Followers

Monday, June 8, 2009

தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை

தொலைக்காட்சிகள் மக்களின் மன இயல்பை,உளவியலை பிரதிபலிக்கக் கூடும்.பல தொலைக்காட்சிகள் தமிழகத்தில் வலம் வந்தாலும் சன் குழுமம் மட்டும் முன்னிலை வகிப்பதேன்?அரசியல் ஆதரவு இருந்தாலும் கூட கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகும் தனது முதன்மையை தக்கவைத்துக் கொண்டதற்கு அதன் தொழில் அணுகுமுறையும் மக்களின் விருப்பம் எதுவென்று அறிந்து கொண்டு செயல்படுவது காரணமாக இருக்கக் கூடும்.

தனிப்பட்ட முறையில் ஈழம் குறித்த செய்திகளை கொண்டு செல்லாததும் வியாபார நோக்கிலே பயணம் செய்ததும் வருத்தத்தை உருவாக்கினாலும் சன் குழுமத்தை மட்டும் குறை சொல்ல இயலுமா என்ற கேள்வியை கேட்க வேண்டியதாக இருக்கிறது.காரணம்,சன் குழுமம் செய்யாததை செய்யத் தவறியதை மக்கள் தொலைக்காட்சி நிறையவே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.ஆனால் ஈழ நிகழ்வுகள் என்ற ஒன்றை விடுத்தும்,தமிழ் என்ற சொல்லையும் விடுத்தும் ஏனையவை ஒரு தொலைகாட்சி பார்வையாளனை திருப்தி படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டதும் தமிழகத்தில் அதற்கு சாதகமாகவே அமைந்திருக்க வேண்டும்.ஆனால் எதிர் விளம்பரத்தில் வியாபாரம் ஆகாததை யாரும் கவனிக்கவில்லை.ரஜனி எதிர்ப்பு என்ற காரணியும்,சினிமான்னாலே உவ்வே சொன்னதும் கூட மக்கள் தொலைக்காட்சி சிறப்படையாமல் போனதுக்கு காரணமாயிருக்கக் கூடும்.

கலைஞர் தொலைகாட்சி பக்கம் வந்தால் கட்டுமரக் கதையெல்லாம் இணையத்தில் மட்டுமே பவனி வரும் விசயம்.மானாட மயிலாட அடிச்சு ஆடுகிறது என்பது அதன் நடன அசைவுகளிலும்,வண்ண மயமான செட் அலங்கரிப்புகளிலும்,மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யத் துணியாத காட்சி அமைப்புகளிலும் தெரிகிறது.இணைய தள களத்தின் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் இயல்பிற்கும் தொலைக்காட்சியின் வெளிப்படுத்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் டொக்,டொக்குன்னு பெட்டி தட்டும் ஒத்தை ஆளு விளையாட்டை விட ரிமோட் விசையத் தட்டுனோமா ஒரு காட்சியப் பார்த்தோமா விளம்பரம் பிடிக்கலையா இன்னொரு அமுக்கு அடுத்த சேனலுக்கு கூடு விட்டு கூடு பாஞ்சோமான்னு வீட்டின் ஹாலில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களையும் கூட்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி வெற்றி பெற்று விடுகிறது.

இன்னும் சொல்லனுமுன்னு வந்த எண்ண அலை இப்போதைக்கு முற்றுப் பெறுகிறது.

27 comments:

அது சரி said...

//
சன் குழுமம் செய்யாததை செய்யத் தவறியதை மக்கள் தொலைக்காட்சி நிறையவே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.ஆனால் ஈழ நிகழ்வுகள் என்ற ஒன்றை விடுத்தும்,தமிழ் என்ற சொல்லையும் விடுத்தும் ஏனையவை ஒரு தொலைகாட்சி பார்வையாளனை திருப்தி படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.
//

இதற்கு காரணம் மக்கள் தொலைக்காட்சி அல்ல...அதற்கு பின் இருக்கும் பா.ம.க என்ற அரசியல் கட்சியின் மீது மக்களின் கடும் அதிருப்தியே..

அது சரி said...

அப்புறம்,

1. என்னங்க அண்ணா, திருப்பி மாடரேஷன் கொண்டு வந்துட்டீங்க....அனானிக்கும் உங்களுக்கும் நடந்த பிரச்சினையை படிச்சேன்...அதுக்காக நாம கடைய பாதி மூடி வச்சிர முடியுமா?? பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னே...குவாட்டர் ஊத்தாம இந்த தம்பி சொல்றத கேளுங்க...

2. தமிழிஷ்ல இணைச்சா மட்டும் போதாது...அங்க போய் லின்க் குடுக்கணும்...பூத்து தொறந்து இருக்கு...ஆனா பேலட் பேப்பர் இல்லைனா எப்படி நான் ஓட்டுப் போடறது?? :0))

நசரேயன் said...

ஒரு மாறுதலுக்கு தெலுகு முயற்சி பண்ணுங்க

பழமைபேசி said...

தமிலிசுல இணைக்கல?

ராஜ நடராஜன் said...

//இதற்கு காரணம் மக்கள் தொலைக்காட்சி அல்ல...அதற்கு பின் இருக்கும் பா.ம.க என்ற அரசியல் கட்சியின் மீது மக்களின் கடும் அதிருப்தியே..//

பா.ம.க என்பதை விட ரஜனி வெறுப்பும் தமிழ் சினிமான்னாலே தீண்டத்தகாதது போக்கும் கூட காரணமாயிருக்குங்க.

ராஜ நடராஜன் said...

//1. என்னங்க அண்ணா, திருப்பி மாடரேஷன் கொண்டு வந்துட்டீங்க....அனானிக்கும் உங்களுக்கும் நடந்த பிரச்சினையை படிச்சேன்...அதுக்காக நாம கடைய பாதி மூடி வச்சிர முடியுமா?? பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னே...குவாட்டர் ஊத்தாம இந்த தம்பி சொல்றத கேளுங்க...

2. தமிழிஷ்ல இணைச்சா மட்டும் போதாது...அங்க போய் லின்க் குடுக்கணும்...பூத்து தொறந்து இருக்கு...ஆனா பேலட் பேப்பர் இல்லைனா எப்படி நான் ஓட்டுப் போடறது?? :0))//

1.மீள் பரிசீலனை செய்கிறேன்.
2.லின்க் வேற கொடுக்கணுமா?யாரும் சொல்லவேயில்லையே!

ராஜ நடராஜன் said...

//ஒரு மாறுதலுக்கு தெலுகு முயற்சி பண்ணுங்க//

ஏமண்டி?

ராஜ நடராஜன் said...

//தமிலிசுல இணைக்கல?//

இதோ இப்ப!அடுத்த முறை வரும் போது சரியா இருக்கும்:)

ராஜ நடராஜன் said...

மணியண்ணா,அதுசரி இருவருக்கும் நன்றி தமிழிஷ் இணைப்புத் தகவலுக்கு.சரி செய்தாகி விட்டது.

கோவி.கண்ணன் said...

//1. என்னங்க அண்ணா, திருப்பி மாடரேஷன் கொண்டு வந்துட்டீங்க....அனானிக்கும் உங்களுக்கும் நடந்த பிரச்சினையை படிச்சேன்...அதுக்காக நாம கடைய பாதி மூடி வச்சிர முடியுமா?? பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னே...குவாட்டர் ஊத்தாம
//

ரிப்பீட்டே.........

ஷண்முகப்ரியன் said...

ஓட்டுக்களுக்கு அரசியல்வாதிகளும்,வசூலுக்குத் திரைப் படத்துறையினரும்,விளம்பரதாரகளுக்கு தொலைக் காட்சி நிறுவனங்களும் என்றுமே அடிமைகள்.இந்த சிஸ்டத்தில் கொள்கையாவது மண்ணாவது.

ஆ.ஞானசேகரன் said...

///ஷண்முகப்ரியன் said...

ஓட்டுக்களுக்கு அரசியல்வாதிகளும்,வசூலுக்குத் திரைப் படத்துறையினரும்,விளம்பரதாரகளுக்கு தொலைக் காட்சி நிறுவனங்களும் என்றுமே அடிமைகள்.இந்த சிஸ்டத்தில் கொள்கையாவது மண்ணாவது.///

வழிமொழிகின்றேன் நண்பரே

thevanmayam said...

டொக்,டொக்குன்னு பெட்டி தட்டும் ஒத்தை ஆளு விளையாட்டை விட ரிமோட் விசையத் தட்டுனோமா ஒரு காட்சியப் பார்த்தோமா விளம்பரம் பிடிக்கலையா இன்னொரு அமுக்கு அடுத்த சேனலுக்கு கூடு விட்டு கூடு பாஞ்சோமான்னு வீட்டின் ஹாலில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களையும் கூட்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி வெற்றி பெற்று விடுகிறது.///

மக்களின் மனோபாவத்தைத்தெளிவா சொல்லிவிட்டீர்கள்!!

கிரி said...

//நசரேயன் said...
ஒரு மாறுதலுக்கு தெலுகு முயற்சி பண்ணுங்//

:-)))))

ராஜ நடராஜன் said...

//ரிப்பீட்டே.........//

கோவியாரே!மாடரேஷன் எடுத்து விட்டேன் மீண்டும்.ஆனால் அனானி அண்ணன்களுக்கு தடா!

Thennavan said...

//பல தொலைக்காட்சிகள் தமிழகத்தில் வலம் வந்தாலும் சன் குழுமம் மட்டும் முன்னிலை வகிப்பதேன்?அரசியல் ஆதரவு இருந்தாலும் கூட கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகும் தனது முதன்மையை தக்கவைத்துக் கொண்டதற்கு அதன் தொழில் அணுகுமுறையும் மக்களின் விருப்பம் எதுவென்று அறிந்து கொண்டு செயல்படுவது காரணமாக இருக்கக் கூடும்.//

சன் குழுமத்தின் வளர்ச்சி என்பது பயிரை விட 'களை' செழித்து வளர்வது போன்றதுதான் !

ராஜ நடராஜன் said...

//ஓட்டுக்களுக்கு அரசியல்வாதிகளும்,வசூலுக்குத் திரைப் படத்துறையினரும்,விளம்பரதாரகளுக்கு தொலைக் காட்சி நிறுவனங்களும் என்றுமே அடிமைகள்.இந்த சிஸ்டத்தில் கொள்கையாவது மண்ணாவது.//

ஷண்முகப்ரியன் சார்!உங்க கருத்து கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.இந்த சிஸ்டம் என்பது ஏதாவது எழுதிய ஆணையா?சட்டமா?அதெப்படி சமூகத்தில் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல ஒரு தனிமனிதன் வாழ்வுக்குள் மெல்ல ஊடுறுவுகிறது?இந்த முடிச்சுகளுக்கெல்லாம் விடை தேடுவதும் அதனை பாமரனுக்கும் புரிய வைப்பதில் இருக்கிறது சிஸ்டம் என்ற வார்த்தையின் தந்திரம்.

என்னைப் பொறுத்த வரையில் எந்த நிலையிலும் வாழும் தமிழன் மற்ற மாநிலத்துக்காரனை விட கொஞ்சம் அரசியலில் ஆர்வம் உள்ளவன்.ஆனால் அரசியல் மூடு மந்திரங்கள் புரியாமல் கட்சி,ஜாதி,சமீபத்தில் பணம் போன்ற பொருள்களால் மயக்கமாகி விடுகிறான்.கல்லூரிக் கால தேர்தலில் கூட இவனுக்குத்தான் ஓட்டுப் போடணுமின்னு முடிவெடுத்துட்டா அப்புறம் என் மூளையின் கட்டளையை நானே கேட்கமாட்டேன்:)

திரைப்படம் பற்றிய பார்வையை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்பதால் இதில் நான் அடக்கி வாசிப்பது நல்லது:)

விளம்பரதாரர்கள் தொலைக்காட்சியின் நோக்கை நிர்ணயிக்கிறார்களா என்பது நம்ம புதுமுகம் தங்கமணி பிரபுகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//வழிமொழிகின்றேன் நண்பரே//

வாங்க நண்பா ஞானசேகரன்!நேற்று ஷண்முகப்ரியன் சாருக்கு பாலோ அப் கொடுக்கப் போய் உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து விட்டேன்.

ராஜ நடராஜன் said...

//மக்களின் மனோபாவத்தைத்தெளிவா சொல்லிவிட்டீர்கள்!!//

வாங்க மருத்துவரே!(அசல் நீங்கதானே!அதனால் தைரியமா கூப்பிடலாம்:)உங்க வீட்டுக்கும் வந்து ஒரு பாலோ அப் போட்டுக்கறேன்.இத்தனை நாளா பின்னூட்டமிட்டு இந்த வேலைகளை கவனிக்காம விட்டுப் போச்சு.

ராஜ நடராஜன் said...

//சன் குழுமத்தின் வளர்ச்சி என்பது பயிரை விட 'களை' செழித்து வளர்வது போன்றதுதான் !//

தென்னவன் வாங்க!ஆஹா!அருமையான உதாரணம் தந்துள்ளீர்கள்.

ராஜ நடராஜன் said...

////நசரேயன் said...
ஒரு மாறுதலுக்கு தெலுகு முயற்சி பண்ணுங்//

:-)))))//

கிரி!சிரிப்பென்ன சிரிப்பு:)சிலசமயம் குத்துப்பாட்டு கேட்கணுமுன்னா அங்கயும் போறதுதான்!

உங்களுக்குப் பின் தொடர்கிறேன் போட்டேனா?இதோ வருகிறேன்.

seeprabagaran said...

அனைத்து ஊடகங்களுக்கும் சமூதாயக் கடமை உள்ளது. அந்தக் கடமையை செய்யத்தவறிய ஊடகங்களே தமிழல் அதிகமாக உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான பணியை “மக்கள் தொலைக்காட்சி” தன்னால் இயன்றவரை சிறப்பாக செய்து வருகிறது.

ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், முதலாளிகளும் ஏதாவது ஒருவகையில் மக்களை சுரண்டி தன்னை வளமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதற்காக எந்த இழி செயலையும் செய்யத் அவர்கள் தயங்குவதில்லை. சன் குழுமத்தில் வளர்ச்சியும் இப்படிப்பட்டதே.

மக்கள் தொலைக்காட்சி திரைப்படத்துறைக்கு எதிரி அல்ல...

குத்தாட்ட தமிழ் திரைப்படங்களை ஒளிப்பரப்பும் பணியை அனைத்து தமிழ்த் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன.

அற்புதமான பல மொழி திரைப்படங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மக்கள் தொலைக்காட்சி சிறப்பாகவே செய்கிறது.

மக்களைப் பற்றி சிந்திக்காதவர்கள், செயல்படாதவர்கள், மக்களுக்காக உண்மையாக உழைக்காதவர்கள் அவர்கள் சார்ந்த துறையில் அவர்கள் பெறும் வெற்றி மக்களின் தோல்வியை உறுதி செய்கிறது.

ராஜ நடராஜன் said...

//மக்கள் தொலைக்காட்சி திரைப்படத்துறைக்கு எதிரி அல்ல...

குத்தாட்ட தமிழ் திரைப்படங்களை ஒளிப்பரப்பும் பணியை அனைத்து தமிழ்த் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன.

அற்புதமான பல மொழி திரைப்படங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மக்கள் தொலைக்காட்சி சிறப்பாகவே செய்கிறது. //

வாங்க பிரபாகரன் என்ற சொல்லுக்கு பெருமிதம் சேர்க்கும் நண்பரே!
மக்கள் தொலைக்காட்சி திரைப்படத்துறைக்கு எதிரியல்ல என்று மருத்துவரும் சமீபத்தில் மொழிந்ததை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தேன்.மக்கள் தொலைக்காட்சியின் கர்த்தாவான மருத்துவரின் முதல் கோணல் ரஜனி என்ற நடிகனோடு விமர்சனத்துக்கு நிற்காமல் ரஜனி என்ற நல்ல மனிதனோடு முட்ட முயற்சித்தது.

திரைப்பட நுகர்வோர் கலாச்சாரத்தை அனைத்து தொலைக்காட்சிகளுமே சந்தைப்படுத்துகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால் உலகத்திரைப்படங்களை ஊக்குவிக்கும் மக்கள் தொலைக்காட்சி தமிழிலும் சில நல்லபடங்கள் வருவதையும் வரவேற்காமல் போனது அதன் பலவீனம்.

(மக்கள் தொலைக்காட்சி ஈழம் சார்ந்த நிகழ்வுகளை வெளிக்கொண்டுவந்ததன் காரணமாக பா.ம.க பாராளுமன்றம் போய் தனது குரலை எழுப்பாமல் போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமே.ஆனாலும் அரசியலையும்,தொலைக்காட்சியையும் தனித் தனி தளங்களாக மாற்றாமல் போனதில் அனைத்து தொலைக்காட்சிகளுக்குமே பங்குண்டு.)

jackiesekar said...

இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டதும் தமிழகத்தில் அதற்கு சாதகமாகவே அமைந்திருக்க வேண்டும்.ஆனால் எதிர் விளம்பரத்தில் வியாபாரம் ஆகாததை யாரும் கவனிக்கவில்லை.ரஜனி எதிர்ப்பு என்ற காரணியும்,சினிமான்னாலே உவ்வே சொன்னதும் கூட மக்கள் தொலைக்காட்சி சிறப்படையாமல் போனதுக்கு காரணமாயிருக்கக் கூடும்.///
மெய்யாலுமே அதான் காரணம். பதிவு அருமை

ராஜ நடராஜன் said...

//மெய்யாலுமே அதான் காரணம். பதிவு அருமை//

வருகைக்கு நன்றி ஜாக்கி!இப்ப காமிராவ வச்சுகிட்டு எங்க சுத்திகிட்டு இருக்கீங்க:)

jackiesekar said...

இன்னைக்கு கேமாராவை வச்சிட்டு இரண்டு பதிவை போட்டேன்

அன்புடன்/ஜாக்கிசேகர்

பாலா... said...

ஒரு ஒரு இடுகையும் வித்தியாசமா, தெளிவா இருக்கு. பகட்டுஇல்லாதது கூட மக்கள் தொலைக் காட்சிக்கு ஒரு பின்னடைவு.