Followers

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன்,தி வென்ஸ்டே- ஒரு ஒப்பீடு

பொதுவாக ஒரு மொழி திரைப்படத்தை மற்ற மொழிக்கு மாற்றும் போது முந்தைய மொழியின் நிறைகளை தக்க வைத்துக் கொண்டு விட்டுப்போன குறைகளை மாற்றம் செய்வது வியாபார நலன் கருதி செய்யும் தொழில் தந்திரங்கள்.அந்த வகையில் தமிழ் கஜனி இந்தி கஜனி ஆகும்போது இந்தி கஜனி நன்றாக மொட்டை போட்டு,சிக்ஸ் பிக்கெல்லாம் வைத்து நன்றாகவே சண்டை போட்டான்.அதே மாதிரி இந்தி வென்ஸ்ட்டே மூலம், தமிழுக்கு உன்னைப் போல் ஒருவனாகும் போது கதை மாற்றம் இல்லாமல் இருந்தாலும் நடிகர் தேர்வு,இசை,வசனம்,ஒளிப்பதிவு,இயக்கம் என தமிழ் நன்றாகவே இருந்தது.

படம் சார்ந்த இணைய இடுகைகளில் தெரிந்த நுண்ணரசியல்கள் தமிழை விட இந்தியில் அதிகமாகவே பட்டது.ஆனால் அதையெல்லாம் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவில்லை.உதாரணத்திற்கு காவல்நிலையத்தில் உட்கார்ந்து இருக்கும் நசுருதீன் ஷா வைத்திருக்கும் பையின் J&K எழுத்தைப் பார்த்து விட்டு காவல்துறை FIR எழுதுபவர் விளிக்கும் ஹலோ ஜம்மு & காஷ்மீர்!இந்தியில் வேகாத இந்துத்வா பருப்பெல்லாம் தமிழகத்தின் சூட்டில் நன்றாகவே வேகிறது.இந்தியில் படம் வந்ததும் தெரியவில்லை.போனதும் தெரியவில்லை.இந்தியில் படம் பார்ப்பது என்பது சமூகம் சாராத ஒரு பொழுது போக்கு.ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் எழும் விவாதங்கள் நம்மை பல்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கின்றன.காரணம் நமது திரைப்படம்,அரசியலின் அன்றாட வாழ்க்கையின் ஆளுமைகள். உன்னைப் போல் ஒருவன் தான் திரைப்படம் என்ற பார்வையில் தி வென்ஸ்டேவை விட சிறந்த படம்.ஆனால் நசுருதீன் ஷா,கமல் இருவரின் நடிப்பில் மட்டும், யார் எனக் கேட்கும் அனுபம் கேரின் கேள்விக்கு பதில் அளிக்கும் நசுருதீன் ஷாவின் சமூகக் கோபங்களுக்கான வார்த்தைகளில் வென்ஸ்டேவின் இறுதி நீண்ட வசனங்கள்,நசுருதீன் ஷாவின் நடிப்பை வெற்றியடையச் செய்து விடுகிறது.வசனத்தின் புரிதலின் சமூக கோபங்களில் சில இங்கே:-

அனுபம் கேர்: யார் நீ?

நசுருதீன் ஷா: நான் பஸ்,ரயிலின் படிக்கட்டில் ஏறுவதற்கு பயப்படுகிறவன்.நான் வேலைக்குப் போகிறவன்,சரியாகப் போய் சேர்ந்து விட்டேனா என்று அரைமணி,ஒரு மணி நேரத்துக்கு மனைவியால் விசாரிக்கப் படுபவன்.டீ குடித்தாயா?சாப்பிட்டாயா?நான் உயிரோடிருக்கிறேனா என விசாரிக்கப் படுபவன்.

நான் சில சமயம் மழையில் சிக்கிக் கொள்பவன்,சில சமயம் வெடிகுண்டுக்குள் மாட்டிக்கொள்பவன்.நான் தாடி வைப்பவனை,தொப்பி வைப்பவனைப் பார்த்து பயப்படுகிறவன்.(ஏன் இந்தி பாராட்டும் விமர்சனங்கள் இந்த நுண்ணரசியல் இடைச் செறுகலை நசுருதீன் ஷா மேலோ இந்தி இயக்குநர் மேலோ சுமத்தவில்லை?)வியாபாரத்துக்கு கடை பார்த்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பவன்.சண்டை யாருக்கோ இருக்கட்டும்.சாகிறவன் நான்.I am just a stupid common man.தினமும் ரொட்டிக்கான கவனத்தில் இந்த வேலை தாமதமாகி விட்டது.உங்களுக்குத் தெரியுமா?துணி துவைக்கும் சோப்பு கூட குண்டு தயாரிக்கப் பயன்படுகிறதென்று!சாதாரண மனிதனுக்கு இதை விட உபயோகமான பொருள் இதுவரை தயாரிக்கப் படவில்லை.

தவறு நம்முடையது.மிக சீக்கிரம் நிகழ்வுகளைப் பழக்கப் படுத்திக் கொள்கிறோம்.குண்டு வெடிப்பு மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தால் சேனல் மாற்றி சேனல் பார்த்து விட்டு,SMS அனுப்பினோமா,போன் செய்தோமா,பின் எனக்கு ஒன்றும் ஆகவில்லையென்று அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.அரசாங்கம்,காவல்துறை,உளவுத்துறை என பூச்சிக் கொல்லிகள்(Pest controllers) நிறைய இருக்கிறீர்கள்.Why are you not nibbing them in the bud?

All this system is flawed.நாங்கள் இப்படித்தான் உங்களைக் கொல்வோம்.உங்களால் என்ன செய்ய முடியும்? Yes!they asked this question on a Friday and repeated it on a Tuesday and now I am replying back on Wednesday.

35 comments:

வானம்பாடிகள் said...

சரியான கருத்துக்கள் நடராஜன்.

ராஜ நடராஜன் said...

வாங்கண்ணா!

கிரி said...

A wednesday படம் பார்க்க வேண்டும்

துளசி கோபால் said...

தமிழில் இன்னும் பார்க்கலை. தியேட்டருக்குப் போனால் டிக்கெட்டும் கிடைக்கலை.

ஹிந்திப் படத்தில்கூட அனுபம்கெரின் நடிப்புதான் எனக்கு ரொம்பவும் பிடிச்சது.

தமிழில் என் தம்பிதான் வசனம். கட்டாயம் பார்க்கத்தான் வேணும்.

குடுகுடுப்பை said...

நடக்கும் நிகழ்வுகளுக்கு கதாபாத்திரங்கள் தேவைதான். அதற்காக மதம் சாராத குரங்கு, நாய், பூனையெல்லாம் வைத்தா தீவிரவாதி கதாபாத்திரங்களை உருவாக்கமுடியும்.

ராஜ நடராஜன் said...

//A wednesday படம் பார்க்க வேண்டும்//

இந்தியையும் தவறாமல் பாருங்கள் கிரி.அப்பொழுதுதான் இணைய விமர்சன உன்னைப் போல் ஒருவன் சமன்பாடுகளை ஆராய முடியும்.

ராஜ நடராஜன் said...

//தமிழில் இன்னும் பார்க்கலை. தியேட்டருக்குப் போனால் டிக்கெட்டும் கிடைக்கலை.//

டீச்சர் வாங்க!எப்படியிருக்கீங்க?வீடு,வேலை,இன்னொரு வேலைன்னு எல்லாப் பதிவுகளையும் மேய முடியவில்லை.
நியூசிலேயே டிக்கட் கிடைக்கலேன்னா படம் வியாபார ரீதியாக வெற்றிதான்.

ராஜ நடராஜன் said...

//தமிழில் இன்னும் பார்க்கலை. தியேட்டருக்குப் போனால் டிக்கெட்டும் கிடைக்கலை.//

டீச்சர்!அனுபம் கேர் CM கிட்டப் பேசிட்டு முகத்தை,தாடையத் தடவிட்டு வழுக்கையின் இடது முன்நெற்றியில் விரலால் சுரண்டுவது மனதில் நின்றது.ஆனா யூனிபார்ம்,நடிப்புன்னு லாலேட்டன் முன்னுக்கு நிற்கிறார் என்பது எனது கணிப்பு.

ராஜ நடராஜன் said...

//நடக்கும் நிகழ்வுகளுக்கு கதாபாத்திரங்கள் தேவைதான். அதற்காக மதம் சாராத குரங்கு, நாய், பூனையெல்லாம் வைத்தா தீவிரவாதி கதாபாத்திரங்களை உருவாக்கமுடியும்.//

பின்னூட்ட உட்பொருள் எங்கேயோ இழுத்துச் செல்கிறதே!

ராஜ நடராஜன் said...

முதல்வரே!உங்க பின்னூட்டத்துக்கு கோனார் நோட்ஸ் எடுத்துகிட்டு பழமையண்ணனை கொஞ்சம் வரச்சொல்ல இயலுமா?

துளசி கோபால் said...

நியூஸியில் இல்லை.

இப்போ சென்னையில் இருக்கேன்.

ராஜ நடராஜன் said...

//நியூஸியில் இல்லை.

இப்போ சென்னையில் இருக்கேன்//

ஓ!அப்படியா?இதுக்குதான் இடுகைகளை விடாம மேயணுமிங்கிறது:)

S said...

Mr. Raja Natarajan,

The comparison is incomplete. U.P.O is definitely has deliberate insertions to incite the controversy.

Moreover, unlike South (except Kerala perhaps, cine goers of North are pragmatic people who just dont get carried away by cinemas and so called 'messages' through them.

அது சரி said...

//
தவறு நம்முடையது.மிக சீக்கிரம் நிகழ்வுகளைப் பழக்கப் படுத்திக் கொள்கிறோம்.குண்டு வெடிப்பு மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தால் சேனல் மாற்றி சேனல் பார்த்து விட்டு,SMS அனுப்பினோமா,போன் செய்தோமா,பின் எனக்கு ஒன்றும் ஆகவில்லையென்று அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.
//

இதைச் சொல்வது யார்??

நூறு கோடி பேரும் குண்டு வெடிப்புக்கு காரணமானவனை தேடிக் கொண்டிருப்பது நடைமுறையில் சாத்தியமான காரணமா??

பின் என்ன கருமத்திற்கு இங்கே ஒரு அரசாங்கம்?? மகனையும் பேரனையும் பதவிக்கு கொண்டு வரவும், எத்தனை கொட்டி கொடுத்தாலும் போஸ்ட்மார்ட்டம் செய்யவும், டெத் சர்டிஃபிகேட் கொடுக்கவும் கூட‌ லஞ்சம் வாங்கவுமா???

எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று பழக்கப்படுத்திக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது...ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை இங்கே போராடித் தான் தீர வேண்டும்...காமன் மேன் கவலையில் உட்கார்ந்து விட்டால் அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லை!

அது சரி said...

//
All this system is flawed.நாங்கள் இப்படித்தான் உங்களைக் கொல்வோம்.உங்களால் என்ன செய்ய முடியும்? Yes!they asked this question on a Friday and repeated it on a Tuesday and now I am replying back on Wednesday.
//

True, the system is flawed...But what shown in the film is even more flawed...But again, the film is just trying to satisfy the "common man" by projecting a super man out of him...

You can't cure the disease without understanding the cause...There is no point is just eliminating the symptoms....

And what's the reason behind worldwide terrorism? What they are trying to achieve?

If this is only in India, you can say Gujarat and many more reasons...But bombs are exploding not just in India...This is global terrorism...

Until we analyse and accept the facts as they are, its not going to be easy to find a solution!

அது சரி said...

I read few reviews...Surprisingly, none of them are going beyond what's shown on screen, totally ignoring the psychology behind the film which is actually the core of the film......Most of them are very busy with Kamal's "Poonool"

mmmh....

Thekkikattan|தெகா said...

அது சரி,

கேள்விகள் அனைத்தும் நியாயமானது, இது சார்ந்து பல பதிவுகள் முன்பொரு சம்யம் சுத்திக்கொண்டு இருந்தது...

இந்த லிங்குகளின் மூலமாக அவைகளை அறியலாம்...

வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?

another one... இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்?

ராஜ நடராஜன், உங்கப் பதிவையும் படிச்சேன் :) என்ன சொல்ல அதப் பத்தி எக்கச் சக்கமான பதிவுகள்... திரும்பவும் வாரேன்...

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
முதல்வரே!உங்க பின்னூட்டத்துக்கு கோனார் நோட்ஸ் எடுத்துகிட்டு பழமையண்ணனை கொஞ்சம் வரச்சொல்ல இயலுமா?
//

பன்முக நோய் கொண்டவர்களைக் கண்டு அச்சத்திற்கு ஆளாதல்!

அது சரி said...

//
Thekkikattan|தெகா said...
அது சரி,

கேள்விகள் அனைத்தும் நியாயமானது, இது சார்ந்து பல பதிவுகள் முன்பொரு சம்யம் சுத்திக்கொண்டு இருந்தது...

இந்த லிங்குகளின் மூலமாக அவைகளை அறியலாம்...

வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?

another one... இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்?

ராஜ நடராஜன், உங்கப் பதிவையும் படிச்சேன் :) என்ன சொல்ல அதப் பத்தி எக்கச் சக்கமான பதிவுகள்... திரும்பவும் வாரேன்...

//

தெ.கா,

லிங்குக்கு நன்றி...முழுமையாக படித்து விட்டு சொல்கிறேன்...

சிறில் அலெக்ஸ் said...

I agree the dialog and acting in that particular scene was better in Hindi than in Tamil. Kamal missed it, in fact messed it up. That was the most important scene in the movie and in Tamil they missed it grossly. The boredome of the past one and a half hour had to be justified on that scene but sorry they missed it.

Sorry Kamal Ji.

ராஜ நடராஜன் said...

//The comparison is incomplete. U.P.O is definitely has deliberate insertions to incite the controversy.

Moreover, unlike South (except Kerala perhaps, cine goers of North are pragmatic people who just dont get carried away by cinemas and so called 'messages' through them.//

My point is that Kamal always trying to give a message through his films, partly what he believes in or what's happening around him.But it is not fair to branding him as hinduthva messaiah.

There is a big difference in North and south film making style and fans plus fanatics.There is no hero worship in the north whereas in south actors become cine demi gods.

Thank S.

ராஜ நடராஜன் said...

//நூறு கோடி பேரும் குண்டு வெடிப்புக்கு காரணமானவனை தேடிக் கொண்டிருப்பது நடைமுறையில் சாத்தியமான காரணமா??//

அதுசரி யண்ணா!கவனமா ஒரு நூறு கோடி பேரில் சிலரால் குண்டு வெடிப்புக்கு காரணமானவனைத் தேடுவது நடைமுறை சாத்தியமா இல்லையா என்பது பற்றிய ஒரு 3 கதை கேளுங்க.

கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன் கல்கத்தாவில் ஒரு மாதம் ஒரு நாட்டுக் குண்டு தயாரிக்கும் தாதா(இது சவ்ரவ் கங்குளி தாதா) வீட்டில்(குடும்பத்தினன்) கல்கத்தா வாசி நண்பன் தங்கியிருந்த நட்பின் மூலமாக தங்க நேர்ந்தது.

பேச்சு வாக்கில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிறது இப்படித்தான் என்று பாத்ரூமின் ஒரு மூலையில் ஈர மணல் போட்டு ஒரு மண் சட்டியை கவிழ்த்து வைத்திருந்தது.அதுக்குள்ள என்ன இருந்தது என்று பார்க்கவில்லை.அப்போதைய அறிவுக்கு குண்டு கலாச்சாரம் பற்றியெல்லாம் யோசிக்கும் மன நிலை இல்லை எங்களுக்கு. இன்றைக்கு அந்த மாதிரி ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ச்சி நிகழ்ந்து பல உயிர்பலிகள் நிகழ்ந்தால் வீடு கொடுத்தாரே தாதா என்று நினைக்கத் தோன்றுமா இல்லை நன்றியுணர்வையும் கடந்து மாட்டி விடுவது நல்லதாக இருக்குமா என்பதை உங்கள் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன்.குண்டு பற்றிய பொது அறிவு கல்கத்தாவாசி நண்பன்,டேரா போட்ட நாங்கள் மூவர்,குண்டு தயாரிக்கும் தாதாவின் மனைவி,ஒரு வேளை சுற்றியிருக்கும் நெருங்கிய பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலருக்கும் தெரிந்தே இருந்திருக்கும்.

இப்ப மொத்த கொள்வினை மாதிரி நாட்டுவெடி குண்டு தயாரிப்பது(கேரளாவில் பூமிக்குள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது தொலைக்காட்சியில் பார்த்தது)மற்றும் குண்டுகளின் தாதா RDX போன்ற விசயங்கள் சாதாரணமாக கை மாறி விடுமா என்ன?

முன்னாடி கோவையிலிருந்து அரிசியோ அல்லது கேரளாவிலிருந்து சாராயமோ கடத்துனா கையில நல்ல காசு பார்க்கலாம் என ஆட்டோ,டாக்சி,லாரி ஓட்டுனர்களும்,ஏதோ பாத்துக் கொடுத்துட்டுப் போயா என்ற காவல்துறை போலிஸ் அண்ணா குரலும்,குண்டு வெச்சா அரசு நாற்காலி பார்க்கலாமென்ற அரசியல் மனோபாவம் எல்லாம் சேர்ந்து சமூக கட்டமைப்புகளை சீர் குலைக்கின்றது.

ராஜ நடராஜன் said...

//பின் என்ன கருமத்திற்கு இங்கே ஒரு அரசாங்கம்?? மகனையும் பேரனையும் பதவிக்கு கொண்டு வரவும், எத்தனை கொட்டி கொடுத்தாலும் போஸ்ட்மார்ட்டம் செய்யவும், டெத் சர்டிஃபிகேட் கொடுக்கவும் கூட‌ லஞ்சம் வாங்கவுமா???//

எதுக்கு அரசாங்க கட்டமைப்புகள்ன்னு நசுருதீன் ஷா கேள்வி கேட்டுட்டார்.ஆனால் மகன்,பேரன் பத்தியெல்லாம் அவருக்கு ஒண்ணும் தெரியாததால அதைப் பற்றி வாயக்கூடத் திறக்கல.

பெரும்பாலான விசயங்களுக்கு உயர்ந்து அடங்கல் என்ற பொது விதி பொருந்துகிறது.இந்தப் பணம் மட்டும் எப்படி ஒரு Saturation point க்கு வர்றதேயில்லைன்னு எனக்குப் புரியல.இந்தியாவிலுள்ள பற்றாக்குறைகளில் பணமும் ஒன்று என்ற காரணத்தால் லஞ்சம் பெருகுகிறதா?தொலைக்காட்சியில் லஞ்சம் வாங்கியவர் முகத்தைக் காண்பித்தும் கூட நாறடித்து விடுகிறார்கள்.இருந்தாலும் யாரும் திருந்தற பாடாக் காணோம்.

ராஜ நடராஜன் said...

//எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று பழக்கப்படுத்திக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது...ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை இங்கே போராடித் தான் தீர வேண்டும்...காமன் மேன் கவலையில் உட்கார்ந்து விட்டால் அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லை!//

யதார்த்தமா பார்த்தா பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டியதும் கஞ்சிக்கு வழி தேடுவதும் மட்டுமே சாத்தியம்.தெரியாம போய் குண்டு வெடிப்பில் மாட்டிகிட்டா தப்பில்ல.ஆனா தெரிஞ்சும் குண்டு வெடிப்புக்குள்ள மாட்டி விடறது தப்பு.

ராஜ நடராஜன் said...

//True, the system is flawed...But what shown in the film is even more flawed...But again, the film is just trying to satisfy the "common man" by projecting a super man out of him...

You can't cure the disease without understanding the cause...There is no point is just eliminating the symptoms....

And what's the reason behind worldwide terrorism? What they are trying to achieve?

If this is only in India, you can say Gujarat and many more reasons...But bombs are exploding not just in India...This is global terrorism...

Until we analyse and accept the facts as they are, its not going to be easy to find a solution!//

Basic reason for the global terrorism is prior to 9/11 American Forign Policy.Before 9/11 I have asked for a visiting visa to attend a canadian embassy interview in Boing downtown Seattle.The U.S Embassy in Kuwait refused a visa for the reason known to them.Might be financial background I guess.

Do you have a Fifty thousand bucks?Oh!yea!You can go for a ride in our sophisticated aircraft.

Getting back to our Indian system,we have lost a basic ethics of our morality.Where?When?Surely it is after the demise of Nehru or during Mrs.Indra Ghandi's dynasty.

ராஜ நடராஜன் said...

//If this is only in India, you can say Gujarat and many more reasons...But bombs are exploding not just in India...This is global terrorism...

Until we analyse and accept the facts as they are, its not going to be easy to find a solution!//

Money blended with religious conservatism brought the global terrorism.America become catalyst.

ராஜ நடராஜன் said...

//I read few reviews...Surprisingly, none of them are going beyond what's shown on screen, totally ignoring the psychology behind the film which is actually the core of the film......Most of them are very busy with Kamal's "Poonool"//

That's the key point.The film revealed how the political,bureaucratic collectivism functions plus the culprits involved into bombing.Yet a few blog critics brushed aside the core issues of bribe, religious fanaticism etc... but brought forward social dooms of casteism and hinduthva which were not there at all in the film.

ராஜ நடராஜன் said...

தெகா!நீங்கள் அளித்த லிங்க் பார்வையிட்டு வருகிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//பன்முக நோய் கொண்டவர்களைக் கண்டு அச்சத்திற்கு ஆளாதல்!//

அங்க கொட்டுனதைப் பார்த்திட்டீங்களாக்கும்:)))

அடைப்பானுக்கும் மறுபடியும் கோனார்தான் துணை:)முதல்வரே!காப்பாத்த வாங்க!

ராஜ நடராஜன் said...

//I agree the dialog and acting in that particular scene was better in Hindi than in Tamil. Kamal missed it, in fact messed it up. That was the most important scene in the movie and in Tamil they missed it grossly. The boredome of the past one and a half hour had to be justified on that scene but sorry they missed it.

Sorry Kamal Ji.//

Alex Ji! You are obsolutely right.Where Nasurudin is just leaping his nose is that " the dialog and acting in that particular scene was better in Hindi than in Tamil".

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...

Basic reason for the global terrorism is prior to 9/11 American Forign Policy.Before 9/11 I have asked for a visiting visa to attend a canadian embassy interview in Boing downtown Seattle.The U.S Embassy in Kuwait refused a visa for the reason known to them.Might be financial background I guess.
//

errr.....Sorry, but I dont get your point here...What the refusal of Visa got to do with Global terrorism??

//
Do you have a Fifty thousand bucks?Oh!yea!You can go for a ride in our sophisticated aircraft.
//

Ofcourse....Right or not, as many visitors disappear in US, they check your financial background, just to make sure you wont become an illegal immigrant.

//
Getting back to our Indian system,we have lost a basic ethics of our morality.Where?When?Surely it is after the demise of Nehru or during Mrs.Indra Ghandi's dynasty.
//

Morality doesn't have much to do with religious fundamentalism...Even people who are crystal clean in their personal and public life could be fundamentals...

As of loss of morality, mmmhhh...I dont think it was ever there :0)))

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...

Money blended with religious conservatism brought the global terrorism.America become catalyst.
//

Was america a catalyst?? I think, this fundamentalism was there even before the emergence of USA as a super power...The american hand was revealed only after Afghan war, where they used Taliban to fight against communist Russia.

The key word is "They Used" these fundamentals...

ராஜ நடராஜன் said...

//errr.....Sorry, but I dont get your point here...What the refusal of Visa got to do with Global terrorism??//

I think I have failed to convince you by not specifying the link.Prior to 9/11 it is very easy to get a visa
from the middle east or from London,German,France etc. if you have enough money and whatever the reason you are intending to go US .They have failed to scrutinize the bombers with the policy of liberal money laundering those days plus pre 9/11 American Foreign policy.Religious fundamentalism existed everywhere quite sometime but nobody there to listen or observe till 9/11.

ராஜ நடராஜன் said...

//Ofcourse....Right or not, as many visitors disappear in US, they check your financial background, just to make sure you wont become an illegal immigrant.//

Lack of financial deficiency people try to find a green pasture but the world reality proved sound financial background too can make a person illegal immigrant.

ராஜ நடராஜன் said...

//As of loss of morality, mmmhhh...I dont think it was ever there :0)))//

வலது பக்கம் பின்னூட்டமிடும் போது இடது பக்கம் வானம்பாடிகள் பாலா அண்ணன் மண்டைல கைய வச்சு யோசிக்கிற அவரோட படம் தெரிந்தது.அதுவே பதிலாக:)