Followers

Friday, November 28, 2008

பம்பாய் தீவிரவாதத்தின் மூலக்கூறுகள்


நிர்வாகம் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடம் பம்பாய் தாஜ்மகால்.கூடவே கொஞ்சம் இறுக்க முகம் கொண்ட சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுவதற்குரிய இடம் ஓபராய் என்றே இன்றும் அழைக்கப்படும் டிரைடண்ட்.இரண்டுமே உழைப்பு,உயர்வுக்கான அடையாளச் சின்னங்கள்.பல பிரபலங்களும்,திறமைகளும் கால்பதிந்த இடத்தில் தீவிரவாதம் என்ற ஓநாய்கள் புகுந்துவிட்டது வருத்தமும் கண்டனத்துக்குரிய விசயங்கள்.

கூடவே யூதர்களின் கூட்டு வாழ்க்கை கட்டிடம்,காலனி எச்சத்தில் மிஞ்சிப்போன ரயில் நிலையம் என மனித,இந்திய அடையாளங்களின் மீது தீவிரவாதத் தாக்குதல் மீண்டும் ஒரு முறை திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டுவிட்டது.எப்பவோ விதைத்த விதைகள் இப்பொழுது அறுவடைக்கு வந்துள்ளன.நேற்றும்,இன்றும் இனி நாளையும் தீவிரவாதக் காட்டில் முப்போகம்தான்.இவற்றிற்கான பணம்,பொருள்,இயக்கம் அனைத்தும் மதம் என்ற போதையில் பரவலாகப் பல திசைகளிலிருந்தும் வீசப் படுகின்றது.கூடவே இந்தியாவின் வளர்ச்சிப் பக்கத்து வீட்டுப் பாகிஸ்தானின் ஒரு பிரிவுக்கு கோபத்தை உண்டாக்கவே செய்கிறது.நண்டுக்கதை தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல!அதில் இந்திய பாகிஸ்தானும் பங்குதாரர்கள்.

தீவிர வாதத்திற்கெதிரான யுத்தம் என்பது அமெரிக்காவின் சில குறுகிய நலன்களைச் சார்ந்தும்,பாகிஸ்தானை நட்பு படுத்தும் நோக்கிலும் ஆப்கானிஸ்தான் மீது தொடுக்கப்பட்டது.ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் விதைகள் பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் அந்நாட்டுடன் ந்ட்புக் கரம் நீட்டி துவக்கிய வெளிநாட்டுக் கொள்கை சறுக்கல் எனவே சொல்லலாம்.கூடவே ஈராக் யுத்தமும்.ஈராக் யுத்தத்தின் பலனாக பாதுகாப்பு உடன்படிக்கையை அமெரிக்காவும்,ஈராக்கும் கைச் சாத்திட்டதும்,சதாமை அப்புறப்படுத்தியதும் மட்டுமே அமெரிக்காவின் சாதனையெனக் கொள்ளலாம்.

மனித உரிமைகள் மறுக்கப்பட்டும்,மதவாதங்கள் தலையெடுப்பதும்,ஈரானை ஓரங்கட்டி பகைமை கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளை எதிர்காலத்தில் மீண்டும் ஒரு யுத்தக் களத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கொண்டதாகவே உள்ளது.ஒன்றுக்கொன்று தொடர்புகள் கொண்ட வறுமை,மனித முன்னேற்றம்,மதவாதம்,மனித உரிமை மறுப்புக்கள் முட்டி மோதிக் கொள்ளும் நேரத்தில் பிறப்பது தீவிரவாதம்.இதில் மனித நேயங்களை மறக்கச் செய்வதில் முக்கிய பங்கு மதவாதம்.டேராப் போட்டு நடத்திய மத வருட ஆண்டு விழாக்களில் ஊறித்திளைத்தவர்களையும்,உலகம் நோக்கும் பார்வைகளில் ஆர்வமற்று மதம் மட்டுமே என்ற முக்காடு போட்டுக் கொள்ளும் கல்வியிலும் ஊன்றி வளர்ந்தவை தீவிரவாதம்.

கூடப் பணி புரியும் பம்பாய் கிராமப் புறச் சூழலுடன் வாழ்ந்த இந்திய நண்பன் கூட காகிதங்கள்,கணினி,தொழுகையென்ற எல்லைகளைத் தாண்டி செல்வதில்லை.இந்த மாதிரி அப்பாவித்தனங்களும் அறியாமையும் எந்த தொந்தரவு எல்லையையும் தாண்டுவதில்லை.ஆனாலும் நகைச்சுவைக்காக அந்த நல்ல மனிதனுக்கு குத்தப் பட்ட முத்திரை டெரரிஸ்ட்.ஆனால் சூழ்நிலைகளும்,மனமாற்றம் செய்வதற்கான தகுதிகளும் கிடைத்த இளைஞனை நினைத்துப் பாருங்கள்.அப்படியான மனித நேயமிழந்த மனிதர்களின் முகங்களே தொலைகாட்சிகளில் பம்பாய் நிகழ்வில் துப்பாக்கியுடன் பொதுமனிதர்களை தாக்கிய சம்பவங்கள்.

தலிபான்கள் உச்சக் கட்ட தர்பார் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் நமது இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திய கால கட்டங்களில், நடந்துகொண்டிருந்த என்னை இந்தியர் ஒருவர் வழிமறித்து இந்தியில் அளவளாவ ஆரம்பித்தார்.பொதுவான தேச நலன்கள் விசாரித்து விட்டு நேரடியாக விசயம் மதம் பற்றி திரும்பியது.பேச்சின் இடையில் நான் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்பது அறிந்ததும் உரையாடல் தானும் தமிழ்நாடு என்ற மீள் அறிமுகத்துடன் தமிழுக்கு தாவியது.இந்த உரையாடலில் குறிப்பிடப்பட வேண்டிய “என்ன கொடுமை சரவணா” விற்கான வசனம் என்னவென்றால் இந்த நவீன யுக மனித முன்னேற்றங்கள் எதற்கு?தொலைப் பேசி எதற்கு,விமானங்கள் எதற்கு என்று இந்தியாவிலிருந்து விமானம் ஏறிவந்த நண்பர் கூறவும் பிய்த்துக் கொண்டு வந்த எரிச்சலில் “நீங்கள் இன்னொரு உலகத்தில் வாழுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தேன்.

இந்த நிகழ்வுக்குப் பின் வந்த காலத்தில் இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்.இதற்குப் பின் தீவிரவாதம் லண்டன் பயணம் செய்து மீண்டும் ஆப்கானிஸ்தானத்திற்குள்ளும்,பாகிஸ்தானுக்குள்ளும் போய் அடைக்கலம் புகுந்து விட்டது.

போர்முனைக் கருவிகள் பொருளாதார ரீதியான வியாபாரமாகிப் போய் விட்ட நிலையிலும்,இந்த வியாபாரம் கணக்கில் வராதப் பணமாக ஹவாலா என்ற கறுப்புப் பணம் புதிய முகத்துடன் சில வங்கி அதிகாரப் பெயரில் சுற்றுக்கு விடப் படுகிறது.இன்று ஒரு பதிவில் சுற்றுக்கு விடப்பட்ட எஸ்.பி.ஐ ,வி.ஐ.பி ஒலிப்பதிவின் நகைச்சுவையளவுக்கு நமது வங்கிக் கணக்குகள் முன்னேறும் போதும்,வெளிநாட்டு வாழ் இந்தியப் பணம் சரியான சேனல்களாக வங்கிப் பதிவு பெற்று இந்தியா அடைந்தாலும் பக்கத்து வீட்டு பாகிஸ்தான் கொடுக்கல் வாங்கல்கள் அரசு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு கைமாற்றம் செய்யப்படுகிறது. எந்த மிதவாதமான பாகிஸ்தான் அரசும் தலைதூக்கும் தீவிரவாத அமைப்புக்களை ஓரளவுக்கு அனுசரித்துப் போகும்படியான சூழலில்தான் இயங்க முடியும் எனும்படியான மதம் என்ற உணர்வுபூர்வமான விசயம் அரசியலில் களம் காண்கிறது.

இனி நம்மூர் அரசியலுக்கு வந்தோமென்றால் என்று ரதயாத்திரை,மசூதி இடிப்பு என்ற மதம் தலைக்குள் பூந்து கொண்டதோ அன்றே சோம்பேறி கழுதைக்கு சறுக்கினதே சாக்கு எனும்படி ஊற்றி வளர்த்த தீவிரவாதத்தை இந்தியாவுக்குள் நுழைப்பதற்கு ஏதுவாகிப் போனது.மதங்கள் செத்துப் போய்விட்டன.உண்மையான ஈகையும்,தொழுகையும் இஸ்லாத்தின் மூலக்கூறு என்ற அழகை புறம் தள்ளிவிட்டு ஜிஹாத்,ஜிஹாதி,ஜமாத் என்ற வார்த்தைகள் வேரூன்றி விட்டன.இன்றும் கோயில்களில் அழகும்,கலையுணர்வும் வேரூன்றி இருந்தாலும் அதனையும் தாண்டி காவித்துணிகளும்,துறவித்தனமும் இழந்து இந்து தீவிரவாதம் தலைதூக்குகிறது.அனைத்தையும் துற என்ற புத்தனின் கோட்பாடுகள் மறந்து புத்தபிட்சுகளும்,கூடவே இலங்கை அரசும் ஒரு இனத்தை அழிக்கும் அநியாயத்தைச் செய்கிறது.இரண்டாம் தரக் குடிமகனாக வாழ்வதற்கு தயாரென்றால் உனக்கு கிழக்கு திசையை தாரை வார்க்கிறேன் என்ற பேரத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி நல்லபடியாகவே செயல்படுகிறது.இனி புத்தம் சரணம் கட்சாமியல்ல....யுத்தம் சரணம் பிட்சுக்களே! இந்த எல்லைகளைக் கடந்து மனித நேயம் ஓங்கட்டும் என நினைத்து பகுத்தறிவு தளைக்கட்டுமென்று பார்த்தால் நாத்திகமும் பார்ப்பனன் என்ற மனித துவேசத்தில் மூழ்கி விடுகிறது.

பி.ஜே.பி காலத்து பாராளுமன்ற முற்றுகை,தற்போதைய காங்கிரசின் பம்பாய் தீவிரவாதம் இரண்டுமே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதிகளின் கை ஓங்கியிருப்பதையும் நினைத்த நேரத்தில் தங்கள் பலத்தைக் காட்ட இயலும் என்பதனை நிருபித்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே என்ற உண்மைக் கதாநாயகர்களுக்கும் ஏனைய காவல்துறையிலும், மற்ற இறந்த பொதுமனிதர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

ஐயா!ஊடகத்துறை சேர்ந்த மற்றும் சினிமாத்துறை சார்ந்த பொதுநலன் துறை சார்ந்தவர்களே தயவு செய்து எதிர்க் கதாநாயகர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.நம்மிடையே அன்றாட வாழ்வில் ஏகப்பட்ட கதாநாயகர்கள் உலாவருகிறார்கள்.அவர்களை கவுரப் படுத்துங்கள்.யாரும் ரத்தமும்,தீவிரவாதங்களை மிகைப் படுத்திச் சொல்லி படம் எடுக்கச் சொல்வதில்லை.நீங்கள் எதனைப் பரிமாறுகிறீர்களோ அதனையே சம்தாயம் உள்வாங்கிக் கொள்கிறது.நாளை பம்பாய் நிகழ்வினைப் படம் எடுக்க விரும்பினால் கூட ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே என்ற கதாநாயகர்களை முன்னிலைப் படுத்துங்கள்.முகங்களிலேயே தீவிரவாதம் காட்டும் பொறுக்கிகளை கண்ணாடியின் மூலையில் நிறுத்துங்கள்.

அரசாங்கத்துக்கும் அப்பாற்ப்பட்ட விழிப்புணர்வும்,தேசம்,மனிதம் நேசிக்காத மனிதர்கள் உங்கள் பக்கத்து வீட்டிலேயே சிரித்துக் கொண்டு நம்மிடையே உலா வரலாம்.இதெல்லாம் அடையாளம் காண நமக்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.நமக்கேன் வம்பென்ற மனோபாவம் போகட்டும்.உதவிக்கு வரும் குடிமகனை மரியாதை செலுத்த போலிஸ் துறையும் கற்றுக் கொள்ளுங்கள்.உங்களின் சேவை மகத்தான பாராட்டுக்குரியதாக இருந்தாலும்,கையூட்டு,தேச நலனுக்கு பணம் என்ற ஒரே காரணத்துக்காக சோரம் போவதை நிறுத்துங்கள்.போலிஸ்துறை மேம்படுத்தப் பட்டும்,தனது அளவிற்கதிகமான அதிகாரத்தை கவுரவப் படுத்தினாலே பிரச்சினைகளின் தீவிரவாதத்தின் ஒரு கோடியைப் பிடித்து விடலாம்.அதனையும் அடுத்து அரசாங்கப் பொதுத்துறை.அரசாங்க ஊழியம் என்பது எவ்வளவு கவுரமானது?கையூட்டும்,குறுகிய கால அரசியல்வாதிக்கு தவறான வழியில் துணை போவதை தடுத்தாலே அரசியல்வாதிகள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.பீரோகிராட்டிக்குகள் மட்டுமே தேச நலனுக்குப் பொறுப்பானவர்கள்.ஆழத்தோண்டினால் அவர்களின் சாணக்கியத்தனமே அரசியல்வாதிக்கு தவறான வழிகளுக்குத் துணை புரிகிறது.அரசியல்வாதிகள் வெறும் ஆட்டுவிப்பவர்களே.

இவற்றையெல்லாம் கடந்து புதிய உலகம் ஒருநாள் தோன்றட்டும் என நானும் கனவு காண்கிறேன்..அப்பொழுது மனித இனத்தின் அவலங்களை,அசிங்கங்களைப் புறம் தள்ளி விட்டு மனித நேயம் மட்டுமே ஆளுமை செய்யும் காலம் வரட்டும்.வரும் காலத்தின் மாறுதல்களில் புதிய மனித சிந்தனைகள் பிறக்கட்டும்.

33 comments:

பழமைபேசி said...

மனசு கனக்குது....

ராஜ நடராஜன் said...

//மனசு கனக்குது....//

வருகைக்கு நன்றி பழமை.இரண்டு நாட்களாக சரியா தூங்கவேயில்லீங்க:(

அது சரி said...

வணக்கம் அண்ணா.

இந்த பிரச்சினையில், இதுவரை படித்த பதிவுகளில் நீங்கள் ஒருவர் தான் தீவிரவாதத்தின் பின்ணணி குறித்து தெளிவாக, தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள்!!

பழமைபேசி said...

பண்பான பாரத தேசம்!
அன்பான காந்தி தேசம்!!
துயரான நேர மெல்லாம்
பகவானைப் பார்த் தெழுதோம்!!!

எங்க ஒத்துமை பாரறியும்,
துங்க மது நாங்கறிவோம்,
சூழ்ச்சி நெடுநாளு கொள்ளாது!
வஞ்சகம் எல்லாநாளும் வெல்லாது!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது! காந்தி தேச‌ம் சாயாது!!

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்!

ராஜ நடராஜன் said...

//வணக்கம் அண்ணா.//

இந்த வார்த்தை என்னை கவுரவிக்கிறது.நன்றி.

Uthayan said...

மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பதிவு. உங்களது எழுத்து நடையும் தேர்ந்த எழுத்தாளர் போல உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.

குடுகுடுப்பை said...

தெளிவாக எழுது இருக்கிறீர்கள்.ஆனாலும் இவர்கள் திருந்த மாட்டாட்கள்

ராஜ நடராஜன் said...

//மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பதிவு. உங்களது எழுத்து நடையும் தேர்ந்த எழுத்தாளர் போல உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.//

உங்கள் வருகைக்கு நன்றி உதயன்.

ராஜ நடராஜன் said...

//தெளிவாக எழுது இருக்கிறீர்கள்.ஆனாலும் இவர்கள் திருந்த மாட்டாட்கள்//

வாங்க குடுகுடுப்பை.

மஞ்சூர் ராசா said...

நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

மாற்றங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

Anonymous said...

இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது. Written by பி.இரயாகரன்

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர்.

உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள்இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும்.

இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாதஎல்லோரும் 'பயங்கரவாத"த்தின் தோற்றத்துக்கு துணைபோபவர்கள் தான்.

இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை

இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

இப்படி இரட்டை வடிவங்களின் சமூகத்தில் சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் என அனைத்தையும், தனக்கு (உயர்சாதிக்கு) அல்லாத மக்களுக்கு மறுக்கின்றது.

இந்த பயங்கரவாத பாசிசக் கும்பல், இந்த முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எவையும் நீதி விசாரணைக்கு வந்தது கிடையாது.

சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிய அடக்குமுறை இயந்திரங்கள், அப்பாவி முஸ்லீம் மக்களை வகை தொகையின்றி குதறியது. இவர்கள் கட்டமைத்த நீதியின் முன், நீதி மறுக்கப்பட்டு மீண்டும் முஸ்லீம்கள் வதைக்கப்படுகின்றனர்.

ஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.

இதைவிட வேறு ஒரு தீர்வை சமூகம் வழிகாட்டவில்லை. இந்துத்துவ ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முஸ்லீம் வாழமுடியாத வகையில், மொத்த சமூக நிறுவனமும் இந்துத்துவ காவிமயமாகி நிற்கின்றது.

இவை அனைத்தும் சாதி ரீதியாக தாம் கொடுமைப்படுத்தி ஆளும் பார்ப்பனிய கொடுங்கோலாட்சியை மூடிமறைக்க அவர்களுக்கு தேவையானதாக உள்ளது.

மதவாதத்தை உயர்த்தயி இந்திய ஆட்சி வடிவங்கள் தான், 'பயங்கரவாத'த்தை உற்பத்தி செய்கின்றது.

இந்து பார்ப்பனிய இந்துத்துவம் தான் ஒரிசாவில் கிறிஸ்துவ மக்கள் மேல் அண்மையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதன் எதிர்வினையான கிறிஸ்துவ 'பயங்கரவாதம்" நாளை இந்தியா மேல் உருவாகலாம்.

குஜராத் படுகொலை, பம்பாய் படுகொலை, அத்வானியின் ரத யத்திரையுடன் அரங்கேறிய படுகொலை, பாபர் மசூதி இடிப்புடன் அரங்கேறிய படுகொலை, இப்படி முஸ்லீம் மக்கள் மேல் எண்ணிக்கையற்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகொலைகள்.

நாள்தோறும் ஒரு முஸ்லீம் என்பதால், இந்து பயங்கரவாதிகளால் அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். எத்தனையோ படுகொலைகள், எத்தனையோ விதமான ஒடுக்குமுறைகள் நடந்த போதும், இதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது கிடையாது, நீதி விசாரணை நடைபெற்றது கிடையாது.

பெரும்பான்மை மக்கள் இந்த அநீதியை எதிர்த்து போராடியது கிடையாது.

'பயங்கரவாதம்" இப்படித்தான் உருவாகின்றது. சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத" வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது. இதனால் இந்துத்துவ ஒடுக்குமுறை அதிகரிக்கும், என்பதை 'பயங்கரவாதத்"தில் ஈடுபடும் நபர்கள் புரிந்து கொள்வதில்லை.

சமூகத்துடன் சேர்ந்து போராடுவது தான், விடுதலைக்கான மாற்றுவழி.

மறுபக்கத்தில் மற்றவர்களும் இதைத்தான் செய்கின்றனர். இன்று இந்தியாவில் இந்த பயங்கரவாதம், உங்கள் ஒத்துழைப்புடன் ஆட்சியைப் பிடிக்க பயன்படவில்லையா? உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா? சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா?

இவர்கள் தானே 'பயங்கரவாதிகளை" உற்பத்தி செய்கின்றனர். இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி.

அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத"த்தை ஒழிக்க முடியும். முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை" உண்மையாக ஒழிப்பான்.

பி.இரயாகரன்
28.11.2008

http://www.tamilcircle.net/index.phpoption=com_content&view=article&id=4505:2008-11-28-09-09-39&catid=74:2008

சதங்கா (Sathanga) said...

//மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பதிவு. உங்களது எழுத்து நடையும் தேர்ந்த எழுத்தாளர் போல உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.//

very true.

சதங்கா (Sathanga) said...

//மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பதிவு. உங்களது எழுத்து நடையும் தேர்ந்த எழுத்தாளர் போல உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.//

உள்ளது உள்ளபடி சொல்லிய விதம் very true.

ஜோசப் பால்ராஜ் said...

மிக ஆழ்மான பதிவு. அனைத்துல தீவிரவாதங்களையும் தொட்டுச் சென்றுள்ளீர்கள்.
முக்கியமாக அதிகாரிகளின் பங்கை குறிப்பிட்ட வரிகள் முக்கியமானவை. சில தவறான அதிகாரிகளின் தவறான நடைமுறைகளால்தான் பல இன்னல்களும், இழப்புகளும் நேர்கின்றன. உதாரணம் இலங்கையில் தமிழர்களை ஆதரித்து வந்த இந்திராகாந்தியின் நிலைப்பாட்டில் இருந்து சிங்களவர்களை ஆதரிக்கும் நிலைக்கு ராஜிவ் காந்தியை தவறாக வழிநடத்திய அதிகாரிகளின் செயல்.

ராஜ நடராஜன் said...

//நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

மாற்றங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.//

மஞ்சூராரே!மனித குலத்துக்கு எதிரான இந்த தீவிரவாதம் அழிந்தே தீர வேண்டும்.மாற்றங்கள் வரட்டும்.மனித நேயம் வாழட்டும்.உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//சில தவறான அதிகாரிகளின் தவறான நடைமுறைகளால்தான் பல இன்னல்களும், இழப்புகளும் நேர்கின்றன. உதாரணம் இலங்கையில் தமிழர்களை ஆதரித்து வந்த இந்திராகாந்தியின் நிலைப்பாட்டில் இருந்து சிங்களவர்களை ஆதரிக்கும் நிலைக்கு ராஜிவ் காந்தியை தவறாக வழிநடத்திய அதிகாரிகளின் செயல்.//

பதவியிலிருந்து விலகும் அமெரிக்க ஜனாதிபதி கூட தனது பதவிக் காலத்தில் உதிர்த்த சில வார்த்தைகளும் செயல்களும் தவறு என்றும் அவ்வாறு தான் சொல்லியிருக்கக் கூடாது என்றும் வருத்தப்படுகிறார்.ஒரு முப்பதாண்டுக்கும் மேலான போராட்டத்தில் ஒரு அங்கமாக செயல்பட்ட சில வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதுபற்றி ஒருவித வருத்தமும் படாமல் தனது இறுதிக்காலத்தில் கூட சுய மனப் பரிசோதனை செய்யாமல் போனது,போவது வருத்தத்திற்குரியது.

ராஜ நடராஜன் said...

//உள்ளது உள்ளபடி சொல்லிய விதம் very true.//

வாங்க சதங்கா!உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

A well written and balanced commentry. keep it up RN

ராஜ நடராஜன் said...

//A well written and balanced commentry. keep it up RN//

Thanks for your decent comment anony.

I used to wonder sometime when anonymous express a decent comment why they are hiding under the banner of anony:)

Eventhough anony meant for a compulsion reason of hiding the idendity, blogs anony expression is not so:(

A recent blogs comments on the same subject, there are full of abuses on a particular remarkable person and the blogger encouraging the idiotic abuses:(

வருண் said...

****இவற்றையெல்லாம் கடந்து புதிய உலகம் ஒருநாள் தோன்றட்டும் என நானும் கனவு காண்கிறேன்..அப்பொழுது மனித இனத்தின் அவலங்களை,அசிங்கங்களைப் புறம் தள்ளி விட்டு மனித நேயம் மட்டுமே ஆளுமை செய்யும் காலம் வரட்டும்.வரும் காலத்தின் மாறுதல்களில் புதிய மனித சிந்தனைகள் பிறக்கட்டும்.****

தீவீரவாதத்தை மதச்சார்பற்று, நாடு சார்பற்று, கடவுள் சார்பற்று பார்க்கவேண்டும் என்கிறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!

ஆனால், ஒரு தமிழன் தவறு செய்தால் தமிழனுக்குத்தான் 10 மடங்கு அவமானம். தமிழந்தான் அதைப்போல் தவறு நடக்காமல் இருக்கப்போராடனும். அதை நினைத்து வெட்கி தலைகுனியனும்.

அதேபோல் தான் இதுவும். சும்மாப்போய் இன்னொசண்ட் மக்களை மிருகங்கள் கூட கொல்லாது!

ஆறறிவுபடைத்த பொதுவாக கடவுள்மற்றும் மதநம்பிக்கை உள்ள மனிதமிருகங்கள் மட்டும்தான் இதுபோல் செய்கின்றன!

ராஜ நடராஜன் said...

//ஆறறிவுபடைத்த பொதுவாக கடவுள்மற்றும் மதநம்பிக்கை உள்ள மனிதமிருகங்கள் மட்டும்தான் இதுபோல் செய்கின்றன!//

மூலக்கருவே இதுதான் வருண்.

ராஜ நடராஜன் said...

கலர் மாற்றம் தனக்குத் தானே உதவி திட்டத்தின் கீழ்

தமிழ் பிரியன் said...

///ராஜ நடராஜன் said...

கலர் மாற்றம் தனக்குத் தானே உதவி திட்டத்தின் கீழ்///
அண்ணே! அதான் நீலக் கலரில் அழகா இருக்குதே... அப்புறம் என்ன வேணும்..:)
ஓட்டை எல்லாம் திருப்பித் தர முடியாது போங்க

Maximum India said...

அன்புள்ள ராஜநடராஜன்

மிகச் சிறந்த பதிவு. உங்களது ஆழ்மனதின் வெளிப்பாடே இந்த பதிவு என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட தீவிரவாதத்தின் அடிப்படையான விஷயங்கள் அனைத்தையும் அலசி இருக்கிறீர்கள். ஏற்கனவே ஒரு நண்பர் கூறி இருப்பது போல உங்கள் எழுத்துகளை படிக்கும் போது ஒரு சக பதிவரின் எழுத்துகளாக தெரிவதை விட ஒரு சிறந்த எழுத்தாளரின் எழுத்துகளைப் படிப்பது போலவே உணர்கிறேன். மேலும் மேலும் சிறப்பாக எழுத வளர வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//உங்களது ஆழ்மனதின் வெளிப்பாடே இந்த பதிவு என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட தீவிரவாதத்தின் அடிப்படையான விஷயங்கள் அனைத்தையும் அலசி இருக்கிறீர்கள்.//

மேக்சிம் உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//கலர் மாற்றம் தனக்குத் தானே உதவி திட்டத்தின் கீழ்///
அண்ணே! அதான் நீலக் கலரில் அழகா இருக்குதே... அப்புறம் என்ன வேணும்..:)
ஓட்டை எல்லாம் திருப்பித் தர முடியாது போங்க//

தமிழ் பிரியன் குரங்கு மலைப் பக்கத்தில் குடியிருக்கிற தைரியத்தில்தானே இந்த தெனாவெட்டு:)

நீலக்கலரில்தான் எல்லா பதிவர்களின் பின்னூட்டங்களும் தனிக்கலரில் தெரிகிறதே!நான் கேட்பது நான் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் மட்டும் தனி நிற எழுத்தில் தெரிய வேண்டும் என்பது.

நீங்கள்தான் உங்கள் படத்தை போஸ்டர் போட்டு பதிவு,பின்னூட்டங்கள் போடுகிறீர்களே.எங்கே போனாலும் விடமாட்டமில்ல!லபக்குன்னு ஆளப் பிடிக்கிறேன் பாருங்க இன்னைக்கு:)

thevanmayam said...

இவற்றையெல்லாம் கடந்து புதிய உலகம் ஒருநாள் தோன்றட்டும் என நானும் கனவு காண்கிறேன்..அப்பொழுது மனித இனத்தின் அவலங்களை,அசிங்கங்களைப் புறம் தள்ளி விட்டு மனித நேயம் மட்டுமே ஆளுமை செய்யும் காலம் வரட்டும்.வரும் காலத்தின் மாறுதல்களில் புதிய மனித சிந்தனைகள் பிறக்கட்டும்.

"நான் ஒரு கனவு கண்டேன்"என்ற புகழ் பெற்ற வரிகள் நனவானது போல்
உங்கள் கனவும் பலிக்கட்டும்.

உருப்புடாதது_அணிமா said...

அண்ணே சில கருத்துக்களை எங்கோ படித்த மாதிரி நியாபகம்.. இருந்தாலும் நல்ல/அருமையான பதிவு

உருப்புடாதது_அணிமா said...

இப்போ 24

உருப்புடாதது_அணிமா said...

நான் தான் 25????????

உருப்புடாதது_அணிமா said...

நிதர்சனமான உண்மைகள் ..

ராஜ நடராஜன் said...

//"நான் ஒரு கனவு கண்டேன்"என்ற புகழ் பெற்ற வரிகள் நனவானது போல்
உங்கள் கனவும் பலிக்கட்டும்.//

டாக்டர் இதன் அடிப்படையில் பதிவு ஒன்று தயாராகிக் கொண்டுள்ளது.உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//நான் தான் 25????????//

அணிமா! நாம ஹிட்டெல்லாம் கவனிக்கிறதேயில்லை."வெறும் ஹலோ சொன்னாலே போதும்:)" (இந்த வசனம் ஐரோப்பிய தமிழ் தொலைகாட்சி விளம்பரத்துல கற்றுக் கொண்டது