Followers

Sunday, December 14, 2008

கோளங்களின் புள்ளிகளில்-பகுதி 2

ஓய்வெடுக்கிறேன் பேர்வழின்னு இப்படி ஒரேயடியா உட்கார்ந்துகிட்டேயே நமிதா!கிளம்பு போகலாம் என்றேன்.எவ்வளவு தூரம் பிரயாணம் செய்திருக்கிறேன்.எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது,நீ ஒன்று செய்!இந்த வழியாத்தான் நாசாவிலிருந்து அனுப்பும் டிஸ்கவரி ங்கிற பேருல ஒரு வண்டி வரும்.நீ அதை கையக் காட்டி நிறுத்தச் சொல்லி அதுல போ!மீண்டும் திரும்ப இந்த வழியாத்தானே வருவாய்.அப்பொழுது உன்னை நான் பிக்கப் செய்துகொள்கிறேன் என்றது .

ஊருல அம்மாக்கள்,அம்மணிகள்,மாமிகள்,மச்சிகள்,ரிட்டையர்டு தாத்தாக்கள் அத்தனைபேரும் கோலங்கள் தான் பார்க்குறாங்க!அதெல்லாம் உவ்வேங்கிறதால நமீதாவை நம்பி கோளங்களையெல்லாம் சுற்றிப் பார்க்கணுமின்னு வந்தால் நமிதா இப்படி பாதி வழியில டபாய்க்குதே என்று மனதில் புலம்பிக்கொண்டே டிஸ்கவரிக்காக காத்திருந்தேன்.

குதிரைச் சவாரியில போவதை விட டிஸ்கவரியில் போனால் வேகமாகவும் போகலாம்,அதே மாதிரி காக்பிட் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு ஏதாவது பீட்டரடிச்சுகிட்டே போகலாம் என்று நினைத்தேன்.நமிதா சொன்னமாதிரியே டிஸ்கவரி கொஞ்சம் தூரத்துல வருவது தெரிந்தது.டவுனுக்குப் போகிற பஸ் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் இருக்கும்போதே கையக் காட்டி நிற்கிற பழக்கத்தில் நானும் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தேன்.

இது யாரிங்கே! பூமியிலுமில்லாம சந்திரனுமில்லாத பகுதியில் குதிரையோட ஒருத்தன் நிற்கிறானே என்று நினைத்து டிஸ்கவரி எனது அருகில் வந்து நின்றது.உள்ளேயிருந்து வயர்லஸ் வாத்தியம் ஏதோ முகத்துக்குப் பக்கத்தில் வைத்து "Where are you going man? என்று பீட்டரில் கேட்டான்.

என்கிட்ட இருந்த இகலப்பையை அழுத்தி கோளங்களையெல்லாம் சும்மா சுற்றிப்பார்க்கலாமென நமிதாவுடன் வந்தேன் என்றேன்."what are you saying man?which part of the cosmos you are?" என்று டிஸ்கவரியின் டேஷ்போர்டில் இரண்டொரு பட்டனைத் தட்டினான்."Google analysis says that you must be somewhere on the earth,southern part of India" என்று ஜோசியம் சொன்னான்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! உனக்கெப்படி தெரியும் என்று கேட்க மீண்டும் " This is very simple buddy! There are more than 3 million google search for the word "namitha " from the southern part of India" என்று பச்சைக்கலர் எழுத்துக்கள் கண்சிமிட்டுவதைக் காட்டினான்.

சரி வண்டியில ஏறிக்கோ என்று டிஸ்க் பைலட் சொன்னான்.டிஸ்கவரி உள்ளே போனதும் குறுக்கே நெடுக்கே இரண்டு மூன்று பேர் அந்தரத்துல நகர்ந்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒருஅம்மணியும் ஹலோ என்று ஒற்றைக் கண்ணில் "விங்" குடன் " Hi I am maria! " This is neil junior,Mike,peter,john என்று அனைவரையும் அறிமுகம்படுத்தினாள்.என் பெயர் ராஜ நடராஜன் என்று என்னை அறிமுகப் படுத்தினேன்." Very hard to pronounce man! I will simply call u nat" என்றாள். எனக்கு அப்பொழுதுதான் மின்னலாய் மண்டைக்குள் இப்படித்தான் மாரியம்மாங்கிற பெயர் நாள்வழக்கில் மரியா என்று குறுகி உச்சரிப்பில் மேரி என்றும் மரி என்றும் ஆகி விட்டதோ என நினைத்துக் கொண்டு கண்ணாடியின் வெளியே நோக்கிவிட்டு காக்பிட் திரையில் நோக்கினால் தூரம் 10 மில்லியன் கிமீ காட்டியது.
10 Million km (Part of the Earth’s Orbit in blue)

டிஸ்கவரியை ஒரு நோட்டம் விட்டு விட்டு மீண்டும் திரையை நோக்கினால் வீனஸ் ,பூமி சஞ்சரிக்கும் வரைபடம் திரையில் தெரிந்தது.
100 million km Orbits of: Venus and Earth...
இப்பொழுது திரை வேகம் 1 பில்லியன் கி.மீ என்றது. அட நம்மூர் கிரகங்களைத்தான் மெர்க்குரி,வீனஸ்,மார்ஸ்,ஜீபிடர்ன்னு பேர் மாத்திகிட்டாங்கன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்

1 billion km Orbits of: Mercury,Venus, Earth,Mars and Jupiter.
பீட்டரும்,மைக்கேலும் வண்டிய ஓட்டிகிட்டு இருந்ததால் என்னிடம் அதிகம் பேசவில்லை.எனவே அரட்டையை நீலுடனும் மரியுடனும் ஆரம்பித்தேன்.

Me: Neil !Do you know this maths

jumping distances by factor of 10.
Start with 100 equivalent to 1 meter, and increasing sizes by
factor of 10s ,or 101 (10 meters), 102 (10x10 = 100 meters, 103
(10x10x10 = 1.000 meters), 104 (10x10x10x10 = 10.000 meters),
so on, until the limit of our inmagination in direction to the
macro-cosmos.

இதைச் சொல்லிவிட்டு திரையைப் பார்த்தால் வேகம் 10 பில்லியன் காட்டியது.

10 billion km (At this height of our trip, we could observe the Solar System and the orbits of the planets)
Neil: We are travelling based on that formula only man!
Maria! make nat comportable and explain time to time of the distance we are speeding" என்று தனது வேலையில் மூழ்கிவிட்டான். மரியும் எனக்கு தூக்கம் வருது.வேகத்தை ஆட்டோ மோடில் போடுகிறன் நீயே பார்த்துக் கொண்டு வா!சந்தேகம் இருந்தால் அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அடுத்த அறைக்குப் பறந்து விட்டாள்.நான் மட்டும் தூரங்களை திரையில் கவனித்துக் கொண்டே வந்தேன்.திரை வேகத்துடன் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துக் கொண்டே வந்தது.
100 Billion km (The Solar System starts looking small...)
1 trillion km: (The Sun now is a small star in the middle of thousands of stars)
1 light-year: ( At one light-year the little Sun star is very small )
10 light-years : (Here we will see nothing in the infinity....)
100 light-years: “Nothing” Only stars and Nebulae..
1,000 light-years : (At this distance we started travelling the Milky Way, our galaxy.)
10,000 light-years :( We continued our travel inside the Milky Way.)
100,000 light-years : (We started reaching the periphery of the Milky Way)

1 million light-years : (At this tremendous distance we could see all the Milky Way & other Galaxies too...)

நீண்ட பயணத்தில் திடீரென்று ஒரு பழைய நினைப்பு தோன்றியது.கோயம்புத்தூரில் சிதம்பரம் பூங்கா படிப்பகத்தில் கலைக்கதிர் பத்திரிகை நியுட்ரான்,புரோட்டன்னு நிறைய கற்றுக்கொடுக்க முயற்சி செய்தது.அப்பவெல்லாம்,குமுதம்,விகடன் துணுக்குன்னு படிச்சிகிட்டு இப்ப புரிந்தும் புரியாமலும் பயணிக்க வேண்டியுள்ளதேன்னு நினைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தால் டிஸ்கவரி டிரைவர்கள் தூக்கத்தின் மயக்கத்தில்.டிஸ்கவரி அதுபாட்டுக்கு தானியங்கி நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நானும் கொஞ்சம் குரட்டை விடலாமே என்று முடிவு செய்து.....

12 comments:

பழமைபேசி said...

எல்லாம் நல்லா இருந்துச்சு, கூட வந்த நமிதாவைத் தொங்கல்ல உட்டுட்டீங்க?

பழமைபேசி said...

நல்ல அறிவியல் தகவல்களை வாழைப்பழத்துல ஊசி ஏத்துறா மாதிரி....அருமை!

ராஜ நடராஜன் said...

//எல்லாம் நல்லா இருந்துச்சு, கூட வந்த நமிதாவைத் தொங்கல்ல உட்டுட்டீங்க?//

பழமை!வாங்க.நமீதாவை நம்பித்தான் பயணத்தையே துவங்கினேன்.நொண்டிக்குதிரைக்கு சறுக்கினேதே சாக்குன்னு....

ராஜ நடராஜன் said...

//நல்ல அறிவியல் தகவல்களை வாழைப்பழத்துல ஊசி ஏத்துறா மாதிரி....அருமை!//

இந்தக் கலைக்கதிர் புத்தகத்தை ஒழுங்காப் படிச்சிருந்தா கோனுசியே குத்தலாங்க:)பட்டம்,பந்து,ஆறு,குளம்,மீன்,கொய்யாப்பழம்,மாம்பழம் திருட்டு,சைக்கிள்ன்னு நாள் ஓடிப்போச்சுங்க!

கிரி said...

//டவுனுக்குப் போகிற பஸ் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் இருக்கும்போதே கையக் காட்டி நிற்கிற பழக்கத்தில் நானும் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தேன்//

:-))))

ராஜ நடராஜன் said...

////டவுனுக்குப் போகிற பஸ் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் இருக்கும்போதே கையக் காட்டி நிற்கிற பழக்கத்தில் நானும் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தேன்//

:-)))) //

கிரி! நல்லா சிரிச்சீங்க போங்க:) எனக்கு பழைய நினப்புதான் பாட்டு ஞாபகத்துக்கு வந்துருச்சு.

அது சரி said...

//
ஓய்வெடுக்கிறேன் பேர்வழின்னு இப்படி ஒரேயடியா உட்கார்ந்துகிட்டேயே நமிதா!கிளம்பு போகலாம் என்றேன்
//

டயர்டா இருக்குன்னா விட்றுங்கண்ணா...நான் அந்த வழியா தான் வர்றேன்...அப்பிடியே பிக்கப் பண்ணிக்கிறேன் :))

அது சரி said...

ஏதோ சயன்ஸ்ல பெரிய பெரிய நம்பரா சொல்லி பயமுறுத்தறீங்க...நான் நாளைக்கா திரும்பி வர்றேன்...முழுசா படிச்சிட்டு அப்புறம் சொல்றேன்..

ராஜ நடராஜன் said...

//டயர்டா இருக்குன்னா விட்றுங்கண்ணா...நான் அந்த வழியா தான் வர்றேன்...அப்பிடியே பிக்கப் பண்ணிக்கிறேன் :))//

இஃகி!இஃகி!(பழமையண்ணங்கிட்ட கத்துகிட்டது:))சரியான சமயத்துல வேதாளம் மாதிரி வந்தீங்க!3ம் பகுதிய எப்படி இழுக்கறதுன்னு யோசனை செஞ்சுகிட்டிருந்தேன்.நீங்க நமிதாவ வச்சிகுங்க.வேதாளத்த கேலக்ஸிக்கு அனுப்புங்க!நன்றி.

குடுகுடுப்பை said...

சூப்பர்

//மாரியம்மாங்கிற பெயர் நாள்வழக்கில் மரியா என்று குறுகி உச்சரிப்பில் மேரி என்றும் மரி என்றும் ஆகி விட்டதோ //

ஆக்கப்பட்டட்து எனச்சொல்லலாம்

மங்கை said...

நிறைய தகவல்கள்...

வாழ்த்துக்கள்

கோவையா...சந்தோஷம்..:-)

ராஜ நடராஜன் said...

//நிறைய தகவல்கள்...

வாழ்த்துக்கள்

கோவையா...சந்தோஷம்..:-)//

நம்ம ஊட்டுப்பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு நன்றிங்க!அப்படியே ஒரு எட்டு மூணாம் பகுதிக்கும் போய்ட்டு வந்துடுங்க:)

(வேதாளத்துகிட்ட இருந்து இப்பத்தான் கதை சொல்றது எப்படின்னு கத்துக்கிட்டிருக்கேன்.இன்னும் கதை சிந்துபாத் கதை மாதிரி வந்துகிட்டே இருக்குமுங்க:))