மூன்றாம் பாகத்தை எங்கே விட்டோம்?இஃகி!இஃகி(பழமைகிட்டயிருந்து தொத்திகிச்சு:)) நினைவுக்கு வந்திருச்சு!"நீங்க நமிதாவ வச்சிகிட்டு வேதாளத்தை இன்னும் கொஞ்சம் தூரம் கதை சொல்ல அனுப்பறீங்களான்னு சொன்னதுதான் தாமதம்...... //
"வேதாளத்த எங்க வேணும்னாலும் அனுப்பி வைக்கலாம்...அது எப்பிடினா ஒழிஞ்சா சரி! இந்த மாதித்தன் பயலும் தான்.. அது ரெண்டையும் அப்படியே எங்கனா அண்ட வெளில தள்ளி விட்றுங்க!"// என்று என் காதில் கிசுகிசுத்தார்.
வேதாளக் காதாயிற்றே! அதுசரி யின் முணுமுணுப்பு வேதாளத்தின் காதில் கணீரென்று கேட்டது.உடனே விக்கிரமாதித்தனிடம் "இவரு பொன்னியின் செல்வன் மிதப்பில பழைய நட்பையெல்லாம் மதிக்காம உன்னையும் என்னையும் அண்டத்துல விடறதுக்கு "கூ" செய்யறாரு பார்த்தியான்னு சொன்னதும் அதற்கு விக்கிரமாதித்தன் " இவருக்கென்ன நவாஸ் செரிப் பின்னு நினைப்பா? முஷ்ரஃப் விமானத்தில் ஏறியதும் விமானத்துல சுத்த விடறதுக்கு!முஷ்ரஃப் திரும்ப வந்து என்னென்னல்லாம் நடந்துருச்சுன்னு வா அவருக்கு மறுபடியும் கதை சொல்வோம்" என்றான்.
நானும் இரண்டுபேரும் என்னிடம் சமத்தாகத்தானே இருந்தீங்க!உங்களை ஏன் அண்டத்துல விடறதுக்கு நினைக்கிறாருன்னு சொன்னதும் வேதாளம் " இந்த சிறுக்கி நமிதா ஏதாவது கொடுத்து மயக்கி இருப்பா" என்றது.அப்பொழுதுதான் நான் நமிதாவின் நினைவு வந்தவனாக " என்ன நமிதா! மச்சான் நல்லா கவனிச்சிகிட்டாரா என்று கேட்டேன்.அதற்கு நமிதா இனிமேல் நான் அதுசரி மச்சான்ஸ் கூடவே சுத்தப்போறேன்.உன்கூட வந்தா வெறும் கொள்ளுத்தண்ணிதான் கிடைக்கும்.இவர் டெக்கீலாவெல்லாம் கொடுத்து என்ன நல்லாக் கவனிச்சுக்கிறாரு.அதனால நான் உன்கூட "டூ" நான் வரமாட்டேன் என்றது.நீ கா ன்னுல்ல முன்னமெல்லாம் பாட்டுப் பாடிட்டுருந்த.இப்ப என்ன டூ ன்னல்லாம் புதுசா என்னென்னமெல்லாமோ சொல்கிறாய் என்றேன்.இதெல்லாம் நம்ம மச்சான்ஸ் அதுசரிகிட்ட கத்துகிட்டேன் என்றது.
அந்த நேரம் பார்த்து சந்திராயன் நிலவுக்குப் போய் விட்டு திரும்ப வருவது தெரிந்தது.பரவாயில்லையே கோளங்கள் ரொம்பத்தான் முன்னேறிடுச்சு.நினைச்ச இடத்துக்கெல்லாம் வண்டி கிடைக்குதேன்னு வியப்புல நம்ம பழைய ஸ்டைல் பஸ் நிறுத்தும் கோணத்தில் நின்றேன்.பிரயாணத்துக்கு முன்னால எத்தனைதான் வீட்டிலருந்து துவங்கி ரயில்வே ஸ்டேசன்,பஸ் ஸ்டாண்டு வரைக்கும் பழம பேசுனாலும் அந்த வண்டி புறப்படுறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னாடி "கண்னு!நேரம் நேரத்துக்கு சாப்பிடு!நல்லாப் படி!கோடி வீட்டு கண்ணாத்தாள கேட்டதாச் சொல்லு! இந்த மாதிரி குசலம் பேசிக்கிற சுகமே தனிதான்.
நானும் பழைய பழக்கத்துல அனைவருக்கும் டாட்டா சொல்லி சந்திராயனுக்குள் போகலாமுன்னு வாசல் கதவை நெருங்கியதும் அதுசரியிடம் "நமிதாவ நல்லாக் கவனிச்சுக்கங்க!இப்ப வேதாளம்,விக்கிரமாதித்தன்,நமிதா கெட்டப்புல பார்க்க நல்லாவே இருக்கீங்க!இருந்தாலும் துளசி டீச்சர் கிட்ட சொல்லி ஒரு நாய்க்குட்டியும் கூட்டத்துல சேர்த்துகிட்டீங்கன்னா அந்தக்காலத்து ரஞ்சன் மாதிரி காடு,மலைன்னு சுத்திப் பாட்டு பாடிகிட்டே கதை சொல்லலாம்!நான் ஊருக்குப் போய் சேர்ந்ததும் கடுதாசி போடறேன்"என்று சொல்லி விட்டு சந்திராயனுக்குள் நுழைந்தேன்.சந்திராயன் என்னை முதலாம் பாகம் துவக்கம் கொல்லைப்புறத் தோட்டம் நோக்கி பயணித்தது.
சும்மா சொல்லக்கூடாது சந்திராயனை.ஆள் இல்லாம உட்கார்ந்த இடத்துல இருந்துகிட்டே இம்புட்டு தூரப் பிரயாணம் போறது சாதனைதானே!ன்னு வியப்பில் ஆற அமர்ந்து கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தால் எனது கோர்வையில்லாத சிந்தனை மனித குல வளர்ச்சி பற்றி Bigbang தியரிலிருந்து ஆரம்பிச்சு மனிதகுல துவக்க நியாண்டர்தால் மனிதன் துவங்கி மனிதனின் முதல் கண்டு பிடிப்புக்களாய் நெருப்பின் உபயோகம்,கூடவே தெய்வம் கொள்கைப் பரிணாமம், காடு மேடா அலைந்ததில் மிதமிஞ்சிய நிலைக்கு வந்து விட்டதாலும்,காட்டு வாழ்க்கை மாறி நீர் நிலங்கள் தேடி குடியேற்றம்,நீர் நிலம் அக்கம் பக்கத்து தனது இன வளர்ப்பு வாழ்க்கை பிடித்து மொகஞ்சோ தாரா,ஹரப்பா,சிந்து சமவெளி சுமேரியா நாகரீகம்,திராவிட ஆரிய,எகிப்திய,ரோம் நாகரீகம், போர்க்குணம் ரத்தத்தின் அணுக்களில் துவங்கிய வாழ்க்கை மண்,பெண்,பொன் என்று பரவல்,நிறம்,மொழி,பழக்க வழக்கங்களில் துவங்கி தேசங்கள் உருவாக்கம்,தேசங்கள் உருவானதும் அதன் விரிவாக்கம் என போர்கள்.
நாகரீக பரிமாறல்கள் கூடவே மோதல்கள் என நாகரீகங்கள் மற்றும் கலாச்சார மோதல்களுக்கிடையில் வாழ்க்கைப் பாடம் இலக்கியம்,இசை,நடனம்,மருத்துவம்,கணிதம்,பொருளாதாரம்,விஞ்ஞானம், புதியன கண்டுபிடி, தத்துவம்,மதம் என்று கோட்பாடுகள் நீண்டன.
போர்கள் மத,இன வெறுப்பின் அடையாளமாகத் தோன்றியதும் எதிர்வினையாக தத்துவத்தின் அடிப்படையில் நாத்திகம் தோன்றியது.சைவ,வைஷ்ணவ,ஜைன,புத்த,மொகலாய,ஆங்கில கோட்பாடுகளின் அடிப்படையில் கலாச்சாரம்,கட்டிடக் கலைகள்,அரசியல்,வணிகம் பிறந்தன.
இவைகளின் உரசலிலும் தனிமனித விருப்பு வெறுப்புக்களிலும் போர்கள் துவங்கின.கூடவே உலகம் வெல்லும் கனவுகளும் அலெக்சாண்டர் போன்ற மனிதர்களுக்கு உதித்தன.நிலத்தில் யானை,குதிரை என்று நடந்தால் தூரம் என்று அறிந்து கடல்வழிகள் கண்டு பிடிப்பு,இந்தியாவைக் கண்டு பிடிக்கிறேன் என்று அமெரிக்கா தோன்றல், ஒரே குளிர் என்ற சூழலிருந்து சம தட்ப வெட்ப கால நிலைகள் பிடித்துப் போகவே சாம்ராஜ்யக் கனவுகள் நிலை கொண்டன.
எகிப்திய ஆதிக்கம்,ரோம் படையெடுப்பு,துருக்கிய,ஆட்டோமன் பேரரசு,யூத அவலங்கள்,உலகப் போர்கள் என்று போர்ப்படலம் விரிந்தது.போர்கள் மத,இன வெறுப்பின் அடையாளமாகத் தோன்றியதும் எதிர்வினையாக நாத்திகம் தத்துவத்தின் அடிப்படையிலும் தர்க்கவாதம் அடிப்படையில் தோன்றியது.ஆனாலும் தனக்கும் அறியாத தெரியாத புலன்களினாலும்,விந்தைகளாலும் மதம் பரவலாக்கப் பட்டு விட்ட பொது புத்தியாலும் இயற்கையின் அதீத சக்திகளாலும் தன்னையும் மீறிய ஒன்று என்ற கோட்பாட்டில் மனிதன் இன்னும் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளான்.
அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மதம் மனிதனுக்கு பெரும் நம்பிக்கைதான்.இவ்வளவு தூரப் பயணத்தை விஞ்ஞானக் கண் கொண்டு பார்ப்பதும் விந்தையென வியப்பதும் அல்லது பிள்ளையார் சுழி போட்டுக் கொள்வதும் தனி மனித உரிமை.இதையெல்லாம் தாண்டி மனிதனே உருவாக்கிக்கொண்ட மனிதனுக்கு தேவையில்லாத தீயவைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டு மனித இனம் சுதந்திரம் தேட எத்தனிக்கிறது.
இது வரை பார்த்ததில் கண்ணுக்குத் தெரியாத அல்லது இல்லாத சில விசயங்கள்,கோட்பாடுகள் என்னவென்று நோக்கினால் ஜாதிகள்,மதங்கள்,தேச எல்லைகள் என்ற மனக்கோடுகள்.ஆனால் மனித குலத்தை ஆக்கிரமிக்கும் செயல் வடிவங்களாய் இவைகளே முன்னிற்கின்றன.ஒருவேளை இதுவரை சென்ற நமது பயணங்களின் தூரங்களில் இவைகள் இனிவரும் காலத்தில் பொய்ப்பிக்கப்படலாம்.
யுகங்களின் மாறுதல்களில் இனி வரப்போகும் மாறுதல்கள் யாரரிவார்?இத்துடன் அண்டங்கள் அடங்கிய மேல் நோக்கிய மேக்ரோ பயணம் நிறைவடைகிறது.இத்துடன் சுபம் போட்டு விட்டு விடுவேன் என்று பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கும் பெருந்தகைகள் வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....
24 comments:
//போர்கள் மத,இன வெறுப்பின் அடையாளமாகத் தோன்றியதும் எதிர்வினையாக தத்துவத்தின் அடிப்படையில் நாத்திகம் தோன்றியது//
நான் இன்னும் உங்க ரேஞ்சுக்கு சுமாரா கூட வரலை போல இருக்கே
//வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்..... //
ஹா ஹா ஹா சிங்கம்ல
// கிரி said...
//போர்கள் மத,இன வெறுப்பின் அடையாளமாகத் தோன்றியதும் எதிர்வினையாக தத்துவத்தின் அடிப்படையில் நாத்திகம் தோன்றியது//
நான் இன்னும் உங்க ரேஞ்சுக்கு சுமாரா கூட வரலை போல இருக்கே
//வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்..... //
ஹா ஹா ஹா சிங்கம்ல//
அடுத்த பதிவர்களின் பக்கம் போகும்போது என் கண்ணில் படுவது உங்களது பலவிதமான சிரிப்பு அதில் இந்த ஹா ஹா ஹா வும் ஒன்று.நாங்கெல்லாம் இப்ப பழமையின் உதவியால் இஃகி!இஃகி சிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டோம்.
நல்ல அறிவியல் தகவல்களுடன் நகைசுவையும் கலந்து கட்டும் அண்ணன் நகைச்சுவை விஞ்ஞானி வாழ்க!
//இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....
//
இஃகிஃகி! நொம்ப நன்றிங்க!!
// பழமைபேசி said...
நல்ல அறிவியல் தகவல்களுடன் நகைசுவையும் கலந்து கட்டும் அண்ணன் நகைச்சுவை விஞ்ஞானி வாழ்க!
//இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....
//
இஃகிஃகி! நொம்ப நன்றிங்க!!//
உண்மையான விஞ்ஞானி ஜி.டிகாரு ஊருலருந்து வந்திட்டு இப்படியுங் கூட ரீல் விடலேண்ணா எப்படிங்க:)
அப்புறம் நகைச்சுவையின் உச்சகட்ட வாழ்க்கை என்பது கோவை மாவட்டத்தைச் சுற்றித் திரிந்த நாட்களே.
அருமையா இருக்கு,மனித நாகரீக வளர்ச்சிய இவ்வளவு சிறிய பதிவில் பெரிய புரிதல் கொடுத்து இருக்கீங்க
//
இவரு பொன்னியின் செல்வன் மிதப்பில பழைய நட்பையெல்லாம் மதிக்காம உன்னையும் என்னையும் அண்டத்துல விடறதுக்கு "கூ" செய்யறாரு பார்த்தியான்னு சொன்னதும் ...
//
நான் அப்பவே சொல்லல? அந்த வேதாளம் ஒரு வில்லங்கம் பிடிச்சது...கோள் மூட்டி.. இப்ப தெரியுதா நான் எதுக்கு அதை அண்டவெளியில தள்ளிவிட சொன்னேன்னு? :0))
//
முஷ்ரஃப் திரும்ப வந்து என்னென்னல்லாம் நடந்துருச்சுன்னு வா அவருக்கு மறுபடியும் கதை சொல்வோம்" என்றான்.
//
ஆமா, இது ரெண்டும் சேந்து கதை சொல்லிட்டாலும்....மூணு மாசத்துக்கு முன்னாடி மோகத்தைக் கொன்றுவிடுன்னு பட்டாசா ஒரு கதை ஆரம்பிச்சது...இன்னும் பாதிக் கதை கூட சொல்லி முடியலை...இதுல புதுக்கதை வேறயா???
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு!
//
நானும் இரண்டுபேரும் என்னிடம் சமத்தாகத்தானே இருந்தீங்க!உங்களை ஏன் அண்டத்துல விடறதுக்கு நினைக்கிறாருன்னு சொன்னதும் வேதாளம் " இந்த சிறுக்கி நமிதா ஏதாவது கொடுத்து மயக்கி இருப்பா" என்றது.
//
நான் அப்பவே சொல்ல?? பாதாளத்த அடச்சாலும் வேதாளத்து வாயை அடைக்க முடியாது...
மேட்டரு ரொம்ப சிம்பிள்...நமீதாவையும் வேதாளத்தையும் ஒண்ணா வைக்க முடியாது....ஒரு புல்லுக்கட்டு, குள்ளநரி, வெள்ளாடு....எது ஆடு, எது நரின்னு உங்களுக்கே தெரியும் :0))
//
அப்பொழுதுதான் நான் நமிதாவின் நினைவு வந்தவனாக
//
இதை பார்றா....அப்ப ஒங்களுக்கு இதுவரை நமீதா ஞாபகமே இல்ல??? நமீதா நமீதான்னு அண்டவெளில ஒருத்தரு அட்ரஸ் இல்லாம அலைஞ்சதா நியூஸ் வந்துதே...அது நீங்க இல்லியா?
//
ஆனாலும் தனக்கும் அறியாத தெரியாத புலன்களினாலும்,விந்தைகளாலும் மதம் பரவலாக்கப் பட்டு விட்ட பொது புத்தியாலும் இயற்கையின் அதீத சக்திகளாலும் தன்னையும் மீறிய ஒன்று என்ற கோட்பாட்டில் மனிதன் இன்னும் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளான்.
//
அண்ணா,
பின் நவீனத்துவத்துல பிச்சி ஒதர்றீங்க! :0)
//
இத்துடன் சுபம் போட்டு விட்டு விடுவேன் என்று பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கும் பெருந்தகைகள் வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....
//
வர்றது தான் வாரீய, வழியில ஒரு பாட்டி நெலாவுல வடை சுட்டு விக்கும்...வடை சூடா சூப்பரா இருக்கும்...அதுல நாலு மெதுவடை வாங்கிட்டு வாங்க....
அப்படியே முட்டை போண்டாவும்....இங்க ஸ்காட்ச்சுக்கு சைடா ஒண்ணுமேயில்லாம வறுமையில வாடறேன்!
// குடுகுடுப்பை said...
அருமையா இருக்கு,மனித நாகரீக வளர்ச்சிய இவ்வளவு சிறிய பதிவில் பெரிய புரிதல் கொடுத்து இருக்கீங்க//
வாங்க குடுகுடுப்பையாரே!மனித நாகரீக வளர்ச்சி இப்ப saturation point க்குப் போயிடுச்சு போல இருக்குதுங்க.எத்தனை மனித வளர்ச்சிகள்,முன்னேற்றங்கள்!ஆனாலும் மனித நாகரீக மோதல்கள்,போர்கள் வருத்தத்தையே தருகிறது.
அது சரி said...
//
இவரு பொன்னியின் செல்வன் மிதப்பில பழைய நட்பையெல்லாம் மதிக்காம உன்னையும் என்னையும் அண்டத்துல விடறதுக்கு "கூ" செய்யறாரு பார்த்தியான்னு சொன்னதும் ...
//
நான் அப்பவே சொல்லல? அந்த வேதாளம் ஒரு வில்லங்கம் பிடிச்சது...கோள் மூட்டி.. இப்ப தெரியுதா நான் எதுக்கு அதை அண்டவெளியில தள்ளிவிட சொன்னேன்னு? :0))//
அப்பாவி வேதாளத்தை கோள்மூட்டி ன்னு சொல்றீங்களே.அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
எத்தனை கதை சொல்லுது தெரியுமா?சொல்லப் போனா வேதாளம் இன்ஸ்பிரேசன்லதான் அண்டங்கள் பயணமே நகர்ந்தது.
//Blogger அது சரி said...
//
நானும் இரண்டுபேரும் என்னிடம் சமத்தாகத்தானே இருந்தீங்க!உங்களை ஏன் அண்டத்துல விடறதுக்கு நினைக்கிறாருன்னு சொன்னதும் வேதாளம் " இந்த சிறுக்கி நமிதா ஏதாவது கொடுத்து மயக்கி இருப்பா" என்றது.
//
நான் அப்பவே சொல்ல?? பாதாளத்த அடச்சாலும் வேதாளத்து வாயை அடைக்க முடியாது...
மேட்டரு ரொம்ப சிம்பிள்...நமீதாவையும் வேதாளத்தையும் ஒண்ணா வைக்க முடியாது....ஒரு புல்லுக்கட்டு, குள்ளநரி, வெள்ளாடு....எது ஆடு, எது நரின்னு உங்களுக்கே தெரியும் :0))//
என்னது பாதாளத்தை அடச்சாளும் வேதாளத்து வாயை அடைக்க முடியாதா:) ரைம் நல்லாத்தான் வருது உங்களுக்கு:)
நமிதா ஆடு வது தெரியும்.புல் லும் சரி! எது நரி? ஓ! நீங்க அப்படி வர்றீங்க:)
//அது சரி said...
//
ஆனாலும் தனக்கும் அறியாத தெரியாத புலன்களினாலும்,விந்தைகளாலும் மதம் பரவலாக்கப் பட்டு விட்ட பொது புத்தியாலும் இயற்கையின் அதீத சக்திகளாலும் தன்னையும் மீறிய ஒன்று என்ற கோட்பாட்டில் மனிதன் இன்னும் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளான்.
//
அண்ணா,
பின் நவீனத்துவத்துல பிச்சி ஒதர்றீங்க! :0)//
இப்படியெல்லாம் எழுதினா பின் நவீனத்துவமுங்களா? அப்ப இந்தப் பாதையிலே தொடரவேண்டியதுதான்:)
பொதுவில் சொல்லக் கூடாததையெல்லாம் பொதுவில் வைத்தால் அதுவே பின்நவீனத்துவம் ன்னு வேறு ஒரு எதிர்க்கட்சி வேற இருக்குதுங்க.
கொஞ்சம் கொடிக் கட்சிக் கலர மாத்திக்கலாமோ:)
//அது சரி said...
//
அப்பொழுதுதான் நான் நமிதாவின் நினைவு வந்தவனாக
//
இதை பார்றா....அப்ப ஒங்களுக்கு இதுவரை நமீதா ஞாபகமே இல்ல??? நமீதா நமீதான்னு அண்டவெளில ஒருத்தரு அட்ரஸ் இல்லாம அலைஞ்சதா நியூஸ் வந்துதே...அது நீங்க இல்லியா?//
நான் எங்கேங்க நமீ தா! நமீ தா ன்னு அண்டத்துல சுத்தினேன்?மனோராமா ஆச்சி அரேபியன் குதிரை மாதிரி இருக்கே ன்னு சொன்னதால அந்தப் பேர வச்சேன்:)
// அது சரி said...
//
இத்துடன் சுபம் போட்டு விட்டு விடுவேன் என்று பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கும் பெருந்தகைகள் வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....
//
வர்றது தான் வாரீய, வழியில ஒரு பாட்டி நெலாவுல வடை சுட்டு விக்கும்...வடை சூடா சூப்பரா இருக்கும்...அதுல நாலு மெதுவடை வாங்கிட்டு வாங்க....
அப்படியே முட்டை போண்டாவும்....இங்க ஸ்காட்ச்சுக்கு சைடா ஒண்ணுமேயில்லாம வறுமையில வாடறேன்!//
அண்டத்துக் கதையின் பொருள் குற்றத்தை சரியா சுட்டிக் காட்டியிருக்கீங்க!வடைப் பாட்டியை எப்படி மறந்தேன்?
முட்டை போண்டா இப்ப கிடைக்காதாம்!அடுத்த சந்திராயன் போகும்போது சேட்டனும் கூடவே போய் கடை போடலாமுன்னு யோசிச்சிகிட்டு இருக்காராம்.
அதுவரைக்கும் மசலாவுல வறுத்த முந்திரி (இப்ப நான் அதைத்தான் கொறிச்சுகிட்டு இருக்கிறேன்:))chicken Drumstick வச்சிகிட்டு சமாளியுங்க:)
Block or Red?
//அது சரி said...
//
முஷ்ரஃப் திரும்ப வந்து என்னென்னல்லாம் நடந்துருச்சுன்னு வா அவருக்கு மறுபடியும் கதை சொல்வோம்" என்றான்.
//
ஆமா, இது ரெண்டும் சேந்து கதை சொல்லிட்டாலும்....மூணு மாசத்துக்கு முன்னாடி மோகத்தைக் கொன்றுவிடுன்னு பட்டாசா ஒரு கதை ஆரம்பிச்சது...இன்னும் பாதிக் கதை கூட சொல்லி முடியலை...இதுல புதுக்கதை வேறயா???
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு!//
கடைசி வரிக்கு மட்டும் ஒரு எதிர்வினை செய்துக்கிறேன்.நண்பன் ஒருத்தன் versatile story teller and very duty conscious even he drunk.
நல்லா சுவாரசியமா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்
//
ராஜ நடராஜன் said...
கடைசி வரிக்கு மட்டும் ஒரு எதிர்வினை செய்துக்கிறேன்.நண்பன் ஒருத்தன் versatile story teller and very duty conscious even he drunk.
December 29, 2008 7:04 AM
//
அந்த நண்பர் பேரு ராஜ நடராஜனா? :0)
//
ராஜ நடராஜன் said...
அப்பாவி வேதாளத்தை கோள்மூட்டி ன்னு சொல்றீங்களே.அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
எத்தனை கதை சொல்லுது தெரியுமா?சொல்லப் போனா வேதாளம் இன்ஸ்பிரேசன்லதான் அண்டங்கள் பயணமே நகர்ந்தது.
December 29, 2008 6:09 AM
//
அதே தான்....அப்பிடித் தான்...அப்பிடித்தான்யா நம்பி ஏமாந்துட்டேன்....
ஹூம்...அந்த வேதாளம் யாருன்னு உங்களுக்கு தெரியாது...தெரிஞ்ச நான் சொல்ல முடியாது....அதனால....நல்லா இருங்க பாஸூ :0))
//
ராஜ நடராஜன் said...
அதுவரைக்கும் மசலாவுல வறுத்த முந்திரி (இப்ப நான் அதைத்தான் கொறிச்சுகிட்டு இருக்கிறேன்:))chicken Drumstick வச்சிகிட்டு சமாளியுங்க:)
//
வறுமையில வாடற ஒரு ஏழைக் குடிமகன்ட்ட பேசுற பேச்சா இது??? :0))
// அது சரி said...
//
ராஜ நடராஜன் said...
கடைசி வரிக்கு மட்டும் ஒரு எதிர்வினை செய்துக்கிறேன்.நண்பன் ஒருத்தன் versatile story teller and very duty conscious even he drunk.
December 29, 2008 7:04 AM
//
அந்த நண்பர் பேரு ராஜ நடராஜனா? :0)//
நான் மது அருந்துவதில்லை.கிடைக்காத ஊர்ல மாட்டிகிட்டதும் கூட காரணமாக இருக்கலாம்:)
//அது சரி said...
//
ராஜ நடராஜன் said...
அதுவரைக்கும் மசலாவுல வறுத்த முந்திரி (இப்ப நான் அதைத்தான் கொறிச்சுகிட்டு இருக்கிறேன்:))chicken Drumstick வச்சிகிட்டு சமாளியுங்க:)
//
வறுமையில வாடற ஒரு ஏழைக் குடிமகன்ட்ட பேசுற பேச்சா இது??? :0))//
லண்டனுக்கு அடிக்கடி பயணம் செல்லும் நண்பன் சொன்னது"வறுமையில் வாடும் ஏழைக்குடிமகன் குடிப்பது டின் பியர்தானாம்.இந்த காட்ச் சுனதுக்கு perrire ஊத்திகிட்டா பணக்காரனாம்:)
Post a Comment