ஓம் என்ற பிரணாயமம் செய்யும் போது ஓ என்ற எழுத்தினை உச்சரிக்கும் போது இதயம்,நுரையீரல் துவங்கி ஒலி புறப்படவேண்டுமாம்.'ம்' என்ற ஒலி எழுப்பும் போது கண்,மூக்கு,தொண்டையில் ஒலி அதிர்வுகள் ஏற்படவேண்டுமாம். அதிர்வுகளின் மூலமாக காது,மூக்கு,தொண்டை போன்ற பகுதிகளில் உருவாகும் நோய்களை குணப்படுத்த ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறதாம்.உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல மருத்துவர்கள் வந்து பாடம் கற்றுச் சென்று தங்கள் நாட்டில் இந்த ஒலி மருத்துவத்தை பரப்புகிறார்கள்.(குறட்டைக்காக விவாகரத்து வரை வந்து விடுவதால் இந்த மருத்துவத்தை மேலைநாடுகள் அலட்சியப்படுத்தி விடமுடியாது).
அதே மாதிரி தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு ENT மருத்துவ நிபுணர் இதனைக் கற்றுக் கொள்ள சென்றுள்ளார்.ஹங்கேரியில் சொல்லிக் கொடுத்த பாடம் இரு உதடுகளையும் இணைத்து "ப்" என்ற ஒலி வரவும் உதடுகள் இரண்டும் அதிரும்படியும் ஒலி எழுப்புவது.மருத்துவ நிபுணர் இந்த ஒலி மருத்துவத்தை எல்லா நாட்டிற்கும் சொல்லிக் கொடுக்கிறீர்களா என்ற கேட்டதற்கு இந்தப் பாடமே எல்லா நாட்டு வருகையாளர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற பதில் வந்ததாம்.
மருத்துவ நிபுணர் மிகவும் ஆச்சரியப்பட்டு இந்த ஒலி மருத்துவம் நம்ம கிராமத்துப் பசங்க பனங்காய்களை சக்கரமாகக் கட்டிக்கொண்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ப்..ப்..ர்..ர்.ர் என்று பனங்காய் வண்டி ஓட்டும் மருத்துவமாச்சே என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.இதில் இன்னொரு ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் உலகம் முழுதும் பள்ளிப்பருவ குழந்தைகள் இந்த ஒலியை இயற்கையாகவே கையாளுகிறார்களாம்.(வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்)எனக்கும் நண்பர்களுக்கும் பனங்காய் கிடைக்காததால் ஆமணக்கு மர விசிறிப் பட்டம் மட்டுமே விட்டு டுர்ன்னு வண்டி ஒட்டிய பழைய நினைவுகள் திரும்புகின்றது.
நேச்சுராபதி மருத்துவம் அதிகம் உண்டதாலோ என்னவோ சில சமயம் பாலைவனமெல்லாம் கோபப்பட்டுகிட்டு சகாராப் பாலைவனம் மாதிரி,இல்ல...இல்ல... நம்ம ஊர் கதாநாயகன்,நாயகி கட்டிப் புரளும் ராஜஸ்தான் பாலைவன மண்ணு,தூசியெல்லாம் ஒரேயடியா கோபிச்சிகிட்டு மனுசங்கூட சண்டைக்கு வந்தா எப்படியிருக்குமோ அந்தமாதிரி பாலைதேசத்து மண்தூசிகள் மூக்கைத் துளைத்தாலும் முகமூடியெல்லாம் போடாம அன்றைய தேச இயற்கை மருத்துவம் இன்று வரை தூசர்களிடமிருந்து காக்கிறது.
பனம்பழமே,ஆமணக்கே,வேரில் மணக்கும் மஞ்சளே இன்னும் கண்ணுக்கு முன்னால் வலம் வரும் தேவமருந்துகளே வாழ்க!வாழ்க!கூடவே உச்சரிக்க மறந்த ஓம் என்ற மந்திரமும்.
21 comments:
கடைய காத்து வாங்க விட்டுட்டு இன்னைக்கு திறந்தா தமிழ்மணம் அனுப்பவான்னு நலம் விசாரிக்கவே செய்யுது.அப்புறம் ஏன் சில பெரிய கடை பெருசுகள் இடுகை ஒட்டலையென்னு அங்க இங்கேன்னு போன வாரமெல்லாம் கூட்டம் கூடிப் பேசிகிட்டாங்கன்னு தெரியலையே!
நாட்டு சரக்கு எப்போதுமே நல்ல சரக்கு தான்
//நசரேயன் said...
நாட்டு சரக்கு எப்போதுமே நல்ல சரக்கு தான்//
உண்மை தான்..
//நாட்டு சரக்கு எப்போதுமே நல்ல சரக்கு தான்//
அதுசரிதான்:)
//நாட்டு சரக்கு எப்போதுமே நல்ல சரக்கு தான்//
//உண்மை தான்..//
ஏன் தீப்பெட்டி வச்சுப் பார்த்தீங்களாக்கும்:)
தசாவதாரத்துல வர்ற மாதிரி ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு சொன்னா எல்லா பிரச்சினையும் போயிரும்ங்க...:0))
//தசாவதாரத்துல வர்ற மாதிரி ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு சொன்னா எல்லா பிரச்சினையும் போயிரும்ங்க...:0))//
நீங்க சொல்ற ரிதம் தானுங்கண்ணா ஓம் மந்திரம்.
நல்ல பதிவு
கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com/
//நல்ல பதிவு
கட்டபொம்மன் //
கட்டபொம்மு!நீங்க எப்ப வந்தீங்க!!!
//பனம்பழமே,ஆமணக்கே,வேரில் மணக்கும் மஞ்சளே இன்னும் கண்ணுக்கு முன்னால் வலம் வரும் தேவமருந்துகளே வாழ்க!வாழ்க!கூடவே உச்சரிக்க மறந்த ஓம் என்ற மந்திரமும்.//
சரியாக சொன்னீர்கள்.
//சரியாக சொன்னீர்கள்.//
வாங்க பாலாஜி!பிரபு சார் கடையில பின்னூட்டம் மொத்த குத்தகை எடுத்திட்டீங்க போல இருக்குது:)இங்கயும் ஒரு பார்வை விட்டதற்கு நன்றி.
//வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்//
அப்படியா! ஏன்?
நல்ல பகிர்வு நன்றி நண்பரே
////வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்//
அப்படியா! ஏன்?//
வாங்க கிரி!காரணங்கள் உங்களுக்குத் தெரிந்ததுதான்.
1.தொலைக்காட்சி
2.வீடியோ கேம்
3.வெயில் 45 டிகிரிக்கும் மேல் அல்லது நேர்மாறா குளிர்
4.ஊரெங்கும் கார்களின் பயணம்.
அப்புறம் நம்ம மாதிரி ஓடியாடி விளையாடறது எங்கே?
//நல்ல பகிர்வு நன்றி நண்பரே//
வாங்க ஞானசேகரன்.இடுகையும் பின்னூட்டங்களும் அடிச்சு ஆடறமாதிரி தெரியுதே!நடக்கட்டும்!
நல்ல பதிவுங்க! இது போலவே இன்றைய அளப்பறிய கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்முறையால் உடலின் ஒன்பது சக்கரங்களில் சிலது மூடிப்போய்விடும் என்பதால் ஓஷோ சிரிப்பு தியானம் ஒன்றை வடிவமைத்ததாக ஒரு முறை முகாமில் சொன்னார்கள். கடைசியாக எப்போ நல்ல சத்தமா கத்தினோம்னு யோசிச்சா, அது பல வருடங்களுக்கு முந்தியதாக இருக்கும்! ஆக பல பேருக்கு ஒரு சக்கரம் ப்ளாக்(block)! இது மாதிரி நல்ல விஷயங்கள் நாட்டுக்கு(ப்ளாக்குக்கு) தேவை. தொடரட்டும் உங்கள் சேவை!
ஓம் ராஜ நடராஜன்.
//நல்ல பதிவுங்க! //
பிரபு!உங்களை தனியா வந்து கண்டுக்கிறேன்.
//ஓம் ராஜ நடராஜன்.//
வாங்க முதல்வரே!
நம்ம திண்ணைக்கு வந்து விருதை ஏத்துக்குங்க சார்.
அன்பு நண்பருக்கு
உங்களுக்கு ஒரு விருது
http://www.mathibala.com/2009/08/200.html
நன்றி
Post a Comment