Followers

Sunday, June 7, 2009

க.தங்கமணி பிரபு

சிந்தனி என்ற களத்தின் சொந்தக்காரர் க.தங்கமணி பிரபு வின் எழுத்துக்களை முன்பு பார்க்க கிடைக்கவில்லை.சிலரைக் கண்டவுடன் பிடித்துப் போவது போல் இவருடைய எழுத்துக்களை இன்று பார்வையிட்டவுடன் பிடித்துப் போயிற்று. இன்று அவரிட்ட வயசுப்பெண்ணின் இடுப்பு என்ற தலைப்பில் சொன்ன ஒரு கவிதையைப் பார்வையிடப் போய் மற்ற பேச்சு வழக்கின் எழுத்தின் கருத்துக்களில் மூழ்கிப் போய் நல்ல எழுத்துக்கள் ஏன் ஒளிந்து நிற்கின்றன என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இது.

ஈழப் போரினை அலசும்,விமர்சிக்கும்,குறை சொல்லும் அத்தனை எழுத்துக்களிலும் வித்தியாசம் கொண்ட எழுத்து இவருடையது.கூடவே உணர்வு பூர்வமானதும்.மானுடம் என்ற அடிப்படையைத் தள்ளி விட்டு நவீனத்தின் பக்கங்களை மட்டுமே எழுதுவது என்பது இயல்பாகிப் போன விசயமாகி விடுகிறது சிலருக்கு.அவர்களில் இருந்து தனித்து நிற்கும் எழுத்துக்கு ஊக்கம் தரும் வண்ணம் சிந்தனிப் பதிவர் க.தங்கமணி பிரபுவின் எழுத்துக்கள் இங்கே உங்களுக்கு அறிமுகம்.

எனக்கு இவரின் முன் அறிமுகம் கிடையாது.படித்த இந்த கணத்தில் குறிப்பிட வேண்டும் என்று மனதுக்கு தோன்றியதால் அவரின் இடுகையில் ஒன்று கீழே.

http://chinthani.blogspot.com/2009/06/blog-post.html

மிச்சம் மீதியும் உங்களுக்குப் பிடித்துப் போகும் என நினைக்கிறேன்.

வாங்க தங்கமணி!நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க:)

12 comments:

Suresh Kumar said...

அருமையான செலேகசன் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

ஒரு நல்ல அறிமுகம் மிக்க நன்றி நண்பா

க. தங்கமணி பிரபு said...

அடடா, என்னங்க இது! ஒரு கலக்கு கலக்கீட்டீங்க போங்க!

அப்பிடியே லைட்டா நம்பிக்கை வருதுங்க! அதாவது..... எனக்கு என்ன சொல்லறதுன்னு வரிகள் சரியா வரமாட்டேங்குது! டக்குனு மனசுல என்ன தோணுதுன்னா "ஜெயிச்சரலாம் போல தெரியுதே!"

தொலைவு அடிவானம்தான்னு தெரியும், இருந்தாலும் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று, இந்த பழனிக்கு பாதயாத்திரைக்கு நடக்கதொடங்கைல ஒரு5 -6 மைலுக்கப்புறம் கனுக்காலிலிருந்து தொடைவரைக்கும் சும்மா கும்முனு ஒரு வலி புடிக்கும். கரெக்டா அப்போ ஒரு பாட்டு எடுத்து விடுவாங்க! அது முருகன் மேல இருந்தாலும், அப்பிடியே பாட்ட கேக்க கேக்க காலுவலி அலுப்பையெல்லாம் மீறீ, என்னவோ நடக்கவே பிறந்த மாதிரி ஒரு நடை போடுவோம் பாருங்க! அந்த மாதிரி பண்ணிட்டீங்க! பயணத்த உற்சகப்படுத்துது! ரொம்ப நன்றீங்க!

ஷண்முகப்ரியன் said...

படித்து விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்,நடராஜன்.

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

//அருமையான செலேகசன் வாழ்த்துக்கள்//

வீட்டுப் பக்கம் வந்திருக்கீங்க!நான் கவனிக்கலை.மன்னிக்கவும் தாமதமான மறுமொழிதலுக்கு.

ராஜ நடராஜன் said...

//ஒரு நல்ல அறிமுகம் மிக்க நன்றி நண்பா//

வாங்க ஞானசேகரன்!தங்கமணி உண்மையிலே தங்கமணிதான்.

ராஜ நடராஜன் said...

//அப்பிடியே லைட்டா நம்பிக்கை வருதுங்க! அதாவது..... எனக்கு என்ன சொல்லறதுன்னு வரிகள் சரியா வரமாட்டேங்குது! டக்குனு மனசுல என்ன தோணுதுன்னா "ஜெயிச்சரலாம் போல தெரியுதே!"//

வாங்க தங்கமணி பிரபு!நீங்க கட்டாயம் ஜெயிப்பீங்க!அதற்கான ஆற்றல் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.
1.ஹிட் கணக்கு அதிகமாகனுமின்னா அதிகம் நல்ல இடுகை மட்டும் இடுங்க!
2.வரும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி கொடுங்க.

3.பதிவர் வட்டத்துக் கண்ணூல பட்டிட்டீங்கன்னா விடமாட்டாங்க பாசக்கார புள்ளைக:)

வெறும் மன சந்தோசத்துக்குன்னா நேரம் கிடைக்கும் போது மட்டும் ரசிச்சு எழுதுங்க.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//தொலைவு அடிவானம்தான்னு தெரியும், இருந்தாலும் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று, இந்த பழனிக்கு பாதயாத்திரைக்கு நடக்கதொடங்கைல ஒரு5 -6 மைலுக்கப்புறம் கனுக்காலிலிருந்து தொடைவரைக்கும் சும்மா கும்முனு ஒரு வலி புடிக்கும். கரெக்டா அப்போ ஒரு பாட்டு எடுத்து விடுவாங்க! அது முருகன் மேல இருந்தாலும், அப்பிடியே பாட்ட கேக்க கேக்க காலுவலி அலுப்பையெல்லாம் மீறீ, என்னவோ நடக்கவே பிறந்த மாதிரி ஒரு நடை போடுவோம் பாருங்க! அந்த மாதிரி பண்ணிட்டீங்க! பயணத்த உற்சகப்படுத்துது! ரொம்ப நன்றீங்க!//

பழனி நடையின் உளவியலை சரியா சொல்றீங்க!

ராஜ நடராஜன் said...

//படித்து விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்,நடராஜன்.//

உங்க மாதிரி இலக்கியவாதிகளூக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.

பாலா... said...

அது சரி. அவருக்கு தமிழிஷ்ல இணைங்கன்னு சொல்லிட்டு நீங்க இந்த இடுகை இணைக்காம்ப் போனதென்ன.

ராஜ நடராஜன் said...

//அது சரி. அவருக்கு தமிழிஷ்ல இணைங்கன்னு சொல்லிட்டு நீங்க இந்த இடுகை இணைக்காம்ப் போனதென்ன.//

மத்தவங்க வீட்டையே அதிகம் சுத்துவதால் சிலசமயம் மறுமொழிகள் தாமதமாகிப்போகிறது பாலா!கூடவே நீங்க சுட்டிக்காட்டியதும்.நினைவு படுத்தியதற்கு நன்றி.