபரங்கள் தெரியவில்லை. ஆனால் தன்னை அனுபவித்த காவல்துறை அதிகாரி அதன்பின் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறினார்.காவல்நிலையத்தில் காவலர்கள் கணுக்காலில் அடித்தால் காப்பாற்று என்று அலறவேண்டுமாம்.அப்படி அலறினால் மூன்று அடியுடன் விட்டு விடுவார்களாம்.ஆனால் இவரோ வலியையும் தாங்கிக்கொண்டு பிடிவாதமாக இருந்தாராம்.அதனால் மீண்டும் மூன்று அடி கால்மேல் விழுந்ததாம்.அதற்கும் அவர் பொறுமையாக இருக்கவே மீண்டும் முதுகில் இரண்டு சாத்தல்.

பேட்டி கண்டவர் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்றதற்கு "ஆண்கள் உண்மையிலேயே பாவம்!பெரும்பாலான ஆண்கள் பயந்தவர்கள்.வலியப் போய் சைகை செய்தாலோ,அணுகினால் மட்டுமே மடிகிறார்களாம்.கையில காசு வாயில தோசைப் புதுப்பாட்டின் படி காசை
வசூலித்து விடுவேன் என்றார்.இலக்கியத்திலிருந்து பாடல் ஒன்று மேற்கோள் சொன்னார்.மேலும் அந்தக் காலத்தில் பெண்கள் சாவகாசம் என்பது அரச
பரம்பரைக்கும்,மந்திரிகளுக்கும்!!!சேனாதிபதிகளுக்குமே வாய்த்ததாகவும்,சாதாரணக் குடிமக்களுக்கு அந்த அனுபவங்கள்
போய்ச்சேரவில்லையென்றார்.கோயில் சிற்பங்கள் பற்றியெல்லாம் சொன்னார்.தன்னைப் பார்த்து இந்த தொழிலுக்கு யாரும் வந்ததாக இதுவரை யாரும் தன்னிடம் சொல்லவில்லையென்றும் இனிமேலும் யாரும் தனது அனுபவங்களைப் பார்த்து வந்து விட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். மங்களகரமாக வாழ்க்கை அமையும் போது பாலியலும் வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளில் ஒரு அங்கம்தான்.ஆனால் பாலியல் தொழிலில் அது அவசரத்தில் செய்யும் சிசேரியன் சிகிச்சை மாதிரி என்றார்.இன்னும் நிறைய சொன்னார்.


இவரது பேச்சின் இடையில் பேட்டி காண்பவரால் காமிராவுக்கு வரவழைக்கப்பட்டவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பதிவுகளில்தான் தமிழ்ச்சினிமாவுக்கு வில்லன் பாத்திரத்திற்கு தகுந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் காமிராவுக்கு முன் மனிதர் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பயந்த சுபாவம் கொண்டவர் மாதிரி எனக்குத் தோற்றமளித்தார்.எழுத்தில்தான் அவரது ஆக்கமும் ஆதிக்கமும் என
நினைக்கிறேன்.தொலைக்காட்சிக்கு முன் சாதுவாக முரண்நடையாகத்தான் பேசுகிறார்.தனக்கு பெண்களைப் பற்றி அதிகம் தெரியாது.ஆனால் ஆண்களின்
குணம் நன்கு தெரியுமென்றார்.இந்திய ஆண்களிடம் பெண்களிடத்தில் Hunting mentality ( இது எனது வார்த்தை) உள்ளதாம்.அதாவது 10 மணிக்கு மேல்
எந்தப் பெண்ணும் இரவில் தனியாக நடமாட முடியாது என்றும் ஆண்களிடத்தில் ஒரு வேட்டைப் புலியின் பசி இருப்பதாகவும் சொன்னார்.தாய்லாந்தைப் பாருங்கள்.பாலியல் தொழில் சட்டமாக்கப் பட்டு விட்டதால் அங்கே ஒரு கற்பழிப்பு கூட இல்லையெனவும் பெண்கள் சுதந்திரமாகத் திரியலாம் என்றார். மேலும் தொண்ணூறாயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளார்கள் என்றும் பாலியலை சட்டபூர்வமாக்கி விட்டால் பாலியல் குற்றங்கள் குறையும்,காவலர்கள்,இடைத்தரகர்கள் குற்றவியல் குறையும்.எச்.ஐ.வி போன்ற நோய்கள் குறையும் வாய்ப்புக்கள் உண்டு என்றார்.இந்த வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.தவறுகள் குறைவாக நடக்கும் நிலையில் இதனை முழு சமுதாய மாற்றமாக்கி விடலாமென்பது முழு நேர எழுத்தாள சிந்தனைக்கு உகந்ததல்ல.

மேலும் தற்போது மேலை நாட்டுக்கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு இளம்பெண்கள் சுமார் 30 வயது வரை பாக்கெட் மணி எனும் கலாச்சாரத்துக்கு மோகம் கொள்கிறார்கள் என்றார்.தனது உடை,முக அலங்காரம்.தலை அலங்காரம் போன்ற செலவுகளுக்காக வேண்டியே இந்த பாக்கெட் மணிக்கு செல்கிறார்கள் என்றார்.

இதனிடையில் வித்யா என்ற பாலியல் தொழிலாளி பேட்டிக்கு வரவழைக்கப்பட்டார். இந்த வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார்.இப்பொழுது நளினி ஜமிலாவைப் பார்த்து தைரியம் கொண்டு காமிரா முன் வந்ததாக சொன்னார்.அவர் அதிகம் பேசவில்லை.பேட்டியாளர்,நளினி ஜமிலா.சாரு நிவேதிதாவின் பேச்சுக்களை கவனிக்கும் பார்வையாளராய் மட்டும் தோன்றினார்.நிகழ்ச்சியின் இறுதியாக காட்சியாளர் நளினியைக் கட்டிப்பிடித்து அரக்குநிறப் பட்டுச்சேலையை நளினியின் தோளில் சாத்தினார்.முதுகில் வாங்கிய சாத்தலுக்கு அனுபவமும்,துணிவும்,எழுத்தும் தந்த அங்கீகாரம் போலும் இந்த பட்டுச்சேலை சாத்தல்.நிகழ்ச்சியாளர் அழகான தமிழும்,ஆங்கிலமும் பேசுகிறார்.இந்தமாதிரி இந்த இருநிலை வாழ்மக்களின் வாழ்க்கை நிலை மாறவேண்டும்.

இவ்வளவு நேரம் தொலைக்காட்சி கதை சொல்லி விட்டு எனது பார்வையையும் சொல்லி விட்டுப் போகலாம் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு காலத்தில் யாராவது குடிக்க வேண்டுமென்றால் பெங்களூர்ப் பக்கமோ,பாண்டிச்சேரி பக்கமோ போகவேண்டும்.அப்படி வண்டி கட்டிக்கொண்டு போவது எத்தனை பேருக்கு சாத்தியம்?லாரி டிரைவர்களுக்கும்.கல்லூரி உல்லாசப் பயணம் போகும் தருணங்கள் மாத்திரமே அந்த மாதிரி கோலாகலங்களுக்கு உதவியது.அன்றாட வாழ்வில் குடிக்காத மனிதர்கள் அதிகமாகவும்,கெட்ட பழக்கங்கள் தொத்திக்கொள்ளும் குறைந்த பட்ச மனிதர்கள் மாத்திரமே நிறைந்த வாழ்க்கையாக இருந்தது.சென்னை போன்ற பெரும் நகரில் மட்டும் கஞ்சா போன்ற பெட்டிக்கடைகளும் அதனை உபயோகிக்கும் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளின் மூச்சுத்திணறலே பெரிதாக இருந்த சூழ்நிலையில் நமது வருமானமெல்லாம் அண்டை மாநிலத்துக்குப் போய்ச் சேர்கிறது என்ற வரி வசூலிப்பு சாம்ராஜ்யத்தில் உருவான கொள்கையில் வந்ததல்லவா தற்போதைய டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகள்.

தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரிப்பட்டு வராத காரணமிருந்தாலும் கூட குடிப்பதும் கூட நாகரீகம்.ஆனால் நமது மக்களுக்கு குடிப்பதெப்படி என்ற பாலபாடம் கூட எடுக்காமல் திரைப்படத்தில் கதாநாயகன் முழுபாட்டில் ஸ்காட்ச் ஸ்டிக்கருடன் தேநீர் பானத்தை மொடக்குவதைப் பார்த்துவிட்டு நமது அப்பாவி குடி ரசிக சிகாமணிகள் அதே பாணியில் மொடக்குகிறார்கள். மீண்டும் ஒரு முறை ஜெயகாந்தனை தேடிப்பார்க்கவேண்டும்,பார்ட்டி எனப்படும் விருந்துகளில் குடிப்பது எப்படி என்ற சொல்விளையாடலை.

காலை எட்டுமணியளவில் கூட குடித்துவிட்டு தேனாம்பேட்டை வண்டி நிறுத்தத்தில் இறங்கவேண்டிய பயணி நிறுத்துனர் சொல்லியும் கேட்காமல் வண்டிக்குள்ளேயே முணங்கும் காட்சியெல்லாம் சென்னையில் சர்வசாதாரணம்.இப்பொழுது தமிழ்நாடே குடிக்கலாச்சாரமாக்கிவிட்டு போதையில் தன்னிலை இழக்கும் மனிதன் பாலியல் தவறுகளுக்கும் தூண்டப்பட்டு விடுகிறான்.அந்தமாதிரி சூழலில் வேண்டுமானால் சாரு சொல்லும் வேட்டைப்புலி பசி வருவதற்கான சந்தர்ப்பம் ஆணுக்கு தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.பதினைந்து வயது வரை கலாச்சார புடம்போடப்பட்டு இன்னும் பத்து வயதுகள் கல்லூரிக் கனவுகள்,காதல் நினைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்துக்குள் எட்டிப்பார்க்கும் அடுத்த ஐந்து ஆண்டு வரை வாழ்க்கை சீராக செல்கிறதென்று வையுங்கள். அடுத்து வரும் காலங்களைத் தீர்மானிக்கும் மன ஆற்றல் உங்களிடமே.உடல் உபாதைகளுக்காக யாரும் வீடு கட்டிக்கொள்வதில்லை.அந்த உபாதையும் ஒரு அங்கம்தான்.எனவே ஒதுக்குப்புறமாக அதற்கும் ஒரு அறை என்பதே சரியாக இருக்கும்.இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமலிருக்குமளவுக்கு மனிதனுக்கு அன்றாடப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கிறது.வறுமைக் கோட்டின் எல்லையைக் கடக்கும் நிலை வந்துவிட்டால் பாலியல் தொழிலாக மாறாமல் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இறுதியாக பாலியல் சட்ட முத்திரையிட்டுக் கொண்டு சமுதாயத்திலிருந்து பெண்களே நீங்கள் மீண்டுமொரு முறை தேவதாசி தனிமைப்பட்டுப் போகாதீர்கள்.

25 comments:

பிரேம்ஜி said...

//\\ //\\ //\\
எழுந்து நின்று கைதட்டுகிறேன். மிக சிறப்பான பதிவு.

ராஜ நடராஜன் said...

// எழுந்து நின்று கைதட்டுகிறேன். மிக சிறப்பான பதிவு.//

முதல் போணிக்கு நன்றி பிரேம்ஜி!

ச்சின்னப் பையன் said...

அருமையான பதிவு....

ராஜ நடராஜன் said...

//அருமையான பதிவு....//

நீங்க பொடிவச்சு அருமையா பதிவு போடற தொழில்நுட்பத்தைக் காதுல கொஞ்சம் கூவுங்க முதல்ல:)

Bala said...

migaum nalla pathivu parattukkal.

ராஜ நடராஜன் said...

// migaum nalla pathivu parattukkal.//

வணக்கம்.பாராட்டுக்களை இப்படித்தான் எழுதறது!மீண்டும் வந்தீர்களென்றால் கண்ணில் படும் தங்கிலீஷ் படிங்க:)))))

துளசி கோபால் said...

பதிவு அருமையா இருக்கு.

பாலியல் தொழிலாளிகள் இங்கே வருமானவரிகூடக் கட்டிக்கிட்டு இருக்காங்க.

ராஜ நடராஜன் said...

// பாலியல் தொழிலாளிகள் இங்கே வருமானவரிகூடக் கட்டிக்கிட்டு இருக்காங்க.//

வணக்கம் மேடம்!மேலை நாட்டுப் பொருளாதாரக் கட்டமைப்பு நமக்கு வர இன்னும் காலம் ஆகும்.அதனால் வறுமை ஒழிப்பு மட்டுமே நமது நாட்டு சூழ்நிலைக்கு சரிப்பட்டு வரும்.

ஸ்ரீசரண் said...

//பதினைந்து வயது வரை கலாச்சார புடம்போடப்பட்டு இன்னும் பத்து வயதுகள் கல்லூரிக் கனவுகள்,காதல் நினைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்துக்குள் எட்டிப்பார்க்கும் அடுத்த ஐந்து ஆண்டு வரை வாழ்க்கை சீராக செல்கிறதென்று வையுங்கள். அடுத்து வரும் காலங்களைத் தீர்மானிக்கும் மன ஆற்றல் உங்களிடமே//

இப்படிப் பட்ட வாழ்க்கை எத்தனை பேருக்கு அமைகிறது. அதென்ன கலாச்சார புடம். இதற்கான அர்த்தத்தைக் கொஞ்சம் விளக்க முடியுமா

ராஜ நடராஜன் said...

////பதினைந்து வயது வரை கலாச்சார புடம்போடப்பட்டு இன்னும் பத்து வயதுகள் கல்லூரிக் கனவுகள்,காதல் நினைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்துக்குள் எட்டிப்பார்க்கும் அடுத்த ஐந்து ஆண்டு வரை வாழ்க்கை சீராக செல்கிறதென்று வையுங்கள். அடுத்து வரும் காலங்களைத் தீர்மானிக்கும் மன ஆற்றல் உங்களிடமே//

//இப்படிப் பட்ட வாழ்க்கை எத்தனை பேருக்கு அமைகிறது. அதென்ன கலாச்சார புடம். இதற்கான அர்த்தத்தைக் கொஞ்சம் விளக்க முடியுமா//

வணக்கம்.சரண்.முதலில் எனக்கு உங்கள் பெயரின் முதல் எழுத்தை எப்படி தட்டச்சுவது என்று கற்றுத்தாருங்கள்:)

கலாச்சாரப் புடம் என்றது குழந்தைக்கல்வி.பதினைந்து வயதுக்குள் வாழ்க்கையில் அடிப்படைக் கல்வியென்ற அஸ்திவாரம் முக்கியம் தேவைங்க.அதிலும் இது பெண்களுக்கு முக்கிய அவசியமுன்னு நினைக்கிறேன்.எந்த சூழலிலும் படிக்கவேண்டும்.படிப்பதற்கான கட்டமைப்புக்களும் இன்னும் பெருக வேண்டும்.பெரும்பாலோர் வறுமையின் காரணமாக குழந்தைகளை கவனிக்க இயலாமலும்,குழந்தைகளைக்கூட வேலைக்கு அனுப்பும் நிலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.படிப்புனூடே குழந்தைகள் வளரும் பண்புகள் என்ற கலாச்சாரம்.நான் அறிந்து சிரமங்களினூடகவும் கூட படித்தவர்கள் எப்படியோ கரணங்களிட்டாவது வாழ்க்கையை ஓரளவுக்கு நிலைப்படுத்திக்கொண்டார்கள்.பண்புகள் என்ற கலாச்சாரம் வாழ்க்கையினூடவே கூட ஓடி வருவது.

கிரி said...

//தொலைக்காட்சிக்கு முன் சாதுவாக முரண்நடையாகத்தான் பேசுகிறார்.தனக்கு பெண்களைப் பற்றி அதிகம் தெரியாது.ஆனால் ஆண்களின்
குணம் நன்கு தெரியுமென்றார்//

எல்லாவற்றையும் எப்படி தான் கண்டுபிடிக்கிறாரோ பெரிய ஆளு தான் ;-)

உங்கள் விரிவான பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//எல்லாவற்றையும் எப்படி தான் கண்டுபிடிக்கிறாரோ பெரிய ஆளு தான் ;-)

உங்கள் விரிவான பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.//

வணக்கம் கிரி.பதிவில் விட்டுப்போனது நல்லவேளை நீங்கள் நினைவு படுத்தினீர்கள்.நிறைய ரிசர்ச் கூட செய்வதாகக் கூறினார்:)எல்லா ஆண்களையும் ஒரே எடைத்தட்டில் எப்படி வைக்கிறார் என்று தெரியவில்லை.நான் சந்தித்த,பழகிய,பேசிய மனிதர்கள் என்று நினைத்தால் சில சமுதாயக் குழு குணங்களுக்கப்பால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டவர்கள்.

புதுகைச் சாரல் said...

// ராஜ நடராஜன் said...
எழுந்து நின்று கைதட்டுகிறேன். மிக சிறப்பான பதிவு
முதல் போணிக்கு நன்றி பிரேம்ஜி!//

நல்லா போணியாவுது

கிரி said...

//நிறைய ரிசர்ச் கூட செய்வதாகக் கூறினார்:)//

ஹி ஹி ஹி அந்த ஆய்வு ல பாரிஸ் ல அவருக்கு கொடுத்த மரியாதையையும் கூறி இருப்பார் ;-)

//நான் சந்தித்த,பழகிய,பேசிய மனிதர்கள் என்று நினைத்தால் சில சமுதாயக் குழு குணங்களுக்கப்பால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டவர்கள்.//

சந்தேகமே இல்லை..எடுத்துக்காட்டா நம்ம வலைப்பதிவுகளையே எடுத்துக்குங்க எத்தனை மாறு பட்ட கருத்துக்கள்..

இவர் ஒரு நாள் விஜய தொலைக்காட்சி நீயா நானா வில் வந்தாரு..அதுல ஒரு பய்யன் கேள்வி மேல கேள்வியா கேட்டு ஒரு வழி ஆக்கிட்டான்..அப்ப கூட உதாரணத்துக்கு பாரிஸ் (சென்னை பாரிஸ் அல்ல) தான் போறாரே தவிர இங்க வர மாட்டேங்குறாரு...

என்னமோ போங்க ரொம்ப விஷயம் தெரிந்தாலே பிரச்சனை தான் போல ;-)

ராஜ நடராஜன் said...

// நல்லா போணியாவுது //

போணி மட்டுமில்லை!சாரலும் தூவுது:)

ராஜ நடராஜன் said...

// என்னமோ போங்க ரொம்ப விஷயம் தெரிந்தாலே பிரச்சனை தான் போல ;-)//

இதெல்லாம் சாரு மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க கவலைப்பட வேண்டியது:)

கயல்விழி said...

//மேலும் தற்போது மேலை நாட்டுக்கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு இளம்பெண்கள் சுமார் 30 வயது வரை பாக்கெட் மணி எனும் கலாச்சாரத்துக்கு மோகம் கொள்கிறார்கள் என்றார்.தனது உடை,முக அலங்காரம்.தலை அலங்காரம் போன்ற செலவுகளுக்காக வேண்டியே இந்த பாக்கெட் மணிக்கு செல்கிறார்கள் என்றார்.//

பாக்கெட் மணி கலாச்சாரம் என்று இருக்கிறதா என்ன? சாரு புதுசு புதுசாக கண்டுபிடிக்கிறார். பெண்களுக்கு 30 வயது வரை பாக்கெட் மணி எதற்கு? பெண் என்பவள் யாரையாவது சார்ந்தே இருப்பாள் என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆண்கள் வேட்டை பசியுடன் அலைகிறார்கள் எனறு பொதுப்படுத்துவது ரொம்ப தவறு. ஒருவேளை இந்த கருத்தை சொன்னவரின் மனநிலை வேண்டுமானால் அது மாதிரி இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//பாக்கெட் மணி கலாச்சாரம் என்று இருக்கிறதா என்ன? சாரு புதுசு புதுசாக கண்டுபிடிக்கிறார். பெண்களுக்கு 30 வயது வரை பாக்கெட் மணி எதற்கு? பெண் என்பவள் யாரையாவது சார்ந்தே இருப்பாள் என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆண்கள் வேட்டை பசியுடன் அலைகிறார்கள் எனறு பொதுப்படுத்துவது ரொம்ப தவறு. ஒருவேளை இந்த கருத்தை சொன்னவரின் மனநிலை வேண்டுமானால் அது மாதிரி இருக்கலாம்.//

மேடம்! சாருவின் பாக்கெட்மணி கலாச்சாரத் தகவல் எனக்கும்கூட அப்படி ஏதாவது இருக்கிறதா என்றுதான் தோன்றியது.நம்மைப் பற்றி அடுத்த தேசத்துக்காரன் இன்னும் கன்சர்வேட்டிவ்,கட்டுக்கோப்பான சமூகம் என்றே மதிப்பிடுகிறான். முக்கியமாக எனக்குத்தெரிந்து இந்த தேசத்து வாழும் மக்கள்.இவர் பிரான்ஸ் சுத்திகிட்டு வந்தும் கூட எதிர்மாறாக கருத்து சொல்கிறார்.

நவீன் said...

மிகச்சிறப்பான பதிவு...

உங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப்போகிறேன்.

நாமக்கல் சிபி said...

முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சொல்லி இருக்கிறீர்கள்!

நன்று!

Thekkikattan|தெகா said...

//இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமலிருக்குமளவுக்கு மனிதனுக்கு அன்றாடப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கிறது.//

வந்துட்டேன். இந்த யோசிக்கிற விசயமிருக்கும் பாருங்க அதில வயசு ரேஞ்சிக்கு தகுந்த மாதிரி பெரும் விழுக்காடுகளில் வித்தியாசப் படுகிறதுங்க. இந்த யோசனை சார்ந்த குதிரை ஓட்டம் மன அளவில் அதிகமாக இருப்பதால்தான் அத்தனை பாலியல் சார்ந்த அத்து மீறல்களும் நம்மூரில் நடந்தேறுகின்றன.

//வறுமைக் கோட்டின் எல்லையைக் கடக்கும் நிலை வந்துவிட்டால் பாலியல் தொழிலாக மாறாமல் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். //

இதில உண்மையில்லாமல் இல்லை, ஆனா பாருங்க அதுவும் ஓரளவிற்குத்தான் சாத்தியம். ஏன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட தெரு ஓரங்களில் நின்று (இல்லீகல்) கையசைக்கும் கூட்டம் இருப்பதனையும் காண முடியுமே? மனிதகுலம் இருக்கும் வரையில் இதற்கான தேவை ஒழியப் போவது கிடையாது, ரா.ந. இது ஒரு பெரிய உலகம், பணம், புகழ் மற்றும் பெண் சார்ந்ததுதான் இந்த உலகத்தின் மனித மனங்களின் சுழற்சியே...

Thekkikattan|தெகா said...

பெண்களே நீங்கள் மீண்டுமொரு முறை தேவதாசி தனிமைப்பட்டுப் போகாதீர்கள்//

"தேவதாசி" அமைப்பு ஒரு பரம்பரை தொழிலாக சுமத்தப்பட்டதொரு வாழ்க்கை, அதிலிருந்து மீள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று...

ஆனா இது வந்து
அப்படி இல்லைங்க, இல்லைன்னா திரைமரைவில இருந்தே படுகிற துன்பங்களை சகிச்சிக்கோங்க அப்படின்னுல்ல ஆகிப் போவும்...

ராஜ நடராஜன் said...

//முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சொல்லி இருக்கிறீர்கள்!

நன்று!//

வருகைக்கு நன்றி சிபி!

ராஜ நடராஜன் said...

//வந்துட்டேன். இந்த யோசிக்கிற விசயமிருக்கும் பாருங்க அதில வயசு ரேஞ்சிக்கு தகுந்த மாதிரி பெரும் விழுக்காடுகளில் வித்தியாசப் படுகிறதுங்க. இந்த யோசனை சார்ந்த குதிரை ஓட்டம் மன அளவில் அதிகமாக இருப்பதால்தான் அத்தனை பாலியல் சார்ந்த அத்து மீறல்களும் நம்மூரில் நடந்தேறுகின்றன.//

அதென்ன பாலியல் சார்ந்த அத்து மீறல்கள் நம்மூரில் மட்டும்.நம்ம ஆளுக ரொம்ப.........ரொம்ப.....நல்லவங்கண்ணா!வளைகுடாவில் எல்லோரும் 'அடக்கி'யே வாசிக்கிறார்கள்.பாலியல் சார்ந்த குற்றங்களில் பெரும்பாலும் இந்தியர்கள் மாட்டிக்கொள்வதில்லை.
எனது பார்வையில் நிலமும் நிலம் சார்ந்த வாழ்க்கை,சட்ட திட்டங்களினூடேயெ மனிதன் தனது வாழ்வை அமைத்துக் கொள்கிறான்.

ராஜ நடராஜன் said...

//இதில உண்மையில்லாமல் இல்லை, ஆனா பாருங்க அதுவும் ஓரளவிற்குத்தான் சாத்தியம். ஏன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட தெரு ஓரங்களில் நின்று (இல்லீகல்) கையசைக்கும் கூட்டம் இருப்பதனையும் காண முடியுமே? மனிதகுலம் இருக்கும் வரையில் இதற்கான தேவை ஒழியப் போவது கிடையாது, ரா.ந. இது ஒரு பெரிய உலகம், பணம், புகழ் மற்றும் பெண் சார்ந்ததுதான் இந்த உலகத்தின் மனித மனங்களின் சுழற்சியே...//

உங்கள் கூற்றில் உடன்பாடு கொண்டாலும் இங்கே பிரச்சினை என்னன்னா மனித மனங்களின் விகிதாச்சாரத்தை எப்படி கையாள்வது என்பது மட்டுமே.

மது அருந்துதல் முன் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.மதுவிலக்கு காலத்தில் கள்ளச்சாராய உயிர்ச்சாவுகள் அதிகமாக இருந்த போதிலும் மது அருந்துவோரின் விகிதாச்சாரம் தற்போதைய நிலைக்கு குறைவாகவே இருந்தது.அதே கண்ணோட்டத்தில் பாலியலை தொழிலாக மாற்றும் போது மதுவை விட பாலியல் தொழில் விகிதாச்சாரம் அதிகரிக்கும் என்பது எனது பார்வை.பெண்களை அடக்கி ஆளும் ஆணாதிக்கம் இன்னும் அதிகரிக்கும்.அதில் எனக்கு உடன்பாடில்லை.அப்புறம் தேவதாசி முறை வேண்டாமென்றுதான் புதிய சட்டங்கள் தோன்றின.மீண்டும் ஒரு கால சுழற்சியின் பழைய நிலைக்கே போவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

முன்பு கேரளாவில் பொருளாதார காரணங்களுக்காகவும் பொருளாதார தேடலில் இடம் பெயர்ந்த காரணங்களுக்காகவும் பாலியலை தேடிய பெண்கள் அதிகமாக இருக்க கூடுமென நினைக்கிறேன்.இப்பொழுது பொருளாதாரத்தில் கேரளா ஓரளவுக்கு மேம்பட்ட நிலையில் அதற்கான தேவைகள் பெண்களுக்கு குறைந்துள்ளதாக எனது மதிப்பீடு.

மனம் ஒரு புறம் கடமுடா செய்தாலும் அவற்றை வெற்றி கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்வாக அமையும்.நன்றி.