ரொம்ப நாளா பதிவுலகம் வந்து தலைப்புச் செய்தி மட்டும் பார்த்து விட்டு ஓடிப் போக மட்டுமே உள்ள நேரம் காரணமாக யாருக்கும் அதிகம் பின்னூடமிடவில்லை.அப்புறம் எங்கே பதியறது:)
நேற்றைக்கு அதுசரி,நசரயேன் வீட்டுக்குப் போன மப்பு இன்றைக்கும் தொடர்ந்த காரணத்தால் சரி மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கப் போனா கிரி வீட்டுல சன் டிவி ஓடுது:) அப்படியே ஒவ்வொருத்தரையும் 'லுக்' விட்டா வந்து மாட்டினவர் வால்பையன்.என்னதான் சொல்றார்ன்னு பார்க்கப் போய் வந்த வினை இந்த இடுகை.
சாதியம்,மொழி,அரபி,உருதுன்னு தொட்டு இப்படி வந்து முடிச்சார்.
\\ தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்! \\
இதென்ன நாம முன்பு விட்டுப் போன இடுகையான ஓம் என்ற மந்திரமும் ஹங்கேரி மருத்துவமும் வாடை வீசுகிறேதே என்று பின்னூட்டமிடலாமின்னு நினைச்சா பின்னூட்டம் இடுகையளவு வரும் என்பதால் அடைப்பானின் ஓம் என்பதற்கும் பூம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல இந்த இடுகை.
முதலாவது ஓம் என்பது ஒரு மொழிக்கான வார்த்தையல்ல.அது ஒரு ஓசை.இல்லை இல்லை அது ஓசை கூட கிடையாது.உள் வெளி மூச்சின் நேரக் கணிப்பு.முந்தைய நாட்களில் தியானம் மனித வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்ட கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓசையாக இருக்கலாம்.மனதை ஒரு நிலைப் படுத்தவும் மன அலை வரிசை குரங்கு மாதிரி (சும்மா இருந்தாலாவது மனசு நிதானமாத்தான் அங்கே இங்கே தாண்டும்.மனதை ஒரு நிலைப் படுத்த கண்ணை மூடினால் மனம் வினாடிக்கு வினாடி அங்கே இங்கே தாண்டும்) தில்லாலங்கடி செய்யும் (உங்க மொழிதானுங்கோ:)
ஓம் என்பதை சப்தப் படுத்த வேண்டிய அவசியமில்லை.ஓம் என்ற சொல்லின் முதல் எழுத்துக்கு உள்மூச்சு எவ்வளவு கணம் செல்கிறதோ அதே மாதிரி இரண்டாம் எழுத்துக்கு வெளி மூச்சு விடும் நுணுக்கம்.இந்த அளவீடு பூம் க்கு வராது.காரணம் பூ ஒலியும் ம் ஒலியும் மூச்சை வெளியே விடுவதற்கான ஒலியாக எனக்குத் தெரிகிறது.அதென்னமோ தெரியல ஒரு நாள் தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க இயலுமா என்று முயற்சி செய்து பார்த்தேன்.ரிதம் சரிப்படவில்லை.இட்லிக்கு சட்னிதான் சரியான ஜோடி.இல்ல பொடிதான் சரிப்படும்ன்னு சொன்னா சரிப்படும்!ஆனா சரிப்படாது:)
மற்றபடி இடுகையில் நிறைய பொருள் குற்றம்.அதனைப் பின்னூட்டமிட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.இருந்தும் வளைகுடாவில் வசிப்பதால் அரபி பற்றி சின்ன விளக்கம்.உச்சரிப்பு தமிழ் வித்தியாசப் படறமாதிரி மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சு வழக்கில் வித்தியாசம் இருக்கிறது.ஒருவன் அரபியில் பேசினால் இந்த நாட்டுக்காரன் அவன் எந்த தேசத்தை சார்ந்த அரபியன் என்று கண்டு பிடித்து விடுவான்.ஆனால் குரான் என்ற எழுத்து மத்திய கிழக்கு நாட்டு மக்களின் ஏகபோக சொந்தம்.அரபிய,பாரசீக,ஹிந்துஸ்தானி,மங்கோலிய மொழிகளின் கலவையாக உருது பிறந்திருக்கலாம். அவை இந்திய படையெடுப்புக்களின் பிள்ளையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.ஹீப்ரு மீண்டும் புதுப்பிக்கப் படும் சாத்தியங்கள் இருக்கிறது.
தமிழ்?
10 comments:
வாங்க நடராஜன் சார். ரொம்ப நாளைக்கப்புறம் இடுகை. பார்க்கவே சந்தோஷம்.
ரெம்ப நாளைக்கு அப்புறம் வலை பக்கம் வந்திருக்கீங்க ...........
ஓம் மட்டுமல்ல, ஆஆஆஆம்ம்ம்ம்ம் என்று இழுத்து சொன்னால் கூட அதே எஃபெக்ட் கிடைக்கலாம் :0))
ஆனால், வால்பையரின் பதிவு வேறு பல விஷயங்களை தொட்டு செல்கிறது...அதில் இதுவும் ஒன்று...
//ஓம் என்பது சொல்லா?மொழியா?//
இரவு 8 மணிக்கு மேல தொலை பேசி சொல்லுறேன்
//கிரி வீட்டுல சன் டிவி ஓடுது:) //
;-)
//ஓம் என்பது சொல்லா?மொழியா? //
நான் ரொம்ப தூரத்துல இருக்கேன் ... :-)
//வாங்க நடராஜன் சார். ரொம்ப நாளைக்கப்புறம் இடுகை. பார்க்கவே சந்தோஷம்.//
வணக்கம் பாலா சார்!உங்களுக்கு பின்னூட்டமிடும் போது கணினி இணையம் வருவேன் வரமாட்டேன்னு அடம்.தாமதப் பின்னூட்டம்.மன்னிக்கவும்.
//ரெம்ப நாளைக்கு அப்புறம் வலை பக்கம் வந்திருக்கீங்க //
வலையில் தினமும் உட்கார்ந்துகிட்டுதான் இருக்கேன்.முக்கியமாக தமிழ்மணம்.இடுகை,பின்னூட்டமிட முடியாதபடி வழியில போற ஓணானை மடியில் கட்டிகிட்ட மாதிரி இருக்கிற வேலை பத்தாதுன்னு இன்னொரு வேலையையும் (போட்டோ ஸ்டுடியோ)தலையில் கட்டிகிட்டு நேர விரயம்.
//ஓம் மட்டுமல்ல, ஆஆஆஆம்ம்ம்ம்ம் என்று இழுத்து சொன்னால் கூட அதே எஃபெக்ட் கிடைக்கலாம் :0))
ஆனால், வால்பையரின் பதிவு வேறு பல விஷயங்களை தொட்டு செல்கிறது...அதில் இதுவும் ஒன்று...//
ஓ மூச்சு உள்வாங்குவது.ஆஆஆம்ம்ம்ம் காத்து வெளியதான் போகுது.
வால் பல பொருள் பேசினாலும் தப்பு தப்பா சொல்லித் தருகிறார்ன்னு பின்னூட்டத்திலேயே மக்கள் சொல்லிட்டாங்க:)
//இரவு 8 மணிக்கு மேல தொலை பேசி சொல்லுறேன்//
போனை இன்னும் காணோம்!
////கிரி வீட்டுல சன் டிவி ஓடுது:) //
;-)
//ஓம் என்பது சொல்லா?மொழியா? //
நான் ரொம்ப தூரத்துல இருக்கேன் ... :-)//
யாரு? நீங்களா!!
(நீங்கதான் அண்டசராசரம் அத்தனையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!)
Post a Comment