அட கெரகத்தே!நான் தூங்கி எழுந்தா பல் விளக்கி,இரண்டு குட்டிக்கரணம் போட்டு விட்டு,குளித்துவிட்டு,அப்புறம் கொஞ்சம் வயிற்றைக் காய வைத்து தண்ணீர் குடித்துவிட்டு அப்புறம்தான் நெஸ்காபியெல்லாம் குடிக்கிற பழக்கமென்றேன்.குட்டிக்கரணம்தான் அதுபாட்டுக்கு நடக்குதே அப்புறம் நீ என்ன தனியாக குட்டிக்கரணம் போடப்போடுகிறாய் என்றாள்.அதற்கு நான் எங்க ஊர்ல இதுக்கு யோகா என்று பெயரென்றேன். சரி!சரி என்னமோ பண்ணித் தொலை ஆனால் இங்கே பிரெஞ்சு பாத் மட்டும்தான் அனுமதி என்று சொல்லிவிட்டு காபியை டேபிளில் வைத்துவிட்டுப் போய்விட்டாள்.இந்த சிரமங்களெல்லாம் நம்மூருக்குப் போக வரைக்கும்தானே,சமாளித்துக் கொள்ளலாமென்று நினைத்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொஞ்சம் மூச்சை மட்டும் உள்ளிழுத்து சில வினாடிகள் நம்மூர் சகாக்கள் "தம்"மை விட்டு அனுபவிப்பது போல் மூச்சை உட்கார விட்டு பின் வெளியே என பத்து முறை மூச்சிழுத்து விட்டு மனதுக்குள் A paradox of same action with different results = a cigarette Puff and Yoga என்று நினைத்துக்கொண்டேன்.
பின் தலையை திருப்பிப் பார்த்தால் முதுகில் ஆக்ஸிஜன் பொட்டியை சுமந்தபடி நீல் காற்றுவெளியே மிதந்து கொண்டிருந்தான்.கூடவே மூக்கில் பேசும் குரலில் நாசாவுக்கு ஏதோ தகவல் சொல்லிக்கொண்டிருந்தான்.அந்த நேரம் பார்த்து மரியா மீண்டும் வந்து இப்படியே போய்க் கொண்டே இருக்கலாம்.இந்தப் பயணத்துக்கு எல்லையே இல்லை!ஆனால் நாங்கள் கொஞ்சம் டேரா போட்டு நீர்,நிலம்,அணு,மினரல் போன்ற சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது.அதனால் நீ வேற ஏதாவது வண்டி புடிச்சு போற வேலையப் பாரு என்றாள்.கூடவே இப்பவெல்லாம் இந்தியா கூட சந்திராயன் வண்டி கட்டிகிட்டு இங்கேயெல்லாம் சுத்துறாங்க என்றாள்.அதற்கு நான் சந்திரன் சுற்றுவட்டத்துக்கு அல்லவா போகவேண்டுமென்று மனதுக்குள் முணுமுணுத்தேன்.
இதற்கிடையில் நமிதா வேறு அங்கே தூங்கிகிட்டு இருக்குதே!எப்படி பூலோகம் போய்ச் சேர்வது என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.சரி உதவிக்கு யாராவது இருக்கிறார்களா என்று இகலப்பையில் நோக்கினால் அங்கே "அதுசரி" முதல் பாகம் 8வது படத்துக்குப் பக்கத்துல விக்கிரமாதித்தன் கூடவும் வேதாளத்து கூடவும் கதையடிச்சுகிட்டு இருக்கார்.சரியான நேரத்துல சரியான ஆள்தான் மாட்டினார்ன்னு சந்தோசத்துல "அண்ணா!ஊருக்கு திரும்ப போறதுக்கு வழி தெரியாம வண்டியில்லாம மாட்டிகிட்டேன்.கூடவே நமிதாவ வேற பிக்கப் பண்ணனும்!என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கேனுங்கண்ணா"ன்னு சொன்னதும் அவர் //டயர்டா இருக்குன்னா விட்றுங்கண்ணா...நான் அந்த வழியா தான் வர்றேன்...அப்பிடியே பிக்கப் பண்ணிக்கிறேன் :))// என்றார்.
சண்டிக்குதிரைய இவர் தலையில கட்டுற சந்தோசத்துல " அண்ணா! அப்ப நீங்க நமீதாவ வெச்சிக்குங்க!வேதாளத்தைக் கொஞ்சம் இங்கே அனுப்புங்க என்றேன்.அதற்கு அவர் வேதாளத்தைப் பிரிஞ்சு விக்கிரமாதித்தன் எப்பவுமே பிரிஞ்சு இருக்கிறதில்லை அதனால விக்கியும் கூடவே வருவான் என்றார்.அதற்கு நான் விக்கிரமாதித்தன் கிட்ட கொஞ்சம் டெக்கீலாவ வாங்கி நமிதாவுக்கு கொடுக்கச் சொல்லிட்டு இரண்டுபேரையும் இங்கே அனுப்பி வையுங்கண்ணா என்றேன்.
சரி என்று அதுசரி சொன்ன சில கணங்களில் வேதாளமும் விக்கிரமாதித்தனும் என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.வந்து சேர்ந்தவுடன் டிஸ்கவரிக்காரங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஹாய் வேதாளம் & விக்கிரமாதித்தன்!சவுக்கியமா இருவரும்?பார்த்து வருசக்கணக்கிலாச்சே என்றேன்.ஆமாம்!முன்பெல்லாம் முருங்கைமரம் மரம் மட்டும்தான் தாண்டிகிட்டு இருந்தேன்.இப்பவெல்லாம் தொழில்நுட்பம் ரொம்ப வளர்ந்துட்டதால தேசம் விட்டு தேசம்,கண்டம் விட்டு கண்டம்,கோளம் விட்டு கோளம் பறந்துகிட்டு இருக்கேன் என்றது வேதாளம்.விக்கிரமாதித்தன் புன்முறுவலுடன் எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
வேதாளம் "நட்! உனக்கொரு நாட் போட்டு கதை சொல்லுகிறேன்.விடையைச் சொல் என்றது.அதற்கு நான் வேதாளம் கண்ணு!நானெல்லாம் கதையிலேயே நாட்டு வைக்கிற பாக்கியராஜ் ஊர்க்காரனாக்கும்.உன்னைப் பற்றி எத்தனையோ வருசத்துக்கு முந்தியே தெரியும்.குசும்பு பண்ணாம கதையை விக்கிகிட்ட சொல் என்றேன்.இதுவரையிலும் ஒன்றுமே பேசாமலே வந்த விக்கிரமாதித்தன் பாக்கியராஜ் பேரைக் கேட்டதும் நானும் ஆட்டையில சேர்ந்துக்குறேன்ன்னு சொன்னான். வசமா மறுபடியும் விக்கிரமாதித்தன் மாட்டிகிட்டான்னு வேதாளம் மனதுக்குள் சிரித்தது.எந்த விடுகதைப் போட்டாலும் விடை சொல்லும் விக்கிரமாதித்தனை வேறு விதத்தில்தான் மடக்கவேண்டுமென்று நினைத்து சரி!சரி!உனக்கு ஒரு கணக்கு சொல்லுகிறேன்!வேணுமுன்னா இதற்கு விடை சொல் என்று நம்ம முதல் பாகம் கணக்கு சொன்னது.
This is a trip at high speed,
jumping distances by factor of 10.
Start with 100 equivalent to 1 meter, and increasing sizes by
factor of 10s ,or 101 (10 meters), 102 (10x10 = 100 meters, 103
(10x10x10 = 1.000 meters), 104 (10x10x10x10 = 10.000 meters),
so on, until the limit of our inmagination in direction to the
macro-cosmos.
.................................................................................................................................................................
விடை சொல்லு பார்க்கலாம் என்றது வேதாளம்.விக்கிரமாதித்தன் அது ஒண்ணுமில்ல கண்ணு
"இது 10 ஆல் பெருக்கும் தூரத்தைக் கடக்கும் ஒரு மிக வேகமான பயணம்.
அதாவது 10 x 10 = 100 மீட்டர்
10 x 10 x 10 = 1000 மீட்டர்
10 x 10 x 10 x 10 = 10000 மீட்டர்
இந்த வேகத்தில்தான் இப்ப பூலோகம் திரும்ப போயிட்டுருக்கோம் என்று முதல்பாகம் படித்த தைரியத்தில் சொன்னான்.சிம்மா சொல்லப்படாது. இம்புட்டு கோளங்கள் சுத்திகிட்டு இருந்தும் அது ஒண்ணுக்கொன்னு முட்டிக்காத இடைவெளியில் அதுபாட்டுக்கு சுத்தி திருஞ்சிகிட்டு கிடக்குதுகள்.வேதாளத்தை இன்னும் கொஞ்சம் பாக்கியராஜ் ஸ்டைல்ல வேதாளத்தை இங்கிலிபீசுல இம்ப்ரஸ் பண்ணலாமேன்னு நினைச்சு
From this distance, all the galaxies look small with inmense empty spaces in between.
The same laws are ruling in all bodies of the Universe.
We could continue traveling upwards with our imagination,
but now we will return home quickly என்று வேதாளத்திடம் சொல்லிவிட்டு
100,000 light-years :We started reaching the periphery of the Milky Way என்று என்னிடம் விளக்கிக் கொண்டு வந்தான்.

1 million light-years : At this tremendous distance we could see all the Milky Way &
other Galaxies too...








of the planets


100 million km Orbits of Venus and Earth...

10 Million km Part of the Earth’s Orbit in blue




20 comments:
பாதி படிச்சிட்டேன் மிச்சம் ஊட்ல படிக்கிறேன், அது சரி நமீதா கூட அப்படின்னு மூடு இஸ்பாயில் ஆயிடுச்சுங்க.
நான் தான் முதல்ல
நீங்க கதை சொன்ன விதம் அருமை, அருமையான நடை
/*
" அண்ணா! அப்ப நீங்க நமீதாவ வெச்சிக்குங்க!வேதாளத்தைக் கொஞ்சம் இங்கே அனுப்புங்க என்றேன்
*/
இது பண்ட மாற்று முறையா?
அஃகஃகா.... அது சரி அண்ணன் வலுவுல வந்து சேந்துகிட்டாரு... அஃகஃகா!!
//நான் தான் முதல்ல//
நசரேயன் வாங்க!நமீதா குதிரைக் கதை சொல்றதுனாலே குடு குடுப்பையார் 2 வினாடிகளில் மூக்கை நீட்டி முதல் பின்னூட்டத்தை தட்டிக்கொண்டு போய் விட்டார்:))))
//பாதி படிச்சிட்டேன் மிச்சம் ஊட்ல படிக்கிறேன், அது சரி நமீதா கூட அப்படின்னு மூடு இஸ்பாயில் ஆயிடுச்சுங்க.//
அதுசரி நமிதா கூட இருக்குறதுக்கு நீங்க மூடு இஸ்பாய்லா:)அதுசரி கவனிக்கிறீங்களா?இல்லை டெக்கீலா கூட....
//இது பண்ட மாற்று முறையா?//
நீங்க வேற நசரேயன்.அதுசரி அண்ணன் காதுல விழுந்துடப் போவுது.நாலாவது பாகம் துவக்கம் கதாநாயகனும் அவரேதான்.
//அஃகஃகா.... அது சரி அண்ணன் வலுவுல வந்து சேந்துகிட்டாரு... அஃகஃகா!!//
போற பக்கமெல்லாம் இஃகி!இஃகி விளம்பரப் பேஸ்ட் வித்துகிட்டு வாரேன்!போனஸா இப்ப அஃகா!அஃகா வுமா:)
என்னது....எனக்கே தெரியாம என்ன வைச்சி ஒரு கதையா? செம காமெடியா இருக்கே :))
//
அண்ணா! அப்ப நீங்க நமீதாவ வெச்சிக்குங்க
//
நமீதாவ வெச்சிக்க யார்னா மாட்டேன்னு சொல்லுவாங்களா? டபுள் ஓக்கே...
//
வேதாளத்தைக் கொஞ்சம் இங்கே அனுப்புங்க என்றேன்.அதற்கு அவர் வேதாளத்தைப் பிரிஞ்சு விக்கிரமாதித்தன் எப்பவுமே பிரிஞ்சு இருக்கிறதில்லை அதனால விக்கியும் கூடவே வருவான் என்றார்
//
வேதாளத்த எங்க வேணும்னாலும் அனுப்பி வைக்கலாம்...அது எப்பிடினா ஒழிஞ்சா சரி! இந்த மாதித்தன் பயலும் தான்.. அது ரெண்டையும் அப்படியே எங்கனா அண்ட வெளில தள்ளி விட்றுங்க!
என்னது...வேதாளம் இங்கிலிபீசெல்லாம் பேசுதா...இங்க என்னடான்னா ஒண்ணும் தெரியாத மாதிரி ரொம்ப நடிக்குது....
நீங்க சயன்ஸ் சொல்லி தர்ற விதமும் ரைட்டிங் ஸ்டைலும் ரொம்ப நல்லாருக்கு...ப்ளீஸ் கண்டினியூ!
//
ராஜ நடராஜன் said...
//பாதி படிச்சிட்டேன் மிச்சம் ஊட்ல படிக்கிறேன், அது சரி நமீதா கூட அப்படின்னு மூடு இஸ்பாயில் ஆயிடுச்சுங்க.//
அதுசரி நமிதா கூட இருக்குறதுக்கு நீங்க மூடு இஸ்பாய்லா:)அதுசரி கவனிக்கிறீங்களா?இல்லை டெக்கீலா கூட....
//
என்ன பண்றது...நமீதாவ நீங்க என்கூட அனுப்பி வச்சதிலருந்து பல பேருக்கு டக்கீலா இல்லாமலயே உள்ள சூடாகுது....அதையெல்லாம் பாத்தா நம்ம வேல நடக்குமா...நான் ரொம்ப பிஸியாக்கும்...0:))
//என்னது....எனக்கே தெரியாம என்ன வைச்சி ஒரு கதையா? செம காமெடியா இருக்கே :))//
வாங்க!வாங்க!உங்களுக்குத்தான் வெயிட்டிங்:)இனி நாளாம் பாகம் ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!
//நமீதாவ வெச்சிக்க யார்னா மாட்டேன்னு சொல்லுவாங்களா? டபுள் ஓக்கே...//
இஃகி!இஃகி!(இது தமிழ் சிரிப்பாம்:) பழமையண்ணன் சொன்னாரு)
//வேதாளத்த எங்க வேணும்னாலும் அனுப்பி வைக்கலாம்...அது எப்பிடினா ஒழிஞ்சா சரி! இந்த மாதித்தன் பயலும் தான்.. அது ரெண்டையும் அப்படியே எங்கனா அண்ட வெளில தள்ளி விட்றுங்க!//
உங்க தாளத்த கூடவே நமிதாவையும் நீங்களே வெச்சுக்கங்க.தூரத்தில சந்திராயன் திரும்ப பூமிக்கு வருகிற மாதிரி தெரியுது.நான் அதுல பயணம் செய்துக்குறேன்!
//என்னது...வேதாளம் இங்கிலிபீசெல்லாம் பேசுதா...இங்க என்னடான்னா ஒண்ணும் தெரியாத மாதிரி ரொம்ப நடிக்குது....//
அதுதான் சொல்லுதே தொழில்நுட்பம் வளர்ந்திருச்சுன்னு!முருங்கை மரத்தையே சுத்திகிட்டேயிருந்தா காரியம் ஆகுமா?அங்கே இங்கேயின்னு நாலு கோளங்களுக்குப் போனால்தானே இங்கிலிபீசெல்லாம் தெரியுமுன்னு சொல்லுது?
(நானே இந்த ஊருக்கு வந்துதானுங்கண்ணா இந்தியே பேசக் கத்துகிட்டேன்:))
அடுத்த பகுதி இன்னும் வரலையே? வர்ற வரைக்கும் வெளிநடப்பு!
//அடுத்த பகுதி இன்னும் வரலையே? வர்ற வரைக்கும் வெளிநடப்பு!//
வெளிநடப்பா!இதோ பாகம் 4 வெளியிட்டாச்சு:)
Post a Comment