ரொம்ப நாளா பரிட்சை எழுதணும் பாஸாகணும் என்கிற கவலையில்லாம இருந்தவனை பழமையண்ணன் இந்த தொடர் விளையாட்டில் மாட்டி விட்டு விட்டார்.கூப்பிட்ட மரியாதைக்கு கேள்விகளுக்கு பதில்.
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அப்பாவின் பெயரும் என் பெயரும் இணைந்தது ராஜ நடராஜன்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்பத்தான் சமீபத்தில். பதிவர் ஷண்முகப்ரியன் மற்றும் ஏனைய பதிவர்களும் சுட்டிய இலங்கை சகோதரனின் நடன காணொளி கண்டதும்.காப்பத்துங்கன்னு சொன்ன அழுகைகளையும்,காப்பாற்ற இயலா அரசியல் சுயநலத்தில் சிக்குண்டு போரில் சிக்கிய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தமிழர்களாகிய நாம் காப்பாற்ற தவறவிட்டு விட்டோம்:( தேர்தல் முடிவுகளால் துவண்டோ போரின் தோல்வியால் விரக்தியடைந்தோ ஈழம் குறித்த இடுகைகள் குறைவாகப் போனது வருத்தத்தைத் தருகிறது.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பெயரை எழுதுவதை விட அனைத்தும் கணினி மயமாகி விட்டதால் கையெழுத்து எப்படியென்று ஒரு முறை பரிட்சித்துப் பார்க்க வேண்டும்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாதம்,சாம்பார்,பொறியல்,அப்பளம்,ரசம்,மோர் ஊறுகாய்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
சில சந்திப்புக்கள் ஹலோவுடன் முடிந்து விடும். சில புன்முறுவல்களுடன் கூடவரும்.இன்னும் சில அடுத்த முறை புன்முறுவலுடன் குசலம் விசாரித்து ஒட்டிக்கொள்ளும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இந்தியாவில் அருவி.இங்கே கடல்தான் அருகில்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம் பார்த்துப் பேசுவது.பேச்சு நீளும் பட்சத்தில் முகபாவங்கள்.
8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
இன்றுவரை நேர்மை.வார இறுதியில் விடும் நீண்ட குறட்டை.
9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
எனக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொள்வது.பிடிக்காதது உப்பு,காரம் சமையலில் குறைக்கச் சொன்னாலும் அதே அளவில் நிற்பதும் வந்து நீங்களே சமையுங்க என்பதும்.
10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நிச்சயமாக அப்பா,அம்மா.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை முழுக்கை,கருப்பு பேண்ட்,அதற்கு மேட்சாக கருப்பில் வெள்ளைக் கோடுகளால் டை.
12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அலுவலில் பாடல்கள் தடா.
13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு.
14.பிடித்த மணம்?
மல்லிகை மற்றும் தாளிக்கும் மணம்.கூடவே பெர்ஃப்யூம்.முன்பு Brut Cologne by Faberge நன்றாக இருந்தது.இப்ப அதிலும் டூப்ளிகேட்.
15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நடிகைகிட்ட எந்த நடிகரைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்கிற மாதிரி இருக்குது இந்தக் கேள்வி.எல்லாருடைய வீட்டுக்கும் நான் போகிறேன் அதனால் யாரைக்கூப்பிடுவது? அதுசரி,குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் யாராவது வந்து காப்பாத்துங்க.(பிடித்த காரணம், அதுசரியின் முரண்தொடை படித்தவுடன் போலித்தனமில்லாத எழுத்து.குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் நகைச்சுவைகள்)இல்ல இவங்க யாராவது முந்திகிட்டோ அல்லது வேலை நிமித்தம் இடுகைகள் இடாமல் இருந்தால் நான் யார் யார் வீட்டுக்கு இதுவரை பின்னூட்டம் போட்டிருக்கேனோ அவர்களில் முந்திக்காதவங்க யாராவது வந்து தொடரும்படி வேண்டுகிறேன்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பழமையண்ணன் விடாம அடிச்சு ஆடுறார்.எதைச் சொல்வது?இருந்தாலும் தனக்குன்னு ஒரு பாணியாக காளமேகப் புலவர் கனவுல வந்து கதை சொல்லுவது பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
உலக கால்பந்து விளையாட்டு.
18. கண்ணாடி அணிபவரா?
கணினித் திரைக்கு மட்டும்.காருக்கு கறுப்புக் கண்ணாடி.
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மூளைக்கு வேலை கொடுக்கும் எல்லா திரைப்படங்களும்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
டி.வி.டியில் Paradise now. இந்தப் படம் இரு பாலஸ்தீனிய நண்பர்கள் எப்படி பஸ்ஸில் பயணம் செய்யும் இஸ்ரேல் மக்கள் மீதான தற்கொலைப் படைக்கு தயாராகிறார்கள் என்பது பற்றிய ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய பாலஸ்தீனிய அரபி மொழிப் படம்.படத்தை தயாரித்தவர் இஸ்ரேலியர் என நினைக்கிறேன். முன்பு ஆஸ்கருக்கு சென்ற ஒரே பாலஸ்தீனியப் படம்.சென்னைப் பதிவர்கள் கூடும் உலகத்திரைப் படங்கள் வரிசைக்கு இந்தப் படத்தை சிபாரிசு செய்கிறேன்.
21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
Exodus. (pdf format.தகவல் உதவி தருமி ஐயா)
22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மழலைச் சத்தம் பிடித்தது.பிடிக்காதது பாதையில் விலக இடமில்லாமல் இருந்தாலும் சைடு கேப்ல நுழைய முயன்று கொய்ங்,கொய்ங்ன்னு ஹார்ன் செய்வது.
23.பிடித்த பருவ காலம் எது?
கல்லூரிப் பருவம்.
24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இந்த வேலையெல்லாம் கூட நடக்குதா:)
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
இந்தியாவில் டெல்லி,கல்கத்தா-இந்தியாவுக்கு வெளியே குவைத்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சின்னப்பையன்ல சீசன் சீசனுக்கு விளையாட்டு மாறுகிற மாதிரி இப்பவும் சீசன் சீசனுக்கு காமிரா,மீன்பிடித்தல்ன்னு மாறும்.ஒரு மொட்டை கிரவுண்ட்ல காரை வைச்சு கியர் எது,பிரேக் எது,சாவி கொடுப்பது எப்படின்னு எனக்கு நானே கார் ஓட்டக் கத்துகிட்டதும் லைசென்ஸ் வாங்கியதும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்வி.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியெல்லாம் ஒருத்தனும் கிடையாதுங்க.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
தஞ்சை பெரிய கோயில்,திருச்சி மலைக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி கடந்து புளிய மரங்களைப் பார்த்துகிட்டே ஆழியார் அணை துவங்கி,அட்டைகட்டி,தேயிலைக் காடுகள்,வால்பாறை,சோலையார்,அப்படியே கேரளாவுக்குள்,குருவாயூர்,திருச்சூர் புகுந்து கொச்சின் வாஸ்கோடா காமா வந்த இடம்,இந்திய யூதர்களின் கோயில்,மட்டாஞ்சேரின்னு நீண்ட பயணம்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.இதுவரைக்கும் நோய் நொடிகளுக்குள் மாட்டிக்கொள்ளவில்லை.இனியும் அப்படியே இருக்க.
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
கடற்கரையில் தனிமையில் சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு கடலைப் பார்ப்பது,இல்லைன்னா மீன் பிடிப்பது.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
போரில்லா உலகம் வேண்டும்.காதுல கேட்க மட்டுமே நன்றாக இருக்கிறது.நடைமுறையில் கார்கில்,வளைகுடா யுத்தம்,ஈழ இலங்கைப் போர் மனதை நிறைய பாதித்தவை.
17 comments:
//31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
கடற்கரையில் தனிமையில் சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு கடலைப் பார்ப்பது,இல்லைன்னா மீன் பிடிப்பது.
//
அண்ணே, இங்க ரெண்டு சமாச்சாரம்.
கடலைப் பார்ப்பது, அல்லது மீன் பிடிப்பதுன்னு வரணும். கடல் இல்லாமப் போகுமா, என்ன?
அடுத்தது, மீன் பிடிப்பேன்னு சொல்லி எனக்கு வெச்சிட்டீங்களே ஆப்பு? அவ்வ்....
//இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை முழுக்கை,கருப்பு பேண்ட்,அதற்கு மேட்சாக கருப்பில் வெள்ளைக் கோடுகளால் டை.//
அலுவலகத்தில் எழுதறீங்க அப்படித்தானே?
//பிடித்த மணம்?
மல்லிகை மற்றும் தாளிக்கும் மணம்.//
வித்தியாசமான ரசனை
//23.பிடித்த பருவ காலம் எது?
கல்லூரிப் பருவம்.
//
எனக்கும் ஏற்க்குறைய அதே..,
//போரில்லா உலகம் வேண்டும்//
மிகவும் ஆசையாக உள்ளது அவ்வாறான உலகம் காண...
நீங்களும் மைதானத்தில் இறங்கி விட்டீர்களா,ராஜ.நடராஜன்!
நான் மைதானத்துக்கு வெளியே நின்று விளையாட்டைப் பார்த்துக் கைதட்டவே எப்போதும் ஆசைப் படுபவன்.
நன்றாக இருந்தது.
எவ்வளவு பேருக்கு பதில் எழுத வேண்டிய இருக்கு
//கடலைப் பார்ப்பது, அல்லது மீன் பிடிப்பதுன்னு வரணும். கடல் இல்லாமப் போகுமா, என்ன?//
இங்கேயும் ரெண்டு விசயமுங்கண்ணா!
கடலை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு மனநிலை.
மீன் பிடிப்பது இன்னொரு மனநிலை.
கடலைப் பார்த்தா சிந்தனையின்னு அர்த்தம்.மீன் பிடிச்சா கண்ணூ மீன் மேல மட்டும் இருக்குதுன்னு அர்த்தம்.(இல்லைன்னா தங்ஸ் மீன் பிடிக்கப் போய் ஒண்ணுமே கொண்டு வரலைன்னு வையும்:))
//அலுவலகத்தில் எழுதறீங்க அப்படித்தானே?//
ஆம்.ஆனா சில சமயம் அலுவல்.சில சமயம் வீடு.
//வித்தியாசமான ரசனை//
அதென்னமோ மல்லிகை மேல் துவக்கம் முதலே ஒரு மயக்கம்.தாளிக்கிறது தினீப் பண்டாரம இருக்கிறதால இருக்கலாம்.
//மிகவும் ஆசையாக உள்ளது அவ்வாறான உலகம் காண...//
வாங்க மணிநரேன்!நியாயமா பார்க்கப்போனா இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் வெளிப்பட்ட சில போரின் கசப்பான உண்மைகள் உலகை போரில்லா திசை நோக்கி மட்டுமே கொண்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் நிகழ்வது நினைக்கும் போது அதற்கான சாத்தியங்கள் எப்பொழுது?
//எவ்வளவு பேருக்கு பதில் எழுத வேண்டிய இருக்கு//
ஆமா!உங்க மாதிரி கூட்டம் சேர்த்துனா இந்த மாதிரி சொல்லத்தான் வேண்டியிருக்கும்:)
//
அதுசரி,குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் யாராவது வந்து காப்பாத்துங்க.(பிடித்த காரணம், அதுசரியின் முரண்தொடை படித்தவுடன் போலித்தனமில்லாத எழுத்து.குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் நகைச்சுவைகள்)இல்ல இவங்க யாராவது முந்திகிட்டோ அல்லது வேலை நிமித்தம் இடுகைகள் இடாமல் இருந்தால் நான் யார் யார் வீட்டுக்கு இதுவரை பின்னூட்டம் போட்டிருக்கேனோ அவர்களில் முந்திக்காதவங்க யாராவது வந்து தொடரும்படி வேண்டுகிறேன்.
//
இப்பிடில்லாம் எனக்கு "ரொம்ப நல்லவன்"ங்கிற மாதிரி சர்டிஃபிகேட் குடுக்காதீங்க...நான் ரொம்ப காம்ப்ரமைஸ் பண்ணி தான் எழுதறேன்...ஆக, அதுவும் போலித் தனம் தான்...
அடுத்து ஒரு இடுகை போட்றதுக்கு ஐடியா குடுத்திருக்கீங்க...மிஸ் பண்ணிருவோமா?? டைம் கிடைச்சதும்....
//இப்பிடில்லாம் எனக்கு "ரொம்ப நல்லவன்"ங்கிற மாதிரி சர்டிஃபிகேட் குடுக்காதீங்க...நான் ரொம்ப காம்ப்ரமைஸ் பண்ணி தான் எழுதறேன்...ஆக, அதுவும் போலித் தனம் தான்...//
உங்க துவக்க கால இடுகைகள் காம்ரமைஸ் இல்லாமத்தான் இருந்தது.இடையில சில குட்டுகள் விழுந்தவுடன் காம்ப்ரமைஸ் எண்ணம் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
//தாளிக்கும் மணம்.//
காரம் ஜாஸ்தியா போட்டாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கறதாலதான தாளிக்கும் மனம் பிடிக்கிறது:):):)
//
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்வி//
எனக்குக் கூட யோசிக்கறாப்டி கேள்வி கேக்குறாங்கன்னுதான் பள்ளி கல்லூரி தேர்வுகள் புடிக்கவே இல்லை:):):)
//தேர்தல் முடிவுகளால் துவண்டோ போரின் தோல்வியால் விரக்தியடைந்தோ ஈழம் குறித்த இடுகைகள் குறைவாகப் போனது வருத்தத்தைத் தருகிறது.//
:(:(:(
//மூளைக்கு வேலை கொடுக்கும் எல்லா திரைப்படங்களும்.//
அப்போ உங்களுக்குக் கண்டிப்பா நரசிம்மா புடிக்கும்னு நினைக்கிறேன்:):):)
நானும் தனியா மீன் பிடிக்க போகனும்னுதான் ஆசைப்படுறேன் தனியா
நான் என்னத்த எழுதினேன் பதிலு...
இன்னைக்கு விவகாரமா ஒரு பதிவு எழுதினேன் சென்சார் பண்ணிட்டாங்க அதுனால இன்னும் ஒரு வாரம் பதிவு கிடையாது
Post a Comment