Followers

Saturday, March 17, 2012

பொன்னியின் செல்வனும்,எக்ஸோடஸும்

என் பேச்சை நானே கேட்கமாட்டேன் விஜய் டயலாக் மாதிரி என் கடையை நானே பார்க்காமல் புராஜக்ட் வேலையில் சிக்கிக்கொண்டு பதிவுகளில் கவனம் செலுத்தாமல் ஒரு சில பின்னூட்டங்கள் மட்டுமே போட்டு வந்தேன்.இலங்கை குறித்த புதிய நகர்வுகள் மனதில் அலை மோதிக்கொண்டிருக்க  இந்தப் பதிவை முழுவதுமாக சொல்ல முடியாவிட்டாலும் சொல்லி விடுவது என்ற தீர்மானத்தில் தொடர்கிறேன்.
வாசிப்பு அனுபவங்கள் என்பவை என்றைக்கோ எழுதிய பொன்னியின் செல்வனை மட்டும் மீண்டும் நினைவுபடுத்துவதல்ல.பதிவர்கள் யாராவது எப்பொழுதோ சொல்லியதை மீண்டும் அசை போடுவதும் கூட.அந்த விதத்தில் இந்த பதிவிற்கான மூலக்கரு பதிவர் தருமி அவர்களின் பொன்னியின் செல்வனும் EXODUS-ம் என்ற பதிவே.இவரது பதிவு குறித்து ஏற்கனவே ஒரு முறை இங்கே குறிப்பிட்டு விட்டாலும் இப்பொழுது Exodus திரைப்படம் பார்த்தவுடன் முந்தைய பார்வை இன்னும் கொஞ்சம் விரிவடைகிறது..இந்த படம் 20 பிட்டு படங்களாக யூடியூப்பில் கிடைக்கிறது என்று சொல்லியிருந்தேன்.எத்தனை பேர் படம் பார்த்தீர்கள் என தெரியவில்லை!மணி ரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்திருந்தால் விசுவலாக இன்னும் கொஞ்சம் மண்டை கபாளத்துக்குள் ஒட்டியிருக்குமா அல்லது வந்தியத்தேவன் நடிகரின் முகத்தில் வந்து நின்று கொள்வானா என்று தெரியவில்லை.இதுவரையில் இங்கேயுள்ள ஓவியங்களாகவே பொன்னியின் செல்வன் மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டுள்ளது.

http://www.eegarai.net/t50562-topic

நிகழ்வுகளாக ராராமயாணமும்,மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்களாக வர்ணிக்கப்பட்டாலும்,சரித்திரபூர்வமாகவும்,ஆதாரபூர்வ கல்வெட்டுக்களாகவும்,பிரிட்சிஷ் ஆட்சியின் எழுத்து பூர்வ ஆவணமாகவும் தமிழகம் சார்ந்த வரலாற்றை சொல்பவை கட்டிக்கலைகளாக கோயில்கள், மாமல்லபுர சிற்பங்கள்,,திருச்சி மலைக்கோட்டைசெஞ்சி கோட்டை என பலவற்றை சொல்லலாம்.காஞ்சி,பூம்புகார் போன்ற வரலாற்று நிகழ்வுகளை இளமையாய் இருந்த தி.மு.கவின் காலத்தில் செல்லுலாய்ட் மூலமாக திரைப்பட வரலாறுகளாய் மாறிப்போனது. அன்றைக்கும், இன்றைக்கும்,என்றைக்கும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை நிருபிப்பது தஞ்சை பெரிய கோயில்.சோழர் ஆட்சியின் காலத்தை புனைவாக,துப்பறியும் நாவலுக்கு நிகராக,வரலாற்றை ஒட்டிய கதையாய் என்றும் நிலைத்து நிற்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.கல்கிக்கு போட்டியாக சாண்டில்யன் பல வரலாற்று கதைகளை எழுதியிருந்தாலும் நீண்ட கதையாக விரிவாக கதை சொல்லும் பாணியில் பொன்னியின் செல்வன் முந்தி விடுகிறது.பொன்னியின் செல்வனையும்,தஞ்சை பெரிய கோயிலையும் காணும் போது உருவாகும் மன உணர்ச்சிகளை பல விதத்தில் விவரிக்கலாம்.

தமிழனின் பண்டைய வரலாறு,கட்டிடக்கலையின் பெருமிதம்,வீர உணர்ச்சி என ஒரு புறமும் எதிர் மறையாக எத்தனை மக்களின் உழைப்பை வாங்கிக் கொண்ட பிரபுத்துவம்,எப்படியிருந்த தமிழன் இப்படியாகி விட்டானே என்ற கவலை,பழையதை சொல்லிச் சொல்லியே தமிழனுக்கு உணர்ச்சி ஏத்துங்கப்பா என மன இயல்புக்கு தக்கவாறு எண்ணங்கள் உருவாக கூடும்.

பதிவர் வருண் போன பதிவிலேயே இம்மாம் பெரிய பதிவும் பின்னூட்டமும் போடுறீங்களேன்னு பின்னூட்ட குஸ்திக்கு வந்தார்.எனவே அவருக்கு சுருக்கமாக பதிவர் நசரேயன் நாலு வரியில் மொபைல்  கதை சொல்கிறேன் என்றார்.இதைப் படிச்சிட்டு அம்பேல் ஆயிடனும் சரியா:)

பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர்,தன் தமக்கை குந்தவைக்கு எழுதிய ஓலையை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் காஞ்சியிலே இருந்து தஞ்சை வருகிறார். குந்தவையை சந்தித்து ஓலையை கொடுத்து விட்டு , குந்தவையிடம் இருந்து இலங்கையிலே இருக்கும் தம்பி அருள்மொழிவர்மரை(ராஜா ராஜா சோழன்) அழைத்து வருமாறு வந்தியதேவனிடம் ஓலை கொடுக்கிறார்.ராஜா ராஜா சோழனை இலங்கையிலே சந்தித்து,தஞ்சைக்கு அழைத்து வந்துவிட்டு மீண்டும் குந்தவையிடம் ஆதித்த கரிகாலருக்கு ஓலை வாங்கிவிட்டு அவரை சந்திக்க காஞ்சி புறப்படுகிறார், ஆனால் ஆதித்த கரிகாலன் கடம்பூர் செல்ல முற்பட வழியில் அவரை சந்தித்து அவருடன் கடம்பூர் சொல்கிறார், அங்கே ஆதித்த கரிகாலன் அகால மரணமடைகிறார், இளவரசர் மரணத்துக்கு பின் யார் பட்டத்து இளவரசர் என்பதும் யார் சோழ நாட்டை ஆண்டார் என்பதும் முடிவு.

நீண்ட கதை சுருக்கம் படிக்க விரும்புவர்கள் வை.கோவின் நீண்ட பேச்சாற்றலை இங்கே போய் உட்கார்ந்துக்கலாம்

http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan

இஸ்ரேலின் வரலாறாக The birth of a nation என்ற டாகுமெண்டரி காணவேண்டிய ஒன்று.

சுருக்கமாக சொன்னால் 2000ம் வருடத்திற்கு முன்பு தற்போதைய இஸ்ரேல்,பாலஸ்தீனிய பூமி பாலஸ்தீனம் என்றே அழைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் காலனித்துவப்படுத்திய பிரிட்டிஷ் ராஜ்யம் பாலஸ்தீனத்தையும் 30 ஆண்டுகள் ஆண்டார்கள்.1949ல் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் வெளியேற முடிவு செய்தார்கள்.

பலநாடுகள் தங்களது போராட்டங்களால் சுதந்திரப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் கோட்பாட்டை செயல்படுத்த நினைத்தவர்கள் இஸ்ரேலியர்களும் ஈழத்தமிழர்களும்.

இஸ்ரேலியர்கள் அமெரிக்காவின் துணையோடு சுதந்திரப் பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.ஈழத்தமிழர்களின் கனவு சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.எதிர்காலமே பதில் சொல்லும்.

சிரியா,எகிப்து,ஜோர்டான்,லெபனான் மற்றும் அரபுநாடுகள் அனைத்தும் சேர்த்து 32000 போர்வீரர்களும்,30000 ராணுவ ஆயுதங்களும் கொண்ட பாலஸ்தீனியர்களை வெறும் 3000 பேர்கொண்ட கொரில்லா தாக்குதல்கள் மூலமாகவே இஸ்ரேலியர்கள் போரின் தோல்வியையும்,வெற்றியையும் அடைந்தார்கள்.

பெண்களையும் போரில் உள்வாங்கிக் கொண்டது இஸ்ரேல்.குடியரசு யூத நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது.இஸ்ரேலியர்கள் ஒன்றுபட்டு போராடவில்லை. ஈழப்போத்ராளிகளைப் போலவே பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தார்கள். சிலருக்கு ஆயுதப் போரட்டத்தில் நம்பிக்கையில்லை.இன்னும் சிலருக்கு ஆயுதப்போராட்டமே வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.ஹிட்லரின் ஹொலாகாஸ்ட்டில் தப்பித்தவர்கள் ஒன்று திரண்டது உலக அளவில் மேற்கத்திய நாடுகளின் அனுதாபத்தைப் பெற்றது.மொத்தத்தில் ரத்தக்கறை படிந்த சுதந்திரமே இஸ்ரேல் தேசம்.

இனி எக்ஸோடஸ் பக்கம் திரும்புலாம்.எக்ஸோடஸ் நாவலின் சைப்ரஸ்,இஸ்ரேல் போல் இலங்கை, தமிழகத்திற்கும் ஒரு ஒப்புமை இருக்கிறது.அதனை அவரவர் கற்பனை வளத்திற்கு விட்டு விடுகிறேன்!
எக்ஸோடஸ் நாவல் இலவசமாக Pdf வடிவில் கிடைக்கிறது.திரைப்படம் முன்பே சொன்னது போல் யூடியுப் பிட்டு பிட்டாக காண்பிக்கிறது.சுமார் 3 1/2 மணி நேரப் படம் லியோன் யூரிஸின் நாவலையையும்,உண்மை நிகழ்வுகளையும் உள்ளடக்கி சொல்கிறது.

நிறைய ஆய்வுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்ய நினைத்து இயலாமல் போய் விட்டது.பரந்த பார்வைக்கும்,வாசிப்புக்கும் காரணமான பதிவர் தருமி அய்யாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

2 comments:

வவ்வால் said...

ராஜ்,

படப்பொட்டிய கண்ணுல காட்டாமல்லே படத்தை ரிலீஸ் செய்துட்டிங்களே :-))

யூதர்கள் பல தலைமுறைகளாக போட்ட மாஸ்டர் பிளான் தான் அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கிக்கொடுத்தது எனலாம், யூதர்கள் இஸ்ரேலை மட்டும் ஆளவில்லை, உலக வல்லரசுகளையும் மறைமுகமாக ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அமெரிக்க ,பிரிட்டன் ஆட்சியாளர்கள் பலரும் யூத வம்சாவளியினரே ,அதனால் தான் அந்நாடுகள் இஸ்ரேலைக்கட்டிக்காக்கின்றன.
பில் கிளிண்டன் கூட யூத வம்சாவளியே.(அப்படினு எப்பவோ படிச்சேன் ஆதாரம் எங்கேனு சொக்காயைப்பிடிக்கப்படாது)

பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் இல்லைனு சுமோ சொல்லிட்டாரே :-))

என்னைப்பொருத்தவரை பொ.செ. வரலாற்றுப்புனைவு எனலாம், ஆனால் அதையே வரலாறு என்றெல்லாம் சொல்லிக்கொள்வது சரியல்ல. பலக்காலக்கட்டத்தையும் ஒரே காலத்தில் கலந்துக்கட்டி எழுதி இருப்பார்.

சுந்தரபாண்டியன்,வீரபாண்டியன் கதையை எல்லாம் இராஜராஜனுடன் பிணைத்து இருப்பார். ஜாடவர்மன் சுந்தரப்பாண்டியன் சோழர்களை வென்று அடிமைப்படுத்தி இராஜராஜந்3 இன் மகளை மணம்புரிந்து சோழசாம்ராஜ்யத்துக்கு மங்களம் பாடியது வரலாறு. எம்ஜிஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதை இதான்.

சோழசாம்ராஜ்யம் (பிற்கால சோழர்கள்) இராஜராஜன்ம, இராஜேந்திரன் காலத்துக்கு பின் ஏன் சரிய துவங்கியது என்று தேடியுள்ளீர்களா?

இராஜேந்திர சோழனுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போனதே காரணம், அவரது மருமகன் சாளுக்கிய இளவரன் குலோத்துங்கன் -1 என ஆட்சிக்கு வந்தான்,அப்போதிலிருந்து சோழ மண்டல சிற்றரசர்கள் உள்ளுக்குள் பகை வளர்க்க ஆரம்பித்து கடைசியில் கம்பரால் 32 காததூர தேசம் என கிண்டல் செய்யப்படும் அளவுக்கு சுருங்கிப்போனது.

ராஜ நடராஜன் said...

வவ்!நலமா?வேளைப்பளுவில் முழுதாக பதிவைக் கொண்டு வர இயலவில்லை.

பொன்னியின் செல்வன் புனைவு போலவே எக்ஸோடஸ் நாவலும் கூட.இரண்டிலும் சரித்திர நிகழ்வுகள் கலப்பின் அடிப்படையிலேயே கதை நகர்கிறது.இந்த இரண்டு நாவலிலும் தமிழகமும்,ஈழத்தமிழர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன என்ற மறைபொருள் மட்டுமே இதில் சொல்லாமல் விடப்பட்டு உள்ளன.வெற்றி பெற்ற ஒற்றைக் காரணத்தினால் மட்டுமே இஸ்ரேல் கொண்டாடப்படவும்,ஈழப்போர் தோல்வியை தழுவியதால் துக்க்ப்படவும் வேண்டியுள்ளது.

பதிவில் சொன்ன Birth of a Nation ஆவணப்படத்தைப் பார்த்தால் ஆயுதப்போர் துவங்கிய காலம் தொட்டு இன்னும் ஐ.நா வாக்கெடுப்புக்கு வராத நிலை வரை நிகழ்வுகள் அப்படியே உள்ளன.

நீங்கள் சொன்ன பில் கிளிண்டன் யூத வம்சாவழியென்பது சரியான ஒன்றே.நேரம் கிடைக்கும் போது நீங்கள் கூறும் வரலாறுகளை ஒரு முறை அசை போட்டு பார்க்க வேண்டும்.

சேனல் 4,இலங்கை சார்ந்த இந்திய நிலைப்பாடுகள் காரணமாகவும்,பதிவு சார்ந்து தொடர் தேடல் இயலாது போனதாலும் அவசரமாக பதிவை நீங்க சொன்ன மாதிரி படப்பொட்டிய காட்டாமலே ரிலிஸ் செய்து விட்டேன்.