எத்தனை நாட்களுக்குத்தான் கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,ராமதாஸ்ன்னே பேசுக்கொண்டு இருப்பது?மாறுதலுக்காக சில தமிழ் அறிவுஜீவிகளையும் முன்னிலைப் படுத்துவோம்.
பத்திரிகையாசிரியர் அய்யநாதனை முதலில் பார்த்தது மக்கள் தொலைக்காட்சியின் பார்வைகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக.நிகழ்ச்சி தொகுப்பாளர் முத்துக்குமாரின் கேள்விக்கு நல்ல விளக்கங்களோடு பார்ப்பவரை சொல்வது சரிதான் என நினைக்கவைக்கும் அன்றாட பொது நிகழ்வுகளின் தொகுப்பே பார்வைகள் நிகழ்ச்சியாகும்.இதற்கு எத்தனை பார்வையாளர்கள் என்பது மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.ஆனால் உலகநிகழ்வுகளின் அலசலுக்கு ஒரு சிறந்த உரையாடல் இது.
இவரும் இணையம் சார்ந்தவர் (தமிழ் வெப்துனியா)என்பதாலோ என்னவோ இணையங்களில் அடிபடும் பொதுக்கருத்துக்களும் இவரது பேச்சில் அடிபடும்.போருக்குப் பின் சோர்ந்து போய் இருந்த ஈழ உணர்வை கணினி தொழில் நுட்பம் சார்ந்தவர்களோடு இணைந்து நிகழ்த்திய அமைதிப் போராட்டம் விரக்தியான மனநிலையில் இருந்தவர்களுக்கு மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் என்பதை விட மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ற நிலையிலிருந்து ஏதாவது நல்லது செய்து விட முடியாதா என்ற உணர்வை மீண்டும் வெளியே கொண்டு வந்திருக்கிறது.
தமிழ் உணர்வு கொண்ட அரசியல்வாதிகளை பின்னுக்கு உட்கார வைத்து ஆலோசனைகளை மட்டும் கேட்டுக் கொண்டு இப்படி தொழில் நுட்பம் சார்ந்தவர்கள்,மாணவர்கள் என அணி திரண்டு ஏனைய பல்துறைகளிலும் இருப்பவர்களை துணைக்கழைத்துக் கொண்டு விவேகமான முறையில் கல்லெறிதல்,தீவைத்தல்,பஸ் எரிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கா வண்ணம் அமைதி முறையில் உலகத்தின் கண்களுக்கு இந்தப் போராட்டம் முடியவில்லை என்பதை கண்முன் நிறுத்துவது அவசியம்.
இந்தக் கலவரங்கள் பற்றிச் சொல்லும் போது கூட்டம் கூடுமிடத்தில் தான் பலசாலி என்ற உணர்வு ஒரு தனி மனிதனுக்கு வருவதுடன் கலவரத்தின் தாக்கங்கள் என்னவென்று தெரியாமலும் சிலர் கல்வரங்களைத் தூண்டுவதுண்டு.இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் கூட்டத்தில் கலவரங்கள் நிகழ்வதற்கு முக்கியமான காரணி காவல்துறை.காவல்துறைன்னு சொன்னவுடன் நம்ம ஊர் காவல்துறை மட்டும் என்ற கணிப்புக்கு யாரும் வந்து விடவேண்டாம்.உலகளாவிய காவல்துறையினரே போராட்டங்களில் கலவரம் வெடிப்பதற்கு முதல் நிலையில் இருப்பார்கள் என்று ஒரு விவாதக் களத்தில் கேட்டது.காவல்துறை சார்ந்தவர்களின் கருத்து இதற்கு மாறுபட்டும் கூட இருக்கலாம்.இன்னுமொரு நிலையில் காவல்துறையை நோக்கினால் இவர்களுக்கு வேலைப்பணியின் நேரம்,மனஅழுத்தங்கள், மேலிடத்து அழுத்தங்கள் அதிகம்.எனவே இதன் காரணம் கொண்டும் கூட்டத்தின் வலுவுக்கு ஏற்றாற்போல் பிரச்சினையை ஊதிவிடும் சாத்தியங்கள் உண்டு.இவைகளையும் அடுத்து ஒரு கலவரக் கலாச்சாரத்தை தமிழகம் கற்று வைத்திருக்கிறது.அது என்னவென்றால் எதிர்க்கட்சி சார்ந்த அணிவகுப்பா அடியாட்களுக்கு காசு கொடுத்து கலாட்டாவை உருவாக்குவது.அப்புறம் பழியை அணிவகுப்பு நடத்தினவர்கள் மேலேயே போட்டு விடுவது என்ற குறுக்குப்புத்தித்தனம்.முன்பு பொராட்டா,கள்ளச்சாராயம்ன்னு மட்டும் கட்சி சார்பா வளர்ந்த கலாச்சாரம் இப்ப எங்க வந்து நிற்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இப்படி வளர்ந்த எதிர்விளைவுகள் இப்பொழுது கட்சிகளின் ஒரு அங்கீகரகமாக மாறிவிட்டது.எனவே இவைகளையெல்லாம் சமாளித்து வரும் ஆற்றலை அணிவகுப்பாளர்களின் பொறுப்பாளிகள் கவனிப்பது அவசியம்.உலகம் தொழில் நுட்பம்,காணொளி,செல்போனில் காமிரா என்று மிகவும் வளர்ந்து வருகிறது.எனவே இந்தக் கலாச்சாரங்களின் முகமூடிகளை கிளித்தெறிய வேண்டியது அணி வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.
கார்கில் யுத்த காலத்தில் கே.சுப்ரமணியம் என்ற பாதுகாப்பு ஆலோசகர் இருந்தார்.CNN போன்ற விவாதக் களங்களில் பாகிஸ்தானுக்கு எதிர்க்கேள்வி கணை விடுப்பதில் வல்லவர்.அந்த மாதிரி உள்ளூர் தொலைக்காட்சி ஊடகமான வின் தொலைக்காட்சியில் நிகழும் விவாதத்திற்கும் பத்திரிகை ஆசிரியர் உலகநாதன் கருத்துக்கள் ஆழமானவையாக இருக்கும்.அவருடைய சமூக உணர்வுக்கும் கீழே உள்ள படத்தை பிரசுரிக்க அனுமதிக்கவும்,இந்த இடுகைக்கான தூண்டுதலாகவும் இருந்த கரையோரம் தளத்தின் பதிவர் செல்லமுத்து குப்புசாமிக்கும்,அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட தொழில் நுட்ப வட்டத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்த இடுகை தன் புன்முறுவலை சமர்ப்பணம் செய்கிறது.
கரையோரம் தளத்தின் முழுப் படங்களுக்கு
http://karaiyoram.blogspot.com/2009/06/blog-post.html
17 comments:
தலைப்புக்காக ஒரு சபாசு! பத்திரிக்கைன்னு எழுதாம பத்திரிகைன்னு சரியா இருக்கே? இஃகிஃகி!!
தகவலுக்கும் நன்றி!
பகிர்வுக்கு நன்றி
//தலைப்புக்காக ஒரு சபாசு! பத்திரிக்கைன்னு எழுதாம பத்திரிகைன்னு சரியா இருக்கே? இஃகிஃகி!!
தகவலுக்கும் நன்றி!//
இஃகி!இஃகி மட்டும் போட்டுக்கறேன்!
//பகிர்வுக்கு நன்றி//
புதுக் கனவுக்கன்னி யாராவது அறிமுகப் படுத்தறது:)
நன்றி. தெளிவான இடுகைக்கு.
பாலா!நன்றி.
நீங்க இன்னொரு பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்.அது எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறேன்:)
//எத்தனை நாட்களுக்குத்தான் கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,ராமதாஸ்ன்னே பேசுக்கொண்டு இருப்பது?மாறுதலுக்காக சில தமிழ் அறிவுஜீவிகளையும் முன்னிலைப் படுத்துவோம்.//
:-))
சிரிப்பானுக்கு ஒரு நன்றி போட்டுக்கறேனுங்க கிரி.
பகிர்வுக்கு நன்றி
//பகிர்வுக்கு நன்றி//
வண்ணத்துப்பூச்சிகளும் இங்கே சிறகடித்துப் பறக்கின்றன.நன்றி.
//சில தமிழ் அறிவுஜீவிகளையும் முன்னிலைப் படுத்துவோம்//
நல்ல விசயம் நண்பரே..
பகிர்தலுக்கு நன்றிகள் பல..
//பத்திரிக்கைன்னு எழுதாம பத்திரிகைன்னு சரியா இருக்கே?//
அப்படியா..
பின்னூட்டத்திலும் எனக்கு வகுப்பெடுத்த பழமைபேசியாருக்கும் நன்றி
//இருந்த கரையோரம் தளத்தின் பதிவர் செல்லமுத்து குப்புசாமிக்கும்,அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட தொழில் நுட்ப வட்டத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்த இடுகை தன் புன்முறுவலை சமர்ப்பணம் செய்கிறது.//
வழிமொழிகின்றேன் நண்பா
கலவரம் ஏற்படுத்தறத்துக்குன்னே காவலர்கள் ஒதைக்கிற வரை அமக்களம் பண்ற ஆளுங்களும் இருக்காங்க, நீங்க சொல்லிருக்க மாதிரி.
//பத்திரிகையாசிரியர் அய்யநாதனை//
//பத்திரிகை ஆசிரியர் உலகநாதன்//
அறிமுகத்திற்கு நன்றி.
//கலவரம் ஏற்படுத்தறத்துக்குன்னே காவலர்கள் ஒதைக்கிற வரை அமக்களம் பண்ற ஆளுங்களும் இருக்காங்க, நீங்க சொல்லிருக்க மாதிரி.//
போராட்டக்காரர்களும்,காவல்துறையும் பஞ்சும் நெருப்பும் மாதிரி.யார் முதல்ல பத்திக்கிறாங்கன்னு பார்த்தா பஞ்சுக்கு(போராட்டக்காரர்கள்)பறக்குற சுபாவம்.நெருப்புக்கு(காவல்துறை)பத்திக்கிற சுபாவம்.
நீங்க இருக்குற பக்கம் போலிஸ் எப்படியின்னு தெரியலை.ஆனா இந்த லண்டன் போலிஸ்களை தொலைக்காட்சியில் பார்த்தா கையக் கட்டிகிட்டுதான் நிற்கிறாங்க.
//இந்த இடுகை தன் புன்முறுவலை சமர்ப்பணம் செய்கிறது.//
எந்நன்றி கொண்டார்க்கும்.........
பத்திரிகை ஆசிரியரின் அறிமுகத்திற்கு நன்றி !!!!!
:)
அற்புதமான பதிவு! தகவல் தெரிந்தும் வேலையிருந்ததால் வரமுடியவில்லை. பதிவைப் பார்த்ததும் வேலையை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது
Post a Comment